லிட்டில் இந்தியாவில் மாயாவின் வீட்டு விலாசம் எளிதில் கிடைக்க மனதிற்குள் விசிலடித்தவாறே மித்திரன் மாயா வீட்டிற்குச் சென்றான். அவளை எதிர்ப்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனை வரவேற்ற அவளுடைய தாயார் பழகுவதற்கு இலகுவாகவே இருந்தார். வீடு முழுக்க இந்திய அலங்காரங்கள் இடம் பிடித்திருந்தன.

வாசலில் வண்ண கோலமும், மண் உருலியில் ரோஜா மலர்களும்,சின்னதாய் இரண்டு வரவேற்பு சிற்பங்களும் கண்களை கவருவதாய் இருந்தன.காபி கொடுத்து உபசரித்த மாயாவின் அம்மாவை மித்திரனுக்கு பிடித்து விட்டது.

"மாயா கொஞ்சம் வேலையாய் வெளியே போயிருக்கா தம்பி,கொஞ்சம் இருங்க வந்திடுவா" சகஜமாய் பேசிய அவருக்கு மித்திரனை

தெரிந்திருந்தது.ராஜ் அன்ட் ராஜ் கம்பெனி பற்றி கூறுகையில் மாயா மித்திரனைப்பற்றியும் தன் அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.

"ஆண்டி,உங்க வீடு ரொம்ப அழகாய் இருக்கு,கோவில் மாதிரி வெச்சிருக்கிங்க" மித்திரனின் வார்த்தையில் முகம் மலர்ந்த மாயாவின் அம்மா ஜானகி, "எல்லாம் வாணியோட கைவண்ணம் தம்பி,நூதன இரசனைகள் அவளுக்கு"

"ஆமாம் ஆண்டி,வாணியை கட்டிக்க போகிறவன் கொடுத்து வைச்சவன்,கனாடாவில் தமிழ் கலாச்சாரம் மாறமல் இருக்கிற பொண்ணுங்க கொஞ்சம் கம்மிதான் ஆண்டி"அவன் பேச்சினில் ஜானகியம்மாவின் முகம் மாறிவிட்டது.

"அதுக்கு கொடுப்பினை இல்லை தம்மி எங்களுக்கு,இந்த பாவிமக இனிமே கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு உறுதியா சொல்லிடா. எப்படியிருந்த மகராசி,சதா பாட்டும் சிரிப்புமாய் சந்தோசமாய் உலா வந்தவளை இப்படி மரவட்டை மாதிரி சுருண்டுக்க வெச்சிட்டான் அந்த பாவி" கண்ணீர் துளிகள் அவர் முகத்தை நனைத்தது.

அதை கண்டு பதறியவன். "ஆண்டி,வாணி ஏன் இப்படி இருக்காங்க?அவ சம வயது ஆண்களுடன் சகஜமாய் பேசி நான் பார்த்தில்லை, ஒரு மியூசிக் கூட கேட்கறது இல்லை, இன்பெக்ட் எங்கிட்டயே அவங்க அவசியமில்லாமல் பேசினது இல்லை"ஆறுதலாய் அவர் கைகளைப்பற்றிக் கொண்டான்.

"எங்கூட வாப்பா."

அவரை பின் தொடர்ந்தவன் கண்களுக்கு ஒரு கண்ணாடி அறை தென்பட்டது.அறை முழுவதும் கண்ணாடிகளால் தடுத்திருந்தது.அது முழுக்க கனமான மெரூன் திரைசீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது.சூரிய வெளிச்சம் அந்த அறையில் படவே இல்லை.மாயாவின் அம்மா அறையின் மின்சார விளக்குகளை உயிர்ப்பித்தார். அந்த அறையே மாயாலோகம் மாதிரி தெரிந்தது மித்திரனுக்கு.

அறை முழுக்க மாயா அழகாய் சிரித்துக்கொண்டிருந்த ஓவியங்கள்.நாட்டியம் பயின்றவள் போலும் மேனகை வேடத்தில் மிகவும் ஒயிலாக நின்றிருந்தாள். காற்றில் கசியும் நூதன புல்லாங்குழல் இசை சிஸ்டத்தில் மிதந்து வந்தது. அத்தனை வேடத்திலும் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மாயா.அவள் ஓவியங்களை சுற்றிலும் மேபல் இலைகள் கொடிப்போல் படர்ந்திருக்க அந்த மேனகை விசுவாமித்திரனை அசைக்கத்தான் செய்தாள்.

சித்தன்ன வாசல் ஓவியம் உயிர்த்து நிற்பது போன்ற ஒரு பிரமை அவன் மனதில் எழத்தான் செய்தது. மெல்ல நிஜ உலகிற்கு வந்தவன் அருகில், மாயாவின் அம்மா ஜானகி நின்றிருந்தார்.

"பாட்டும் நடனமும் அவளுக்கு உயிர் தம்பி,சலங்கை சத்தமும்,அவளோட நடனமும் இந்த அறை முழுக்க எதிரொலிக்கும்.ரொம்பவும் கலையுணர்வு கொண்டவள்,எல்லோர்கிட்டயும் ரொம்ப இலகுவா பழகுவா தம்பி."

"அவளை மாதிரி இரசனைகள் கொண்ட மதன் மேல உயிரா இருந்தா,அந்த அயோக்கிய ராஸ்கல் ஒரு பொம்பளை பொறுக்கி!அவன் மாயாவை அனுபவிக்கதான் காதலிச்சாங்கறத ஒரு கட்டதில் மாயாவே புரிஞ்சிக்கிட்டா தம்பி."

"அவளால அந்த வலியை தாங்கிக்க முடியல. எந்த ஆண்களையும் அவ நம்பறதும் இல்லை. அவளோட இரசனைகள் அவளை பலவீனப்படுத்தும் ஆயுதமாய் எந்த ஆணும் பயன்படுத்திட கூடாதுன்னு தனக்குனு ஒரு முக முடி போட்டுகிட்டா. இந்த அறையில அவ சலங்கை கதை பேசி பல வருசம் ஆச்சு தம்பி.கல்யாணம் காதல்னாலே அவளுக்கு அலர்ஜிக் ஆச்சு. அவ அவளாய் இருக்கறது அவ தோழிங்க கிட்டதான். "

"மனசு ஆறுதலுக்கு இந்த இந்திரியர் டிசைனிங் கத்துக்கிட்டா.கடவுள்தான் அவ மனச மாத்தணும் தம்பி", கண்களை துடைத்துக் கொண்டு அவர் நடக்க.மாயாவின் கதையில் நிஜம் புரிந்த மித்திரனுக்கோ அவளை அங்கணமே ஆறுதலாய் அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

தன்னிடம் மரவட்டையாய் சுருள காரணம் அவளை ஒத்த அவனது கலையுணர்வு,இரசனைகள்.

இயல்பாய் அவனோடு இருக்க முடியாமல் மாயா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்?அவனால் நினைக்கக்கூட முடியவில்லை.சஞ்சலத்துடன் அகன்றவனை தன் தோழிகள் சிம்மி,அர்மிதாவுடன் நடன உடையில் ஒயிலாய் நின்றிருந்த மாயாவின் ஓவியம் அறைக்கோடியிலிருந்து பார்த்து சிரித்தது.

அவன் கண்களில் அந்த ஓவியம் தென்பட்டிருந்தால் மித்திரனுக்கு கஷ்டமே வந்திருக்காது.கடவுளின் கண்ணாமூச்சி ஆட்டதிற்குள் அவனும் பகடையாகிப் போனான்.அவள் அம்மாவிடம் நிலாவின் திருமண பத்திரிக்கையை தந்தவன் சிறு புன்னகையுடன் விடைப்பெற்றான். காரில் அமர்ந்தவனை கார் மேகம் சூழ்ந்து மழையால் நனைக்க, மனமெல்லாம் மாயா நிறைந்திருந்தாள்.

கார் ப்ளேயரில் அவனுக்காய் கசிவது போல்,

ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்... திருடுகின்றாய்..

யாருக்கும் தெரியாமல் திருடுகின்றாய்..

முதலில் என் கண்களை..இரண்டாவது இதயத்தை..மூன்றாவது முத்தத்தை..

அவனுக்காய் கிறுக்கியது போன்ற உணர்வு மேலிட,தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

நிஜம்தான் மாயா மெல்ல மெல்ல அவனை கொள்ளை செய்து கொண்டிருந்தாள்.

எப்பொழுது அந்த ஓவியத்தில் சிரிக்கும் மாயாவை நிஜத்தில் காண்பது? ஏக்கமாய் பெருமூச்சு எழுந்தது மித்திரனுக்கு.

சிம்மி அண்ணியை பிடிக்கணும்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த சிம்மி நிஜ உலகிற்கு வந்தாள்.அவளால் அழ மட்டுமே முடிந்தது. உடனே மாயாக்கும் அர்மிதாவிற்கும் கான்பரன்ஸ் காலில் அழைத்தாள். அழுகையினூடே அனைத்தயும் சொல்லி முடித்தாள்.

"ரிலாக்ஸ் சிம்மி,நீ மொத அழறத நிறுத்து.அனிஷ் அப்படி ஒண்ணும் மோசமான பேர்வழி இல்ல.உன்ன எதும் செய்ய மாட்டார்.ஒன்ன மனசுல வெச்சுகோ சிம்மி,நீ எதுக்காகவும் இந்த உறவை முறிச்சிக்க கூடாது.உன் அம்மா உடல் நிலை இப்பதான் தேறிகிட்டு வருது.அவசரப்படாதே!நிலமை கை மீறினா அப்ப பார்க்கலாம் "மாயாவும் அர்மிதாவும் அப்பொழுதிற்கு சிம்மியை சமாளித்தனர்.

மறுநாள் சிம்மிக்கு நரக விடியலாய் அமைந்தது. அனீஷின் அவதாரம் ஆரம்பமாகியது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.