review - உன் காதலில் வெண்பனியாய் நான் உருக

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Hiii friends

இதோ அடுத்த கதையின் விமர்சனத்துடன் நான் வந்து விட்டேன்.
வெளிநாட்டு வாழ்வு தான் மேம்பட்டது என்று france ல் வாழ்பவன் ஹீரோ அஷ்வத். அதுவும் பார்க்க வெள்ளைக்காரன் மாதிரியே இருக்கான் பா.
இந்தியாவில் எங்கோ மலைவாழ் பெண்ணாகப் பிறந்தாலும் தன்னம்பிக்கை தைரியத்துடன் படிப்பு ஒன்றே குறி என்று வாழ நினைப்பவள் ஹீரோயின் கருங்குழலி. பெயருக்கு ஏற்ற மாதிரி நல்ல கருப்பி.
இவர்கள் இருவருக்கும் என்ன உறவு அது எப்படி ஏற்படுகிறது?
போட்டோகிராபரான அஷ்வத்துக்கு ஒரு பெண்ணின் கண்ணால் ஏற்படும் பாதிப்பு என்ன?
இதற்கிடையில் தஞ்சாவூரில் வரும் கிராமம் அங்கிருக்கும் தாத்தாவுக்கும் அஷ்வத்துக்கும் என்ன உறவு?
அவருக்கு மட்டுமில்லை அஷ்வத்துக்கும் சின்னாவுக்கும் என்ன சம்மந்தம்?
சாராவுக்கும் கருங்குழலிக்கும் என்ன சம்மந்தம் போன்ற பல கேள்விகளுடன் நிற்கிறது கதை.
விவசாயத்தைப் பற்றி கொஞ்சம்,
அன்பு பாசம் குடும்பம்னா என்ன,
அதிலும் தான் செத்தாலும் தன் மண்ணில் தான் உயிர் போக வேண்டும் என்று துடிக்கும் தாத்தா, அவருக்கும் அவர் பேரனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம்,
காதலிக்கும் காதலனுக்கும் நடக்கும் காதல் போராட்டம் என்று பல சுவாரசியங்களுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர்.
அது என்ன கதைனு கேட்குறீங்களா?
யுவனிகா சகோதரியின்

" உன் காதலில் வெண்பனியாய் நான் உருக" தான் அந்த கதை.

ஆனால் amazon Kindle ல் மட்டும் தான் இருக்கு friends.

இதோ லிங்க் - https://www.amazon.in/dp/B07XLHTFRY/ref=cm_sw_r_wa_awdb_t1_xQqrEbHE6G2T2

நீங்களும் படித்து மகிழுங்கள்.

Happy reading friends.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN