Template errors

  • Template public:font_awesome_setup: [E_USER_WARNING] Template public:font_awesome_setup is unknown (src/XF/Template/Templater.php:792)
  • An upgrade is pending. The forum is only accessible in debug mode.
    Complete upgrade

ஞாபகங்கள் தாலாட்டும் 4

Avira

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த அழகிய மாலை நேரத்தில் சூரியன் தன் இருப்பிடம் நோக்கி செல்லத் துவங்கியிருந்த வேளை தன் நண்பன் கௌதம் சக்கரவர்த்தியுடைய முகத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான் அவனது உயிர் நண்பன் சந்தோஷ்.

" ஏதோ பேசனும்னு என்னை கூட்டிட்டு வந்துட்டு இப்படி அமைதியா எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் சந்தோஷ்??" என்று தன் நண்பனை நோக்கி வினவினான்.

" பேசனும் தான் ஆனா எப்படி ஆரம்பிக்குறது னு புரியலை?"என்று அவனை பார்த்து மீண்டும் வினவினான் .

" ம்.... இவ்ளோ தூரம் வந்தாச்சு ல் கேட்க நினைச்சதை பட்டுனு கேட்டுடு,"

" சரிடா கௌதம் நான் உனக்கு உயிர் நண்பன் , ஆனால் எனக்கு தெரியாம உன் வாழ்க்கை யில இருக்குர விஷயத்தை நான் தெரிஞ்சுக்கனும்," என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தை கூறிய தன் நண்பனை ஒரு முறை புன்னகையுடன் ஏறிட்ட கௌதம்," வேண்டாம் சந்தோஷ் அது என் வாழ்கையோட ஒரு அழகான முற்றுப்பெறாத அத்தியாயம் ," என்று வேதனையுடன் கூறினான்.

தன் நண்பனின் வாழ்வில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதுவரை மட்டுமே சந்தோஷால் யூகிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் கௌதமே, நந்தினியுடனான அவனது உறவிற்கு பின்னர் அவன் தன் தோழர்களிடமிருந்து விலகி நின்றான், யாரிடமும் நெருங்க முயலவில்லை , பழைய கலகலப்பான கௌதமிற்கு பதிலாக அமைதியான ஆர்பாட்டமில்லாத கௌதமே சந்தோஷ் சந்தித்தது.

" என்ன நடந்துச்சு கௌதம் அந்த பொண்ணு எங்க இருக்காங்கனு சொல்லு எப்படியாவது அவங்களை சமாதானப்படுத்தி உன் கூட சேர்த்து வைக்கிறேன்," என்று கூறிய தன் நண்பனை பார்த்த கௌதம்," நீ என் மேல வச்சிருக்கிற பாசத்தை நினைச்சு சந்தோஷப்படுறதா??இல்லை என்னவளை தொலைச்சதை நினைச்சு வருத்தப்படுறதானு தெரியலை," என்று குரலில் விரக்தியுடன் கூறினான்.

" கௌதம் ப்ளீஸ்.... என்னாச்சு?? நீ இந்த அளவு யாரை விரும்பின??" என்று ஆற்றாமையுடன் வினவினான்.

ஒரு நிமிடம் மௌனம் காத்த கௌதம்," அவ என்னோட தேவதைடா, எதிர்பாராத நேரம் எனக்கு கிடைச்ச பொக்கிஷம் அவ என் நந்தினி," அவளின் பெயரை உச்சரிக்கும் பொழுதே அவன் முகம் மென்மையை காட்டியது.

தன் நண்பன் அறியாத தன் காதல் அத்தியாயத்தை அவனுடன் பகிர்ந்து கொள்ளத்துவங்கினான் நந்தினியின் காதலன்.

நந்தினியுடன் பேசிய முதல் உரையாடல் முதல் அவளிடம் காதல் சொல்லிய தருணம் வரை கூறிய கௌதம் பின் அமைதியானான்.

" உன் காதல சொல்லியும் அவங்க ஏத்துக்கலையா?? அப்போ அதுனால தான் நீ இப்படி இருக்கியா??" என்று கேட்டான்.

அவன் கேள்விக்கு சிரிப்பையே பதிலாக கொடுத்த கௌதம் ," இல்லை சந்தோஷ் , அவகிட்ட காதல் சொன்னதுக்கப்பறம் அவகிட்ட நான் பேச முயற்சி செய்யலை, நந்தினி எனக்கு கூப்பிட்டபோதும் நான் பேசலை, மனசுலாம் ரொம்ப வருத்தமாவும் வெறுமையாவும் இருத்துச்சு அதனால அவகிட்ட காதல் சொன்ன அதே கடற்கரை க்கு ஒரு வாரம் அப்பறம் வத்தேன்," என்று கூற அவன் நினைவுகள் பின்னோக்கி அந்த நாளுக்கு சென்றது.

**********

அந்த கடற்கரையில் கௌதம் கடலையே வெரித்தபடி அமர்ந்திருந்தான், அவ்வளவு சலசலப்பிற்கும் நடுவே அவன் மனம் அமைதியின்றி தவித்தது.

திடீரென்று அவன் அருகில் கேட்ட குழந்தையின் அழுகுரலில் சுயநினைவு கொண்டவன் தன் சுற்றுப்புளத்தை ஆராய்ந்தான். அவனது கண்கள் நாலாபுறமும் சுழல ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை கொண்டது , அங்கே அவன் கண்டது ஒட்டு மொத்த சோகத்தையும் தனக்கென குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போன்ற தோற்றத்தில் அமர்ந்திருந்த நந்தினியை.

அதுவரை ஆர்பரித்த நெஞ்சில் திடீரென்று அமைதி குடி கொள்ள.மெதுவாக எழுந்து நந்தினியின் அருகே சென்று சிறிது இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.

அவன் அமர்ந்ததும் அவனை ஒரு முறை திரும்பி நோக்கிய நந்தினியின் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.பின் அமைதியாக அவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

நந்தினியிடமிருந்து இத்தகைய செயலை எதிர்பார்காதவன் மெதுவாத தன் கைகளை உயர்த்தி நந்தினியின் தோள்களில் போட்டு அவளை தன்னுடன் சேர்ந்து அனைத்துக்கொண்டான்.

ஒரு வார காலமாக நிம்மதியற்று இருந்த அந்த இரு காதல் நெஞ்சங்களும் தங்களின் காதலை உறுதிபடுத்தி தங்கள் வாழ்வின் அழகிய அத்தியாயதிற்குள் மகிழ்வுடனும் ஆசையுடனும் நுழைந்தன.

" என்னடா எதுவுமே பேசமாட்டியா?"என்று கௌதம் குரலில் ஏக்கத்துடன் கேட்க.

"எனக்கு பேச தோனலை கௌதம் இப்படி உங்க தோள்ல சாய்ந்தபடி என் உயிர் பிரிஞ்சாலும் நான் சந்தோஷப்படுவேன்,"என்று அவளது வாக்கியத்தை முடிக்கும் முன்னே அவளது இதழ்களை தன் கைகளால் மூடியவன்," விளையாட்டுக்கு கூட இப்படி பேசாத ,இனி இப்படி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சுனா நானே உன்னை கொன்னுடுவேன்" என்று மிரட்டினான்.

அவனது விரல்களை எடுத்து தன் இரு கைகளுக்குள் வைத்துக்கொண்டவள்," ஐ லவ் யூ.....அன்ட் ஐ வான்ட் டு லிவ் வித் யூ.....," என்று கண்களில் காதல் வழிய கூறினாள்.

வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த இருவரும் மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.அதன் பிறகு அவர்களின் காதல் நாள் முழுவதும் மெசேஜூகளாகவும் ஃபோன் கால்களாகவும் கழிய இருவரும் தங்களின் உலகில் சுகமாக வாழ்ந்து வந்தனர் அந்த கரிய தினம் வரும்வரை.

************

"அப்பறம் என்னாச்சு கௌதம்??"ஆவலுடன் வினவிய சந்தோஷை பார்த்த கௌதம்," ம்ம்.......எல்லாம் முடிஞ்சு போச்சு சந்தோஷ், நந்தினி இப்ப வேற ஒருத்தரோட மனைவி , ஆனால் என்னால அவளை மறக்க முடியலை அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சு பேசனும் னு நினைக்கிறேன். ஆனால் அதுக்கான தைரியம் எனக்கில்லை," என்று உடைந்த குரலில் கூறினான்.

தனது காதல் கதையை சொல்லத்துவங்கிய கௌதம் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டதன் காரணம் புரியாத சந்தோஷ் குழப்பமடைந்தான்.

சந்தோஷிற்கு தெரியாத ஒன்று என்னவென்றால் தன்னுடைய நந்தினி வேறு ஒரு ஆடவனின் அருகில் உதட்டில் செயற்கை புன்னகையுடன் நின்றிருந்த கோலம் கௌதமின் குற்ற உணர்வை தூண்டியது.நந்தினியின் வாழ்வில் கௌதமின்.அத்தியாயம் இல்லாமல் இருந்திருந்தால் இன்று நந்தினியின் புன்னகை ஆத்மார்தமாக உள்ளதாக இருந்திருக்கும் என்று அவனை நினைக்க வைத்தது.

அந்த இருவரும் வெவ்வேறு சிந்தனையிலிருக்க அந்த அமைதியை கலைக்கும் வண்ணம் கௌதமின் மொபைல் ரிங் ஆனது ,அதில் மின்னிய லலிதா என்ற பெயரை பார்த்த கௌதம் சிறு புன்னகை உதட்டில் தோன்ற தன் செல்பேசியை எடுத்து ஆன் செய்தான்.

தன் நண்பன் பேசி முடிக்கும்வரை காத்திருந்த சந்தோஷ்," இப்ப என்ன பண்ண போற கௌதம்?? இது சரியா வரும் னு எனக்கு தோனலை ," என்று கூறினான்.

"இல்லைடா உனக்கு என்னோட நந்தினி யை தெரியாது , ஆனால் அவ இப்போ வாழறது போலியான வாழ்க்கை என்னை மறக்க முடியாமலும் அவளோட கணவர ஏத்துக்க முடியாமலும் அவ தவிக்குறது அவளோட கண்ண பார்க்கும் போது என்னால உணர முடியுது, அதுல ஒரு உயிர்ப்பு இல்லை இவ்ளோத்துக்கும் காரணம் நான் தான் என்னால மட்டும் தான் இதை சரி செய்ய முடியும் ," என்று தன் மனதின் ரகசியத்தை தன் நண்பனிடம் பகிர்ந்தான்.

ஆனால் சந்தோஷோ," இல்லை கௌதம் நீ சொல்றது எல்லாமே சரினு வெச்சுக்கிட்டாலும், இப்ப அவங்க வாழ்க்கை யில நீ இல்லை , மறுபடியும் நீ நுழைஞ்சு தேறிகிட்டு இருக்குற அவங்க மனச திரும்ப காயப்படுத்திடாத,அவ்ளோ தான் நான் சொல்ல முடியும்," என்று கூறிவிட்டு தன் நண்பனை நோக்கினான்.

சந்தோஷின் பேச்சு கௌதமின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவனது முடிவில் அவன் உறுதியாக இருந்தான்.

அவனது இச்செயல் மீண்டும் நந்தினியை நிலைகுழைய செய்யுமா?? பொறுத்திருந்து பார்போம் அடுத்த கடைசி அத்தியாயத்தில்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN