Kanchana devi senthil
New member
உயிர் -1
பனிச்சாரலோடு காற்று இதமாய் வீசிக் கொண்டிருக்க அதிகாலை காற்றே நில்லு என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே நம் நாயகி கண்மணி தன் உயிர் தோழியுடன் ஓட்டப் பயிற்சி செய்துக்கொண்டிருந்தாள்.
அவள் தோழி கிருத்திகா ஓடவும் முடியாமல் நடுங்கியவளாக .."ஏய் கண்மணி நில்லு டி இதுக்கு மேலே என்னால் முடியாது.." என்று நின்றவளை திரும்பிப் பார்த்து அவளிடம் வந்தாள்.
"ஏண்டி இப்படி பண்ற உன்னை ஜாகிங் அழைச்சிட்டு வரதுக்குள்ளே நான் பட்ற அவஸ்தை இருக்கே அப்பப்பா முடியல .."என்று சிரித்தாள்.
கண்மணி கருமை நிறம் கொண்டவள் .அவள் பேசும் போது அவள் கண்களும் அழகாய் பேசும். அவள் சிரிக்கும்போது அவள் கன்னக்குழியும் சேர்ந்தே சிரிக்கும் . ஆம் அவள் கன்னத்தில் குழி விழும் இதுவே இவளின் அழகுக்கு அழகு சேர்க்கும் .இவளின் நிறத்தைக் கொண்டு இவளை ஒதுக்கியவர்களை இவள் சிறிதும்
ஏறெடுத்தும் பார்த்ததில்லை . ஆனால் இவள் முகத்தில் எப்பொழுதும் சிறு சோகம் குடி கொண்டிருக்கும்.
" எப்படி பனி
கொட்டுது பாரு ..உனக்கு மனசாட்சியே கிடையாதா ? இந்த மார்கழி பனியில் என்னை அழைச்சிட்டு வந்து இப்படி படுத்தறியேடி.." என்றாள் கிருத்திகா ..
நம்ம கிருத்திகா
கொஞ்சம் பூசின மாதிரி இருப்பாள்.
அதனால் அவள் அம்மா கனகா கேட்டுக் கொண்டதால் கண்மனி
இவளை ஜாகிங் அழைத்து வந்தாள்.
"சரி வாடி வீட்டுக்கு போகலாம் .ஆனால் போனா போகுது இன்றைக்கு ஒரு நாள் மட்டும் விடுறேன்.. நாளைக்கு எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரம் ஓட வேண்டி வரும் புரியுதா.. ?"
இதைக் கேட்ட கிருத்திகா உடனே குஷியானவள் "தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே " என்று தன் தோழியைப் பார்த்து பாட அவளோ " வாலு வாடி.." என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் .
கண்மணி , கிருத்திகா இருவரும் சிறுவயது முதலே தோழிகள் கண்மணியின் அண்ணனும் , கிருத்திகாவின் அண்ணனும் வெளிநாட்டில் MBA படித்துக் கொண்டிருக்கின்றனர்.
கண்மணியின் அம்மாவும் , கிருத்திகாவின் அம்மாவும் சிறுவயது தோழிகள் அதேபோல பிள்ளைகளும் நட்பாக இருந்து வருகின்றனர்.
கனகா - மாணிக்கம் தம்பதியினருக்கு கார்த்திக் , கிருத்திகா என்ற இரு பிள்ளைகள்.
சுந்தரி - ராதாகிருஷ்ணன்
தம்பதியினருக்கு கரண், கண்மணி என்ற இரு பிள்ளைகள்.
ராதாகிருஷ்ணன் தொழில் அதிபராகவும் , மாணிக்கம் அரசு பணியிலும் உள்ளனர். மாணிக்கம் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தொழிலதிபர்களே .ஆனால் மாணிக்கம் தனக்கு அதில் விருப்பம் இல்லாததால் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு அரசு பணியில் அமர்ந்தார்.
கனகா மற்றும் சுந்தரி இருவரும் சிறுவயதிலிருந்தே உயிர் தோழிகள் .இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருக்க இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு ஒரே ஊரை சேர்ந்த மாப்பிள்ளைகளை திருமணம் செய்து வைத்தனர். ( எல்லா கதையிலும் ஆண்கள்தான் நண்பர்களாக அதாவது உயிர் நண்பர்களாக இருப்பது போல் காண்பிக்கிறோம் .இப்பொழுது ஒரு மாற்றத்திற்காக பெண்களை மையமாக வைத்து இந்த கதை நகர போகின்றது .அவர்களின் நட்பும் அவர்களின் பிள்ளைகள் அவர்களைப் போலவே நட்புடனும் இருப்பதையே இந்த கதை குறிக்கும்.)
சரி வாங்க கண்மணி , கிருத்திகா வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்...
வீட்டிற்குச் சென்றவுடன் கண்மணி "அத்தை இங்க வாங்க இவளால் முடியல அத்தை கொஞ்ச நாள் போகட்டும்.. பனி குறைந்தவுடன் இவ எங்கூட ஜாகிங் வரட்டும் ப்ளீஸ் அத்தை அவளை பார்த்தா பாவமா இருக்கு.." என்று கனகாவிடம் கொஞ்சினாள்.
கனகாவிற்கு கண்மணியின் மீது எப்பொழுதும் ஒரு தனி பிரியம் தான்.
அவள் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவார் கனகா.
"கண்மணி நீ என்னடா சொல்றே ! அவ எப்படி இருக்கா பாரேன் . இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு உன் மாமா சொல்லி இருக்காங்க.. உடம்பை குறைச்சா தானே டா நல்லது .நாளைக்கு கல்யாணம் முடிஞ்சபிறகு மாப்பிள்ளை வீட்டினர் ,இதை காரணமாக வைத்து இவள வெளியே அனுப்பிட்டா என்ன ஆகறது அவள் வாழ்க்கை தான் என்னாகும்.
பெண்ணென்றால் லட்சணமா இருக்கணும் டா .ஏதாவது குறை என்றால் மாப்பிள்ளை வீட்டில் முதலில் திருமணம் முடிந்தாலும் கொஞ்ச நாளில் ஏதாவது காரணம் தேடி அனுப்பிடுவாங்க நாம் இப்படி எத்தனை நிகழ்வுகளை பார்க்கிறோம்.".
"அத்தை நீங்க என்ன சொல்றீங்க ! நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க ! நீங்க சொல்றது எனக்கு கோபம் தான் வருது .பெண்கள் நாம என்ன இந்த ஆண்களுக்கு எப்பொழுதுமே அடிமையா இருக்கனுமா என்ன ?கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..
இவள் என்ன அவ்வளவு குண்டாகவா
இருக்கா ? இல்லையே இவளுக்கு என்று ஒருவன் பிறந்திருப்பான் நீங்க ஏன் கவலைப்படறீங்க !மற்றவங்களுக்காக நாம் நம்மை மாத்திக்கனும் என்ற அவசியம் இல்லை அத்தை . நீங்க இவளை இப்படி சொல்லி சொல்லியே இப்படி பயந்தவளாக வளர்த்து வைத்திருக்கீங்க.. கொஞ்சம் அவள் தைரியமா இருந்தா தான் இந்த சமூகத்தை அவளால் எதிர்கொள்ள முடியும் அத்தை ..
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியம் தான் அதை நான் இல்லை சொல்லலையே ? ஆனால்
அதுக்காக திருமணத்தின் பிறகு நாம் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே..?" என்றாள் கண்மணி... .
"என்ன சொல்ற கண்மணி நீ . எனக்கு உங்கிட்ட பிடிக்காதது இது ஒன்னுதான் . நீ ஏன்மா எதார்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறே ? வேண்டாம்டா நீ உன்னை மாத்திக்கோ . நீ இந்த குணத்தால் பட்ட அவஸ்தை எல்லாம் போதும் .உன் குணங்களை மாத்திக் கொண்டால் மட்டுமே உன் வாழ்க்கை நல்லபடியா அமையும்.." என்றார் கனகா.
கனகா இப்படி பேசியதும் கண்மணியின் முகம் வாடினாலும் அடுத்த நொடியே தன்னை சமாளித்தவள் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் கிருத்திகாவோ .."அம்மா உனக்கு எப்போ எதை பேசணும் தெரியாதா கொஞ்ச நேரம் வாயை மூடு.." என்று கத்தினாள்.
"ஏண்டி நான் உண்மை தானே சொல்றேன். உலகத்தில் என்ன நடக்குதோ அதை தானே சொன்னேன் …" என்றவர் அப்பொழுதுதான் கண்மணியின் நிலையை மறந்து தான் பேசியதே நினைத்தவர் அதுமட்டுமல்லாமல் அவள் மனதை புண்படும்படி அவள் குணத்தையும் சேர்த்து பேசியதை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டார்...
"கண்மணி சாரி சாரி டா நான் வேண்டுமென்றே சொல்லலை டா . உன் நல்லதுக்காக தான் சொன்னேன் என்னை மன்னிச்சுடுடா.."என்றார்.
"அச்சோ அத்தை நீங்க என்ன பண்றீங்க . பரவாயில்லை அத்தை விடுங்க . நீங்க இதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கீங்க ..ஆனால் என்னால் யாருக்கும் அடிமையாக போக முடியலையே அத்தை . இந்த விஷயத்தில் நம் இரண்டு பேரின் எண்ணமும் வெவ்வேறாக இருக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க ..சரி அத்தை நான் கிளம்பறேன் .." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தவள் "அம்மா காபி கொண்டு வாங்க..." என்று தனது அறைக்குச் சென்றாள்.
அதற்குள் கனகா , சுந்தரிக்கு
ஃபோன் செய்தவர் தான் பேசியதை கூறி " சுந்தரி சாரிடி நான் தெரியாம பேசிட்டேன்.."
"அடடா அதெல்லாம் ஒன்னும் இல்லடி... நீ எப்பவும் சொல்றது தானே ! நீ எத்தனை தடவை சொன்னாலும் அவள் மாறப்போவதில்லை விடு உன்னைப் பத்தி அவளுக்கு தெரியாதா..?"என்றார் சுந்தரி.
"சரி சுந்தரி அவளோட வாழ்க்கையைப் பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ! எத்தனை நாளைக்கு அவள் இப்படியே இருக்க முடியும்.."
"என்ன சொல்றது கனகா .அவள் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்கறா ! மீறி ஏதாவது சொன்னால் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் சொல்றா !ஏற்கனவே இவள் வீட்டை விட்டு போன போது நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் உனக்கு தெரியாதா ..?"
"சரி நாளைக்கு அவ வரட்டும் அவளோட மாமாவை விட்டு பேச சொல்றேன் .."என்று கனகா கூற இருவரும் அழைப்பை துண்டித்தனர்.
கண்மணி அறைக்குள் வந்தவள் எதை மறக்க வேண்டும் என்று நினைத்தாலோ அதை மீண்டும் மீண்டும் தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதை நினைத்தவள் தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளைக்கு சென்றாள்.