சூரியன் தன் வெப்பத்தை தணித்துக் கொள்ள ஆரம்பித்து இருந்த வேளை, அனலாய் வீசிய காற்றும் மெல்ல தென்றலாய் மாற தொடங்கி இருந்தது. கண்கள் சோர்ந்து முகம் வாடியிருந்த தேவசேனாவை பத்திரமாக வீடு சேர்த்த பின்னரே தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் மேகலா, பேருந்தில் அமர்ந்து இருந்தவளுக்கு தேவாவை நினைத்து தான் பாவமாக இருந்தது, மதியம் அவளுக்கு கேன்டீனில் வாங்கி கொடுத்தது கூட சேரவில்லை பாவம் வீட்டிற்கு போய் எப்படி இருக்கிறாளோ என்று நினைத்து வருந்தினாள். தன் ஊரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவள் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த சமயம் அவளை நோக்கி சந்திரனுடைய பைக் வந்துக்கொண்டு இருந்தது..
அவன் ஊரில் இருந்து வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிறது ஓரிரண்டு முறை அவன் கண்களில் சிக்கினாலும் கண்டும் காணாததை போல சென்று கொண்டு இருந்தாள். இன்றும் அவனை பார்த்தும் பார்க்காதது போல பார்வையை வேறு புறம் திருப்பியவள் அவனை கடந்து சென்று விட வேண்டும் என்று முனைப்புடனே நடந்துக் கொண்டு இருக்க, அவளை தாண்டி சென்ற சந்திரனோ யூ டேர்ன் அடித்து டீ கடையின் முன்னால் வந்து நின்றான்.
அப்போதுதான் சில கல்லூரி மாணவர்களும் இரண்டு மூன்று கிராம வாசிகளும் பேருந்தில் இருந்து இறங்கிட அவள் யாருடனும் செல்லாமல் தனியாகத்தான் சென்று கொண்டிருந்தாள் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவளுடைய வீட்டிற்கு கொஞ்சம் நடக்க வேண்டி இருக்கும்… அவள் வீடு வயல்வெளியை ஒட்டிய வீடு என்பதால் சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது.
சந்திரன் ஊருக்கு வந்த நாள் முதல் தேவாவை பார்க்க வேண்டும் என்று மனம் அடித்துக்கொள்ளும் அவள் கல்யாணம் முடித்து ஐந்து ஆறு மாதங்கள் ஆகி இருக்க, ஒரு முறை கூட அவளை காண முயற்சித்தது இல்லை, நடந்த சம்பவங்களால் தன்னை வெறுத்து இருப்பாள் என்று கலங்கி இருந்தவனுக்கு தேவாவை பற்றி தாயிடம் கேட்க கூட மனது வரவில்லை…
இந்த நிலையில் மேகலா கல்லூரியை விட்டு வந்ததை பார்த்தவன், இவளிடம் கேட்டால் என்ன என்று தான் நினைத்தான் . அதன் பொருட்டு அவசரமாக பைக்கை எடுத்தவன் "ஏய்... ஏய்... நில்லு" என்று அழைத்தவனின் குரலை கேட்டும் கேட்காதவள் போல வேக நடையிட்டு சென்றவளுக்கு முன்பு பைக்கை நிறுத்தி இருந்தான் சந்திரன்.
சந்திரனின் உக்கிர பார்வையில் வார்த்தைகள் தந்தியடிக்க "எ.. என்ன என்ன பண்றிங்க? வழியை விடுங்க" என்றாள் எதிர்பாரத திடீரென்று வந்து முறைப்பவனிடம்
"ம்…. ரொம்ப ஆசை, உன் கூட பேச அதான் வந்து நிக்குறேன்" என்று ஏளனமாக கூறினாலும் "குளிர் விட்டுப் போச்சா கூப்பிட கூப்பிட காது கேக்காத மாதிரி போற" என்றான் கண்டிப்பான குரலில் மருந்திற்கும் அவன் பேச்சில் இலகு தன்மை இல்லை கொஞ்சம் காரமான பேச்சு தான் எப்போதும் அவளிடத்தில் இப்படி தான் நடந்து கொள்வான். இப்போதும் அதே போல பேச மேகலாவிற்கு கடுப்பாகி போனது, 'நான் என்ன இவர் வீட்டு நாயா ஏய் என்று அதிகாரமாக கூப்பிடுறாரு' என்று எண்ணிக்கொண்டாலும் மனதில் நினைப்பதை எல்லாம் வார்த்தைகளாக கொட்டி விட முடியுமா? அதுவும் அவனிடத்தல் தலையில் நாலு தட்டு தட்டி அடக்கி விடுவானே' என்று நினைத்தவள்
"உங்களை கண்டு எனக்கு எதுக்கு குளிர் எடுக்கனும் ... ஊர்ல நாலு பேர் பார்த்தா என் பெயர் தான் ரிப்பேர் ஆகும் ப்ளீஸ் வழிய விடுங்க" என்று வார்த்தைகளை கூட்டி கூறினாலும் கூட, பயமும் இருந்தது என்னவோ உண்மை
அவள் பேச்சில் முகம் இறுக "பச் வயசுக்கு தகுந்தா மாதிரி பேசு… உன்னையும் என்னையும் சேர்ந்து வைச்சி பேசுவாங்கன்னு சொல்ற கேக்கவே சகிக்கலை" என்று கூறி முகத்தை சுளித்தவன் "உன்னை நிக்க வைச்சதுக்கு காரணமே தேவாவை பத்தி தெரிஞ்சிக்கத்தான்... நீ வேற என்ன என்னமோ பேசி டென்ஷனை ஏத்தாதே" என்றான் எரிச்சலாக
'அட கிரகமே சுத்தி சுத்தி ஏண்டா என்னையே ரவுண்டு கட்டுற…. நான் பாட்டுக்கு சிவனேன்னு போனா என்னை கூப்பிட்டு வைச்சி லந்தா பண்ற? இதுல நீ என்ன வேணா பேசலாம் நான பேசினா தப்பா?" என்று மானசீகமாக மனதில் பேசியவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது…
"என்ன முழிக்கிற? தேவா எப்படி இருக்கா? அவன் நல்லா வைச்சி இருக்கானா ஏதாவது சொன்னால உன்கிட்ட" என்றான் அதிகாரமாய்.
'கேட்பது தங்கையை பற்றி அதிலும் துளி மதிப்பு மரியாதை இல்லை சரி அது கூட வேண்டாம் கொஞ்சம் அதட்டாமலாவது கேட்டு இருக்கலாம்' என்று நினைத்தவள் பார்வை அவனை அளவிட ஒரு ராட்சனை போல இவள் கண்களுக்கு தெரிய இவனுக்கு ஏத்த குரல் தான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை
தன்னையே அளவீடும் மேகலாவை கண்டவன் அவள் தலையில் ஒரு குட்டை வைத்து "கேட்டுக்கிட்டே இருக்கேன் சிலை மாதிரி நிக்குற சொல்லு எப்படி இருக்கா அவ" என்றான் கொஞ்சம் கடுமையாக
குட்டுபட்ட தலையை தேய்த்து விட்டவாறு அவனை கோபமாக பார்த்தவள் "இதோ பாருங்க இந்த அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சிக்காதிங்க முன்னாடின்னா தேவா என் பிரெண்டு அவ அண்ணன்ற தால சும்மா விட்டேன். ஆனா இப்போ நீங்கதான் அவள வேண்டான்னு தலைய முழுவிட்டிங்களே இனி நான் யாருக்காக பொறுத்து போகனும்" என்றாள் தைரியத்தை எல்லாம் ஒன்று கூட்டி
"ஏய் கேட்டதுக்கு மட்டும் பதிலை சொல்லிட்டு போ தேவை இல்லாத பேச்சை எல்லாம பேசாதே அவ என் தங்கச்சி நான் பேசுவேன் பேசாம போவேன் அதை கேக்க நீ யாரு" என்று பல் இடுக்கில் இருந்து வார்த்தையை வெளியேற்றியவன் "ரொம்ப பேசின அரை அடி இருக்க உன்னை ஆழாக்கா ஆக்கிடுவேன் புரியுதா" என்று மிரட்டினான்
"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இந்த ஆம்பளைங்களுக்கு தெரிஞ்சது ஒன்னே ஒன்னுதானே பொம்பளைய எப்படி அடிச்சி அழ வைக்கறதுன்னு" என்று காரமாய் பேசியவள் அதான் நான் யாரோன்னு தெரியுதுல என்கிட்ட எதுக்கு கேக்கனும்" என்று முனுமுனுப்புடன் அவன் கேள்விக்கு பதிலை கூறாமல் அங்கிருந்து நகர்ந்திட
"ஏய் ஆழாக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு போய்டே இருக்க ஒழுங்கா சொல்லிட்டு போ" என்று அவளின் வழியை மறைத்து கையை நீட்டிட இடத்தை விட்டு நகராமல் அவனை முறைத்தபடியே எதுக்கு தெரிஞ்சிக்கனும் இல்ல அவளை பத்தி எதுக்கு தெரிஞ்சிக்கனும் உங்களால தானே அவளுக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாண ஏற்பாடு ஆச்சு... அவ என்ன யாரும் பண்ணாத பண்ணவே கூடாத தப்பையா பண்ணிட்டா அவளுக்கு புடிச்சவனை விரும்பினா அதை உங்களால சேர்த்து வைக்க முடியல இப்போ அவ நல்லா வாழ்ந்தா என்ன? வாழலன்னா என்ன? அவ எக்கேடோ கெட்டு போறா அவளை பத்தி உங்களுக்கு எதுக்கு சார் இவ்வளவு அக்கரை" என்றவள் "வழியை விடுங்க யாரவது பார்த்தா எனக்கும் இதே நிலமை தான்" என்று அவன் கையை தட்டி விட
"ஏன் உனக்கு மட்டும் தான் அவ மேல பாசம் இருக்கா எனக்கு இல்லையா?? எனக்கு இல்லையான்னு கேட்டேன்!! பாசமா வளர்த்த கையாலையே அவளை அடிக்க வைச்சது எது? போயும் போயும் அவனை காதலிச்சாலேன்ற ஆத்திரம் எல்லாம் சேர்ந்து என்னை அவளுக்கு விரோதியா அக்கிடுச்சி அவன் அவளை மட்டும் காதலிச்சி இருந்தா நிச்சயம் சேர்த்து வைச்சி இருப்பேன்…
அவனை பத்தி எல்லாம் தெரிஞ்ச பின்னாடி எந்த அண்ணன் இந்த விஷயத்தை செய்வான் என் கஷ்டம் வலி ஒரு அண்ணனா இருந்தா மட்டும் தான் புரியும்... அது உனக்கு புரியாது என்றவன் தன்னை நிதானித்துக்கொண்டு நான் தேவாவை பத்தி கேட்டேன்னு எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு தெரிய கூடாது…
அப்படி தெரிஞ்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஜாக்கிரதை" என்று அவளை எச்சரித்து அந்த இடத்தை விட்டு அகன்று விட
"ப்பா என்ன கோவம்" என்று அவனையே பார்த்தவள் "இந்தா இருக்கு காலேஜ் ஒரு எட்டு வந்து அவளை பாக்க முடியல வழில போற என்கிட்ட வம்பு பண்ணி பயம்புறுத்துறது என்னமோ இவர் கதைய தான் நான் பேசுறா மாதிரி இவருக்கு நான்னா ஒரு கிள்ளுகீரை" என்று மேகலா வேண்டுமென்றே சத்தமாக முனுமுனுப்பது அவன் காதுகளில நன்றாகவே விழுந்தது.
தங்கையை பற்றிய எண்ணங்கள் மனதிற்குள் வண்டாய் குடைய அப்படியே வீட்டிற்கு திரும்பி இருந்த சந்திரனுக்கு எவ்வளவு முயன்றும் தேவாவின் முன் நிற்கவும் அவளிடம் பேசவும் தன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை ஏன் அவளை பற்றி விசாரித்தது கூட அவளுக்கு தெரிய கூடாது என்று தான் நினைத்தான் .
நிறம் மாறும் பூக்களின் இனம் போல் அவளும் மனம் மாறிக்கொண்டு இருந்தாள். அதன் தாக்கம் தான் அவனை காணது தவித்தது, அவன் ஓய்வை எடுக்காமல் இருப்பதை பார்த்து கோவம் கொள்வது, அவனுக்கு வலி என்றாள் தனக்கே வலிப்பது போல கலங்குவது என்று அவளுடைய உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது.
அவன் தன்னை காதலித்தான் காதலிக்கவில்லை என்று எல்லாம் எண்ணவில்லை இவன் என் உரிமை என்று மூளையும் மனதும் சேர்ந்து உரைக்க அவளுக்கு தோன்றுவதை எவ்வித தயக்கங்களும் இன்றி செயலாற்றிக் கொண்டு இருந்தாள். இதை எல்லாம் ஒரு புன்னகையோடு விசாகனும் அனுபவித்துக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு அடிபட்டதில் இருந்து மனதளவில் இன்னும் நெருக்கம் கூடி இருந்தது ஆனால் அந்த நெருக்கம் வேறு எதிலும் வரவில்லை... அவள் விசாகனை முழுதாக ஏற்றுக்கொண்டாளா என்று அவளுக்கே தெரியாத சமயத்தில் சில முடிவுகளை எடுக்க தடுமாறிக்கொண்டு இருந்தாள். அவன் பார்வை பேச்சு நடவடிக்கை என்று அனைத்தும் மனதிற்கு இதமாய் இருந்தது. இரண்டு மூன்று தினங்களில் அவனுக்கு குணமாகி இருக்க தலையில் இருந்த கட்டை கூட பிரித்து விட்டாயிற்று கையில் மட்டும் சிறிய பேன்டேட் போட்டு இருந்தது, இப்போது கூட அவனுக்காக மாத்திரைகளை எடுத்து கொண்டிருந்தவளை பார்த்த விசாகன்
"சனா என்னை கவனிக்கிறது இருக்கட்டும் உன்னை நீ கவனிக்கிறியா இல்லையா?"என்றபடி அருகில் வந்தான் விசாகன்.
எங்கே அவனுக்கு தெரிந்து விடுமோ என்று அஞ்சியவள் "நான் நல்லா தான் இருக்கேன் கொஞ்ச நாளா நைட்டு கண்ணு முழிச்சி படிக்கிறேன் ல அதுல வந்து வாட்டமா இருக்கும்" என்றபடி அவன் அருகில் இருந்து விலகியவள் டேபிள். மீது அவனுக்கான மாத்திரைகளை வைத்துவிட்டு கல்லுரிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
இந்த மூன்று நாட்களில் அனைத்து சத்துக்களையும் இழந்தது போல இருந்தவளுக்கு நடமாடுவதே பெரிய விஷயமாய் இருக்க, இருநாட்களும் தொடர் காய்ச்சல் என்பதால் அதற்கு மாத்திரையை எடுத்துக் கொண்டு இருந்தவள் அதை எவரும் அறியாதபடி பார்த்துக்கொண்டாள்.
கடந்த இரு நாட்களாக அவனை நெருங்காமல் அருகே நிற்காமல் போக்கு காட்டி மறைத்தவளால் மூன்றாம் நாள் அதை தொடர முடியவில்லை இன்று தேவாவை தெளிவாக கண்டவனுக்கு ஏதோ அவள் வித்தியாசமாக நடந்துக்கொள்வது போல பட்டது அவளது முகம் கனகனவென்று இருக்க,
"ஏன் முகம் எல்லாம் வாட்டமா இருக்கு, கிட்ட வந்து நின்னா தள்ளி போற நடையே சோர்ந்து போனா மாதிரி தெரியுது? உனக்கு ஏதாவது பண்ணுதா?" என்று அவள் எதிர்பாராத நேரத்தில் நெற்றியின் மீது கையை வைத்ததும் அவன் கைகளில் பட்ட சூடு அவளுக்கு காய்ச்சல் என்பதை உறுதிப்படுத்த, "ஏய் ஜுரமா இருக்குடி"என்றான் அதிர்வாய்.
அவனுக்கு தெரிந்து விட்டதே என்று ஒருசில நொடிகள் திருதிருவென ஆடு திருடிய கள்ளனை போல விழித்தவளின் முகத்தினை வைத்து இவள் தன்னிடம் மறைத்துள்ளால் என்பதை கண்டுக்கெண்டவன் "காய்ச்சல் எப்போதைல இருந்து" என்றான் சற்று குரலை உயரத்தி
அவனை சமாளித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டு சிரிக்க முயற்சித்தபடியே "அது எல்லாம் சாதாரணமா வர்றது தானே, ஒரு மாத்திரை போட்டா சரியா போகும்" என்று ஒரு காய்ச்சல் மாத்திரையை கையில் எடுத்தாள்.
அவளை போட விடாமல் தட்டிவிட்டு "நல்லா ஏமாத்தற!!! நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை எத்தனை நாளா இப்படி இருக்கு?" என்று அழுத்தமாய் கேட்டவன் அவளின் கையை பிடித்து "முதல்ல கிளம்பு வா ஹாப்பிட்டல் போகலாம்" என்றான்
அவனிடமிருந்து தன் கையை உறுவியபடியே "அய்யோ ஹீரோ!!! இது சின்ன காய்ச்சல் இதுக்கு போய் ஹாஸ்பிட்டலா!.. அந்த ஊசிக்கு இந்த காய்ச்சலே எவ்வளவோ பரவாயில்லை இரண்டு நாள் இருக்கும் மூனாவது நாள் இருக்கும் இடம் தெரியாம ஓடி போய்டும் இதுக்கு போய் இப்படி பண்றிங்களே எனக்கு காலேஜிக்கு வேற நேரம் ஆகிடுச்சி…" என்று பேசிக்கொண்டே இருந்தவளுக்கு திடீரென வாந்தி வரவும் குளியலறை நோக்கி ஓடியவள் குடல் வெளியே வந்து விழும் அளவிற்கு வாந்தியை எடுத்திருந்தாள்.
தேவா வாந்தி எடுக்கவும் பின்னாடியே சென்றவன் அவளின் தலையை இறுக்கமாக பிடித்து விட்டு வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வைத்து "இப்போவாவது சொல்லு என்ன செய்து உனக்கு" என்றான் கரிசனமாய்
"நிக்க முடியல ஹீரோ" என்று அவன் மீது சாய்ந்தபடியே "தலை எல்லாம் வலிக்குது உடம்பும் டயர்டா இருக்கு" என்றாள் தலையை பிடித்தபடி
"சரி வா கிளம்பு" என்றதும்
"ம்" என்றவள் அவனை விட்டு விலகி புத்தகங்களை கையில் எடுத்துக்கொண்டு தளர்வாய் கிளம்புவதை பார்த்தவன் பல்லை கடித்தபடியே "எங்கடி" என்றான்.
"வேற எங்க போறது காலேஜிக்கு தான் எக்சாம் நடக்குது ல…" என்றாள் முகத்தை சுருக்கியபடி ஆனால் ஒரு போதும் மருத்துவமனைக்கு செல்லும் எண்ணம் இல்லை அவளுக்கு என்பதை புரிந்துக்கொண்டு
அவள் கையில் இருந்த புத்தகத்தையும் அவளையும் பார்த்து கடுப்பானவன் "வைச்சேன்னா சொல்றதை கேக்க மாட்டியா? உனக்கு முடியல அப்புறம் எப்படி போய் எழுதுவ?
பரவாயில்லை மாத்திரை போட்டுக்கிட்டு எழுதறேன் என்று அடம் பிடித்திட" சரி ஆனா மாத்திரை மட்டும்னா கூட ஆஸ்பிட்டல் போயிட்டு காமிச்ச பிறகுதான்.. காலேஜ் கொண்டு போய் விடுவேன்… அதுவும் உன்னை தனியா எல்லாம் காலேஜ்ல விட்டு வர முடியாது... எக்சாம் முடிஞ்சதும் என்னோடவே வந்திடனும்" என்ற நிபந்தனைகள் இட வேறு வழியில்லாமல் சரி என்று ஒத்துக்கொண்டவள் அவனை ஒன்டியபடியே காரில் ஏறி இருந்தாள்.
வாசல் வரை வந்த தில்லை "ஆத்தா ஏதாவது இருந்தா சொல்லுத்தா… உள்ளுக்குள்ளயே வைச்சா எனக்கு எப்படி தெரியும்… அதும் இரெண்டு நாள மறச்சி வைச்சி இருக்க உன்னைய இரு" என்று மிரட்டியவர் "அய்யா அந்த புள்ளைக்கு வாயிலையே நாலு ஊசிய போட சொல்லு அப்போவாவது ஏதாவது வாய தொறந்து சொல்லுதான்னு பாக்கலாம்" என்றவரை முறைத்த தேவா
"பாட்டி …. நீங்களுமா நான் பாவம் இல்லையா? நான் ஆஸ்பிட்டல் போயிட்டு வந்து வைச்சிக்கிறேன் இருங்க…. நாலு ஊசியா எனக்கு… போதுமா என்னை பஞ்சர் ஆக்குனும் அதனே வேனும் உங்களுக்கும் உங்க அருமை பேரனுக்கும்" என்று அவரிடம் கோபம் கொண்டவள் முகத்தை தூக்கி வைத்துகொண்டு கண்களை மூடிக் கொண்டாள். என்ன தான் விளையாட்டு தனமாக பேசி தான் நன்றாக இருப்பதாக காட்டிக்கொண்டலும் அவளால் சுத்தமாக முடியவில்லை கணவனும் பாட்டியும் கவலைக்கொள்வார்களே என்று நினைத்து தான் இவ்வாறு வம்பு பேசியிருந்தாள்.
அதனை அறிந்துக்கொண்ட விசாகனோ "உஷ் அமைதியா படு" என்று தன்மீது சாய்த்துக் கொண்டவன் "வறேன் அப்பத்தா" என்று கூறி நேரே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
"எதத்னை நாளா ஃபீவர் இருக்கு?"
"தெரியல டாக்டர் i think two days இருக்கும்னு நினைக்கிறேன்".
"ம் ok normala fever two days இருக்கும் பட் எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் அன்ட் யூரின் டெஸ்ட் எடுத்துடுவோம் இது ஒரு பார்மலிட்டி தான்" என்றவர் "நர்ஸ்" என்று அழைத்து தேவாவிற்கு ஊசியை தயார் செய்ய சொன்னார்
"எஸ் டாக்டர்" என்றபடி நர்ஸ் அவளை உள்ளே அழைத்து போக
கணவனையே பாவமாக பார்த்தபடியே சென்ற தேவாவை கண்டவனுக்கு அவள் அன்று மருத்துவமனையில் செய்த அட்டகாசம் தான் நினைவில் வந்தது.
"எக்கீயூஸ் மீ டாக்டர்" என்றவன் "அவங்களுக்கு ஊசினா கொஞ்சம் பயம் நான் கூட இருக்கலாமா?" என்று கேட்கவும் டாக்டர சிரித்தபடியே "ஓ எஸ்" என்றிட அவள் பின்னே சென்றான்.
தேவா கண்களில் நீர் கோர்க்க "பீளீஸ் பீளீஸ் சிஸ்டர்" என்று கெஞ்சி கொண்டிருந்த நேரம் விசாகன் உள்ளே வரவும் "நீங்களாவது சொல்லுங்களேன் எனக்கு சின்ன வயசுல இருந்தே ஊசினா பயம்னு…. மாத்திரை மட்டும் கொடுக்க சொல்லுங்களேன்.... எவ்வளவு பெரிய மாத்திரைய் இருந்தாலும் பரவாயில்லை" என்று சிறு குழந்தை போல் கேட்பவளிடம் மீண்டும் மீண்டும் மண்டிப்போட்டது அவனது கர்வம்.
"சார் இவங்க வந்தததுல இருந்து ஊசி போடவே விடமாட்டுறாங்க கொஞ்சம் பிடிச்சிக்குங்க... வலி இருக்கும்... அதனால இடுப்புல ஊசி போடனும் கையில போட்டா கையே தூக்க முடியாது" என்றிட
"நீங்க போடுங்க சிஸ்டர்... அவ ஒன்னும் பண்ணமாட்டா" என்று உறுதியாய் கூறியவன் அவள் கைகளை பற்றியவாறு "சனா என்னை பாறேன்... என்னை மட்டுமே பாக்கனும்... என் கண்ணுல உனக்கு ஏதாவது தெரியுதா?" என்றான் அமைதியான குரலில்.
அவன் கண்களை பார்த்தவளால் வேறு எதையுமே நினைக்க முடியவில்லை அவன் மட்டுமே தெரிந்தான் மனம முழுவதும் அவன் உருவமே பதிந்து இருக்க இன்று கண்களிலும் நிறைத்துக் கொண்டவளால் அவன் கண்களில் இருந்து தான் கண்களை பிரித்து எடுக்க முடியவில்லை
எங்கே ஊசி போட்ட வலியை கூட காதல் மழுங்கடித்துவிட்டது போல இப்போது நர்ஸிடம் இருந்து சத்தம் "சார் சார் முடிஞ்சிடுச்சி" என்று அவளை அணைவாய் பிடித்தபடியே மருத்தவரிடம் வந்தான் விசாகன்
"இவங்களுக்கு கஞ்சி கொடுங்க வேறு எதும் வேண்டாம்" என்றவர் சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்து அனுப்பி இருக்க அடுத்து அவளை கல்லூரிக்கு அழைத்து சென்றான்.
காரில் இருந்து இறங்கியவளை கையை பிடித்துக்கொண்டு பாதி தூரம் வரை வந்தவனிடம் "சரி நீங்க கிளம்புங்க" என்றாள்.
"சொன்னது மறந்துடுச்சா?"
"இல்லையே"
"அப்புறம் கிளம்ப சொல்ற?"
"இங்க உட்கார்ந்து என்ன செய்ய போறிங்க... உங்க வேலையும் கெடும் அதான் பேசி பேசியே ஏமாத்தி ஊசி போட வைச்சிட்டிங்க அதுவும் இல்லாமா மாத்திரையும் போட்டாச்சி... இப்போ எனக்கு பரவாயில்ல பாருங்க நான் நல்லாதான் இருக்கேன்... நீங்க கிளம்புங்க" என்றாள்.
இல்லை என்று இடவலமாக தலையை ஆட்டியவன் அவள் இவ்வளவு நேரம் பேசியே பேச்சுக்கள் அத்தனையும் வீண் என்பதை போல ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்துகொண்டு "போய் எழுதிட்டு வா" என்றான் அழுத்தமாக
சரியான அழுத்தக்காரன் என்று முனுமுனுத்தவள் தேர்வு எவுதும் அறைக்குள் நுழைந்து இருந்தாள். இது அத்தனையும் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த சந்திரனுக்கு தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல திகைத்து நின்றிருந்தான்.
தூரத்தில் இருந்து பார்ப்பதனால் அவர்களுடய சம்பாஷணை அவனுக்கு விளங்கவில்லை இருந்தும் அவனின் அக்கரையான செயல்களிலும் முகங்களில் தெரிந்த பாவனைகளையும் வைத்து பார்த்தவன் தன் தங்கைக்கு விசாகன் இவ்வளவு முக்கியவம் கொடுப்பதை எண்ணி ஆச்சர்யப்படுவதா இல்லை அகமகிழ்வதா என்று அவனுக்கு விளங்கவில்லை எந்த இடத்தில் தன் கணக்கு பொய்த்துப்போனது முழுவதுமாக அந்த பெண்ணை மறந்துவிட்டு தன் தங்கையுடன் மனம் ஒன்றிதான் வாழ்கிறானா என்று சந்தேகம் எழுந்தாலும் தான் பயந்ததது போல தேவாவின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை விசாகன் அழுத்தம் கொண்டவனாக இருந்தாலும் சில மணித் துளிகளிலேயே பிடிவதமாக அவளுக்காக காத்திருந்து அவள் மேல் கொண்ட பாசத்தை தெரிய வைத்திருக்க . சந்தினின் மனம் முழுக்க நிம்மதி விரவி கிடந்தது.
முழுதாய் இரண்டு மணி நேரங்கிளில் தேர்வை முடித்தவளுக்கு நிற்க கூட திராணியற்று போய் இருக்க மெல்ல உடலில் குளீர் பரவியது போல உணர்ந்தவளுக்கு தலைவலி சம்மட்டியால் அடிப்பதை போன்று இருந்தது
அவள் நடந்து வருவதை பார்த்த விசாகனுக்கு நெஞ்சம் பகிரென இருந்திட சனா என்று அவள் கன்னம் தொட்டு பார்த்தவனுக்கு ஜீரம் குறையவில்லை மாறக அதிகமாகி இருக்கு என்று புரிய காலையில் சென்ற அதே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றவன் தில்லைக்கும் தகவலை தெரிவித்து இருந்தான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அவளுக்கு டைபாய்டு காய்ச்சல் என்பதை மருத்துவர் உறுதி செய்து இருக்க அவளை விட்டு நகராது இருந்தான் விசாகன் அவளுக்கு தேவையானதை பார்த்து செய்து கொண்டிருக்க மருந்துவர் அந்த அறைக்குள் நுழைந்தார்.
"இப்போ எப்படி இருக்கு தேவசேனா?" என்ற மருத்துவரிடம்
முகத்தில் வலியின் சாயல் தெரிய "பரவாயில்லை டாக்டர்... ஆனா ஊசிதான் வலிக்குது.. இந்த டீர்ப்ஸ் வேற கையை அசைக்க முடியல" என்று தேவா கூறிட "ஷ் சனா என்ன இது கொஞ்சம் அமைதியா படு.. எல்லாம் உனக்கு குணமாகனும் தானே கொஞ்சம் பொறுத்துக்க டா" என்றான் விசாகன்
"ஊசி போடாம டிரிப்ஸ் ஏறாம உங்க டைபாய்டு எப்படி குணமாகுறது" என்று கூறி சன்னமாய் சிரித்த மருத்துவர் விசாகனிடம் திரும்பி "பயப்பட ஒன்னுமில்லை இது இப்போ எல்லாம் சகஜமாகிடுச்சி குறைஞ்சது... ஒரு 14 டேஸ் இருக்கும் பட் நீங்க இருக்குற முறையில சீக்கிரமே குணப்படுத்திடலாம் அவங்க என்னென்ன சாப்பிடவேண்டும் எப்போ எப்போ மருந்து எடுத்துக்கனும்னு எல்லாம் தெளிவா சொல்றேன்… அவங்களை பாத்துக்குங்க…"
"தினமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் டிரிப்ஸ் அன்ட் இஞ்சக்ஷனும் பண்ணனும்" என்றவர் தேவாவை ஒரு முறை பார்த்துவிட்டு "எல்லாம் செய்துடலாம்... இந்த இஞ்சக்ஷனை போடும் போது மட்டும் நீங்க வந்துடுங்க... எங்க நர்ஸ்னால அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியலையாம்" என்று நகைத்திட
அவனுமே சிரித்தான்.