பாகம் 12

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அர்மிதா அப்பொழுது கனாடாவில் பிரசித்திப்பெற்ற காலேஜில் படித்துக்கொண்டிருந்த சமயம், பைன் ஆர்ட்ஸ் மாணவியான அர்மிதா இயல்பாகவே கலகலப்பானவள். படிக்கும் பொழுதே ஏதாவது விஷமம் செய்து மாட்டிக் கொள்வதே அவளுக்கு வேலையாய் இருந்த காலம் அது.நண்பர்கள் இருக்கையில் குண்டூசி வைப்பது, இல்லையின்றால் பசைத்தடவி விடுவது,திடிரென்று பயமுறுத்துவது,இப்படி ஏதாவது ஒன்று செய்யாவிட்டால் அர்மியால் நிம்மதியாய் இருக்க முடியாது.

அன்று அப்படிதான்.பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் தன் தோழன் ராம்மை கலாய்க்க கிளாஸ் வாசலில் தண்ணீர் நிரம்பிய பலூனை கட்டி வைத்திருந்தாள்.முன்பே ஏற்பாடு செய்தது போல் வகுப்பில் யாரும் இல்லாமல்,முதலில் ராம் நுழைவது போல் பக்காவாய் ப்ளான் பண்ணி வைத்திருந்தாள்.ராம் உள்ளே நுழைந்ததும் இவள் பலூனை ஊசியால் குத்த,அவன் தலையில் நீர் அபிஷேகம் நடக்க வேண்டும் என்பதே ப்ளான்.அப்பொழுது வகுப்பறை அருகே காலடி ஓசை கேட்க ,திரை மறைவிலிருந்த அர்மிதா வருவது ராம் என்ற நம்பிக்கையில் பலூனை ஊசியால் குத்த,அது வெடித்து தண்ணீர் எங்கும் சிதறியது.

திரை மறைவிலிருந்து வெளி பட்ட அர்மிதா "ஹேய் ஹெப்பி பர்த்டே மய் டியர் ராம்"என்று உற்சாக குரலில் கூறியவாறே நனைந்த கோழியாய் நின்றிருந்தவனின் கைகளைப் பற்றி உலுக்கினாள்.அந்த கைகள் சினேகமாய் இல்லாதது போல அர்மிதாவிற்கு உறைக்க,சற்றே தலையுயர்த்தி அவனைப் பார்த்தாள்.

ஆறடி உயரத்தில் கண்களில் கோவம் மின்ன யாரே ஒருவன் நின்றிருக்க,அர்மிதாஅதிர்ச்சியானாள்.கண்கள் விரிய அந்த நெடியவனைப் பார்க்கையில்,

"இடியட்,என்ன பண்ணி வெச்சிருக்க?போச்சு எல்லாம் போச்சு,என் ப்ரசண்டேசன் பேப்பர் எல்லாம் நாசமாய் போச்சு,அறிவு இருக்காடி உனக்கு?",அவன் ஆத்திரத்தில் குதிக்க,அர்மிதா சண்டைக்கோழியானாள்.

"டேய் ,யாருடா நீ,இங்க ஏன் வந்த?நா என் ப்ரண்ட்க்கு ஆப்பு வெச்சா உன்னை யாரு அதுல மாட்டிக்க சொன்னது?என்ன தைரியம் இருந்தா என்ன டீ போட்டு கூப்பிடுவே? ,இந்த திமிருக்குதான் உன் பேப்பர் நாசமாய் போச்சு,வேணும் வேணும்"அவனுக்கு பழித்துக் காட்டினாள்.

அவனுக்குள் ஆத்திரம் மேலிட,அர்மிதா மன்னிப்பு கூட கேட்காமல் ஓடி விட்டாள்.மருத்துவம் பயிலும் அரவிந்தன், ஆம் அதுதான் அவன் பெயர் தலையில் அடித்துக்கொண்டு தன் காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டான்.அவசரமாய் தவறுதலாய் வேறு வகுப்பில் நுழைந்தது தன் தவறு என்றாலும் அந்த திமிர்பிடித்தவளை அப்படியே விட அவன் ஆண்மை விட வில்லைதான்.நடந்ததை லெக்சரரிடம் சொல்லி ஒரு நாள் தவணையில் தன் ப்ராஜெக்ட் பேப்பரை ஸ்ப்மிட் செய்தான்.

அதற்குப் பின் வந்த பல சந்திப்புகளில் அரவிந்தன் அர்மிதா பகையுணர்வு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது.இருவரும் வெவ்வேறு துறைகளில் பயின்றாலும் வார இறுதியில் கல்லூரியில் நடக்கும் இந்திய மாணவர் சங்க கூட்டத்தில் சந்திக்க நேர்ந்தது.அப்பொழுதெல்லாம் அர்மி செய்யும் விஷமங்கள் அரவிந்தனையே பலியாக்கியது.

அவ்வாறு இருக்கையில் நகரின் பிரசித்திப்பெற்ற ஓட்டலில் அவர்களின் கல்லூரி ஆண்டு விழா முடிவாகியிருந்தது.
ஹஸ்டலில் தங்கிப் படிக்கும் அர்மிதா தன் தோழிகளுடன் கிளம்பிக்கொண்டிருக்கையில் இடையில் வந்த
போன் காலில் மறைந்து போக,மற்றவர்கள் இவள் கிளம்பி விட்டாள் என்ற எண்ணத்தில் ஓட்டலுக்கு கிளம்பி விட்டனர்.

அம்மாவோடு பேசிக்கொண்டிருந்த அர்மிதா அறைக்கு சென்று பார்க்கையில் யாரையும் காணாது திகைத்துப் போனாள்.உடனே தன் செல்லில் "மீனு எங்கடி போயிட்டிங்க என்ன விட்டிட்டு?கொஞ்ச நேரம் அம்மா கூட பேசிட்டு இருந்தேன்,அதுக்கு இப்படியா பண்ணுவீங்க?"அர்மி மீனுவிடம் பொரிய ஆரம்பித்தாள்.

"ஒப்ஸ் ,ஐயாம் சாரி செல்லம்,நீ ராம் கூட கிளம்பிட்டியோனு நாங்களும் கிளம்பிட்டோம், நீதான் ஸ்ர்ப்ரைஸ்னு எதையாசும் பண்ணி வெச்சிருவியே, இப்ப என்னதான் பண்றது?எல்லோரும் கிளம்பிட்டாங்க.இரு ராமை கேட்கிறேன்"மீனு அடுத்த நொடியில் அர்மிதாவின் தொடர்பை துண்டித்து விட்டு ராமை கூப்பிட்டாள்.

சிறிது நேரத்திற்குப்பின்,"அர்மி ஹஸ்டல் வாசலில் ஒரு வெள்ளை கார் வரும்,அதில வந்திடு, ராம் அவன் ப்ரண்ட் ராஜ்யை வந்து உன்னை பிக்கப் பண்ணிக்க சொல்லியிருக்கான்" மீனு போனை வைத்திட யார் ராஜ் என்ற குழப்பத்திலே அர்மி கிளம்பினாள்.

அந்த மாலை நேர விருந்திற்கு கச்சிதமாய் பெர்கண்டி வண்ணதில் உடலை சுற்றிய கவுனும்,அதற்கு பொருத்தமாய் நகைகளும் அணிந்து ,அர்மிதா தன் கூந்தலை தளர்வாய் பிண்ணியிருந்தாள்.அழகான உடல் வாகு இருந்தாலும் பெரும்பாலும் ஜீன்ஸ் டீசர்ட் மட்டுமே அணிந்து கொள்வாள்.ஹஸ்டல் வாசலில் காத்திருந்த வெள்ளை நிற ஔடி கதவை திறந்தவள் விகிர்த்து நின்றாள்.

காரில் அமர்த்திருந்தவனின் முகத்தைப் பார்த்ததும் அவனோடு போகும் எண்ணத்தைக் கைவிட்டாள்.
காரில் இருந்தது அரவிந்தன் ராஜ்.மனதிற்குள் ராமை கறுவினாள்" பாவிப்பயலே உனக்கு இவந்தான் கிடைச்சானா". அதற்குள் அரவிந்தன் "ஹேய் உனக்கு என்ன மகாராணினு நினைப்பா? உன் கையைப் பிடிச்சு ஏறுங்க மகாராணினு சொன்னதான் ஏறுவியோ?" கிண்டலாய் கேட்டான்.

அர்மிதாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.தர்க்கம் செய்ய இது நேரம் இல்லையே.அமைதியாய் காரில் ஏறி அமர்ந்தாள்.
சீரான வேகத்தில் அரவிந்தனின் ஔடி சாலையில் வழுக்கிச்சென்றது.கார் ஓட்டலை நோக்கிச்செல்லாமல் கல்லூரி அருகில் உள்ள குடியிருப்பில் நுழைந்தது.சிறிது தயக்கமாய் அரவிந்தனைப் பார்த்தவள்,கண்களாலே தன் ஐயத்தை வினவினாள்.

"என்ன பார்கிற?நீ மட்டும் அழகாய் சிங்காரிச்சிட்டு வந்தா போதுமா?நான் இன்னும் கிளம்பவே இல்ல,அதுக்குல்ல உன் ராம் போன் பண்ணிட்டான்.இது என் வீடுதான்,நாங்க நண்பர்கள் எல்லாம் இங்கதான் தங்கி இருக்கோம்.ஒரு அசைன்மெண்ட் முடிக்க லேட் ஆச்சு,அதானால அவனுங்க கிளம்பிட்டானுங்க"அர்மிக்கு விளக்கம் கொடுத்தான்.

கார் அந்த அடுக்குமாடி வீட்டின் முன்புறம் நின்றது.இறங்கியவன் அவளையும் உள்ளே அழைத்தான்.எதுவும்பேசாமல் அவனை பின் தொடர்ந்தாள்.வீடு பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அவள் தயங்கி தயங்கி கதவோரம் நிற்கவே,
அரவிந்தன்"ஹேய் பயப்படாம வா,நான் உன்ன மாதிரி விஷமம் பண்றவன் இல்ல",இயல்பாய் கன்னக்குழி சுழிய சிரித்தான்.அவளை ஹாலில் உட்கார வைத்து குடிப்பதற்கு பழச்சாறு தந்தான்.

"அர்மி கொஞ்சம் வைட் பண்ணு,கிளம்பி வந்தரேன்"மின்னலென அறைக்குள் மறைந்து விட்டான்.
அர்மி ஜூசை பருகிய வண்ணம் அறையை நோட்டம்விட்டாள்.
அறைக்கோடியில் ஆளுயர தங்க சட்டமிட்ட படத்தில் அரவிந்தன் தன் அண்ணன் தம்பியுடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN