மாற்றம் -8

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -8
அன்றிரவு பங்கஜம் மாமி வீட்டில் தான் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது ஆம் நல்ல செய்தியை கொண்டாடும் வகையில் ஹோட்டலில் இருந்து உணவு பொட்டலங்களை வரவழைத்து எல்லோருக்கும் பரிமாற பரிமளத்தின் குடும்பம் அன்று அவர்கள் வீட்டிலே தான் உண்டனர். என்னதான் மகிழ்ச்சியின் உட்சத்தில் இருந்தாலும் ஆராதனாவின் சிந்தனையோ ஆகாஷ் மீதே இருக்க...

"ஆங் ஆண்டி ஆகாஷ் உங்களுக்கு வாழ்த்து எதுவும் சொல்லலியா"என்று கேட்க..

"அவனா ஹாஹா அடுத்த மாசம் வந்து என்னை பெங்களூர் அழைச்சிட்டு போய் கவனிச்சிக்கிறன் சொல்றான். எங்கள் அக்கா என்னை நல்லா கவனிப்பாங்க இங்க எனக்கு யாரும் இல்லைல.." என்று கூற..

"ஏன் பங்கஜம் இப்படி சொல்ற ஏன் நாங்க பாத்துகிட மாட்டோமா" என்று பார்வதி சொல்ல..

"அய்யோ அப்படி இல்லைங்க, உங்களுக்கு எல்லாம் எப்படி சிரமம் தரமுடியும்"

"அட இதுல என்னத்தா சிரமம் எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தால் பாத்துருக்க மாட்டேனா..இங்க பாரு ரொம்ப நாள் கழித்து உண்டாயிருக்க இந்த மாதிரி நேரத்தில் அங்கிட்டு இங்கிட்டுமா அலையிறது நல்லது இல்லை நீ இங்கேயே இரு நாங்க பாத்துகிடுவோம்" என்று பணிவாய் சொல்ல...

"சரிங்க மா அப்படியே செய்றன்"என்று சொல்ல.. இதை கவனித்த ஆராதனா அடச்ச ஆகாஷ் வருவதை இப்படி கெடுக்குறாங்களே என்று மனதில் நினைக்க...அதற்குள் அவள் நினைக்கவும் ஆகாஷிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருக்க...

"ஏய் ஆராதனா..எப்படி இருக்க" என்று கேட்க..

"நல்லாருக்கேன், என்ன ஆச்சரியம் ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணிருக்கீங்க" என்று கேட்க அவனோ சிரித்தவாறே
"ஆராதனா உனக்கு நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேர்ல வந்து சொல்றன் ஆனால் பங்கஜம் சித்தி வீட்டுக்கு வரலை உன்னை பார்க்க மட்டும் தான் வரேன் வந்து உடனே ஈவ்னிங் பஸ் ஏறிடுவேன்" என்று சொல்ல சந்தோஷத்தில் என்ன செய்வதறியாது அங்குமிங்கும் நடந்தவாறே நகத்தை கடித்தவள் அன்றிரவு முழுவதும் உறங்காமல் விழித்தபடியே கழித்தாள்.

மறுநாள் காலை சூரியன் மெல்ல உதயமாக ஆயுத்தமானது ஆனால் அதற்குள்ளாக ஆராதனா எழுந்து தயாராகி ப்ரண்டை பார்க்க போறேனு சொல்லிவிட்டு கிளம்பி கோயம்பேட்டில் இருக்கும் ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்திக்க சென்றாள்.

"ஹாய் ஆகாஷ்"

"ம்ம்ம் ஹாய் என்ன மேடம் ரொம்ப இளைத்து போயிருக்கீங்க என்னை பார்க்க முடியலனு கவலையா"

"ஆமாம் அதெல்லாம் இருக்கட்டும் சர்ப்ரைஸ் என்ன"

"கண்கள் மூடு"என்று அவன் கூறியதை காதில் வாங்கியவள் சட்டென்று கண்களை இருக மூடிக்கொண்டு அந்த சர்ப்ரைஸ் காக காத்துகிடக்க....
அவனோ அவளது விரல்களை பிடித்து மோதிரம் அணிவித்தான், கண்களை மெல்ல திறந்தபடி அங்கிருந்த சூழ்நிலையை உணர்ந்தவள்.

"ஆகாஷ் இட்ஸ் வெரி நைஸ்..என்ன திடிரென" என கேட்க..

"ஆராதனா ஆக்சுவலா நம்ப விஷயம் வீட்டில் பேசினேன் கொஞ்சம் கூட ஒத்துக்கவேயில்லை, எவ்வளவோ புரியவைக்க முயற்சி பண்ணேன் முடியல அதனால நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். "

"என்ன முடிவு"

"ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு"

"வாட் நான்சென்ஸ் ஆகாஷ்... ஏன் இவ்வளவு சீக்கிரம் அவசரபடுற ரெஜிஸ்டர் மேரேஜ் என்ன அவ்வளவு சாதாரண விஷயமா" என்று கோபத்தில் வார்த்தைகளை கொப்பளித்தாள்.

"ஆராதனா...ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்டு"

"ச்சி எதுவும் பேசாத.."

"ஏய் என்னடி நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற"

"பின்ன குடும்பத்தை மீறி நீ சொல்ற மாதிரி எல்லாம் கல்யாணம் பண்ணமுடியாது. அதுவும் எங்கள் வீட்டுக்கு மூத்தவள் நான் என் தம்பி தங்கைகளுக்கு முன் உதாரணமாக இருக்கவேண்டிய நான், இப்படி பண்ணா அது தவறு" என்று சொல்ல.

"ஸோ...அப்ப காதலை தியாகம் பண்ணலாமா"

"வாட் யூ மீன்"

"ப்ரேக் அப்"

"யூ...ராஸ்கல் சீட்"...என்று க்ளாசில் இருந்த தண்ணீரை முகத்தில் ஊத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆராதனா ஆராதனா என்று கத்திக்கொண்டு பின்னால் சென்றான்.
"இமையே...இமையே..." என்ற பாடல் வரிகள் அவன் மனதில் ஒலிக்க அவனோ எதையோ இழந்தவன் போல சிலைபோல் நின்றான்.

'ஆகாஷ் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா அதுக்காக என் குடும்பத்தை மீறி எதுவுமே செய்ய விரும்பல..எனக்கு நீ வேணும் மொத்தமா வேணும்..உன் அம்மா என்னை மருமகளா ஏத்துகிட்டு முறைப்படி பொண்ணு கேக்கனும். இதெல்லாம் நடக்குமா தெரியாது ஆனால் நடக்கும்....

யெஸ் இட் வில் ' என்று மனதினுள் நினைத்து கொண்டே தன் ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டு வர எதிரே வந்த வேகமான இருசக்கர வாகனத்தோடு மோதியதில் நிலைத்தடுமாறி விழுந்தாள்.

தலையில் பலத்த காயம் பட்டிருக்கும் போல..ரத்தம் சிந்திக்கொண்டு இருந்தது. அருகில் இருப்பவர்கள் அவளை மருத்துவமனை அழைத்து வந்தனர். கடைசியாக டயல் ஆன நம்பர் ஆகாஷுடையது எனவே ஆகாஷிற்கு தகவல் தெரிவித்தனர்... அவனால் எதையும் யோசிக்க கூட முடியவில்லை.....
உடனே மருத்துவமனைக்கு விரைந்தான். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வார்டில் அனுமதித்தனர்... ஓடிச்சென்று அவள் கைகளை பற்றினான்..

"ஆராதனா..."

"ஆகாஷ்...ஆகாஷ்" என்று அழுதாள்.

"என்னடி நீ இப்படியா கவனமில்லாமல் ஓட்டுவ வண்டியை" என்று உரிமையுடன் கடிந்து கொள்ள...

"ஆகாஷ் ஐயம் சாரி"

"எதுக்கு"

"ரெஸ்டாரன்ட்ல நான் அப்படி நடந்துக்கிட்டது உனக்கு எப்படி வலிச்சிருக்கும்"

"அதை விட அதிகமாக வலிக்குது உன்னை ஹாஸ்பிட்டல்ல இப்படி பார்க்க"

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து அழத்துவங்க இவர்களது உண்மையான காதலை பெரியவர்கள் அனுமதிப்பார்களா அல்லது ஆகாஷ் சொன்னபடி ரெஜிஸ்டர் மேரேஜ் தானா என்ன நடக்கும்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த சமுதாயம் ஏன் இன்னும் காதலை தவறாக பார்க்கிறது? எங்கோ ஒரிருவர் காதலால் கெட்டு போக காதலென்றாலே அப்படி தான் என்று ஏன் முடிவுக்கு வருகின்றனர். என்று காதலை எதார்த்தமான மனநிலையில் சமுதாயம் பார்க்கிறதோ அன்று ரெஜிஸ்டர் ஆபிஸ் முன்னால் இளம்ஜோடிகள் வரிசை கட்டி நிற்பது குறையும். உண்மையான காதலை வாழவிடுங்கள் சமுதாயமே...

ஆகாஷ் - ஆராதனா சேர்வார்களா பொறுத்திருந்து தான் பார்ப்போம்.

தொடரும்
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN