நாட்கள் அதன் போக்கில் நகர… ஓர் நாள் விடியற்காலையில் நல்ல உறக்கத்தில் சில அசௌகரியத்தைத் தன்யா உணரவும்... எழுந்தவள் கணவனை எழுப்பாமல் பாத்ரூம் சென்று வர... மனைவியின் அசைவில் விழித்தவன் "என்ன ரிது என்ன ஆச்சி" என்று தூக்க கலக்கத்துடன் கேட்க
பெண்ணவள் என்ன சொல்வாள் அவளுக்கே தெரியாத உள்ளக்கிடக்கை என்னவென்று சொல்வாள் "ஒன்னும் இல்ல விதுன்... தண்ணி குடிக்க எழுந்தேன் நீங்க தூங்குங்க" என்று பொய்யுரைத்தவள்... சொன்னதை மெய்யாக்க நீரை அருந்தி முடித்துப் படுக்கையில் சயனிக்க... உறக்கம் தான் எட்டவில்லை...மாறாக அவளின் மனதில் சொல்ல முடியாத பாரம் ஒன்று அழுத்த... மனசஞ்சலத்தில் தவித்தவள் படுக்க இயலாமல் எழுந்து... அங்கிருந்த french window உடன் அமைந்திருந்த மெத்திருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியே இவள் வான்வெளியை வெறிக்க
படுக்கையில் மனைவி இல்லை என்பதை அறிந்த திபாகரன் சத்தமில்லாமல் எழுந்து வந்து மனைவியை நெருங்கி அவளின் தோள் தொட்டவன் "என்ன ரிது உனக்கு என்ன செய்து" என்று பரிவாய் கேட்க
திரும்பி கணவனின் முகம் பார்த்தவள் "தெரியலங்க... ஆனா மனசு ஏதோ பாரமா இருக்கு.. ஏதோ ஒன்னு மனச பிசையிது.. ஏதோ சரியில்லங்க" என்று தன் மன சஞ்சலத்தைச் சொல்லியவள் பின் "நான் கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவா" என்று கேட்டிட
மறுப்பின்றி அமர்ந்தவன் பரிவுடன் மனைவியை மடி தாங்கி... பேச்சற்று அவளின் தலை வருட... சற்றே ஆசுவாசமானாள் தன்யா. 'தெரியல... எதனால என் மனசு இப்படி என்ன அழுத்துதுன்னு தெரியலையே' என்று பெண்ணவள் தன்னுள்ளே கேட்டுக் கொண்டிருந்த நேரம் அவளின் கைப்பேசிக்கு அழைப்பு வர… உடல் அதிர்ந்தது இவளுக்கு... அதில் மனைவியைத் தட்டிக் கொடுத்தவன் "உனக்குத் தான் கால்.. நான் போய் யாருன்னு பார்க்கறேன்... நீ அமைதியா இரு" என்றவன் எழுந்து சென்று மேஜை மேலிருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்து... பின் மனைவியைத் தன் விழியால் நிரப்பிக் கொண்டே கைப்பேசியை அழுத்த எதிர் திசையில் சொன்ன செய்தியில் ஒரு நொடி இவன் முகம் கலக்கத்தைக் காட்டி மறைத்தது. பின் நிதானமாகச் சிறு குரலில் இவனும் இரண்டொரு வார்த்தையைப் பேசி அழைப்பைத் துண்டித்தவன்... இயல்பாய் மனைவியை நெருங்கி "எதுவும் இல்ல... ரிது... வா இப்ப நாம கொஞ்சம் வெளிய போய் வரலாம்" என்று தன்னவளை அழைக்க... இந்த நேரத்திலா என்ற எண்ணத்தில் இவள் மனதில் அபாயமணி ஒலித்தது. ஆனாலும் எதைப் பற்றியும் தோண்டித் துருவாமல்... ஒருவித நடுக்கத்துடனே இவளும் ரெடியாக... திபாகரன் சென்று தாயை அழைத்து அனைத்தையும் பகிர்ந்தவன்.. நேரம் கடத்தாமல் மனையாளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்து மருத்துவரை சந்திக்க…
மருத்துவர் “அவங்களுக்குக் கொஞ்ச நாளாவே மூச்சுத் திணறல் அதிகமா இருக்கு… நாங்களும் எங்களால முடிந்தத செய்துட்டு தான் இருக்கோம்.. வயசாகிடுச்சி இல்லயா.. உடல்நிலை கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன் தான்.. இன்று அவங்க பேத்திய பார்த்துப் பேசனும்னு சொன்னாங்க.. அதான் உங்க இரண்டு பேரையும் வர சொன்னோம்... இப்ப அவங்க நார்மல் போய்ப் பேசுங்க” என்றிட
மருத்துவர் பேசிய அனைத்தையும் மவுனமாய் கேட்டுக் கொண்டிருந்த தன்யா… தற்போது அழுகையின் ஊடே கணவனின் கையை இறுகப் பற்றிக் கொள்ள… பயத்தில் சில்லிட்டிருந்த தன்னவளின் விரல்களைத் தானும் இறுகப் பற்றியவனோ “ஒன்னும் இல்ல.. பயப்படாத.. பாட்டிக்கு எதுவும் ஆகாது” என்று மனைவிக்குத் தைரியம் சொல்லியபடி இருவரும் ICU அறையினுள் நுழைய
அங்கு உடல் குன்றி கண்ணில் ஜீவனற்று பல வித உபகரணங்களுடன் படுத்திருந்த தன்யாவின் பாட்டி.. பேத்தியைப் பார்த்ததும் பரிவுடன் லேசாய் உதட்டை இழுத்து.. கை விரல்களைச் சிறிதே அசைத்துத் தன்னை நோக்கி அழைக்க.. அதில் பெண்ணவள் ஓடிச் சென்று அவரின் கையைப் பற்றிக் கொண்டு “அப்பத்தா” என்று வீரிட
பின்னோடு வேகமாய் வந்து மனைவியின் முதுகை வருடிய திபாகரன் “ரிது பாட்டிக்கு அதிகச் சத்தம் ஆகாது” என்று எச்சரிக்க.. அதில் தன்யா சற்றே அழுகையைக் கட்டுப்படுத்தவும்… மெல்ல பேத்தியின் தலையை வருடிய பாட்டி “நீ நல்லா இருப்ப கண்ணு.. அழாத.. எனக்கு என்ன.. தங்கமான ஒருத்தன் கிட்ட உன்ன ஒப்படச்சிட்டனே.. இனி நான் நிம்மதியா போவேன் கண்ணு” என்று நிறுத்தி நிதானமாய்.. மூச்சு விடச் சிரமப் பட்டு அவர் திணறலோடு பேச
பெரியவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு திபாகரன் “நீங்க எதுவும் பேச வேணாம் அமைதியா தூங்குங்க” என்க
“இனி நிம்மதியா தான் தூங்கப் போறேன் அதுக்கு முன்னாடி சிலத பேசனும்” என்று பாட்டி சொல்லி கொண்டிருந்த நேரம் வக்கீல் வல்லவன் அறையினுள் நுழைந்தார்.
அவரைக் கண்டு வரவேற்பாய் மெல்ல தலையசைத்த பாட்டி… திபாகரனிடம் “என் பேத்திக்கு ஏத்தவன நான் தேடினப்ப.. கண்யவானா.. கடமை தவராதவனா.. திறமைசாலியா.. ஒழுக்கமானவனா இப்படி எல்லாத்திலும் சிறந்தவனா என் கண்ணுக்கு அன்று நீ தான் தெரிஞ்ச.. பொருளாதாரத்தில் உங்க இருவருக்கும் ஏற்றத் தாழ்வு இருந்தாலும்… என் பேத்திக்கு நீ தான் கணவன் என்றதுல நான் பிடிவாதமா இருந்தேன்” என்றவர் சற்றே நிறுத்தி “என் வீட்டில் உனக்கு நடந்த அவமானம் எனக்குத் தெரியும் திபாகரா" அன்று நடந்ததைச் சோனியா மூலம் அறிந்திருந்தார் பெரியவர் "உன் சுயமரியாதைக்குப் பங்கம் வந்த பிறகு.. உன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து அதனால் நான் உன்னைக் கேட்காமல் சில முடிவுகளை எடுத்திருக்கேன்” என்று சொன்னவர் வக்கீலைக் காண
அவரோ, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் “அம்மாவோட நகையைத் தன்யாவுக்குத் தரச் சொல்லிட்டாங்க… அவங்க பெயரிலிருந்த FDயும் தன்யா பெயரில் மாத்த சொல்லிட்டாங்க.. அது மட்டும் இல்லாம திருநெல்வேலியில் உள்ள அம்மாவோட பூர்வீக வீடு… மேகமலையில் உள்ள ஏலக்காய் தோட்டம்.. வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ்… இதை எல்லாம் தன்யா பெயர்ல எழுதி இருக்காங்க” என்று வக்கீல் சொல்ல
“இதெல்லாம் என் புருஷன் சுய சம்பாதியத்துல என் பெயரில் வாங்கின சொத்துக்கள்” என்று இடையிட்டு சொல்லிய பாட்டி “இதை எதையும் நீ மறுக்கக் கூடாது தம்பி… அதே போல் தன்யாவின் தாய் தந்தையரின் உழைப்பில் உண்டான சொத்துக்களை நீங்க மறுத்தாலும்… எதிர் காலத்தில் உங்க பிள்ளைக்களுக்குச் சேரனும் அதுக்கும் நீங்க மறுக்கக் கூடாது..” என்றவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட
பரிவுடன் பாட்டியின் கையைப் பற்றிய திபாகர் “நீங்க இவ்வளவு சொல்லனுமா பாட்டி… இதைச் செய்டான்னு சொல்லுங்க செய்றேன்… உங்களுக்கு எந்தக் கவலையும் வேணாம்… தன்யா என் மனைவி அவளைப் பற்றிய பயம் உங்களுக்கு வேணாம்” என்று உறுதியளிக்க
பாட்டி “இது போதும் தம்பி எனக்கு” என்றவர் சோர்வில் கண்களை மூடிக் கொள்ள
பாட்டியின் சோர்வில் பதட்டமடைந்த தன்யா… அவரின் கண்ணம் வருடி “அப்பத்தா.. அப்பத்தா.. எனக்கு இது எதுவும் வேணாம்… எனக்கு நீங்க தான் வேணும்..” என்று கண்ணீருடன் மொழிய
“நான் உன்ன விட்டு எங்க கண்ணு போய்டுவேன்.. நீ வேணா பார் திரும்பவும் நான் உனக்கே மகளா வந்து பிறப்பேன் கண்ணு” என்று பாட்டி அந்நிலையிலும் பாசத்தைப் பொழிய… அவரின் பாசத்தைக் கண்டு திபாகரன் மற்றும் வல்லவன் இருவரின் கன்னங்களும் கண்ணீரில் நனைந்தது.
இந்தத் தாத்தா பாட்டிகளின் அன்பு தான் எத்தகையது… நம்மைப் பெற்ற தாய் தந்தையரை விட.. பல படி மேலாகத் தன்னலமற்ற அன்பைத் தர அவர்களால் மட்டும் தான் முடியும்.
இங்குத் தன்யாவுக்கும் அப்படித் தான் தோன்றியது… தாயைப் போல் பாசம் காட்டி.. தந்தையைப் போல் அரவணைத்து… ஆசானைப் போல் சொல்லிக் கொடுத்து… ஒரு தாதியாய் தன் வலிகளைத் தாங்கிய… தன் அப்பத்தா இன்று உடல் குன்றிய நிலையிலும் தன் எதிர்காலச் சந்ததிகளுக்கும் சேர்த்து யோசித்து வைத்திருப்பதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தது இவளுக்கு.
அப்பத்தாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகவும்… இவர்களை வெளியே அனுப்பிய மருத்துவர்கள்… பெரியவருக்கு மருத்துவ உதவியை மேற்கொண்டனர்.
கண்ணீரில் கரைந்த மனைவியை அங்கிருந்த பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து தன் தோள் சாய்த்துக் கொண்டான் திபாகரன்… அந்நேரம் கதவைத் தட்டி விட்டு அறையின்னுள்ளே நுழைந்த வல்லவன் மூவருக்குமான காலை உணவு மற்றும் ஃப்ளாஸ்கில் காபி உடன் வந்தவர்.. தன்யாவை அதட்டி மிரட்டி.. சில சமாதான வார்த்தைகள் பேசி அவளைச் சாப்பிட வைத்து.. திபாகரனிடம் பார்த்துக் கொள் என்ற கண்ணசைப்புடன் அவர் வெளியே செல்ல நெஞ்சம் நெகிழ்ந்தது திபாகரனுக்கு.
அதையே மனைவிடம் “உன் மேல அதிகப் பாசம் வல்லவன் சாருக்கு” என்க
“ஆமா அப்பத்தாவும்.. அங்கிளும் என்ன அவ்வளவு கேர் பணண்ணுவாங்க” என்று தன்யாவும் அதை ஆமோதிப்பது போல் உணர்ந்து சொல்லியவள் “ஆமா அங்கிளும் நீங்களும் close ஆ” என்று இவள் வினவிட
மனைவியின் மனநிலையை மாற்ற நினைத்தவன் “ஹ்ம்ம்… நான் உன் விருப்பு வெறுப்புகளைத் தெரிஞ்சிக்க நினைத்த போது எனக்கு உதவியது சார் தான்… வீட்டில் நம்ம ரூம பார்த்திருப்பியே… எல்லாம் உனக்காக வல்லவன் சாரைக் கேட்டு அவர் உதவியுடன் உன் அம்மா வீட்டில் உன்னுடைய அறை போல்.. உன் விருப்பத்திற்கு ஏற்ப செய்தேன்…” என்று சொல்ல
கணவன் தன்னக்காக யோசித்து… செய்ததை நினைத்து உள்ளம் குளிர்ந்தது இவளுக்கு “ஹ்ம்ம்… ஆமா நீங்க எப்ப அம்மா வீட்டுக்கு வந்திங்க.. அப்ப என்ன நடந்தது.. அப்பத்தா ஏதோ சொன்னாங்களே” என்று இவள் யோசனையுடன் தெரிந்து கொள்ளக் கேட்க
அதில் மனைவியின் கையைத் தன் கரங்களுக்குள் சிறு பரிவோடு பொத்திக் கொண்டவன் “அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட கொஞ்சம் பேசனும் இப்ப பேசவா” என்று இவன் தயக்கத்துடன் அனுமதி கேட்க
“ஹ்ம்ம்..” அப்படி என்ன பேசப் போறார் என்ற எண்ணத்தில் இவள் அனுமதி தர
திபாகரன் “நம்ம திருமணம் என்ன மாதிரி சூழ்நிலையில… எதன் அடிப்படையில நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா” என்று கேட்க
அது தெரியாமல் இருக்குமா.. அதன் நினைவில் பெண்ணவள் உடல் விரைத்தது.. அதை உணர்ந்தவனோ மனையாளின் விரல்களை மென்மையாய் வருடி “இதோ.. இது தான்.. இந்த ஒரு தடவை மட்டும் பேசிடறேன்” என்றவன் “என் அப்பா.. உன் அப்பா கம்பெனில பணத்த கையாடல் செய்துட்டார்… அது சம்பந்தமா உன் வீட்டுக்கு நான் பேச வந்தேன்…”
“அப்ப தான் என் அப்பத்தா உங்களப் பார்த்தது.. அப்ப நீங்க பேசினதக் கேட்டு உங்க குணம் பிடிச்சிப் போய்த் தான்.. என்ன கட்டிக்கச் சொல்லி உங்கள நிர்பந்தித்தது… அன்று இது எதுவும் எனக்குத் தெரியாது.. நீங்க வெளிநாட்டிலிருந்து திரும்பி வரவிருந்த கொஞ்ச நாளைக்கு முன்ன தான் உங்க அப்பா செய்த தவறும்.. அதன் மூலம் நடந்த நம்ம திருமணமும் எனக்குத் தெரிய வந்தது..” என்று தன்யா இடையிட்டு மொழிய
“ஹ்ம்ம்..” ஆமோதிப்பாய் அதை ஏற்றுத் தலை அசைத்தவன் “எனக்கும் நம் திருமணத்திற்கு முன்பு உன் உடல் நிலை பற்றித் தெரியாது.. ஏன் உன் பெயர் கூட எனக்குத் தெரியாது… அதை அன்று நான் தெரிஞ்சிக்க விரும்பலன்னு தான் சொல்வேன்” இவன் தன்னிலை விளக்கம் தர
அதில் மனைவியின் முகத்தில் ஏமாற்றத்துடன் கூடிய அதிர்ச்சியைக் காணவும் “ரிது pls try to understand me… நீ கருப்பா சிவப்பான்னு கூடத் தெரியாத அன்றைய நிலையில உன்ன நான் வெறுக்கவோ… மறுக்கவோ இல்ல.. நிஜத்தை சொல்லனும்னா திருமணமே வேணாம்னு இருந்த என்னிடம்.. என் தந்தைக்காகத் தவணை பற்றிப் பேச வந்தப்போ உன்ன கல்யாணம் செய்துக்கச் சொல்லி உன் வீட்டில் என்ன லாக் பண்ணாங்க.. அப்ப நான் படிச்சிட்டு இருந்தேன். என் லட்சியம் கனவு எல்லாம் வேற ரிது… அந்த நேரத்து கோபத்துல தான் நான் உன்ன மறுத்தது… அதாவது திருமணம் வேணாம்னு மறுத்தேன்… ஆனா அதே பிடிவாதத்தில் என்ன இருக்க விடாம.. எந்தத் தாயும் செய்யக் கூடாத ஒன்றை என் அம்மா அன்று செய்யவும்… என்னால நிலையா மறுக்க முடியல” அன்றைய நிகழ்வில் கணவனின் குரல் துயரத்தில் ஒலிக்கவும்
மாமியார் மூலம் அதை அறிந்திருந்த தன்யா பரிவாய் தன்னவனின் விரல்களை வருடிக் கொடுக்க… அதில் அன்றைய நிகழ்வில் இருந்து மீண்டவன் “அதன் பின் நம்ம திருமணத்திற்கு நான் சம்மதிச்ச பிறகும்.. நான் உன்னைப் பற்றித் தெரிஞ்சிக்க விரும்பல… அது என் அம்மாப்பா என்னைப் புரிஞ்சிக்கலையே என்ற ஆற்றாமை… ஆனா உன்ன நான் வெறுக்கல… அதிலும் நம் திருமணத்தப்ப குழந்தைத் தனத்துடன் முயல் குட்டியாய் தத்தித் தத்தி வந்து என் பக்கத்துல அமர்ந்த பார் அந்ந நொடி முழுமையா நீ எனக்குள்ள நுழைச்சிட்ட டி” என்று காதலோடு மொழிந்தவன் “பிறகு எனக்கான முதல் கடமையான என் படிப்பை முடிச்சி நான் நிமிர்ந்த போது… நான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனும்னு அவங்கள கட்டாயப் படுத்தினதா அம்மா சொன்னாங்க”
“இல்ல… இல்ல.. அப்படி எல்லாம் அப்பத்தா உங்கள நிர்பந்திக்கல… ஒருவேளை மம்மி டாடி சொல்லியிருக்கலாம்” என்று இடையிட்டுத் தன்யா தன் சந்தேகத்தைச் சொல்ல
“ஹ்ம்ம்… நானும் அப்படித் தான் நினைச்சேன்" என்றவன் "அந்தக் கோபத்துல உன்னைப் பார்க்க நான் வீட்டுக்கு வரல… ஆனா அப்படி இருக்க முடியாம நான் வெளிநாடு போக விசா சம்பந்தமா விசாரணை வரவும்… உன் கிட்ட இதைப் பேசியே தீரனும் என்ற முடிவுல.. உன் வீட்டுக்கு நான் வந்தப்ப நீ வீட்டில் இல்ல.. உன் மம்மி தான் என் கிட்ட பேசினாங்க” என்றவன் அன்று நடந்த அனைத்தையும் சொல்ல
கேட்ட தன்யாவுக்குத் திகைப்பு… மம்மி இவ்வளவு பேசி இவரை அசிங்கப் படுத்தினாங்களா.. கூடவே மம்மி பேச கூடியவர் தான் என்ற எண்ணத்தில் “சாரி… சாரிங்க மம்மி இப்படி எல்லாம் பேசினது எதுவும் எனக்குத் தெரியாது.. ஆனா அப்பாத்தாவுக்குத் தெரிஞ்சிருக்கு.. உங்களுக்கு என்னைப் பார்க்க விருப்பம் இல்லையோன்னு தான் நான் நினைச்சிருந்தேன்”
“அது எப்படி நான் பார்க்க விரும்பலன்னு நினைப்ப… ஆரம்பத்துல இருந்து நீ என்ன தவறா தான் புரிஞ்சிருக்க” என்று கோபத்துடன் இடைவெட்டிய திபாகர்
“அங்கையும் உன் உடல்நிலை பற்றி நான் விசாரிக்கத் தவறிட்டேன்… உனக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்கும்னு நான் நினைக்கல ரிது… உன் அம்மா பேசினத என் வீட்டில் வந்து என் அப்பாம்மா கிட்ட நான் சொல்லவும்… இப்படி மகன் வாழ்க்கைய அழிச்சிட்டோமே என்ற குற்ற உணர்வுல… மனம் தாங்காம அப்பா தற்கொலை செய்துகிட்டார்… அப்பவும் நீ இறப்புக்கு வரலையேன்னு உன் மேல எனக்குக் கோபம்… ஆனா அன்று தான் மாற்று இருதயம் கிடைச்சி உனக்கு ஆபரேஷன் நடக்க இருக்குனு வல்லவன் சார் சொன்னார்… உண்மையா அதுவரை எனக்கு எதுவும் தெரியாது டி… தப்பு தான்.. பெரிய தப்பு தான்… நான் அப்படி எதுவும் தெரிஞ்சிக்காம இருந்திருக்கக் கூடாது” என்று உணர்ந்து சொல்லியவனின் குரலோ குற்ற உணர்வில் தத்தளித்தது.