என்னை தீண்டிவிட்டாய் 2

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாயமாய் என் இதயத்தை

களவாடியவளுக்கு

என் மனம்

என்று புரியும்???



மாலை அலுவலகம் முடியும் தருவாயில் அன்றைய நாளுக்கான ரிப்போட்டை சப்மிட் செய்ய ஷாகரின் அறைக்கு வந்தாள் ஆதிரா..

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவள் ஷாகரை அழைக்க அவன் தன் லேப்டாப்பில் ஏதோ பிசியாக இருந்தபடி

“யெஸ் ஆதிரா... ஜஸ்ட் கிவ் மீ டூ மினிட்ஸ்...” என்றவன் சொன்னது போல் இரண்டு நிமிடங்களில் லாப்டாப்பில் வேலையை முடித்தவன் ஆதிராவை நிமிர்ந்து பார்த்தான்...

ஆதிராவோ தன் கையில் இருந்த கோப்புக்களை அணைத்தவாறு அவனை ஒரு ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்...

அவன் நிமிர்ந்த அவளை பார்த்து புன்னகையை சிந்திய போதும் அவளிடம் எந்தவித அசைவும் இல்லாது இருக்க லேப்டாப்பினை மூடியவன் அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை கொடுக்க அதிலும் அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை...

இதுவரை நேரமும் அவளை சீண்டும் எண்ணத்துடன் இருந்தவனுக்கு இப்போது சுவாரஸ்யம் கூட மெதுவாக தன் இருக்கையில் இருந்து எழும்பியவன் பூனை நடை நடந்து அவளை நெருங்கினான்... நெருங்கியவன் அவளை பின்னாலிருந்து அணைத்து அவளது கன்னத்தில் தன் இதழை பதித்தான்.... அவன் அணைத்ததும் சிந்தை கலைந்தவள் சுதாகரிக்கும் முன் அவளது கன்னத்தை முற்றுகையிட்டிருந்தது அவனது அதரங்கள்... அவனது திடீர்தாக்குதலில் மயங்கத்தொடங்கிய மனதை கட்டுப்படுத்தியவள் அவனிடம் இருந்து துள்ளி விலகினாள்...

இந்த ஆர்பாட்டத்தில் அவளது கையிலிருந்து பைல்கள் தாறுமாறாக நிலத்தில் சிதறியிருக்க அதை எடுக்க குனிந்தாள் ஆதிரா... கீழே விழுந்திருந்த கோப்புக்களையும் காகிதங்களையும் தீவிரமாக சேகரிப்பவள் போல் பதினைந்து நிமிடங்கள் கடத்தியவளை அழைத்தான் ஷாகர்...

“இன்னும் எவ்வளவு நேரம் பி.ஏ மேடம் இல்லாத பேப்பரை தேடுவீங்க...?? நீங்க எழும்வரை நான் இந்த இடத்திலிருந்து நகரமாட்டேன் ... சோ ப்ளீஸ் கெட் அப் ஸ்வீட் இடியட்... மேடம்...” என்ற ஷாகரை முறைத்தவாறு எழுந்தாள் ஆதிரா...

“என்ன பி.ஏ மேடம்... உங்க எம்.டியை இந்த முறை முறைக்கிறீங்க... இங்க நான் எம்.டியா இல்லை நீங்க எம்.டியா??”

“எம்.டி என்கின்ற நினைப்பிருந்தால் ஒரு ஷ்டாப் கிட்ட இப்படி நடந்துகொள்வீங்களா??”

“ஆமா... அந்த ஸ்டாப் என்னுடைய வுட்பீயாக இருக்கும் பட்சத்தில்...” என்று கூறி சிரித்தவனை தன் கையில் வைத்திருந்த கோப்பினால் அடித்தாள் ஆதிரா...

“எருமை... எருமை...எத்தனை தடவை சொன்னாலும் அடங்கமாட்டியா நீ.... ஆபிஸில் இப்படி நடந்து கொள்ளாதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...உன்னை இன்னும் கொஞ்ச நாள் சுற்ற விட்டுருக்கனும்... உனக்கு ஓகே சொன்னது தான் இப்போ தப்பாக போய்விட்டது... “

“ஓய் ஆது டார்லிங்... எதுக்கு இப்போ என்னை திட்டுற??? சும்மா இருந்த என்னை உசிப்பேற்றிவிட்டது நீ... இப்போ என்னை திட்டுறியா??”

“ஆமா... எனக்கு வேறு வேலையில்லை பாரு... உனக்கூட ரோமண்டிக் மூமன்ட்ஸ் கொண்டாட..”

“ஓய் கள்ளி... சும்மா இருந்த என்னை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்தது மட்டுமில்லாமல் நான் கொடுத்த ப்ளைங் கிஸ்ஸிற்கும் மேடம் ஏதும் ஆப்ஜெக்ஷன் சொல்லவில்லை... அதான் என் பொண்டாட்டி எதையோ எக்ஸ்பெக்ட் பண்ணுறா போல .... அவளை ஏமாற்றக்கூடாது என்கின்ற நல்ல எண்ணத்தில் முத்தம் கொடுத்தா இந்த நல்லவனை நீ இப்படி திட்டுறியே டார்லிங்...” என்று சோகமாக கூறினான் ஷாகர்...

“ரொம்ப நல்ல எண்ணம் தான் உனக்கு... உன்னை பற்றி எனக்கு தெரியாது... எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துக்கொண்டு இருக்கின்ற ஆள்தானே நீ...”

“ நான் என்ன ஆது பேபி செய்தேன்?? நீ தானே என்னை அப்படி பார்த்துட்டு இருந்தாய்... அதான் நானும்....”

“போதும்... இந்த பைல்சை செக் பண்ணிட்டு சைன் பண்ணிவிடு.... நான் கிளம்புறேன்...” என்றுவிட்டு ஷாகர் அழைக்க அழைக்க நில்லாது சென்றுவிட்டாள் ஆதிரா...
வழமை போல் அவளது கோபத்தை ரசித்தவன் அவள் வைத்து சென்ற கோப்புக்களை எடுத்துக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்து அதை எடுத்து சரிபார்த்து கையெழுத்து போடும் சந்தர்ப்பத்தில் அவனது மொபைல் சிணுங்கியது...
அதை எடுத்து பார்த்தவனின் முகத்தில் புன்னகை...

அவனை கிரேன்ட் பிலசன்ட் ஹோட்டலிற்கு வருமாறு அவனுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் அவளது அன்புக்காதலி...
அதனை பார்த்தவனது மனதில்

“எப்படியும் நீ டெக்ஸ்ட் பண்ணுவனு எனக்கு தெரியும்டி என் ஸ்வீட் பொண்டாட்டி...இதோ வரேன்....” என்று மனதிற்குள் கூறியவன் அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு மீதமிருந்த வேலைகளை சீக்கிரமே முடித்துக்கொண்டு ஆதிராவை பார்க்க கிளம்பினான் ஷாகர்..

ஆதிரா கூறியிருந்த அந்த மூன்று நட்சத்திர விடுதிக்கு தன் பென்ட்லியில் வந்திறங்கினான் ஷாகர்...

அங்கு வந்ததும் ஆதிராவை அழைக்க அவளோ அழைப்பை துண்டித்துவிட்டு மூன்றாவது மாடியிற்கு வருமாறு குறுந்தகவல் அனுப்பினாள்...
அவளது குறுந்தகவலை பார்த்து சிரித்தவன் தனக்குள்

“என் பொண்டாட்டிக்கு இன்னும் கோபம் குறையவில்லை போல...” கூறிக்கொண்டு லிப்டின் உதவியுடன் மூன்றாம் மாடியை அடைந்தான் ஷாகர்...
அந்த தளத்தின் மறுகோடியில் அமைந்திருந்த கண்ணாடிக்கதவினை திறந்தவன் பால்கனி அருகில் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருந்தவளை நோக்கி நகர்ந்தான்...

“ஹேய் பொண்டாட்டி.. ரொம்ப நேரமாக வெயிட் பண்ணுறியா??” என்றவனை முறைத்தவள்

“ஷாகர் பிறந்த நாள் அன்று ஏதும் திட்டக்கூடாதுனு பார்க்கிறேன்... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... என்னை அப்படி கூப்பிடாதனு..”
“பொண்டாட்டியை பொண்டாட்டினு கூப்பிடாமல் வேறு எப்படி கூப்பிடுவதாம்???”

“ஸ்டாப் இட் ஷாகர்... யாருக்கு யாரு பொண்டாட்டி..?? நீ நான் சொல்லுறதை புரிஞ்சிக்கவே மாட்டியா?? இந்த ரிலேஷன்ஷிப் சரிவராதுனு சொன்னாலும் கேட்கமாட்டேன்குற... நான் உனக்கு ஏற்ற லைப் பாட்னர் இல்லை ஷாகர்... உனக்கு உன் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி நல்ல பொண்ணு கிடைப்பா ஷாகர்... ப்ளீஸ் புரிந்துக்கொள் ஷாகர்...”

“லுக் ஆது... நீ தான் என்னோட லைப் பாட்னர்... அதில் எந்த சேன்ஞ்சும் இல்லை.. அன்ட் நீ மட்டும் தான் எனக்கு மனைவியாக வரமுடியும்... வேறு யாரையும் என்னோட மனைவியாக அக்சப்ட் பண்ண என்னால் முடியாது... இவ்வளவு சொல்லுறியே... உன்னால் வேறு யாரையாவது மேரேஜ் பண்ணிக்க முடியுமா???” என்ற கேள்வியில் அதிர்ந்தவள் சில நிமிடங்கள் பதில் கூறாமல் இருக்க அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டான் ஷாகர்..

“உன்னால் அது முடியாது.... அதே போல் தான் நானும்... என்னால் உன்னை தவிர வேறு யாரையும் என்னோட மனைவி என்கின்ற ஸ்தானத்தில் பொருத்திப்பார்க்க முடியாது...” என்றவனது பேச்சில் அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் அவனது கூற்றை மறுக்கும் முகமாக

“யாரு ஷாகர் நான் வேறொருவரை திருமணம் செய்துக்க மாட்டேன் என்று சொன்னாங்க??? என்னால் வேறொருவரை திருமணம் செய்துக்கொள்ள முடியும்..”

“அப்படி மேரேஜ் பண்ணிக்கறவங்க ஏன் வருகின்ற ப்ரோபோசல் எல்லாவற்றையும் ரிஜெக்ட் பண்ணுறீங்க...??” என்று அடுத்த கேள்வியை ஷாகர் முன் வைக்க

“அது... அது... எனக்கு பிடிக்கவில்லை... அதான் ரிஜெக்ட் பண்ணேன்...” என்று தட்டுத்தடுமாறி பதிலளித்தாள் ஆதிரா..

“அது எப்படி பையனை பார்க்காமலேயே ரிஜெக்ட் பண்ணுவீங்க??” என்றவனது கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று ஆதிராவிற்கு தெரியவில்லை...

“சரி அதை விடு... இதற்கு பதில் சொல்லு... நீ ஏன் அந்த செயினை இன்னும் கழுத்தில் போட்டுருக்க??? அதை கழற்றி வீச வேண்டியது தானே... அது எதற்காக உன் கழுத்தை உறுத்திட்டு இருக்கு... ?? அதை ஏன் நீ மறைத்து அணிந்திருக்கிறாய்...??” என்றவனது கேள்வியில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் ஆதிரா...
அவள் மறைத்து அணிந்திருந்த அந்த செயினை தான் அணிந்திருந்த ஆடையோடு சேர்த்து இறுக பற்றியவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாய் வடிந்தது... அதை கண்டு ஷாகர் உள்ளம் பதறிய போதும் அதை முகத்தில் காட்டாது அவளுக்கு உண்மையை புரிவிக்கும் நோக்குடன்

“சொல்லு ஆதிரா.... என்னோட கேள்விக்கு பதில் சொல்லு..... உன்னால் என்னோட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது... ஏன்னா நீ அதை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறனு உன்னை விட எனக்கு தெரியும்.... இல்லைனா எப்போவோ நடந்த ஒரு சம்பவத்தை நீ இவ்வளவு சீரியஸாக எடுத்துக்க மாட்ட... இன்று காலை வரை நீ அந்த சம்பவத்தை மறந்துட்டனு தான் நானும் நினைத்திருந்தேன்... ஆனால் எப்போ உன் கழுத்தில் அந்த செயினை பார்த்தேனோ அப்போவே புரிந்துக்கொண்டேன்... இதற்கு பிறகு என்னிடம் நடிக்கலாம் என்று நினைக்காதே..... ஏன் ஆது எப்போதும் என்னை விட்டு விலகனும் என்று நினைக்கிற?? எல்லாம் என்னுடைய தப்பு தான்... நீ என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று உன்னை அன்றே என்கூட கூட்டிட்டு வந்திருக்க வேண்டும்...” என்றவனின் குரல் வருத்தத்துடனே முடிந்தது...
சில கணங்கள் அமைதியாகவே கலைந்தது... அந்த அமைதியை மீண்டும் கலைத்தது ஷாகரே.

“இங்க பாரு ஆது.... நடந்தது எதுவும் என்னோட விருப்பம் இல்லாமல் நடந்ததில்லை... சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் என்னுடைய மனம் சம்மதிக்காவிட்டால் நான் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமாட்டேன்.. நம்ம கல்யாணமும் அப்படி தான்.... உன்னை அந்த சூழ்நிலையில் காப்பாற்றுவதற்காக நான் அந்த செயினை உன் கழுத்தில் போட்டிருந்தாலும் நான் உன்னை விரும்பியதால் தான் அதை செய்தேன்...” என்றவனின் தகவலில் கேள்வியாக நோக்கியவள்

“என்ன சந்தேகமா??? உன்னை நான் அந்த சம்பவத்திற்கு முன்னமே விரும்பத்தொடங்கிவிட்டேன்... ஆனால் அந்த நிகழ்வுக்கு பிறகு நீ உன்னுடைய ஜீவனத்திற்கு என்னிடம் உதவி கேட்டதும் அந்த நிகழ்வை நீ சாதாரணமாக தான் எடுத்துக்கொண்டாய் என்று நினைத்திருந்தேன்... உனக்கு என்னோட காதலை புரிய வைத்து உன் சம்மதத்தோடு ஊரார் முன் திருமணம் செய்யவேண்டுமென தீர்மானித்தேன்...அதனால் தான் நம்ம கம்பனியிலேயே உனக்கு ஜாப் அரேன்ஜ் பண்ணேன்.... நான் கம்பனியை சார்ஜ் எடுத்ததும் நான் செய்த முதல் வேலை உன்னை என்னோட பி.ஏ ஆக பிரமோட் பண்ணது தான்... இப்படி நான் ஸ்டெப் பை ஸ்டெப்பாக உன்னை என்னிடம் நெருங்கச்செய்தேன்... ஆனால் நீ மனதால் என்னை உன் கணவனாக நினைத்த போதும் என்னை தூர நிறுத்தினாய்.... ஏன் ஆதிரா?? ஏன் இப்படி பண்ண??? எதனால் என்னை இப்படி தூர நிறுத்துற??” என்றவனது கேள்வியில் தன்னால் இவனது கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று உணர்ந்தவள் அங்கிருந்து செல்ல முடிவெடுத்தாள்...

அதற்குள் அவள் ஆடர் செய்திருந்த கேக் அவர்களது மேசைக்கு வந்திருந்தது... ஆனால் அதை வெட்டிக்கொண்டாடும் மனநிலையில் இருவரும் இல்லை.... அதனால் ஷாகர் பேரரிடம் அதை எடுத்து செல்லச்சொன்னவன் இருவருக்கும் குடிப்பதற்கு சூப் ஆடர் செய்தான்... அதன் பின் இருவருக்கும் இடையில் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை...இருவரது மனதிலும் எவ்வளவு அழகாக ஆரம்பித்த நாள் இப்படி ஆகிவிட்டதே என்ற ஏக்கமே மேலோங்கியிருந்தது...

ஆடர் செய்த சூப் வந்ததும் இருவரும் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்... வரும் போது இருந்த சந்தோஷம் கிளம்பும் போது இருவர் முகத்திலும் இல்லை...
ஆதிராவை ட்ராப் செய்வதாக ஷாகர் அழைக்க என்றும் மறுப்பு கூறுபவள் இன்று எதுவும் கூறாது அவனுடன் சென்றாள்...

காரிலும் அதே அமைதி நிலவ அதை விரும்பாத ஷாகர் ரேடியோவை இயக்க அது பாடத்தொடங்கியது...

இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி ,
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செயுதடி ,
என்னை ஏதோ செய்யுதடி ,
காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,

வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,

பாடலின் ஒவ்வொரு வரிகளும் இருவரது காதல் விளையாட்டையும் வார்த்தைகளால் விவரித்தது...
பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஆதிராவை சாட அதில் இன்னும் தவித்து போனாள் ஆதிரா... எங்கே தன் மனதை ஷாகர் கண்டுபிடித்துவிடுவானோ என்ற பயத்தில் வேடிக்கை பார்ப்பது போல் தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டாள் ஆதிரா..

ஆனால் ஷாகரோ அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்... ஆனால் ஏதும் கேட்கவில்லை...குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்... குழப்பங்கள் தான் மனதிற்கு தெளிவை கொடுக்கும்... எனவே ஆதிரா குழம்பி அவளே தெளியட்டும் என்று விட்டுவிட்டான்...
அவளை அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் இறக்கி விட்டு ஏதுவும் கூறாது சென்றுவிட்டான் ஷாகர்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN