ஒரு வாசகி... தோழி... கொடுத்த review
வணக்கம் யுவனிகா சகோதரி.
நான் இப்போது தான் முகநூலில் எனக்கான பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இதற்கு முன்பு வரை என்னுடைய கணவரின் ஐடியிலேயே நானும் சென்று வந்தேன். என்னுடைய நட்புக்கள் உங்கள் முதல் கதையைப் பற்றி சொல்லவும் பல இடங்களில் தேடி கடைசியில் அமேசானில் படித்தேன். அப்பாஆஆஆஆ அந்த கதையைப் பற்றி என்னால் இப்போது சொல்ல இயலாது. அதற்கு நேரமும் போதாது. ஆகையால் இன்னோர் நாள் அந்த கதையைப் பற்றிய விமர்சனம் தருகிறேன்.
அந்த கதையில் ஈர்க்கப்பட்ட நான் உங்களுடைய மற்ற நாவல்களைத் தேடியதில் ஏமாற்றமே.. நீங்கள் மொத்தம் 4 கதைகளே எழுதியுள்ளீர்கள். (நான் அதிகம் எதிர்பார்த்தேன்)
அடுத்து நான் படித்தது உங்களின் ‘என்னைத் துரத்தும் உன் நினைவுகள்’ தான். இன்றைய சமூகத்தில் நாம் இழந்து விட்ட பொக்கிஷமான கூட்டுக் குடும்ப கதை. எந்த ஒரு முக சளிப்போ நெருடலோ இல்லாத அளவுக்கு எழுத்து நடை. முதலில் அதற்கே உங்களுக்கு பாராட்டுக்கள். எப்பொழுதும் ஒரு கதையில் நான் எதிர்பார்ப்பது இதுதான்.
நாயகன் நாயகியின் காதல் காட்சிகள் மிகவும் அழகாக உள்ளது. அதாவது இப்படி சொல்லலாம் cute lovely scenes.
நாயகி கீதயாழினி அவ்வளவு பெரிய பணக்காரியாக இருந்தும் நடுத்தர வர்க்கமான நாயகனின் கூட்டுக் குடும்ப உறவுக்கும் அவனின் காதலுக்கும் ஏங்கித் தவிப்பது மனதை நெகிழச் செய்கிறது. முதலிரவு அறையில் நாயகி யாழினியின் கள்ளம் கபடமற்ற பேச்சு நடத்தை எல்லாம் சிரித்துக்கொண்டே படித்தேன். கடிஜோக் சொல்கிறேன் என்ற பேரில் அவள் பாடு படுத்தும் இடங்கள் எல்லாம் கலகல. அவளால் நாயகன் வாழ்க்கை முடங்கிப் போனதால் மீண்டும் அதை சரிசெய்து அவனை நிமிர்த்தி உயர வைப்பது வேற லெவல்.
நாயகன் சுவேஷ் நந்தன் மிகவும் அமைதியான அதிகம் ஆர்ப்பாட்டமில்லாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறான். நாயகியிடம் மட்டும் வெறுப்பு கோபத்தை உமிழ்ந்து பின் அவள் கால்களுக்கு தன் கையாலேயே கொலுசு போடும் காதலின் வெளிப்பாடு எல்லாம் அருமை. நாயகியால் தான் தன் கனவு சிதைந்தது என்று தெரிந்தும் அவளுக்கு குற்றயுணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காக அவன் செய்வது எல்லாம் வேற லெவல்.
சொல்லாத காதல் செல்லாது, நாங்க கை தட்டுறவங்க இல்ல கை தூக்கி விடறவங்க போன்ற வரிகள் அருமை
யாழினியை இன்னும் அதிக கலகலப்புடனும் நந்துவை இன்னும் கொஞ்சம் கெத்தாகவும் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மன்னிக்கவும்.. இது என்னுடைய அபிப்ராயம்.
மேலும் வாசகர்களாகிய நாங்கள் இதுபோல் சுட்டிக் காட்டினால் தான் தாங்கள் இன்னும் மெருகேற முடியும் என்பது என்னுடைய எண்ணம்.
மொத்தத்தில் ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தி
மீண்டும் அடுத்த கதையின் விமர்சனத்துடன் வருகிறேன்.. நன்றி
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்