பூ 40

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​



விசாகன் விஷயத்தை கூறியதும் தில்லையும் அமுதாவும் முத்துவுடன் காரில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தில்லைக்குத்தான் மனதே ஆறவில்லை ஓடியாடி வளையவந்தவள் மருத்துவமனையில் படுத்துகிடந்ததை பார்த்து பரிதவித்து விட்டார். அவர் வரும் நேரம் தேவா தூங்கிக்கொண்டு இருக்க மருத்துவரிடம் என்னென்ன ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பேத்தியை காண சென்றார்.


கதவை திறந்து வரும் தில்லையை கண்டதும் தேவா முறைப்பதை போல் முகத்தை திருப்பிக்கொள்ள


"அடியாத்தே!!!! என்னத்தா இது? நீ செய்த வேலைக்கு உன்னேயத்தான் முறைக்கனும்... இங்க ஏறுக்கு மாறா நடக்குது!!" என்று தாடையில் கையை வைத்து கொண்டு பேசிட


"ம்... போங்க பாட்டி பேசாதிங்க" என்று செல்லம் கொஞ்சினாள் தேவா


தில்லை ,"என்ன கண்ணு.... இந்த கிழவிக்கிட்ட பேசமாட்டியா?" என்றதும்,


"ஆமா, போங்க.... நீங்க தெரிஞ்சி சொன்னிங்களோ இல்ல தெரியாம சொன்னிங்களோ.... நாலு ஊசி சரக் சரக்குனு குத்திட்டாங்க தெரியுமா?" என்று கூறி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டவளை பார்த்த அமுதாவுக்கு தேவாவின் செய்கை சிரிப்பை வரவழைத்திட.


"என்ன தேவா, நீ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க!! ஊசிக்கொல்லாம் போய் பயப்புடுற!" என்ற அமுதாவின் குரலுக்கு


"என்னதான் பெரிய புள்ளையா வளந்தாலும், ஊசி குத்தனா வலிக்கும் அமுதா..." என்று முகத்தை அஷ்டகோணலாக்கி சொல்லியவளின் மேல் அன்பு பெருகிட செலைன் ஏறிய அவள் காரங்களை ஆதரவாக வருடிவிட்ட தில்லை, அவள் தலை கோதி "உனக்கு சீக்கிரமே நல்லா ஆயிடனும் கண்ணு, ஆடி ஓடி வளைய வந்த பொண்ணு இப்படி படுத்து கிடக்கிறத பாக்க பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு... நீ எப்ப எந்திரிச்சி வருவன்னு இருக்கு..... அதுவும் இல்லாம உன் புருசனை அடக்க உன்னாலதானே முடியும்"... என்றதும்,


"பாட்டி இங்க வாங்க, உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்" என்று அவரை அருகே வரவைத்தவள் "உங்க பேரன் என்னை பார்த்து பயப்புட்றது எல்லாம் நடிப்பு.. அவர் பின்னாடி நான் சுத்தின நாள்ல இருந்து அவர் தான் என்னை மிரட்டி விரட்டி விடுவாறு... இது எல்லாம் சும்மா போங்கு பயப்புட்ற மாதிரி நடிச்சிட்டு இருக்காரு... அதை போய் நம்புறிங்க" என்று பாட்டியிடம் ரகசியம் போல் அவன் காதுபடவே சத்தமாக பேசிட கேட்டுக்கொண்டிருந்த விசாகனுக்கு இதழ் வளைந்து புன்னகை உதயமாகியது.


'உனக்கு உடம்புக்கு முடியலன்னாலும் வாய் சும்மா இருக்கா? வலவலன்னு எதையாவது அசைப்போட்டுக்கிட்டே இருக்கு' என்றுதான் தோன்றியது தன் செல்ல மனைவியை கண்டு, என்னதான் அவள் சாதரணமாக சிரித்து பேசினாலும் அவளுக்கு சோர்வு அதிகமாக இருந்திட அதை கண்டுக் கொண்டவனோ "அப்பத்தா நீங்களும் அமுதாவும் முத்துக்கூடவே கிளம்புங்க... நான் சாய்ந்திரம் இவள கூட்டிட்டு வந்துடுறேன்... இதோட நாளை மறுநாள் வந்தா போதும்னு டாக்டர் சொல்லிட்டாரு" என்றவன்


"நீயும் வாய மூடி படு சனா, உடம்புக்கு முடியல ஆனா வாய் மட்டும் ஓயலடி பேசிக்கிட்டே இருந்த இன்னும் ரெண்டு ஊசிய சேத்து போட்டுட போறாரு டாக்கரு" என்றதும் தானகவே வாய் மூடி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.


விசாகனுடைய ஒவ்வொரு செயலிலும் தேவாவின் இதயத்தில் சாரல் மழை அடிக்க துவங்கி இருந்த நாட்கள் அது . மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளை கீழ் அறையிலையே தங்க வைத்து தானும் அவளுடனே தங்க முடிவு செய்தான். இது தெரியாதவளோ "நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்களேன்... என் கூடவே இருக்கிங்க போங்க" என்றிட


அவளுக்கென ஏற்கனவே அறையை சுத்தம் செய்ய சொல்லி இருந்தவன் அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டே "எங்க போக இதுதான் நம்ம ரூம் நானும் இங்கதான் இருக்க போறேன்". என்றதும் விழிவிரித்து அவனை பார்த்தவள் "பாவம் எனக்காக ரொம்ப சிரமப்படுறாரு" என்று நினைத்து


"நீங்க ஏன் கஷ்டபடுறிங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, அப்புறம் பாத்துக்கலாம் இல்ல பொன்னி அக்காவை எடுத்து வைக்க சொல்லலாம்" என்றவள் "உங்களுக்கு கை எப்படி இருக்கு?" என்றாள் அவன் கைகளை கண்களால் ஆராய்ந்தபடியே


"எனக்கு ஒன்னுமில்லை பாரு" என்று அவள் பார்த்துக்கொண்டிருந்த கையை நன்றாக திருப்பி திருப்பி அவள் கண் முன்னால் ஆட்டியவன் "நான் நல்லா இருக்கேன் போதுமா.... இனி உன்னை பாத்துக்கறதுதான் என் வேலை இதுல பொன்னி அமுதா அப்பத்தா எல்லாம் அப்புறம் தான்... புரியுதா நீ ஏன் உட்காந்துக்கிட்டே இருக்க படு சனா கொஞ்சம் நேரம் தூங்கு" என்றான் அதட்டுவது போல்


"தூக்கம் வரலை" என்றவள் மீண்டும் "சரி நீங்க போட வேண்டிய மாத்திரை எல்லாம் போட்டாச்சா?" என்றிட அவளை திரும்பி முறைத்ததும் அவன் பார்வையில் "சரி சரி டோர் லாக்" என்று வாயை மூடியவள் படுக்குறேன் என்று கண்களையும் மூடிக்கொண்டாள்.


இடையிடையே தில்லை மற்றும் அமுதா சென்று அவளை பார்த்துக்கொண்டாலும் பெரும்பாலும் அவனே தான் தேவாவிற்கு அனைத்தையும் செய்துக்கொண்டு இருந்தான்.
அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான்.


ஒரு நாள் விட்டு ஒரு டிரிப்ஸ் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் கூட்டி வருவதும் அவனே, பெரும்பாலும் அவனுடைய வெளிவேலைகளை சுந்தரனையும் அமுதாவையும் வைத்து செய்துக்கொண்டு இருந்தான். அப்படியே அவசியமாக வெளியே சென்று வரவேண்டிய இருப்பின் இரண்டு அல்லது 3 மணி நேரங்களில் வீட்டிற்கு வருவது போல் பார்த்துக் கொண்டவன். காரமே இல்லாத உணவுகள் பழச்சாறு வகைகள் என அவளுக்கு நேரம் தவறாமல் கொடுத்துக்கொண்டு இருந்தான்.


நாட்கள் சற்று வேகமாக தான் சென்றது இதற்கு இடையில் மரகதத்திற்கு தேவாவின் உடல் நிலை பற்றிய விஷயம் போய்விட மனது கேட்காதவர் கணவருக்கு தெரியாமல் தேவாவை வந்து பார்த்துவிட்டு சென்றார். சந்தரனுக்கும் விஷயம் அரசல் புரசலாக தாயின் மூலமே தெரிய அவனுக்கோ மனம் அல்லாடியது தங்கையை காண ஆனால் எவ்வாறு என்று தான் தெரியவில்லை... மேகலாவிடமே அவளை பற்றிய விஷயங்களை வாங்கிக்கொண்டான்.


இப்போது ஓரளவு பரவாயில்லை என்பது வரை அவனுக்கு தெரியப்படுத்தி இருந்தாள். அவ்வப்போது மரகதமும் அவன் கேட்டாலும் கேட்காவிடினும் மகளை பற்றிய தகவல்களை அவனிடம் சில சமயங்களில் கூறினார். இதில் சௌந்தலிங்கம் தான் கொஞ்சம் கரார் பேர்வழியாக இருந்தார். அவரும் மனது மாறும் காலம் வருமா என்பதுதான் கேள்வி குறி


கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்திருந்தது அன்று விசாகனுக்கு அவசர விஷயமாக வெளியே செல்ல வேண்டியிருக்க மதிய நேரத்திற்கு வீட்டிற்கு வந்தவன் "அப்பத்தா, தேவாக்கு ஜூஸ் கொடுத்தாச்சா" என்றான்.


"அதெல்லாம் ஆச்சி ராசா பொன்னி தான் கொடுத்துட்டு வந்தா... நீ சாப்புட்டியா யா?" என்றதும் ம் "சாப்பிட்டேன்" என்று கூறியவன் மனைவியை பார்க்க அறைக்குள் சென்று விட்டான்.


"சனா" என்று அழைத்தபடி அவன் உள்ளே வர கண்மூடி படித்திருந்தவள் நெற்றியில் கைவைக்க காய்ச்சல் இல்லை காலை மாலை இரு வேளையும் அழையா விருந்தாளியாக வருவதும் போவதுமாக இருக்க ஒரளவு உடல் தேறிக்கொண்டு தான் வந்தாள். அவன் தொடுகையிலேயே கண் விழித்தவள் கணவனின் பார்வையை கண்டு


"என்ன ஹீரோ என்னேயே பாக்குறிங்க?"


"ம் எம் பொண்டாட்டி நான் பாக்குறேன். அதுல உனக்கு என்ன கஷ்டம்?"


"அட நல்ல பதில் தான் ஆனா ஏதோ இடிக்கல?"


"கால் தான்".


"அஹ்.. புரியல?"


"இல்ல ஏதோ இடிக்குதுன்னு சொன்னியே... என் கால் தான் உன் காலை இடிக்குதுன்னு சொன்னேன்" என்று அவன் தீவிரமாக சொல்ல


"புரியாமல் விழித்தவள் பின்பு புரிந்ததும் எனக்கு இப்போதான் புரிஞ்சிது நாளைக்கு சிரிக்கட்டுமா" என்றிட


"அடிங்க நக்கலு... ம்" என்று அவளை கொட்டுவது போல் கையை எடுத்து சென்றவன் அவளின் தலையை ஆட்டிவிட இருவருமே சிரித்துக்கொண்டு இருந்தனர்.


அவள் எதிரிப்பார்த்துக் கொண்டிருந்த நாளும் இதுதானே இது போல சகஜமாய் பேசி சந்தோஷமாய் சிரிக்க என்றாவது ஒரு நாள் அமையாதா என்று ஏக்கம் கொண்டவளுக்கு இந்த நாள் இனிமையானதாக இருக்க இமைக்காமல் அவனையே பார்த்தாள்.


"என்ன சனா உன் கண்ணு என்னை அரஸ்ட் பண்ணுது போல" என்றான் கேளிபோல


"ஆமா உங்களை என் கண்ணுல கட்டி வைச்சிக்க போறேன்... எனக்கு எப்பவும் நீங்க தெரியனும் உங்க முகம் தெரியனும்" என்று ஆசையாய் பேசும் நேரம் அவனின் போன் அடிக்க யார் என எடுத்துப்பார்க்க அது சுந்தரன். "கொஞ்சம் இருடா" என்று மனைவியிடம் கூறி போனை காதில் வைத்தவன்


"என்ன மாப்ள... தீடீர்னு போனு...."


"பங்கு அது"


"சொல்றா?"


"நீ எங்க இருக்க?"


"வீட்டுல"


"உங்கிட்ட கொஞ்சம பேசனும் ஒரு பத்து நிமிஷம் கடை பக்கம் வரியா?" என்றிட என்னவோ ஏதோ என்று நினைத்த விசாகன் இதோ வறேன் என்று நண்பனிடம் கூறியவன் மனைவியிடம் "ஒரு அரைமணி நேரத்துல வந்துடுறேன் சனா" என்று விட்டு நண்பனை காண சென்றான்.


அவளுக்குதான் ஒரு மாதிரியாகி போனது 'பச் கொஞ்சம் பாத்து பேசி இருக்கலாமோ!! அவர் என்ன நினைச்சி இருப்பாரு? உடனே எழுந்து போயிட்டாரு முதல் காதலை மறக்க கொஞ்ச நாள் ஆகும் தானே... நாம அவசரப்பட்டுட்டோமோ!" என்று பலவாறாக சிந்தித்திக்கொண்டு இருந்தாள் நல்ல வேளை நாம் பேசியது பிடிக்காமல் தான் போய்விட்டானோ என்று நினைக்கவில்லை அதுவரை அவன் தப்பித்தான்.


வெளியே சென்று வந்தவனுக்கு முகம் மலர்ச்சியாக இருந்தது "அப்பத்தா" என்று கூடத்தில் வந்து அமர்ந்தவன் அவரை காணவும் "அமுதாவுக்கு நல்ல வரன் வந்து இருக்கு" என்றான்.


"அப்படியா!!! நேத்துக்கூட போனை போட்டு கேட்டேன் ஒரு தகவலையும் சொல்ல ஜோசியரு"


"இது ஜோசியரு சொன்னது இல்லை... தானா தேடி வந்தது" என்றான் அமுதாவை பார்த்ததும்


தில்லை, "அப்படி இவ்வளவு சந்தோஷபடுற அளவுக்கு யாரு சம்மந்தம் யா?" என்றதும்


"வேற யாரு?? என் பங்காளி தான்" என்று பீடிகையுடன் ஆரம்பிக்க


"பங்காளினா? நம்ம சொந்தத்துல யாரவதா யா?" என்றிட


"நம்ம சொந்ததுல ஆயிரம் பேர் எனக்கு பங்காளி இருந்தாலும், என் சுந்தரனை போல தோள் கொடுக்க ஒருத்தராலும் முடியாது அப்பத்தா" என்றதும்


"நம்ம சுந்தரமாய்யா!!! நல்ல புள்ள... நல்ல சம்மந்தம் யா... இது யாரு சொன்னா? எப்போ சொன்னா? சுந்தரம் அப்பன் ஒத்துக்குட்டானா?" என்றார்


"அதே சொல்லத்தான் கூப்பிட்டு இருந்தான்... நாளைக்கு வெள்ளிக்கிழமை நிறைஞ்ச பௌர்ணமி அதான் பொண்ணு பாக்க வரன்னு சொல்லி இருக்காங்க" என்றதும்.


இதை கேட்டுக்கொண்டு இருந்த அமுதா, "மாமா என்னை தப்பா எடுத்துக்காதிங்க... எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்" என்றாள்.


"அமுதா அவனை பத்தி நான் சொல்லனும்னு இல்ல உனக்கே தெரியும்... உன்னை சின்னதுல இருந்து பாக்குறான்... உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவன் உன்னை நல்லபடியா பாத்துப்பான்" என்றான் அவளை சமாதனப்படுத்தும் எண்ணத்தில்


"பார்த்துப்பார்.... பார்க்கலை.... அது பிரச்சினை இல்லை மாமா... என்னோட முடிவுக்கு காரணம் ஒட்டுமொத்தமா நான் கல்யாணத்தையே வெறுக்குறேன்... ஏனோ எனக்கு கொஞ்சம் கூட அதுல விருப்பமே இல்லை... எதுவுமே பிடிக்கலை இப்படியே உங்க எல்லோரோடவும் சந்தோஷமா இருந்துடுறேன்" என்று கூறவும்


தில்லையோ அமுதாவின் பேச்சில் அதிர்ந்து போய் இருக்க "நீ எல்லாரையும் மாதிரி என் நண்பனை நினைச்சிடாத அமுதா... அவன் உனக்கு ஒரு நல்ல துணையா இருப்பான்... எனக்கு ஒரு தங்கை இருந்தா கண்டிப்பா அவன் கேக்கலனாலும் நானே கல்யாணம் பண்ணி வைச்சி இருக்க நினைப்பேன் உன் விஷயத்துல அவன் எண்ணம் என்னனு தெரியாம பேசக்குடாதுன்னு அமைதியா இருந்தேன்.... ஆனா அவனே உன்னை பொண்ணு கேக்கும் போது நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிற... நான் சொன்னா என் தங்கை மீற மாட்டா உன்னை என் தங்கையா தான் பாக்குறேன்" என்றிட


அமுதாவிற்கு என்ன தோன்றியதோ இவை அனைத்தும் கேட்டுக்கொண்டு இருந்த தேவாவிற்கு தான் கால்கள் தரையில் நிற்க வில்லை ஆகாயத்தில் பறப்பது போல உணர்வுகள் அவளை ஆலிங்கனம் செய்ய நெஞ்சில் ஒரு ஓரத்தில் எப்போதாவது நெறுஞ்சி முள் போல் குத்திக்கொண்டு இருந்த ஒன்று இப்போது அவளை விட்டு விலகியதில் சந்தோஷத்தில் பூரித்துப்போய் இருந்தவள்.
மெல்ல எட்டுகளை வைத்து ஹாலிற்கு வந்து தன் கணவனையே விழியகற்றாமல் பார்த்தாள்.


அமுதா எதுவும் கூறாமல் அப்படியே நிற்க "என்ன புள்ள ஏன் எதுவும் பேசாம நிக்குற... உன் மாமந்தான் அம்முட்டு சொல்லுறானே... அவன் சொல் பேச்சை கேக்குறது... உன் குணத்துக்கும் மனசுக்கும் ஏத்தவன்" என்று தில்லை மன்றாடி கூறிட


"அம்மத்தா எனக்கு எப்படி சொல்ல எனக்கு" என்று தடுமாறியவளை கண்ட விசாகன் "நீ யாரையாவது விரும்புறியா?" என்றதும் "மாமா நானா?" என்றாள் அமுதா அதிர்ச்சியாக


"இல்ல அமுதா, உன் தயக்கம் பார்த்துதான் கேட்டேன்.... உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தாலும் தராளமா சொல்லலாம்... நாங்க இவனை தான் கட்டிக்கனுமு கட்டாய படுத்தப்போறது கிடையாது... ஆனா நீ இப்படியே இருக்க ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்"


"இன்னைக்கு உனக்கு சரின்னு படுறது, நாளைக்கு தப்புன்னு தெரியறப்போ காலம் போய் இருக்கும்... மேலும் நாங்க இருப்போமா, இல்லையான்னு கூட தெரியாது... அதை எல்லாம் நம்பி உன் வாழ்க்கைய பாழக்க முடியாது புரியுதா... நாளைக்கு அவங்க வீட்டுல இருந்து வர்றாங்க நல்ல முடிவா சொல்லு உன்னை யாரும் கட்டாய படுத்துல... இது உன் வாழ்க்கை... நீ சின்ன பொண்ணு கிடையாது.... படிச்சவ உத்யோகத்துல இருக்க உனக்கே எல்லாம் தெரியும்... கஷ்ட நஷ்டம் புரியும்.... சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் முடிவு உன் கையில்" என்று எழுந்து சென்றுவிட


இதுவரை ஹாலில் நின்றிருந்த தேவா மெல்ல இருக்கையில் வந்து அமர்ந்தாள். தில்லையும் மனம் கணக்க நாளை என்ன சொல்ல போகிறாளோ என்ற கலக்கத்துடன் எழுந்து சென்றார்.


அமுதா மட்டும் முகம் தெளியாமல் நின்றிருக்க ஆகயத்தில் பறந்துக்கொண்டு இருந்த தேவா தன்னிலை உணர்ந்த போது அமுதா தெளிவில்லாத முகத்துடன் இருப்பதை கண்டு அவளின் கையில் அழுத்தம் கொடுத்து "உங்களுக்கு எதனால கல்யாணம் பிடிக்கமா போச்சின்னு தெரியுது அமுதா... அதுக்கு காரணம் உங்க அம்மாவோட வாழ்க்கை.... ஆனா எல்லாரும் அவரைப்போலவே இருக்க மாட்டாங்களே ஆம்பளைங்கள்ல ஒரு சில பேர் உங்க மாமா மாதிரியோ, இல்லை சுந்தரன் அண்ணா மாதிரியோ இருக்கததானே செய்றாங்க"


"என்னை கேட்டா சுந்தரன், அண்ணா உங்களுக்கு பர்பெக்ட் மேட்ச்ன்னு தான் நான் சொல்லுவேன்... என்டா இவ என் விஷயத்துல மூக்கை நுழைக்கிறாளேன்னு தப்பா
எடுத்துக்காதிங்க... என்ச மனல பட்டதை சொன்னேன்... என்றிட அமுதா அப்படி இல்லை என்பதை தலை அசைத்து கூற


மேலும் பேச்சை தொடர்ந்தவள் "அப்புறம் என்ன அமுதா ஃபிரியா விடுங்க ... புத்திய கேட்காதிங்க தப்பு தப்பா சொல்லி தரும்... மனசை கேளுங்க உண்மைய தெளிவா உடைச்சி சொல்லும்... உங்க மனச கேளுங்க கண்ணை மூடி அவரை உங்களுக்கு பிடிக்குதா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க மத்ததையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்...." என்று அவளுக்கு ஒரு வழியை காண்பிக்க ம் என்று அவளுக்கு கண்களை மூடி திறந்த அமுதா அறைக்குள் சென்றதும் தேவா விசாகனின் வருகைக்காக காத்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN