வெண்ணை குவியலாய் குட்டி மேகம் போல் ஒரு சின்னக் குழந்தை மாயாவின் கையிலிருந்தாள்.

" மாயா ஆண்டி மாயா ஆண்டி செல்பீ,சிதி சிதி, "குட்டி மாயாவை செல்லில் படம் பிடிக்க அடம் பிடித்தாள்.

மாயா அவளுக்கு போக்குக் காட்ட "மித்தி குட்டி ஆண்டியை பிடிச்சிட்டா செல்பீ,இல்லாத்தி மித்தி குட்டி ஆண்டிக்கு 5 கிஸ் கொடுக்கணும்,டீல் அ நோ டீல் ஆ" மாயா மித்தி எனும் மித்ராவை வம்பிழுக்க, மித்தியும் ஒப்புதலாய் தலையாட்ட,அவர்கள் ஆட்டம் தொடங்கியது.மித்திரன் இருப்பதையும் உணராமல், அந்த பிஞ்சு குழந்தையுடன் தானும் ஒரு குழந்தைப்போல் மாயா விளையாடிக்

கொண்டிருந்தாள்.

அடர் மெருனில் வெள்ளி சம்கி வேலைபாடுடைய காக்ரா சோளியும்,அலை அலையாய் அலையும் கூந்தலை தளர் பின்னலிலும் காதோரம் இரண்டு ரோஜாக்கள் இடம்பிடித்திருக்க,கைக்குள் சிக்கிக் கொள்ளும் சின்ன இடையும் மித்திரனை என்னவோ செய்தது.அதற்கு மேல் இருக்கையில் உட்கார முடியாமல் மாயாவை நோக்கி நடந்தான்.அண்ணன் அரவிந்தன் தனித்திருப்பான் என்பதையும் மறந்து.

"ஹாய் செல்லக்குட்டி,"மித்தியை நோக்கி மித்திரன் கையசைத்தான். அவன் குரல் கேட்டதும் முகம் மலர்ந்த குட்டி அவனை நோக்கி ஓடினாள். ஒரே எட்டில் அந்த தளிரை தூக்கிய மித்திரனின் கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களினால் மித்திரா முத்தமிட்டாள். "மித்ரன் அங்கிள்,ஹௌ ஆர் யூ"? அவன் கழுத்தை மித்தி இறுக்கி கட்டிக்கொண்டாள். "ஐயாம் பைன் பேபி,நீ எப்படி இருக்க செல்லம்?" மித்திரனும் அவளை இறுக்க அணைத்து முத்தமிட்டான்.

அருகில் எதுவும் புரியாமல் மாயா முழிக்க,மித்தியை ஒரு கையில் தூக்கி வைத்தவாறே "மாயா மித்தி என் பெஸ்ட் ப்ரண்ட் ப்ரண்வ்வோட பொண்ணு,அவ பொறந்த அப்பவே என் பெயர்தான் வைக்கணும்னே அவ அப்பா அடம்பிடிச்சி வெச்சான்.சோ அவ பெயர் மித்ரா,பட் முன்னுக்கு என்னவோ ஒரு பெயர் வரும்,எனக்கு நினைவு இல்ல.அதனாலதான் இவ எங்கூட ரொம்ப அட்டாச்.நான் அவளோட பிளேமெட்," சொல்லி விட்டு மித்திரன் சிரிக்க அதற்கு தகுந்தாற்போல் அவளும் அவன் தலை முடியை கவனமாய் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

பேச்சு தன்னைப் பற்றிதான் என்று மித்திக்கு புரிய, மித்து "அங்கிள் என் புல் நேம் மாயா மித்ரா ஸ்ரீ ,தெரியுமா உங்களுக்கு?"மித்தி தன் பெரிய விழிகளை உருட்டி மித்திரனை திகைப்படைய வைத்தாள்.

மித்திரன் பார்வை மாயா மேல் படிய,அவள் புன்னகையித்தாள். "மித்தியோட அம்மா சுஜா என் கசின் சிஸ்டர் மித்திரன். அவளுக்கு என் பெயர் புடிக்கும்.மித்தி என்னை மாதிரி வரணும்னு இந்த பேரைவெச்சிருக்கா.இன்பெக்ட் எனக்கே இது இப்பதான் தெரியும்.இவ நேமிங்க் செரமனிக்கு என்னால போக முடியலை.சும்மா வெளயாட்டுக்கு சொல்றானு பார்த்தா என் பெயரையும் சேர்த்து வெச்சிட்டா."

மித்திரனுக்கு விளக்கியவளை,

மித்தி இலாவகமாய் பிடிக்க "ஆண்டி மாட்டிக்கிட்டிங்களா? செல்பீ செல்பீ கித்த பா ஆண்டி"மித்தி தன் மழலைக் குரலில் அழைக்க மாயா உருகிப்போனாள்.மித்திரனையும் விடாமல் மாயாவையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் மித்தி.மாயாவிற்கு மித்திரனின் அருகாமை அவஸ்த்தையாய் இருந்தாலும் மித்திக்காக நின்றாள்.உடனே மித்திரன் தன் ஐபோனில் இந்த காட்சியை செல்பீ மோட்டில் கிளிக் செய்தான்.

தன்னையும் மறந்து கன்னக்குழி சுழிய மாயா சிரிக்க மித்திரன் மாயாவின் உண்மையான குணாதிசயங்களை கண்டான்.அதற்கு மேல் அங்கு மேலும் சில வாண்டுகள் மாயாவையும் மித்திரனையும் மொய்த்துக் கொள்ள,மித்திரன் திணறிவிட்டான்.இந்த பிஞ்சுளை எப்படி இவள் வசியம் செய்தாள்?மாயா மித்திரனுக்கு தேவதையாய் தோன்றினாள்.அவளை கனமும் பிரிந்திருக்க விரும்பாமல் அந்த மழலை பட்டாளங்களுடன் அவனும் ஒரு அங்கமாகிப் போனான்.அவர்களை தோட்டதிற்கு விளையாட அழைத்துச்சென்றான் மாயா துணையுடன்.

இதையெல்லாம் தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்த அரவிந்தன் மனதில் "அனிஷை சொல்லிட்டு இந்த சாமியார் பய அந்த பொண்ணு மாயா பின்னால சுத்திக்கிட்டு இருக்கானே,நல்ல அண்ணன் தம்மி வாச்சானுங்க எனக்கு"என்று எண்ணிக் கொண்டான்.

அப்பொழுது யாரோ இடித்து விழுவது போல் சத்தம் கேட்க, அரவிந்தன் "இந்த அர்மிதா எப்பவும் இப்படிதான்,யார் மேலயாச்சும் மோதி மோதி விழவேண்டியது".பார்வையை அங்கே திருப்பாமலே விழுந்தது அர்மிதா என்று சரியாக யூகித்தான்.

சற்றே பார்வையை உயர்த்தினான். அவன் நினைத்தது போலவே அர்மிதா எதிரே வந்த ஒருவனின் மேலே மோதிவிட்டிருந்தாள்.அவளின் அழகு நிமிடத்தில் அவனை கொள்ளை செய்தது.அழகான பிங்க் நிற சோக்ரா பாவாடையில் கண்களில் அழகு மின்ன இடித்தவனை நோக்கி மன்னிப்புக்கோரினாள்.அரவிந்தன் அவளைப்பார்த்து ஜொள்ளு விட, நொடியில் புரிந்துக்கொண்ட நிலா ,கண்களாலே அவனை அவளிடன் செல்ல அனுமதி வழங்கினாள்.

இதுதான் சமயமென்று அரவிந்தன் மெல்ல நழுவினான்.அரவிந்தன் அர்மிதாவை நோக்கி முன்னேற,

அப்பொழுது காற்றில் மிதந்து வந்த கானம் இருவரையும் ஸ்தம்பிக்க வைத்தது."ஒரு பார்வை ஒரு வார்த்தை தந்தாலும் போதும் கண்ணா",அர்மிதாவின் கண்கள் இரண்டென அரவிந்தனின் கண்களில் கலந்து நின்றது.அவனும் அவளும் மட்டுமே அங்கிருப்பதுப்போல்,அன்று பெய்த அதே மழை,இன்றும் இவர்களின் சந்திப்பிற்கு சாட்சியாக வந்திருந்தது.

உலகம் மறந்துப்போனது இருவருக்கும்.அரவிந்தன் கை தன்னிச்சையாக அர்மிதாவை ஆட அழைத்தது.

அப்பொழுது, சிவ பூசையில் கரடியாய் "டேய் அண்ணா,அம்மா உன்ன தேடராங்க ,சீக்கிரம் வா",மித்திரன் அர்மிதாவை கடந்து அரவிந்தன் கையைப் பற்றி இழுத்துச் சென்றான்.அரவிந்தனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. "பாவி மித்ரா எல்லாவற்றையும் கெடுதிட்டியே",மனதிற்குள் தம்பியைக் கறுவினான்.

சூழ்நிலையை உணர்ந்த அர்மிதா,அங்கிருக்கப்பிடிக்காமல் பால்கனியை நோக்கி ஓடினாள்.அவளை இம்சித்தது மழை மட்டும்மல்ல, அவனுடைய நினைவுகளும்தான்.எவன் நினைவுகளுக்கு இதயத்தில் இருட்டு சிறையில் இடமளித்தாளோ,எவன் உறவுக்கு பல வருடங்களுக்கு முன் உயிர் அறுத்தாளோ,அவன்.. அவளுடைய அரவிந்தன்,இதோ இங்கே இன்னமும் தன் இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்கும் வித்தை அறிந்தவனாய் வலைய வருகின்றானே.மனம் ஏனோ கடந்த காலத்தின் பதிவுகளை அவள் அனுமதியின்றி அரங்கேற்ற தொடங்கியிருந்தது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.