வனி கலக்கமாய் வசியை ஏறிட்டாள். "என்ன சொல்லணும் வசி? "

வசி "உனக்கு என்ன ஆச்சு வேணி? நீ நான் பார்த்த வனியே இல்லையே. உன் ரூம்ல மெடிடேஷன் கோர்னெர் இருக்கு, நீ நைட்ல கனவு கண்டு உளறர வனி. வசி வசி என்னை விட்டுட்டு போயிடாதே போயிடாதேனு கதறி அழுவறே, அப்படியே தூங்கிப் போயிற.உன் ரூம்ல லாவண்டர் மூலிகை வாசனை பரவியிருக்கு. நீ எனக்கு வித்தியாசமா தெரியறடி. மறந்தும் கூட உன் வாயில இருந்து வாசு பேர கூட நீ சொல்லல. உனக்கு என்னடி ஆச்சு? நீ இப்படி கஷ்டப் படறத என்னால பாக்க முடியலடி " வசி வனியை உலுக்கினான்.

வனி கண்களில் நீர் சுரந்தது. "நான் தூக்கத்தில் உளறரேனா? " வனி பரிதாபமாய் கேட்டாள். வசி ஆம் என்பது போல தலையசைத்தான். வனி தொடர்ந்தாள் "நான் நிம்மதியா தூங்கி பன்னிரண்டு வருஷங்களுக்கு மேல ஆயிடுச்சு வசி. இந்த கனவுகள் எனக்கு புதிசு இல்ல, பழகிடுச்சிடா. ஆங் அந்த லாவண்டர் வாசனை திரவியம், அது பெட்ல தெளிக்காட்டி என்னால தூங்கவே முடியாது. ரொம்ப மைண்ட் டிஸ்டர்ப் ஆவறப்ப இந்த கனவுகளும் உளறல்களும் வரும். வீட்ல யாருக்கும் தெரியாது. என் ரூம் மாடில இருக்கறனால எந்த சத்தமும் கேட்காது. தியானம் செஞ்சா கொஞ்சம் பெட்டெர் அ இருக்கும்னு தான் ரூம்லே மெடிடேஷன் கோர்னெர் வெச்சியிருக்கேன் " கோர்வையாய் இயம்பினாள்.

வசிக்குள் ஏதோ பிறழ்வது போல இருந்தது. "என்னடி சொல்லற நீ, நீ எவ்ளோ தெளிவான பொண்ணு, தைரியமா இருக்கறவதானே? உனக்கு எப்படி இந்த மாதிரி ஒரு உளவியல் நோய் வந்துச்சு? காரணியே தான் தான் என்று வசி அப்பொழுதும் புரிந்துக்கொள்ள வில்லை.

வனி விரக்தியாய் சிரித்தாள். "என்னைதான் உயிரோடு வெச்சு நீ சமாதி கட்டிடியே, மனசு செத்தவள் இன்னும் எப்படி இருப்பாள்னு நீ நம்பற வசி? "அவளின் பதில்களினால் வசி அதிர்ந்து விட்டான்.

"இப்பவும் நான் பேசலனா இனி எப்பவுமே நான் பேச முடியாது. நீ தான் எல்லாமேனு ஒரு பைத்தியக்காரி உன்னையே உலகமாக்கி வாழ்ந்தாளே அவளை உனக்கு ஞாபகம் இருக்கா? சொந்தம்னு நெனைச்ச பாட்டியை முழுசா நான் இழந்து நின்ன அப்போ நீ எங்கடா போன? வானதியும் ஸ்கூல் மாறி போனப்போ நீ எங்கடா போன? நான் சாஞ்சிக்க தோள் தரவேண்டியவன், எவனோ ஒருத்தனுக்காக என்னை தவிக்க விட்டுட்டு போனியே, உன் வனி எப்படி இதையெல்லாம் தாங்கியிருப்பானு யோசிச்சியா? "வனி வார்த்தைகள் ஒவ்வொன்றும் வசியை அப்புகளாய் துளைத்தன.

"என்ன பாக்கிற இவளுக்கு எப்படி நம்ம தியாகம் தெரியும்னு யோசிக்கிறாயா?

ஹ்ம்ம்ம் அர்ஜுன் எல்லாத்தையும் காலேஜ் டைம் என்கிட்ட சொல்லிட்டான். எவனோ ஒருத்தனுக்காக என்னைய தாரை வார்ப்பியா நீ? ரெண்டு வருஷங்கள் தினம் தினம் நீ பேசுவியா பேசுவியானு தவம் கிடந்தேனே, என் தப்பு என்னானு கூட தெரியாம என்னைய புலம்ப விட்ட, பரிதவிக்க விட்ட, தனியாய் எனக்குனு உலகத்தை உருவாக்க வெச்ச, தைரியமாய் உலகத்தை பார்க்கணும் இருந்தவளை, நத்தை மாதிரி சுருண்டுக்க வெச்சது நீ தான் வசி "

"உன் உலக மகா தியாகத்திற்கு பலியானது வனமோகினிங்கிற சின்ன பொண்ணு டா.உன்னை உயிரா காதலிச்ச அப்புறம் தானே அர்ஜுன் இந்த விஷயத்தை சொன்னான். இன்னொரு ரவிக்காக என்ன நீ தூக்கி கொடுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?திரும்ப ஒரு வலியை வாங்கிக்க விருப்பம் இல்லாமத்தான் உன் காதலே வேணாம்னு உதறிட்டு போனேன். அப்ப கூட எனக்கு நிம்மதி இல்லையே. தினம் தினம் நீ ஏன் என் கனவுல வந்து தொலையரேனு தெரியாம 12 வருஷங்களா மனசு முழுக்க வலிகளோடு தான் வாழறேன். என் வலி உனக்கு புரியணும்தான் என் காதலை வலுக்கட்டாயமாய் அறுத்திட்டு வந்தேன். அப்பவும் புரையோடிப் போன வலிகள் எனக்குதானே மிஞ்சுது "

"என் விதியை பார்த்தியா, நான் நேசிக்கறவங்க யாருமே என்கூட இருக்கறது இல்லை, வாசு கூட பாரு என்னய அம்போனு தானே விட்டுட்டு போயிட்டான். எனக்கு தனிமை தானே நிரந்தரம். எனக்கு தேவைப்பட்ட எந்த தருணங்களிலும் நீ எங்க

கூட இல்லவே இல்லை. இப்ப மட்டும் எதுக்கு இந்த தாலியை கட்டியிருக்க? உன்னால நான் என்னையே தொலைச்சிட்டேன் வசி. இதுதான் உண்மை!" வனி கதறி அழுந்தாள்.

வசிக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. சிரித்துக் கொண்டே இருப்பவள், குறும்புக்காரி தன் விலகலையும் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள் என்றல்லவா எண்ணியிருந்தான்.அவள் அவன் காதலை ஏற்றுக் கொண்ட பொழுதும் இதைப் பற்றி கூறியது கூட கிடையாதே.தன் கண்மணியின் சிறகுகளை வெட்டி வீசிய கோடரிக் காம்பு தான்தான் என்ற நிஜமே வசியை உலுக்கி விட்டது.தன்னை சிரிக்க வைத்து அழகு பார்த்தவளுக்கு தான் தந்தது வாழும் பொழுதே நரகம் அல்லவா?.

எதுவும் பேசத் தோணாமல் வசி பாறையாய் இறுகி போயிருந்தான். அவனுக்கு தெரியும் அவனின் எந்த வார்த்தைகளும் அவள் காயத்திற்கு மருந்தாகாதே.

அவளின் நோயும் மருந்தும் அவன்தானே. எவ்வளவு பெரிய பிசகு. எதுவும் பேசாமலே இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

வனி தன்னறையிலும் வசி அவனறையிலும் அடைந்துக் கொண்டனர். வசிக்கு குற்றவுணர்ச்சி மேலோங்கியது.

எவ்வாறேனும் வனியை சரிப்படுத்திட வேண்டும் என்று உறுதிக் கொண்டான். மறுநாள் அவரவர் தங்கள் அலுவல்களில் மூழ்கிப் போக,வசி வனி விஷயமாக அவன் குடும்ப மருத்துவர் dr.சிந்துவிடம் கால் பண்ணி பேசினான்.

dr.சிந்து பிரபல மனோதத்துவ டாக்டரும் கூட.

ஒரு கான்பரன்ஸ் விஷயமாக ஊட்டிக்கு வந்தவர் வசி கால் செய்யவும், உடனே அவனை மீட் பண்ணவும் முடிவு செய்தார்.

வசியின் தேயிலை எஸ்ட்டேட்டில் விருந்தினர் வந்து தங்கவும் காட்டேஜ் மாதிரி ஒன்றை வைத்திருந்தான். அங்கேயே அவரை சந்தித்தான். வனியின் பிரச்சனைகளை ஒருவாறு அவன் போனில் சொல்லியிருந்ததால் அவரும் நேரே பிரச்சனையை பற்றி பேசவே செய்தார்.

"வசி உன் மனைவியின் முழு பெயர் என்ன? "

"வனமோகினி பிரபாகரன் டாக்டர். ஏன் கேக்கறிங்க? "

வசி வினவவும், dr.சிந்து முகத்தில் அதிர்ச்சி பரவியது.

"அப்போ நீதானா அந்த வசி?" நம்பமாட்டாமல் கேட்டார்.

"எனக்கு எதும் புரியல டாக்டர். நீங்க என்ன சொல்ல வர்றீங்க? "

"ஹ்ம்ம்ம்.. எனக்கு வனமோகினியை நல்லாவே தெரியும் வசி.

அவள் என்னோட பேஷண்ட்."

dr.சிந்து சொல்ல இப்பொழுது அதிர்ச்சியடைவது வசியின் முறையாயிற்று.

"என்ன சொல்லறீங்க டாக்டர்? "

"யெஸ் வசி, i know her well. ஒரு 6 வருஷங்களுக்கு முன்னதான் வனி என் கிளினிக்கு வந்தா. ஏதோ ஒரு கனவு தன்னை தூங்க விடாம செய்யறதாவும், நிம்மதி இல்லமால் இருக்கற மாதிரி பீல் பண்றதாவும், டிரீட்மென்ட் எடுத்துக்க வந்தா.

அப்போதான் எதனால இந்த கனவு இந்த பொண்ணுக்கு வருதுன்னு தெரிஞ்சிக்க ஹிப்ப்னாடிசம் முறைல அவ பாஸ்ட்ட தெரிஞ்சிகிட்டேன். வசிங்கற ஒருத்தனோட பிரிவு அவள் சின்ன மனசில் ஏதோ ஒரு சிதைவை உண்டாக்கியிருக்குனு புரிஞ்சிக்கிட்டேன்.

அவள் பாட்டி இறந்தது, அவள் பிரண்ட் பிரிஞ்சது, அத விட கொடுமையா அவளோட வசி அவளை ஒதுக்கி வெச்சது அவளை வேற மாதிரி மாத்திவெச்சிருக்கு.16 வயசில கலகல னு இருந்த அவள் உலகம் சிதைந்து போயிடுச்சி. தனிமை அவளை வேற உலகத்தில் சஞ்சரிக்க வெச்சிருக்கு. "

"உன் வனமோகினி மரம் செடி கொடிகள் கூட பேசுவானு உனக்கு தெரியுமா? அவள் டைரி எழுத கத்துக்கிட்டதும் அப்போதான் வசி. இதல்லாம் அவள் மயக்கத்தில் உளறியது. அவள் ஆழ் மனசில் வசீகரன்னு ஒருத்தன் மட்டும்தான் ஆழமாய் பதிஞ்சியிருந்தான், வனியோட தனிமைதான் அவளை வேற மாதிரி யோசிக்க வைக்குதுன்னு, நான்தான் யோகா கிளாஸ் போக சொன்னேன், இயற்கையோட அவள் வாழ பழகினனாலே, மருந்து மாத்திரைனு அவளை கஷ்டப்படுத்தாம தூங்கறப்ப லாவெண்டர் ஆயில் மெத்தைல தெளிச்சிட்டு தூங்க சொன்னேன்.

ரொம்ப நாளா அவள் கிட்டயிருந்து எந்த தகவலும் இல்லை. எப்பவாவது மனசு டிஸ்டர்ப் ஆனா இந்த கனவுகள் வருதுன்னு ஒரு வாட்டி சொல்லியிருந்தாள். "

"உன் வைப் நேம் வித்தியாசமா இருந்ததாலும், அவள் கதை என்ன பாதிச்சனாலோ என்னவோ, வனமோகினியை என்னால மறக்கமுடியால வசி.இனியாச்சும் அவள் நிம்மதியா இருக்கட்டும்.

இதுக்கு ஒரே ஒரு ட்ரீட்மெண்ட் நீதான் வசி. உன் அன்பு.. அது மட்டும்தான் அவளை சரி பண்ணிக் கொடுக்கும்.அவள் இழந்த சந்தோசங்களை அவளுக்கு திருப்பி கொடு வசி " dr.சிந்துவின் வார்த்தைகள் வசிக்கு தெம்பளித்தன.

" கண்டிப்பா டாக்டர் இனிமே என் வேணி இப்படி கஷ்டப்படவே மாட்டாள்.நான் அவளை பார்த்துக்குவேன் டாக்டர் " நம்பிக்கையோடு சொல்லும் வசியை டாக்டர் புன்னகையோடு பார்த்தார்.

"ஆல் தி பெஸ்ட் மை பாய், அடுத்த முறை நம் சந்திப்பு குட்டி வனியோ இல்ல வசியோ, அவங்க கூடத்தான் இருக்கணும் " dr.சிந்து விடைப் பெற்றார்.

வனியின் புதிரின் அத்தனை முடிச்சும் வசித்தானு அவனுக்கு புரிந்து போயிற்று. இனிமேலும் அவளை கலங்க விடுவானா என்ன? மானசீகமாய் ஷைலுக்கு நன்றி தெரிவித்தான். இல்லாவிட்டால் அவன் உயிரையல்லவா இழந்திருப்பான்.

கெஞ்சி அவள் காதலை பெறுவானா, இல்லை மிஞ்சி அவளை ஆட்கொள்வானானு இனி வரும் காலங்களில் பார்க்கலாம்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.