மூங்கில் நிலா -19

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வசியின் அறையில் அவள் பொருட்கள் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தது. அட்டாச் பாத்ரூம் கூடிய பெரிய அறை.
அதற்குள் பால்கனியை ஒட்டினாற் போல இன்னொரு அறை கண்ணாடி தடுப்பினால் ஆனது. வனி இதுவரைக்கும் வசி அறைக்குள் சுதந்திரமாய் உலவியது கிடையாது. அதனால் அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்ததும் இல்லை. பஞ்சு போன்ற மிருதுவான மெத்தையும் குளிருக்கு இதமான இராஜாய்யும் , டிம் லைட்டில் வசியின் அறை அழகாகத்தான் இருந்தது.

வசி வெளியே போன் பேசி கொண்டிருக்க வனி அந்த கண்ணாடி அறைக்குள் பிரவேசித்தாள். அவளது அறைக்குள் இருக்கும் அவர்களுடைய பள்ளி கால புகைப்படம் பெரிதாக டேவோலப் பண்ணி வைத்திருந்தான். வசியோட ஸ்கூல் டைம் நினைவுகள் எல்லாமே அங்கேதான் அடைக்கலமாகி யிருந்தன.வனி பிறந்தநாள் பரிசாய் கொடுத்த பிள்ளையார். பள்ளிக் காலத்தில் அவள் எழுதி வைத்த கவிதை புத்தகம், அவளுடைய அபிமான எழுத்தாளர் திருமதி காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய "உன்னை கண் தேடுதே " நாவல், அவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டிருந்த அவளுடைய காதல் டைரி. எல்லாமே அங்கேதான் இருந்தது.
மனதிற்குள்,

"அட பாவி மவனே, என் கவிதை புக் உன்கிட்டதான் இருந்துச்சா? ஸ்கூல்ல தொலைச்சிட்டேனே எவ்வளவு தேடி இருந்திருப்பேன்? தோ என்னோட பேவரைட் நாவல், இது கூட தொலைஞ்சி போச்சுன்னே சொன்னியே? இந்த டைரி என்கிட்டதானே இருந்துச்சு? எப்படி இங்க வந்துச்சு? கிராதகா !" வனி வசியை கறுவினாள்.

அவள் நினைத்ததும் நேரில் வந்து நின்றான் அவள் நாயகன். வனியின் முறைப்பே அவனுக்கு சகலதையும் சொல்லிற்று.
வனி அவன் காதைப் பிடித்து திருகியவாறே "ஏன்டா திருட்டு பயலே எப்படா இதெல்லாம் திருடுனே? எத்தனை வாட்டி கேட்டு இருப்பேன், என் புக்க பார்த்தியானு? அப்படியே நல்ல புள்ள மாரி மூஞ்ச வெச்சிக்கிட்டு என்ன வேலை பார்த்து இருக்க நீ? வெஷம் வெஷம் "வசி தலையிலே கொட்டினாள்.

"அவ்வ்வ் வலிக்குதுமா.. உன்னோடது எல்லாமே என்னோடது தானே பேபிமா? " வசி கூற வனி முறைத்தாள்.
"மொறைக்காத பேபி, இதெல்லாம் என்னோட மெமோரிஸ், உன்னோட நான் ஸ்கூல்டைம் ல வாழ்ந்த மெமோரிஸ்டி.
ஏனோ தெரியல அந்த குண்டு குண்டு கை எழுத்து என்னை மயக்கிடுச்சு. உன்னோட கவிதைகளுக்கு நான் பெரிய விசிறி தெரியுமா? ஆங் அப்புறம் இந்த டைரி.
இது நீ என்னை வேண்டாம்னு கிளாஷ் பண்றதுக்கு ஒரு நாள் முன்னுக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு களப்பனேன்.
அத படிக்கவே ஆரம்பிக்கல, பட் அதுக்குள்ள என் காதல் வேணாம்னு நீ தூக்கிப் போட்டுட்ட.அப்போ மனசு வலிச்சது. பட் அந்த டைரிய படிக்கணும்னு தோணுச்சு. படிச்சேன். நாம ரெண்டு பேரும் எப்படிலாம் future ல வாழணும் னே அப்ப sms பண்ணிக்குவோம். அதெல்லாம் நீ அதுல அழகா எழுதி வெச்சிருந்த.

"உன் காதல், உன் ஆசைகள், உன்னோட வசீகரன். அவ்ளோ காதலை வெச்சிக்கிட்டு நீ என்னை ஏன் வேண்டாம்னு சொன்னேனு கூட தெரியலடி."

"நானே நம்ம காதலை அப்படி போற்றியிருக்க மாட்டேன்.பட், நீ.. நீதான்டி என்னை வேற மாதிரி உணர வெச்சே.
முழுசா ஒரு குடும்ப வாழ்க்கையை உன்கூட கற்பனைல வாழ்ந்து முடிச்சிட்டேன்டி. என்னால எப்படி இன்னொருத்திய கல்யாணம் பண்ணிருக்க முடியும்?

எதிலுமே உனக்கு தாராளம்தானே. காதல், நட்புனு எல்லாத்தையும் முழுசா குடுத்து முழுசா என்கிட்ட இருந்து பறிச்சு என்னை தவிக்கவிட்டதும் நீதாண்டி.
ஷைலுவ கட்டியிருந்தா நான் கடமைக்கு தான் வாழ்ந்திருப்பேன். காதல்னு ஒன்னு அங்க வந்திருக்காதுடி "வசியின் கண்களில் வலியின் சுவடுகள் அப்பட்டமாய் தெரிந்தது.

வனி சிலைப் போல நின்றிருந்தாள். வசி மேலும் தொடந்தான்.
"மலேஷியாவில் எவ்ளோ கேர்ள்ஸ் என் பின்னால் சுத்தியிருக்காங்க தெரியுமா?

உன்னை விட அழகிகள், பட் என் மனசு யார்கிட்டயும் மடங்கனதே இல்லை. எவளும்மே என் வேணி ஆக முடியாதே. அவளுக்கு மட்டுமேதானே வசி யாருன்னு தெரியும். உன் அளவுக்கு யாருமே என்னை ஆண்டுட்டு போகலடி. மோகினி மாதிரி என்னை புடிச்சுகிட்ட காட்டு ரோஜாவே நீதான்டி. "

"அப்போ என்கிட்ட திரும்பி வந்திருக்கலாமே வசி? எதுக்கு ஷைலுவ கட்டிக்க சம்மதிச்சே? "
வனி குரல் பம்மிற்று.

"உன்னோட சத்தியம். நீதானே வாழ்க்கை முழுக்க உனக்கு நான் பிரண்ட்டா இருந்தாலே போதும்னு சொன்னே? எப்படி திரும்ப வருவேன்? அப்போ உனக்கு வாசு கூட கல்யாணம்னு கூட பேச்சு வந்தது. திரும்ப உன் லைப் ல நான் வந்து கெடுக்க விரும்பல. அப்புறம் அம்மா வோட இறப்பு.எனக்கு வாழ்க்கையில் எதுமே பிடிமானம் இல்லை. இந்த கல்யாணம் கூட அம்மா ஆசைக்குனு தான் ஒத்துக்கிட்டேன்.

"பட், அன்னிக்கு அந்த பட்டு சாரியில் வனதேவதை மாதிரி வந்த உன்னை பார்த்து மனசு தடுமாறிதான் போச்சு.

நல்ல வேளை ஷைலுவே அந்த கல்யாணத்தை நிப்பாட்டிட்டா. அந்த டைரி கூட மேரேஜ்க்கு முதல் நாள் இறுதியாக வாசிச்சுட்டு உன்கிட்ட குடுத்திடலாம்னு எடுத்து வெச்சிருந்ததுதான்.
அதுவே நம்ம கல்யாணத்துக்கு அத்தாட்சி யாயிடுச்சு. அந்த வேளை விட்டிருந்தா, நீ என்னைக்குமே என்னைனு இல்ல எவனையுமே கட்டியிருந்திருக்கமாட்ட.உன் மனசு, வலி எல்லாமே எனக்கும் தெரியும் வனி "
வனி கண்களில் நீர் சுரந்தது. எதுவும் மேற்கொண்டு வசியிடம் பேசாமல் படுக்கையில் சென்று விழுந்தாள். வசி அவளை தடுக்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழித்துதான் வந்து படுத்தான். வனி அழுது கொண்டிருந்தது அவள் முதுகு அசைவதிலே அறிந்துக் கொண்டான். அப்படியே உறங்க விட்டால் பாதி உறக்கத்தில் உளற ஆரம்பித்து விடுவாள் என்பது நிச்சயம்.

மெல்ல அவளை தன்புறம் திருப்பியவன் அவள் விழி நீரைத் துடைத்தான். மென்மையாக அவள் முன்னுச்சியில் முத்தமிட்டவன், அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"நிம்மதியாக தூங்கு பேபி, எந்த கவலையும் வேணாம் இப்ப, எதுவாக இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.
நீயா என்கிட்டே உன் மனச சொல்றப்ப மட்டுமே நம்ம லைப் அ தொடங்கலாம். இப்போ உன் அம்மாவை ஹக் பண்ணிட்டு தூங்கறதா நெனச்சு தூங்குடா "
வசி அவளை அணைத்த வண்ணம் உறங்க, அவனின் அந்த செயல் தனக்கானதுனு வன மோகினிக்கு புரிந்து போயிற்று.

உறக்கம் அவளை அவ்வளவு சீக்கிரத்தில் அணைக்க வில்லை, ஆனால் அவள் கணவனின் அணைப்பு அவளுக்கு பாதுகாப்பு கவசம் போல இருந்தது. தூக்கத்தில் வசிதான், வனியின் சிறு சிறு அசைவுக்கும் அவள் முன்னுச்சியில் தன்னை அறியாமல் முத்தமிட்டுக் கொண்டடிருந்தான்.அது ஒரு வகை சுகம்போல வனியும் வசியைக் கட்டிக் கொண்டு உளறாமல் உறங்கினாள். இந்த இரவும் ஜன்னல் வழி ஒளி உமிழ்ந்த நிலாவும் இவர்கள் இணை சேரும் நாட்களுக்காய் காத்திருக்க ஆரம்பித்திருந்தன.

மறு நாள் குழப்பமின்றி விடிந்தது வனிக்கு. தன் மனதை திறந்து சொல்லி விடலாமா என்று கூட யோசித்து கொண்டிருந்தாள்.
தவறு தன்னுடையது என்ற குற்ற உணர்ச்சி அவளை வசியோடு இயல்பாய் பொருந்தி கொள்ள முடியாதவளாய் ஆக்கிவிட்டிருந்தது. இதற்கிடையில் தான் வசி அவளை அந்த செய்தியோடு எதிர்க்கொண்டது.
நேற்றைய சம்பவங்களின் சுவடுகள் எதுவும் அவன் முகத்தில் இல்லை.இயல்பான புன்னகை மட்டுமே.
கையில் அவனுடைய டை. பிடிவாதமாய் அதை கட்டி பழக மறுத்தவன் ஆயிற்றே.

"பேபி பேபி ப்ளீஸ் டை கட்டி விடுடா. நீ கட்டி விடு நான் உனக்கு ஒரு கிப்ட் தருவேனாம் "வசி வனியிடம் பேரம் பேசினான்.
கிப்ட்னு சொன்னதும் வனி முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு எரிந்தன."ஐய்யா ஜாலி ஜாலி, நிஜமா குடுக்கணும், ஏமாத்தினா கொன்னுடுவேன் மவனே "

"இல்லடா பேபி, நிஜமா குடுப்பேன் "
வசி சிரிக்க, இலாவகமாய் அவள் டையை கட்டி விட்டு காலரை சரி செய்தாள்.

"ஓகே டன், எங்கே எனது கிப்ட்? "வனி கேட்டாள்.

"தர்றேன் தரேன், நீ கண்ணு மூடிக்குவியாம், அப்போதான் தருவேன். கண்ணு மூடு கண்ணு மூடு " வசி கூற வனிக்கு சந்தேகம் வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு நின்றாள்.

அவளை நெருங்கி நின்ற அவனின் சென்ட் மணம் அவள் நாசி நிறைத்தது. அப்படியே வனியின் ஆப்பிள் கன்னத்தை பற்றி அழுந்த முத்தமிட்டவன் அதை கடித்தும் விட்டான். வனிக்கு அவன் முத்தம் அதிர்ச்சி என்றால் அவன் கடித்து வைத்தது வலித்தது.

"அவ்வ்வ் வலிக்குதுடா பாவி, உன்னை என்ன பண்றேன்னு பாரு " வனி அவனை துரத்த, வசி சிட்டாய் பறந்து விட்டான்.
நாலு கால் பாய்ச்சலில் காரில் ஏறியவன், "சோரி லட்டு பேபி, உனக்கு கிஸ்தான் குடுக்கணும் நெனச்சேன், பட் அந்த கொழு கொழு கன்னம்.. கடிக்க வெச்சிடுச்சு கண்ணா, ஸீ யூ அட் ஈவினிங் " கைகளை அசைத்தவாறே சென்று விட்டான்.

வனிக்குதான் பாவம் வலி ஒரு பக்கம் என்றாலும் வசி கடித்தது கன்னம் சிவந்து போயிற்று. இரவு அவன் வந்ததும் அவனை எப்படி கைமா பண்ணலாம்னு யோசித்துக் கொண்டிருந்தாள். பூவேலியை கவனிக்க பொன்னி கூட மேலும் ஐந்து மலை ஜாதி பெண்களை வனி நியமித்திருந்தாள். பொன்னி கண்காணிப்பில் பூவேலி நன்றாக இருக்கும்னு அவளுக்கு சர்வ நிச்சயம்.
வசி வரும் நேரத்தையே வனி கவனித்துக் கொண்டிருந்தாள்.

இரவு 8க்கு மேல் ஆகியும் அவன் வரும் சுவடு கூட தெரியல. வனி பொறுமையை மேலும் சோதிக்காமல் தன் அக்மார்க் புன்னகையுடன் வசி வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் வனி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனோடு பேசுவதாய் இல்லை என்ற முடிவோடு. ஆனால் அவனோ அவளை சீண்டாமல் இருக்க மாட்டானே. சோபாவில் அமர்ந்திருந்தவளின்
நீண்ட ஜடையை பற்றி இழுத்தான்.

அவ்வளவுதான். தூங்கிக் கொண்டடிருந்த சிங்கத்தை வசி எழுப்பியல்லவா விட்டிருக்கிறான்.

"டேய் எருமை, இன்னிக்கு நீ சட்னி ஆவறது உன்ன படைச்ச சாமியாலே கூட காப்பாத்த முடியாதுடா.
நானும் போன போகட்டும்னு விட்டு வெச்சா என்னைய சீண்டி பார்க்குறியா நீ, மவனே இன்னிக்கு நீ செத்தடா !
" வனி வசி மேல் பாய்ந்து விட்டாள்.

வசி சாப்பாடு மேஜையை சுற்றி சுற்றி ஓட, காற்றில் அலைந்த அவன் டை லாவகமாய் அவள் கையில் சிக்கியது. அவன் டையை இறுக்கிப் பிடித்தவள், அவன் அடர் கேசத்தை மறு கையால் பற்றி இழுத்தாள்.
"பேபிமா என்னை விற்றுடி, வலிக்குது செல்லம்.. விடுடா கண்ணா "அவன் கெஞ்ச அவள் விட்ட பாடில்லை.
வசி யும் விடுவானா என்ன? வனியின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினான்.வனிக்கு கூசத் தொடங்கி அப்படியே வசியை தள்ளிக்கொண்டு தரையில் விழுந்தாள்.

இருவரும் கட்டி புரண்டு பாதி ஹால்ளை சுற்றி விட்டனர்.அப்படியே வனியை கட்டிக் கொண்டவன்,
"போதும் பேபி மாமானாலே முடியலடி.. எங்க இருந்தே தான் உனக்கு இவ்ளோ எனர்ஜி வருது?
உங்க ஆத்தா உனக்கு டெய்லி முட்டையும் பாலும் குடுத்து வளர்த்திருக்காங்க போல, என்ன கனம் கணக்குறே நீ
" அணைப்பை தளர்த்தாமலே கூறினான்.

"டேய் சோத்து மாடு, நீ தான் என்னை உடும்பு புடியா புடிச்சிருக்கே. மொத கை ய எடு. மூச்சு விட முடியல " வனி திமிறினாள்.

தன் பிடியை சற்றே தளர்த்தியவன், "பேபி இந்தா உன் கிப்ட், இந்த வசி வாக்கு தவற மாட்டான் ", அவள் கையில் ஒரு கவரை திணித்தான்.
அதில் உத்ரகாண்ட்க்கு செல்ல 2 விமான சீட்டுகள் இருந்தன. வனி விழி வியப்பால் விரிந்தது.

"ஐ நாம அங்க போறோம்மா மாமா, valley of flower? அங்கதானே போகப் போறோம்? "வனி உற்சாகமாய் கேட்க வசி ஆம் என்பது போல தலையசைத்தான்.

"ஹ்ம்ம்ம் இப்ப மட்டும் மாமா கோமா னு இளி "வசி கூற

"யாஹூ.. ரொம்ப நன்றி மாமா, என்னோட கனவு உலகம் அது...எப்படி கண்டு பிடிச்ச மாமா? " வனி கேட்க

"உன் டைரியின் உபயம் தேவி "வசி பவ்வியமாய் சொல்ல..

"திருட்டு பயலே.. இன்னும் இப்படிதான் என் டைரிய திருடிப் படிக்கிறியா நீ? "

"நீ அங்க அங்க எழுதிட்டு வைப்ப, அது மாமா கண்ணுல பட்டுடுது பேபி.

அதுல சுட்டது என் ஒரே ஒரு பொண்டாட்டியோட கனவுகள் ல ஒண்ணாம்"வசி குறும்பாய் கண் சிமிட்ட, வனி ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN