பூ 49

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பால் வண்ண நிலவொளியில் நட்சத்திர பூக்கள் மின்னும், அந்த ஏகாந்த இரவில் ,சுகந்தமான மணம் வீசும் மலர்களின் வாசம், நாசியை தீண்டி செல்ல வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்த அறையில், தன் மங்கையவளின் வரவை ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தான் சுந்தரன்.

தன்னை எதிர் பார்த்து காத்திருந்தவனை வெகுநேரம் சோதிக்க வைக்காமல் சீக்கிரமே அவனை தேடி வந்திருந்தாள் அவனின் தேவதை.

கதவை திறந்து வந்தவளின் நாணத்தையும் அவளின் அழகையும் வைத்த கண் வாங்காமல் ரசித்துக்கொண்டு இருந்தான் சுந்தரன்.

அவன் பார்வையில் வெட்கச் சிவப்பை பூசிய கன்னங்களோடு, அவனை நெருங்கியவள் கையில் இருந்த பால்சொம்பை தன்னவனிடம் கொடுத்து அவன் கால்களில் விழுந்து வணங்கிட,

"ஹேய் அமுதா, என்னடி இது எல்லாம்…. நான் காணுறது கனவா இல்லை நிஜமா? என்றான் தன் கைகளில் கிள்ளியபடி

அவன் கேலியில் புரியாமல் நின்றவளை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டவன், "ரொம்ப முழிக்காத அமுதா குட்டி…. நீ என் கால்ல எல்லாம் விழுந்தியா, அதான் ஒரு நிமிஷம் கனவோன்னு நினைச்சிட்டேன்" என்றான் சிரித்துக் கொண்டே

"ரொம்பத்தான் கிண்டல் பண்றிங்க... நான் என்ன அவ்வளவு திமிர் பிடிச்சவளா? கட்டின புருஷன் கால்ல கூட விழாம இருக்கறதுக்கு…" என்றாள் அவனை முறைத்துக் கொண்டே

அவள் கோவத்தை பார்த்ததும் "அப்படி சொல்லல அமுதா குட்டி…. நீ எப்பவும் கொஞ்சம் கடுகடுன்னு இருப்பியா, யாரையும் பக்கத்துலயும் நெருங்க விட மாட்ட, அதுலயும் உன் மாமாங்காரன் குணம் அப்படியே உனக்கும் இருக்கும்…. நான் கூட உன்னை அவன் கிட்ட சொல்லும் போது பொம்பள விசாகனை பார்த்த மாதிரியே இருக்குன்னு தான்டி சொல்லுவேன் .. அதான் உன்கிட்ட கொஞ்சம் விளையாடி பார்த்தேன்." என்று சுந்தரன் அவளை சமாதனம் செய்யவும்

முயன்று வரவழைத்த குரலில் "என் குணமே அவ்வளவு தாங்க... எங்க அம்மாவோட வாழ்க்கைய பார்த்து யார் மேலயும் நம்பிக்கை வரல, அதுவும் கல்யாணம் மேல சுத்தமா நம்பிக்கை வரல... அதுக்கு எனக்கு நானே போட்டுக்கிட்ட வேலி தான் இந்த கோவம், கடுகடுப்பு எல்லாம்" என்றவளின் கண்கள் இரண்டும் நீர்த்துளிகள் தளும்பி நின்றது.

"ஏய் அமுதா குட்டி, என்னடி இது உன் கிட்ட சும்மா விளையாடி பாத்தேன்டி மாமா…" என்று அவள் கண்களின் ஈரத்தை துடைத்தவன் அழாதடி குட்டி எனக்கு உன்கிட்ட பிடிச்சதே இந்த திமிர்...துணிச்சலும், கோவமும் தான்டி"

"உனக்கு ஞாபகம் இருக்கா? உன்கிட்ட ஒருத்தன் லவ் சொல்ல வந்தான்னு, அவனை செருப்பால அடிச்சியே, அப்போ புரிஞ்சுதுடி அமுதா குட்டி உன்னோட மனசு... அப்பவே முடிவு பண்ணேன் உன்னை எதுக்கும் நான் கலங்க விடக் கூடாதுன்னு... இப்போ நானே உன்னை அழ வைச்சா மாதிரி ஆகிடுச்சி... சாரி டா குட்டி" என்று அவளின் இருகைகளையும் பிடித்து நெஞ்சினில் வைத்துக்கொண்டு அவளிடம் மன்னிப்பை வேண்டிட

அவன் சொல்லிய விதத்தில் "அய்யோ என்னங்க சாரி எல்லாம் கேக்குறிங்க…" என்று பதறியவளின் கைகளை விடாமல் பற்றி அழுந்த முத்தமிட்டவன் "இனி நீயும் முடிஞ்சதை நினைச்சி அழக்கூடாது" என்று கூறி அவளை இறுக்கமாக அணைத்து "உனக்கு டைம் வேணுமா அமுதா குட்டி" என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து.

ஏற்கனவே அவன் இறுக்கமாக அணைத்ததில் நெகிழ்ந்திருந்தவள் தன் சம்மதத்தை தெரிவிக்க இனிய இல்லறத்தை தொடங்கி இருந்தனர் தம்பதியர்.

அலையலையாக மனதில் எழும் எண்ணங்களுக்கு அழுகை ஒன்றையே ஆறுதலாக எண்ணி அழுது கரைத்தவள் விடிவிளக்கின் ஒளியில் கலைந்த ஓவியமாய் விழிமூடி படுத்திருந்தாள்.

கல்யாண வேலைகளை முடித்து அனைவருக்கும் பணத்தை செட்டில் செய்து வீட்டிற்கு வர நேரமானதால் நேராக குளியலறை சென்ற விசாகன் அலுப்பு தீர குளித்துவிட்டு வந்தவன் கட்டிலில் படுத்திருத்த மனைவியின் மறுபக்கம் படுத்தான்.

அவன் உள்ளே நுழையும் போதே விடிவிளக்கின் ஒளியில் வரிவடிவமாய் இருந்தவளின் கண்ணீர் கறைகளை கண்டுவிட்டவன் மனைவி அழுதிருக்கிறாள், என்றும் அவள் இன்னும் தூங்கவில்லை என்பதனையும், அனுமானித்தே இருந்தான். இருந்தும் அவளின் மனதின் ரணங்களை எப்படி கலைவது என்று அவனுக்கே விளங்காமல் இருக்க அவளை எவ்வாறு அணுகுவது என்று யோசித்தபடி படுத்து இருந்தவன்.

அவள் புறம் திரும்பி படுத்தவன் "சனா" என்றான் மெல்லிய குரலில்

"ம்"

"என்ன டா... இன்னும் தூங்கலையா???"

"தூங்கனும் மாமா" என்றாள் மெலிந்த குரலில்

"இந்த பக்கம் திரும்பி படு சனா"

"எனக்கு தூக்கமா வருது மாமா... நான் இப்படியே படுக்குறேன்" என்றாள் தொண்டைக்குள் சிக்கிய வார்த்தைகளை முயன்று வரவழைத்த கரகரப்பான குரலில் கணவனுக்கு தன் அழுகையை காட்ட விரும்பாதவளாய்

அவளின் இடையில் கையிட்டு தன் புறம் திருப்பிட அடக்கி வைத்திருந்த அத்தனை அழுகையும் அவனைக்
கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள்.

தேவசேனாவை அழட்டும் என்று விட்டவன் அவள் முதுகை வருடியவாறே ஆஸ்வாசப்படுத்த அழுகை மெல்ல கேவல்களாக உறுமாறி இருந்தது.

"என்ன நடத்ததுன்னு இப்படி அழுகுற டா?" என்றான் அவளை அணைத்தபடியே

"ஒன்னுமில்ல மாமா" என்றாள் அழுகையை அடக்கியபடி

"ஒன்னுமில்லாததுக்குதான் இப்படி அழுவாங்களா! என்னடா" என்றான் அனுசரணையாய்

அவன் அன்பில் நெகிழ்ந்தவள் அவள் மனதை அழுத்திய கேள்வியை அவனிடமே கேட்க விழைந்தவள் "மாமா நான் உங்களை லவ் பண்ணது பெரிய தப்பா மாமா?" என்றாள் கேவியபடியே

இதற்கு அவன் என்ன பதிலைக் கூறுவான் அவன் சந்தோஷத்தை வாழ்க்கையை ஏன் அவனையே மீட்டெடுத்தது அவளுடைய ஆழமான காதல் தானே இதைப்போய் தவறென்று சொல்வானா "இல்லடா செல்லம்மா என்னை மீட்டதே உன் லவ் தானேடா மாமாவுக்கு நீ வந்த பிறகுதான் வாழ்க்கையிலே சந்தோஷமே வந்தது" என்றிட அவனை இறுக அணைத்தவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

"நீ தேவதை டா செல்லம்மா என் தேவதை… எனக்கு கிடைச்ச தேவதை .. எனக்கு வாழ்க்கைய கொடுத்த தேவதை…" என்று அவள் முதுகை வருடியவாறே தேவாவை அணைத்துக் கொண்டு அவளை சமாதானம் செய்ய,

"அப்புறம் ஏன் மாமா அப்பா அண்ணா என்னை புருஞ்சிக்கவே இல்லை" என்றாள் உடைந்த குரலில்.

"அவங்க உன்னையும் உன் காதலையும் புரிஞ்சிக்கவே இல்லன்னு யார்டா சொன்னது!! உன்னை புரிஞ்சிக்கிட்டாங்கடா ஆனா என்ன? ஏத்துக்கத்தான் அவகாசம் கேக்குறாங்க…" என்றான் கனிவான குரலில்.

"அய்யாவை எல்லாம் குத்தம் சொல்ல முடியாது செல்லம்மா... அவங்க எல்லாரையும் சங்கடபடுத்தி தானே இந்த கல்யாணம் நடந்துச்சி அதான் கொஞ்சம் கோவம் அது எல்லாம் மாறும் டா... இதுவரை நீ சொல்றதை கூட கேக்காத உங்க அப்பா, நீ பேசின அத்தனையும் கேட்டாறே, அதுவே ஒரு மாற்றம் தானேடா" என்றான் அவள் உச்சியில் முத்தமிட்டு

"மாமா நம்மள எங்க அப்பா ஏத்துக்குவாங்களா?!?! என் அண்ணன் என் கூட பேசுமா?" என்றாள் பாசத்திற்கு ஏங்கும் சிறு குழந்தையாய்.

அவள் கேள்வியில் அவர்களை எந்த அளவிற்கு தேடுகிறாள் என்பதை புரிந்துக்கொண்டவனுக்கு அவள் முகமும் அகமும் வாடுவதைக் கண்டு இதயம் வலித்தது

"கண்டிப்பா ஒரு நாள் உன்னையும் என்னையும் ஏத்துக்குவாங்கடா செல்லம்".... என்றவன் அவளை திசை திருப்புவதாற்காகவே அவளை நெருங்கினான். வேறு எந்த சிந்தனையும் அவளை அண்டாதவாறு தன்னை மட்டுமே அவளுக்கு உணர்த்த துவங்கியவன் தன் வாழ்க்கை முழுவதும் அவளே என்பதை அவளின் காதல் கணவன் உணர்த்திக் கொண்டிருந்தான்.

காற்றில் கரையும் கற்பூரமாய் நாட்களும் வேகமாக கரைந்து சென்றது இதோ அதோவென அமுதாவின் திருமணம் முடிந்து 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அமுதா பிள்ளை உண்டாகி இருக்க அவள் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்த தொழிற்சாலை மற்றும் அரிசி ஆலை வரவுசெலவு கணக்குகளை பார்க்க வேண்டாம் என்று விசாகனும் சுந்தரனும் கூறி இருக்க வீட்டிலேயே ஓய்வை எடுத்துக்கொண்டு இருந்தாள்.

இதற்கிடையில் தேவாவிற்கும் மேகலாவிற்கும் கடைசி வருட பருவத்தேர்வு தொடங்கி இருக்க நல்ல முறையிலையே தேர்வுகளை எழுதி இருந்த இருவரும் பேருந்திலேயே வீட்டிற்கு பயணமானார்கள்.

"எப்படியோ ஒருவழியா படிப்பை முடிச்சாச்சி யப்பா….." என்று கல்லூரியை பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டாள் மேகலா.

"என்னடி அவ்வளவு தானா உன் படிப்பு? மேல படிக்கும் எண்ணம் இல்லையா கலா?" என்றாள் தேவா மேகலாவை பார்த்து கேள்வியாக

"சுத்தமா இல்ல புள்ள…. இதுவே பொண்ணு பாக்க வர்றவன் என்னை மட்டமா நினைக்க கூடாதேன்னு தான் புள்ள படிச்சேன்" என்றாள் மேகலா சலிப்புடன்

"ஓ….. என்று மட்டும் கூறிய தேவா, மற்ற விஷயங்களை பேசியபடி வர தன் அண்ணனை பற்றி மேகலா என்ன அபிப்பிராயம் வைத்துள்ளால் என்று தெரிந்துக் கொள்ள நினைத்து மெல்ல அவளிடம் ஜெயசந்திரனை பற்றிய பேச்சினை எடுத்தாள்.

"சரி, அது எல்லாம் இருக்கட்டும் டி... நான் உன்னை ஒன்னு கேட்பேன் உன் மனசுல என்ன தோணுதோ மறைக்காம என்கிட்ட சொல்லனும்". என்று ஒரு கூறியவள் "எங்க அண்ணனை பத்தி என்ன நினைக்கிற கலா?" என்றாள் அவள் முகம் பார்த்து ஆர்வமாக

தோழியை ஒரு மாதிரி ஏற்ற இறக்கமாக பார்த்த மேகலா "பச் என்ன கேள்வி டி கேக்கவே சகிக்கல" என்று முகத்தை அஷ்டகோணலாக்கியவள் "உங்க நொண்ணனை பத்தி நினைக்க என்ன இருக்கு… அந்த சைக்கோவை பத்தியெல்லாம் நினைக்க நேரமில்ல புள்ள" என்று கடுப்பாக கூறியவள்

"வேணும்னா உன் அத்தை பெத்த ரத்தினம்…. அதான் வாட்டசாட்டமா இருப்பானே... அருணு, அவனை பத்தி வேணா பேசலாம் டி... இந்த சண்டியரை பத்தி மட்டும் என்கிட்ட பேசாத" என்று விட்டு "ஆமா புதுசா என்ன உன் நொண்ணக்காரனை பத்தி என்கிட்ட பேசுறா?" என்றாள் மேகலா யோசனையாக

"அது சும்மா டி... அவனுக்கு கல்யாணம் பண்ணனுமா, அம்மா சொல்லிட்டு இருந்தாங்க அதான் உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் அவனை பத்தி என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சி வைச்சிக்கிட்டா, நாளபின்ன பொண்ணு பாக்கும்போது ஈசியா இருக்கும் ல அதான் கேட்டேன் டி" என்று பேச்சை மாற்றிட

"ஏன் புள்ள ஒரு அப்புராணி பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க பாக்குறிங்க??!! என்று வருத்தப்பணுவது போல பேசியவள் "இதுலாம் நல்லாவா இருக்கு என்னமோ போ இது எதுவும் எனக்கு நல்லதா படல…. அந்த பாவப்பட்ட ஜீவன் யாரோ என்னவோ" என்று மேகலா அவனுக்கு வாய்க்கப் போகும் பெண்ணுக்கு பறிதாப்பட்டு பேசிட அய்யோ என்று ஆனாது தேவாவிற்கு

தேவாவின் முகம் போன போக்கை கண்ட மேகலாவோ "இந்தா பாரு புள்ள நீ என்ன சொன்னாலும் சரி, முகத்தை தூக்கி வைச்சிக்கிட்டாலும் சரி, உங்க நொண்ணன் குணத்தை மாத்த முடியாது... மூக்குக்கு மேல கோவம்... அடுத்தவங்கள புரிஞ்சிக்காத பேச்சி விட்டுக்கொடுக்காத மனசு... எல்லாம் வைச்சித்தான் நான் சொன்னேன் என்ன இருந்தாலும் வர்ற பொண்ணு பாவம் தானே" என்றாள்.

"என்னடி என் அண்ணனை பார்த்தா கெட்டவன் மாதிரியா தெரியுது உன் கண்ணுக்கு??….. அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கியாடி!?!?" என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு

"சே.. சே…. நான் நினைக்க என்னடி இருக்கு… அதானே உண்மையும் கூட" என்றதும்

"உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சி கலா... இந்த வார்த்தையிலையே கபடி ஆடுறதை எங்கதான் கத்துக்கிட்டயோ... நீ அடங்மாட்ட டி " என்றவள் அப்போது அந்த பேச்சை கைவிட்டவளாய் மற்றதை பேசினாள்.

"மாமா, பாட்டி நேரம் ஆகிட்டு இருக்குன்னு செல்லிட்டு இருக்காங்க எங்க இருக்கிங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க"

"ஃபாக்டீரில இருக்கேன் சனா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துறேன் சொல்லு... மாமா வர்ற வரையும் கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணிக்கோடி செல்லம்" என்றான் விசாகன் மனைவியிடம் கொஞ்சலும் கெஞ்சலுமாய்.

"போங்க மாமா காலைலயே சொல்லிட்டு தானே இருந்தேன். சீக்கிரம் வீட்டுக்கு வரனும்னு அமுதா நமக்காக சாப்பிடாம வைட் பண்ணிட்டு இருப்பாங்க... அவங்க வைட் பண்ணலாம் அவங்க வயித்துல இருக்க குட்டி பாப்பா பாவம் இல்லையா அதுவும் சாப்பிடாம தானே இருக்கும்" என்றாள் வருத்தமாய்

"ஓ… என் செல்லம்மாவுக்கு குட்டி பாப்பா மேல எவ்வளவு பாசம்... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.." என்று மனைவியை சிலாகித்து கூறியவன் "நீ போனை வைச்சவுடனே மாமா கிளம்பிடுவேன் சரியா" என்று கூறியவன் அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

"என்ன சொல்லுறான் என் பேரன் தேவாமா?" என்ற தில்லை பலகாரங்களையும் சாப்பாட்டு வகைகளையும் முத்துவிடம் வண்டியில் ஏற்றி வைக்க சொல்லிக் கொண்டு இருந்தார். அமுதாவிற்கு 5 ம் மாதம் தொடங்கியதும் தாய் வீட்டு முறையில் பூ தைக்கவும் சாதம் ஊட்டவும் கிளம்பிக்கொண்டு இருந்தனர். சுந்தரன் வீட்டு முறைப்படி கோவிலில் விசேஷம் வைத்திருக்க அனைவரும் நேராக அங்கேயே செல்வதாக இருந்தது..

"மாமா சீக்கிரமே வர்றேன்னு சொன்னாங்க பாட்டி.. எல்லாம் எடுத்து வைச்சிட்டு ரெடியா இருப்போம் வந்ததும் கிளம்பிடலாம்" என்றபடி அமுதாவிற்கு வாங்கிய கண்ணாடி வளையல்களை எடுத்துக்கொண்டு இருந்தாள் தேவா.

"சரி தாயீ" என்ற தில்லை, விசாகன் வரவும் அனைவரும் சேர்த்து கோவிலுக்கு சென்று இருந்தனர்.

"வா அப்பத்தா.. வாங்க வாங்க வா மா தங்கச்சி. வாடா மாப்ள... வேலை முடிஞ்சிதா" என்று நண்பனை விசாரித்து வந்தவர்களை வரவேற்று கோவிலுக்குள் அழைத்து வந்த சுந்தரன் அமுதா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

தாய் வீட்டு சொந்தங்களை பார்த்ததும் அமுதாவின் அகமும் முகமும் மலர்ந்துவிட தாய்மையின் பூரிப்பில் இன்னும் அழகில் மிளர்ந்த அமுதாவின் தலையில் பூக்களை வைத்து அலங்கரித்தனர் பெரியவர்கள்… இது 5 ம் மாதம் என்பதால் நெருங்கிய உறவுமுறைகளை மட்டுமே அழைத்து இருந்தனர் சுந்தரன் வீட்டினர். அதுவே நூறு பேரை தாண்டி இருந்தது.

நண்பர்கள் இருவரும் வேலை பற்றி சில விஷயங்களை பேசிக்கெள்ள தேவா அமுதாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

அமுதாவின் மணிவயிற்றில்
தன் வெண்பஞ்சு விரல்களை வைத்து "உள்ள பாப்பா என்ன சொல்லுது அமுதா" என்றாள் தேவா ஆசையாக

அதில் நாணம் கொண்டவளாய் வெட்கத்தில் சிரித்த அமுதா "அதை நீயே கேளேன் தேவா பாப்பா என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்" என்றாள் அவளிடம்,

"அதையும் கேட்டிடுவோம்" என்று கூறிய தேவா அமுதாவின் மேடிட்ட வயிற்றில் காதை வைத்து கேட்டவள் அவங்களுக்கு பசிக்குதாம் சீக்கிரம் அம்மாவை சாப்பிட சொல்லுங்கன்னு சொல்லுது' என்று கிங்கினியாய் சிரித்தபடி கூறியவள்

நீங்க சாப்பிட்டா தானே குட்டி பாப்பா சாப்பிடும் என்று அவளை அழைத்து போக "நீ இருத்தா, நான் கூட்டிட்டு போறேன்…" என்று சுந்தரனின் உறவுமுறையில் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் அமுதாவை அழைத்து வந்து மனையில் அமர வைத்தார்.

தேவா அதை பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை என்றாலும் தீடீரென அவர் வந்து தன்னை நிறுத்திவிட்டு அமுதாவை அழைத்து சென்றது ஏதோ போல் ஆகி விட அமைதியாக விசாகன் அருகில் போய் நின்றுக்கொண்டாள்.

மனையில் அமரவைத்த அமுதாவிற்கு மூத்த பெண்மணிகள் நலங்கு வைத்து கைவளை பூட்டி சாதம் ஊட்டினர். கன்னகதுப்புகளில் பூசிய சந்தனம் மனைவியை அழகியாய் காட்ட அருகில் நின்றிருந்த சுந்தரன் தன்னவளை வெகுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.

ஒவ்வெருவராக வந்து நலங்கு வைக்க தில்லை தேவாவை அழைத்து வளையல் அடுக்க கூறினார்.

ஏற்கனவே அந்த பெண்மணி கூறியதில் தள்ளி நின்றவள் இன்னும் ஏதேனும் பேச்சு வருமோ என்று அஞ்சி "வேண்டாம் பாட்டி பெரியவங்க செய்றாங்க நான் எதுக்கு" என்று தயங்கி விலகி நின்றுவிட

"அட வா மா... கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல, ஆக போகுது இன்னும் பிள்ளை உண்டாகம இருக்க, இதுலயாவது நலுக்கு வைச்சி வளையல் வாங்கிக்க கண்ணு…. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்…." என்று அமுதாவை அழைத்து வந்த அதே பெண்மணி போகிற போக்கில் வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் கூறியதும் தேவாவிற்கு அவர் கூறிய வார்த்தைகளில் கண்களில் நீர்மணி கோர்த்துக் கொண்டது. இதற்கு தானே அவள் தயங்கி ஒதுங்கி நின்றது அப்படியும் வார்த்தைகள் வந்துவிட அவளுக்கு தான் ஒருமாதிரி ஆகிபோனது.

இதை கேட்ட அமுதா அதிர்வாய் தேவாவின் முகம் பார்க்க சுந்தரன், விசாகன், தில்லை, சுந்தரன் குடும்பத்தினர் என்று யாரும் இதை எதிர்ப் பார்க்கவில்லை மனைவியின் கலங்கிய முகம் கண்ட விசாகனுக்கு கோவம் சுறுசுறுவென ஏறியது

கணவன் ஏதாவது வெடுக்கென்று கேட்டுவிடுவானோ என்று பயந்த தேவா விசாகனின் கைகளை இறுக பற்றிக் கொண்டவள் வேண்டாம் என்று அமைதியாக அவனை தடுத்தாலும் ஒரு அண்ணனாய் சுந்தரன் அதை செய்திருந்தான்

"என்ன பெரியம்மா ஏன் இதுமாதிரி பேசுறிங்க? எப்போ எது பேசனும்னே தெரியாத உங்களுக்கு?.... இப்போ இதை பத்தி கேட்டே ஆகனுமா? எப்படி சிரிச்சிட்டு இருந்தா பாருங்க அவ முகமே வாடிபோச்சி... அவ படிக்கிற பொண்ணு அவங்களுக்கு தெரியும் எப்போ எது வேணும்னு நீங்க பாடம் எடுக்க வேண்டாம்" என்று அவரை அனைவரின் முன்னிலையிலும் சுந்தரன் தூக்கி எரிந்து பேசிவிட

"அது இல்ல சாமி, நான் நல்லதுக்குதான் சொன்னேன்" என்று அந்த பெண்மணி கூறினாலும்
விசாகனின் முகத்தில் தெரிந்த கோவத்தை கண்ட தில்லை நிலைமை மோசமாவதை உணர்ந்து பேத்தியின் முகத்தினை கைகளில் தாங்கியவர்,

"இவளே குழந்தை தான் மா இவளுக்கு என்ன வயசு ஆகிடுச்சி…. படிக்கிற புள்ளத்தா…. நாங்க அதை பத்தி நினைக்கவே இல்லை... எப்போ எங்களுக்கு அந்த வரம் கிடைக்குதோ அப்போ அது கிடைக்கட்டும்... என் பேத்தி வயித்துல என் மகனோ மருமகளோ வந்து பொறப்பாங்க அது நடக்க வேண்டிய காலத்துல கண்டிப்பா நடக்கும்... இதை பத்தி பேச இப்போ என்ன கிடக்கு... வந்தது அமுதா கண்ணு விசேஷத்துக்கு அதை மட்டும் பாப்போமே என்று அழுத்தமாய் கூறினார்.

அந்த பெண்மணி பேசியதில் சுந்தரன் குடும்பத்தினருக்கும் பெரிய வருத்தம் தான் என்ன செய்ய அவர் குணத்தை மாற்ற முடியாதே என்று நினைத்தவர்கள் சுந்தரனும் தில்லையும் பேசவும் அவருக்கு இது தேவைதான் என்று அதில் தலையிடாமல் அமைதியாகவே இருந்தனர்.

வயதில் மூத்தவரும் ஊரில் பெரிய வீட்டு மனுஷியுமான தில்லையின் வார்த்தை பேசியவரின் வாயை அடைக்க "நான் ஒன்னும் தப்பா சொல்லலத்தா கல்யாணம் ஆகி நாளேச்சேன்னு நல்ல எண்ணத்துல தானே சொன்னேன்" என்று அந்த பெண்மணி உடனே பின் வாங்கவும் சூழ்நிலையை மாற்ற விரும்பிய தேவா

"விடுங்க பாட்டி, அவங்க எதுவும் தப்பா சொல்லலை... நீங்க எதுக்கு விளக்கம் எல்லாம் கொடுக்குறிங்க பாட்டி" என்றவள் "இப்போ என்ன அமுதாவுக்கு வளையல் அடுக்கனும் அவ்வளவு... தானே நானே அடுக்குறேன்" என்றவள் அவளுக்கு சிரித்தமுகமாகவே வளையிட்டு பூ தூவி சாதம் ஊட்டி அவளிடமிருந்து வளையல்களை பெற்றுக்கொண்டாள்.

"சாரி தேவா, இவங்க எப்பவும் வெடுக்கு வெடுக்குன்னு பேசிடுவாங்க அதுக்கே இவங்க கூட நான் பேசவே மாட்டேன்… எங்க வந்து என்ன பேசனும்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல... வயசான மட்டும் போதுமா பக்குவமா நடக்க தெரியலையே" என்று வருந்தியவள் எனக்கு வர்ற கோவத்துக்கு என்று அமுதா பல்லை கடித்து தன் கோவத்தை வெளிபடுத்த

"அமுதா என்ன நீங்க…. வயித்துல பாப்பாவை வைச்சிக்கிட்டு இவ்வளவு கோவப்படுறிங்க!!! விடுங்க விசேஷம்னு வந்த இப்படியெல்லாம் கேக்கத்தான் செய்வாங்க... அவங்க என்ன தப்பா சொல்லிட்டாங்க? எங்களுக்கும் கல்யாணம் நடந்து ஒன்னறை வருஷம் ஆச்சில்ல அதான் கேக்குறாங்க" என்றவள் சிரிச்ச முகமா இருங்க அமுதா அப்போதான் பாப்பா சந்தோஷமா இருக்கும்…." என்று அவளை சமதானப்படுத்தியவள் கணவனுடன் சென்று நின்றுக்கெண்டாள்.

சுந்தரனின் குடும்பத்தினரும் அவளிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பை வேண்ட அவர்களையும் சமாதனப்படுத்தி நல்லபடியாக விசேஷத்தை முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

அந்த பெண்மணி கேட்கும் வரையிலுமே தேவசேனாவிற்கும் விசாகனுக்கும் குழந்தையை பற்றிய எண்ணம் வரவே இல்லை... தேவா இதுவரையிலும் கல்லூரி சென்று வந்திருந்ததால் அதை பற்றி நினைக்காமல் யோசிக்காமலும் இருந்தவளுக்கு அமுதாவின் விஷேசத்தில் நடத்தது குழந்தையை பற்றிய ஏக்கத்தையும் ஆசையையும் தூண்டி விட்டிருக்க கண்களும் மனதும் லேசாய் கலங்கி இருந்தது.

ஒரு சில மாதங்களில் நாட்கள் தள்ளிப் போகும் சமயத்தில் ஒரு வாரத்திலேயோ அல்லது பத்து நாட்களிலோ வீட்டுவிலக்கு ஆகிவிடுவிடுபவளுக்கு இப்போது நாட்கள் தள்ளிப் போனாலும் சந்தோஷப்பட முடியவில்லை… விசேஷம் நடந்து பத்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்த நிலையில் அதையே நினைத்துக் கொண்டு இருந்தவளுங்கு உடல் வேறு சோர்வாக இருந்தது…. இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த விசாகன் வீட்டிற்கு வருவதற்கு இரவு அதிக நேரமாக, தில்லையை சென்று படுக்க சொன்ன தேவா கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தவள் அசதியின் காரணமாக அமரந்த நிலையிலையே உறங்கி இருந்தாள்.

நல்லிரவில் வீட்டிற்கு வந்த விசாகன் அமர்ந்த நிலையில் உறங்கும் மனைவியை கண்டவன் எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்டறாலே என்கிட்ட இருக்க சாவியை வைச்சி வந்திடுவேன்னு சொன்னாலும் திருந்தவே மாட்ட என்று சலிப்பாய் அலுத்துக் கொண்டாலும் மனைவியின் அக்கரையில் மனம் இனிக்கத்தான் செய்தது அவளை பூ குவியலை போல் இரு கைகளில் அள்ளிக்கொண்டவன் மாடியை நோக்கி நடையை போட்டான்..

கைகளில் ஏந்தியவளின் கள்ளமில்லாத முகம் தனக்கு அருகில் தெரிய கன்னங்களில் வழிந்த கண்ணீர் தடங்களும் அவனுக்கு தெரிந்தது. அவளை ஏந்தியபடியே அறைக்கு செல்ல அவன் ஸாபரிசத்தில் மெல்ல கண்களை திறக்க முயற்சி செய்தவளுக்கு முடியாமல் போக வந்துட்டிங்களா ஹீரோ என்று ஈனஸ்வரத்தில் கூறியவள் மீண்டும் அவன் மார்பிலேயே சுகமாய் உறங்கினாள்.

பல நாட்களுக்கு பின் அவளையும் மறந்த நிலையில் தன்னை ஹீரோ என்று கூறியதில் மீசைக்குள் மறைந்த இதழ்கள் சிரிப்பில் வளைந்தது. இருந்தும் கடந்த சில நாட்களாகவே மனைவியின் வாட்டமான முகமும் எதிலும் நாட்டமில்லாத போக்கும் அவனை வெகுவாக இம்சை செய்தது..

இன்று அவள் கன்னங்களில் கண்ட கண்ணீர் கோடுகளும் அதை தெளிவாக உரைக்க அவள் அமுதாவின் விசேஷத்தில் நடந்ததை எண்ணி வருந்துகிறாள் என்று சரியாக அனுமானித்து இருந்தவன். காலையில் அவளிடம் பேச வேண்டும் என்ற முடிவுடனே தங்கள் அறை மெத்தையில் அவளை கிடைத்தி மனைவியை அணைத்தவாறே தானும் உறங்கி இருந்தான்.

மறுநாள் காலை விசாகன் எழுந்து பார்க்கும் போதே அறையில் தேவா இல்லாமல் இருக்க அவளை அழைத்தவாறே அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

"சனா…. சனா… எங்க டி இருக்க?"

"சனா…"

"தம்பி பாப்பா பின் கட்டுல இருக்குங்க... அப்பத்தா பண்ணையில இருக்காங்க... என்று வேலைசெய்யும் பெண்மணி கூறிட மனைவியை தேடி பின்கட்டிற்கு சென்றான்.

தான் பதியம் செய்த ரோஜா செடிகளில் மலர்ந்த பூக்களின் இணையாக தானும் ஒரு மலராய் நின்றவளின் வாடிய முகம் அவனை இம்சித்தது. சனா என்றான் மென்மையாய்…

கணவனின் குரல் கேட்டு திரும்பியவள் தன் முகத்தினை இயல்பாக்கிக் கொண்டு "எப்போ எழுந்திக்க மாமா... இருங்க காபி கொண்டு வறேன்" என்று அவன் அருகில் வர அவள் கைபிடித்து நிறுத்தியவன் என்னடா ஒரு மாதிரியா முகம் வேற வாடி போயிருக்கு என்றான் காதலும் கனிவும் நிறைந்த குரலில்.

என்ன மாமா எப்போ பார்த்தாலும் ஏதோ ஒன்னு சொல்றிங்க நான் எப்பவும் போல எல்லாரையும் வம்பிழுத்துகிட்டு ஜாலியாத்தான் இருக்கேன்... என்று கண் இமைகளை படபடவென மூடித்திறந்தவள் உங்களுக்கு தான் ஏதோ மாதிரி தெரியுது என்றாள் முயன்று முகத்தில் வரவழைத்த புன்னகையுடன்,

அவளை நம்பாத பார்வையுடனே "சனா" என்றான் அழுத்தமாய்

கணவன் கண்டுக்கொண்டானே என்று அஞ்சியவள் "ஒன்னுமில்ல மாமா... ஏதோ நான் தான் தேவை இல்லாததை எல்லாம் நினைச்சிட்டு இருக்கேன்". என்றாள் அவனை சமாதனமாக்கும் வகையில்

"அதான் என்ன நினைக்கிறன்னு கேட்டேன்". இன்னும் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி இருந்தான்.

அவள் அமைதியாக இருக்கவும்

"நானே சொல்லட்டுமா? அந்த பொம்பளை குழந்தைய பத்தி பேசினதை தானே நினைச்சிட்டு இருக்க" என்றதும் அவனை விழிவிறித்து பார்த்தாள் தேவா.

"உன் மனசை என்ன அறிக்குதுன்னு எனக்கு தெரியாத டா…." என்று அவள் தலையில் ஒரு குட்டு வைத்தவன் "உனக்கு தெரியாத? குழந்தைய பத்தி நாம ஏன் நினைக்கலன்னு…. யாரோ ஏதோ சொல்லிட்டாங்கன்னு உடனே வருதத்தப்படுவியா டி" என்றான் கடுப்பான குரலில்.

"அது மூனு மாசத்துக்கு முன்ன தானே…. ஆனா நாமா இப்போ குழந்தைய வேண்டாம்னு நினைக்கவே இல்லையே மாமா என்றாள் கவலையாக

"அடியேய் ஏன்டி இப்படி இருக்க… உனக்கு என்னடி வயசாச்சி இப்படி கவலைபடுற என்று அவன் கூறினாலும்

சிறுபிள்ளையாய் கலங்கும் மனைவியின் செயலில் கோபமானவன் குழந்தைய வான்னு சொன்னா உடனே வந்துடுமா? அது அதுக்கு நேரம் வர வேண்டாமா? என்று அவளிடம் காய்ந்தவன்

"சரி ஒன்னு செய் நீ போய் ரெடியாகு நாமா இன்னைக்கு ஒரு டாக்கடரை பாக்க போலாம்…. போதுமா அவங்க சொன்னா நம்புவியா" என்று எரிச்சலாய் கூறியவன் வேகமாய் உள்ளே சென்று விட

"மாமா... மாமா... இங்க பாருங்க" என்று அவன் பின்னே சென்றவள் நிலைப்படியில் கால் தடுக்கி "மாமா" என்ற சத்தத்தோடு கீழே விழந்து மயக்க நிலைக்கு சென்றாள்.

வீட்டிற்குள் முன்னேறி சென்றிருந்தவனோ மனைவியின் அலறலில் திரும்பிட கீழே விழுத்து இருந்தவளைத்தான் கண்டான்.

"அய்யோ சானா… இங்க பாரு டி"

"சனா… சானா…"

பேத்தி, பேரனின் குரலை கேட்டு வந்த தில்லை "என்ன ராசா? என்ன ஆச்சு?" என்றார் பதற்றத்துடன்.

"தெரியல அப்பத்தா கீழே விழ்ந்துட்டா போல" என்றவனுக்கு நாக்கு மேல்லணத்தில் சிக்கிக்கொண்டது

அய்யோ ரத்தம் என்று பதற்றத்துடன் கூடிய நடுக்கமான குரலில் கூறிய தில்லை "அம்மாடி... தேவாமா…. தேவா…." என்று குரல் கொடுக்க நெற்றியில் பட்ட அடியில் இருந்து ரத்தம் வருவது தெரியுவும் பயந்து போனான் விசாகன்

தேவாவின் நிலையை கண்டு பயந்த தில்லை "அய்யா ராசா தூக்குப்பா புள்ளைய ஆஸ்பிட்டலுக்கு" என்றிட தேவாவை அவசரவசரமாய் மருத்துவமனைக்கு அழைத்துச் வந்தான் விசாகன்.

தேவாவை பரிசோதித்த மருத்துவர் வெளியில் வரவும் "டாக்டர் என் வொஃப் எப்படி இருக்காங்க" என்றான் தவிப்பாய்.

வெளியே வந்த மருத்துவர் இருவரின் தவிப்பையும் பார்த்து நகைத்தவாறே "நத்திங் டூ சீரியஸ் விசாகன் சார்... சின்ன அடித்தான் நௌவ் ஷீ இஸ் ஆல்ரைட்" என்றார் அந்த மருத்துவ பெண்மணி புன்னகையாக

இன்னும் அவன் முகத்தில் பயம் தெளியாததைக் கண்டு "ஏன் பயப்புடுறிங்க விசாகன் சார்... இந்த மாதிரி சமயத்துல இது எல்லாம் நார்மல் தானே... கெஞ்சம் பாத்து கவனமா இருங்க, கூட இருந்து பார்த்துக்குங்க" என்றார் அறிவுறையாக.

தில்லைக்கும் விசாகனுக்கும் மருத்துவர் எதை குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் "எந்த மாதிரி சமயத்துல டாக்டர்" என்றான் விசாகன்.

"சாரி இன்னும் உங்களுக்கு விஷயம் தெரியாத விசாகன் சார்…." என்றவர் "40 days baby அவங்க வயித்துல வளருது... ஷீ இஸ் பிரெக்ணெட்... நீங்க இன்னும் கன்பார்ம் பண்ணலையா?

"எனக்கு ஒரு டவுட் இருந்தது அதை கண்பார்ம் பண்ணிக்க இப்போதான் யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் ரிப்பேர்ட் பாத்தேன் பாஸிட்டிவ் வந்துருக்கு….. என்றவர் அவங்க மயக்கமா இருக்க அதிர்ச்சி ஒரு காரணம் என்றாலும் ரொம்ப அழுத்தமும் ஒரு காரணம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம பாத்துக்குங்க" என்றார் மருத்துவர்.

இதை கேட்ட இருவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம் கடவுள்களை எல்லாம் வேண்டிய படியே பேத்தியை காண தில்லை உள்ளே சென்று விட உலகையே வென்ற சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆனந்த அதிர்வில் நின்றிருந்த விசாகனும் தேவாவை காணும் ஆவலில் அறைக்குள் விரைந்தான்..

அசதியிலும் மயக்கத்திலும் படுத்திருத்தவளின் தலையை வருடிய தில்லை "என் கண்ணு... என் வம்சத்தையே தழைக்க வைச்சிட்டியே…. என் ராசாத்தி நீ நல்லா இருக்கோனும் தாயீ…" என்று இரு கன்னம் வழித்து நெட்டி முறித்து, நெற்றியில் முத்தம் வைத்தவர் "அந்தால இருக்க முத்துவை வரச் சொல்லுயா" என்று விசாகனிடம் கூறியவர் "வேணா வேண சாமி நானே போறேன்... என் ஆத்தா அந்த சாமுண்டிக்கு ஒரு சூடத்தை ஏத்திட்டு நன்றிய சொல்லிட்டு வாறேன்" என்று வாயிலை நோக்கி விரைந்தவர் "அய்யா சாமி, பாத்துக்கய்யா இப்போ வந்துடுறேன்" என்று சந்தோஷத்தில் சிறு பெண்ணாய் மாறி விசாகனிடம் கூறி அறையை விட்டு வெளியேறினார்.

தில்லையின் பரபரப்பிலும் பேச்சு சத்ததிலும் விழி திறந்த தேவசேனா தன்னையே காணும் விசாகனை பார்த்து "மாமா…. என்று அடிக்குரலில் அழைத்தவள் மாமா என்ன ஆச்சு ஏன் நாம இங்க இருக்கோம் … பாட்டி என்ன சத்தமா பேசிட்டு போனாங்க" என்றாள் சோர்வாக

சுயநினைவு திரும்பிய அவளின் தலையை ஆதுரமாக வருடியபடி "சனா… என்றவன் கண்கள் கலங்க நாம அப்பா அம்மா ஆகப்போறோம்டா … நீ கேட்ட மாதிரியே நான் ஆசைப்பட்ட மாதிரியே நம்ம குழந்தை உன் குட்டி வயிறுல வளந்துட்டுருக்குடா" என்று அவள் கைகளை முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க கூறினான் விசாகன் .

அவன் கூறிய வார்த்தைகளின் வீரியம் அவள் அடி நெஞ்சில் சில்லென்ற தென்றலாய் வீச தன்னிச்சையாய் அவளது கரம் தன் மணிவயிற்றினை வருட அகம் மகிழ்ச்சியையும், கண்கள் ஆனந்தக் கண்ணீரையும் சொறிந்தது . மாமா என்றபடி சுற்றத்தையும் சூழலையும் மறந்து விசாகனை ஆரத்தழுவியிருந்தாள் தேவா.

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN