மனம் முழுவதும் மாயா நிறைந்திருக்க, மித்திரனுக்கு ஊண் உறக்கம் கூட பிடிக்கவில்லை.வழக்கம் போல் கசியும் அவனது ப்யானோ கூட அவன் விரல் படாது உயிரற்று இருந்தது.இது முதலில் உறுத்தியது மித்திரனின் அண்ணிக்குத்தான்.

"என்ன மித்திரன் சார், வர வர போக்கே சரியில்லையே. என்ன ஆச்சு ஐயாவிற்கு?

விஸ்லர் ல இந்த விஸ்வாமித்திரனை எந்த மேனகையாச்சும் வளைச்சிட்டாளோ?" கேலியாய் அவன் அருகில் அமர்ந்தவள் சிம்ரதி அனிஷ்ராஜ்.

நடந்தது எல்லாம் கனவு போல் இருந்தது சிம்மிக்கு.ரஜீவ்வின் மரணத்திற்குப்பின் நடைப்பிணம் போல் வாழ்ந்தவள். வாழ்க்கையின் நிஜங்களை எதிர்க்கொள்ளவே மிகவும் பயந்துப் போனாள். இந்த ஒரு வருடத்தில் உயிராய் இருந்த தோழிகள் இருவரும் சொந்த அலுவலில் தூரமாகிப்போக தனிமையில் சிம்மி சிக்கித்தவித்தாள்.

இடையில் ரஜீவ்வின் இறப்பு விபத்து இல்லை அது திட்டமிட்ட கொலை என்பதும் ரஜீவ்வின் நெருங்கிய போலிஸ் நண்பன் மூலம் சிம்மி அறிந்திருந்தாள். தோழிகளின் ஆறுதல் வார்த்தைகள் மெயில் மூலமாகவும் தொலைப்பேசி மூலமாகவும் சிம்மியை கொஞ்சம் ஆறுதல்படுத்தின. அதே வேளை அவள் செல்லும் இடமெல்லாம் ஒரு ஜோடி கண்கள் சிம்மியை தொடர்வதை அவள் அறிந்திருக்கவில்லை.

ஒரு மாலை வேளை,வயதான தம்பதிகள் இருவர் சிம்மி வீட்டிற்கு வந்தனர். தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் மூத்த மகன் ராஜ்ஜிற்கு சிம்மியை பெண் கேட்பதாய் சிம்மியின் மாமனார் மாமியாரிடம் சம்பந்தம் பேசினர்.இளம் விதவையாய் சிம்மியின் கோலத்தை தினம் தினம் கண்டு வேதனையுறும் ரஜீவ்வின் பெற்றோருக்கும் இதில் ஏக சந்தோசம். முதலில் குழம்பியவர்கள் பின் சிம்மியின் பெற்றவர்கள் தங்கள் விருப்பத்தை கேட்பதாய் சொன்ன மாப்பிள்ளை வீட்டினரை திரு&திருமதி அருளுக்கும் பிடித்துப்போயிற்று.

கண்களில் கண்ணீர் மல்க சம்மதம் தெரிவித்தனர்.ஆனால் அவ்வளவு எளிதில் சிம்மியை சம்மதிக்க வைக்க முடியவில்லை.மாயா அர்மிதா பேசியும் சிம்மி மசிய வில்லை. ரஜீவ்வின் பெற்றோர்களாலும் முடியவில்லை.கடைசியில் சிம்மியின் பெற்றோர்கள் சிம்மி கல்யாணதிற்கு ஒத்துக்கொள்ளா விட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாய் மிரட்டினாலும், லேசாய் நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்த அம்மாவை பார்த்ததும் சிம்மி தன் முடிவை மாற்றிக்கொண்டாள்.

அதுவரை பெயர் கூட தெரிந்துக்கொள்ள விரும்பாத சிம்மி மாப்பிள்ளை போட்டோவையும் பார்க்கவில்லை.

எளிய முறையில் நடந்த நிச்சயதார்தத்தில் தோழிகள் இருவரும் பங்குக்கொள்ள முடியாமல் போனது வருத்தம் என்றால் மாப்பிள்ளை என்று அவள் வெண்டை விரலில் மோதிரம் அணிவித்தவனை தலையுயர்த்தி பார்த்தவளுக்கு காலுக்கு கீழ் பூமி நழுவியது போல் இருந்தது. அவனேதான்.அதே ஆறடி உயரம்,அதே தீர்க்கப்பார்வை,அப்போ ராஜ்@ அனிஷ்ராஜ் தானா? அவனுடனான சில கசப்பான சந்திப்புகள் சிம்மி கண் முன் தோன்றி மறைந்தன.

ரஜீவின் இறப்பிற்குப்பின் ஒருமுறை அவனை ஷாப்பிங் காம்லெக்சிலும் இன்னொருமுறை ரெஸ்டாரெண்டிலும் சிம்மி சந்தித்திருந்தாள்.ஆனால் அவனோடு பேச கூட அவள் முயற்சிக்கவில்லை.அவன் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் முடிந்த வரை வந்த வேலையை முடித்துக் கொண்டு வெளியேறினாள். விதி சிம்மியை விடுவதாய் இல்லை.

மூன்றாம் முறை கஷ்டமருடனான சந்திப்பு அனிஷ் ஓட்டலில் முடிவானது.தொழில் முறை நண்பர் என்ற பெயரில் இவர்களை கண்டதும் பேச வந்தவன் முகத்தைப் பார்த்ததுமே சிம்மிக்கு நம்பிக்கை போயிற்று. சென்ற முறை சாரா முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய அனீஷை அவள் மறக்கவில்லை.

எப்படியும் என்னை இவன் அவமானப்படுத்த போகிறான்,அதுக்கு நாம ஏன் வாய்ப்பு தரணும்?பேசாமல் கிளம்பி விடுவது நல்லது அவள் உள்மனம் எச்சரித்தது.அதற்கு ஏற்றாற்போல் அந்த வாடிக்கையாளரும் பிறகு சந்திக்கலாம் என்று கூறி விட,சிம்மி அனிஷினால் தன் டீல் கண்டிப்பாக படியாது என்று உறுதியாய் நம்பி விட்டாள்.அதற்கும் மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் சென்று விட்டாள்.

இருவாரங்கள் கடந்து ராஜ் அண்ட் ராஜ் கம்பெனியிலிருந்து அவளுக்கு கால் வந்தது. நிறுவன உரிமையாளரின் ஒரே மகளின் நிச்சயதார்த்த விழாவிற்கு நகைகள் வாங்க வேண்டி சிம்மியை அழைத்திருந்தனர்.ராஜ் அண்ட் ராஜ் கம்பெனி பற்றி சிம்மி நிறைய கேள்விப்பட்டிருந்தாள்.பல ஒட்டல்களுக்கு சொந்தகாரர்களான இந்திய ஸ்தாபனம் என்று டொரோந்தோ நகரில் மிகப் பிரபலமானவர்கள்.

ரிசப்னிஷ்ட் காட்டிய வழிப்படி சின்னதாய் அமைக்கப்பட்டிருந்த மீட்டிங் ரூம்மில் சிம்மி அமர்ந்திருந்தாள். நகைகளின் வடிவமைப்பு மாதிரிகளை பார்வைக்கு அடுக்கி வைத்தவளை திடுக்கிட வைத்தது அந்த குரல். "ஹாய் சிம்ரதி" குரல் வந்த திசையில் தலைத்திருப்பி பார்த்தவள் எதிரே அனிஷ்.

அதே பணக்கார திமிர்பிடித்த அனிஷ். மறுபடியும் இவனா?.இவன் இங்க வந்து தொலைத்தான்?கண்டிப்பா இன்னிக்கு இந்த டீலிங் கிடைக்காம எதாச்சும் சகுனி வேலை பார்க்கத்தான் போறான்,சோ பெட்டர் நம்ம கிளம்பறது சிம்மியின் உள்மனம் அபாய மணி அடித்தது.எதுவும் பேசாமல் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பத் தயாரானாள்.

சிம்மியின் முக மாற்றத்தை கண்ட அனிஷ் "இஸ் எனிதிங் ரோங் சிம்ரதி? ஆர் யு ஓகே? "ஆங்கிலத்தில் வினவினான்.

"எப்படி எல்லாம் நல்லாப்போகும்,அதுவும் உங்கள பார்த்த அப்புறம்?" எதையும் யோசிக்காமல் நறுக்கென வந்தது வார்த்தைகள்.அனிஷின் நெற்றி சுருங்கியது.

"வாட்ஸ் ராங் வித் யு மிஸ்.சிம்மி?பிளீஸ் மைண்ட் யுவர் வோர்ட் வென் யு டாக்கிங்க் டு மீ" அனிஷின் ஆளுமைக் குரல் கணீரென ஒலித்தது. "நான் ஏன் பேசாம இருக்கணும்? எப்ப பார்த்தாலும் என்னோட பிஸ்னஸ் கெடுறதே உங்களால தான்.என்ன அவமானப்படுத்தற வகையிலதான் நம்ம சந்திப்பு நடக்குது. இப்ப இங்க உங்கல பார்த்த அப்புறமும் எனக்கு இந்த ஆர்டர் கிடைக்கும்னு நம்பிக்கையில்லை.எதுவும் ஆகறதுக்கு முன் நான் கிளம்பறது நல்லது" சிம்மி குரலில் சீற்றம் எட்டிப்பார்த்தது.

"முட்டாள் மாதிரி உளறாதே சிம்மி,உனக்கு ஆர்டர் கிடைக்கலனா அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஒன்னு உன்மேல தப்பு இருக்கலாம்,இல்லாட்டி உன் கஸ்டமர் மேல குறை இருக்கலாம்.அதுக்காக என்ன தப்பு சொல்றது சரியில்லை சிம்மி",உறுமலாய் வெளிப்பட்டது அனிஷின் குரல்.

"கவனமாய் கேளு சிம்மி, நான் உன் டீல்ல நாசம் பண்ண வரல. அப்பா அவசர வேலையாய் வெளியே போயிருக்கறனால என் தங்கையோட நிச்சயதார்த்த நகைகளை என்னை தேர்வு செய்ய சொல்லியிருக்காரு. புரிஞ்சிக்கோ! உங்கிட்ட வம்பு வளர்க்க எனக்கு நேரம் இல்லை.நம்ம பெர்சனல் சண்டையை அப்புறம் வெச்சிக்கலாம். இப்போ நகைகளை பார்க்கலாமா?" அவன் நீண்ட கைகள் சிம்மியின் லெப்டாப்பை இலாவகமாக கைப்பற்றின. விரும்பிய நகைகளை விரைந்து தேர்வு செய்தவன்,வேறேதும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.

சில்லிட்ட அவள் விரல்களில் அவன் கை படவும் நிஜ உலகிற்கு வந்தாள்.அவன் கண்களில் சலனம் இல்லை.இறுகிய உதடுகளில் புன்னகை இல்லை.எப்பவும் போன்ற அதே திமிர் பிடித்த அனீஷாகவே அவன் இருந்தான். எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தேறியது.மாத இறுதியில் எளிமையான முறையில் திருமணமும் கிராண்டாக ஒரு விருந்தும் செய்ய இருவீட்டாரும்ஒப்புக்கொண்டனர். இடைக்காலத்தில் அனீஷ் சிம்மி இருவரும் எந்த தருணத்திலும் பேசிக்கொள்ள வில்லை. அனீஷ் வீட்டாருக்கு சிம்மியை மிகவும் பிடித்துவிட்டது.

ஆரம்பத்தில் அவன் பெற்றோர்கள் ஆட்சேபித்தாலும் சிம்மியின் குணம் கண்டு அவளை மனதார ஏற்றுக்கொண்டனர்.இரும்பு மாதிரி இருப்பவனை இளக வைத்தவளை அனீஷின் தம்பிகளுக்கும் தங்கைக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.