பாகம் 9

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் உற்சாகமாய் விடிந்தது மாயாவிற்கு. சிம்மியின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வந்ததும்,அர்மிதாவின் வருகையும்,மித்திரனின் உதவியும் மாயாவுக்குள் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணியது. உடனே மித்திரனை நேரில் சந்தித்து நன்றி கூற விரும்பினாள். தன் டெஸ்லாவில் மித்திரன் வீட்டிற்கு சென்றவளை வரவேற்றது சிம்மி.

"ஹேய் மாயா..என்ன இந்த பக்கம்?என்னை பார்க்க வந்தியா?" சந்தோசமாய் சிம்மி கேட்க, மாயா புன்னகையித்தாள்.

"மிஸ்டர் மித்திரனைப் பார்க்க வந்தேன்டி"

"வாட்!மித்திரனையா?உனக்கு அவரை எப்படித் தெரியும்டி?" ஆச்சரியமாய் வினவினாள் சிம்மி.

"உங்க விஸ்லர் காட்டேஜ் இந்திரியர் டிசைனர் நாந்தான் சிம்மி,அப்பதான் உன் கல்யாணம் கூட நடந்துச்சு".

"ஓ ..எனக்கிது தெரியாதுடி"


மனதில் மித்திரன் குறிப்பிட்ட அந்த வாணி சந்தேகமே இல்லாமல் இந்த மாயாவாணிதான் என்பது தெளிவாய் புரிந்தது சிம்மிக்கு.அதற்குள் மாயாவின் குரல் கேட்டு கீழே வந்த மித்திரனுக்கு சிம்மி மாயாவின் இயல்பு சம்பாஷணை சிம்மியின் தோழி மாயாதான் என்பதை உணர்த்தியது.சிம்மியின் கேலிப்பார்வை மித்திரன் மேல் படிய,அவன் அசடு வழிந்தான்.மித்திரனை பார்த்து இரகசியமாய் புன்னகையித்த சிம்மி "நீங்கள் இருவரும் பேசிக்கிட்டு இருங்க,நான் காபி எடுத்துக்கிட்டு வரேன்",என்று நழுவினாள்.

தெளிவான முகத்துடன் மாயாவை பார்க்க மித்திரனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

"வெல் வாணி,இன்னிக்கு கொஞ்சம் பெட்டர் அ பீல் பண்ணுவிங்கணு நான் நினைக்கிறேன்" புன்னகையித்தான்.

வெறும் ஜீன்ஸ் டி-சட்டையில் அட்டகாசமாய் இருந்தான் மித்திரன்.படிய வாராத தலை முடி அலை அலையாய் நீண்டு அவன் ஆணழகன் என்பதை மாயாவிற்கு பெருமையாய் காட்டிக் கொண்டிருந்தது.ராஜ் குடும்பத்தில் இந்த கடைக்குட்டி கொஞ்சம் வித்தியாசமாய் இருப்பது போல் மாயாவிற்கு தோன்றும்.

அனிஷ் ட்ரிம் செய்த தலை முடியோடு இருப்பான்.அரவிந்தனும் அப்படியே.ஆனால் மித்திரன் கொஞ்சம் வித்தியாசமாய் பாகவதர் ஸ்டைல் மாதிரி முடியை வளர்த்திருந்தான்.தொழிலில் கில்லாடி என்றாலும் அவன் இரசனைகள் அவன் அம்மாவிற்கே தலை வேதனையாய்தான் இருக்கும்.அவனுக்கு ஜால்ரா அவன் செல்லத் தங்கை நிலா.சிம்மி வாயிலாய் இதெல்லாம் மித்திரனை பற்றி மாயா அறிந்திருந்தது.

சிம்மியின் தலை கிச்சனுக்குள் மறைந்தவுடன் மாயாவுடன் இயல்பாய் உரையாடலில் கலந்தான் மித்திரன்.
"வந்து மிஸ்டர் மித்திரன் நேற்று என்னைக் காப்பாற்றியதுக்கு ரொம்ப நன்றி" இரு கரங்களை குவித்து நன்றி நவின்றவளை அப்படியே கட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது மித்திரனுக்கு.

இலகுவாய் அவள் நன்றியை ஏற்றவன்," சிம்மி அண்ணியும் நீயும் ப்ரண்ட்ஸ் அ மாயா?எங்கிட்ட இத நீ சொன்னதே இல்லையே?" அறியாப்பிள்ளைப் போல் வினவினான்.

ஆமாம் என்பது போல் தலையசைத்தவள், "விஸ்லரில் காட்டேஜ் வெர்க் விசயமா நான் போன அப்புறம்தான் சிம்மியை உங்க அண்ணாவிற்கு பெண் கேட்டு வந்தாங்க,எனக்கே இதெல்லாம் சிம்மி கல்யாணத்தில்தான் தெரியும் மித்திரன். பட்,அத சலுகையா யூஸ் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லை,"தெளிவாய் பேசினாள்.

இதற்குள் சிம்மி காபியுடன் வந்துவிட,மூவரும் நிலாவின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி விவாதித்தனர்.
தன்னைப் பார்த்தால் மரவட்டைப் போல் சுருண்டுக் கொள்பவள், கேலியும் கிண்டலுமாய் இப்படி மனம் திறந்து பேசும் மாயாவை மித்திரன் மிகவும் இரசித்தான்.இனிமேலும் மாயா இப்படி இலகுவாய் இருப்பாள் என்று நம்பிக்கை அவனுக்குள் வந்தது.அண்ணி சிம்மி அதற்கு துணை செய்வாள் என்ற தெம்பும் வந்தது.

அனிஷை பார்த்த விஷயத்தை அழகாய் மறைத்தவள்,எதுவும் அறியாதவள் போல் அனிஷை பற்றி சிம்மியிடம் கேட்டாள்.ஏனோ அவனை சிம்மியின் மனம் தேடலாயிற்று.இனி தாங்காது என்பது போல் தன் வீட்டிற்கு மாயாவுடனேயே பயணமானாள்.அனிஷ் வந்தாலும் சரி வரவிட்டாலும் சரி, தன் வீட்டில் இருப்பதே சரி என்று நினைத்தாள்.வீடு அவள் விட்டு சென்ற நிலையில்தான் இருந்தது.

தளர்ந்து தன்னை வீட்டு வேலைகளில் ஈடுப்படுத்திக் கொண்டவளின் கவனத்தை குளியலறை ஷவர் குழாய் திசைத்திருப்பியது.பிடி சரியாக பொருந்தாமல் நீர் கசிந்து கொண்டிருந்தது.அதை சரி செய்ய முற்பட்டவளை தண்ணீர் குழாய் திடிரென்று நீர் அழுத்தம் தாங்காது வெடித்து சிம்மியை திணறடித்து விட்டது.அப்பொழுதான் அங்கு வந்த அனிஷ் அவளுக்கு உதவ முன் வர இருவரும் நீர் அபிஷேகித்து ஆனந்தித்தது.

தன்னை பிடித்திருப்பது தன் கணவன் என்பது உரைக்க சிம்மி விலகினாள்.ஈர பாதம் கால்மிதியை மிதிக்க, அது வழுக்கி அப்படியே சிம்மி தரையில் விழப்போனாள்.பின்னால் வந்த அனிஷ் சட்டென அவளைத் தாங்கி அப்படியே தூக்கிக் கொண்டான்.குளிர் நீரால் வெடவெடத்த சிம்மி அனிஷின் மார்பில் குழந்தைப் போல் ஒண்டினாள்.மெல்ல அவளை தன் படுக்கையில் கிடத்தியவன்,குறும்பாய் ஒரு புன்னகை சிந்தி தன் டவலை அவளுக்கு போர்த்தினான்.

"ட்ரஸ் மாத்திக்கோ சிம்மி,எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப?நான் போய் ஷவர் காப் அ மாத்திட்டு வரேன்",மென்மையாய் அவள் காதில் கூறி விட்டு அகன்றான்.கனவு போலிருந்தது சிம்மிக்கு.இது அனிஷ்தானா என்று கேள்வியும் மெல்ல எழுந்தது.சந்தேகத்தை ஓரக்கட்டி விட்டு நனைந்திருந்த உடையை மாற்றிக்கொண்டாள்.ஏதோ ஒரு யூகத்தில் அவனுக்கும் சேர்த்து சமைத்தது நல்லதாயிற்று.அவளோடு அமர்ந்து அவள் சமைத்ததையும் அனிஷ் உண்ண,அன்றைய பொழுது பார்வை சீண்டலிலும் இரகசிய புன்னகையிலும் கழிந்தது.

மறு நாள் இலகுவாய் விடிந்த காலை பொழுது இருவருக்கும் இனிமையாய் அமைந்தது.அன்று நிலாவின் திருமண ஷாப்பிங் இருப்பதால் அனிஷ் சிம்மியுடன் தன் அம்மா வீட்டிற்குச் சென்றான். அலங்கார வேலைக்கான சில பொருட்களை வாங்க மாயாவின் உதவியை அர்மிதா நாட,அவளுக்கு வேண்டியவற்றை தன் நண்பன் கடையில் வாங்கித் தருவதாய் மித்திரன் வலிய வந்து ஒட்டிக் கொண்டான்.

அவன் துணையை விலக்க விரும்பாத மாயா சரியென்று ஒத்துக்கொண்டாள்.அதனால் சிம்மியுடன் சேலை தேர்விற்கு வரஇயலவில்லை.மித்திரன் மனம் அறிந்த சிம்மியும் குறும்பு பார்வையுடன் மாயாவை விட்டுத் தந்தாள்.
மாமியார்,நிலா மற்றும் கணவருடன் ஜெரார்ட் இந்திய பஜாருக்கு சிம்மி பயணமானாள்.இந்த அங்காடித் தெரு,'லிட்டில் இந்தியா' என்றும் அழைக்கப்படும் இடமாகும்.நூற்றுக்கணக்கில் இந்திய கடைகளும், உணவகங்களும், ஜவுளி நகைக்கடைகளும் வரிசையாய் இடம்பிடித்திருக்கும். இந்திய பொருட்கள் ,நவீன நாகரீக அலங்கார பொருட்கள் முதல் உப்பு புளி மிளகாய் வரை அனைத்தும் இங்கே கிடைக்கும்.தோரோந்தோ நகரின் மிக பெரிய தென்னாசிய வணிக சந்தை என்ற பெருமையும் ஜெரார்ட் பஜாரையே சாரும்.

கலவையாய் மக்கள் பொருட்களை வாங்குவதில் மும்முரமாய் இருக்க,இவர்களும் வேண்டியதை வாங்க ஆரம்பித்தனர்.சிம்மியின் சாரித் தேர்வு நிலாவிற்கு திருப்தியளிக்க,பிற ஜவுளிகளையும் அண்ணியை தேர்வு செய்ய சொல்லி விட்டு அகன்றாள்.அப்பொழுது கண்ணில் பட்ட பிங்க் நிற காஞ்சிபுர பட்டில் பொன் சரிகைகள் இழையோட இடையிடையே கிரிஸ்டல் வெர்க் செய்யப்பட்டிருந்த சாரியின் மேல் சிம்மியின் கவனம் திரும்பியது.

ஆசையாய் அதை தடவி பார்க்க முற்பட்டவளிடம் அவள் அத்தை அழகான மயில் கழுத்து வண்ண பட்டை நீட்டினார். "சிம்மிமா,உனக்கு இந்த சாரி ரொம்ம நல்லா இருக்கும், அத்தை உனக்காக வாங்கிட்டேன்.உனக்கு புடிச்சிருக்காடா"?ஆசையாய் கேட்ட மாமியாரை சிம்மி பார்த்து சிரித்தாள். "ரொம்பவும் அழகு அத்தை,எனக்கு புடிச்சிருக்கு" அந்த சாரியை பாக் செய்ய சொன்னவள் காஞ்சிபுரத்தை மறந்தாள். ஆனால் அதை கண்டுக் கொண்ட அனிஷ் தனியாக அந்த பிங்க் சாரியை பாக் செய்து கையோடு எடுத்துக் கொண்டான்.

அன்று முழுக்க ஜெரார்ட் பஜாரை சுற்றி வர கலகலப்பாய் பெண்கள் சம்பாஷணையில் அனிஷ் இணைந்துக் கொள்ள, சிம்மிக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.சாலையை கடக்கும் பொழுது சிறுபிள்ளைப் போல் அவள் கைப்பற்றிக் கொண்டான்.அவன் தொடுதலின் ஸ்பரிசம் மென்மையாய் சிம்மிக்குள் ஊடுருவ, கள்ளத்தனமாய் அவனை சைட் அடித்தாள்.திருமண நாள் நெருங்கி வர,தன்னோடு தங்க தம்பதிகளை அழைத்துச் சென்றார் மீனாட்சியம்மாள்.

வேறு வழி இல்லை,அனீஷுடன் அவன் அறையில் உறங்க வேண்டிய நிலைக்கு சிம்மி தள்ளப்பட்டாள்.அனீஷிற்கு சந்தோசமாய் இருந்தது.தனிமையில் சிம்மிக்கூட இருக்க அவனுக்கு கசக்குமா என்ன?
"சிம்மி டார்லிங்,இன்னிக்கு என்கூடதான் நீ தூங்கியாகணும்,தனி பெட் அதெல்லாம் இங்க கிடையாது.கை கால தூக்கி போடாம அழகா தூங்கணும்,சரியா?" குறும்பாய் கண் சிமிட்டியவனின் கையில் அவன் அம்மா கொடுத்த பால் குவளை இருந்தது.

சிரித்தபடி அவளிடம் நீட்டியவனை பொய்யாய் முறைத்தாள்.அவனுக்கு அவள் சளைத்தவள் இல்லையே.
"கை என்மேல பட்டுச்சினா கடிச்சிடுவேன் சொல்லிட்டேன்"பாலை குடித்துக்கொண்டே அனிஷை மிரட்டினாள். பல் வரிசை தெரிய சிரித்தவன், "போதும் உன் வீரம் சிம்மி செல்லம்,அனிஷ்கிட்ட வேண்டாம் பலப்பரிட்சை" சற்றே புருவத்தை உயர்த்தி கண்சிமிட்டினான்.சிம்மி தடுமாறிவிட்டாள்.


விட்டால் கண்களால் கைது செய்திருவான்,தப்பிச்சோம் சாமி என்று தலையோடு போர்வையை இழுத்துப் போர்த்தினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN