மூங்கில் நிலா -20

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூக்களின் பள்ளத்தாக்கு வனியின் கனவு பட்டியல்களில் ஒன்று.
ஒரே இடத்தில் பல் வேறு பூக்களின் அணிவகுப்பு, சிறிதும் செயற்கையின் சாயல் இன்றி இயற்கை வாரி இறைத்த சொர்கம் அல்லவா? பள்ளி பருவத்திலிருந்தே அங்கே ஒருமுறையாவது சென்று வந்து விட வேண்டும் என்பதே அவள் அவா.
அவள் சகோதரிகளும் அத்தை பெற்றெடுத்த இரத்தினங்களும் இவளை போன்ற இரசனையுடையவர்கள் இல்லையே.தனியே அனுப்பவும் அவள் பெற்றோர் அனுமதி கிடையாது.

கனவாகிவிடுமோ என்ற நிலையில் இருந்த விஷயம் இன்று துணையாகி வந்தவன் தயவால் நிறைவேற போகிறதே.
வனி வானத்தில் சிறகு இல்லாமலே பறந்தாள்.
வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய வகை பூக்களும் விலங்குகளையும் தன்னகமாய் கொண்ட இந்த பீட பூமி உத்ரகாண்டத்தின் மேற்கு இமய மலை தொடர்ச்சியில் அமைந்திருக்கிறது. சதா பனி பொழியும் இந்த மலை பூமியை ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மறு வாரமே வசி வனமோகினி டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர்.ஜோஷிமத் நகரில் இருந்து ஒரு மணி நேர பயண தொலைவில் கோவிந்த் காட் என்னும் இடத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து பூக்களின் பள்ளத்தாக்கிற்கு நடந்து தான் செல்ல வேண்டும்.
இவர்களைப் போல பலரும் இயற்கையின் சீராடலை நேரில் கண்டு கழிக்க வந்திருந்தனர். ஒற்றையடி பாதை போல நீண்ட கல் பாதையின் இரு மருங்கிலும் காட்டுப் பூக்களும் கொடி வகைகளும் பிண்ணி பிணைந்து ஒரு வித நூதனதுடன் வனியை வரவேற்றன.

"பேபி உன்னால நடக்க முடியுமா? இல்லை மாமா தூக்கிட்டு போகட்டா? "வசி சீரியஸாக கேட்க, வனி வெண் பற்கள் பளீரிட சிரித்தாள்.

"நானே வனமோகினி, ஊட்டில ஜங்கள் ட்ரெக்கிங் நெறைய வாட்டி போயிருக்கேன் மாமா.
உங்களுக்கு பயமா இருந்தா என்னை புடிச்சிக்கோங்க. நான் கூட்டிக்கிட்டு போறேன்
" வனி கூற வசி இதுதாண்டா சமயம்னு வனி இடையோடு கரம் வளைத்து நடக்க ஆரம்பித்தான்.

வனி ஏறிட்டுப் பார்க்க,
"பேபி எனக்கு மலை காடு எல்லாம் பயம், உன்னை புடிச்சுக்கிட்டே வரேனே, அப்படியே என்னை கரை சேர்த்திடு தாயே " வசி அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கூற, வனிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

ஜங்கிள் ட்ரெக்கிங்கில் தன்னை விட அதிக அளவில் காடு மேடு அலைந்தவன் அவனென்பது அவளுக்கு தெரியாதா என்ன.பக்கி எப்படி சீன் போடுது பாருங்க 🤦‍♀️. வசியோடு இணைந்து நடப்பது வனிக்கு கனவு போல இருந்தது. வாழும் சொர்கம் இந்த பூமியல்லவா. பனியின் மிச்சங்கள் அங்காங்கே சிதறி கிடந்தாலும், மேகப் பொதியல் இதமாய் மேனி உரசி சென்றாலும், வசியின் நெருக்கம் வணிக்குள் பட்டாம்பூச்சிகளை உற்பத்தி செய்தது.

கண் மூடி உயிர் நுரைக்க பச்சை மலை காற்றை சுவாசித்தவள் முகம் பளிச்சிடலே வசிக்கு அந்த நேரம் அவள் மனம் அமைதியுற்றதாய் தோன்றியது. ஆங்காங்கே சிறு கூடாரம் அல்லது பாய் விரித்து பரந்து விரிந்திருந்த இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் இரசித்துக் கொண்டிருந்தனர். வசியும் வனியும் தோதுவாய் ஒரு இடத்தைப் பார்த்து, கொண்டு வந்திருந்த பாயை விரித்து அமர்ந்தனர்.

"பேபி இப்ப நீ ஹாப்பியா இருக்கியா? அந்த வயசில உனக்கு துணையா இருக்க முடியாம போய்டுச்சு, பட் அந்த வலிக்கு கொஞ்சமாச்சும் இப்போ நா இப்ப நிவாரணம் அளிச்சிருப்பேனு நம்பரேன்"வசி மிருதுவாக வனியின் கைகளைப் பற்றிக் கொண்டே சொல்ல,

"என்ன மாமா இதெல்லாம்? தப்பு எல்லாமே என் மேலே தானே. உனக்கு தண்டனை தர்றேனு நெனைச்சிகிட்டு என்னை நானே கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிக்கிட்டேன்.

கோவம், வெறி.. எவனோ ஒருத்தனுக்காக என்னை நீ தூக்கிபோட்டுட்டனு வலி.
எனக்கும் அப்ப சின்ன வயசுதானே. இதெல்லாம் ஒரு இஸ்ஸுவானு இப்ப தோணுது, பட் அப்போ என் உலகமே நீ மட்டும் தானே மாமா.
நெறைய வலி மாமா, யார்கிட்டையும் பகிர முடியாத வலி, என் கனவுல டெய்லி நீ வருவே. பப்பி லவ்னு உன்னை தூக்கி போடவே முடியல. ஒரு கட்டத்தில் உங்கிட்ட திரும்ப வந்திடலாமா னு கூட யோசிச்சுயிருக்கேன்.

"பட் அதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குனு விலகி போயிட்டேன். சரி கல்யாணம் பண்ணிட்டா சரி ஆயிடும்னுதான் வாசுவ ஏத்துக்கிட்டேன்.
ஹ்ம்ம்ம், அவனும் என்னை அல்பாயுசில் விட்டுட்டு போயிட்டான். ஒரு நெருடல், குற்ற உணர்ச்சி. கடைசி வரைக்கும் இப்படி பிரண்ட்ஸ் அ காலம் தள்ளிடலாம்னு பார்த்தால்,விதி நம்பளை திரும்ப இணைச்சு, அதோட கணக்கை சரி பண்ணிடுச்சு.

களங்கமே இல்லாத உன் காதல் என் உறுதியை ஒடைச்சு எடுத்துடுச்சு மாமா "வனி கண்களில் நீர் உடைத்தது.

வசி மென்மையாக வனியை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

"ஸ்ஸ்ஸ் என்னடா கண்ணா இப்படி அழுவற,நடந்தது எல்லாமே நன்மைக்கு தான்.

யோசிச்சு பாரு, உன்கூடவே இருந்து உன் காதல்ல மட்டும் திளைச்சு, உலகமே தெரியாம நாம கல்யாணம் பண்ணி வாழ்ந்திருந்தா அந்த லைப் தொடர்ந்து இருக்குமான்னு கூட தெரியாது."

"என்னோட முரட்டு குணம், ஆள் அண்டாத சுபாவம், உன்னோட முன்கோபம், பிடிவாதம். ரெண்டு ஈகோக்கள் தான் வாழ்ந்திருக்கும்.
தனியே நீ அப்படி பிரிஞ்சி போய் நான் மலேஷியா போய் பல தரப்பட்ட மக்கள் கூட பழகறப்பத்தான் மனசு பண்பட்டுச்சு.
இந்த பிரிவில்தான் உன்னை எனக்குள்ள தேடி எடுத்தேன். இதே பிரிவுதான் வசீகரனோட பல குணாதிசயங்களை உனக்குள்ள விதைச்சிட்டு போயிருக்கு."

"இப்ப உனக்கு வசி யாருன்னு முழுசா தெரியும். எனக்கு வனமோகினி யாருன்னும் தெரியும்.
நீ நானாகவும் நான் நீயாகவும்தான் இந்த 12 வருஷங்களை கடந்து வந்திருக்கோம்.
நீ செதுக்கன வசித்தான் இப்ப இவ்ளோ பெரிய தொழிலதிபரா உயர்ந்திருக்கான். நமக்குள்ள இப்போ சண்டைகள் வராது. வறட்டு பிடிவாதம் இருக்காது. ஈகோ மொத்தமா ஒடைஞ்சி போயிருக்கும்.
கடவுள் நாம சேர்ந்த வாழணும் னு எப்போவோ முடிவு பண்ணிட்டாரு பேபி. பட் அதுக்குள்ள நம்ப மனசு பண்பட்டு நம்ம லவ், நட்பை பரிபூரணமாய் உணர்ந்து வாழணும்னு தான் இந்த கேப் குடுத்திடார்.
எல்லோரும் முதல் காதல் கிடைக்கறது இல்லை பேபி. நமக்கு அது திரும்ப கிடைச்சிருக்கு.

உனக்குத்தான் ரொம்ப நன்றி. புயல் மாறி வந்து என் லைப் அ பூங்காவனமாய் மாத்தினத்துக்கு " வசி அவள் தலைக் கோதி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அவள் வாகாய் அவன் புறம் சாய, "ஹேய் பேபி உனக்கு ஒரு கிப்ட் இருக்கு.கண்ணு மூடு கண்ணு மூடு "வசி கூற,
வனி அவன் நெஞ்சிலிருந்து சற்றே தலை உயர்த்திப் பார்த்தாள்.

"ஒன்னும் வேணாம், கண்ணு மூடுனு சொல்லி கடிச்சு வைப்ப. எனக்கு வேணாம் போ"வனி முகத்தை திருப்ப,

"இல்லடி பேபி, ப்ரோமிஸ்சா கிப்ட் இருக்கு, இது நம்ம பிள்ளைங்க மேலே சத்தியம் "வசி இன்னும் பெறாத பிள்ளைகள் மேல சத்தியம் பண்ண வனி தன் பெரிய விழிகளை உருட்டினாள்.

"என்னது பிள்ளைங்களா? டேய் மாமா எங்கயாச்சும் பேமிலி வெச்சிருக்கியா, நெறைய குட்டிப் போட்டுட்டு அதுங்களுக்கு ஆயா வா என்னை செட் அப் பண்ணலாம்னு பார்த்தியா நீ? வனி வசியை துளைத்துவிட்டாள்.

"அம்மே ஒண்ணுக்கே இங்க வழி இல்லையாம். இதுல செட் அப்க்கு நான் எங்க போவரது. சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். பட் பரிசு கண்ணடிப்பா உண்டு. நீ மொத கண்ணை மூடு. "

வனி வசியை நம்பாமல் பார்த்தாள். பிறகு கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல அவள் கைகளில் அந்த பாக்ஸ்சை வைத்தான்.

"கண்ணா இப்போ கண்ணு தொறந்து பாரு.இது உனக்கு புடிக்கும்னு நம்புறேன் "

வனி கையில் வண்ண தாள் சுற்றி இருந்த அந்த பெட்டியைப் பார்த்தாள்.
அதன் மேல் "என் செல்ல வாத்துக்கு, காதலுடன் உன் மங்கி வசீகரன் னு "அழகாய் எழுதியிருந்தது.
மெதுவாய் காகிதத்தை பிரித்து உள்ளிருந்த பெட்டியை திறந்தாள். அதில் இருந்த புத்தகம் அவள் கண்களை விரிய வைத்தது.

"மூங்கில் நிலா"

Wattpad ல அவள் தொடர்கதையாய் எழுதியிருந்த அவர்களின் காதல் கதை, புத்தக வடிவில் வனி கைகளில் குழந்தையாய் கிடந்தது.
ஹார்ட் கவரில் பூவேலி மூங்கில் தோட்டத்தில் பௌர்ணமி நிலவை இரசித்த வண்ணம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது வசியும் வனியுமே.

தங்க முலாத்துல தோயப்பட்ட வழ வழ காகிதங்களில் அவள் முழு கதையும் அச்சேறி இருந்தது. இடை இடையில் அவர்கள் பள்ளி முதல் இந்நாள் வரையிலான கதையின் நகர்வுக்கு ஏற்ப வசி வனமோகினி சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது.
கடைசி வரை புத்தகத்தைப் புரட்டியவள் கண்ணுக்கு சமர்ப்பணம் என்ற குறிப்போடு கவிதையும் இடம் பெற்றிருந்தது.

"வட்ட முகமேந்தி,

வற்றாத அழகாய்
என் இரு விழி நிரப்பி
என் இனிய வாழ்வை தோரணமாய் அமைத்து,
பண்பு பல்லாக்கில் பவனி வரும் முழு மதியே,
இரவோடு நான் கலந்து வரைந்தேன் உனக்கொரு கவிதையடி,

இரவில் தோன்றி பகலில் மறையும் உன் ஒருவளுக்கே இது சமர்ப்பணமடி..
என் மூங்கில் நிலாவே.. என் நெஞ்சமெனும் வானில் மஞ்சமிட வா.. வசீகரன்.


படித்தவள் கண்ணில் நீர் சுரப்பது நின்றபாடில்லை.

"நான் கதை எழுதறது உங்களுக்கு தெரியுமா மாமா? மூங்கில் நிலா நம்ப கதைனு தெரியுமா உங்களுக்கு? "


"தெரியும் செல்லம். உலகத்துக்கே நம்ம லவ் ஸ்டோரி தெரியறப்ப, அதோட ஹீரோ எனக்கு தெரியக்கூடாதுனா எப்படி?
நீ wattpad லே எழுதறது என்னோட அறந்தவால் ஜுனியர் மாலதி கண்டு புடிச்சு சொல்லிட்டா.
கதையில மட்டும் ரொமான்ஸ்சா அள்ளி அள்ளி கொட்டு, நிஜத்தில் கிட்ட வந்தாலே அடிதடிதான்.


அப்புறம் நானும் அந்த கதைய படிச்சேன் பேபி. நா உனக்கு எவ்ளோ முக்கியம், எந்த அளவுக்கு உனக்கு காயம் தந்திருக்கேன்னு உன் எழுத்து மூலமாதான் ரொம்பவே உணர்ந்தேன். நெக்ஸ்ட் வீக் உன் பிறந்தநாள் வருது இல்ல. அதான் நம்ப கதையே உனக்கு ரொம்ப புடிச்ச இடத்தில் குடுக்கலாம்னு இங்க தள்ளிட்டு
வந்திட் டேன்.

"Future ல நம்ப பசங்க கிட்ட நம்ப லவ் ஸ்டோரிய அழகா படம் போட்டு சொல்லணும்தான் இந்த புக்க டிசைன் பண்ணினேன்.
எனக்கும் கொஞ்சம் ரொமான்ஸ் வருமாக்கும்"
வசி குறும்பாய் கண்ணடிக்க, வனி வெட்கத்தில் தலை குனிந்தாள்.

நேரே அவன் கண்களை பார்த்தவள் "i love you செல்லம் "என்றவள் அவன் இடது கன்னத்தில் அவள் இதழை ஒற்றினாள்.
"நன்றி மாமா, தொலைஞ்சு போச்சுனு நான் நெனைச்ச பொக்கிஷத்தை திருப்பி என்கிட்ட தந்திட்டே.

என்னோட வசீகரன்.
என்னோட சின்ன உலகம். நான் ரொம்ப ஹாப்பி யா இருக்கேன் மாமா "வனி வசியை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அது வரை அவர்கள் இருவரிடமும் இருந்த பனித்திரை முழுவதுமாய் விலகி விட்டிருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN