பூ 34

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

சகல ஜீவராசிகளும் நித்திரை கொள்ளும் இரவின் மடியில், இருளின் ஒலியாய் வெண்பூக்கள் போன்று சிதறிய நட்சத்திரங்களின் வானவீதியில் ராஜ பவனி வந்துக்கொண்டு இருந்தாள் நிலவு மங்கை, இரவோ மையை ஒத்த கருமையை பூசிக்கொண்டு வெள்ளி முளைக்கும் விடியலுக்கு காத்திருந்தது சூரிய அரசனின் ஒற்றை பார்வைக்கு ஏங்கிக்கொண்டு...


நெஞ்சம் எங்கும் வியாபித்து இருக்கும் காதலின் சுகத்தில் கண்களை மூடி படுத்திருந்தான் விசாகன். கதவை மூடிய தேவா கைவளையும் காலில் அணிந்திருந்த மெட்டியும் சப்தமிக்க நடந்து வந்தவள் கணவன் முன் நின்று "தெங்க்ஸ்" என்றாள் குரல் கமர


மெல்ல கண்களை திறந்தவன் அவள் நின்றிருந்த தோரணையும் குரல் கமர பேசிய வார்த்தையும் வித்தியாசமாய் தெரிய எழுந்து அமர்ந்து "எதுக்கு இந்த தெங்க்ஸ்?" என்றான் புரியாமல்


கடந்த ஐந்து நாட்களாக புதுமஞ்சள் கயிறுடன் உலா வந்துக்கொண்டு இருந்தவளுக்கு இன்று புதிதாய் மாறிய தங்க தாலிகொடி, தன் கழுத்தில் உராய்ந்து மார்பை தொட்டுக்கொண்டு இருக்க அதை கையில் இறுக பற்றியவாறு நின்றிருந்தவள் "இன்னைக்கு எங்க அம்மாவை பாக்க வைச்சதுக்கு" என்றாள் தலை குனிந்தவாறு… அவள் கண்களில் நீர் நிறைந்து பளபளத்து இருக்க, குனிந்து இருந்ததினால் இரு சொட்டுகள் கீழே விழுந்து தெரித்தது...


அவள் அழுவது நன்றாக தெரிந்தாலும் இப்போது உணர்ச்சிவசப்பட்டு இருப்பவளிடம் எந்த சமாதானமும் எடுபடாது என்பதை அறிந்தவன் "வேற" என்றான் அவளிடம் பேச்சை வளர்க்க எண்ணி.


அவள் காதல் என்று விசாகனை சுற்றி வந்த நாட்களில் அவள் தான் அதிகம் பேசிக்கொண்டு இருப்பாள். வேண்டாம் என்றாலும் நிற்காது அருவியாய் கொட்டும் பேச்சிகள் எல்லாம் இப்போது இல்லை சாதாரணமாக இல்லை, இல்லை…. தேவைக்கு என்று கூட தன்னிடம் பேசாதவள், தானே வலிய சென்று பேச்சிகொடுத்துக்கொண்டு இருப்பவனிடம் அவளே வந்து பேசி இருந்தாள்.


இன்று தாலி பிரித்து கோர்க்கும் விஷேஷம் சிறப்பாய் முடிந்து இருவரையும் கோவிலுக்கு செல்லுமாறு பணிக்க எந்த வித எதிர்ப்பையும் கூறாமல் அவளை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றவனை தேவா வியப்போடு பார்க்க அவளை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தான் விசாகன்.


"நீ உள்ள போ... பின்னாடியே வறேன்" என்று அவளை வற்புறுத்தி அனுப்பி வைக்க அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு உள்ளே சென்றவளுக்கு அங்கே அவளுக்காக காத்துக்கொண்டு இருந்த மரகதத்தை கண்டதும், இதுவரை மறைத்து வைத்து அவனிடம் கூட வெளிக்காட்ட கூடாது என்று அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அழுதே தீர்த்தாள். ஒடி சென்று காலை கட்டிக்கொண்டு பித்து பிடித்தவள் போல் "அம்மா என்னை நம்பு மா... நான் அவரை தேடி போல மா... என்னை நம்பு மா... அவரை நான் விரும்பினது உண்மை தான் மா... ஆன நானா அவரை தேடி போய் நிக்கலமா" என்று அழுது கரைபவளை கண்டவருக்கும் கண்களில் நீர் நிறைந்து போனது மகளை ஆதுரமாய் தலையை தடவி விட்டவருக்கு அவள் இருந்த கோலம் கண்டு மனதும் நிறைந்து போனது…


அழுது அழுது கோவை பழமாய் சிவந்த கண்களை துடைத்து விட்டவர் தானும் சமதானம் ஆகி "அழக்கூடாது தேவாமா... நல்ல நாள் அதுவுமா அழுக கூடாது … உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சி இருக்கு அதை நெனச்சி சந்தோஷப்படு " என்று அவளை எழுப்பி தன்னுடன் அழைத்து வந்தவர் தான் கொண்டு வந்த மலர் சரங்களை தேவாவின் தலையில் வைத்துவிட்டு குங்கும பிரசாதத்தை வகுட்டிலும் நெற்றியிலும் பூசி அவளுடைய தாலிக்கும் வைத்து "தீர்க்க சுமங்கலியா நீயும் உன் புருஷனும் புள்ள குட்டியோட நல்லா இருக்கனும்" என்று வாழ்த்தினார்.


பெற்றவளின் ஆசிர்வாதம் தனது அனைத்து வேதனைகளையும் பின்னுக்கு தள்ளி மகிழ்வை கொடுக்க… "அம்மா என்னை மன்னிச்சிட்டியாமா?" என்றாள் தழுதழுத்த குரலில், கண்ணை முந்தானையால் துடைத்தவாறே நீ பண்ணது பெரிய தப்புதான் தேவா... ஆனா அதை கேட்க பொறுமை கூட இல்லாத உன் அப்பாவும் அண்ணனும் பண்ணது அதை விட பெரிய தப்பு" என்று கூறியவர் "சரி அதை விடு நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை எப்படி பாத்துக்குறாரு?" என்றார் பெற்ற தாயாய் மகள் வாழும் வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள


கணவனை பற்றிய ஆயிரம் கசப்புக்கள் மனதில் இருந்தாலும், தாயிடத்தில் அனைத்தையும் கொட்டி விட முடியாதே ஒற்றை வரியில் "நல்லா இருக்கேன் மா... அவர் நல்லா பாத்துக்கறார்" என்று அவள் கூறியதும் சந்தோஷப்பட்டவர் மகளை காண வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றிய மருமகனின் மேல் எந்த தவறும் இருப்பதாய் தெரியவில்லை… அதை கேட்கவும் செய்ய மகளின் மூலமே திருமண நாள் அன்றைக்கு நடந்த நிகழ்வினை தெரிந்துக் கொண்டவருக்கு மருமகனின் மேல் மேலும் மதிப்பு கூடியது…


"அம்மா, அப்பா அ… அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க" என்றாள் தயங்கி தயங்கி


"அவங்களுக்கு என்ன? நல்லாதான் இருக்காங்க... ஆளுக்கு ஒரு சுவத்தை பிடிச்சிக்கிட்டு, எப்போ மாறுவாங்கன்னு தெரியல வீடு வீடாவே இல்ல... அதை விடு நீ சந்தோஷமா இரு... பொறுப்பா நடந்துக்க" என்று மகளுக்கு ஆயிரம் புத்திமதிகளை கூறியவர் அவளிடம் பேசிக்கொண்டே கோவிலை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.


"ரொம்ப சந்தோஷம் மாப்புள.. கண்ணுக்குள்ளயே இருந்தா, தேவாவை பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு.. ரொம்ப நன்றிங்க மாப்புள" என்று உள்ளம் நெகிழ்ந்து கூறிட


"அய்யோ ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதிங்க மா... நீங்க சனாவ எப்ப பார்க்கனும்னு நினைச்சாலும் வீட்டுக்கு வாங்க… இல்ல ஒரு போன் பண்ணுங்க… நான் கூட்டிட்டு வறேன் " என்றான் விசாகன்


மகள் மருமகன் இருவரையும் கண்களில் நிறைத்துக்கொண்ட மரகதம் இருவரிடமும் கூறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு இருந்தார்.


அவர் சென்றதும் விசாகனை கண்டவளுக்கு அப்படியே அவனை கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது… தாயிடம் கூறியதில் பாதி பாரம் இறங்கி இருக்க லேசான மனநிலையில் இருந்தவளுக்கு பேச்சே வரவில்லை வீட்டிற்கும் வந்தும், அவனிடம் பேச முடியவில்லை இப்போது கிடைத்த தனிமையில் பேச வந்தவளுக்கு உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் கரையை உடைக்க நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல் ஒரு நிலையில் இருந்தாள்.


தன்னை நிதானித்துக்கொண்டவள் "என்னால உங்களுக்கு எப்பவும் தொந்தரவுதான்… உங்க வாழ்க்கைய நான் தட்டி விட்டாலும் எந்த கோவத்தையும் என் மேல காட்டத உங்க குணம் நீங்க ரொம்ப நல்லவருன்னு காட்டுது.…. இந்த நல்ல குணம் இருக்க போயிதானே என்னை இன்னும் இந்த வீட்டை விட்டு வெளியே துறத்தாம இருக்கிங்க…. அதுக்கு ரொம்ப ரொம்ப தெங்க்ஸ்" என்று மூக்கை ஊறிஞ்சிக்கொண்டாள்.


"ஓ…. இது வேறையா" …. என்று அவள் கூறியதை கேட்டு சற்று திகைத்து போய் இருந்தவன் "எத்தனை தெங்க்ஸ்" என்று வாய் விட்டே கேட்டு விட்டு "ம் சரி தெங்க்ஸ வாங்கிக்கிட்டேன்" என்று அவன் கைகளை மடக்கி சட்டை பையில் போட்டுக் கொண்டவன் போல பாவனையை செய்தவன் "அப்புறம் வேற என்ன" என்றான் சுவரஸ்யமாக


"நன்றியை தவிர உங்களுக்கு தர அளவு என்கிட்ட ஒன்னும் இல்லை... எப்பவும் இந்த நன்றிய மறக்காதவளா இருப்பேன்" என்றவள் "நீங்க ரொம்ப நல்லவங்க இன்னும் என்னை சகிச்சிட்டு இருக்கறதுலையே தெரியுது உங்க மனசு" என்று அவள் தன் போக்கில் கூறவும்


இதழில் தோன்றி அலங்கரித்த மென்நகையுடன் "ம் அப்புறம் வேற என்ன என்ன தெரியது என்னை பத்தி உனக்கு" என்றான் வம்பு இழுக்கும் நோக்குடன்.


'கேட்டு விட்வோமா' என்று தொண்டை வரை வந்த சொற்களை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டவள் நன்றாக இருக்கும் மனநிலையை அவன் காதலை பற்றி பேசி சிதைத்துக்கொள்ள விரும்பாமல் "வேற... வேற என்ன ஒன்னும் இல்லை" என்று பேச்சிற்கு முற்றுபுள்ளியை வைத்து போர்வையை கீழே விரித்து படுக்கையை தயார் செய்து கொண்டு இருந்தாள்.


புருவம் உயர்த்தி அவளை சுவாரஸ்யம் கொண்டு பார்த்தவன் அவள் படுக்கையை கீழே விரிக்கவும் தன் அதிர்வை முகத்தில் வெளிப்படுத்தி "இன்னைக்கு என்ன? கீழே படுக்கை?" என்றான் முற்று புள்ளியை கமாவாக மாற்றி உரிமை பறிபோகுதே என்ற கவலையில் வினவினான்.


கடந்த இரு நாட்களாக இரவு நேர பூச்சியின் அட்டகாசம் தொடர்ந்துக் கொண்டு இருக்க கட்டிலின் மேல் படுத்தவள் தூக்க கலக்கத்தில் காலையில் அவள் மார்பிலோ அல்லது கைகளிலோ தான் கண் விழித்து இருப்பாள். பொறுத்து பொறுத்து பார்த்தவள் தில்லையிடம் அறையில் பூச்சி இருப்பதை தெருவித்ததும் முதல் வேலையாக முத்து, பூச்சி மருந்தை அறை முழுவதும் அடித்து விட்டு செல்ல அந்த தைரியத்தில் கீழே படுக்கையே விரித்து இருந்தாள் தேவா.


"எனக்கு கீழே தான் வசதியா இருக்கு" என்றாள் படுக்கையில் தலையணையே போட்டவாறே


'உனக்கு வசதியா இருக்கா?? எனக்கு கஷ்டமா இருக்குமே!!' என்று நினைத்தவன் வருத்த குரலில் "கீழ பூச்சி வருமே சனா... எப்படி படுப்ப?" என்றான்.


"அது எப்படி வரும்... அதான் முத்து அண்ணே பூச்சி மருந்து அடிச்சிடுச்சே... இந்நேரம் அது சொர்க்த்துல இருக்கும்". என்று மேல கைகாட்டியவள் கீழே படுத்தாள்.


'ஏலேய் முத்து நீ தான் தாண்டா எங்க கட்டிலுக்கு வில்லன்'.என்று நினைத்தவன் அவளை எப்படி மேலே படுக்க வைப்பது என்று யோசனையோடு படுத்தவன் சனா தூங்கிட்டியா என்றான்


"இல்ல... என்ன வேணும்?" என்றாள் படுத்தவாறே


அவள் புறம் திரும்பி ரங்கநாதர் பள்ளிகொண்டது போல் தலைக்கு கை கொடுத்து படுத்து இருந்தான் விசாகன். அவனை பார்த்ததும் சங்கடமாக உணர்ந்தவள் கால் வரை போர்வையை போரத்தி படுத்துக்கொண்டு "நீங்க தூங்கலையா?" என்றாள்.


"தூக்கம் வரல சனா"


"ஏன்?"


"தெரியல"


"கண்ணை மூடி படுங்க தூக்கம் தன்னால வரும்" என்று கூறி தலை வரை போர்வையை போரத்திக்கொண்டாள். அவன் பார்வை தன்னை ஊசி போல் துளைப்பதை உணர்ந்து கொண்டு அவனை விட்டு தள்ளி செல்ல நினைத்தாள். இதை அறியாதவனோ தன மனதில் அமர்ந்தவளையே நினைத்துக்கொண்டு கண் மூடி படுத்து இருந்தான்.


காலை நேர பரபரப்போடு சேர்ந்து அவள் கல்லூரி செல்லும் நாளும் தொடங்கி விட அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தாள்.


கண்ணை உறுத்தாத நிறத்தில் சுடிதாரை அணிந்திருந்தவள் புத்தகத்தை பார்த்து பார்த்து எடுத்துகொண்டு இருந்தாள் சிலது கீழே விழந்தது ,சிலது கலைந்தது, சிலது சிதறியது, அறைக்குள் நுழைந்தவன் அவள் பரபரப்பையும் முக சோர்வையும் கவனித்து அருகில் வந்து நின்றான்.


தன்னை கவனிக்கின்றான் என்று தெரிந்த போதும் பதற்றத்துடனே எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். அவள் கைகளை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து ஆஸ்வாசம் கொள்ள செய்தவன் "இப்போ எதுக்கு நர்வசா இருக்க" என்றான்.


"காலேஜ் போகனும்... படபடப்பா இருக்கு" என்றவள் அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள்.


அவள் முகத்தினை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் "உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு காலேஜ் போகனும்னு தெரியும் தானே… என்றுதும் தலையை ஆட்டினாள் "இப்போ கல்யாணம் பண்ணவங்க சிலர் படிக்கவும் செய்றாங்க உனக்கு தெரியுமா?…" என்றதும் அவள் மீண்டும் தலையை ஆட்டி "தெரியும்" என்றாள் "அப்புறம் ஏன் இந்த படபடப்பு உனக்கு சங்கடமா இருக்கா…" இப்போது பாவமாக அவனை பார்த்தாள் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பார்த்தான் "உனக்கு இவ்வளவு சீக்கிரம் இதை மாத்தனும்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா?... இப்போது இல்லை என்று தலையை அசைத்தாள் அவளையே பார்த்து இருந்தவன் "புது தாலி போட்டுகிட்டு போனா, நீ ரொம்ப சங்கடப்படுவ அது உனக்கு கஷ்டமா இருக்கும்னு தான் மாத்தினது... இதுவும் உனக்கு கஷ்டமா இருந்தா தாலியை கழட்டி வைச்சிட்டு போ சனா... நான் எதுவும் சொல்ல மாட்டேன்" என்றான் அமைதியான குரலில்.


அவனை பார்வையால் பொசுக்கியவள் " இது எல்லாம் புதுசா இருக்குன்னு தான் சொன்னேன்… எனக்கு கஷ்டமா இருக்குன்னு உங்ககிட்ட சொன்னேனா... உங்க வாயில இருந்து ஏன் இப்படி எல்லாம் வார்த்தை வருது? வாயி இருக்குன்னு கண்டதையும் பேசிடாதிங்க... அதுவும் காலங்காத்துல நீங்க இப்படி பேசுறதுதான் கஷ்டமா இருக்கு..." என்று முறுக்கிக்கொண்டு சென்றவளின் கையை பற்றி ஒரு பார்சலை வைத்து திறந்து பாரு என்றான்.


"என்ன இது" என்றாள் கோபமாகவே


"திறந்துதான் பாறேன் சனா" என்றான் செல்லமாக


அவனை பார்த்தபடியே அதை பிரித்து உள்ளே இருந்த பாக்ஸை எடுக்க அது அலைபேசியாக இருந்தது. "எனக்கா ?" என்று விழி விரித்து ஆச்சர்யமாக கேட்க


"உனக்கு தான்" என்று அதனை திறந்து காட்டியவன் "இதுல சிம் கார்ட் போட்டு அக்டிவேட் பண்ணிட்டேன்... இதுல என் நம்பர், அப்பத்தா நம்பர், அமுதா அப்புறம் சுந்தரன் நம்பர் எல்லாம் சேவ் பண்ணி வைச்சி இருக்கேன்..." என்று கடிகாரத்தை பார்க்க கல்லூரிக்கு நேரம் ஆகிவிட்டதை கண்டவன் "சரி வா சாப்பிட்டு கிளம்பு காலேஜ்ல விட்டுட்டு ஃபேக்டரிக்கு கிளம்புறேன்". என்றான்.


அவன் சொற்படியே கீழே இறங்கியவள் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு திருநீற்றை பூசிக்கொண்டு குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டவள் வகுட்டில் குங்குமத்தை இட "சனா" என்று அவளை அழைத்தவன் "காலேஜ் போற டைம்ல வகுட்டுல குங்குமம் வைக்காத" என்றவனை ஒரு பார்வை பார்த்தவள் வகுட்டில் குங்குமத்தை இட்டுக்கொண்டே சாப்பிட வந்து அமர்ந்தாள்.


"நான் பதட்டப்பட்டது இத்தனை நாள் கழிச்சி போறேனே, பாடம் எல்லாம் எவ்வளவு போய் இருக்குமோன்னு தான் …. கல்யாணம் ஆகிடுச்சின்னு பயந்துட்டு இல்ல... எனக்கு கல்யாணம் ஆகி இருக்குன்னு இந்நேரம் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கும். இதுல குங்குமம் வைக்கலனா மட்டும் எல்லாம் மறந்துடுவாங்களா?" என்று அவனுக்கு விளக்கத்தை அளித்தவள் எங்கே தாலியை கழட்டி வைக்க சொன்னதை போல் அவனுக்கு பிடித்த குங்குமத்தை வைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறிவிடுவானோ என்று பயந்தவள் மடமடவென்று இரண்டு இட்லிகளை விழிங்கிக்கொண்டு மதிய உணவை அடைத்த டப்பவையும் எடுத்துக்கொண்டு தில்லையிடம் கூறிவிட்டு கிளம்பி இருந்தாள்.


அவளின் அவசர பதிலில் வாசலில் சிரிப்புடன் நின்றிருந்தவன் அவளை பைக்கில் அழைத்துச் சென்று கல்லூரி வாசலில் இறக்கி விட்டு "பாத்து போ சனா எதுவா இருந்தாலும் போன் பண்ணு... இவினிங் வெயிட் பண்ணு, நான் வந்துடுறேன்" என்று கூறி அவள் உள்ளே சென்ற பிறகே ஃபேக்டரிக்கு கிளம்பி இருந்தான்.


கல்லூரியின் உள்ளே சென்றவளுக்கு இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள வகுப்பறைக்குள் நுழைந்தவளை ஆரவாரத்துடன் வரவேற்றது மாணவர்கள் கூட்டம் சங்கோஜத்துடனும் கூச்சத்துடனும் நின்றிருந்தவள் தோழியை பார்க்கவும் அவளுடன் போய் அமர்ந்துக் கொண்டாள்


"கலா எப்படி டி இருக்க?" என்றாள் வெகுநாட்களுக்கு பிறகு பார்க்கும் தோழியிடம் சந்தோஷமாக


முகத்தை திருப்பிக்கொண்டு "பேசாதடி" என்றாள் குரலில் கடுமையை தேக்கி


"கலா கோவமா டி?" என்றதும்


" கோவமா இல்ல புள்ள... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." என்று கடுப்படிக்க தன்னை பாவமாக பார்த்தவளை பார்த்து மனம் இறங்கிய மேகலா "பின்ன நீ போறேன்னு ஒரு வாரத்தை சொல்லி இருக்கலாம்ல... உனக்கு என்னவோ ஏதோன்னு எப்படி பதறிட்டேன் தெரியுமா... நீ அண்ணன் கூட வந்து இறங்குற வரையிலும் உசிரே இல்லை…" என்று தோழியை கட்டிக்கொண்டு அழுதவளுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாது விழித்து இருந்தவள் அவள் நிலை புரியவும் "சாரி டி... நான் எந்த மானநிலையில வீட்டை விட்டு போனேன் தெரியுமா?" என்று அன்று நடந்தவற்றை சுருக்கமாக கூறி தன் நிலையை உணர்த்திட


"என்னடி நீ… அண்ணனை தேடி போயிருக்கன்னு நெனச்சா கண்காணத ஊருக்கு போக இருந்தியா... ஒரு வேல அன்னைக்கு அண்ணன் மட்டும் வராம போயிருந்தா என்னடி ஆகி இருக்கும் உன் நிலமை... யோசிச்சி தான் முடிவை எடுத்தியா..". என்று கோவத்துடன் திட்டி தீர்த்தாள் அப்போதும் மனது ஆறவில்லை அவளுக்கு, ஒரு வேலை வராமல் போயிருந்தால் அந்த இரவு வேலையில் என்ன நடந்தாலும் கேட்க யாரும் இல்ல நிலையில் இவளின் கதி என்ன ஆகி இருக்குமோ என்று நினைக்கையில் ஈரக்குலை நடுக்கி போனது அவளுக்கு


தோழியின் பதட்டமும் பயமும் புரிந்துகொண்டவள் "நல்லா தானேடி இருக்கேன்... பயப்படாத உன் அண்ணன் என்னை நல்லா பாத்துக்கறாரு" என்றாள் அவளை சகஜமாக்கும் பொருட்டு


"நிஜமா…. அவரு நல்லா பாத்துக்குறாரா... உன் கிட்ட பேசுறாரா" என்றாள் விசாகன் என்ன மனநிலையில் அவளுக்கு தாலி கட்டினானோ என்று நினைத்து


"அதெல்லாம் நல்லாதான் பாத்துக்குறாரு.. என்னால தான் அவர் கூட ஒட்டவும் முடியாம, வெட்டவும் முடியாம கஷ்டபடுறேன்" என்றாள்.


"என்ன சொல்ற புள்ள"


"அவரோட காதல் தெரிஞ்ச நாள் இருந்து இது வரைக்கும் அவரு அடுத்தவளுக்கு உரியவராதான் என் மூளைக்கு தெரியறாரு" என்றாள் கண்கலங்கி


"இரண்டு விட்டேன்னா தான் தெரியும்.. மூளை தனியா தரவாந்து போகும் நாயே…. உன் புருசானை அடுத்தவளுக்கு ஜோடி போட்டு பேசுவியாக்கும்" என்று பட்டென அவள் தோளில் இரண்டு வைத்தவள் "ஒழுங்கா வாழுற வழிய பாரு எதை எதையோ நெனைச்சி பொழப்பை தொலைக்காத" என்று அழுத்தம் கொடுத்து கூறிட அவளின் மனம் விசாகனை சுற்றி வந்தது..


தோழியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ளாத மேகலாவோ "அப்புறம் உங்க அத்தைக்கு செம பல்பு தெரியுமா! கலர்கலரா எரியுது கன்னத்துல, இப்போ எல்லாம் வாய தொரக்கவே யோசிக்குது... ஆனா எனக்கு அந்த மாப்பிள்ளை பையனை நினைச்சா தான் பாவமா இருக்கு ரொம்ப நல்லாவனா தெரியுறான்…. அவன் உனக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசினான்" என்றாள் கூடுதல் தகவலாக


"அதுதான் கலா எனக்கும் கஷ்டமா இருக்கு... அருண் கிட்ட மன்னிப்பு கேட்கனும்…. அவருக்கு ஒரு நல்லா பொண்ணு மனைவியா வரனும்... அப்போ தான் என மனசு சந்தோஷமா இருக்கும்" என்றவள் சாந்தாவின் நினைவு வர "அன்னைக்கு அது பேசின பேச்சிக்கு கழுத்தை நெறுச்சி போடுற அளவு ஆத்திரமும் கோவமும் வந்துச்சி... ஆனா என் அண்ணன் பண்ண ரகளைல இது பின்னுக்கு போயிடுச்சி" என்றாள் அந்த நாள் நினைவில்.


ஆமா உங்க அண்ணன் பெரிய சண்டியரு அறுவாள தூக்கிக்கிட்டு ஆடின ஆட்டம் இருக்கே பா முடியல... எப்படி இவன் சென்னைல படிச்சி வேலை பாக்குறான்... சுத்த காட்டானா இருக்கான்... கிராமத்துல வளர்ந்த நம்மலே காதலை சரின்னு சொல்றோம்... பட்டணத்துக்கு போய் படிச்சவன் இது எல்லாம் தப்பு சொல்றான்" என்று அலுத்துக்கொண்டவள் "உன் கல்யாணத்து அன்னைக்கு கோவிச்சிக்கிட்டு ஊருக்கு போனவருதான் போல, எந்த பேச்சு வார்த்தையும் கிடையாதாமே... உங்க அம்மா எங்க அம்மாகிட்ட சொல்லி பொலம்பிகிட்டு இருக்கு" என்றாள்.


"பச் என்ன சொல்ல கலா... அதுக்கு ஏன் காதலை பிடிக்கலன்னு தெரியல…" என்று கவலை கொண்டு பேசவும் "நீ எதுக்கு கவலை படுற அந்த முசுடும் ஒரு நாள் காதல்ல விழும்.. அதுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சி ல அது சும்மா இருந்தாலும் அதுக்கு புடிச்ச நேரம் சும்மா இருக்குமா?? ஆட்டி படைக்கும் பாரு... உன் காதலை பிரிக்க நினைச்ச பாவத்துக்கு" என்று போகிற போக்கில் அசால்டாய் ஒரு சாபத்தை அவனை நோக்கி விசியவள் பேராசிரியர் வரவும் வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர் இருவரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN