கேளிக்கை கிண்டலோடு வனியின் தாலிப் பெருக்கும் வைபவமும் நடந்தேறியது.அதற்கு முன்பே வசி வனி பெற்றோர்களிடம் பேசிவிட்டிருந்தான்.
"அத்தை மாமா என்னாலதானே உங்க மகள் கல்யாணத்தை பார்க்கற கொடுப்பினை உங்களுக்கு இல்லாம போய்டுச்சு.
நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க.
திரும்ப கல்யாணம் பண்ண முடியாது, பட் இந்த தாலி பெருக்கும் விழாவில் உங்க முன்னுக்கு வனிக்கு தாலி கட்ட ஆசைப்படறேன். எனக்கு அனுமதி கொடுப்பீங்களா?" வசி இப்படி கேட்கவும் இருவரும் நெகிழ்ந்து விட்டனர்.சம்மதம் தெரிவிக்கும் விதமாய் தலையசைத்தனர்.
மறுபடியும் வசி வனி கழுத்தில் மிக ஆனந்தமாய் தாலி கட்டினான். தன் பெற்றோர்களுக்காகத்தான் திரும்பவும் தனக்கு வசி தாலி கட்டுகிறான் என தெரிந்ததும் வனியும் இலகுவாய் இருந்து விட்டாள். அதற்கு பிறகு விருந்து கேளிக்கை என்று வீடே அமர்களப்பட்டது.
உணவிற்கு பின், கணவன்மார்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்காள் தங்கைகள் 10 பேரும் அவர்களின் சிறுவயது நாடகமான ராதா கிருஷ்ணா லீலைகளை அபிநயம் பிடித்து காட்டினர். முறையாக பரதம் பயின்றதால், அவர்களுக்கு ராதா கிருஷ்ணா பாவங்கள் மறக்கவே இல்ல. அதுவும் கண்ணனாக வனி இருந்தால் சொல்லவா வேண்டும்.
மோகமாய் வனி கண்கள் பாவங்களை வடிக்க கிறங்கியது அவளுடைய கோபிகைகள் மட்டும் இல்லை, அவளுடைய அன்பு கணவனும்தான். நடன அசைவுகளுக் கேட்ப வில்லென வளையும் தங்கள் மனைவிகளைப் பார்த்து வசியும் அவன் சகலைகளும் சொக்கித்தான் போயினர்.
ஆடி முடித்ததும் சகலைகளில் ஒருவன் "அடிப்பாவிகளா எங்க கூட என்னிக்காச்சும் இப்படி இளிச்சிட்டே இருந்திருக்கிங்களா? வீட்ல காளியாட்டம், இங்க வந்தா மோகினியாட்டமா? நல்லாவே எங்களை வெச்சு செய்யரீங்களே "ஆதங்கமாய் முடிக்க,
வனியின் அத்தை மகள் ரோகிணி, "மாமா வனி கண்ணன் மாதிரி மயக்க பார்வைப் பார்ப்பாள், நீங்க பார்த்தா கம்சன் பார்க்கற மாதிரி இருக்கும், அதுக்கு காளியாட்டம் தான் சரி வரும் " நன்றாகவே காலை வாரி விட்டாள்.கூடியிருந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
அடுத்து அந்தாக்சரி ரவுண்டு ஆரம்பிக்க, அவரவர் முறை வர பாட ஆரம்பித்தனர். வசி முறை வர, "உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே "என உருகி பாட, நச் என்று குட்டி சொம்பு ஒன்று அவன் தலையை பதம் பார்த்தது.
"ஐயோ" என்று வசி அலற அங்கே கோவக் கண்களோடு வனி நின்றிருந்தாள்.அவன் காதை திருக்கியவாறே
"ஏன்டா எருமை எத்தனை வாட்டி சொல்லி இருப்பேன், இந்த பாட்ட பாடாதேன்னு, அடங்க மாட்டிய நீ, என்ன வெறுப்பேத்தறியா? இனிமேல் இந்த சாங் படுவியா? பாடுவியான்னு அவனை பிச்சு எடுத்து விட்டாள்.
நிலமை மோசமாதற்குள் அனைவரும் சேர்ந்து வனியை வாசியிடமிருந்து பிரித்து எடுத்தனர்.
அவ்வளவு அடி வாங்கியும் சிரித்துக் கொண்டடிருக்கும் வசியை அனைவரும் ஒரு மாதிரியாய் பார்க்க, அதை உணர்ந்தவன்,
"வனிக்கு இந்த சாங் ஸ்கூல் டைம்லேந்து ஆவாது, இந்த குள்ள வாத்தை ஒரு குண்டு சீனியர் ரொம்ப நாளா சைட் அடிச்சிட்டு இருந்தான், அவன் கட்டை குரலில் இவளைப் பார்க்கும் போதெல்லாம் இந்த பாட்டை பாடி வனியை கடுப்பேத்துவான். அதனாலே தல ரசிகையான நம்ம வனிக்கு இந்த பாட்டு மேலே செம்ம காண்டு பா. யார் அவள் முன்னுக்கு இதை பாடினாலும் பிரிச்சு மேஞ்சிடுவா. இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் வனி மறந்திருப்பானு நெனைச்சு பாடி தொலைச்சிட்டேன் "வசி சிரித்துக் கொண்டே கூற அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.இதுக்கு பின்னால இப்டி ஒரே ஹேவி பிளாஷ் பேக்கை அவர்கள் எதிர்ப் பார்க்க வில்லை தான்.
இருந்தும் வசியின் மூத்த சகலை "என்ன இருந்தாலும் இப்படியா உங்களை அடிக்கறது"னு அனுதாபப்பட,
வசி அதற்கு "ஹ்ம்ம்ம் என் கிரகம் சகலை, ஸ்கூல் டைம் லேந்தே இவள் கிட்ட அடி வாங்கி அடி வாங்கி பழகி போயிடுச்சு.அப்படி என்னய்ய வனிக்கு நேந்து விட்டுட்டாங்க"வசி சோகமாய் சொல்ல திரும்பவும் வெடி சிரிப்பு ஆரம்பமாகியது.அன்று முழுக்க வசிவனி பள்ளி கதைகளே கேட்டு கேட்டே அவர்கள் பொழுது கழிந்துவிட்டது.
மறுநாள் அனைவரும் அவர் அவர் இல்லம் கிளம்பிவிட, அடுத்த விடுமுறைக்கு கொட்டமடிக்கலாம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.வனியும் வசியும் கூட கிளம்பி விட்டனர்.நீண்ட நாளைக்கு அப்புறம் வனிக்கு அவளுடைய நண்பன் வசி கிடைத்து விட்டான் என்ற உணர்வு வந்தது. அடித்ததற்கு மன்னிப்பு கேட்டு விட்டாள்.வசி அதற்கு "அடிக்காட்டி உனக்கு பெயர் வனி இல்லையே , அடி வாங்காட்டி எனக்கு பெயர் வசி இல்லையே " என குறும்பாய் சிரித்தான்.
வீடு வந்ததும், அவரவர் அறைகளில் அடைந்துக் கொள்ள, வசிக்குத் தான் வனியின் அருகாமை தேவையாய் இருந்தது. அதுவும் அவளின் மோகன பார்வை, அவன் கண்டிறாதது. பெண்ணே சொக்கி போகையில் இந்த ஆண் மகன் எம்மாத்திரம்? விரைவில் அவள் இணை சேரும் நாளை அவன் ஆவலாய் எதிர்பார்த்திருந்தான்.
ஒரு நாள் காலை வசி உற்சாகமாய் வனியிடம் பேச வந்தான்.
"டேய் கண்ணா, மாமாவுக்கு மலேசியா லே confrence ஒன்னு இருக்க. ரெண்டு வாரங்கள் அங்கதான். நீயும் வர்ரியா, நல்லாயிருக்கும். உனக்கும் ஒரு மாறுதல் வரும் "ஆர்வம் மின்னும் கண்களோடு வசி கேட்க வனிக்கு கசக்குமா என்ன? சரியென்று தலையாட்டினாள். மறுவாரம் இருவரும் மலேஷியாவில் இருந்தனர்.
கலவையாய் மக்களும்,தமிழ் மலாய், ஆங்கிலம்,மாண்டரின்னு பாஷைகளின் பரிமாற்றங்களும் வனிக்கு புதிதாய் இருந்தது. யாரைப் பார்த்தாலும் ஸ்நேகமாய் ஒரு புன்னகையை இலகுவாய் அனைவரும் வழங்குவதும், இன மத பேதமின்றி அனைவரும் பழகுவதும் அவளுக்கு பிடித்திருந்தது. அதுவும் வசி சரளமாய் மலாய் மொழி பேசுவதை வனி அதிசயமாய் பார்த்தாள்.
"உனக்கு எப்படி இந்த மொழி பிடிபட்டது வசி? இவ்ளோ சரளமாய் உன் நாக்குல புரளுதே "
"நான் இங்கே தானே படிச்சேன் வணிமா. தவிர பல இன மக்கள் எனக்கு யூனிவர்சிட்டி friends, so மொழி ரொம்ப தடுமாறல, தவிர தமிழ் மொழியின் பல வார்த்தைகள் மலாய் மொழியில கலந்து இருக்கும், so கத்துக்கறது சுலபமாயிடுச்சு. "நன்றி ன "தெரிமா காசே"னு சொல்லணும். இவங்களுக்கு அவங்க மொழியில் நன்றி சொன்னா ரொம்பவே புடிக்கும். ரொம்பவே மகிழ்ச்சியா உணருவாங்க."
"இங்க கலாச்சாரம் கூட ஒரு விதமான நூதனம் நிறைந்ததுதான் . புலம் பெயர்ந்த தமிழ்ர்களின் பண்பாடு நாகரிகம் இங்க உள்ள மக்களோடு காலப் போக்கில் கலந்திடுச்சு, கடாரம் கொண்ட சோழன் னு சரித்திரத்தில் படிச்சிருப்ப, காலப் போக்கில் அது கெடா வா மாறிடுச்சு "மேலும் மலேசியாவைப் பற்றிய பல விவரங்களை வசி மூலமாக வனி அறிந்துக் கொண்டாள்.
பெரிய கோப்பையில் "தே தாரிக் " என தேநீரும் நாசி லெமாக் எனும் நெத்திலி சம்பாள் கலந்த தேங்காய் பால் சாதமும் சாப்பிட வனிக்கு புதிய அனுபவமாய் இருந்தது.உலகத்தின் உயரமான முருகன் சிலை கொண்ட பத்து மலையின் தொன்மையை எளிதாய் வசி விளக்க, வனி அண்ணாந்து பார்க்க நின்ற முருகன் சிலையில் மனம் மயங்கி நின்றாள்.