யாசிக்கிறேன் உன் காதலை - 2
(தேவநாதன் மற்றும் பார்வதி(முதல் அத்தை) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் தேவ துருவன் இளையவன் தேவ வருபன்.
தேவகுமாரன் மற்றும் முல்லை(இரண்டாவது அத்தை) தம்பதியினருக்கு ஓரே மகன் தேவ ரிஷி.துருவா மற்றும் ரிஷியின் தாத்தா இருவரும் கூடப்பிறந்தவர்கள்.
குணசேகரன் மற்றும் அகிலா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் அபிவேதரசி இளையவள் அபிநேகவதி.
தனசேகரன்(முதல் சித்தப்பா) மற்றும் செல்வி தம்பதியினருக்கு ஓர் மகன் ஓர் மகள் மூத்தவன் சந்தோஷ் இளையவள் சந்தியா.
ராஜசேகரன்(இரண்டாவது சித்தப்பா) மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஓர் மகன் அபிநந்தன்.
பிரகாஷ் மற்றும் மல்லிகா(மூன்றாவது அத்தை) தம்பதியினருக்கு ஓர் மகள் மித்ரா.
தேவ துருவன் அழகான ஆண்மகன். கன்னக்குழி சிரிப்புடன், பார்க்கும் அனைவரையும் தன் சிரிப்பினால் கட்டிப்போட கூடியவன். இந்த வம்சத்தின் முதல் வாரிசு.
தேவ விருபன், தேவ ரிஷி மற்றும் சந்தோஷ். துருவிற்கும் இவர்களுக்கு இரண்டு வயது வித்தியாசம். அழகான ஆண்மகன்கள். பார்ப்பவர்களை அனைவரையும் தன் பேச்சால் திரும்பி பார்க்க வைக்கக்கூடியவர்கள்.
இவர்கள் மூவரையும் விட அபிவேதரசி(நாயகியின் அக்கா) ஆறு மாதங்கள் சிறியவள். பேபி டால் மற்றும் சந்தியா அபியை விட இரண்டு வயது சிறியவர்கள். சந்தியா அழகிய பதுமை.
அபி நந்தன் இவர்கள் இருவரையும் விட இரண்டு வயது சிறியவன். சரியான குறும்புக்காரன் தன் குறும்பால் அனைவரையும் கவரக்கூடியவன்.
நந்தனைவிட மித்ரா இரண்டு வயது சிறியவள். அழகிய பதுமை. வீட்டின் கடைக்குட்டி அனைவரின் செல்லப்பில்லை.
இப்போதைக்கு இது போதும் போகப்போக இவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம்).
பேபிடால் இரு நாட்களாக திருமணவீட்டில் மித்ரா மற்றும் சந்தியாவுடன் அலைந்து திரிந்து சோர்வுடன் வீட்டிற்கு வந்தாள். "என்னடா ரெண்டு நாளா பார்க்கவே!! முடியல ரொம்ப டயர்டா இருக்க??", என்றார் குணா.
அவர் தோளில் சாய்ந்து," நா ரொம்ப டயர்டா இருக்கேன் டாட் இங்க இருக்க டைமுக்கும் எனக்கும் ஒத்துவரல", என்றாள் சோர்வுடன்.
"பேபிடால் அபி ஏர்போர்ட்ல இருந்து வந்துட்டு இருக்கா அவள அழச்சுட்டு வர சந்தோஷ், விரு ,நந்தன் மூணு பேரும் போயிருக்காங்க டா, அவள பாத்துட்டு போய் தூங்குடா".
"ஓகே டாடி", என்று மூலையில் போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
"பேபிடால் உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வர சொல்றேன்", என்று உள்ளே சென்றார்.
சோர்வுடன் சோபாவில் சாய்ந்தவள்,எதார்த்தமாக படிக்கட்டு பக்கத்தில் இருந்த ரூமை பார்த்தாள். அந்த ரூமின் கதவில் ஓர் பெண் செடிகளுக்கு நீர் ஊற்றுவது போல் மரத்தினால் வடிவமைத்திருந்தது, அதை பார்த்ததும் அந்த அறைக்கு செல்லும் ஆர்வம் வந்தது, மெதுவாக எழுந்து கதவை திறக்க போனாள்.
"ஏய்!! பாப்பா அந்த கதவ திறக்க கூடாது", என்றார் ஒர் வயதான தாத்தா.
"ஏன் நா போவேன்??", என்றாள் வேகமாக.
"ஏய்!! பாப்பா அது சாந்திமுகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணுன அறை அங்க கல்யாணமானவங்க தான் போகணும், அதுக்குள்ள யாரும் போக கூடாதுன்னு தான் காவலுக்கு நா இங்க உட்கார்ந்து இருக்கேன் அந்த பக்கம் போ", என்று தன் கைப்பிடி தடியை எடுத்து காட்டினார்.
பேபிடால் மிரண்ட பார்வையுடன் நகர்ந்தாள்."பேபிடால் இங்க நிக்கிறியா?? வாடா", என்று குணா நடு ஹாலுக்கு அழைத்து வந்து அவள் கையில் காபியை கொடுத்தார்.
அதை வாங்கி குடித்து முடித்தவள்."டாடி சாந்திமுகூர்த்தம்னா என்ன??", என்றாள் சத்தமாக.
அதை கேட்டபடி துருவா, ரிஷி, சந்தியா மூவரும் வந்தனர். குணா லேசான அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,"என்னடா கேட்ட??", என்றார் குழப்பமாக.
"சாந்தி முகூர்த்தம்னா என்ன??", என்றாள் மீண்டும் சத்தமாக.
சந்தியா வேகமாக அவள் வாயை மூடினாள். குணா எப்படி சொல்வதுனு தெரியாமல் முழித்தார். மற்ற மூவரும் சிரித்தனர். "விடு சந்தியா காவல்னா என்ன டாட்?? இந்த தாத்தா என்னைய அந்த ரூம் குள்ள விடமாட்டிகிறாரு ஏன்னு கேட்டா சாந்திமுகூர்த்தம்னு சொல்றாங்க", என்றாள் பாவமாக.
"பேபிடால் காவல்னா செக்யூரிட்டி டா".
"அப்ப சாந்தி முகூர்த்தம்னா?? டாட்", என்றாள் வேகமாக.
"பேபிடால் அபி வந்துட்டா போல வா போய் பார்க்கலாம், அகிலா அபி வந்துட்டா", என்று உள்ளே திரும்பி சத்தமாக சொல்லி விட்டு பேபிடாலை வெளியே அழைத்து சென்றார். மற்ற மூவரும் சிரிப்புடன் பின்னால் வந்தனர்.
அபி இறங்கிய மறுநிமிடம் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. பேபிடால் குணாவின் முதுகில் மறைந்து நின்று கொண்டாள். பட்டாசு வெடித்து முடித்ததும் அபி அனைவரையும் பார்த்து," ஹாய்!!", என்று சிரித்தாள்.
குணா பேபிடாலை முன்னால் இழுத்து பக்கத்தில் நிக்க வைத்துக்கொண்டார். அத்தை மூவரும் அபிக்கு ஆரத்தி எடுத்தனர். அபி மாநிறத்தில் இருந்தாளும் திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகோடு சுடிதாரில் நவநாகரீக மங்கையாக இருந்தாள் (நம் கதை நாயகியின் அக்கா அபிவேதரசி).
"தாத்தா.. பாட்டி..", என்று அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். நேசமணி அவளை எழுப்பி பாசமாக அணைத்துக்கொண்டார்.
"உனக்காக இங்க என்ன வாங்கி இருக்கோம்னு பாருடா, கந்தா.. வரதா..", என்று தம்பிகளைக் கூப்பிட்டார். நேசமணி கையில் தட்டை கொடுத்தனர். தட்டில் வண்ண வண்ண ஆடைகள் சிறிய நகைகளுடன் நேசமணி அபிக்கு கொடுத்தார். "தேங்க்யூ தாத்தா", என்று சிரிப்புடன் வாங்கி அகிலாவிடம் தந்துவிட்டு மற்றவர்கள் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.
"டாட் எனக்கு ஏன் டிரஸ் வாங்கித் தரல?? அப்புறம் அபிக்கு ஏதோ சுத்தி பொட்டு வச்சுவிட்டாங்களே!! எனக்கு ஏன் அதெல்லாம் பண்ணல??", என்றாள் வருத்தமாக அவர் முகத்தை பார்த்து.
அவளை ஒரு கையால் அணைத்து," உனக்கு தான் டாடி நிறைய வாங்கி தரேனே!! பேபிடால், இந்த ட்ரஸ் எல்லாம் உனக்கு வேணாம் டா, உனக்கு நா புதுசா வாங்கி தரேன், அப்புறம் இந்த ஆரத்தி எடுத்து பொட்டு வச்சது எல்லாம் நமக்கும் பண்ணுனாங்க நீ பட்டாசு சத்தத்துல பயந்து என் பின்னாடி மறைஞ்சுக்கிட்ட அதான் உனக்கு தெரியல", என்றார் பொறுமையாக.
அதற்குள் நேசமணி அபிக்கு அனைவரையும் அறிமுகம் செய்தார். பேபிடால் குணாவின் தோளில் சாய்ந்துகொண்டாள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு துருவா நின்றான். சந்தியா, மித்ரா இருவரும் அபியை அணைத்து வரவேற்றனர்.
"பேபிடால்", என்றாள் அபி சத்தமாக.
"அபி", என்றாள் சிரிப்புடன்.
"மை பேபிடால் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன் மிஸ் யூ லாட்", என்று அவளை அணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்.
"மீ டூ அபி ", என்று இவளும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.
"டாட்..", என்று அபி குணாவின் தோளில் சாய்ந்தாள்.
"என்னடா குட்டிமா?? ஃப்ளைட்ல ரொம்ப போர் அடிச்சதா??", என்றார் அவள் நெற்றியில் இதழ் பதித்து.
"ஆமா டாடி ரொம்ப", என்றாள் சிரிப்புடன் விலகி.
"பேபிடால் சம்திங் மிசிங், வாட் ஹேப்பெண்ட்?? ஆர் யூ ஃபீலிங் வெல்", என்றாள் அவள் நெற்றியில் தொட்டு பார்த்து.
"ஐ அம் ஓகே!! அபி", என்றாள் சிரிப்புடன்.
"அபிமா என்ன இங்க நின்னு பேசிகிட்டு இருக்க உள்ள போ", என்றார் நேசமணி பாசமாக.
அனைவரும் உள்ளே சென்றனர். அம்மாக்களும் பாட்டிகளும் கிச்சனுக்கு சென்றனர். தாத்தாக்கள் அப்பாக்கள் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். சிறியவர்கள் அனைவரும் தாழ்வாரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
"துருவ் மாமா உங்கள பத்தி தான் வரப்ப இவங்க மூணு பேரும் பேசிட்டு வந்தாங்க", என்றாள் அபி சந்தோஷ், விரு மற்றும் நந்துவை கைகாட்டி.
"அவனுங்க லூசுங்க அபி, எப்படி இருக்க?? ஆபீஸ் ப்ராப்ளம் சால்வா??", என்றான் சிரிப்புடன்.
"ஃபைன் மாமா முடிச்சுட்டு தான் வந்தேன்", என்றாள் சிரிப்புடன்.
"ஹே!! அபி எப்படி இங்க வந்ததுல இருந்து மீ கிட்ட திட்டு வாங்காம இருக்க??", என்றாள் பேபிடால் குழப்பமாக.
"அம்மா இங்க நடந்தத முன்னாடியே!! என்கிட்ட கால் பண்ணி சொல்லிட்டாங்க அதான் உசாராகிட்டேன்", என்றாள் கண்ணடித்து.
"யூ... யூ..", என்று திட்ட ஆரம்பிக்கும்போதே,
"பேபிடால் அம்மா வராங்க", என்றான் சந்தோஷ் பொய்யாக.
அவனை பொய்யாக முறைத்துவிட்டு,"நீ வா அபி வந்து மீ கிட்ட கேளு என்னைய திட்டிட்டே இருக்காங்க", என்றாள் பாவமாக.
"கேட்கிறேன் டா, இப்ப தானே வந்து இருக்கேன் எல்லார் கூடவும் பேசலாம், மித்ரா காலேஜ் எல்லாம் எப்படி போகுது??".
"நல்லா போகுது அண்ணி".
"அண்ணியா??", என்றனர் அபி மற்றும் பேபிடால் குழப்பமாக.
அபி மற்றும் பேபிடாலை தவிர மற்றவர்கள் மித்ராவை எச்சரிப்பது போல் முறைத்தனர்."இல்ல உங்கள எப்படி கூப்பிடறதுன்னு தெரியல, நீங்க என் மாமா பொண்ணு அதான் அண்ணின்னு கூப்பிட்டேன்", என்று சமாளித்தாள்.
"எனக்கும் பேபிடாலுக்கும் எப்படி கூப்பிடனும் தெரியாதுடா, அண்ணாவோட ஒய்ஃப அண்ணின்னு சொல்லுவாங்க அது மட்டும் தான் தெரியும், மீ கிட்ட கேட்டு சொல்றேன்", என்றாள் அபி சிரிப்புடன்.
"ம்ம்..", என்று தலையை ஆட்டினாள்.
"அபி இங்க வா", என்று அகிலா கிச்சனிலிருந்து கூப்பிட்டார்.
"இதோ வரேன் மீ இருங்க வரேன்", என்று அபி உள்ளே சென்றாள்.
"உனக்கு என்னாச்சு டாலு?? என்ன பண்ணுது உனக்கு??", என்றான் துருவா பேபிடாலிடம்.
"ஒன்னும் இல்ல துரு தூங்கல டுடேஸா இங்க இருக்க டைமிங் ஒத்துவரல", என்றாள் சோர்வுடன்.
"சரி நல்லா ரெஸ்ட் எடு டா, டேய்!! நா சொன்ன வேல என்னாச்சு?? ஃபைல் பாத்தியா??", என்று விரு, ரிஷி, சந்தோஷிடம் ஆபீஸ் விஷயம் பேச ஆரம்பித்தான்.
"நாமளும் கிச்சன் போலாம் நா இங்க வந்ததிலிருந்து அங்க போகவே!! இல்ல", என்றாள் பேபிடால் சந்தியா மற்றும் மித்ராவிடம்.
"அக்கா போ போ எது கிச்சன் எது அடுப்புன்னு போய் கத்துக்கோ!!", என்றான் நந்து கிண்டலாக. பேபிடால் அவன் முதுகில் அடித்துவிட்டு இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றாள். கிச்சன் பெரிதாக இருந்தது கீழே உட்கார்ந்து பாட்டிகளும், அம்மாக்களும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருந்தனர். அத்தைகள் சமையல் வேலை பார்த்தனர். அபி அனைவரிடம் பேசிக் கொண்டு கீழே உட்கார்ந்து இருந்தாள்.
பேபிடால் உள்ளே நுழைந்ததும் அகிலாவின் மடியில் படுத்துக்கொண்டாள். சந்தியா மற்றும் மித்ரா அபியின் பக்கத்தில் உட்கார்ந்தனர். "பேபிடால் என்ன இது?? இங்க வந்து படுக்குற", என்றார் அகிலா கண்டிப்பான குரலில்.
"மீ டயர்டா இருக்கு".
"குட்டிமா பாட்டி மடியில்ல படுத்துக்கோ வாடா", என்றார் அபிராமி (முதல் பாட்டி).
"இல்ல பாட்டி உங்க ஹெல்த் நல்லா இருந்தா படுத்திருப்பேன் இப்ப வேணாம், மூட்டு வலி இருக்கு உங்க மூணு பேருக்கும்", என்றாள் மூவரையும் பார்த்து. மூவரும் ஆமாம் என்பது போல் சிரிப்புடன் தலையை ஆட்டினர்.
"அண்ணி பேபி டால் எப்போதுமே!! இப்படித்தானா??", என்றார் மல்லிகா (மூன்றாவது அத்தை).
"இல்ல மல்லிகா எப்பவாச்சும் தான் இப்படி பண்ணுவார அவ படுத்ததும் நாமல வேற வேலையே! பார்க்க விட மாட்டா", என்றார் சிரிப்புடன்.
"மீ கண்ணு எரிது ஆனியன் கட் பண்ணாத", என்றாள் வேகமாக.
"பேபிடால் போ இங்கயிருந்து இது கிச்சன், இன்னும் சமையல் பண்ணி முடிக்கல, போடா", என்றார் அகிலா கெஞ்சலும் கண்டிப்புமாக.
"பேபிடால் இங்க படுத்தா உனக்கு தான் கஷ்டமா இருக்கும்", என்றாள் அபி.
பேபிடால் எழுந்து வெளியே வந்தாள். தாத்தாக்கள் மற்றும் அப்பாக்கள் வெளியே உள்ள திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பேபிடால் ஹாலில் இருந்த சோபாவில் படுத்து தூங்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் துருவா போன் பேசியபடி வந்தவன் இவள் இங்கு தூங்குவதை பார்த்தான். ஃபேன் ஓடியும் அவள் முகத்தில் வியர்வை துளிகள் பூத்திருந்தன, உள்ளே சென்று ஒர் தலையணையும் டேபிள் ஃபேனும் கொண்டு வந்து தலையணையில் அவளை படுக்க வைத்துவிட்டு, ஃபேனை பக்கத்தில் வைத்து போட்டு விட்டான்.
"ஹேய்!! இவ என்ன இங்க தூங்குறா??", என்றான் விரு சத்தமாக உள்ளே வந்து. அவனுடன் மற்றவர்களும் வந்தனர்.
"விரு அவ தூங்குறா அமைதியா இரு", என்றான் துரு மெதுவாக.
"ஹேய்!! பேபிடால் ரூம்ல தூங்காம இங்க படுத்து இருக்கா??", என்றான் நந்து சத்தமாக.
"ஒருவேள இவளுக்கு இந்த வீடு பிடிக்கலையோ!! தாத்தா மாளிகை மாளிகைன்னு சொல்ற வீட்டை இவளுக்கு பிடிக்காம போச்சே!!", என்று ரிஷி சத்தமாக கிண்டலடித்தான்.
பேபிடால் முகம் சுழிதாள். "சத்தம் போடாதீங்க டா", என்றான் சந்தோஷ் கண்டிப்பான குரலில்.
"இவ ஏன் இப்ப போய் தூங்குறா?? இவ தூங்குனா யாரு எங்களுக்கு கம்பெனி கொடுக்குறது??", என்றாள் சந்தியா சிரிப்புடன்.
"அதானே!! பேபிடால் வா நாம விளையாடலாம்", என்று மித்ரா சத்தமாக சொன்னாள்.
பேபிடால் தூக்கம் கலைந்து எழுந்து நின்று,"கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டீங்களா?? இங்க ஒருத்தி தூங்குற டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கோம்னு இல்லாம இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க", என்றாள் கோபமாக.
சிறியவர்கள் முழித்தனர். அபி ரீஃபிரேஷ் செய்துகொண்டு கிச்சனுக்கு போக போனவள். இவள் சட்டத்தில் ஹாலுக்கு ஓடி வந்தாள். குணா அப்பொழுதுதான் உள்ளே வந்தார். "பேபிடால் குல் டவுன் என்ன கோவம்?? எதுக்கு எல்லாரையும் திட்டிட்டு இருக்க??? சாரி கேளு", என்றார் குணா கண்டிப்பான குரலில்.
"சாரி", என்றாள் அனைவரையும் பார்த்து.
"இட்ஸ் ஓகே!!", என்றனர்.
"சரி இப்ப சொல்லு?? என்ன ப்ராப்ளம்??".
"டாடி நா தூங்கிட்டு இருந்தேன் இவங்க எல்லாரும் என்னைய டிஸ்டர்ப் பண்ணிட்டாங்க", என்றாள் சோர்வுடன்.
"நீ ஏன் இங்க தூங்கிட்டு இருக்க?? உன் ரூம் என்னாச்சு?? டா", என்றார் கலைந்த முடியை கோதியபடி.
"அபி நீ ரீஃபிரேஷ் பண்ணிட்டியா??? உனக்கு ரூம் குடுத்தாங்களா??", என்றாள் அவளைப்பார்த்து.
"எஸ் பேபி எனக்கு மாடில கார்னர் ரூமுக்கு முன்னாடி இருக்க ரூம்", என்றாள் குழப்பமாக.
"பாத்தீங்களா டாட்? நா வந்து டுடேஸ் ஆச்சு எனக்கு ஒரு ரூம் கூட இந்த வீட்ல தரல", என்றாள் கலங்கிய குரலில்.
"என்னது!! உனக்கு ரூம் தரலையா??", என்றார் குணா லேசான அதிர்ச்சியுடன். சிறியவர்களும் அதிர்ச்சியாக பார்த்தனர்.
"ஆமா டாட் இப்ப வந்த அபிக்கு ரூம் குடுத்திருக்காங்க, எனக்கு தரல", என்றாள் அழுகையுடன்.
"பேபிடால் என் ரூம நீ எடுத்துக்கோ!!", என்றாள் அபி சமாதானமாக.
"அது உனக்குன்னு குடுத்துருக்காங்க, உனக்குன்னு குடுத்தத நா எப்படி யூஸ் பண்ணுவேன்?? அதுல்ல எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல", என்றாள் கோபமும் அழுகையுமாக.
"அபி உனக்கு யாருடா ரூம் குடுத்தா??", என்றார் குணா.
"வேலையால் ஒருத்தர் வந்து உங்க ரூம்ல பேக் வச்சுட்டேன், தாத்தா தான் அந்த ரூம் தர சொன்னாங்கன்னு சொல்லிட்டு போனாங்க", என்றாள் குழப்பமாக.
"அம்மா.. அம்மா..", என்று குணா கத்திகொண்டே பேபிடாலை உள்ளே!! இழுத்து சென்றார். மற்றவர்களும் பின்னாலயே!! வந்தனர்.
பாட்டிகள் மற்றும் அம்மாக்கள் இவர் சத்தத்தில் வேகமாக வெளியே வந்தனர்." என்னப்பா?? என்னாச்சு??", என்றார் அபிராமி வேகமாக.
"ஏம்மா எனக்கு வீடு இல்லன்னு தான் இங்க வந்தேன்னா, என் பொண்ணுங்களுக்கு அமெரிக்கால பெரிய வீடு கட்டிக் கொடுத்து இருக்கேன் ஆனா இங்க என் பொண்ணுக்கு ஒரு ரூம் கூட தரல", என்றார் கோபமாக.
"என்னங்க பொறுமையா பேசுங்க, பேபிடால் நீ ஏன் அழுகுற??", என்றார் அகிலா பதறியபடி.
"என்னப்பா சொல்ற??", என்றனர் பாட்டி மூவரும். மற்றவர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் பார்த்தனர்.
"என் ரெண்டாவது பொண்ணு வந்து எத்தன நாளாச்சு அவளுக்கு ஏன் ஒரு ரூம் கூட தரல?? என் ரெண்டு பொண்ணுமே!! எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி ஒரு கண்ணு கலங்கினாலும் எனக்கு தான் கஷ்டம், என் ரெண்டு பொண்ணுங்களையும் நானும் சரி அகிலாவும் சரி எதுக்காகவும் அழ விட்டது இல்ல ஆனா இன்னைக்கு என் பொண்ணு அழுகுறா", என்றார் ஆத்திரமும் வருத்தமுமாக.
"டேய்!! குணா இப்ப என்னாச்சுனு தைய தக்க தைய தக்க குதிக்கிற, சின்ன பிள்ளைக்கு ரூம் வேணும் அவ்ளோ!! தானே வேலையால் கிட்ட சொன்னா ஏற்பாடு பண்ண போறான், அத விட்டுட்டு சத்தம் போட்டுட்டு இருக்க", என்று நேசமணி வேலையால் ஒருவரை அழைத்து அபி ரூமுக்கு பக்கத்து ரூமை பேபிடாலுக்கு தர சொல்லி விட்டு வயலுக்கு சென்றார்.
குணா பேபிடால் கண்ணீரை அழுத்தி துடைத்து விட்டு தோளில் சாய்த்து கொண்டார்."மாமா தாத்தாவ பத்திதான் தெரியும்ல விடுங்க மாமா", என்றான் துரு ஆறுதலாக. அம்மாக்களும் பாட்டிகளும் அதையே!! சொன்னார்கள்.
"ஹேய்!! பேபிடால் ரூம் வேணும்னா என்கிட்ட கேட்டுருக்கலாம்ல என் ரூம தந்துருப்பேனே!!", என்றான் நந்து சிரிப்புடன்.
"இல்லனா என் ரூம தந்துருப்பேன்", என்றான் சந்தோஷ் பாசமாக. பேபிடால் குணாவின் தோளில் சாய்ந்தபடி இருவரையும் பார்த்தாள்.
"மாமா நீங்க கிளம்புங்க உங்கள சின்ன மாமா கூப்பிடுறாங்க, அம்மா, அத்த, பாட்டி கிச்சன்ல இருந்து கருவுற ஸ்மெல் வருது", என்றான் விரு. பெண்கள் பதறியபடி உள்ளே சென்றனர் அகிலாவை தவிர.
"மாமா இவள நாங்க பார்த்துக்குறோம் நீங்க போங்க", என்றான் துரு.
"ம்ம்.. சரிடா அகிலா இவள கொஞ்சம் பார்த்துக்கோ!! பாரு அழுது முகம் சிவந்து போச்சு", என்றார் அகிலாவை முறைத்துக்கொண்டே.
"சரிங்க நா பார்த்துக்குறேன் நீங்க போயிட்டு வாங்க", என்றார் தயங்கியபடி.
"இது மாதிரி இன்னொரு தடவ நடக்க கூடாது அகிலா அவள பத்தி உனக்கு நல்லா தெரியும் தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்க, அவ இங்க வந்ததும் எதுக்கு கல்யாணத்துக்கு அனுப்புன ?? நா வேணானு சொன்னேன் நீ அவ என்ஜாய் பண்ணடும்னு சொன்ன பாரு இப்ப இவ எப்படி இருக்கான்னு", என்றார் கோவமாக.
"சாரிங்க", என்றார் அகிலா கையை பிசைந்தபடி.
"இனிமே! இப்படி பண்ணாத அகிலா, பேபிடால் டேக் ரெஸ்ட் டா", என்றவர் வேலையால் ஒருவரை அழைத்து சிறியவர்கள் அனைவருக்கும் இளநீரை கொண்டு வந்து குடுக்க சொல்லி விட்டு சென்றார்.
"பேபிடால் நீ வா முதல்ல தூங்கு, காய்ஸ் இவ தூங்கட்டும் அப்புறமா நாம பேசலாம் ", என்று அபி பேபிடாலை மேலே அழைத்து சென்றாள்.
அகிலா போகிறவர்களை பார்த்துக்கொண்டே நின்றார்."அகிமா என்னாச்சு??", என்றாள் சந்தியா.
"ஒன்னும் இல்ல டா, அவ கிச்சன்ல வந்து மடியில்ல படுக்குறப்பவே!! கவனிச்சுருக்கணும் விட்டுட்டேன், ஹ்ம்ம்.. ஆமா கல்யாண வீட்டுல என்ன சாப்பிட்டா??".
"அவ எதுவுமே!! சாப்பிடல அத்த ஜூஸ் , பால் அப்புறம் பிரெட் வச்சுருந்தா அதுவே போதும்னு சொல்லிட்டா அத்த", என்றாள் மித்ரா.
"எல்லாம் என் தப்புதான் கவனமா இருந்திருக்கனும் அவ என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன்", என்றார் கவலையாக.
"என்னாச்சு??", என்றனர் அனைவரும்.
"அவ ரொம்ப சென்சிடிவ் எதுவுமே உடனே ஒத்துக்காது அதனால புட் நா பார்த்து பார்த்து தான் தருவேன், இங்க வந்த சந்தோசத்துல மறந்துட்டேன், சரி பாலையாச்சும் கொண்டு போய் குடுக்கறேன்", என்று உள்ளே சென்றார்.
"டேய்!! நா அப்பவே டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொன்னேன்ல", என்றான் துருவா முறைப்புடன்.
"இவனுங்க கேட்க மாட்டானுங்க மாமா", என்றான் சந்தோஷ் சலிப்புடன்.
"நல்லவேள பெரிய பிராப்ளம் வரல", என்றான் ரிஷி பெருமூச்சுடன். அனைவரும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினர்.
நேசமணி எதற்காக பாகுபாடு காட்டுகிறார்??? எதற்காக அபியை மித்ரா அண்ணி என்றாள்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..................
யாசிப்பு தொடரும் ..............................
யாசிக்கிறேன் உன் காதலை-1

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.