Home
Yayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
Yuvanika Completed Novels
உன்னுள் என்னைக் காண்கிறேன்...
உறவாக வேண்டுமடி நீயே...
சாதி மல்லிப் பூச்சரமே!!!
என்னைத் துரத்தும் உன் நினைவுகள்....
உன் காதலில் வெண்பனியாய் நான் உருக...
நீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே..
எந்தன் முகவரி நீயடி..
இமை தேடும் ஈரவிழிகள்...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
Forums
New posts
Search forums
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Yayayuvanika Novel
Yayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
நெஞ்சம் 4
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

வேலை முடிந்து வந்ததிலிருந்து மகனின் முகம் வாடியிருப்பதை இப்படியும் அப்படியும் நொடிக்கு ஒரு முறை நடந்து கவனித்துக் கொண்டிருந்தார் தமிழரசி. வீட்டில் அணியும் இலகு உடையான கையில்லாத பனியன் மற்றும் கைலிக்கு மாறியிருந்தவன் வந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் கூடத்தில் உள்ள சுவற்றில் சாய்ந்து.. இடது காலை நீட்டி, வலது கால் முட்டியில் ஒரு கையை தாங்கி அமர்ந்திருந்தான்.

எப்போதும் விதுனதிபாகரன் இப்படி இருப்பவன் அல்ல. வந்ததும் அன்றைய நிகழ்வுகளைத் தாயிடம் கேட்டு, தங்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வீட்டுப் பாடம் முடிக்க உதவுவான். ஆனால் இன்று... அவனிடம் எந்த அசைவும் இல்லை. அமர்ந்தவன் அமர்ந்தவன் தான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தமிழரசி, “என்ன திபா... உடம்புக்கு என்ன செய்து... அப்பா ஞாபகமா?...” காலையில் மருமகளைப் பற்றி பேசியது எல்லாம் மறந்து போக, கணவனைப் பற்றி அவர் கேட்க... எதற்கும் பதில் தரவில்லை மகன். அதே அமைதி அவனிடம்.

“என்ன கண்ணா... நீ இப்படி இருந்து நான் பார்த்தது இல்ல... பெத்தவ மனசு தவிக்குது. சரி செய்ய முடியாததுன்னு எதுவும் இல்ல திபாகரா... உன் அப்பா இழப்பையே நாம தாண்டி வந்திடலையா... அதனால, நீ கலங்காத...” பெரியவள் எடுத்துச் சொல்ல

உடனே, தாயின் மடியிலேயே தலை சாய்த்துக் கொண்டான் தமையன். கண்கள் கலங்க தாயின் கரங்கள் மகனின் கேசத்தை வருடியது.

“எல்லாம் சரியாகிடும் தம்பி... அப்பன் முருகன் கை விடமாட்டான் ராசா...” என்னவென்று தெரியாமலே மகனுக்கு ஆறுதல் அளித்தது அந்த தாய் உள்ளம்.

அண்ணன் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டதும் தங்கைகளுக்கு தாங்கவில்லை. “அண்ணா... இந்த சுடிதாரை அந்த டைலர் அக்கா சரியாவே தைக்கல ணா... நீ ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கி தந்தது... வா ண்ணா ஒரு எட்டு கடைக்குப் போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்...” சித்ரா, தமையனின் மனதை மாற்ற முயற்சிக்க...

“நாளைக்குப் போகலாம் சித்ரா...” தாய் மடியிலிருந்து முகத்தை நிமிர்த்தாமலே பதில் அளித்தான் இவன்.

இதற்கு மேல் என்ன செய்வது... என்ன பிரச்சனை என்று யாரும் அவனை கேட்டு நச்சரிக்கவில்லை... அதே சமயம் தமையனை இப்படி காணவும் யாருக்கும் மனமில்லை.

“அண்ணா இந்த தவமதியைப் பாரேன்... என்னை, வீட்டுப் பாடமே எழுத விட மாட்றா... நான் ரெக்கார்ட் நோட் முடிச்சிட்டேன் ணா. ஆனா இவ முடிக்காம... என்னை வரைந்து தர சொல்லி தொந்தரவு செய்றா... கொஞ்சம் மிரட்டு ணா இவளை...” குலமதி, தங்கையை போட்டுக் கொடுக்க

அங்கு கூடத்தில் அமர்ந்து தான் இருவரும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இரட்டையர்கள் என்றாலும் முதலில் குலமதி பிறந்ததால் அக்கா ஸ்தானத்தை அவள் பிடித்துக் கொண்டாள்.

“அண்ணா... எனக்கு சரியாவே வரைய வர மாட்டுது. இவளும் வரைந்து தர மாட்றா... அட்லீஸ்ட் நீயாவது வரைந்து தா ண்ணா...” தவமதி கெஞ்ச

அந்த கெஞ்சல் அவனிடம் வேலை செய்தது. எழுந்து அமர்ந்தவன்... முதலில் எந்த பேச்சற்று தங்கைக்கு வரைய ஆரம்பித்தவன்.... பின் மெல்ல மெல்ல மற்றவர்களின் பேச்சிலும் கலந்து கொண்டான். அவனுக்கு தன் குடும்பத்தை நினைத்து பெருமையாய் இருந்தது. மறுநொடியே இப்படி ஒரு பாசத்தில் உருவான தன் குடும்பத்தில் தன்னவளும் இல்லையே என்று மனைவியைத் தான் தேடியது இவன் மனது.

இரவு உணவையும் வீட்டில் உள்ளவர்களுக்காக பேருக்கென்று தான் உண்டான். அந்நேரம், “அண்ணா அடுத்த வாரம் எங்களுக்கு பிறந்த நாள் வருது. நீ தான சொன்ன... வெளிநாட்டிலிருந்து வந்த உடனே அதை சிறப்பா கொண்டாடலாம்னு...” குலமதி அவனுக்கு நினைவுபடுத்த

“அதுக்கு என்ன.. சிறப்பா கொண்டாடிடலாம் குலமதி. முதலில் வீடு மாற்றுவோம்.... அப்புறம் உங்க அண்ணி வந்திடுவா... எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடிடலாம்....”

தமையனின் பதிலில் “ஹேய்... தன்யா அண்ணியா ண்ணா?” குலமதி ஆர்வமாய் கேட்க

“உங்களுக்கு வேற அண்ணி இருக்காளா என்ன?” இவன் மறு கேள்வி கேட்க

“ஹை!... அப்போ தன்யா அண்ணி தான் டி. அண்ணா.. அண்ணியை உன் கல்யாணத்தன்னைக்கு பார்த்தது. அதுக்குப் பிறகு பார்க்கவேயில்ல. எனக்கு அவங்க முகமே மறந்து போயிடுச்சு ண்ணா...” தவமதி தன் மனதை சொல்ல

‘ஆனா எனக்கு அந்த மாசுமருவற்ற குழந்தை முகம் மறக்கவே மறக்கல...’ என்று கூக்குரல் இட்டது இவன் மனது. அதன் பின் மனைவியின் நினைவுகள் அவனை அழுத்த... அங்கு மூச்சு முட்டவும், தன் படுக்கையை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான் இவன்.

இங்கு, பலதரப்பட்ட குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய்.. கீழே குடியிருக்கும் ஆண்கள் பல பேர் மாடியில் படுக்கையை விரித்து... போனில் பாட்டு கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். தந்தை இருந்தவரை... திபாகரனுக்கும் இரவு படுக்கை இங்கு தான். நன்றாக கொட்டம் அடித்து விட்டு பின்னே தான் அனைவரும் உறங்குவார்கள். அதில் சிறுவர், சிறுமிகளும் உண்டு.

ஆனால் தற்போது பெண் பிள்ளைகளை யாரும் இங்கு உறங்க அவரவர் வீடுகளில் அனுமதிப்பது இல்லை. நம்பிக்கை இல்லை என்பதை விட இப்போது நாடு இருக்கும் சூழ்நிலையில்... பயம் தான் பெண்ணைப் பெற்றவர்களை ஆட்டிப் படைக்கிறது.

விதுனதிபாகரனைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் ஆளாளுக்கு அவனிடம் நலம் விசாரித்து.. கதை பேசினார்கள். அப்படி அவர்கள் பேசியது எல்லாம் அவனின் மாமனார் மகிழ்வரதனின் புகழையும்... மனைவியின் உடல் நலனைப் பற்றிய விசாரிப்பாக இருக்கவும் மேற்கொண்டு அங்கு உறங்க பிடிக்காமல் கீழே தங்கள் பகுதிக்கே வந்து விட்டான் இவன்.

இவன் வாசல் கதவைத் தட்ட.. கூடத்தில் படுத்திருந்த தமிழரசி கதைவைத் திறக்க... மகன் கூடத்தில் படுக்க பெட்ஷீட்டை விரிக்கவும், மகனைத் தடுத்து... பாயை விரித்தவர், “சூடா பால் எடுத்துட்டு வரேன்... குடிச்சிட்டு படு டா திபாகரா...” என்றவர், மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்று அவனின் உறக்கத்திற்கு இவர் பாலை மிதமான சூட்டில் எடுத்து வந்து கொடுக்க.. மகன் மறுக்காமல் வாங்கிக் கொள்ளவும், வேறு பேச்சு இல்லாமல் தமிழரசி சமையல் அறையில் படுக்கையை விரித்து உறங்க சென்று விட... தானும் படுக்கையில் சாய்ந்தான் இவன்.

ஆனால் நித்திரா தேவி தான் அவனை நெருங்கவில்லை. அவன் சிந்தனை முழுக்க... மாலையில் வக்கீல் வல்லவனிடம் பேசிய பேச்சிலே சுழன்றது.

“அப்ப உன் மனைவி தர தண்டனையை ஏத்துக்க...” அவர் வைத்த வாதத்தில் இவன் நிலைகுலைந்து தான் போனான்.

‘நான் செய்ததற்கு மன்னிக்க வேணாம்... அதற்காக ஆயுள் தண்டனையா?!...’ இவன் மனம் மருகியது.

“ஒருத்தன் பேசலை என்கிறதுக்காக... விவாகரத்து வரை அவ போகலாமா சார்?” இவன் ஆற்றாமையில் கேட்க

“இங்க தான் நீ மறுபடியும் தப்பு செய்ற திபாகர். சரி உன் வாதத்துக்கே வரேன்... இப்போ ஒண்ணும் நாம பண்டை தமிழர் மாதிரி ஒருவரை ஒருவர் பேசிக்க புறா விடு தூது காலத்தில் இல்ல... நொடிக்கு நொடி நம் மனதிற்கு விருப்பமானவர்களிடம் பேச, கையில் ஆன்ட்ராய்டு போன் இருக்கு.

இப்படிப் பட்ட காலத்தில்... தன்னிடம் பேசாத கணவன்... அவன் எங்கு இருக்கிறானே தெரியாது... அவன் உயிரோட தான் இருக்கிறானா... இல்ல வேறு ஒரு பெண் கூட வாழ்கிறானா... இது எதுவும் தெரியாது. எல்லாவற்றிக்கும் மேல் தன்னைப் பிடிக்கலையோ… தன்னிடம் உள்ள பிரச்சனையால் ஒதுங்கிட்டாரோ… ஒருவேளை அவருக்கு விவாகரத்தில் விருப்பமோ… அதை அவர் வாய் மொழியாக கேட்காததால் நாமே தந்திடலாம்... இதெல்லாம் நான் ஒரு வக்கீலா.. இல்லறத்தில் வாழும் ஒரு பெண் நினைக்க கூடியதைத் தான் சொன்னேன்.

ஆனா தன்யா விவாகரத்து கேட்ட காரணம் எனக்கு தெரியாது. ஏன்னு… நான் கேட்டாலும் தன்யா சொல்லாது...” இவர் தன் நீண்ட வாதத்தை வைக்க... அவனிடம் அதே அமைதி மட்டும் தான். பின்ன... அவர் வயதுக்கு எத்தனை குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருப்பார்.

“நான் அவள் மேல் வைத்த நேசம் உண்மை சார். அதே அளவு நேசம் அவளிடம் இருக்கும்ன்னு நினைத்து அவள் புரிந்து கொள்வானு தான... நான் அவ கிட்ட எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்...” இவன் ஒத்துக்கொள்ள

“உரியவரிடம் பகிர்ந்து கொள்ளாத நேசத்திற்கு ஆயுள் குறைவு திபாகர்...”

‘உண்மை தான்… உண்மை தான்... இவர் சொல்வது உண்மை தானே?...’ இருந்தாலும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அதற்காக விவாகரத்தா?...’

அவன் முகத்தை வைத்தே அவனின் மனதை அறிந்தவர் போல், “தன்யா இடத்தில் உன் தங்கை இருந்தால் உன் முடிவு என்னவாக இருக்கும் திபாகர்?...” அந்த ஒரு கேள்வி வந்தவனை ஆட்டிப் படைக்க.. சுத்தமாய் நொறுங்கிப் போனான் இவன். அப்போது தான், தான் செய்த தவறின் வீரியம் இவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவனுக்குள் ஒரு வேகம் பிறந்தது... அது மகிழ்வரதனின் மாளிகைக்குள் நுழைந்து... மனைவி மறுக்க மறுக்க... தன்னவளைத் தோளில் சுமந்து கொண்டு தன் வீடு வர வேண்டும் என்ற வேகம் தான் அது. அதன் விளைவே... இறுதியாய் தன்னுடைய முடிவை வக்கீல் வல்லவனிடம் எடுத்துரைத்து விட்டு வந்து விட்டான்.

தன்னவளுக்கு செய்த அநீதியை உணர்ந்த பிறகு அவனால் உறங்க முடியவில்லை. இங்கு இவன் தன்னவளின் நினைவில் இருக்க.. அங்கே இவன் ரிது டார்லிங்கோ... கணவனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பின நாளைப் பற்றிய நினைவில் இருந்தாள்.

ஒரு முறை மாமியார் அவளின் இல்லத்திற்கு வந்து போன பிறகு தன்யரித்விகாவின் மனமோ ரணமாகி போனது. ‘இன்னைக்கு மம்மி டாடி கிட்ட பேசியே ஆகணும்...’ முடிவு எடுத்தபடி இவள் கீழே வர... எதிர்பட்டாள் சோனியா. அவளிடம், “நான் இன்று மம்மி... டாடியைப் பார்க்கணும்...” என்று அறிவிக்க

“மேம்.... பாஸ் இன்னைக்கு ஈவினிங் துபாயிலிருந்து வராங்க. Sir will be here only... சோ may be நைட் உங்களுக்கு appointment fix செய்றேன்...” சோனியா எப்போதும் தன்யரித்விகாவின் தாய் சசிரேகாவை பாஸ் என்று தான் விளிப்பாள். இது சசிரேகாவின் உத்தரவு. அதே போல் மகிழ்வரதனை சார் என்று தான் விளிப்பாள்.

பெற்றவர்களிடம் பேச appointment வாங்கித் தரும் அந்த வீட்டு காரியதரசியை முறைக்காமல்.... சரி என்பற்கு அடையாளமாய் தலையசைத்து விட்டுச் சென்றாள் நம் நாயகி.

இரவு உணவுக்குப் பின் தான் தன் பெற்றோர்களை தன்யரித்விகாவால் சந்திக்க முடிந்தது. “என்ன விஷயம் தன்யா...” தந்தை மகளிடம் கேட்க

“உடம்புக்கு ஏதாவது செய்தா?...” தாய் விசாரிக்க... மகளிடம் மவுனம் மட்டுமே.

“லுக் தன்யா... இன்னைக்கு தான் நான் துபாயிலிருந்து வந்தேன்... i am so tired... ஏதோ பேசணும்னு தான எங்களைப் பார்க்க சோனியா கிட்ட சொல்லி இருக்க... ஸ்பீக் அவுட்...” தாய் அதட்ட

மகள், தந்தையை ஒரு பார்வை பார்த்தவள்… “எனக்கு விதுன் கிட்டயிருந்து விவாகரத்து வேணும்...” என்க

தந்தைக்கு அந்த "விதுன்" யார் என்று தெரிந்தது. ஆனால் தாய்க்கு தெரியவில்லை போல... விவாகரத்தை ஒரு பெண் யாரிடம் கேட்பாள்... “who is this... விதுன்?” சசிரேகா கேட்க

அங்கு மகள் முகத்தில் சலனமே இல்லை, “மை ஹப்பி மம்மி...” சின்னவள் நினைவுபடுத்த

“ஓஹ்... மகிழ் டியர்... அவன் பேரு என்னமோ தவாவோ... விபாவோன்னு சொல்லுவிங்களே... ஆனா அவன் பேரை நம் பேபி வேற ஏதோ சொல்றா....” ஏதோ தற்போது பெயர் தான் முக்கிய பிரச்சனை என்பது போல் சசிரேகா தன் கணவனிடம் கேட்டு வைத்தாள். இது தான் தன்யரித்விகாவின் தாய் சசிரேகா.. மருமகன் விஷயத்தில் அவளின் அலட்டல் எல்லாம் இவ்வளவு தான்.

“நம்ம மாப்பிள்ளை பேரு விதுனதிபாகரன்... அதைத் தான் உன்னை மாதிரி நம்ம மகளும் சுருக்கி... விதுன்னு சொல்றா...” மகிழ்வரதன் விளக்க

“அவன் பெயர் எதுவா இருந்தா என்ன... அட்லாஸ்ட் அவன் நம்ம தகுதிக்கு ஏற்றவனே இல்ல... இப்பொழுதாவது நம்ம பேபி புரிஞ்சிகிட்டாளே... சீக்கிரம் விவாகரத்தை வாங்கிக் கொடுங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மகிழ்... நான் தூங்கப் போறேன்... குட் நைட் மை ஸ்வீட் ஹார்ட்...” என்றவள், இவ்வளவு தானே என்பது போல் மகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகியிருந்தாள் சசிரேகா.

சின்னவள் தந்தையைக் காண, “எதுக்கு இந்த திடீர் முடிவு பேபி....” மகிழ்வரதன் மகளை விசாரிக்கவும்

“டாட்... i am not peaceful... முக்கியமா எனக்கு அமைதியான தூக்கம் வேணும்...”

மகளின் பதிலில் பரிவாய் அவளின் தலையைத் தடவி விட்ட மகிழ்வரதன், “ஓகே... நாளைக்கு வல்லவனை வந்து உன்னை சந்திக்க சொல்றேன்... அவன் கிட்ட பேசு... dont worry my child... எதுவாக இருந்தாலும் டாட் இருக்கேன்...” தந்தையின் பரிவான வார்த்தையில் கண்கள் கலங்க தலை அசைத்தாள் இவள்.

அன்று விவாகரத்து பற்றி பேசும்போதே... தன்யரித்விகாவின் பெற்றோர்கள் மறுப்பு சொல்லவில்லை. அப்படி மட்டும் விதுனதிபாகர், மனைவி கேட்ட விவாகரத்தை தந்து விட்டால்... மகளின் வாழ்வில் உள்ள அவன் தடத்தை எல்லாம் அழித்து... பெண்ணவளுக்கு புது வாழ்வு அமைத்து தர சித்தமாய் இருக்கிறாள் சசிரேகா.

இரவு முழுக்க உறங்காமல் விடியலில் தான் தன்னை மீறி கண்ணயர்ந்தான் விதுனதிபாகரன். தான் எழுந்ததும் மகனை ஒரு பார்வை பார்த்த தமிழரசி... அவன் உறக்கம் கெடாமல் இவர் தன் வேலைகளை கவனிக்க... நன்கு விடிந்தும்... தங்கைகளின் ஆரவாரத்திற்குப் பிறகுமே அசையவில்லை மகன்.

“யப்பா... திபாகரா... விடிஞ்சிடுச்சு பாரு... எழுந்திருப்பா சூடா காபி எடுத்து வந்திருக்கேன் எழுந்திரு...” தமிழரசி மகனை எழுப்ப, அவனிடம் அசைவே இல்லை.

என்னமோ ஏதோ என்று பயந்த அவர் மகனைத் தொட்டு உலுக்க... அவன் உடலோ நெருப்பாய் கொதித்தது. “ஐயோ... திபாகரா! என் புள்ள உடம்பு இப்படி அனலா கொதிக்குதே... நேற்று என் புள்ள கோட்டு சூட்டுனு வந்து நிற்கும் போதே நினைச்சேன்... எவ கண்ணு பட்டுச்சோ... என் புள்ள இப்போ கட்டையா கிடக்குறான்...

அடியேய் குலமதி... அந்த வெளி கூடத்தைக் கூட்டி மண்ணை எடுத்துட்டு வா. சித்ரா... சாமி விளக்க ஏத்திட்டு, அப்படியே கையோட விபூதியை எடுத்து வா. ஆத்தா மகமாயி... நான் தவமா தவமிருந்து பெத்த புள்ள டி இவன்... அவனுக்கு எந்த குறையும் கொடுத்துடாத. என் புள்ள உடம்பு இப்படி கொதிக்குதே ஏழுமலையானே... உனக்கு பாதயாத்திரை வரேன்... என் பிள்ளையோட பிணியைப் போக்கு...”

விதுனதிபாரனுக்கு இருந்த மன உளைச்சலில் வந்த சாதாரண காய்ச்சல் தான் இது. எம்மாடியோ! அதற்கே மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்து விட்டார் தமிழரசி. பின்னே அவர் தவமாய் தவமிருந்து பெற்ற மகன் இல்லையா... அதான் அளவு கடந்த பாசம் மகன் மேல்.

விபூதியை எடுத்து வந்து சித்ரா அண்ணன் நெற்றியில் பூசியவள்... “அம்மா... கொஞ்ச நேரம் அமைதியா இரு... காய்ச்சலில் அண்ணன் ஏதோ பினாத்துது...” என்றவள் தாய் அமைதியானதும்...

இவள் தன் காதை அண்ணன் உதட்டருகே வைத்து கேட்க, “ரிது டார்லிங்... ரிது டார்லிங்...” என்று அவன் முணுமுணுக்க

அவன் சொன்ன ரிது சித்ராவுக்கு சரியாக கேட்காமல் போக, “அம்மா.. அண்ணா, டார்லிங்... டார்லிங்னு பினாத்துது... எனக்கு தெரிந்து வெளிநாட்டில் ஒரு வெள்ளைக்காரியை உன் பிள்ள டாவு விட்டிருக்குன்னு நினைக்கிறேன். ம்மா… அப்படி மட்டும் இருந்தா நீ நினைக்கிற மாதிரி அந்த சீமாட்டி இந்த வீட்டுக்கு வரமாட்டா மா...” சித்ரா மகிழ்ச்சியாய் திட்டம் போட

“அடியேய்... நான் பெத்த மகளே.. என் புள்ள உடம்பு முடியாம இருக்கான்... உனக்கு அந்த சீம சித்தராங்கி தான் தெரியறாளா... போடி... போய் கார்த்திக் தம்பிக்கு போனை போடு... அண்ணனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகணும்...” தாய் உத்தரவு இட... அதை செய்ய விரைந்து ஓடினாள் மகள்.

மனைவி விவாகரத்து கேட்டதற்கே... இங்கு ஒருவன் தன்னிலை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கிறான்

... இவனாவது விவாகரத்து தந்து விடுவதாவது?...

[QUOTE="yuvanika, post: 5522, member: 4"] [JUSTIFY][B][SIZE=7]வேலை முடிந்து வந்ததிலிருந்து மகனின் முகம் வாடியிருப்பதை இப்படியும் அப்படியும் நொடிக்கு ஒரு முறை நடந்து கவனித்துக் கொண்டிருந்தார் தமிழரசி. வீட்டில் அணியும் இலகு உடையான கையில்லாத பனியன் மற்றும் கைலிக்கு மாறியிருந்தவன் வந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் கூடத்தில் உள்ள சுவற்றில் சாய்ந்து.. இடது காலை நீட்டி, வலது கால் முட்டியில் ஒரு கையை தாங்கி அமர்ந்திருந்தான்.[/SIZE][/B] [SIZE=7][B] எப்போதும் விதுனதிபாகரன் இப்படி இருப்பவன் அல்ல. வந்ததும் அன்றைய நிகழ்வுகளைத் தாயிடம் கேட்டு, தங்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வீட்டுப் பாடம் முடிக்க உதவுவான். ஆனால் இன்று... அவனிடம் எந்த அசைவும் இல்லை. அமர்ந்தவன் அமர்ந்தவன் தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தமிழரசி, “என்ன திபா... உடம்புக்கு என்ன செய்து... அப்பா ஞாபகமா?...” காலையில் மருமகளைப் பற்றி பேசியது எல்லாம் மறந்து போக, கணவனைப் பற்றி அவர் கேட்க... எதற்கும் பதில் தரவில்லை மகன். அதே அமைதி அவனிடம். “என்ன கண்ணா... நீ இப்படி இருந்து நான் பார்த்தது இல்ல... பெத்தவ மனசு தவிக்குது. சரி செய்ய முடியாததுன்னு எதுவும் இல்ல திபாகரா... உன் அப்பா இழப்பையே நாம தாண்டி வந்திடலையா... அதனால, நீ கலங்காத...” பெரியவள் எடுத்துச் சொல்ல உடனே, தாயின் மடியிலேயே தலை சாய்த்துக் கொண்டான் தமையன். கண்கள் கலங்க தாயின் கரங்கள் மகனின் கேசத்தை வருடியது. “எல்லாம் சரியாகிடும் தம்பி... அப்பன் முருகன் கை விடமாட்டான் ராசா...” என்னவென்று தெரியாமலே மகனுக்கு ஆறுதல் அளித்தது அந்த தாய் உள்ளம். அண்ணன் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டதும் தங்கைகளுக்கு தாங்கவில்லை. “அண்ணா... இந்த சுடிதாரை அந்த டைலர் அக்கா சரியாவே தைக்கல ணா... நீ ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கி தந்தது... வா ண்ணா ஒரு எட்டு கடைக்குப் போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்...” சித்ரா, தமையனின் மனதை மாற்ற முயற்சிக்க... “நாளைக்குப் போகலாம் சித்ரா...” தாய் மடியிலிருந்து முகத்தை நிமிர்த்தாமலே பதில் அளித்தான் இவன். இதற்கு மேல் என்ன செய்வது... என்ன பிரச்சனை என்று யாரும் அவனை கேட்டு நச்சரிக்கவில்லை... அதே சமயம் தமையனை இப்படி காணவும் யாருக்கும் மனமில்லை. “அண்ணா இந்த தவமதியைப் பாரேன்... என்னை, வீட்டுப் பாடமே எழுத விட மாட்றா... நான் ரெக்கார்ட் நோட் முடிச்சிட்டேன் ணா. ஆனா இவ முடிக்காம... என்னை வரைந்து தர சொல்லி தொந்தரவு செய்றா... கொஞ்சம் மிரட்டு ணா இவளை...” குலமதி, தங்கையை போட்டுக் கொடுக்க அங்கு கூடத்தில் அமர்ந்து தான் இருவரும் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் இரட்டையர்கள் என்றாலும் முதலில் குலமதி பிறந்ததால் அக்கா ஸ்தானத்தை அவள் பிடித்துக் கொண்டாள். “அண்ணா... எனக்கு சரியாவே வரைய வர மாட்டுது. இவளும் வரைந்து தர மாட்றா... அட்லீஸ்ட் நீயாவது வரைந்து தா ண்ணா...” தவமதி கெஞ்ச [/B][/SIZE] [B][SIZE=7]அந்த கெஞ்சல் அவனிடம் வேலை செய்தது. எழுந்து அமர்ந்தவன்... முதலில் எந்த பேச்சற்று தங்கைக்கு வரைய ஆரம்பித்தவன்.... பின் மெல்ல மெல்ல மற்றவர்களின் பேச்சிலும் கலந்து கொண்டான். அவனுக்கு தன் குடும்பத்தை நினைத்து பெருமையாய் இருந்தது. மறுநொடியே இப்படி ஒரு பாசத்தில் உருவான தன் குடும்பத்தில் தன்னவளும் இல்லையே என்று மனைவியைத் தான் தேடியது இவன் மனது.[/SIZE][/B][/JUSTIFY] [JUSTIFY][B][SIZE=7]இரவு உணவையும் வீட்டில் உள்ளவர்களுக்காக பேருக்கென்று தான் உண்டான். அந்நேரம், “அண்ணா அடுத்த வாரம் எங்களுக்கு பிறந்த நாள் வருது. நீ தான சொன்ன... வெளிநாட்டிலிருந்து வந்த உடனே அதை சிறப்பா கொண்டாடலாம்னு...” குலமதி அவனுக்கு நினைவுபடுத்த[/SIZE][/B] [SIZE=7][B] “அதுக்கு என்ன.. சிறப்பா கொண்டாடிடலாம் குலமதி. முதலில் வீடு மாற்றுவோம்.... அப்புறம் உங்க அண்ணி வந்திடுவா... எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடிடலாம்....” தமையனின் பதிலில் “ஹேய்... தன்யா அண்ணியா ண்ணா?” குலமதி ஆர்வமாய் கேட்க “உங்களுக்கு வேற அண்ணி இருக்காளா என்ன?” இவன் மறு கேள்வி கேட்க “ஹை!... அப்போ தன்யா அண்ணி தான் டி. அண்ணா.. அண்ணியை உன் கல்யாணத்தன்னைக்கு பார்த்தது. அதுக்குப் பிறகு பார்க்கவேயில்ல. எனக்கு அவங்க முகமே மறந்து போயிடுச்சு ண்ணா...” தவமதி தன் மனதை சொல்ல ‘ஆனா எனக்கு அந்த மாசுமருவற்ற குழந்தை முகம் மறக்கவே மறக்கல...’ என்று கூக்குரல் இட்டது இவன் மனது. அதன் பின் மனைவியின் நினைவுகள் அவனை அழுத்த... அங்கு மூச்சு முட்டவும், தன் படுக்கையை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான் இவன். இங்கு, பலதரப்பட்ட குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய்.. கீழே குடியிருக்கும் ஆண்கள் பல பேர் மாடியில் படுக்கையை விரித்து... போனில் பாட்டு கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். தந்தை இருந்தவரை... திபாகரனுக்கும் இரவு படுக்கை இங்கு தான். நன்றாக கொட்டம் அடித்து விட்டு பின்னே தான் அனைவரும் உறங்குவார்கள். அதில் சிறுவர், சிறுமிகளும் உண்டு. ஆனால் தற்போது பெண் பிள்ளைகளை யாரும் இங்கு உறங்க அவரவர் வீடுகளில் அனுமதிப்பது இல்லை. நம்பிக்கை இல்லை என்பதை விட இப்போது நாடு இருக்கும் சூழ்நிலையில்... பயம் தான் பெண்ணைப் பெற்றவர்களை ஆட்டிப் படைக்கிறது. விதுனதிபாகரனைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் ஆளாளுக்கு அவனிடம் நலம் விசாரித்து.. கதை பேசினார்கள். அப்படி அவர்கள் பேசியது எல்லாம் அவனின் மாமனார் மகிழ்வரதனின் புகழையும்... மனைவியின் உடல் நலனைப் பற்றிய விசாரிப்பாக இருக்கவும் மேற்கொண்டு அங்கு உறங்க பிடிக்காமல் கீழே தங்கள் பகுதிக்கே வந்து விட்டான் இவன். இவன் வாசல் கதவைத் தட்ட.. கூடத்தில் படுத்திருந்த தமிழரசி கதைவைத் திறக்க... மகன் கூடத்தில் படுக்க பெட்ஷீட்டை விரிக்கவும், மகனைத் தடுத்து... பாயை விரித்தவர், “சூடா பால் எடுத்துட்டு வரேன்... குடிச்சிட்டு படு டா திபாகரா...” என்றவர், மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்று அவனின் உறக்கத்திற்கு இவர் பாலை மிதமான சூட்டில் எடுத்து வந்து கொடுக்க.. மகன் மறுக்காமல் வாங்கிக் கொள்ளவும், வேறு பேச்சு இல்லாமல் தமிழரசி சமையல் அறையில் படுக்கையை விரித்து உறங்க சென்று விட... தானும் படுக்கையில் சாய்ந்தான் இவன். ஆனால் நித்திரா தேவி தான் அவனை நெருங்கவில்லை. அவன் சிந்தனை முழுக்க... மாலையில் வக்கீல் வல்லவனிடம் பேசிய பேச்சிலே சுழன்றது. “அப்ப உன் மனைவி தர தண்டனையை ஏத்துக்க...” அவர் வைத்த வாதத்தில் இவன் நிலைகுலைந்து தான் போனான். ‘நான் செய்ததற்கு மன்னிக்க வேணாம்... அதற்காக ஆயுள் தண்டனையா?!...’ இவன் மனம் மருகியது. “ஒருத்தன் பேசலை என்கிறதுக்காக... விவாகரத்து வரை அவ போகலாமா சார்?” இவன் ஆற்றாமையில் கேட்க “இங்க தான் நீ மறுபடியும் தப்பு செய்ற திபாகர். சரி உன் வாதத்துக்கே வரேன்... இப்போ ஒண்ணும் நாம பண்டை தமிழர் மாதிரி ஒருவரை ஒருவர் பேசிக்க புறா விடு தூது காலத்தில் இல்ல... நொடிக்கு நொடி நம் மனதிற்கு விருப்பமானவர்களிடம் பேச, கையில் ஆன்ட்ராய்டு போன் இருக்கு. இப்படிப் பட்ட காலத்தில்... தன்னிடம் பேசாத கணவன்... அவன் எங்கு இருக்கிறானே தெரியாது... அவன் உயிரோட தான் இருக்கிறானா... இல்ல வேறு ஒரு பெண் கூட வாழ்கிறானா... இது எதுவும் தெரியாது. எல்லாவற்றிக்கும் மேல் தன்னைப் பிடிக்கலையோ… தன்னிடம் உள்ள பிரச்சனையால் ஒதுங்கிட்டாரோ… ஒருவேளை அவருக்கு விவாகரத்தில் விருப்பமோ… அதை அவர் வாய் மொழியாக கேட்காததால் நாமே தந்திடலாம்... இதெல்லாம் நான் ஒரு வக்கீலா.. இல்லறத்தில் வாழும் ஒரு பெண் நினைக்க கூடியதைத் தான் சொன்னேன். ஆனா தன்யா விவாகரத்து கேட்ட காரணம் எனக்கு தெரியாது. ஏன்னு… நான் கேட்டாலும் தன்யா சொல்லாது...” இவர் தன் நீண்ட வாதத்தை வைக்க... அவனிடம் அதே அமைதி மட்டும் தான். பின்ன... அவர் வயதுக்கு எத்தனை குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருப்பார். “நான் அவள் மேல் வைத்த நேசம் உண்மை சார். அதே அளவு நேசம் அவளிடம் இருக்கும்ன்னு நினைத்து அவள் புரிந்து கொள்வானு தான... நான் அவ கிட்ட எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்...” இவன் ஒத்துக்கொள்ள “உரியவரிடம் பகிர்ந்து கொள்ளாத நேசத்திற்கு ஆயுள் குறைவு திபாகர்...” ‘உண்மை தான்… உண்மை தான்... இவர் சொல்வது உண்மை தானே?...’ இருந்தாலும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அதற்காக விவாகரத்தா?...’ [/B][/SIZE] [B][SIZE=7]அவன் முகத்தை வைத்தே அவனின் மனதை அறிந்தவர் போல், “தன்யா இடத்தில் உன் தங்கை இருந்தால் உன் முடிவு என்னவாக இருக்கும் திபாகர்?...” அந்த ஒரு கேள்வி வந்தவனை ஆட்டிப் படைக்க.. சுத்தமாய் நொறுங்கிப் போனான் இவன். அப்போது தான், தான் செய்த தவறின் வீரியம் இவனுக்குப் புரிந்தது. ஆனாலும் அவனுக்குள் ஒரு வேகம் பிறந்தது... அது மகிழ்வரதனின் மாளிகைக்குள் நுழைந்து... மனைவி மறுக்க மறுக்க... தன்னவளைத் தோளில் சுமந்து கொண்டு தன் வீடு வர வேண்டும் என்ற வேகம் தான் அது. அதன் விளைவே... இறுதியாய் தன்னுடைய முடிவை வக்கீல் வல்லவனிடம் எடுத்துரைத்து விட்டு வந்து விட்டான்.[/SIZE][/B][/JUSTIFY] [JUSTIFY][B][SIZE=7]தன்னவளுக்கு செய்த அநீதியை உணர்ந்த பிறகு அவனால் உறங்க முடியவில்லை. இங்கு இவன் தன்னவளின் நினைவில் இருக்க.. அங்கே இவன் ரிது டார்லிங்கோ... கணவனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பின நாளைப் பற்றிய நினைவில் இருந்தாள்.[/SIZE][/B] [SIZE=7][B] ஒரு முறை மாமியார் அவளின் இல்லத்திற்கு வந்து போன பிறகு தன்யரித்விகாவின் மனமோ ரணமாகி போனது. ‘இன்னைக்கு மம்மி டாடி கிட்ட பேசியே ஆகணும்...’ முடிவு எடுத்தபடி இவள் கீழே வர... எதிர்பட்டாள் சோனியா. அவளிடம், “நான் இன்று மம்மி... டாடியைப் பார்க்கணும்...” என்று அறிவிக்க “மேம்.... பாஸ் இன்னைக்கு ஈவினிங் துபாயிலிருந்து வராங்க. Sir will be here only... சோ may be நைட் உங்களுக்கு appointment fix செய்றேன்...” சோனியா எப்போதும் தன்யரித்விகாவின் தாய் சசிரேகாவை பாஸ் என்று தான் விளிப்பாள். இது சசிரேகாவின் உத்தரவு. அதே போல் மகிழ்வரதனை சார் என்று தான் விளிப்பாள். பெற்றவர்களிடம் பேச appointment வாங்கித் தரும் அந்த வீட்டு காரியதரசியை முறைக்காமல்.... சரி என்பற்கு அடையாளமாய் தலையசைத்து விட்டுச் சென்றாள் நம் நாயகி. இரவு உணவுக்குப் பின் தான் தன் பெற்றோர்களை தன்யரித்விகாவால் சந்திக்க முடிந்தது. “என்ன விஷயம் தன்யா...” தந்தை மகளிடம் கேட்க “உடம்புக்கு ஏதாவது செய்தா?...” தாய் விசாரிக்க... மகளிடம் மவுனம் மட்டுமே. “லுக் தன்யா... இன்னைக்கு தான் நான் துபாயிலிருந்து வந்தேன்... i am so tired... ஏதோ பேசணும்னு தான எங்களைப் பார்க்க சோனியா கிட்ட சொல்லி இருக்க... ஸ்பீக் அவுட்...” தாய் அதட்ட மகள், தந்தையை ஒரு பார்வை பார்த்தவள்… “எனக்கு விதுன் கிட்டயிருந்து விவாகரத்து வேணும்...” என்க தந்தைக்கு அந்த "விதுன்" யார் என்று தெரிந்தது. ஆனால் தாய்க்கு தெரியவில்லை போல... விவாகரத்தை ஒரு பெண் யாரிடம் கேட்பாள்... “who is this... விதுன்?” சசிரேகா கேட்க அங்கு மகள் முகத்தில் சலனமே இல்லை, “மை ஹப்பி மம்மி...” சின்னவள் நினைவுபடுத்த “ஓஹ்... மகிழ் டியர்... அவன் பேரு என்னமோ தவாவோ... விபாவோன்னு சொல்லுவிங்களே... ஆனா அவன் பேரை நம் பேபி வேற ஏதோ சொல்றா....” ஏதோ தற்போது பெயர் தான் முக்கிய பிரச்சனை என்பது போல் சசிரேகா தன் கணவனிடம் கேட்டு வைத்தாள். இது தான் தன்யரித்விகாவின் தாய் சசிரேகா.. மருமகன் விஷயத்தில் அவளின் அலட்டல் எல்லாம் இவ்வளவு தான். “நம்ம மாப்பிள்ளை பேரு விதுனதிபாகரன்... அதைத் தான் உன்னை மாதிரி நம்ம மகளும் சுருக்கி... விதுன்னு சொல்றா...” மகிழ்வரதன் விளக்க “அவன் பெயர் எதுவா இருந்தா என்ன... அட்லாஸ்ட் அவன் நம்ம தகுதிக்கு ஏற்றவனே இல்ல... இப்பொழுதாவது நம்ம பேபி புரிஞ்சிகிட்டாளே... சீக்கிரம் விவாகரத்தை வாங்கிக் கொடுங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மகிழ்... நான் தூங்கப் போறேன்... குட் நைட் மை ஸ்வீட் ஹார்ட்...” என்றவள், இவ்வளவு தானே என்பது போல் மகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகியிருந்தாள் சசிரேகா. சின்னவள் தந்தையைக் காண, “எதுக்கு இந்த திடீர் முடிவு பேபி....” மகிழ்வரதன் மகளை விசாரிக்கவும் “டாட்... i am not peaceful... முக்கியமா எனக்கு அமைதியான தூக்கம் வேணும்...” மகளின் பதிலில் பரிவாய் அவளின் தலையைத் தடவி விட்ட மகிழ்வரதன், “ஓகே... நாளைக்கு வல்லவனை வந்து உன்னை சந்திக்க சொல்றேன்... அவன் கிட்ட பேசு... dont worry my child... எதுவாக இருந்தாலும் டாட் இருக்கேன்...” தந்தையின் பரிவான வார்த்தையில் கண்கள் கலங்க தலை அசைத்தாள் இவள். [/B][/SIZE] [B][SIZE=7]அன்று விவாகரத்து பற்றி பேசும்போதே... தன்யரித்விகாவின் பெற்றோர்கள் மறுப்பு சொல்லவில்லை. அப்படி மட்டும் விதுனதிபாகர், மனைவி கேட்ட விவாகரத்தை தந்து விட்டால்... மகளின் வாழ்வில் உள்ள அவன் தடத்தை எல்லாம் அழித்து... பெண்ணவளுக்கு புது வாழ்வு அமைத்து தர சித்தமாய் இருக்கிறாள் சசிரேகா.[/SIZE][/B][/JUSTIFY] [JUSTIFY][B][SIZE=7]இரவு முழுக்க உறங்காமல் விடியலில் தான் தன்னை மீறி கண்ணயர்ந்தான் விதுனதிபாகரன். தான் எழுந்ததும் மகனை ஒரு பார்வை பார்த்த தமிழரசி... அவன் உறக்கம் கெடாமல் இவர் தன் வேலைகளை கவனிக்க... நன்கு விடிந்தும்... தங்கைகளின் ஆரவாரத்திற்குப் பிறகுமே அசையவில்லை மகன்.[/SIZE][/B] [SIZE=7][B] “யப்பா... திபாகரா... விடிஞ்சிடுச்சு பாரு... எழுந்திருப்பா சூடா காபி எடுத்து வந்திருக்கேன் எழுந்திரு...” தமிழரசி மகனை எழுப்ப, அவனிடம் அசைவே இல்லை. என்னமோ ஏதோ என்று பயந்த அவர் மகனைத் தொட்டு உலுக்க... அவன் உடலோ நெருப்பாய் கொதித்தது. “ஐயோ... திபாகரா! என் புள்ள உடம்பு இப்படி அனலா கொதிக்குதே... நேற்று என் புள்ள கோட்டு சூட்டுனு வந்து நிற்கும் போதே நினைச்சேன்... எவ கண்ணு பட்டுச்சோ... என் புள்ள இப்போ கட்டையா கிடக்குறான்... அடியேய் குலமதி... அந்த வெளி கூடத்தைக் கூட்டி மண்ணை எடுத்துட்டு வா. சித்ரா... சாமி விளக்க ஏத்திட்டு, அப்படியே கையோட விபூதியை எடுத்து வா. ஆத்தா மகமாயி... நான் தவமா தவமிருந்து பெத்த புள்ள டி இவன்... அவனுக்கு எந்த குறையும் கொடுத்துடாத. என் புள்ள உடம்பு இப்படி கொதிக்குதே ஏழுமலையானே... உனக்கு பாதயாத்திரை வரேன்... என் பிள்ளையோட பிணியைப் போக்கு...” விதுனதிபாரனுக்கு இருந்த மன உளைச்சலில் வந்த சாதாரண காய்ச்சல் தான் இது. எம்மாடியோ! அதற்கே மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்து விட்டார் தமிழரசி. பின்னே அவர் தவமாய் தவமிருந்து பெற்ற மகன் இல்லையா... அதான் அளவு கடந்த பாசம் மகன் மேல். விபூதியை எடுத்து வந்து சித்ரா அண்ணன் நெற்றியில் பூசியவள்... “அம்மா... கொஞ்ச நேரம் அமைதியா இரு... காய்ச்சலில் அண்ணன் ஏதோ பினாத்துது...” என்றவள் தாய் அமைதியானதும்... இவள் தன் காதை அண்ணன் உதட்டருகே வைத்து கேட்க, “ரிது டார்லிங்... ரிது டார்லிங்...” என்று அவன் முணுமுணுக்க அவன் சொன்ன ரிது சித்ராவுக்கு சரியாக கேட்காமல் போக, “அம்மா.. அண்ணா, டார்லிங்... டார்லிங்னு பினாத்துது... எனக்கு தெரிந்து வெளிநாட்டில் ஒரு வெள்ளைக்காரியை உன் பிள்ள டாவு விட்டிருக்குன்னு நினைக்கிறேன். ம்மா… அப்படி மட்டும் இருந்தா நீ நினைக்கிற மாதிரி அந்த சீமாட்டி இந்த வீட்டுக்கு வரமாட்டா மா...” சித்ரா மகிழ்ச்சியாய் திட்டம் போட “அடியேய்... நான் பெத்த மகளே.. என் புள்ள உடம்பு முடியாம இருக்கான்... உனக்கு அந்த சீம சித்தராங்கி தான் தெரியறாளா... போடி... போய் கார்த்திக் தம்பிக்கு போனை போடு... அண்ணனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகணும்...” தாய் உத்தரவு இட... அதை செய்ய விரைந்து ஓடினாள் மகள். மனைவி விவாகரத்து கேட்டதற்கே... இங்கு ஒருவன் தன்னிலை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கிறான்[/B][/SIZE] [B][SIZE=7]... இவனாவது விவாகரத்து தந்து விடுவதாவது?...[/SIZE][/B][/JUSTIFY] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Yayayuvanika Novel
Yayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
நெஞ்சம் 4
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN