3. யஸ்வந்தினி 3

Vijay Navin

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காயப்பட்ட தன் நண்பனிடம் நண்பா என்னை மன்னித்துவிடு, உன்னை என்னால் அவள் தாக்குதலில் இருந்து காக்கா முடியாமல் போனதிற்கு என்றான் வல்லவராயன்



ஆதித்தியனோ, வல்லவா அப்பெண்ணின் தாக்குதலை கவனித்தாயா, நாம் வாள் தூக்கும் போது நமது தோள்பட்டை வலது சரிந்து இடது உயர்ந்து இருக்கும்,
காரணம் நாம் வலது புறமாக வாள் சுழற்றுவோம்,
அது போல் சிலர் இடது புறம் சுழற்றுவார்கள், அவர்களுக்கு இடது உயர்ந்து வலது தாழ்ந்து காணப்படும்.



ஆனால் அவளோ எந்த ஒரு புறமும் அவளது தோள் சாயாமல் சண்டையிட்டாள், அதனாலேயே மிகவும் எளிதாக நம் இருவரின் வாளையும் அவளால் கையாளமுடிந்தது என்றான்.



வல்லவராயன் குறுக்கிட்டு இக்கலையை நாம் கேள்வி பட்டதே இல்லை, யார் பயிற்றிருப்பார்கள் அவளுக்கு,



பாரதம் முழுவதும் போர் இட்டு விட்டோம் யாரும்; இவ்வாறு சண்டையிட்டு பார்கவில்லையே என முடித்தான்.



நாம் பார்க்கவில்லை தான். ஒருவன் இருக்கிறான், நம்மை போரில் சந்திக்காதவன் அவன் கற்று கொடுத்திருக்கலாம் என்றான் ஆதித்தியன்.



வல்லவராயன் யார் என்றவாறு பார்த்தான்,



வீர பாண்டியன் என்று சிரித்தான், ஆதித்தியன் அச்சிரிப்பு முழுவதும் பழித்தான் இருந்தது.



இவ்வாறே அவர்கள் பேசிய படி குதிரை ஓட்டிய படி நடந்து சென்றனர்.
ஆதித்தியனுக்கு தான் செய்வது தவறோ? அவளை தாக்கியிருக்க கூடாதோ என்று மனதில் யோசித்து வந்தான்.



திடிரென குதிரைகள் பாயும் சத்தத்தில் இருவரும் பதுங்கி நின்றனர், சுமார் 100 வீரர்கள் காட்டினுள் புகுந்து எதையோ தேடுவது போல் இருந்தது, சற்றுநேர கணிப்பில் தான் புரிந்தது அவர்கள் இளவரசியை தேடுகிறார்கள் என்று,



வீரர்களின் கண்ணில் படாமல் நம்மவர்கள் ஒரு அகன்ற மரத்தின் பின்னால் ஒளிந்தார்கள், அவர்கள் சென்றதும்; இருவரும் குதிரையை ஒய்வுக்கு மரத்தில் கட்டிவிட்டு, காலார நடந்தனர்



தூரத்தில் ஒரு அகன்ற மண்டபம் தென்பட, வல்லவராயன் நண்பனே வா! அங்கே படுத்துவிட்டு, காலையில் நாம் பாண்டியனை நலம் விசாரிக்க போகலாம் என்றபடி சிரித்தான்.



இருவரும் அங்கே செல்ல, அங்கே அந்த இடத்தை ஏற்கனவே ஒரு கூட்டம் ஆக்கிரமித்து இருந்தது, சரி சண்டையிட இது நேரமில்லை; என்ற படி, அவர்களுடன் படுத்து கொண்டனர்.



அதிக களைப்போ என்னவோ, சூரியன் தன் கூரிய ஒளியால், அவர்களின் மேல் தாக்குதல் நடத்தியும் அவனால் அவர்களை விழிக்க வைக்க முடியவில்லை,



அருகில் இருப்பவன் வல்லவராயனை தட்டி எழுப்பிட, திடுக்கிட்டு எழுந்தான்.
அவனை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அரேபியர்கள் போல் இருந்தனர், அவனை எழுப்பியதும் ஒரு அரேபியன் தான்.



வல்லவராயன் ஆதித்தியனை எழுப்ப அவனும் உடனே எழுந்திட, சுற்றி பார்த்தான்.
அனைவரின் முகமும் ஒரே போல் தெரிந்திடும் அளவுக்கு தாடி வைத்திருந்தனர்,



அவர்கள் அரேபியர்கள்தான் என்றது;
புரிந்தவாரே வல்லவனை பார்க்க, அவனும் இளவவரசரை பார்த்திருந்தான்,



அரேபியர் தங்களது துணி மூட்டை முழுவதிலும் கூரிய கத்திகளால் நிரப்பி வைத்தனர்,



நிரப்பியது எல்லாரும் ஒருசேர கிளம்பினர், ஆதித்தியனுக்கு சிறுவயதிலேயே விடுகதை என்றால் கொள்ளை பிரியம், ஒன்று அவனுக்கு எதிர்பார்பை கூட்டிவிட்டால் அது, எது என கண்டுபிடிக்காமல் இருந்திட
மாட்டான், அதுபோல் இன்றும் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என தெரிந்துகொள்ள ஆவல் வர



அவர்களுடன் இவனும் கிளம்பினான், வல்லவராயனுக்கும் அதே ஆவல் இளவரசரை தடுக்காமல் அவனும் சென்றான்,



வல்லவராயன் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு வரையும் தனியாய் கவனித்து வந்து கொண்டிருந்தான், யார் யார் வாள் வைத்திருக்கிறார்கள், யாரெல்லாம் வலது இடது பழக்கம் கொண்டவர்கள், வில், வேல் வைத்தவர்கள் யாரார்? என்றவாறு கவனித்து வந்து கொண்டிருந்தான்,
திடீர் தாக்குதலில் எவ்வாறு தப்பிப்பது என்றும் கூட சிந்தித்து இருந்தவனின் மனதில் திடிரென உதித்தது ஏன்? இவர்கள் நம்மை அடையாளம் காணவில்லை,



நீண்டு யோசித்தவனின் மூளையில் சற்று கணிப்பில், இவர்கள் பல்வேறு இடத்தில் இருந்து சிறு சிறு குழுக்களாக சேர்ந்தவர்களாய் இருக்க வேண்டும், ஒரே கூட்டமாக வந்தவர்கள் அல்ல! அதனாலேயே நம்மை அடையாளம் காணவில்லை, எதற்காக சேர்ந்திருப்பார்கள் என்று யோசித்து ஆதித்தியனை பார்த்தான்



ஆதித்தியன் தனது குதிரையின் மேல் படுத்து குதிரையுடன் பேசி வந்து கொண்டிருந்தான்,



ஆதித்தியன் தன் வாளின் மேல் நம்பிக்கை கொண்டவன், அதை விட தன் பலத்தின் மேல், ஒவ்வொரு போரிலும் முதலில் சிக்கலில் மாட்டி கொள்வான்.
இறுதியில் தனேக்கே உரிய பலத்தில் தப்பித்து கொள்வான், இவை எல்லாவற்றையும் விட தன் நண்பனின் மேல் அபார நம்பிக்கை அவனுக்கு, அதனாலே எதை பற்றி கவலையில்லாமல் வந்து கொண்டிருந்தான்,



அவர்கள் காட்டை தாண்டி நாட்டை அடைந்த சமயத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணப்பட்டனர், அவர்களின் நெரிசலில் சிக்காமல் இருக்க அனைவரும் குதிரையை வேகமாக செலுத்தினர்



சிறிது தூரம் கடந்ததும் கட்டடங்கள் சற்று பெரிது பட ஆரம்பித்திருந்தது, தாமரபரணி என நினைக்கிறேன், மக்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றில் விளையாடினர் அதை பார்த்ததும் எதோ விசேச தினம் என்று மட்டும் புரிந்தது, அவர்களுக்கு,



இவ்வாறே மதுரையை அடைந்தனர், அங்கே வல்லவராயனுக்கு ஏமாற்றத்தை அளித்தது, வானுயர்த்த கட்டிடங்கள் ஏதும் இல்லை!
ஒரே ஒரு அரண்மனை மட்டும் கொஞ்சம் பெரிது ஆனால் அதுவும் சொல்லும் அளவில் இல்லை, இதனால் சற்று எளனமான சிரிப்பில் ஆதித்தியனை பார்த்து இளவரசே இவர்களில் கட்டிட கலையில் சிறப்பே இல்லை, இவர்களை சோழர்களுடன் நீர் ஒப்பிடலாம என நகைத்தான்.



ஆதித்தியன் வல்லவா பாண்டியர்கள் ஆடம்பரத்தில் நாட்டம் அற்றவர்கள், அவர்கள் பூமியை பெரிதும் நேசிப்பவர்கள், இன்றும் கூட பூமியில் அமர்ந்தே உண்பார்களாம், அரசர் கூட எப்போது அரியாசணத்தில் அமர மாட்டாராம் தேவையின் போதுதான், என்று சொல்லி அவர்கள் எளிமையில் சிறந்தவர்கள், வீரத்திலும் கூடத்தான் என பெருமையாய் சொல்லி முடிக்க,
அரண்மனையும் வந்தது; வாசலில் சொல்லும் அளவிற்கு வீரர்கள் இல்லை, இரு வீரர்கள் மட்டுமே இருந்தனர், ஆரேபியர்கள் வீரர்களிடம் ஏதோ காண்பித்து உள்ளே செல்ல,

வீர பாண்டியன் அவர்களை வரவேற்றான், என்னதான் வீர பாண்டியனின் மேல் வன்மை இருந்தாலும், அவனை ஆர்வமாக அதே சமயத்தில் மரியாதையாகவும் பார்த்தனர் நம் வீரர்கள்



அவன் அவர்களை அரண்மனை முற்றத்தில் அமர்த்தி விட்டு உள்ளே சென்றான்,



அரண்மனை உள்ளும் யாரும் இல்லை, அரசரோடு இருவர் இருந்தனர், அவர்கள் முதன்மை தளபதி மற்றும் மந்திரி ஆக இருக்கும் என நினைத்தான்,



பாண்டியன் உள்ளே சென்று யஷ்வந்தியை அழைத்து வர, அவள் தனது கூந்தலால் தனது பாதி முகத்தை மறைத்திருந்தாள்,



மீனின் அடையாளம் தெரியகூடாது என்பதற்காகவே அவள் மறைத்திருக்க வேண்டும், என நினைத்தான் வல்லவன்



வந்ததும் அவள் நாளை எனக்கு சுயவரம், நான் நாளை நீங்கள் கொண்டுவந்த உடையை அணிந்து வெளியே சென்றால் சூரிய பகவானே என் அழகில் மயங்கி என்னை மணக்க வர வேண்டும்! என்ற வாறு கூறி சிரித்து கொண்டே அருகில் வர, பாண்டியனும் மற்ற இருவரும் சற்று தூரத்தில் இருந்தனர்.



ஆதித்தியன் அவள் அழகில் மயங்கி அவளையே பார்க்க,
வல்லவராயனுக்கு ஓரே குழப்பம் அவர்கள் ஆடையை தங்களுடன் எடுத்து வரவில்லையே, ஆயுதம் தானே எடுத்து வந்தார்கள் என்றவாறு குழம்பி கொண்டிருக்க,



அதற்கு ஏற்றது போல் முன் வரிசையில் ஒருவன் யஷ்வந்தியை குத்த கத்தியை எடுத்து மறைத்தான்,



என்ன நடக்கும் என்று புரிந்தவானாய்
வல்லவராயனுக்கு சந்தோஷம் தாங்கமுடிய வில்லை, இதோடு பாண்டியனின் கதை முடிந்தது என்ற படி அவனும் வளை எடுத்தான்,



யஷ்வந்தி அவர்களின் அருகில் வந்து காண்பிக்கும் மாறுஆணையிட,



ஒருவன் அவள் கவனிக்காத திசையில் அவளை குத்த எத்தனித்தான், ஆதித்தியன் சப்தலிக்கா என்று கத்த!



அவள் சூதாகரித்து சற்று விளகினாள், அதற்குள் இரு ஆரேபியர்கள் அவளை கொல்ல செல்ல, ஆதித்தியன் எதிரே குறுக்கிட்டு ஒருவனின் கழுத்தை வெட்டினான், மற்றோருவனை அவன் இதயத்தில் வாள் பதித்தான்,



மறு முனையில் ஆரேபியர்கள் வீர பாண்டியனை கொல்ல ஓட, வல்லவராயனும் ஓடி முதலில் சென்றான், எப்படியாவது பாண்டியனை கொல்ல வேண்டுக் என்றவெறி அவன் மனதின் ஒரு புறத்தில் இருக்க, அவனது மனதின் இன்னொரு புறத்தில்
இப்போது நாம் வீர பாண்டியனை கொன்றாலும், ஆரேபியனில் யாராது கொன்றாலும் சோழருக்கே அவமானம், அவனை நேரில் நின்று வீழ்த்தலாம் துரோகத்தால் அல்ல, இப்போது வேண்டாம் என ஒலிக்க, ஓடியவன் சற்று வேகம் தனித்து திரும்பினான், வீர பாண்டியனுக்கு சிறுது அருகிலே நின்றான், அவன் பின்னால் வந்த வீரரின் ஒருவனின் உடலில் கத்தியை செலுத்தி இன்னொருவனை தன் பலத்தால் கிழே தள்ளினான்,



வீரபாண்டியனுக்கு குழப்பம், தன்னை கொல்ல வந்து ஏன் ? இவர்கள் சண்டையிடுகிறார்கள் என்று, பின்பு தான் உணர்ந்தான், தன் மகள் அரேபியரின் அருகில் நிற்கிறாள் என்று



வேகமாக ஒடி செல்ல எத்தனிக்க, அவன் பின்னால் அவனோடு நின்ற இருவரும், ஆம் அந்த பாண்டிய நாட்டவர் இருவரும், பாண்டியனின் மேல் வாளால் குத்தினர், வீர பாண்டியன் வலியில் கத்த, வல்லவன் திரும்பி பார்க்க, பாண்டிய நாட்டின் மந்திரி வீர பாண்டியனை முதுகில் குத்தியது புரிந்தது,



அவசர அவசரமாக முன் பக்கம் சண்டையிட்டு, பின் பக்கம் நகர்ந்து வீர பாண்டியனை ஓரே கையில் தாங்கி, துரோகிகளையும் எதிரிகளையும் ஓரே நேரத்தில் சமாளித்து இருந்தான்,



ஆதித்தியன் யஷ்வந்தியின் மேல் வாள் படாமல் ஆரேபியருடன் சண்டை யிட்டு கொண்டிருக்க, யஷ்வந்தியும் தன் பங்கிற்கு ஆரேபியர்களை கொன்றாள், அவர்களின் மனம் பதற்றப்படாமல் இருந்தது, ஏனெனில் இவர்களின் பின்னால் நடந்ததை இவர்கள் கவனித்ததாய் தெரியவில்லை, ஆதித்தியன் தன் நண்பன் பத்திரமாய் இருக்கிறான் என்றும், யஷ்வந்தி தந்தை பத்திரமாய் இருக்கிறார் என்று நினைத்து மிகவும் நேர்த்தியாக சண்டையிட்டனர்,



அங்கே வல்லவனுக்கு நிலமை மோசமானது, அவன் ஒருபுறம் அரசரையும் மறுபுறம் தனது வாளையும் வைத்து சண்டையிட அவனது கண்கள் இளவரசரையே தேடின,



முக்கால் வாசி ஆரேபியனின் தலையை வல்லவன் துண்டிக்க, இவ்வாறு சென்றால் நம் திட்டம் வீண் என துரோகிகளில் ஒருவன், வில்லை எறிந்தான் பாண்டியனின் மேல்,
அது பாண்டியனின் மேல் படாமல் வல்லவன் தன் மேல் வாங்கி கொள்ள, இன்னொரு அரேபியன் வேலால் வல்லவனின் முதுகில் குத்தினான், இதற்குமேல் சண்டையிட முடியாது, ஆனால் இருவர் மட்டுமே எதிரிகளில் இருக்கின்றனர், என சிந்தித்தவனின் மனதில் தோன்றிய திட்டத்தின் பயனாக, பாண்டியனை பின்னால் குத்தியவனின் மேல் தள்ளினான். அவன் நிலை தடுமாறி கிழே விழ, முன்னால் நின்றவனின் மேல் கத்தியை செலுத்தி விட்டு, பின்னால் விழுந்தவனின் தலையை வெட்டிவிட்டு கிழே சரிந்தான்,



பாண்டியன் தன் உயிர் காப்பாற்றிய வீரனின் முகத்தை ஒரு கணம் பார்த்து, பாண்டியன் வல்லவனை தூக்கி சுவரில் சாய்த்து நிற்க வைக்க,



ஆதித்தியனும் யஷ்வந்தியும் வெற்றிகரமாக அரேபியர்களை விழ்த்திவிட்டு திரும்பி பார்க்க, அவர்களின் கண்ணிற்கு வீர பாண்டியன் வல்லவனின் மேல் கத்தியை குத்துவது போல் தோன்றிட, ஆதித்தியன் அதிர்ச்சியில் வேக வேகமாக ஓடி சென்று பாண்டியனை கிழே தள்ள, அவன் பிடித்திருந்த வல்லவனும் கிழே சரிந்தான்,



ஆதித்தியன் நண்பனின் மேல் உள்ள பற்றால் என்ன நடந்தது என யுகிக்காமல், பாண்டியனை குத்த போக, யஷ்வந்தி தன் வாளால் தடுத்தால்,



நண்பனின் மேல் இதுவரை சிறு காயத்தை பார்க்காதவன், தனக்கு ஏதாது ஒன்று எனில் தன் உயிரை கொடுத்து காப்பவன், சூரியனை விட பிரகாசமாக சிரிப்பவன், அதை விட தன் தங்கையின் காதலன், என தன் வாழ்க்கையின் மிகவும் முக்கியமானவன், இப்படி சரிந்திருப்பதை முதன்முதலில் பார்பதால் என்னவோ யஷ்வந்தியின் வாளை தனது முழு பலத்தில் தாக்கிட, வாள் எங்கோ விழுந்தது,



பின் வீர பாண்டியனை தலையெடுக்க வேகமாக வாள் வீச, பாண்டிய இளவரசி தன் அரசரின் உயிர் காக்க, காலில் விழுந்து கெஞ்சினாள்.



ஆதித்தியனுக்கு யஷ்வந்தியின் மேல் இயற்கை ஆக ஈடுபாடு உண்டு, ஆனால் இந்த முறை அல்ல,



நண்பனின் மேல் உள்ள பற்றால், யஷ்வந்தினியின் கெஞ்சலை கூட பொருப்படுத்தாமல் அவளை காலால் மிதித்து கிழே தள்ளி விட்டான், அவள் எழுந்து வர, அதற்குள் வீரபாண்டியனின் தலையெடுத்தான்.



அவள் அதிர்ச்சியில் பார்த்திருக்க, என் நண்பனின் நிலமைக்கு நீ தான் காரணம், என அவள் இடையில் வெறி தீர கத்தியால் குத்தினான், அவள் அவன் இதயத்தை பிடித்த படியே சரிந்தாள்
 

Author: Vijay Navin
Article Title: 3. யஸ்வந்தினி 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN