Home
Jayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
Jayayuvanika Completed Novels
உன்னுள் என்னைக் காண்கிறேன்...
உறவாக வேண்டுமடி நீயே...
சாதி மல்லிப் பூச்சரமே!!!
என்னைத் துரத்தும் உன் நினைவுகள்....
உன் காதலில் வெண்பனியாய் நான் உருக...
நீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே..
எந்தன் முகவரி நீயடி..
இமை தேடும் ஈரவிழிகள்...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
Forums
New posts
Search forums
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Jayayuvanika Novel
Jayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
நெஞ்சம் 16
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

மனைவியின் திடீர் மாற்றத்தில் குழம்பினாலும் அவளிடம் எக்கேள்விகளையும் கேட்டு மனசஞ்சலத்தை உருவாக்காமல்... அணைத்து, பரிவாய் இவன் முதுகை வருடிக் கொடுக்க… சற்றே ஆசுவாசமானாள் தன்யா.

அங்கிருந்த மற்றோர் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், “இது என்னோட personal room, அது வாஷ் ரூம் போ.. போய் முகம் அலம்பிட்டு வா” என்றிட

அவன் சொன்னதை தன்யா செய்து வரவும்… கையில் flask உடன் உள்ளே வந்தவன் மனைவியின் கைப்பிடித்துக் கட்டிலில் அவளை அமர வைத்து… கப்பில் டீயை ஊற்றி தன்னவளிடம் தந்து “இதைக் குடி ரிது… தெம்பா இருக்கும்” என்று சொல்ல

கணவனின் பரிவில் கண்கள் கலங்கியது பெண்ணவளுக்கு.. அதைக் கண்டவன் “ரிது என்ன இது சின்னப் பிள்ள மாதிரி.. I am always with you” என்று ஆத்மார்த்தமாய் இவன் மொழிய

அதில் முதல் முறையாகப் பெண்ணின் மனது தடம்புரண்டது என்றால் அவள் நெஞ்சிலோ கோடி பிரவாகம் ஊற்றெடுத்தது… டீயைக் குடித்து முடித்ததும் இவள் அறையைக் காண.. இதுவும் கனகச்சிதமாய் இருக்க ஒரு சிறிய கட்டிலின் மேல் மெத்தை வீற்றிருக்க.. பக்கத்தில் மேஜை விளக்குடன் கூடிய மேஜை மற்றும் ஒரு நாற்காலி இருக்க… சுவரோடு பதித்த அலமாரியில் சில கோப்புகளும் திபாவின் ஆடைகள் என அவ்வறையே நேர்த்தியாய் இருந்தது.

மனைவியின் முகத்தில் தெளிவைக் கண்டவன் “நீ கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுக்கறியா ரிது… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்… இல்ல நாம வீட்டுக்குப் போகனும்னா சொல்லு… நாம இப்பவே கிளம்பலாம்..” என்றவன் கேள்விக்கு

“இல்ல விதுன் I am alright.. நான் அங்க front officeல உங்க கூட இருக்கேன்.. நீங்க முடிச்சிட்டு வாங்க” என்று இவள் மறுத்திட

மனைவியின் குரலில் பழைய துள்ளல் இல்லை என்றாலும்.. அதில் சோர்வும் இல்லை என்பதை உணர்ந்தவன்… அவள் கையிலிருந்த கப்பை வாங்கிக் கொண்டு “குட் கேர்ள்.. நீ இங்கேயே இரு நான் வரேன்” என்றவன் மனைவியின் கன்னத்தைக் கிள்ளி விட்டு விலக எத்தனிக்க

அவனை நகர முடியாத படி தன்னவனின் டி ஷர்ட்டின் நுனியை இருக்கப் பற்றி இழுத்திருந்தாள் தன்யா. மனைவியின் சிறுபிள்ளைத் தனமான செயலில் ஒரு விரிந்த புன்னகையைத் தந்தவன் தன்னவளை நெருங்கி, “என்ன ரிது பேபி... என்ன வேணும் உனக்கு” என்று இதமாய் கேட்டிட

“நான் உங்களுக்கு சிரமம் தரேனா.. என் மேல உங்களுக்குக் கோபம் வருதா.. அதனால தான் என்ன தனியே விட்டுப் போறீங்களா… நான் யூஸ்லெஸ்.. மட்டி.. எனக்கு மூளை இல்ல.. எனக்கு எதையும் செய்யத் தெரியாது.. I am unfit அதான.. இப்படித் தான உங்களுக்கு என்னைய திட்ட தோனுது? சொல்லுங்க விதுன் இதான.. திட்டுங்க நீங்களும் என்னையத் திட்டுங்க.. நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு என்னைத் திட்டுங்க.. தண்டம் நான்.. I am unfit விதுன்.. unfit..” என்று ஆற்றாமையோடு விசும்பியவளோ கைகளால் முகத்தை மூடிக் கொள்ள

விதிர்விதிர்த்துப் போனான் திபாகரன்… 'இவ என்ன சொல்றா! நாம எப்போ அப்படி எல்லாம் சொன்னோம்.. ஒருவேளை என்னையும் மீறி என்றாவது நான் இப்படித் திட்டியிருப்பனோ.. இல்லையே அதற்கு வாய்ப்பே இல்லையே' என்று உணர்ந்தவன் 'பிறகு ஏன் இந்த அழுகை?' என்று நினைத்தவனோ தன் கையிலிருந்த கப்பை மேஜையில் எறிந்து விட்டு.. மனைவியின் இருகைகளையும் பிரித்து.. தன்னவளின் முகத்தைத் தன் வயிற்றோடு கட்டிக் கொண்டவனின்… விரல்களோ மனைவியின் கேசத்தை வருட.. உதடுகளோ “சில்லி கேர்ள்… என்ன பேச்சி இது… இப்ப தான என் ரிது குட் கேர்ள்னு சொன்னேன்.. அதுக்குள்ள இப்படி அழலாமா?.. you are brave டா.. உன்ன யாராவது தண்டம்னு சொல்லுவாங்களா?..” என்ற கணவனின் சமாதான வார்த்தைகளில் இன்னும் வெடித்துக் கதறினாள் தன்யா.

ஆயிரம் சமாதான வார்த்தைகள் இவன் சொல்ல... எதுவும் அவளைச் சென்றடையவில்லை. அதில் மனைவி மேல் இரக்கம் எழ.. தன்னவளின் முகம் நிமிர்த்தி, “ரிது.. ரிது.. ச்சுப்..” என்று தன் உதட்டின் மேல் ஒற்றை விரல் வைத்து இவன் அதட்டலிட.. அதற்குப் பலனாக சற்றே மட்டுப்பட்டது தன்யாவின் அழுகை.

ஆனால் இன்னும் கேவிய படி அவள் இருக்கவும் “மூச்.. சத்தம் வரக் கூடாது.. என்ன அழுகை இது. ஆஹாங்.. உன்ன யாரும் திட்டல திட்ட மாட்டாங்க.. யார் திட்டவும் நான் விட மாட்டேன்.. புரியுதா..” என்றவன் அதட்டி உருட்டி மிரட்டிட அதற்குக் கட்டுப்பட்டு அழுகையை மட்டுப்படுத்தினாள் தன்யா.

அழுது அழுது சிவந்திருந்த மனைவியின் முகத்தையும் கண்களில் மிரட்சியையும் பார்த்தவனுக்கு உள்ளே வலித்தது. ஆனால் இவளிடம் தற்சமயம் மென்மையைக் கையாளக் கூடாது என்பதை அறிந்ததால்… மனவெதும்ப வேறு வழியில்லாமல் மிரட்டியிருந்தான் இவன்.

பின் விசும்பலுடனே தன்னவனின் மடியிலேயே இவள் உறக்கம் கொள்ள.. மனைவியின் தலையை மடி தாங்கியபடியே இவனும் சில கோப்புகளைப் பார்வையிட.. அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர.. போன் சத்தத்தில் தான் எழுந்தாள் தன்யா.

“ரிது லன்ச் டைம் அதான் பாலாஜி கால் பண்றார்.. Fresh ஆகி வா நாம சாப்பிடலாம்” என்றவன் எதுவும் நடவாததைப் போல் கோப்புகளை ஒதுக்கி வைக்க

அவனைக் கண்டவள் “சாரி விதுன் நீங்க ஹாப்பி மோட்ல வந்திங்க நான் அதை ஸ்பாயில் பண்ணிட்டேன் சாரி” இவள் உணர்ந்து சொல்ல

“என்ன பேச்சி இது… சாரி எல்லாம் கேட்டுகிட்டு... இனி இதைப் பத்தி பேசாத போ.. fresh ஆகி வா” என்று இவன் கண்டிக்கவும்.. முகம் விழுந்து விட ஓய்வறைக்குள் சென்று மறைந்தாள் தன்யா.. மனைவியின் முகம் இவனை வாட்ட “ஊஃப்” என்று ஒரு நெடுமூச்சினை வெளியிட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் இவன்.

அவள் வந்ததும் ஆபிஸ் மேஜை மேலேயே உணவுகளை வைத்து எவ்வித பேச்சுமின்றி இவன் இருவருக்கும் பரிமாற..

அவ்வமைதி பிடிக்காமல் “ஆமா சித்ரா அக்காவுக்கு எப்ப கல்யாணம்?” என்று இவள் கேட்க

“உனக்கு சித்ரா அக்கா இல்ல அண்ணி..” என்று திருத்தியவன் “கார்த்திக் இப்ப வெளிநாட்டுல இருக்கான். அவன் வந்ததும் நாள் பார்க்க வேண்டியது தான்”

“ஓ.. அவங்க பெண் பார்த்து இரண்டு வீடும் பேசி முடிச்சிட்டிங்களா”

“இன்னும் இல்ல.. இரண்டு பேரும் விரும்புறாங்க.. சோ இனி தான் பேசனும்” இவன் தகவல் போல் சொல்ல

“ஹாங்.. லவ் மேரேஜ் ஆ..” என்று உள்ளுக்குள் ஜெர்க்கானாள் இவள்.. பின்னே எப்போதும் கடுகடு என்று இருக்கும் சித்ரா காதலிக்கிறாள் என்றால் இவளுக்கு எப்படி இருக்கும்

“ஆமா லவ் மேரேஜ்.. ஆனா அரேன்ஜ் மேரேஜ்” என்ற கணவனை இவள் என்ன டா இது என்பது போல் பார்க்க

“அம்மாவுக்கு லவ்னா பிடிக்காது.. அதான் அரேன்ஜ் மேரேஜ் மாதிரி பேசப் போறேன்.. ஆனா சித்ராவும் கார்த்திக்கும் என் கிட்ட சொல்லிட்டாங்க”

“ஓ..”

“நீ அம்மா கிட்ட இது லவ் மேரேஜ்னு சொல்லிடாத”

அதற்கு மறுப்பின்றி “சொல்ல மாட்டேங்க” என்றவளோ மனதிற்குள் 'நான் சொல்லி அவங்க கேட்டுட்டாலும்… ஆனாலும் இவருக்கு அதீத கற்பனை தான்' என்று நொடித்துக் கொண்டாள் பெண்ணவள்.

“கார்த்திக் என் நண்பன்... இந்தக் கம்பெனி ஆரம்பிக்க அவன் தான் முழுக் காரணம்… பெரிய தொழிலதிபர் பையன்.. ஆனா அந்தப் பந்தா அவன் கிட்ட இருக்காது. நல்லவன் தங்கமான குணம்... சித்ராவுக்கு ஏத்த ஜோடி. நான் வெளிநாட்டில் இருந்த போது அவன் அப்பா தான் நம்ம கம்பெனிய பார்த்துகிட்டார்.. அவரும் நல்ல மாதிரி தான்.. நம்ம கம்பெனி முழு வளர்ச்சியோடு இன்று என் கைக்கு வர அவர் தான் காரணம்” என்று இவன் மனைவி கேட்காத இன்னும் சில தகவல்களையும் சொல்ல அமைதியாய் கேட்டுக் கொண்டாள் தன்யா.

உண்டு முடித்து சற்றே ஓய்வுக்குப் பின்… ஃபாக்டரியை ஒரு முறை பார்வையிட்டவன்.. மனைவியைக் கண்டு, “ரிது கிளம்பு ஆஸ்பிட்டல் போய் வரலாம்” என்றழைக்க

“என்ன ஆச்சி விதுன் உடம்புக்கு முடியலையா” என்று பதட்டத்துடன் இவள் தன்னவனின் கழுத்தில் கை வைத்துக் கேட்டிட

“எனக்கு எதுவும் இல்ல டி”

“அப்ப யாருக்கு என்னங்க” இவளிடம் அதே பதட்டம்

“சில் ரிது.. யாருக்கும் எதுவும் இல்ல.. ஜஸ்ட் செக் அப் தான் வா” என்றழைக்கவும்.. உடன் சென்றாள் இவள்.

மருத்துவனையைக் கண்டதும் மறுபடியும் ஜெர்க்கானாள் பெண். அது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல்.. அவளின் குடும்ப டாக்டர் இங்கிருக்க.. தன் வாழ்நாளில் அதிக முறை அவள் வந்து சென்ற மருத்துவமனையும் இது தான்.. 'பெற்றோர் யாருக்காவது எதுவோ இல்லைனா அப்பத்தாவுக்கு' என்று சற்றே கலங்கிய மனதுடன் இவள் நடக்க

எதிர்ப்பட்டார் டாக்டர் நதியா.. இவர்களைக் கண்டதும் “Hello sir, how are you? என்று திபாகரனைக் கேட்டவள் “how is your health தன்யா? என்று தன்யாவின் உடல்நிலையையும் விசாரிக்க

அதற்கு கணவன் மனைவி இருவரும் ஒருசேர “fine” என்ற வார்த்தையை மொழிய

அதில் மெல்ல சிரித்துக் கொண்டவர் “any emergency” என்று விசாரிக்க

திபாகரன், “Nothing, லதா மேம்ம பார்க்கனும் அப்பாய்ன்மெண்ட் வாங்கியிருக்கேன்”

“ஓ.. ஓகே.. let see you later.. take care தன்யா” என்ற நதியா அங்கிருந்து விலகவும்

“உங்களுக்கு நதியா மேம்ம தெரியுமா.. அப்புறம் லதா மேம்னு சொன்னீங்களே.. அது இவங்க சீனியர் லதா ஆன்ட்டியா?” என்று பெண்ணவள் ஆர்வமாய் கேட்க

அதில் நின்று தன் உஷ்ண பார்வையால் மனைவியை எதிர் கொண்டவன், “இதென்ன கேள்வி.. லதா மேம், நதியா மேம் இவங்க இருவரையும் எனக்கு எப்படித் தெரியாம போகும்?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது... வருத்தம், கோபம், ஆற்றாமை எனப் பிரித்தறிய முடியாத ஒலியில் அது ஒலிக்க.. முகமோ சொல்லாத பாவத்தைத் தத்தெடுத்து இருந்தது.. தன்யாவால் கணவனின் மனநிலையை உணர முடியவில்லை.

இவர்களுக்கான அழைப்பு வரவும் கணவன் மனைவி இருவரும் டாக்டர் அறைக்குள் நுழைய, “Hai... hello மிஸ்டர் திபாகரன்.. வாங்க.. எப்படியோ ஒருவழியா உங்கள ஜெர்மன் விட்டுடுச்சி போல.. இல்ல உங்க மனைவிக்காகச் சீக்கிரம் பறந்து வந்துட்டிங்களா?” என்று டாக்டர் லதா இயல்பாய் கேட்க

“மனைவிக்காகத் தான் மேம்” சின்னச் சிரிப்புடன் இவன் ஒற்றுக்கொள்ள

இருவரையும் விழி விரித்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்யா.

“ஹா.. ஹா.. that's fine” என்றவர் பின் “என்ன normal check up தான?” என்று கேட்க

“S mam” திபாகரன்

“ஓகே.. நீங்க இங்கையே வெயிட் பண்ணுங்க.. வா தன்யா” என்றவர் தடுப்புக்கு அந்தப் பக்கம் அவளை அழைத்துச் சென்று சில பரிசோதனைகளை மேற்கொள்ள.. அதில் எதுவும் பெண்ணவள் கருத்தில் பதியவில்லை.. மண்டைக்குள் பல கேள்விகள்.. அதற்கு விடை அறிய நினைத்தவளோ “டாக்டர் உங்களுக்கு அ..வர.. என்... என் கணவரைத் தெரியுமா” என்று இவள் கேட்டிட

தன்யாவை விசித்திரமாய் பார்த்த டாக்டர் லதா “ஏன் தெரியாது உன் திருமணத்துக்கு நான் வந்திருந்தேனே தன்யா”

“அதில்ல டாக்டர் இவ்வளவு சகஜமா பே..சுற.. அ..ளவு..

க்கு” தன் கேள்வியே அபத்தமோ என்ற எண்ணத்தில் சற்றே ஸ்ருதி குறைந்து நலிந்து ஒலித்தது பெண்ணவள் குரல்.

[QUOTE="yuvanika, post: 5543, member: 4"] [JUSTIFY][B][SIZE=7]மனைவியின் திடீர் மாற்றத்தில் குழம்பினாலும் அவளிடம் எக்கேள்விகளையும் கேட்டு மனசஞ்சலத்தை உருவாக்காமல்... அணைத்து, பரிவாய் இவன் முதுகை வருடிக் கொடுக்க… சற்றே ஆசுவாசமானாள் தன்யா. [/SIZE][/B] [SIZE=7][B] அங்கிருந்த மற்றோர் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்றவன், “இது என்னோட personal room, அது வாஷ் ரூம் போ.. போய் முகம் அலம்பிட்டு வா” என்றிட அவன் சொன்னதை தன்யா செய்து வரவும்… கையில் flask உடன் உள்ளே வந்தவன் மனைவியின் கைப்பிடித்துக் கட்டிலில் அவளை அமர வைத்து… கப்பில் டீயை ஊற்றி தன்னவளிடம் தந்து “இதைக் குடி ரிது… தெம்பா இருக்கும்” என்று சொல்ல கணவனின் பரிவில் கண்கள் கலங்கியது பெண்ணவளுக்கு.. அதைக் கண்டவன் “ரிது என்ன இது சின்னப் பிள்ள மாதிரி.. I am always with you” என்று ஆத்மார்த்தமாய் இவன் மொழிய அதில் முதல் முறையாகப் பெண்ணின் மனது தடம்புரண்டது என்றால் அவள் நெஞ்சிலோ கோடி பிரவாகம் ஊற்றெடுத்தது… டீயைக் குடித்து முடித்ததும் இவள் அறையைக் காண.. இதுவும் கனகச்சிதமாய் இருக்க ஒரு சிறிய கட்டிலின் மேல் மெத்தை வீற்றிருக்க.. பக்கத்தில் மேஜை விளக்குடன் கூடிய மேஜை மற்றும் ஒரு நாற்காலி இருக்க… சுவரோடு பதித்த அலமாரியில் சில கோப்புகளும் திபாவின் ஆடைகள் என அவ்வறையே நேர்த்தியாய் இருந்தது. மனைவியின் முகத்தில் தெளிவைக் கண்டவன் “நீ கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுக்கறியா ரிது… எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்… இல்ல நாம வீட்டுக்குப் போகனும்னா சொல்லு… நாம இப்பவே கிளம்பலாம்..” என்றவன் கேள்விக்கு “இல்ல விதுன் I am alright.. நான் அங்க front officeல உங்க கூட இருக்கேன்.. நீங்க முடிச்சிட்டு வாங்க” என்று இவள் மறுத்திட மனைவியின் குரலில் பழைய துள்ளல் இல்லை என்றாலும்.. அதில் சோர்வும் இல்லை என்பதை உணர்ந்தவன்… அவள் கையிலிருந்த கப்பை வாங்கிக் கொண்டு “குட் கேர்ள்.. நீ இங்கேயே இரு நான் வரேன்” என்றவன் மனைவியின் கன்னத்தைக் கிள்ளி விட்டு விலக எத்தனிக்க அவனை நகர முடியாத படி தன்னவனின் டி ஷர்ட்டின் நுனியை இருக்கப் பற்றி இழுத்திருந்தாள் தன்யா. மனைவியின் சிறுபிள்ளைத் தனமான செயலில் ஒரு விரிந்த புன்னகையைத் தந்தவன் தன்னவளை நெருங்கி, “என்ன ரிது பேபி... என்ன வேணும் உனக்கு” என்று இதமாய் கேட்டிட [/B][/SIZE] [B][SIZE=7] “நான் உங்களுக்கு சிரமம் தரேனா.. என் மேல உங்களுக்குக் கோபம் வருதா.. அதனால தான் என்ன தனியே விட்டுப் போறீங்களா… நான் யூஸ்லெஸ்.. மட்டி.. எனக்கு மூளை இல்ல.. எனக்கு எதையும் செய்யத் தெரியாது.. I am unfit அதான.. இப்படித் தான உங்களுக்கு என்னைய திட்ட தோனுது? சொல்லுங்க விதுன் இதான.. திட்டுங்க நீங்களும் என்னையத் திட்டுங்க.. நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு என்னைத் திட்டுங்க.. தண்டம் நான்.. I am unfit விதுன்.. unfit..” என்று ஆற்றாமையோடு விசும்பியவளோ கைகளால் முகத்தை மூடிக் கொள்ள [/SIZE][/B] [SIZE=7][B] விதிர்விதிர்த்துப் போனான் திபாகரன்… 'இவ என்ன சொல்றா! நாம எப்போ அப்படி எல்லாம் சொன்னோம்.. ஒருவேளை என்னையும் மீறி என்றாவது நான் இப்படித் திட்டியிருப்பனோ.. இல்லையே அதற்கு வாய்ப்பே இல்லையே' என்று உணர்ந்தவன் 'பிறகு ஏன் இந்த அழுகை?' என்று நினைத்தவனோ தன் கையிலிருந்த கப்பை மேஜையில் எறிந்து விட்டு.. மனைவியின் இருகைகளையும் பிரித்து.. தன்னவளின் முகத்தைத் தன் வயிற்றோடு கட்டிக் கொண்டவனின்… விரல்களோ மனைவியின் கேசத்தை வருட.. உதடுகளோ “சில்லி கேர்ள்… என்ன பேச்சி இது… இப்ப தான என் ரிது குட் கேர்ள்னு சொன்னேன்.. அதுக்குள்ள இப்படி அழலாமா?.. you are brave டா.. உன்ன யாராவது தண்டம்னு சொல்லுவாங்களா?..” என்ற கணவனின் சமாதான வார்த்தைகளில் இன்னும் வெடித்துக் கதறினாள் தன்யா. ஆயிரம் சமாதான வார்த்தைகள் இவன் சொல்ல... எதுவும் அவளைச் சென்றடையவில்லை. அதில் மனைவி மேல் இரக்கம் எழ.. தன்னவளின் முகம் நிமிர்த்தி, “ரிது.. ரிது.. ச்சுப்..” என்று தன் உதட்டின் மேல் ஒற்றை விரல் வைத்து இவன் அதட்டலிட.. அதற்குப் பலனாக சற்றே மட்டுப்பட்டது தன்யாவின் அழுகை. ஆனால் இன்னும் கேவிய படி அவள் இருக்கவும் “மூச்.. சத்தம் வரக் கூடாது.. என்ன அழுகை இது. ஆஹாங்.. உன்ன யாரும் திட்டல திட்ட மாட்டாங்க.. யார் திட்டவும் நான் விட மாட்டேன்.. புரியுதா..” என்றவன் அதட்டி உருட்டி மிரட்டிட அதற்குக் கட்டுப்பட்டு அழுகையை மட்டுப்படுத்தினாள் தன்யா. அழுது அழுது சிவந்திருந்த மனைவியின் முகத்தையும் கண்களில் மிரட்சியையும் பார்த்தவனுக்கு உள்ளே வலித்தது. ஆனால் இவளிடம் தற்சமயம் மென்மையைக் கையாளக் கூடாது என்பதை அறிந்ததால்… மனவெதும்ப வேறு வழியில்லாமல் மிரட்டியிருந்தான் இவன். பின் விசும்பலுடனே தன்னவனின் மடியிலேயே இவள் உறக்கம் கொள்ள.. மனைவியின் தலையை மடி தாங்கியபடியே இவனும் சில கோப்புகளைப் பார்வையிட.. அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர.. போன் சத்தத்தில் தான் எழுந்தாள் தன்யா. “ரிது லன்ச் டைம் அதான் பாலாஜி கால் பண்றார்.. Fresh ஆகி வா நாம சாப்பிடலாம்” என்றவன் எதுவும் நடவாததைப் போல் கோப்புகளை ஒதுக்கி வைக்க [/B][/SIZE] [B][SIZE=7]அவனைக் கண்டவள் “சாரி விதுன் நீங்க ஹாப்பி மோட்ல வந்திங்க நான் அதை ஸ்பாயில் பண்ணிட்டேன் சாரி” இவள் உணர்ந்து சொல்ல “என்ன பேச்சி இது… சாரி எல்லாம் கேட்டுகிட்டு... இனி இதைப் பத்தி பேசாத போ.. fresh ஆகி வா” என்று இவன் கண்டிக்கவும்.. முகம் விழுந்து விட ஓய்வறைக்குள் சென்று மறைந்தாள் தன்யா.. மனைவியின் முகம் இவனை வாட்ட “ஊஃப்” என்று ஒரு நெடுமூச்சினை வெளியிட்டுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் இவன்.[/SIZE][/B] [SIZE=7][B] அவள் வந்ததும் ஆபிஸ் மேஜை மேலேயே உணவுகளை வைத்து எவ்வித பேச்சுமின்றி இவன் இருவருக்கும் பரிமாற.. அவ்வமைதி பிடிக்காமல் “ஆமா சித்ரா அக்காவுக்கு எப்ப கல்யாணம்?” என்று இவள் கேட்க “உனக்கு சித்ரா அக்கா இல்ல அண்ணி..” என்று திருத்தியவன் “கார்த்திக் இப்ப வெளிநாட்டுல இருக்கான். அவன் வந்ததும் நாள் பார்க்க வேண்டியது தான்” “ஓ.. அவங்க பெண் பார்த்து இரண்டு வீடும் பேசி முடிச்சிட்டிங்களா” “இன்னும் இல்ல.. இரண்டு பேரும் விரும்புறாங்க.. சோ இனி தான் பேசனும்” இவன் தகவல் போல் சொல்ல “ஹாங்.. லவ் மேரேஜ் ஆ..” என்று உள்ளுக்குள் ஜெர்க்கானாள் இவள்.. பின்னே எப்போதும் கடுகடு என்று இருக்கும் சித்ரா காதலிக்கிறாள் என்றால் இவளுக்கு எப்படி இருக்கும் “ஆமா லவ் மேரேஜ்.. ஆனா அரேன்ஜ் மேரேஜ்” என்ற கணவனை இவள் என்ன டா இது என்பது போல் பார்க்க “அம்மாவுக்கு லவ்னா பிடிக்காது.. அதான் அரேன்ஜ் மேரேஜ் மாதிரி பேசப் போறேன்.. ஆனா சித்ராவும் கார்த்திக்கும் என் கிட்ட சொல்லிட்டாங்க” “ஓ..” “நீ அம்மா கிட்ட இது லவ் மேரேஜ்னு சொல்லிடாத” அதற்கு மறுப்பின்றி “சொல்ல மாட்டேங்க” என்றவளோ மனதிற்குள் 'நான் சொல்லி அவங்க கேட்டுட்டாலும்… ஆனாலும் இவருக்கு அதீத கற்பனை தான்' என்று நொடித்துக் கொண்டாள் பெண்ணவள். “கார்த்திக் என் நண்பன்... இந்தக் கம்பெனி ஆரம்பிக்க அவன் தான் முழுக் காரணம்… பெரிய தொழிலதிபர் பையன்.. ஆனா அந்தப் பந்தா அவன் கிட்ட இருக்காது. நல்லவன் தங்கமான குணம்... சித்ராவுக்கு ஏத்த ஜோடி. நான் வெளிநாட்டில் இருந்த போது அவன் அப்பா தான் நம்ம கம்பெனிய பார்த்துகிட்டார்.. அவரும் நல்ல மாதிரி தான்.. நம்ம கம்பெனி முழு வளர்ச்சியோடு இன்று என் கைக்கு வர அவர் தான் காரணம்” என்று இவன் மனைவி கேட்காத இன்னும் சில தகவல்களையும் சொல்ல அமைதியாய் கேட்டுக் கொண்டாள் தன்யா. உண்டு முடித்து சற்றே ஓய்வுக்குப் பின்… ஃபாக்டரியை ஒரு முறை பார்வையிட்டவன்.. மனைவியைக் கண்டு, “ரிது கிளம்பு ஆஸ்பிட்டல் போய் வரலாம்” என்றழைக்க “என்ன ஆச்சி விதுன் உடம்புக்கு முடியலையா” என்று பதட்டத்துடன் இவள் தன்னவனின் கழுத்தில் கை வைத்துக் கேட்டிட “எனக்கு எதுவும் இல்ல டி” “அப்ப யாருக்கு என்னங்க” இவளிடம் அதே பதட்டம் “சில் ரிது.. யாருக்கும் எதுவும் இல்ல.. ஜஸ்ட் செக் அப் தான் வா” என்றழைக்கவும்.. உடன் சென்றாள் இவள். [/B][/SIZE] [B][SIZE=7]மருத்துவனையைக் கண்டதும் மறுபடியும் ஜெர்க்கானாள் பெண். அது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல்.. அவளின் குடும்ப டாக்டர் இங்கிருக்க.. தன் வாழ்நாளில் அதிக முறை அவள் வந்து சென்ற மருத்துவமனையும் இது தான்.. 'பெற்றோர் யாருக்காவது எதுவோ இல்லைனா அப்பத்தாவுக்கு' என்று சற்றே கலங்கிய மனதுடன் இவள் நடக்க எதிர்ப்பட்டார் டாக்டர் நதியா.. இவர்களைக் கண்டதும் “Hello sir, how are you? என்று திபாகரனைக் கேட்டவள் “how is your health தன்யா? என்று தன்யாவின் உடல்நிலையையும் விசாரிக்க [/SIZE][/B] [SIZE=7][B] அதற்கு கணவன் மனைவி இருவரும் ஒருசேர “fine” என்ற வார்த்தையை மொழிய அதில் மெல்ல சிரித்துக் கொண்டவர் “any emergency” என்று விசாரிக்க திபாகரன், “Nothing, லதா மேம்ம பார்க்கனும் அப்பாய்ன்மெண்ட் வாங்கியிருக்கேன்” “ஓ.. ஓகே.. let see you later.. take care தன்யா” என்ற நதியா அங்கிருந்து விலகவும் “உங்களுக்கு நதியா மேம்ம தெரியுமா.. அப்புறம் லதா மேம்னு சொன்னீங்களே.. அது இவங்க சீனியர் லதா ஆன்ட்டியா?” என்று பெண்ணவள் ஆர்வமாய் கேட்க அதில் நின்று தன் உஷ்ண பார்வையால் மனைவியை எதிர் கொண்டவன், “இதென்ன கேள்வி.. லதா மேம், நதியா மேம் இவங்க இருவரையும் எனக்கு எப்படித் தெரியாம போகும்?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது... வருத்தம், கோபம், ஆற்றாமை எனப் பிரித்தறிய முடியாத ஒலியில் அது ஒலிக்க.. முகமோ சொல்லாத பாவத்தைத் தத்தெடுத்து இருந்தது.. தன்யாவால் கணவனின் மனநிலையை உணர முடியவில்லை. இவர்களுக்கான அழைப்பு வரவும் கணவன் மனைவி இருவரும் டாக்டர் அறைக்குள் நுழைய, “Hai... hello மிஸ்டர் திபாகரன்.. வாங்க.. எப்படியோ ஒருவழியா உங்கள ஜெர்மன் விட்டுடுச்சி போல.. இல்ல உங்க மனைவிக்காகச் சீக்கிரம் பறந்து வந்துட்டிங்களா?” என்று டாக்டர் லதா இயல்பாய் கேட்க “மனைவிக்காகத் தான் மேம்” சின்னச் சிரிப்புடன் இவன் ஒற்றுக்கொள்ள இருவரையும் விழி விரித்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்யா. “ஹா.. ஹா.. that's fine” என்றவர் பின் “என்ன normal check up தான?” என்று கேட்க “S mam” திபாகரன் “ஓகே.. நீங்க இங்கையே வெயிட் பண்ணுங்க.. வா தன்யா” என்றவர் தடுப்புக்கு அந்தப் பக்கம் அவளை அழைத்துச் சென்று சில பரிசோதனைகளை மேற்கொள்ள.. அதில் எதுவும் பெண்ணவள் கருத்தில் பதியவில்லை.. மண்டைக்குள் பல கேள்விகள்.. அதற்கு விடை அறிய நினைத்தவளோ “டாக்டர் உங்களுக்கு அ..வர.. என்... என் கணவரைத் தெரியுமா” என்று இவள் கேட்டிட தன்யாவை விசித்திரமாய் பார்த்த டாக்டர் லதா “ஏன் தெரியாது உன் திருமணத்துக்கு நான் வந்திருந்தேனே தன்யா” “அதில்ல டாக்டர் இவ்வளவு சகஜமா பே..சுற.. அ..ளவு..[/B][/SIZE] [B][SIZE=7]க்கு” தன் கேள்வியே அபத்தமோ என்ற எண்ணத்தில் சற்றே ஸ்ருதி குறைந்து நலிந்து ஒலித்தது பெண்ணவள் குரல்.[/SIZE][/B][/JUSTIFY] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Jayayuvanika Novel
Jayayuvanika Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
நெஞ்சம் 16
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN