Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Ongoing Novels
Bhagi Lakshmanamoorthi - Novels
காதலின் சங்கீதமே!!... பூமியின் பூபாளமே!!...
சங்கீதம் 🎼1🎼
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

காதலின் சங்கீதமே...

பூமியின் பூபாளமே...

இது முழுக்க முழுக்க உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை... இதுல கண்டிப்பா காதலும் இருக்கும் படிக்க படிக்க உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும் இப்போ கதைக்குள்ள போகலாமா....

பூபாளம்

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

படம் : முள்ளும் மலரும்

செந்தாழம் பூவில்

வந்தாடும் தென்றல்

என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை

போடுதம்மா பெண்போல

ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து

போகும்பாதை மங்கை மோக

கூந்தலோ மயங்கி மயங்கி

செல்லும் வெள்ளம் பருவ

நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே

கிளி தேன் கனிகளை தேடுது

ஆசை குயில் பாஷை இன்றி

ராகம் என்ன பாடுது காடுகள்

மலைகள் தேவன் கலைகள்

சங்கீதம் 1

சென்னை வெய்யிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்த மாலை வேளை, ஆரஞ்சு நிற சூரிய பந்து கடல்நீரில் மூழ்கி முற்றிலும் மறைந்திருக்க, மணி 6 கடந்து இருந்தது. இரண்டு மூன்று முறை மகளின் அறையை தட்டிவிட்டு சென்றவருக்கு பொறுமை காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.

இம்முறை சற்று கோவத்துடன் மகளின் அறையின் முன் நின்ற துளசிக்கு, மாநிறம் களையான முகம் அவரின் பூசிய உடல் வாகிற்கு ஏற்றார் போல உயர்ரக பருத்தி புடவையை அணிந்தவருக்கு வயது நாற்பதை கடந்திருந்தாலும் பைரவியின் தமக்கை என்னும் அளவிற்கு இருந்தவர் சென்னையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

"ஏய் பையூ.... ரொம்ப நேரமா உள்ளயே கிடக்குற வெளியே வர ஐடியா உனக்கு இருக்கா இல்லையா...?" என்று குரலை சற்று உயர்த்தி இருந்தார்.

அறையில் கண்ணாடி முன் தன்னை ஒரு நிமிடம் பார்த்தவள் "இந்த தாவணிய கட்டவே கடுப்பா இருக்கு வேற டிரஸ் போடுறேன்னு சொன்னா கேக்குறாங்களா.... ஊருக்கு போகனும்னு சொன்னாலே தாவணில தான் வரனும்னு ரூல்ஸ் வேற... இதுல நான் சீக்கிரமா வேற கிளம்பனுமா முடியாது" என்று சட்டமாய் மெத்தையில் அமர்ந்திருந்தாள் பையூ.

அன்னையின் குரல் இம்முறை உயரவும் கடுப்புடனே துளசி கொடுத்த இரண்டு முழமல்லி சரத்தில் இருந்து ஒற்றை ரோஜாவை சூட்டிக்கொண்டு "இப்போ எதுக்கு இந்த கத்து கத்தறாங்க??? அதான் ரெடியாகிட்டு இருக்கோம் ல" என்று தனக்குதானே பேசியவளின் முழு பெயர் பைரவி...

மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகப்படியான நிறம் தான், கூர் நாசி திருத்தமான புருவங்கள் சற்றே பெரிய அகண்ட விழிகள்,.சிறு ஆரஞ்சு சுலைகளை ஒட்டி வைத்தார் போல சிவந்திருந்த இதழ்கள்... மயில் தோகையென முதுகு முழுவதும் படர்ந்திருக்கும் அடர்த்தியான கூந்தல் என இருப்பவள்.

IAS எக்சாமிற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறாள். சராசரி உயரமும், மெல்லிய உடல்வாகும் கொண்டிருப்பதால் எல்லா வகையான உடையும் அவளுக்கு கட்சிதமாக பொருந்தியது.

அதற்காக மார்டன் என்ற பெயரில் கிழித்து விட்டு தொங்காமல் நாகரிகமாகவே உடை உடுத்த கூடியவள் தான் பைரவி. ஆனால் ஏனோ இன்று தாய்க்கும் மகளுக்கும் போராட்டமாகவே அமைந்தது.

உடை விஷயத்தில் துளசி அவ்வளவு கறார் பேர்வழி இல்லை...செல்லும் இடம் அப்படிபட்டது என்பதால் தான் இவ்வளவு கெடுபிடி செய்தார்.

தாயின் திட்டை கேட்டுக்கொண்டே வந்த இளையவன் "அக்காவை பத்தி தெரியாதாம்மா... எப்பவும் லேட் எதிலும் லேட்... இப்போ சீக்கிரம் சீக்கிரம்னு சொன்னா!!! நடக்கற விஷயத்தை பத்தி பேசுமா... இப்போ சொல்லி இருக்கிங்க ல நைட் தான் வெளியே வருவா" என்று பைரவியை கிண்டலடித்தான். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவளின் தம்பியான அர்ஜூன்.

பையூ பிறந்த 6 வருடங்கள் கழித்து பிறந்தவன்... சில நேரங்களில் அவளுடைய பரம எதிரியாகவும் சில நேரங்களில் உற்ற தோழானாகவும் இருப்பவன்.

அறைக்குள் இருந்தவளுக்கு தம்பியின் கிண்டல் அட்சரசுத்தமாக காதில் விழ அதில் வெகுண்டவள் சட்டென கதவை திறந்து "சீ போ எருமை... உன்னை கேட்டாங்களா டா... என்னை தானே கூப்பிட்டாங்க நானே வந்து பேசிக்க மாட்டேனா.. மூஞ்சியை பாரு தேவாங்கு... என்று அவனிடம் கடுகடுத்தவள் பட்டாசாய் வெடித்தாள் தந்தை விஜயேந்திரனிடம்.

"மிஸ்டர் தீரன் உங்க வைய்ப் துளசியும் அந்த எருமை அர்ஜூன் செய்றதும் கொஞ்சம் கூட நல்லா இல்ல... சொல்லி வைங்க" என்று தந்தையிடம் புகாரை வாசிக்கவும்

காரில் பைகளை அடக்கியபடி இருந்த விஜயேந்திரன் "உங்க அம்மா இன்னைக்கு நல்லா தானேடா சமைச்சா!!" என்று யோசனை செய்தவர் மகளின் முறைப்பை கண்டு, "அர்ஜூன் என்னடா பண்ணான்" என்றார்.

"இங்க பாருங்கப்பா.... எனக்கு இந்த தாவணி டிராவலுக்கு comfortable லாவே இல்லன்னு சொன்னா கேட்காம இதை தான் போட்டுட்டு வரனும்னு காலையில இருந்து ஓரே போராட்டம் பண்றாங்க... அந்த அர்ஜூன் எருமை வேற என்னை கிண்டலடிச்சிக்கிட்டே இருக்கான்... கொஞ்சம் என்னன்னு கேளுங்க" என்று தகப்பனாரை ஏவி விட

ஒரு அடி பின் நகர்ந்து மகளின் உடையை பாத்தவர் "சோ ஸீவீட் கண்ணம்மா ரொம்ப அழகா கிளி மாதிரி இருக்க டா" என்று மகளை புகழ்ந்து பேச

தந்தையை. பைரவி முறைத்தாள் என்றாள் அர்ஜூனோ ஏதோ கேட்க கூடாத சொல்லை கேட்டது போல சட்டென அதிர்ந்தவன் "அய்யோ அப்பா குரங்குக்கு எந்த ஊர்ல கிளின்னு பேர் வச்சாங்க?" என்று தந்தையிடம் அரிய கேள்வியை கேட்டதும் அதில் மேலும் கடுப்பானவள்

"டேய் உன்னை... அடிக்காம விடமாட்டேன் டா" என்று தம்பியை அடிக்க பாய்ந்தவளை தடுத்த தீரனிடம், "பாருங்க ப்பா இவனை எப்பவும் என்னை வம்பு பண்ணிக்கிட்டே இருக்கான்... என்னை வேற குரங்குன்னு சொல்றான் இந்த மலைக் குரங்கு" என்று சண்டைக்கு நின்றாள்.

"பையூ செல்லம் அவனுக்கு கண்ணுல கோளாரு போலடா... ஒரு நல்ல டாக்டர்கிட்ட போய் செக் பண்ணனும்" என்று மகளை தாஜா செய்த தீரன் பையூவிற்காக மனைவியிடம் பேசிட எண்ணி துளசியை பார்த்தார்.

கணவரின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்த துளசி "எல்லாத்தையும கேட்டுட்டுதான் இருந்தேன்.... எதுக்கு முகத்தை இப்படி பாவமா வைச்சிக்கிட்டு என்னை பாக்குறிக்க" என்று தீரனிடம் காய்ந்தவர்.

மகளிடம் திரும்பி "இப்போ இந்த துணியை போடுறதுல உனக்கு என்ன குறைஞ்சிடுச்சி பையூ... இதை கட்டிக்கிட்டு தான் வரனும் இல்லன்னா யாருமே அங்க போக வேண்டாம்". என்றதும் கோபத்துடனே முகத்தை திருப்பிக் கொண்டாள் பைரவி.

"விஜி, அவதான் சின்ன பொண்ணு தெரியாம கேக்குறான்னா உங்களுக்கு தெரிய வேண்டாமா? நான் எதுக்கு சொல்றேன்னு... போறது நம்ம ஊரு அதுக்கு ஏத்த மாதிரிதான் துணிய போடனும்.. இவ ஒரு தொல தொலா பேண்டையும் டீ ஷர்ட்டையும் போட்டுட்டு வறேன் சொல்றா... இந்த ஊருல ஏதும் தெரியாது அங்க இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான்... ஆளாளுக்கு ஒவ்வொன்னை பேச நாமே எடுத்துக் கொடுக்கனுமா" என்று கணவரிடம் கூறியவர்

"இங்க போடுறாளே ஏதாவது சொல்றேனா??? நம்ம ஊருன்னு தானே சொல்றேன்... கொஞ்மாச்சும் கேட்டு இருக்கலாம் ல விஜி, இப்படியே பண்ணிட்டு இருந்தா இதை இங்க கூட போட விடமாட்டேன் சொல்லி வைய்யுங்க அவகிட்ட" என்று எச்சரிக்கை விட

மகளின் புறம் திரும்பிய விஜயேந்திரன் "பேபி என்று அருகில் வர, அவரிடம் கோபித்து கொண்டவள் கொஞ்சம் கூட எனக்காக பேசாதிங்கப்பா... உங்க வொய்ப் சொல்லிட்டாங்கல்ல அவங்க சொன்னவுடனே சரின்னு சொல்லிடுங்க" என்று கோவமாக காரில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தாள்.

வாயை மூடி பையூவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்த அர்ஜூனை பார்த்த துளசி "உனக்கு அப்புறம் இருக்கு... எப்பதான் உங்க ரெண்டு பேர் சண்டை தீருமோ!! போ போய் வண்டியில ஏறு" என்று அர்ஜூனை அதட்டியவர் வீட்டை பூட்டி வர உள்ளே சென்று வரும்போது கையில் 2 முழம் மல்லி சரத்துடன் வந்தார்.

காரில் அமர்ந்திருத்தவளை முறைத்த படி "சொல்றது எதையுமே செய்யமாட்டியா?... இந்த பூவ உன் தலைல வைக்க தானே கொடுத்தேன். அப்படியே ரூம்ல வைச்சிட்டு வந்து இருக்க" என்று சிடுசிடுக்க

"அம்மா ப்ளீஸ் பூவுக்கும் ஆரம்பிக்காத.... சுத்த கர்நாடகமா இருக்க... சொல்ற.... எனக்கு இந்த பூவே போதும் இதையாவது எனக்கு பிடிச்சமாதிரி வைச்சிக்கிறேனே!!! முதல்ல இந்த முடியை வெட்டிட்டு கிராப் வைச்சிக்க போறேன் பாருங்க" என்று வாய்க்குள் முனுமுனுத்தவள் முகத்தை காரின் ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள்.

அக்காவின் கோபம் புரிந்து அதற்கு மேல் அர்ஜூனும் பைரவியிடம் வம்பு வளர்க்காமல் காரில் அமரவும், "உன்னை" என்று மகளை முறைத்த துளசியும் நேரமாவதை உணர்ந்து அவரும் காரில் அமர வாகனம் அவர்கள் சொந்த ஊரான பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தை நோக்கி சென்றது. சில சமயம் பைரவியின் கரங்களும் காரை ஓட்டி தந்தைக்கு சுமையை சற்று குறைத்திருந்தது

பழமையும் புதுமைரும் கலந்து இருக்கும் ஊர்களில் சிதம்பரமும் ஒன்று நகரமும் அல்லாது கிரமமும் அல்லாது இடையில் இருந்த ஊர் என்பதற்கு சான்றாக அங்காங்கே புதியதாய் முளை விட்டிருந்த சில அடுக்கு மாடி கட்டிடங்களும், நவீன வீடுகளும் கட்டியிருக்க, அதில் ஒன்று தான் விஜயேந்திரனும் அவரது அண்ணனும் சேர்ந்து கட்டிய ஆனந்த பவனம்.

அந்த வீட்டின் கிரகபிரவேசத்திற்கு தான் இரு நாட்களுக்கு முன்பே கிளம்பி வந்திருந்தனர் விஜயேந்திரனின் குடும்பத்தினர்.

விஜயேந்திரனின் தந்தை நடராஜன் ஓய்வு பெற்ற தாசில்தார் தாய் சுப்ரஜா இல்லத்தரசி அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவர் சசீதரன் காவல் துறையில் உயர் பதவியில் இருக்க அதற்கு அடுத்தவர் தான் விஜயேந்திரன் வருவாய் துறையில் உயர் பொருப்பில் இருக்கிறார். இருவரையும் படிக்க வைத்து பெரிய பதவியில் அமர வைத்திருந்தவர். வீட்டை கட்டி பார்க்க ஆசைப்பட அண்ணன் தம்பி இருவரின் உழைப்பில் உருவானது தான் இந்த ஆனந்த பவனம்.

சில மணி நேர பிரயாணத்திற்கு பிறகு பைரவியின் கைகளில் சிக்கிய வாகனம் தார்சாலையில் பறந்து காலை 7 மணிக்கு ஆனந்த பவனத்தின் முன் நின்றது.

விடிந்து வெகு நேரமாகி இருந்தபடியால் வீட்டு வாசலில் அமர்ந்து செய்திதாள்களை படிக்கும் சில பெரிய தலைகளும், திண்ணையில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த வயதான பெண்மணிகளும்

அதிலிருந்து இறங்கிய தீரனின் குடும்பத்தினரை பார்த்தபடி தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்ள அதை கண்டுக் கொள்ளாதவர்கள் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். எப்போதும் இப்படி என்பதால் அதை பெரியதாக எடுத்துக்கொண்டதில்லை அதை தாண்டி போக பழகியிருந்தனர்.

இதுவும் பெரிய வீடுதான் மச்சி எடுத்து கட்டப்பட்டு இருந்தது. நான்கு பெரிய அறைகள், கூடம், சமையலறை, பின்கட்டு, என்று மிக தராளமாய் இருக்க அதை இடிக்க மனமில்லாமல் பக்கத்தில் இருந்த ஒரு கிரவுண்டு நிலத்தில் இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன வசதிகளுடன் கட்டியிருந்தனர்.

முற்றத்தில் இருந்த தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்த சசீதரனின் மருமகள் தாரணி இவர்களை கண்டதும் "அத்தை, பாட்டி, தாத்தா சின்ன மாமா வந்துட்டாங்க" என்று உள் நோக்கி குரலை கொடுத்தவள் "வாங்க... வாங்க... ஒரு வாரம் முன்னாடியே வருவிங்கன்னு நினைச்சேன்" என்றபடி அனைவரையும் வரவேற்றாள்.

"தம்பிக்கும் எனக்கும் தான் வேலை இழுத்துடுச்சி மா... நீ எப்படி இருக்க?" என்று நலம் விசாரித்து விட்டு தீரன் உள்ளே சென்று விட

"துளசியோ தூங்க வைத்த குழந்தையை பார்த்துவிட்டு எப்படி இருக்க தாரணிமா?" என்றார் அன்பாக

"நல்லா இருக்கேன் அத்த... உள்ள வாங்க..." என்றதும் அவரும் சிரித்தபடியே உள்ளே சென்று விட பைரவியை பார்த்த தாரணி "ஏய் பையூ செமையா இருக்குடி உனக்கு இந்த தாவணி" என்று அவளுக்கு புகழாரத்தை சூட்டினாள்.

கடுகடு என்று முகத்தை வைத்து அவளை முறைத்த பைரவி அவள் காது புறம் குனிந்து "உங்க அத்த பண்ண சதி வேலை... ம்கூம்" என்று விறுட்டென உள்ளே சென்று தாத்தாவிடம் அமர்ந்துக் கொண்டாள்.

அர்ஜூனோ "விடுங்க அண்ணி நேத்துல இருந்து பாட்டு வாங்குறாங்க மேடம்... அதான் இந்த கோவம்" என்று கூறிவிட்டு அவனும் அக்காவின் பின்னே சென்றிருந்தான்.

பேத்தியிடம் வாஞ்சையுடன் பேசிக்கொண்டு இருந்த நடராஜனுக்கு வயது எழுபத்தைந்தை கடந்து சில வருடங்களாகி இருந்தது கொஞ்சம் திராவிட நிறம் பார்க்க பழைய நடிகர் மௌலியின் சாயலைக் கொண்டு இருந்தார்.

சுப்ரஜாவிற்கு வயது எழுவதை தொட்டிருந்தது... தோல்கள் சுருக்கத்தை கொடுத்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருந்தது... இளமையில் மிகவும் அழகாக இருந்திருப்பார் என்று சொல்லாமல் சொல்லியது அவரது முக வடிவம்.... ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னை என்பதால் தமிழ் நன்றாகவே தெரிந்திருந்தது. வெண் பஞ்சை போன்ற நரைத்த தலையும் மஞ்சள் பூசிய முகமுமாய் லட்சுமி கடாஷத்துடன் இருந்தவர் பிள்ளைகளின் வருகையில் சில வயது குறைந்ததை போல் விடியலிலேயே எழுந்து பம்பரமாய் வேலையை செய்துக்கொண்டு இருந்தார்.

தன் கைகளாலேயே காபியை தயாரித்தவர் மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்து நலத்தை விசாரிக்க

"நானே போட்டுக்க மாட்டேனா அத்தை" என்றபடி வாங்கிக்கொண்டார் துளசி. மகனோ தாயின் காபியை ரசித்து ருசித்து குடிக்க இதை கண்ட பைரவியோ தாயை கண்டுவிட்டு

"இன்னைக்கு தான் எங்க அப்பா நல்ல காபியை குடிக்கிறாருன்னு அவர் முகத்திலேயே தெரியுது" என்று துளசியிடம் தீரனை கோர்த்து விட்டாள்.

மகளின் கூற்றில் சட்டென துளசி கணவரை பார்க்க காபியை மறுமுறை வாயில் வைத்த தீரனுக்கு மனைவியின் பார்வையில் புரையேறியது.

இதற்கு காரணமான தன் மகளின் தலையில் செல்லமாய் கொட்டியவர் "துளசி நீ போடுறதும் அம்மா போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கு... நேத்து நடந்ததுக்கு அவ இன்னைக்கு உன்னை வெறுப்பேத்துறா" என்றார் மனைவியை சமாதனப்படுத்தும் நோக்கில்

"இந்த குட்டி பிசாசு அப்படித்தான் செய்யும்..." என்று மகளை பார்த்த துளசி அங்கே சிரிப்புடன் நிற்க,

கமலத்திற்கும் தாரணிக்கும் விஜயேந்திரன் மனைவியிடம் பேசிய விதத்தில் சிரிப்பு வர துளசியிடம் "என்ன மிரட்டி வைச்சி இருக்கியா துளசி.என் கொழுந்தனை... உன் ஒரு பார்வைக்கு என்னமா ஜர்க் ஆகுறாரு" என்று தங்களுக்குள் பேசி கிண்டலடித்து சிரித்தனர்.

"அப்படியே உங்க கொழுந்தன் பயந்துட்டாளும்.... எல்லாம் ஒரு சீன் தான்" என்றார் தன் அக்காவின் பேச்சில் வெட்கம் கொண்டு அதை இல்லை என்னும் விதத்தில் கூறி இருந்தார் துளசி.

அனைவரிடமும் சிரிப்புடனும் கிண்டலுடனும் பேசிக் கொண்டு இருந்த தீரனின் கண்கள் அண்ணனை தேட "எங்க அண்ணி அண்ணனைக் காணோம் அரவிந்து கூட இல்ல" என்று கேட்டதும்

"அவர் ஏதோ ஒரு கேஸ் விஷயமா கடலூர் வரையும் அரவிந்த் கூட போயிருக்கார் தம்பி... அப்படியே பத்திரிக்கையும் வைச்சிட்டு வரேன்னு சொன்னாங்க மதியத்துக்குள்ள ரெண்டு பேருமே வந்துடுவாங்க...". என்றார் கமலம்.

சசீதரனுக்கும் அரவிந்திற்கும் காவல் துறையில் வேலை என்பதால் அவ்வளவாக விடுமுறை எடுக்க முடியாமல் இருக்க பத்திரிக்கை வைப்பது வீட்டு வேலை என்று சில வேலைகளை தீரனும் அவ்வப் போது வந்து பார்த்துக் கொண்டார்.

இருந்தும் சில நபர்களுக்கு சசீதரன் நேரில் சென்று அழைக்க வேண்டி இருக்க ஒரு வாரம் விடுமுறையை எடுத்தவர் காலையிலையே மகனுடன் சென்றிருந்தனர்.

தீரனும் ராகவனும் பேசியபடியே இருக்க "ஏங்க உங்களுக்கு எல்லாத்தையும் இப்போவே பேசிடனுமா..." என்று கணவரை பார்த்த சுப்ரஜா "விஜி, துளசி போய் குளிச்சிட்டு வாங்க... சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பேசலாம்... அவ்வளவு தூரத்துல இருந்து வண்டியோட்டிக்கிட்டு வந்து இருப்பிங்க... ஒரு டிரைவரையாவது போட்டுட்டு வரலாம் ல" என்றார் அக்கரையாக

"சொன்னா எங்க கேக்குறாங்க அத்தை... பரவாயில்லை நானும் என் பொண்ணும் ஓட்டிட்டு வருவோம்னு ஒரே அடம் கொஞ்சம் சொல்லி வைங்க அவர் கிட்ட அவருக்கும் வயசு ஆகுதுன்னு"

மனைவியின் பேச்சில் சட்டென எழுந்தவர் "ஹவ் டேர் யூ துளசி... ஹவ் டேர் யு டு சே... என்னே பார்த்து நீ எப்படி அந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லலாம்". என்று தீரன் வேண்டுமென்றே மனைவியை வம்புக்கு இழுக்க

"ஆமா மனசுல இன்னும் இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பு... பொண்ணுக்கு கல்யாணம் செய்ற வயசு வந்தாச்சுன்னு மனசுல பதிய வைச்சிக்குங்க... இன்னும் முடி நரைக்காம இருந்தா சின்ன பையன்னு நினைப்பா" என்று கணவரை கிண்டலடித்தவர் தன் அத்தையிடம் கூறிவிட்டு உள்ளே செல்லவும்,

"கிழவனாக போறேன்னு எம் மருமக சொல்லாம சொல்லிட்டு போறா" என்று நடராஜனும் தன் பங்கிற்கு மகனை வாரினார்.

"எம்புள்ள எப்பவுமே எனக்கு சின்னவன் தான் போய்யா போய் குளிச்சிட்டு வா" என்று மகனை வாஞ்சையுடன் பார்த்தவர் "வாங்க பிள்ளைகளா நீங்களும் சாப்பிட்டு அப்புறம் பேசலாம். மணியை பாரு 7க்கு மேல ஆகுது" என்றார் அந்த வீட்டு மூத்த பெண்மணியான சுப்ரஜா.

"அம்மாடி கமலம் இட்லி அவிஞ்சிடுச்சா பாரும்மா..." என்று மூத்த மருமகளுக்கு குரலை கொடுத்தவர் "தாரணி மா புள்ள சாப்பிட்டானா"? என்று குழந்தையை விசாரித்தார்.

பாட்டியின் கேள்விக்கு குட்டி சாப்பிட்டான் பாட்டி தூங்க வைச்சேன் எழுந்துட்டான் அவனை தாத்தா கிட்ட விட்டுட்டு வறேன் என்ற தாரணி நடராஜனிடம் தனது 1 வயது மகன் ஆதித்யனை கொடுக்க சென்றாள்.

தாரணியும் பட்டபடிப்பை முடித்து அருகில் உள்ள அரசு பள்ளியில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாள். ஆக இவர்கள் குடும்பமே கல்வியிலும் செல்வாக்கிலும் உயர்ந்திருந்தது.

குளித்து வந்த பைரவி, இலகுவான தொல தொலவென்று இருந்த ப்ளாசோ பேண்டும் டீ ஷர்ட்டையும் அணிந்தவள் தாயின் முறைப்பையும் முனுமுனுப்பையும் மீறி தோகையென விரிந்த கூந்தலை கொண்டையிட்டு இருக்க அதில் ஒரு குச்சியையும் சொறுகி வைத்தவளுக்கு இப்போதாதான் சற்றே ஆஸ்வாசமாக மூச்சை விடுவது போல இருந்தது , அதே நல்ல மனநிலையுடன் இருந்தவள்

"கமலாம்மா இன்னைக்கு பட்டாணி குருமா சூப்பர்... தாரணி அண்ணி இட்லி பூ மாதிரியே இருக்கு" என்று நான்கு இட்லிகளை சேர்த்து விழுங்கி தன் பெரிய அன்னைக்கும் அண்ணிக்கும் பாராட்டு பத்திரம் வாசித்தவளை சிரிப்புடன் பார்த்த கமலம்,

"வளர்ற பொண்ணுக்கு இந்த நாலு இட்லி எப்படி போதும்?... இன்னும் ரெண்டு வைக்கவா??" என்று அவள் இலையில் இரண்டு இட்லிகளை வைக்க

கமலாம்மா என்று அதிர்ந்து அவரை தடுத்தவள் "இப்போவே தொண்டை வரையும் இருக்கு... இதோ இந்த பேரலுக்கு வைங்க" என்று தம்பியின் இலையை காட்டி லாவகமாக அவரிடமிருந்து நழுவி இருந்தாள் பைரவி.

சட்டென தன் இலையில் இரண்டு இட்லிகள் விழவும் முழித்த இளையவன் அதை ஒதுக்க முடியாமல் தாயின் பார்வை கண்டிப்பை காட்ட அக்காவை நினைத்து பல்லை கடித்து அதை முழுங்கி விட்டே எழுந்தான் அர்ஜூன்.

இதற்கும் பின்கட்டில் தம்பியுடன் மல்லுக்கட்டியவள் ஏதும் அறியாத பெண்ணை போல பெரிய தகப்பனார் சசீதரனுக்கும் அண்ணன் அரவிந்தனுக்கும் காத்திருக்க ஆரம்பித்து இருந்தாள்.

உறவில் பெரியப்பா பெரியம்மா என்று இருந்தாலும் அழைப்பது என்னவோ சசீ அப்பா கமலாம்மா என்றுதான் அதே போல தான் அரவிந்தனும் விஜிஅப்பா துளசிம்மா என்றே அழைத்தான்.

இசைக்கும்....

[QUOTE="Bhagi, post: 5231, member: 18"] காதலின் சங்கீதமே... பூமியின் பூபாளமே... இது முழுக்க முழுக்க உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை... இதுல கண்டிப்பா காதலும் இருக்கும் படிக்க படிக்க உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும் இப்போ கதைக்குள்ள போகலாமா.... பூபாளம் ------------ அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம் பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் படம் : முள்ளும் மலரும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூ வாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் சங்கீதம் 1 சென்னை வெய்யிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்த மாலை வேளை, ஆரஞ்சு நிற சூரிய பந்து கடல்நீரில் மூழ்கி முற்றிலும் மறைந்திருக்க, மணி 6 கடந்து இருந்தது. இரண்டு மூன்று முறை மகளின் அறையை தட்டிவிட்டு சென்றவருக்கு பொறுமை காற்றில் பறந்துக்கொண்டிருந்தது. இம்முறை சற்று கோவத்துடன் மகளின் அறையின் முன் நின்ற துளசிக்கு, மாநிறம் களையான முகம் அவரின் பூசிய உடல் வாகிற்கு ஏற்றார் போல உயர்ரக பருத்தி புடவையை அணிந்தவருக்கு வயது நாற்பதை கடந்திருந்தாலும் பைரவியின் தமக்கை என்னும் அளவிற்கு இருந்தவர் சென்னையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். "ஏய் பையூ.... ரொம்ப நேரமா உள்ளயே கிடக்குற வெளியே வர ஐடியா உனக்கு இருக்கா இல்லையா...?" என்று குரலை சற்று உயர்த்தி இருந்தார். அறையில் கண்ணாடி முன் தன்னை ஒரு நிமிடம் பார்த்தவள் "இந்த தாவணிய கட்டவே கடுப்பா இருக்கு வேற டிரஸ் போடுறேன்னு சொன்னா கேக்குறாங்களா.... ஊருக்கு போகனும்னு சொன்னாலே தாவணில தான் வரனும்னு ரூல்ஸ் வேற... இதுல நான் சீக்கிரமா வேற கிளம்பனுமா முடியாது" என்று சட்டமாய் மெத்தையில் அமர்ந்திருந்தாள் பையூ. அன்னையின் குரல் இம்முறை உயரவும் கடுப்புடனே துளசி கொடுத்த இரண்டு முழமல்லி சரத்தில் இருந்து ஒற்றை ரோஜாவை சூட்டிக்கொண்டு "இப்போ எதுக்கு இந்த கத்து கத்தறாங்க??? அதான் ரெடியாகிட்டு இருக்கோம் ல" என்று தனக்குதானே பேசியவளின் முழு பெயர் பைரவி... மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகப்படியான நிறம் தான், கூர் நாசி திருத்தமான புருவங்கள் சற்றே பெரிய அகண்ட விழிகள்,.சிறு ஆரஞ்சு சுலைகளை ஒட்டி வைத்தார் போல சிவந்திருந்த இதழ்கள்... மயில் தோகையென முதுகு முழுவதும் படர்ந்திருக்கும் அடர்த்தியான கூந்தல் என இருப்பவள். IAS எக்சாமிற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறாள். சராசரி உயரமும், மெல்லிய உடல்வாகும் கொண்டிருப்பதால் எல்லா வகையான உடையும் அவளுக்கு கட்சிதமாக பொருந்தியது. அதற்காக மார்டன் என்ற பெயரில் கிழித்து விட்டு தொங்காமல் நாகரிகமாகவே உடை உடுத்த கூடியவள் தான் பைரவி. ஆனால் ஏனோ இன்று தாய்க்கும் மகளுக்கும் போராட்டமாகவே அமைந்தது. உடை விஷயத்தில் துளசி அவ்வளவு கறார் பேர்வழி இல்லை...செல்லும் இடம் அப்படிபட்டது என்பதால் தான் இவ்வளவு கெடுபிடி செய்தார். தாயின் திட்டை கேட்டுக்கொண்டே வந்த இளையவன் "அக்காவை பத்தி தெரியாதாம்மா... எப்பவும் லேட் எதிலும் லேட்... இப்போ சீக்கிரம் சீக்கிரம்னு சொன்னா!!! நடக்கற விஷயத்தை பத்தி பேசுமா... இப்போ சொல்லி இருக்கிங்க ல நைட் தான் வெளியே வருவா" என்று பைரவியை கிண்டலடித்தான். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவளின் தம்பியான அர்ஜூன். பையூ பிறந்த 6 வருடங்கள் கழித்து பிறந்தவன்... சில நேரங்களில் அவளுடைய பரம எதிரியாகவும் சில நேரங்களில் உற்ற தோழானாகவும் இருப்பவன். அறைக்குள் இருந்தவளுக்கு தம்பியின் கிண்டல் அட்சரசுத்தமாக காதில் விழ அதில் வெகுண்டவள் சட்டென கதவை திறந்து "சீ போ எருமை... உன்னை கேட்டாங்களா டா... என்னை தானே கூப்பிட்டாங்க நானே வந்து பேசிக்க மாட்டேனா.. மூஞ்சியை பாரு தேவாங்கு... என்று அவனிடம் கடுகடுத்தவள் பட்டாசாய் வெடித்தாள் தந்தை விஜயேந்திரனிடம். "மிஸ்டர் தீரன் உங்க வைய்ப் துளசியும் அந்த எருமை அர்ஜூன் செய்றதும் கொஞ்சம் கூட நல்லா இல்ல... சொல்லி வைங்க" என்று தந்தையிடம் புகாரை வாசிக்கவும் காரில் பைகளை அடக்கியபடி இருந்த விஜயேந்திரன் "உங்க அம்மா இன்னைக்கு நல்லா தானேடா சமைச்சா!!" என்று யோசனை செய்தவர் மகளின் முறைப்பை கண்டு, "அர்ஜூன் என்னடா பண்ணான்" என்றார். "இங்க பாருங்கப்பா.... எனக்கு இந்த தாவணி டிராவலுக்கு comfortable லாவே இல்லன்னு சொன்னா கேட்காம இதை தான் போட்டுட்டு வரனும்னு காலையில இருந்து ஓரே போராட்டம் பண்றாங்க... அந்த அர்ஜூன் எருமை வேற என்னை கிண்டலடிச்சிக்கிட்டே இருக்கான்... கொஞ்சம் என்னன்னு கேளுங்க" என்று தகப்பனாரை ஏவி விட ஒரு அடி பின் நகர்ந்து மகளின் உடையை பாத்தவர் "சோ ஸீவீட் கண்ணம்மா ரொம்ப அழகா கிளி மாதிரி இருக்க டா" என்று மகளை புகழ்ந்து பேச தந்தையை. பைரவி முறைத்தாள் என்றாள் அர்ஜூனோ ஏதோ கேட்க கூடாத சொல்லை கேட்டது போல சட்டென அதிர்ந்தவன் "அய்யோ அப்பா குரங்குக்கு எந்த ஊர்ல கிளின்னு பேர் வச்சாங்க?" என்று தந்தையிடம் அரிய கேள்வியை கேட்டதும் அதில் மேலும் கடுப்பானவள் "டேய் உன்னை... அடிக்காம விடமாட்டேன் டா" என்று தம்பியை அடிக்க பாய்ந்தவளை தடுத்த தீரனிடம், "பாருங்க ப்பா இவனை எப்பவும் என்னை வம்பு பண்ணிக்கிட்டே இருக்கான்... என்னை வேற குரங்குன்னு சொல்றான் இந்த மலைக் குரங்கு" என்று சண்டைக்கு நின்றாள். "பையூ செல்லம் அவனுக்கு கண்ணுல கோளாரு போலடா... ஒரு நல்ல டாக்டர்கிட்ட போய் செக் பண்ணனும்" என்று மகளை தாஜா செய்த தீரன் பையூவிற்காக மனைவியிடம் பேசிட எண்ணி துளசியை பார்த்தார். கணவரின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்த துளசி "எல்லாத்தையும கேட்டுட்டுதான் இருந்தேன்.... எதுக்கு முகத்தை இப்படி பாவமா வைச்சிக்கிட்டு என்னை பாக்குறிக்க" என்று தீரனிடம் காய்ந்தவர். மகளிடம் திரும்பி "இப்போ இந்த துணியை போடுறதுல உனக்கு என்ன குறைஞ்சிடுச்சி பையூ... இதை கட்டிக்கிட்டு தான் வரனும் இல்லன்னா யாருமே அங்க போக வேண்டாம்". என்றதும் கோபத்துடனே முகத்தை திருப்பிக் கொண்டாள் பைரவி. "விஜி, அவதான் சின்ன பொண்ணு தெரியாம கேக்குறான்னா உங்களுக்கு தெரிய வேண்டாமா? நான் எதுக்கு சொல்றேன்னு... போறது நம்ம ஊரு அதுக்கு ஏத்த மாதிரிதான் துணிய போடனும்.. இவ ஒரு தொல தொலா பேண்டையும் டீ ஷர்ட்டையும் போட்டுட்டு வறேன் சொல்றா... இந்த ஊருல ஏதும் தெரியாது அங்க இது எல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான்... ஆளாளுக்கு ஒவ்வொன்னை பேச நாமே எடுத்துக் கொடுக்கனுமா" என்று கணவரிடம் கூறியவர் "இங்க போடுறாளே ஏதாவது சொல்றேனா??? நம்ம ஊருன்னு தானே சொல்றேன்... கொஞ்மாச்சும் கேட்டு இருக்கலாம் ல விஜி, இப்படியே பண்ணிட்டு இருந்தா இதை இங்க கூட போட விடமாட்டேன் சொல்லி வைய்யுங்க அவகிட்ட" என்று எச்சரிக்கை விட மகளின் புறம் திரும்பிய விஜயேந்திரன் "பேபி என்று அருகில் வர, அவரிடம் கோபித்து கொண்டவள் கொஞ்சம் கூட எனக்காக பேசாதிங்கப்பா... உங்க வொய்ப் சொல்லிட்டாங்கல்ல அவங்க சொன்னவுடனே சரின்னு சொல்லிடுங்க" என்று கோவமாக காரில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தாள். வாயை மூடி பையூவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்த அர்ஜூனை பார்த்த துளசி "உனக்கு அப்புறம் இருக்கு... எப்பதான் உங்க ரெண்டு பேர் சண்டை தீருமோ!! போ போய் வண்டியில ஏறு" என்று அர்ஜூனை அதட்டியவர் வீட்டை பூட்டி வர உள்ளே சென்று வரும்போது கையில் 2 முழம் மல்லி சரத்துடன் வந்தார். காரில் அமர்ந்திருத்தவளை முறைத்த படி "சொல்றது எதையுமே செய்யமாட்டியா?... இந்த பூவ உன் தலைல வைக்க தானே கொடுத்தேன். அப்படியே ரூம்ல வைச்சிட்டு வந்து இருக்க" என்று சிடுசிடுக்க "அம்மா ப்ளீஸ் பூவுக்கும் ஆரம்பிக்காத.... சுத்த கர்நாடகமா இருக்க... சொல்ற.... எனக்கு இந்த பூவே போதும் இதையாவது எனக்கு பிடிச்சமாதிரி வைச்சிக்கிறேனே!!! முதல்ல இந்த முடியை வெட்டிட்டு கிராப் வைச்சிக்க போறேன் பாருங்க" என்று வாய்க்குள் முனுமுனுத்தவள் முகத்தை காரின் ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டாள். அக்காவின் கோபம் புரிந்து அதற்கு மேல் அர்ஜூனும் பைரவியிடம் வம்பு வளர்க்காமல் காரில் அமரவும், "உன்னை" என்று மகளை முறைத்த துளசியும் நேரமாவதை உணர்ந்து அவரும் காரில் அமர வாகனம் அவர்கள் சொந்த ஊரான பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரத்தை நோக்கி சென்றது. சில சமயம் பைரவியின் கரங்களும் காரை ஓட்டி தந்தைக்கு சுமையை சற்று குறைத்திருந்தது பழமையும் புதுமைரும் கலந்து இருக்கும் ஊர்களில் சிதம்பரமும் ஒன்று நகரமும் அல்லாது கிரமமும் அல்லாது இடையில் இருந்த ஊர் என்பதற்கு சான்றாக அங்காங்கே புதியதாய் முளை விட்டிருந்த சில அடுக்கு மாடி கட்டிடங்களும், நவீன வீடுகளும் கட்டியிருக்க, அதில் ஒன்று தான் விஜயேந்திரனும் அவரது அண்ணனும் சேர்ந்து கட்டிய ஆனந்த பவனம். அந்த வீட்டின் கிரகபிரவேசத்திற்கு தான் இரு நாட்களுக்கு முன்பே கிளம்பி வந்திருந்தனர் விஜயேந்திரனின் குடும்பத்தினர். விஜயேந்திரனின் தந்தை நடராஜன் ஓய்வு பெற்ற தாசில்தார் தாய் சுப்ரஜா இல்லத்தரசி அவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவர் சசீதரன் காவல் துறையில் உயர் பதவியில் இருக்க அதற்கு அடுத்தவர் தான் விஜயேந்திரன் வருவாய் துறையில் உயர் பொருப்பில் இருக்கிறார். இருவரையும் படிக்க வைத்து பெரிய பதவியில் அமர வைத்திருந்தவர். வீட்டை கட்டி பார்க்க ஆசைப்பட அண்ணன் தம்பி இருவரின் உழைப்பில் உருவானது தான் இந்த ஆனந்த பவனம். சில மணி நேர பிரயாணத்திற்கு பிறகு பைரவியின் கைகளில் சிக்கிய வாகனம் தார்சாலையில் பறந்து காலை 7 மணிக்கு ஆனந்த பவனத்தின் முன் நின்றது. விடிந்து வெகு நேரமாகி இருந்தபடியால் வீட்டு வாசலில் அமர்ந்து செய்திதாள்களை படிக்கும் சில பெரிய தலைகளும், திண்ணையில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்த வயதான பெண்மணிகளும் அதிலிருந்து இறங்கிய தீரனின் குடும்பத்தினரை பார்த்தபடி தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்ள அதை கண்டுக் கொள்ளாதவர்கள் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். எப்போதும் இப்படி என்பதால் அதை பெரியதாக எடுத்துக்கொண்டதில்லை அதை தாண்டி போக பழகியிருந்தனர். இதுவும் பெரிய வீடுதான் மச்சி எடுத்து கட்டப்பட்டு இருந்தது. நான்கு பெரிய அறைகள், கூடம், சமையலறை, பின்கட்டு, என்று மிக தராளமாய் இருக்க அதை இடிக்க மனமில்லாமல் பக்கத்தில் இருந்த ஒரு கிரவுண்டு நிலத்தில் இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன வசதிகளுடன் கட்டியிருந்தனர். முற்றத்தில் இருந்த தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்த சசீதரனின் மருமகள் தாரணி இவர்களை கண்டதும் "அத்தை, பாட்டி, தாத்தா சின்ன மாமா வந்துட்டாங்க" என்று உள் நோக்கி குரலை கொடுத்தவள் "வாங்க... வாங்க... ஒரு வாரம் முன்னாடியே வருவிங்கன்னு நினைச்சேன்" என்றபடி அனைவரையும் வரவேற்றாள். "தம்பிக்கும் எனக்கும் தான் வேலை இழுத்துடுச்சி மா... நீ எப்படி இருக்க?" என்று நலம் விசாரித்து விட்டு தீரன் உள்ளே சென்று விட "துளசியோ தூங்க வைத்த குழந்தையை பார்த்துவிட்டு எப்படி இருக்க தாரணிமா?" என்றார் அன்பாக "நல்லா இருக்கேன் அத்த... உள்ள வாங்க..." என்றதும் அவரும் சிரித்தபடியே உள்ளே சென்று விட பைரவியை பார்த்த தாரணி "ஏய் பையூ செமையா இருக்குடி உனக்கு இந்த தாவணி" என்று அவளுக்கு புகழாரத்தை சூட்டினாள். கடுகடு என்று முகத்தை வைத்து அவளை முறைத்த பைரவி அவள் காது புறம் குனிந்து "உங்க அத்த பண்ண சதி வேலை... ம்கூம்" என்று விறுட்டென உள்ளே சென்று தாத்தாவிடம் அமர்ந்துக் கொண்டாள். அர்ஜூனோ "விடுங்க அண்ணி நேத்துல இருந்து பாட்டு வாங்குறாங்க மேடம்... அதான் இந்த கோவம்" என்று கூறிவிட்டு அவனும் அக்காவின் பின்னே சென்றிருந்தான். பேத்தியிடம் வாஞ்சையுடன் பேசிக்கொண்டு இருந்த நடராஜனுக்கு வயது எழுபத்தைந்தை கடந்து சில வருடங்களாகி இருந்தது கொஞ்சம் திராவிட நிறம் பார்க்க பழைய நடிகர் மௌலியின் சாயலைக் கொண்டு இருந்தார். சுப்ரஜாவிற்கு வயது எழுவதை தொட்டிருந்தது... தோல்கள் சுருக்கத்தை கொடுத்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருந்தது... இளமையில் மிகவும் அழகாக இருந்திருப்பார் என்று சொல்லாமல் சொல்லியது அவரது முக வடிவம்.... ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னை என்பதால் தமிழ் நன்றாகவே தெரிந்திருந்தது. வெண் பஞ்சை போன்ற நரைத்த தலையும் மஞ்சள் பூசிய முகமுமாய் லட்சுமி கடாஷத்துடன் இருந்தவர் பிள்ளைகளின் வருகையில் சில வயது குறைந்ததை போல் விடியலிலேயே எழுந்து பம்பரமாய் வேலையை செய்துக்கொண்டு இருந்தார். தன் கைகளாலேயே காபியை தயாரித்தவர் மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்து நலத்தை விசாரிக்க "நானே போட்டுக்க மாட்டேனா அத்தை" என்றபடி வாங்கிக்கொண்டார் துளசி. மகனோ தாயின் காபியை ரசித்து ருசித்து குடிக்க இதை கண்ட பைரவியோ தாயை கண்டுவிட்டு "இன்னைக்கு தான் எங்க அப்பா நல்ல காபியை குடிக்கிறாருன்னு அவர் முகத்திலேயே தெரியுது" என்று துளசியிடம் தீரனை கோர்த்து விட்டாள். மகளின் கூற்றில் சட்டென துளசி கணவரை பார்க்க காபியை மறுமுறை வாயில் வைத்த தீரனுக்கு மனைவியின் பார்வையில் புரையேறியது. இதற்கு காரணமான தன் மகளின் தலையில் செல்லமாய் கொட்டியவர் "துளசி நீ போடுறதும் அம்மா போடுறதும் ஒரே மாதிரி தான் இருக்கு... நேத்து நடந்ததுக்கு அவ இன்னைக்கு உன்னை வெறுப்பேத்துறா" என்றார் மனைவியை சமாதனப்படுத்தும் நோக்கில் "இந்த குட்டி பிசாசு அப்படித்தான் செய்யும்..." என்று மகளை பார்த்த துளசி அங்கே சிரிப்புடன் நிற்க, கமலத்திற்கும் தாரணிக்கும் விஜயேந்திரன் மனைவியிடம் பேசிய விதத்தில் சிரிப்பு வர துளசியிடம் "என்ன மிரட்டி வைச்சி இருக்கியா துளசி.என் கொழுந்தனை... உன் ஒரு பார்வைக்கு என்னமா ஜர்க் ஆகுறாரு" என்று தங்களுக்குள் பேசி கிண்டலடித்து சிரித்தனர். "அப்படியே உங்க கொழுந்தன் பயந்துட்டாளும்.... எல்லாம் ஒரு சீன் தான்" என்றார் தன் அக்காவின் பேச்சில் வெட்கம் கொண்டு அதை இல்லை என்னும் விதத்தில் கூறி இருந்தார் துளசி. அனைவரிடமும் சிரிப்புடனும் கிண்டலுடனும் பேசிக் கொண்டு இருந்த தீரனின் கண்கள் அண்ணனை தேட "எங்க அண்ணி அண்ணனைக் காணோம் அரவிந்து கூட இல்ல" என்று கேட்டதும் "அவர் ஏதோ ஒரு கேஸ் விஷயமா கடலூர் வரையும் அரவிந்த் கூட போயிருக்கார் தம்பி... அப்படியே பத்திரிக்கையும் வைச்சிட்டு வரேன்னு சொன்னாங்க மதியத்துக்குள்ள ரெண்டு பேருமே வந்துடுவாங்க...". என்றார் கமலம். சசீதரனுக்கும் அரவிந்திற்கும் காவல் துறையில் வேலை என்பதால் அவ்வளவாக விடுமுறை எடுக்க முடியாமல் இருக்க பத்திரிக்கை வைப்பது வீட்டு வேலை என்று சில வேலைகளை தீரனும் அவ்வப் போது வந்து பார்த்துக் கொண்டார். இருந்தும் சில நபர்களுக்கு சசீதரன் நேரில் சென்று அழைக்க வேண்டி இருக்க ஒரு வாரம் விடுமுறையை எடுத்தவர் காலையிலையே மகனுடன் சென்றிருந்தனர். தீரனும் ராகவனும் பேசியபடியே இருக்க "ஏங்க உங்களுக்கு எல்லாத்தையும் இப்போவே பேசிடனுமா..." என்று கணவரை பார்த்த சுப்ரஜா "விஜி, துளசி போய் குளிச்சிட்டு வாங்க... சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பேசலாம்... அவ்வளவு தூரத்துல இருந்து வண்டியோட்டிக்கிட்டு வந்து இருப்பிங்க... ஒரு டிரைவரையாவது போட்டுட்டு வரலாம் ல" என்றார் அக்கரையாக "சொன்னா எங்க கேக்குறாங்க அத்தை... பரவாயில்லை நானும் என் பொண்ணும் ஓட்டிட்டு வருவோம்னு ஒரே அடம் கொஞ்சம் சொல்லி வைங்க அவர் கிட்ட அவருக்கும் வயசு ஆகுதுன்னு" மனைவியின் பேச்சில் சட்டென எழுந்தவர் "ஹவ் டேர் யூ துளசி... ஹவ் டேர் யு டு சே... என்னே பார்த்து நீ எப்படி அந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லலாம்". என்று தீரன் வேண்டுமென்றே மனைவியை வம்புக்கு இழுக்க "ஆமா மனசுல இன்னும் இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பு... பொண்ணுக்கு கல்யாணம் செய்ற வயசு வந்தாச்சுன்னு மனசுல பதிய வைச்சிக்குங்க... இன்னும் முடி நரைக்காம இருந்தா சின்ன பையன்னு நினைப்பா" என்று கணவரை கிண்டலடித்தவர் தன் அத்தையிடம் கூறிவிட்டு உள்ளே செல்லவும், "கிழவனாக போறேன்னு எம் மருமக சொல்லாம சொல்லிட்டு போறா" என்று நடராஜனும் தன் பங்கிற்கு மகனை வாரினார். "எம்புள்ள எப்பவுமே எனக்கு சின்னவன் தான் போய்யா போய் குளிச்சிட்டு வா" என்று மகனை வாஞ்சையுடன் பார்த்தவர் "வாங்க பிள்ளைகளா நீங்களும் சாப்பிட்டு அப்புறம் பேசலாம். மணியை பாரு 7க்கு மேல ஆகுது" என்றார் அந்த வீட்டு மூத்த பெண்மணியான சுப்ரஜா. "அம்மாடி கமலம் இட்லி அவிஞ்சிடுச்சா பாரும்மா..." என்று மூத்த மருமகளுக்கு குரலை கொடுத்தவர் "தாரணி மா புள்ள சாப்பிட்டானா"? என்று குழந்தையை விசாரித்தார். பாட்டியின் கேள்விக்கு குட்டி சாப்பிட்டான் பாட்டி தூங்க வைச்சேன் எழுந்துட்டான் அவனை தாத்தா கிட்ட விட்டுட்டு வறேன் என்ற தாரணி நடராஜனிடம் தனது 1 வயது மகன் ஆதித்யனை கொடுக்க சென்றாள். தாரணியும் பட்டபடிப்பை முடித்து அருகில் உள்ள அரசு பள்ளியில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாள். ஆக இவர்கள் குடும்பமே கல்வியிலும் செல்வாக்கிலும் உயர்ந்திருந்தது. குளித்து வந்த பைரவி, இலகுவான தொல தொலவென்று இருந்த ப்ளாசோ பேண்டும் டீ ஷர்ட்டையும் அணிந்தவள் தாயின் முறைப்பையும் முனுமுனுப்பையும் மீறி தோகையென விரிந்த கூந்தலை கொண்டையிட்டு இருக்க அதில் ஒரு குச்சியையும் சொறுகி வைத்தவளுக்கு இப்போதாதான் சற்றே ஆஸ்வாசமாக மூச்சை விடுவது போல இருந்தது , அதே நல்ல மனநிலையுடன் இருந்தவள் "கமலாம்மா இன்னைக்கு பட்டாணி குருமா சூப்பர்... தாரணி அண்ணி இட்லி பூ மாதிரியே இருக்கு" என்று நான்கு இட்லிகளை சேர்த்து விழுங்கி தன் பெரிய அன்னைக்கும் அண்ணிக்கும் பாராட்டு பத்திரம் வாசித்தவளை சிரிப்புடன் பார்த்த கமலம், "வளர்ற பொண்ணுக்கு இந்த நாலு இட்லி எப்படி போதும்?... இன்னும் ரெண்டு வைக்கவா??" என்று அவள் இலையில் இரண்டு இட்லிகளை வைக்க கமலாம்மா என்று அதிர்ந்து அவரை தடுத்தவள் "இப்போவே தொண்டை வரையும் இருக்கு... இதோ இந்த பேரலுக்கு வைங்க" என்று தம்பியின் இலையை காட்டி லாவகமாக அவரிடமிருந்து நழுவி இருந்தாள் பைரவி. சட்டென தன் இலையில் இரண்டு இட்லிகள் விழவும் முழித்த இளையவன் அதை ஒதுக்க முடியாமல் தாயின் பார்வை கண்டிப்பை காட்ட அக்காவை நினைத்து பல்லை கடித்து அதை முழுங்கி விட்டே எழுந்தான் அர்ஜூன். இதற்கும் பின்கட்டில் தம்பியுடன் மல்லுக்கட்டியவள் ஏதும் அறியாத பெண்ணை போல பெரிய தகப்பனார் சசீதரனுக்கும் அண்ணன் அரவிந்தனுக்கும் காத்திருக்க ஆரம்பித்து இருந்தாள். உறவில் பெரியப்பா பெரியம்மா என்று இருந்தாலும் அழைப்பது என்னவோ சசீ அப்பா கமலாம்மா என்றுதான் அதே போல தான் அரவிந்தனும் விஜிஅப்பா துளசிம்மா என்றே அழைத்தான். இசைக்கும்.... [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Ongoing Novels
Bhagi Lakshmanamoorthi - Novels
காதலின் சங்கீதமே!!... பூமியின் பூபாளமே!!...
சங்கீதம் 🎼1🎼
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN