மூங்கில் நிலா - 5

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு வழியாக வனி, வசி, வானதி 11ம் வகுப்பிற்கு முன்னேற, புதிதாய் வகுப்பிற்கு ரவி எனும் புதிய மாணவன் வந்தான். இயல்பாய் அனைவருடன் எளிதில் பழகுபவனுக்கு வசீகரன் உற்ற தோழன் ஆனான். நம்ப சரவெடி வனமோகினி லூட்டி தான் எவரையும் இழுக்குமே. ரவிக்கு வனி மேல ஈர்ப்பு வந்தது. இதை முதலில் உணர்ந்தது வசிதான்.

இதயத்தில் ஓரமாய் ஒரு வலி உண்டாயிற்று. முட்டாள்தனமாய் அவன் செய்த ஒரு காரியம் வனமோகினி வாழ்க்கையே வேறு மாதிரி ஆகும்படி செய்து விட்டது. ஒரு சமயத்தில் வசியால் ரவிக்கு விபத்து ஏற்படும் நிலை ஆயிற்று. கொஞ்சம் தவறியிருந்தாலும் அதில் ரவிக்கு உயிர் போயிருக்கும். ஆனால் அதில் இருவரும் தப்பிவிட்டனர். தவறு வசியுடையது என்றாலும் ரவி அதை பெரிதுபடுத்தவில்லை.
அந்த நட்பிற்கு அவன் இழக்கத் துணிந்தது அவனது உயிரானவளை.

வனி பற்றி நன்கு அறிந்தவன், அவன் இல்லாமல் எப்படி இருப்பாள் என்று யோசிக்க கூட மறந்து விட்டான்.
ஏதோ ஒரு சண்டையை சாக்கு வைத்து வனியோடு பேசுவதை நிறுத்தினான். வலிய வந்து அவள் பேசினாலும் விலகி விலகி ஓடினான். அப்படியாவது அவள் ரவிகூட நெருங்கி பழகுவாள் என்ற நப்பாசை அவனுக்கு.
Image
இதனிடையே உற்றத்தோழி வானதியும் அவள் தந்தை பணி மாற்றம் காரணமாய் டெல்லிக்கு சென்று விட்டாள். வசியின் பாரா முகம் வலி யென்றால் சின்ன வயதிலிருந்தே பாட்டியிடம் வளர்ந்த வனமோகினி வாழ்வில் மற்றொரு இடியாய் அவள் பாட்டியும் கேன்சரில் இறந்து விட்டார். இறப்பிற்கு கூட வசி செல்லவில்லை. எவன் ஒருவனின் நட்பு மட்டுமே உலகம் என்று நம்பியிருந்தாளோ, அவன் ஆறுதலுக்கு கூட அவள் அருகில் வரவில்லை.

அவன் பாராமுகம் தொடர்கதையானது. அவன் எண்ணியது போல வனி ரவியிடம் கூட நெருங்கி பழகவில்லை. தன் வலிகளை பகிர்ந்து கொள்ள அருகில் இருந்தும் இல்லாதவன் போல வசியும், தொலைவில் பிரிந்து சென்ற வானதியின் பிரிவும், தாய் போல வளர்த்த பாட்டியின் மறைவும் 16 வயது வனியை நிலைகுலைய செய்தது.

அவள் பேச்சு சிரிப்பு எல்லாமே குறைந்து போயிற்று. தனிமையில் பல நாட்கள் அவள் தாத்தா தோட்டத்திலே கழித்தாள். மரம் செடி கொடிதான் அவள் தனிமைக்கு துணை. மனிதரோடு பேசுவது போலவே இவைகளோடு பேசுவதே வாடிக்கையாயிற்று.
தன் வலிகளை டைரி எழுதுவது மூலம் குறைத்து கொள்ள முயன்றாள். வனியின் இயல்பு குணம் பெரிதும் மாறி போயிற்று. படிப்பில் கவனம் சிதறியது. அவள் தைரியம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிற்று.

அழுதறியாத கண்களில் ஒரு வித சோகம் ஒட்டி கொண்டிருப்பது யாருக்குமே தெரியாமல் போயிற்று. வசியுமே பழைய மாதிரி இறுகித் தான் போனான்.பிளஸ் 2 வரைக்குமே இதே நிலைதான்.
காடு, மழை, இயற்கைனு வனி தனக்கென ஒரு உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் மறைவிற்கு பின் தாய் சுமதியுடன் கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்ட ஆரம்பித்தாள். ஆனால் மனம் என்னவோ வசியின் நட்பை மட்டுமே எண்ணி எண்ணி மறுகியிருந்தது.

பிளஸ் 2 இறுதியில் இனியும் தாங்காது என்பது போல கடைசியில் வனிதான் வசியிடம் பேச சென்றாள். "இன்னியோட ஸ்கூல் லைப் முடியுது, இது வரைக்கும் நீ ஏன் என்கூட பேசலனு எனக்கு தெரியல வசி, வனி தப்புனா மன்னிச்சுடு வசி, இனியாச்சும் எங்கயாவது என்னை பார்த்தா பேசு வசி, நான் போய்ட்டு வர்றேன் " வனியின் கண்களில் கண்ணீர். அதற்கும் பேசாமல் சிறு தலையசைப்புடனே சென்று விட்டான்.

ப்ளஸ்2 முடிவுகள் வெளியானது. வனிக்குத்தான் ரிசல்ட் தெரியுமே. வசியும் ஓரளவு நல்ல மார்க் வாங்கியிருந்தான். இருவரும் ஊட்டியிலே மேல் படிப்பை தொடந்தனர்.இங்கேயும் ஒரே வகுப்புதான் இருவரும். முதலில் முறுக்கி கொண்டிருந்த வசி, கல்லூரி விழாக்களில் பெருமளவு வனியுடனே இருப்பது போல அமைந்ததினால் திரும்பவும் அவளுடன் இயல்பாய் பேச ஆரம்பித்து விட்டான்.

இருண்டிருந்த வனி வாழ்வில் மீண்டும் வசந்தம் வந்தது போல ஆயிற்று. நிறைய புதிய நண்பர்கள் இருவருக்குமே கிடைக்க, கல்லூரி நாட்கள் ஜோராய் போனது. அப்பொழுதும் வசி வனியை காதலித்தது அவளுக்கு தெரியவே இல்லை.
கல்லூரியில் அரசல் புரசலாய் அவனோடு அவள் பெயர் அடிப்பட்டாலும், வசி உண்மையை கூறாது மழுப்பி விடுவான்.

வனியோடு கண்ணாமூச்சி ஆடிய வசியின் காதல் கல்லூரி விடுமுறையில் அவளுக்கு தெரிய வந்தது. காலேஜ் லீவ்லெ வசி சென்னைக்கு சென்று விட, போன் மூலமாய் டெய்லி sms செய்து கொள்வது இருவருக்கும் வாடிக்கையாயிற்று.
டெய்லி ஏதாவது 3 விஷ் வசி வனியை கேட்க சொல்லுவான். அவளும் ஏதாவது லூசு தனமாய் உளறி வைப்பாள்.

அப்படிதான் அன்றும். அன்று வசியின் 18வது பிறந்தநாள். நண்பர்களோடு குற்றாலம் சென்றவன், அப்பொழுதும் கூட வனியுடன் sms பண்ணிக் கொண்டிருந்தான்.டெய்லி கேட்கும் 3விஷ் கேட்க சொல்லி வசி கேட்க, பல நாட்களாய் மனதை உறுத்திய விஷயத்தை கேட்டு விட்டாள்.

"வசி 10த் படிக்கறப்ப நீ யாரையோ விரும்பனதா நம்ம பிரண்ட்ஸ் சொன்னாங்க, அது யாருன்னே நான் தெரிஞ்சிக்கலாமா? வசி மழுப்பலாய் பதில் சொல்வதற்குள், வனியே கால் செய்து விட்டாள்.

"டேய் நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா, சும்மா சும்மா என்கிட்ட மெசேஜ் பண்ணாதனு" சொல்லிட்டு போனை கட் செய்தாள்.

தான் பதில் கூறாதனால்தான் வனி கோபித்துக் கொண்டாள் என வசி தப்பாக எண்ணி விட்டான்.

" இப்ப சொல்றேன் வனி, நான் உன்னைதான் காதலிச்சேன், உன்னை மட்டும்தான் காதலிச்சேன். போதுமா, இப்ப உனக்கு திருப்பதியா? " வசியின் பதில் வனி இதயத்தில் இடி போல இறங்கியது.

மூச்சு முட்டியது. அவன் பிறந்தநாள் அன்றே வனியிடம் அவன் விருப்பத்தையும் கூறினான். அப்ப கூட இந்த மக்கு வனிக்கு காதல்ங்கற பீல் வரவே இல்லை. வேணாம்னு சொன்னா வசியுடைய நட்பு போய் விடுமோனு அவளுக்கு பயம் வேறு வந்துவிட்டது.

இனி எதற்காகவும் அவனை இழக்க அவளால் முடியாது.நல்ல நண்பர்கள் காதலர்கள் ஆவது தவறு இல்லையே.
வனி இப்படிதான் யோசித்தாள். வசியுடைய நட்பு மட்டும் தான் அவளுக்கு பிரதானம். சரியென்றே தலையாட்டி வைத்தாள். விடுமுறை முடிந்து காலேஜில் வசியை சந்தித்த பொழுது முதல் முதலாய் வனிக்கு வெட்கம் வந்தது. காதலர்கள் போல அல்லாமல் அவர்கள் காலேஜில் சகஜமாய் நண்பர்கள் போலவே வலம் வந்தனர்.

உடன் பழகும் நண்பர்களுக்கு கூட இது தெரியாது. இவ்வேளையில் தான் வசி வனியின் தோட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தான். வனியிடம் ஒரு பழக்கம் இருந்தது. தாத்தா நர்சரிக்கு செடி வாங்க வருபவர்களில் அவளுக்கு பிடித்தவர்கள் கைகளால் மர கன்று நட சொல்வாள். பூவேலி சுற்றி இருக்கும் காலி இடத்தில் வனிக்கு பிடித்தவர்கள் நட்டு வைத்த மரங்கள் அழகாய் வரிசை பிடித்து நின்றிருக்கும்.

இது பற்றி வசி கேட்ட பொழுது "நாம இல்லாமல் போயிட்டாலும் நம்ம பேர் சொல்ல இந்த மரங்கள் இருக்கும் வசி.இதை நட்டவங்க நம்ம கூட இல்லாட்டியும் அவங்க கை பட்ட இந்த மரங்கள் அவங்க நம்ம கூட இருக்கற உணர்வை குடுக்கும் வசி. இந்த தைல மரம் தாத்தா நட்டது.பக்கத்தில் இருக்கறது என் பாட்டி நட்டது.நீயும் உனக்கு புடிச்ச மரக்கன்று ஏதாச்சும் நட்டு விடுடா"வனி கூற வசி சந்தோசமாய் அந்த மூங்கில் கன்றை எடுத்தான். வணியிடமும் ஒன்றை கொடுத்தான்.

"வா ரெண்டு பேரும் சேர்ந்தே நடலாம், நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகி நமக்கு பொறக்க போற பிள்ளைங்களுக்கு
காட்டலாம்."
வனியின் முகம் சிவந்து போயிற்று.மூங்கில் செடி வனிக்கு மிக பிடிக்கும்னு வசி அறிந்ததுதான்.
பூவேலி அருகே இருந்த குட்டி ஏரி அருகே அந்த மூங்கில் கன்றுகளை இருவரும் நட்டு வைத்தனர்.

மாலை மங்கி இருட்டும் வேளை வந்தது. அப்பொழுது வானில் முளைத்த அழகு வெண்ணிலா அந்த ஏரிகரையோரம் பார்ப்பதற்கே அழகாய் இருந்தது.சில்லென்ற காற்று மேனி தடவ, வசியும் வனியும் நிலவை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தனர். வனியின் நீண்ட கூந்தல் காற்றில் கலைந்து வசியின் முகத்தில் படிந்தது.

ஒருவிதமான மோன நிலையில் இருந்த வசியின் கண்களுக்கு வனமோகினி நிஜமாய் வன தேவதை போலவே தெரிந்தாள். பௌர்ணமி ஒளி அவள் முகத்தில் பட்டு பிரகாசித்தது.
"வனி உனக்கு நான் ஒரு செல்ல பெயர் வைக்கலாமா? இனிமே உன்னை நான் வேணின்னு தான் கூப்பிடுவேன், அப்டினா நீண்ட கூந்தல்னு அர்த்தம், நிலவு ஒளினு அர்த்தம். இந்த நிலா ஒளி உம்மேல பட்டு எவ்ளோ அழகாய் ஒரு குட்டி நிலா போல ஜொலிக்கிறேடி " பரவசமாய் கூறினான்.

வனமோகினி சம்மதமாய் சிரித்தாள். அவள் கைகள் மும்முரமாய் அவன் கை விரல்களுக்கு சொடுக்கு எடுத்து கொண்டிருந்தது.
இப்படிதான் காதலும் நட்பும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வந்தன. நேரில் இருவரும் சகஜமாய் பேசி கொள்வார்கள்.
காலேஜ் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டால் மெசேஜ் தோரணை மாறி விடும். ஆனால் ஒரு தடவை கூட வசி எல்லை மீறியது இல்லை. அவன் கூச்ச சுபாவம் அப்படி. எது எப்படி இருந்தாலும் வனியிடம் அடி வாங்குவது மட்டும் மாறவே இல்லை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN