"ஹாய் ஐயாம் விஸ்வாமித்திரன் ராஜ்" சட்டென அறிமுக குரலோடு இவள் முன் ஒரு வலிய கரம் நீண்டது. சற்றே விகிர்த்தவள் பார்வைக்கு ஆறடி உயரத்தில் அளவான புன்னகையில்,குளிர்ந்த பார்வையில் ஆண்மகன் ஒருவன் சிக்கினான்.அவன் கைகளை பற்றி குலுக்க கூட தோன்றாமல் வணக்கம் என மாயா இரு கரங்களை கூப்பினாள். வந்தவன் நெற்றி கொஞ்சம் சுழித்தாலும் இயல்பாய் அதை ஏற்று அவள் முன் அமர்ந்தான்.

"ஐயாம் சாரி மிஸ்டர் விஸ்வாமித்திரன்,பெயர் கொஞ்சம் பழமையாய் இருந்ததால் 60 வயது பெரியவரை எதிர்ப்பார்தேன்,இப்படி ஆகும் என எதிர்பார்க்கல". கொஞ்சம் வருத்த தொனியில் மாயாவின் குரல் ஒலித்தது. புன்னகையில் அவள் மன்னிப்பை ஏற்றவன்.

"இட்ஸ் ஓகே மிஸ்.மாயா, கால் மி ராஜ் ஓர் மித்திரன்.பெயரைவைத்து ஆளை எடைப்போடாதிங்க மிஸ்.மாயா" கேலியாகவே வந்தது பதில். மாயாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. ஓல்ட்மேன் வருவாங்கனு பார்த்தா இப்படி இவன் கூட டீலிங் பண்ணவேண்டியதா போச்சே மனதிற்குள் கறுவினாள். உதட்டில் புன்னகை கூட ஒட்ட மறுத்துவிட்டது மாயாவிற்கு.

"பை தி பை நா உங்க இந்திரியர் வெர்க்ஸ் சில இந்திய ஓட்டல் அப்புறம் சில காட்டேஜ்ல்ல பார்த்தேன்,எங்க நிறுவனதிற்கு ரொம்ப புடிச்சுப்போனதால விசிலர் மலைப்ரதேசத்தில் புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு, குடும்பங்களுக்கு தென் ப்ரண்ட்ஸ்களுக்கு தங்குற மாதிரி காட்டேஜ் கட்டப் போகிறோம்.அதில இந்திய கலை அம்சங்கள் பொருந்தர மாதிரி இந்திரியர் டிசைனிங் செய்யணும்.மிச்ச ரெண்டு காட்டேஜ்களுக்கு ஆள் தேடியாயிற்று. ஹனிமூன் கப்பல்ஸ் தங்கற விடுதிக்குதான் உங்க சேவை தேவைப்படுது மிஸ்.மாயா. பல இடங்களில் பார்த்தாயிற்று.என் தேர்வு நீங்கள்தான்".

அவன் புகழ்ந்தாலும் அவளுக்கு உச்சிக்குளிர வில்லை.என்றாலும் தன் திறமையை பாராட்டியவனின் வேலையை வேண்டாம் எனவும் சொல்லயியலவில்லை. ராஜ் அன் ராஜ் கம்பெனியியில் தொழில் தொடர்பு கொள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதை அவள் அறிந்ததே.

"மாயானு கூப்பிட்டா போதும் மிஸ்டர் மித்திரன்.இந்த டீலிங்கு நான் ஒத்துகிறேன்.எந்த மாதிரி டிசைன்னிங்,பெயிண்டிங் வேணும்னு இந்த கதலாக் லா செலக்ட் பண்ணிடுங்க. எப்ப வேலையை ஆரம்பிக்கணும் சொல்லிட்டா எனக்கு ஈசியா இருக்கும்" பட்டும் படாமலும் மாயாவின் வார்த்தைகள் மித்திரனை வந்தடைந்தன.

இதுவரை அவனை மித்திரன் என்று யாரும் அழைத்ததில்லை. இலகுவாக ராஜ் என்றே தொழில் வட்டத்தில் அவன் பிரபலம். அவன் புன்னகையில் மயங்காத பெண்களும் இல்லை எனலாம்.எவரையும் சுண்டியிலுக்கும் அவனுடைய காந்தப் பார்வை. என்றப்பொழுதிலும் சிறிதும் சலனமே இல்லாமல் இயந்தரமாய் அமர்ந்திருந்த மாயாவின் மேல் எதோ ஒரு ஈர்ப்பு வந்தது மித்திரனுக்கு.

கொஞ்சம் பார்வையால் அவளை அளந்தான்.கரும் சிவப்பில் இடைவரை தங்கத்தினால் ஆன மேபல் இலை கொடிப் போல் ஒட சால்வார் அணிந்திருந்தாள். முகத்தில் லேசான ஒப்பனை,தூக்கி வாரி போட்ட கொண்டை,அதில் சிலது இழைகளாய் தொங்கின.கீழ் உதட்டில் திருஷ்டி பொட்டுப் போல் சிறு மச்சம்.கண்ணாடிக்குள் சிக்குண்ட கண்களில் மை கூட இடவில்லை.இதுவரை இப்படி சிம்பிளாய் எந்த பெண்ணும் மித்திரன் கண்களில் அகப்பட்டதில்லை.

லேசான புன்னகையோடு மாயா விடைப்பெற்றாள்.மறு நாளே ராஜ் அன் ராஜ் கம்பெனியிலிருந்து வேண்டிய விவரங்களுடன் மாயாவிற்கு மெயில் வந்திருந்தது. மிகுந்த கலாரசிகன் போலும் இந்த மித்திரன் ஹொனிமூன் காட்டேஜ்க்கு அவன் செலக்ட் செய்திருந்த சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் அஜூந்தா எல்லோரா சிற்பங்களின் பெரும்பான்மையை ஒத்திருந்தன.

தன் வேலைக்கான திட்டங்களை மாயா வகுக்கத்தொடங்கினாள். விஸ்லர் மலையில் தன்னோடு இணைந்து பணிப்புரிய தன்னோடு தன் தோழி மலரையும் அழைத்துக்கொண்டாள். விஸ்லரில் அவள் தங்குவதற்கு இடமும் கம்பெனி கொடுத்திருந்தது. மே முதல் அக்டோபர் வரை சம்மர் சீசன் என்பதால் விஸ்லரில் பனித்தூறல் இல்லை.என்றாலும் வெண்பனி மலை முகடுகளை போர்த்தியிருந்தது.

காலை சூரியன் ஒளியில் வைரப்பொடிகளாய் மின்னிய மலைத்தொடர் மனதை கொள்ளையிட்டது.விரும்பி தன்னை வேலையில் ஈடுபடுத்திக்கொண்டவள் கண்களுக்கு மித்திரன் தென்படவும் இல்லை. அதுவே பெரும் நிம்மதியாய் மாயாவிற்கு தோன்றியது.

காட்டேஜ் நுழைவாயிலில் நான்கு அப்சரஸ்கள் குடத்திலிருந்து நீர் ஊற்றுவது போல் அமைத்திருந்தாள்.

அதன் பின் சுவற்றில் சுண்ணாம்பு கலவைக் கொண்டு செயற்கை குன்று போல் வடிவமைத்து சில கொடி வகை செயற்கை தாவரங்களை அதில் படரும் வண்ணம் செய்தாள்.காட்டேஜ் அறைகளில் அங்காங்கே பழங்கால சிற்பங்களை நிறுத்தி வைத்தாள். மாயாவின் கற்பனைகள் அங்கே உயிர் பெற்றது போல் ஓர் உணர்வு மலருக்கே ஏற்பட்டது.

" ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த பழைய மாயாவை பார்க்கிறேன்,வாய்ப்பு கொடுத்த அந்த சாமியார்,அதான் பெயர் என்ன வசிஷ்டரோ விஸ்வாமித்திரனோ , நன்றியை சொல்லித்தான் ஆகணும் மாயா" மலர் மாயாவின் கைகளைப் பற்றிக்கூறினாள். மலரின் கிண்டலில் மாயா அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

"அது விஸ்வாமித்திரன் அம்மணி" சிரிப்பினூடே மலரின் வாக்கியத்தை சரி செய்தாள்." விரைந்து இங்கே வேலைகளை முடிக்கணும் மலர். அப்பத்தான் வின்டருக்கு இந்த விடுதிகளை பயன்படுத்த முடியும்,நம் வேலை இங்க மட்டும்தாண்டி,அந்த கடைசி அறை இல்லை" மலரோடு பேசிக்கொண்டே வேலைகளை நடத்தினாள்.

கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கழித்தே மித்திரனை மாயா சந்தித்தாள். 80% வேலை முடிந்தாயிற்று. இவர்களுக்கு சமைத்துப் போடவும் ஆள் இருந்ததால் மாயாவின் வேலை எளிதாயிற்று.காட்டேஜின் உள் அலங்காரங்களில் மனம் இலயித்தவனாய் மாயாவை மனம் திறந்து பாராட்டினான்.

"வெல்டன் மாயா,நான் நினைச்சத விட மிகவும் அற்புதமாய் இருக்கே இந்த இடம்,வெளிநாட்டு பயணிகளின் கனவுலகம் விஸ்லர்,அதோட இப்படி பல வேறு கலாச்சாரங்களையும் இந்த மலைத்தொடரில் கண்டு இரசிப்பதும் அவர்களுக்கு திகட்டவே திகட்டாது.என் நீண்ட நாள் திட்டம் இது.அதற்கு உயிர் கொடுத்ததிற்கு நன்றி பெண்ணே. நான் இல்லாமலே இவ்வளவு வேலைகளையும் அழகாய் செஞ்சிட்ட.சாரி கொஞ்சம் பெர்சனல் வேலைனால உங்ககூட வர முடியாம போயிடுச்சி"மித்திரனின் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது,கொஞ்சம் வருத்தமும் தெரிந்தது.

அதற்கும் சிறு புன்னகை மட்டுமே மாயாவின் உதடுகள் உதிர்த்தன. அருகில் நின்ற மலரின்ன் கண்களோ மித்திரன் மேல். மாயாவோ அதற்கு மேல் அங்கே நிற்கவும் இல்லை.தன்னைப் பார்த்தால் மரவட்டைப் போல் சுருண்டு கொள்ளும் மாயாவின் போக்கு மித்திரனுக்கு புரியவில்லை. தன்னை ஒத்த அவளின் இரசனைகள் அவனை அவள்பால் ஈர்த்தது.ஆனால் மாயாவோ சலனமே இல்லாமல் இருந்தாள்.ஏனோ அவள் செய்கை அவன் ஆண்மையை தூண்டுவதாய் அமைந்தது.வார இறுதியில் சின்ன விருந்தளிப்போடு அவர்களின் வியாபாரத் தொடர்பும் முடிந்தது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.