யாசிக்கிறேன் உன் காதலை-1

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

யாசிக்கிறேன் உன் காதலை-1

"ஏன்டி ஜெயந்தி என்ன சேதி பெரிய வீட்டுல தடபுடலாக வேல நடக்குது", என்று வயலுக்கு நடந்தபடி கேட்டாள் ராசாத்தி.

"உனக்கு விஷயமே!! தெரியாதா?? நம்ம பெரிய ஐயாவோட பெரிய பையன் குணா அய்யா இருக்காருல்ல குடும்பத்தோட இருபத்தி ஐந்து வருஷம் கழிச்சி வராரு", என்றாள் சந்தோசமாக.

"அவரு காதல் கல்யாணம் பண்ணுனாருன்னு தானே!! பெரிய்யா ஒதுக்கி வச்சுட்டாரு, இப்ப அய்யா ஏத்துகிட்டாரா??", என்றாள் வாசுகி ஆர்வமாக.

"ஏத்துக்காம என்ன பண்ணுவாரு?? பெரியம்மாவுக்கு தான் சமீபத்துல உடம்பு முடியாம போச்சுல்ல, அதனால மனசு இறங்கி வந்துட்டாரு", என்றாள் ஜெயந்தி பெருமூச்சுடன்.

"இருந்தாலும் அய்யாவுக்கு இவ்ளோ!! பிடிவாதம் இருக்கக்கூடாது, கல்யாணம் பண்ணி போனவரு(குணா) புள்ளையோட பார்க்க வந்தப்ப வீட்டுக்குள்ள விடாம அனுப்பிட்டாரு", என்றாள் ராசாத்தி வருத்தமாக.

"ஆமா நாம என்ன பண்ணுறது?? ஹ்ம்ம்.. ஏன்டி ஜெயந்தி இந்த சேதி உனக்கு எப்படி தெரியும்???", என்றாள் வாசுகி.

"என்ற ஊட்டுகாரு அங்கதானே!! வேல பாக்குறாரு அவர்தான் சொன்னாரு, குணா அய்யா தங்கமானவரு வயல் வேல முடிச்சுட்டு சாயங்காலமா போய் பார்க்கணும்", என்றாள் சந்தோஷமாக.

"அடியே!! பேச சேதி கிடைச்சதும் பேசிட்டே!! இருக்காம வயலுக்கு வெரசா வாங்கடி போலாம் வேலை இருக்கு", என்று ஒர் மூதாட்டி இழுத்து சென்றார் மூவரையும்.

(இவர்கள் பேசி சென்ற அந்த பெரிய வீட்டைப் பற்றியும் நாமலும் தெரிந்து கொள்வோம். கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள தேவகுளம் (என் கற்பனையின் ஊர் யாரும் கூகிள் மேபில் தேடாதிங்க) ஊரின் தலைவர் பெரியசாமி. ஊரில் உள்ள முக்காவாசி இடங்கள் இவர்கள் பரம்பரைக்கு சொந்தமானது.
பெரியசாமி மற்றும் திலகம் தம்பதியினருக்கு மூன்று மகன்கள். மூத்தவர் நேசமணி, நடுவர் கந்தன், இளையவர் வரதன்.

நேசமணி மற்றும் பார்வதி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் குணசேகரன் இளையவர் தனசேகரன்.

கந்தன் மற்றும் வேதவல்லி தம்பதியினருக்கு ஓர் மகன் மற்றும் ஓர் மகள். மூத்தவர் ராஜசேகரன் இளையவர் பார்வதி.

வரதன் மற்றும் அரசி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் முல்லை இளையவள் மல்லிகா.

நேசமணி பெரியசாமியின் மறைவுக்கு பிறகு அந்த வீட்டின் ஆணிவேராக மாறினார். நேசமணி குடும்பம், பரம்பரை, அந்தஸ்து, கௌரவம், பார்ப்பவர். இல்லாதவர்க்கு கொடுத்து உதவுவார். ஜாதி வெறியில் ஊறிப் போனவர். நீ எனக்கு கீழ தான் என்ற தலைக்கனம் கொண்டவர். மற்ற இரு தம்பிகளும் நேசமணி பேச்சுக்கு கட்டுப்பட்டவர்கள். அண்ணன் எள் என்றால் எண்ணெயாய் நிற்பார்கள்.
இவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றி போகப்போக பார்ப்போம்)

"பேபி டால் இன்னும் கொஞ்ச நேரத்துல நாம திருச்சி ஏர்போர்ட்டுல இறங்கிடுவோம் டா ", என்றார் குணசேகரன் (நம் நாயகியின் அப்பா).

"ம்ம்... ஓகே டாட்", என்றாள் சிரிப்புடன்.

"பேபிடால்!! நாம இப்பப் போற பிளேஸ்ல நிறைய சொந்தங்கள் உனக்குக் கிடைப்பாங்க", என்றார் அகிலா(நம் நாயகியின் அம்மா) பொறுமையாக.

"சொந்தங்கள் மீன்ஸ் வாட்??".

"ரிலேஷன்ஸ் டா, அம்மாக்கு ஒரு அண்ணா மட்டும் தான் டா, அவங்க பேபி தான் ரவீந்தர்", என்றார் குணசேகரன்.

"அப்பா சைட் அப்படி இல்ல பேபிடால், மூனு தாத்தா பாட்டி, இரண்டு சித்தப்பா சித்தி, மூனு அத்தைங்க, அவங்க எல்லாரோட பசங்க, எல்லோரும் இப்ப அங்க இருப்பாங்க, உனக்கு ஃப்ரெண்ட்ஸ் நிறைய கிடைப்பாங்க", என்றார் பொறுமையாக.

"ஓகே!! மீ", என்றாள் சிரிப்புடன். ஃப்ளைட் திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கியதும் மூவரும் வெளியே வந்தனர்.

"அண்ணா... அண்ணா..", என்று இருவர் வேகமாக அழைத்தபடி பக்கத்தில் வந்தனர்.

"டேய்!! தனா.. ராஜா..", என்று வேகமாக சென்ற குணா அணைத்தார். மற்ற இருவரும் குணாவின் பின்னால் வந்தனர். "எப்படிடா இருக்கீங்க???", என்றார் பாசமாக விலகி.

"நல்லா இருக்கோம்ணா", என்றார் தனா.

"உன்ன பார்த்து எத்தன வருஷமாச்சுணே!!", என்றார் ராஜா கலங்கிய கண்களுடன்.

"டேய்!! அதான் வந்துட்டேன்ல அப்புறம் என்னடா?? அம்மா எப்படி இருக்காங்க", என்று வீட்டில் இருக்கும் அனைவரை பற்றியும் நலம் விசாரித்தார்.

"வாங்க அண்ணி வாங்க குட்டிமா", என்றனர் இருவரும் அன்பாக. அகிலா சிரித்தார்.

"டாட்", என்றாள் புருவம் உயர்த்தி.

"பேபிடால் இவங்க ரெண்டு பேரும் உன் சித்தப்பா டா பெரிய சித்தப்பா தனசேகரன் சின்ன சித்தப்பா ராஜசேகரன்", என்று அறிமுகம் செய்தார்.

"சித்தப்பா ", என்று இருவரையும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். இருவரும் சிரிப்புடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தனர்.

"எங்க அண்ணி இன்னொரு ஆள காணோம்", என்றார் ராஜா.

"அபிக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவா தம்பி அவ ஆபீஸ்ல திடீர்னு ஒரு பிரச்சன", என்றார் தயங்கியபடி.

"பரவால்ல அண்ணி வாங்க காருக்கு போகலாம்", என்றார் தனா.

"குட்டிமா வாங்கடா நாம போகலாம்", என்று அவள் கையில் இருந்த பேக்கை வாங்கிக்கொண்டு ராஜா சென்றார். மூவரும் பின்னால் உட்கார்ந்தனர். மற்ற இருவரும் முன்னால் உட்கார்ந்தனர். ராஜா கார் ஓட்டினார்.

"டாட்.. மீ எவ்ளோ!! கிரீனிஷா இருக்குல", என்றாள் குதுகலமாக.

"ஆமாடா குட்டிமா இங்க எப்போதுமே!! இப்படித்தான் இருக்கும், விவசாயத்துக்கு பெயர் போன ஊர்ல நம்ம ஊரு", என்றார் தனா சிரிப்புடன்.

"இன்னும் எவ்ளோ!! நேரமாகும் சித்தப்பா வீட்டுக்கு போக ", என்றாள் சோம்பலுடன்.

"சீக்கிரமா போயிடலாம் டா ", என்றார் ராஜா.

"நிறைய ரிலேஷன் இருந்தா?? பிக் ஹோம் வேணும்ல அப்ப பிக் ஹோமா டாட்???".

"அது வீடு இல்ல பேபிடால் அரண்மனை மாதிரி இல்ல அரண்மனையே!! தான்", என்றார் அகிலா பெருமையாக.

"அரண்மனையா??", என்றாள் புரியாமல்.

"பேலஸ்", என்றார் குணா சிரிப்புடன்.

"வாவ்!! சூப்பர் டாட் நாம சீக்கிரமா போலாம்", என்றாள் குதுகலமாக.

சிறிது நேரத்தில் இவர்கள் கார் பெரிய மதில் சுவர் எழுப்பிய மாளிகை முன் நின்றது. அனைவரும் இறங்கிய அடுத்த நிமிடமே பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. யாரையும் பார்க்க முடியாமல் புகை மூடியது. சிறிது சிறிதாக சத்தம் அடங்கி புகையும் மறைய ஆரம்பித்தது.

"குணா.. தம்பி.. அண்ணா..", என்று பல பாச குரல்களின் சத்தம் கேட்டது.

குணா சந்தோசமாக அனைவரையும் பார்த்தார். தங்கைகள் மூவரும் வந்து அகிலா மற்றும் குணாவை ஆரத்தி எடுத்து விட்டு சென்றார்.புகை முழுவதும் மறைந்தது.

"தங்கம்... ராசா.. வாமா எங்க என் பேத்திய காணோம்??", என்றார் அபிராமி(மூத்த பாட்டி) ஆவலுடன்.

"பாட்டி.. தாத்தா.. நா இங்க இருக்கேன்", என்று குணாவின் பின்னால் இருந்து சிறிய குழந்தை போல் கண் சிமிட்டியபடி எட்டிப்பார்த்து வெளியே வந்தாள் நம் கதையின் நாயகி அபிநேகவதி.

பிங்க் நிறத்தில் பெரிய பாவாடையும், அதற்கு மேல் வானத்து நிறத்தில் டாப்பும் போட்டு, வட்ட முகமும் சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறத்திலும், நேர்த்தியான நெற்றி, வில் போன்ற புருவம், மை தீட்டாமல் வசீகரிக்கும் பெரிய கண்களும், கூர்மையான நாசியும், ஸ்ட்ராபெர்ரி பழம் போல் உதடும், கொளுகொளு கன்னமும், இடுப்பிற்கு மேல் வரை இருந்த முடியை மொத்தமாக சேர்த்து போனி டைல் போட்டு, ஒல்லியான தேகத்துடன் பார்க்க பொம்மை போல் இருந்தாள். அனைவரும் அவள் அழகை மெச்சுதலாக பார்த்தனர்.

"பாட்டி", என்று கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.

"என் தங்கம்.. ராசாத்தி.. அழகு சிலை மாதிரி இருக்கா", என்று நெற்றிமுறித்தார்.

"பேபிடால் இவங்க தான் உன் பெரிய பாட்டி, உன் பெரிய தாத்தா, என்னோட அப்பா அம்மா", என்று நேசமணி மற்றும் அபிராமியை குணா அறிமுகம் செய்தார்.

"தாத்தா ", என்று அவரையும் அணைத்து முத்தமிட்டு விலகினாள்.

"அட என்னடா நம்ம புள்ள இப்படி எச்சு பண்ணுது", என்று முக சுலிப்புடன் கண்டிப்பான குரலில் குணாவை பார்த்தார்.

"அப்பா அவ அன்ப பொழியிறா", என்றார் தயங்கியபடி.

அதற்குள் பேபி
டால் பெரியவர்கள் எல்லாரையும் கட்டியணைத்து முத்தமிட்டு வந்தாள்.
"பேபிடால் நாங்க முதல்ல பிளசிங் வாங்குறோம் நீ அதுக்கு அப்புறம் எல்லார் காலுலையும் விழுந்து பிளசிங் வாங்கனும் சரியா ", என்று அகிலா குணாவுடன் சேர்ந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்.பேபிடாலும் அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

"சரி சரி வாங்க நாம உள்ள போகலாம்", என்று வேதா(இரண்டாவது பாட்டி) உள்ளே அழைத்துச் சென்றார்.

"பாட்டி உங்களுக்கு தானே!! உடம்பு சரியில்ல டாட் என்னோட மெடிக்கல் பாக்ஸ்", என்று அபிராமியின் நாடியை பிடித்து பார்க்க ஆரம்பித்தாள்.

குணா வேலையால் எடுத்துட்டு வந்த பெட்டியை வாங்கி அவள் பொருளை எடுத்துக் கொடுத்தார். பேபிடால் ஸ்டெதஸ் கோபை போட்டுக்கொண்டு மருத்துவராக தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

"அண்ணா அபி டாக்டரா", என்றார் முல்லை( நாயகியின் இரண்டாவது அத்தை).

"இவ அபி இல்ல அண்ணி பேபிடால், அபி ஆபிஸ்ல தீடிர்னு ஒரு பிரச்சன அவ ரெண்டு நாள்ல வந்துருவா, இவ சின்னவ டாக்டர்", என்றார் அகிலா. அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது இவள் அபி இல்லை என்பது.

"கிவ் மீ கிராணி ரிப்போர்ட்".

"பேபிடால்", என்றார் அகிலா கண்டிப்பான குரலில்.

"பாட்டியோட ரிப்போர்ட் தாங்க", என்றாள் தன்னை திருத்திக் கொண்டு. அதற்குள் ஓர் இளம் யுவதி அவளிடம் வந்து ரிப்போர்ட்டை கொடுத்தாள்."தேங்க்யூ", என்று சிரிப்புடன் வாங்கி பார்க்க ஆரம்பித்தாள்." பாட்டி சுகர் அதிகமா இருக்கு, பிபி இருக்கு நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும், ஸ்ட்ரெஸ் ஆகாதிங்க", என்றாள் சிரிப்புடன் .

"பாட்டி மனச போட்டு குழப்பிக்க கூடாதுன்னு சொல்றா", என்றாள் அந்த யுவதி.

"நீங்க எல்லாரும் வரணும் உங்கள பாக்கணும்னு தான் உசுர கையில்ல பிடிச்சுகிட்டு இருந்தேன், இப்பதான் வந்துட்டீங்கள இனிமே எனக்கு எந்த கவலையும் இல்ல", என்றார் பாட்டி முந்தானையில் கண்ணீரை துடைத்தபடி.

"ஓ... பாட்டி டோன் க்ரை", என்று கண்ணீரை துடைத்து அணைத்து விடுவித்தாள். பாட்டி மற்றும் தாத்தா மார்கள் பேந்த பேந்த முழித்தனர்.

"பாட்டி உங்கள அழ வேணாம்னு சொல்றா", என்றாள் அந்தப் பெண் சிரிப்புடன்.

"யா யா கரெக்ட்", என்று சிரிப்புடன் எழுந்தாள்.

"பேபிடால்", என்றார் அகிலா. பேபிடால் முழித்தாள்.

"சரி சரி எல்லாரும் வேலையை பாருங்க, கோவில் திருவிழா வேற வரப்போகுது எங்களுக்கு வயல்ல வேலை இருக்கு குணா மருமகளே!! ஓய்வெடுங்க போங்க", என்று நேசமணி வெளியே சென்றார். அவரின் இரு தம்பிகளும் நாய்க்குட்டியை போல் பின்னாலே!! சென்றனர்.

"அண்ணா இவ என் பொண்ணு சந்தியா, சந்தோஷ் குளிக்கிறான் போல", என்று தனா அறிமுகம் செய்தார்.

குணா பாசத்துடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு," என்ன படிக்கிற டா??", என்றான் மகிழ்ச்சியுடன்.

"எம்எஸ்சி முடிச்சுட்டேன் குணாப்பா", என்றாள் சிரிப்புடன்.

அகிலா அவளை அணைத்து விடுவித்து," உங்க எல்லாரையும் பார்க்க முடியலன்னு நாங்க வருத்தப்படாத நாளே இல்ல", என்றார் சோகமாக.

"மீ ஓல்ட் மெமரிஸ்", என்று ஆரம்பிக்கும் போதே,அகிலா முறைத்தார்." ஈஈஈ.. ஓய்?? ச்ச.. எதுக்கு பழசெல்லாம் பேசிகிட்டு???", என்றாள். அனைவரும் சிரிப்புடன் அவளை அணைத்து பாசமாக பேசினர்.அபிராமி ஸ்வீட் எடுத்து வந்து கொடுத்தார்.

"ஹேய்!! மாம்ஸ் ரெண்டு பேரும் அங்க ஏன் நிக்கிறீங்க??? இங்க வாங்க", என்றாள் சந்தியா சத்தமாக. இரு இளைஞர்கள் பேபிடாலை பார்த்தபடி வந்தனர்.

"பசங்களா மாமா அத்த வந்திருக்காங்க பேசிட்டு இருங்க நாங்க சமைக்கப் போறோம்", என்றார் வேதா.

"அத்தை நானும் வரேன்", என்றார் அகிலா வேகமாக.

"இல்லமா பசங்க எல்லாம் இப்ப தான் குளிச்சுட்டு இருக்காங்க, அவங்கள பாருங்க, முதல்ல உங்களுக்கு ஜூஸ் அனுப்புறேன் பேத்தி முகமே!! சோர்வா இருக்கு ", என்று அரசி(மூன்றாவது பாட்டி) உள்ளே வேகமாக சென்றார். அவருடனே!! வேதாவும் அபிராமியும் சென்றார்.

"அண்ணே!! இவன் என் ரெண்டாவது பையன் தேவ விருபன், முத பையன் தேவ துருவன் அவன் குளிச்சுட்டு இருப்பான்னு நினைக்கிறேன், துருவாவ உங்களுக்கு ஞாபகம் இருக்குல்லணா", என்றார் பார்வதி(நாயகியின் முதல் அத்தை) சிரிப்புடன்.

"எப்படி மறக்க முடியும் பார்வதி?? நம்ம வீட்டோட முதல் வாரிசு என் மடியில தானே!! அவனுக்கு உட்கார வச்சு காது குத்துனது, அவன் இங்க வந்தாலே!! என் கூட தானே!! இருப்பான்", என்றார் சந்தோஷமாக பழைய நினைவுடன்.

"ஆமாண்ணே!! அவன இறக்கி விடவே!! மாட்டிங்க தூக்கிட்டே!! சுத்துவீங்க", என்றார் சிரிப்புடன்.

"அண்ணே!! இவன் என் பையன் தேவரிஷி", என்றார் முல்லை சிரிப்புடன்.

"அண்ணா எனக்கு ஒரு பொண்ணு மட்டும் தான் பேரு மித்ரா, காலேஜ் ஃபர்ஸ்ட் இயர், சந்தியா மித்ராவ அழைச்சுட்டு வா", என்றார் மல்லிகா(நாயகியின் மூன்றாவது அத்தை) சந்தியா உள்ளே சென்றாள்.

"அண்ணே! நா மில்லுக்கு போறேன் கால் வந்துருச்சு லோடு ஏத்தணும் நீங்க ரெஸ்ட் எடுங்க", என்றார் தனா.

"நானும் வரேன் டா", என்றார் வேகமாக.

"அண்ணே!! இன்னைக்கு தான் வந்திருக்கீங்க நாங்க பாத்துக்குறோம், நாளைக்கு வாங்க", என்றார் ராஜா.

"சரி", என்றதும் இருவரும் கிளம்பி சென்றனர்.

”மாமா நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க அப்புறமா இந்த வேலையெல்லாம் பார்க்கலாம்", என்றார் தனாவின் மனைவி செல்வி(நாயகியின் முதல் சித்தி).

"என்னைய மன்னிச்சிடு மா", என்றார் வருத்தமாக.

"மாமா பழசுல எதுக்கு?? அத விடுங்க எல்லாரும் இப்ப ஒன்னா இருக்கோம், நா உள்ள போய் அத்தைக்கு ஹெல்ப் பண்றேன் தனியா வேலை பாப்பாங்க".

"மாமா சந்தோஷமா இருங்க, பல வருஷம் கழிச்சு உங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க, உங்களுக்கு பிடிச்சது எல்லாம் உள்ள தடபுடலா ரெடி ஆயிட்டு இருக்கு, எங்களுக்கு ஒரு பையன் மட்டும் தான் பேரு அபிநந்தன். நா போயி நந்துவ எழுப்புகிறேன் இல்லானா எழுந்திருக்கவே!! மாட்டான்", என்றார் ராஜாவின் மனைவி வனிதா(நாயகியின் இரண்டாவது சித்தி) சிரிப்புடன்.

குணாவும் அகிலாவும் சிரிப்புடன், "சரி", என்றனர் வனிதா மேலே சென்றார். செல்வி நாத்தனார் மூவரையும் அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றார்.

"மாமா பொண்ணுன்னு சொல்லி ஒரு டால அழச்சுட்டு வந்துருக்காரு டா ", என்றான் விரு மெதுவாக.

"ஆமா!! என்ன அழகு!!! அமெரிக்கால இருந்து தானே வந்துருக்கா, ஒரு ஹக் பண்ணுறாளா பாரு அப்படியே நின்னு வீட்டை வேடிக்கை பார்க்குறா", என்று ரிஷி மெதுவாகப் புலம்பினான்.

"டேய்!! தள்ளுங்க டா முதல்ல, தங்கச்சி!!! ", என்று இருவரையும் தள்ளிவிட்டு வந்தான் சந்தோஷ். பேபிடால் குழப்பமாகப் பார்த்தாள்.

"பெரியப்பா!! நா தான் சந்தோஷ், பேபிமா!! உன் அண்ணா டா", என்றான். பேபிடால் அவனை அணைத்து விடுவித்தாள். இருவர்(விரு,ரிஷி) காதிலும் புகை வந்தது‌.

"குணாப்பா இவ தான் மித்ரா", என்று சந்தியா அறிமுகம் செய்தாள்.

"வாடா", என்று அகிலா அணைத்து விடுவித்தார்.

"அத்த எனக்கு என்ன வாங்கிட்டு வந்துருகீங்க??", என்றாள் ஆர்வமாக.

"உனக்கு நிறைய வாங்கிட்டு வந்திருக்கோம் டா", என்றார் குணா சிரிப்புடன்.

"தேங்க்யூ மாமா ", என்று அணைத்து விடுவித்தாள். குணா விரு மற்றும் ரிஷியை சிரிப்புடன் பார்த்தார் இருவரும் சிரித்தபடி நின்றனர்.

"மாமா!!", என்று ஓர் இளைஞன் வந்தான்.

"நீ துருவா தானே?!", என்று அணைத்தார்.

"ஆமா மாமா!! வாங்க அத்த!! ஹாய் அபி!! ", என்றான் விலகிச் சிரிப்புடன்.

"இவ அபி இல்ல, என் இரண்டாவது பொண்ணு பேபிடால், பேபிடால்!! இவங்க எல்லாரும் உன் கசின்ஸ் ", என்று அறிமுகம் செய்தார் குணா.

"அக்கா..", என்று ஓர் இளைஞன் வேகமாக ஓடி வந்தான். பேபிடால் பயத்துடன் குணாவை அணைத்துக் கொண்டாள்.

"டேய்!! நாயே!! பயந்துட்டா டா ", என்று துருவா மற்றும் சந்தோஷ் அவன் முதுகில் இரண்டு அடி போட்டனர்.

"அட மாம்ஸ், அண்ணா டோன்ட் டிஸ்டர்ப் மீ அக்கா நா தான் உன் ஒரே தம்பி நந்தன் கம் கா", என்றான் கையை விரித்து.

பேபி டால் குணாவை நிமிர்ந்து பார்த்தாள்." போடா", என்றார் சிரிப்புடன்.

பேபிடால் கண்கள் மின்ன சிரிப்புடன் அவனை அணைத்து விடுவித்து அவன் தலையை களைத்து விட்டாள். "மீ ஹி இஸ் மை லிட்டில் பிரதர் பட் ஹி லூக்ஸ் லைக் பிக்கர் தன் மி( இவன் என் தம்பி ஆனா இவன் என்னைய விட பெரியவன் மாதிரி இருக்கான்) ", என்றாள் குறும்பாக.

நந்தன் பாவமாக பார்த்தான். சிறியவர்கள் அவனை பார்த்து கேலியாக சிரித்தனர்."பேபிடால் நாம வீட்ல இருக்கோம் டோன்ட் ஸ்பீக் இன் இங்கிலீஷ்", என்றார் அகிலா முறைப்புடன்.

"சாரி மீ", என்றாள் காதைப்பிடித்து கெஞ்சலாக.

"ஐயா அம்மா ரூம்ல பெட்டி வைச்சுட்டேன்", என்றார் வேலையால் ஒருவர் வந்து. வேலையால் இன்னொருவர் அனைவருக்கும் வந்து ஜூசை குடித்து விட்டு சென்றார்.

"மீ", என்றாள் பாவமாக.

"நா ரெஃபிரஷ் பண்ண போறேன் பேபிடால் நீ தமிழ்ல பேசுனா என்கிட்ட பேசலாம்", என்று உள்ளே சென்றார்.

"டாட் யூவர் ஒய்ஃப் வெரி பேட் அண்ட் டூ ஸ்ட்ரீட் சேஞ்ச் யுவர் ஒய்ஃப் ஐ நீட் நியூ மாம்", என்றாள் குறும்பாக.

"அகிமா பேபிடாலுக்கு ஏதோ!! டவுட் கேட்குற பாரு ", என்றார் கிண்டலாக. அனைவரும் சத்தமாக சிரித்தனர். பேபிடால் பாவமாக பார்த்தாள்.

"துருவா என்ன பண்ணிட்டு இருக்க??", என்றார் பாசமாக அவன் தலை முடியை கோதி.

"நா ஆர்க்கிடெக்சர் மாமா டெல்லில சொந்தமா நானு, விரு, ரிஷி சந்தோஷ் நாலு பேரும் சேர்ந்து கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி வச்சு இருக்கோம்", என்றான் சிரிப்புடன்.

"ரொம்ப சந்தோஷம் டா இந்த சின்ன வயசுல நாலுபேரும் ஒண்ணா கம்பெனி வச்சி நடத்துறீங்க", என்று நான்கு பேரையும் மனதார பாராட்டினார்.

"ஐயா உங்கள பெரியய்யா வயலுக்கு வர சொன்னாரு", என்றார் வேலையாள் ஒருவர் வந்து.

"சரி இருங்க வரேன், பேபிடால பாத்துக்கோங்க நா போயிட்டு வந்துடுறேன், பேபிடால்",என்றார் அவளை பார்த்து.அவள் கண் மூடி திறந்தாள். அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.

"ஹாய்!! பேபிடால் நா விரு, நா ரிஷி", என்று கோரசாக இருவரும் வேகமாக கைவிரித்தனர். பேபிடால் குழப்பமாக இருவரையும் பார்த்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

"ஏய்!! மாம்ஸ் கைய கீழ இறங்குங்க", என்றாள் சந்தியா எரிச்சலுடன்.

"என்ன மாம்ஸ் டைட்டானிக் மூவி டப்பிங் பண்ண போறீங்களா???", என்றான் நந்து கிண்டலாக.

"ஹீரோ இங்கதான் இருக்கேன் டா ஹீரோயின் தான் வராம நிக்கிறா", என்றான் விரு பேபிடாலை பார்த்து.

"ஏய்!! ரெண்டு பேரும் என்னைய ஹக் பண்ண தான் இப்படி நினைக்கிறீங்களா???".

இருவரும் வேகமாக தலையை ஆட்டினர். மற்றவர்கள் சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டனர்.
"நோ.. நோ...", என்று இங்கிலீஷில் பேச வந்தவள், அகிலா அந்த பக்கம் போவதை பார்த்ததும்," எனக்கு தோணுனா தான் பண்ணுவேன் நீங்க ரெண்டு பேரும் வெரி பேட்", என்றாள் சிரிப்புடன்.

"ஹேய்!! நீ பான் இன் அமெரிக்கா தானே!!", என்றான் ரிஷி வேகமாக.

"ஆமா".

"மித்ரா.. சந்தியா..", என்று மூன்று இளம் பெண்கள் வீட்டிற்குள் வந்தனர்.

"ஹாய்", என்று இருவரும் வரவேற்றனர்.

"துருவா மாமா எப்ப வந்தீங்க??? எப்படி இருக்கீங்க??", என்றாள் அதில் ஓர் பெண் சிரிப்புடன்.

"நல்லா இருக்கேன் நைட் தான் வந்தேன், நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க??", என்றான் மூவரையும் பார்த்து.

"நல்லா இருக்கோம் மாமா".

"எம்மா பாப்பா நாங்களும் இங்கதான் இருக்கோம் ", என்றான் விரு கிண்டலாக.

"ஹாய் மாம்ஸ்", என்று இருவரையும் பார்த்து சொல்லி விட்டு," ஆமா இந்த பொண்ணு யாரு??", என்றனர்.

"இவ எங்க பெரிய மாமா பொண்ணு பேபிடால்", என்றாள் மித்ரா வேகமாக.

"ஓ..", என்றனர் அவளை அளவிட்டபடி.

"பான் இன் அமெரிக்கா", என்றான் நந்து நக்கலாக மூவரையும் பார்த்து.

"இருந்துட்டு போகட்டும் அதுக்கு என்ன??", என்றாள் அதில் ஒருவள் அவனை முறைத்துக் கொண்டே.

"ஆமா இவள ஏன் மூணு பேரும் முறைக்கிற மாதிரி பாக்குறீங்க???", என்றான் சந்தோஷ் புரியாமல்.

"அது அண்ணா இந்த பொண்ணு செம்ம ஃபிகரா இருக்குல, பொம்ம மாதிரி அதான் உத்து பார்த்தோம்", என்றாள் ஒருவள் வெகுளியாக.

"சந்தோஷ் கேன் யு ப்ளீஸ் கிவ் சம் சப்டைட்டீல்", என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

"பெரியம்மா பேபிடால் இங்கிலீஷ்ல பேசுறா ", என்றான் நந்து சத்தமாக. அவனை முறைத்தாள். அனைவரும் சிரித்தனர் வந்த மூன்று பெண்களை தவிர.

"இவளுக்கு தமிழ் அவ்வளவா தெரியாது", என்று அந்தப் பெண்களை பார்த்து சொல்லிவிட்டு," "பேபி நீ ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கியாம், அப்படியே!! டால் மாதிரி வெறி பிரிட்டி, தேவதை மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க", என்றான் துருவா சிரிப்புடன் பொறுமையாக.

"ரியலி", என்றாள் சந்தோசமாக அவனைப் பார்த்து.

"ஆமா ஏஞ்சல்", என்றான் அவள் மூக்கை பிடித்து லேசாக ஆட்டி.

"தேங்க்யூ", என்று மூவரையும் அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.

மூவரும் அதிர்ச்சியுடன் தன் கன்னத்தை தடவி பார்த்தனர். சந்தியா மற்றும் மித்ரா அதிர்ச்சியோடு பார்த்தனர்.

"ஹேய்!! பேபிடால் உன்னால இந்த ஊரு பொண்ணுங்க மூணு பேருக்கும் வேப்பில அடிக்கணும் போலயே!!", என்றான் நந்து கிண்டலாக.

"டேய்!! கம்முனு இருடா, ஒன்னும் இல்ல டா பேபி", என்றான் சந்தோஷ் சமாதானமாக.

"அட என்னமா இப்படி பண்ணுறீங்களே!! மா", என்றான் விரு பேபிடாலை கிண்டலாக பார்த்து.

"என்ன பண்ணுனேன் விரு", என்றாள் புரியாமல்.

"நல்லா கேட்ட போ, கேட்ட எங்களுக்கு தராமா கேக்காத அவங்களுக்கு குடுத்துட்டியே!! ", என்றான் ரிஷி பொய்யான சோகத்துடன்.

"நீ கிஸ் பண்ணுனதுல்ல அவங்க மூணு பேரும் பயந்துட்டாங்க, இங்க இதெல்லாம் புதுசு அமெரிக்கா மாதிரி இங்க கிடையாதுடா", என்றான் துருவா பொறுமையாக.

"என்னால பயந்துட்டாங்களா?? நா சாரி கேக்குதா??", என்றாள் பாவமாக.

"கிப்ட் கொடுத்ததுக்கு யாராச்சும் சாரி கேப்பாங்களா ?? ம்ம்", என்றான் அவள் முகத்தில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு.

"துருவா மாமா இதெல்லாம் ஓவரு முத்தம் கொடுத்தது எங்களுக்கு", என்றாள் அதில் ஓர் பெண் கிண்டலாக.

"அவ குழந்தை மாதிரி அங்க இருக்குறதுக்கும் இங்க இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அதான் பொறுமையா சொல்றேன், சரி அத விடுங்க இந்த பெண்கள் பட்டாலம் எங்கே!! போகுது", என்றான் கிண்டலாக.

"மாமா உங்களுக்கு விஷயமே!! தெரியாதா?? நம்ம தாத்தாவுக்கு பங்காளி வீட்ல இருக்க அண்ணாவுக்கு ரெண்டு நாள்ல மேரேஜ்", என்றாள் சந்தியா.

"அதுக்குதான் நாங்க எல்லாரும் போறோம் அண்ணா", என்றாள் மித்ரா.

"சந்தியா.. மித்ரா.. பேபிடால கூட அழைச்சுட்டு போங்க, எங்களுக்கு ஆபீஸ் ஒர்க் இருக்கு, வெளியில போற வேலையும் இருக்கு சோ நாங்க வீட்டுல இருக்க மாட்டோம்", என்றான் சந்தோஷ்.

"சரி", என்றவர்கள் அகிலாவிடம் அனுமதி வாங்கி அவளை அழைத்து சென்றனர்.

குணா எதற்காக செல்வியிடம் மன்னிப்பு கேட்டார்??? கல்யாணத்திற்கு போகும் இடத்தில் பேபிடாலுக்கு பிரச்சனை வருமா???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....

யாசிப்பு தொடரும்......

அறிமுகம்

யாசிக்கிறேன் உன் காதலை - 2

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை-1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN