என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 21
வர்ஷித் இதழுக்குள் ஆதிகாவின் இதழ்கள் சிக்கி தவித்தது. ஆதிகா இதனை இன்ப அவஸ்தையாக ஏற்றுக்கொண்டிருந்தபோது, வர்ஷித் தனது கால்களை ஆதிகாவின் மேல் நங்கென்று போட்டதால், முத்த கனவுகள் மொத்தமாய் கலைந்து விடை பெற்றன.
தூக்கத்திலிருந்து முழித்தவளுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது, இந்த கனவை நினைத்து. பிறகு, 'எங்க இவன் கன்னத்துல முத்தம் கொடுத்ததுக்கே டிவோர்ஸ் பத்திரம் கொண்டு வந்து சைன் போட சொன்னான். இதுல கனவுல வந்த மாதிரி நடந்து இருந்தா, கோர்ட்க்கே அழைச்சிட்டு போயிருப்பான். சரியான சாமியார்' என மனதில் நினைத்தவளுக்கு சிரிப்பு மட்டுமே மிஞ்சியது.
நாட்களும் நன்றாக போக இவர்களின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. வர்ஷித் குடிப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தான்.
ஒரு நாள் வர்ஷித் காலையில் குளிக்கும்போது அவனது போன் அலறியது. குரல்விட்டு ஆதிகாவிடம் யாரு என கேட்டான். பெயரை சொன்ன பிறகு நீயே பேசி, 'குளிக்கிறேன்னு சொல்லு' என்றான். அந்த பக்கம் பேசியது ஆகாஷ் தான். ஆதிகாவிற்கு ஆகாஷை பற்றி வர்ஷித்தின் நண்பன் என தெரியும். டைரியிலும் குறிப்பிட்டு இருந்தான் நேரிடையாகவும் சொல்லிருந்தான். அதனால், கொஞ்சம் நலம் விசாரிப்புடன் பேசினாள்.
அவளிடம் ஆகாஷ், 'நானே உங்ககிட்ட தான் பேசணும்னு இருந்தேன்மா" என கூற அவளும் சகோதரா உணர்வுடன், "சொல்லுங்க அண்ணா" என பரிவுடன் கேட்டாள். 'நான் சொல்றத பொறுமையா கேளுமா, ம்மா உனக்கு வர்ஷித்த புடிக்குமா புடிக்காதானு தெரியலமா, நான் அவன் பிரண்டா சொல்லால, அவன்கூட இருந்து பாத்துருக்கேன், உன்ன அவன் அவ்ளோ நேசிச்சான் அவனோட கதைய கேட்க கஷ்டமா இருந்துச்சு, எல்லாமே தெரியும்மா விஷ்ணு இறப்பிலிருந்து உனக்கு கொடுக்க போற டிவோர்ஸ் வரைக்கும். உள்ளுக்குள்ள அவ்ளோ காதல வச்சுக்கிட்டு அவனையே ஏமாத்திகிறான்மா. நீ இல்லனா அவனுக்கு அவனுக்கு வாழ்க்கையே இல்லாம. அது அந்த முட்டாள் புரிஞ்சுக்க மறுக்கிறான். அதுனால இந்த டிவோர்ஸ்க்கு ஒதுக்காதமா, ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும், என்னோட ஆசையும் அதுதான்மா. நான் அவன்கிட்ட தினமும் சொல்றேன்மா இத, கேட்கவேமாற்றான். நான் இத பத்தி பேசுனனு அவன்கிட்ட சொல்லிக்காதமா. அவன் ஏங்கிட்டு இருந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு, அவன் இத வேணான்னு சொல்றான். இப்ப நான் போன் பண்ணதே இதுக்காகத்தான். நல்ல வேளை நீ எடுத்தமா, இல்லனா நான் சொல்றத அவன் கேட்கவேமாட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப வருசத்துக்கு நல்லா வாழனும்மா. இத பத்தி கொஞ்சம் யோசிச்சு அவன்கிட்ட பேசுமா" என ஆகாஷ் போனை வைத்தவுடன் ஆதிகாவிற்கு மிஞ்சியது அழுகைதான்.
வர்ஷித் ஆகாஷ் பேசியதை பற்றி கேட்கவும் இல்லை, ஆதிகா சொல்லவும் இல்லை. ஒரு முடிவோடு இருந்தாள், டிவோர்ஸ்க்கு எக்காரணம் கொண்டும் சம்மதிக்க கூடாது என.
சில நாட்கள் தோன்றி மறைந்தது. ஒருநாள் இரவில் இருவரும் மஞ்சத்தில் படுத்திருந்த போது, வர்ஷித் தொடங்கினான். அப்போதும் அவளின் கை விரல்களை பிடித்துக்கொண்டதை மட்டும் அவன் விடவே இல்லை. "எப்போ டிவோர்ஸ்க்கு சைன் போடா போற, சீக்கிரம் போடு அப்போதான் சீக்கிரமா மேல ப்ரோஸீட் பண்ணலாம்" என அவன் கூற, ஆதிகா, 'கையை புடிச்சுகிட்டு கேக்குற கேள்வியை பாரு' என நினைத்து அவனது கையிலிருந்து தனது கையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். "என்னால முடியாது, நான் உங்ககூடத்தான் வாழ்ந்தே ஆகணும், நீங்களும் என்கூடதான் வாழனும், எனக்கு புடிச்ச உங்கல எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. என்கிட்ட இருந்து டிவோர்ஸ்க்கு சம்மதம் எதிர்பாக்காதிங்க' என அழுகையுடன் கூறிவிட்டு தலையணையை நனைக்க தொடங்கினாள். அவனோ, 'யாருக்கு வேணும் உன் பரிதாப காதல் போடி' என அவனும் திரும்பி படுத்துக்கொண்டான்.
வர்ஷித் அலுவகம் கிளம்பும்போது சுப்பிரமணியன், "இந்த பைலை ஆபீஸ்ல கொடுத்துட்டு போப்பா"என்றார். வர்ஷித் வேளை பார்ப்பது வேறு ஆபிஸில், சுப்பிரமணியன் வைத்து நடத்திய அலுவலகத்தை விஷ்ணு இறப்புக்கு பிறகு வேறு ஒரு நபரை வைத்து நடத்தி வருகிறார். முக்கியமான எந்த ஒரு முடிவையும் இவரே எடுப்பார். வர்ஷித்திடம் எவ்வளவோ சொல்லியும் அவன் அவரது ஆபிஸ்க்கு செல்ல முன் வரவே இல்லை பொறுப்பு எடுக்கவும் இல்லை. வர்ஷித் அங்கு சென்று கொடுத்துவிட்டு போகையில், சிலர் காது படும்படி கூறினர், "நண்பன்னு உள்ள வந்து, விஷ்ணுக்கே போட்டியா வந்துட்டு, இப்போ அந்த பையன் இறந்தபிறகு முழு சொத்தையும் அபகரிக்க பாக்குறாங்க. இவங்களுக்கு எல்லாம் குற்ற உணர்வு இருக்குமா இருக்காதா. விஷ்ணு இடத்துல இந்த பிச்சை கார பயலா, இது எல்லாம் நேரமோ இல்ல திட்டமோ யாருக்கு தான் தெரியும்? "
அவனை அவளின் பரிதாப காதலும் அலுவலகத்தில் சொன்ன சொல்லும் வாட்டி எடுத்தது. ஒரு வேளை எனக்காகத்தான் விஷ்ணுவின் உயிரை கடவுள் பறித்துக்கொண்டாரா? நானே அவன் இறப்பிற்கு காரணம் ஆகிவிட்டேனா? நானே அவன் இடத்தை அபகரித்து விட்டேனா என யோசித்து யோசித்து தன்னையே குற்றவாளியாக நிற்கவைத்துக்கொண்டான். குற்ற உணர்வே அவனை கூறு போட்டது. உலகமே சூனியமாவதை போல் இருந்தது அவனுக்கு.
இந்த உணர்வை நீக்குவதற்காக மீண்டும் மதுவை நாடினான். மதுவிற்குள் தன்னை மூழ்கடித்து கொண்டு வீட்டுக்கு திரும்பினான். ஆதிகா மறுபடியும் எதற்கு என கேட்டதுக்கு, 'நிம்மதிக்கு" என்ற பதிலை மட்டுமே தந்தான்.
அதன் பிறகு வந்த நாட்களும் இது வாடிக்கையாகிப்போக இதுக்கொரு முடிவு கட்டியே ஆகணும் என முடிவுடன் ஒரு நாள் இரவில் அமர்ந்திருந்தாள். அவனும் மதுவோடு வந்த பிறகு, நேராக குளியறைக்குள் அழைத்து சென்றாள் வர்ஷித் எவ்வளவோ தடுத்தும். அவனால் நேராக நிற்க கூட முடியவில்லை. அவனை குளிக்க வைத்து அவளே தாயென மாறி அறை போதையில் இருந்தவனுக்கு ஆடையும் மாற்றிவிட்டாள்.
படுக்கையில் கைத்தாங்கலாக அழைத்துவந்து அமர வைத்து, சரியாக நிமிர்வாக அவனது முகத்தை திருப்பி பளார் என ஓசை எழுப்பும் அறையையும் கொடுக்க அவன் பேயறைந்தது போல் அமர்ந்திருந்தான். சில நிமிடம் என்ன நடந்தது என அவனாலேயே கணிக்க முடியவில்லை.
'என்ன பிரச்சனை என்ன வேணும் உனக்கு ஏற்கனவே பிரச்சனைனு சொன்ன, அப்பறம் இந்த கருமத்தை தொடாம இருந்த, இப்போ மறுபடியும் என்ன ஆச்சு உனக்கு?" என கோபமும் ஆத்திரமுமாய் கேட்டாள். அவளே தொடர்ந்து, "எதுவாக இருந்தாலும் வெளில சொல்லு அப்போதான் சரி பண்ண முடியும் மனசுலயே வச்சிருந்தா யாருக்கும் தெரியாது' என கோபமாய் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தாள்.
அவளை தவிர்க்கவும், அவள் அடித்த கோபத்தை சரி கட்டவும், "நீ தாண்டி பிரச்சனை, உன்னோட பரிதாபம் தாண்டி பிரச்சனை, அந்த பரிதாபமே காதலா வந்துச்சு பாரு அதுக்கு மிக பெரிய பிரச்சனை. அன்னைக்கு ஏதோ பாரத்தை இறக்கி வைக்க உன் மடியில படுத்துகிட்டு எல்லாத்தையும் சொன்னேன், கோபத்தை கட்டுப்படுத்த உன் கையை புடிச்சுக்கிட்டேன், ஆகாஷும் என் மேல உள்ள அக்கறையில ஏதோ பேசிவிட்டான்" என கோபத்தில் கத்தினான் . "இது எல்லாத்துலயும் வந்த பரிதாபத்தை என் மேல காதலா காட்டணும்னு நினைக்கிற, அதுக்கு ஒரு தனி உணர்வு , அது எல்லாம் எப்படி உனக்கு புரியும்" என பொறுமையாகவும் அடிக்குரல் சீற்றத்துடனும் சொன்னவுடன் அவள் ஒரு நொடி யோசித்து நிமிடங்கள் தாழ்த்தாமல் தன் காதலை புரியவைக்கும் பொருட்டு, அவன் வாங்கிய அறைக்கு மருந்து போடும் பொருட்டு அவனின் முகத்தை பிடித்து அழுந்த முத்தம் ஒன்றை அவனது கன்னத்தில் பதித்துவிட்டு நகர்ந்தாள். வர்ஷித் அவள் செய்ததை உணரும் முன்னே அவனது உணர்வை எழுப்பி முத்தத்தை கொடுத்து மாயம் போல மறைந்து போனாள் வர்ஷித்தின் மாயாவி.
அவள் கொடுத்த அறை, முத்தம் இவற்றிலே போதை தெளிய வர்ஷித் உறங்கி போனான். ஆதிகாவிற்கு தான் உறக்கமே வராமல் இருந்தது தனது காதலை பரிதாப காதல் என சொல்லிவிட்டானே எனும் வருத்தத்தில்.
தொடரும் நாட்களிலும் இவர்களது வாழ்வில் மதுவின் நாட்டாமை தொடர்ந்தது. 'இந்த நிலமையை மாத்தனும், அதுக்கு அத்தை கிட்ட இவர சிக்க வைக்கணும், அதுக்கு நான் வீட்லயே இருக்கக்கூடாது. நான் வீட்ல இல்லாத சூழல தான் அத்தை வர்ஷித்த கவனிப்பாங்க' என முடிவோடு காத்திருந்தவளுக்கு அழைப்பு வந்தது தோழியிடம் ஒரு உதவி கேட்டு.
தோழி ஒருவள் கர்ப்பமாக உள்ளதால் அவள் வீட்டில் தனியாக இருப்பதால், மறுநாள் அப்பா அம்மா வந்துவிடுவார்கள் இன்று இரவு மட்டும் துணைக்கு இருக்கும்படி கேட்டு கொண்டாள். ஆதிகாவிற்கும் வீட்டிற்கு போகாமல் இருக்க இந்த காரணம் போதுமானதாக இருக்க, அத்தையிடம் போன் போட்டு அனுமதி கேட்டபிறகு இன்று வர்ஷித்தை பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டாள்.
இரவில் மதுவின் துணையோடு வந்திருந்தான் வர்ஷித். இந்த கோணத்தில் வர்ஷித்தை பார்த்தவுடன் வசந்தாவிற்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இது எத்தனை நாட்கள் தொடருது என தெரியாமல் அவனிடம் கோபத்தை காட்டினார் பேசாமல் இருந்து.
அவளும் காலையில் வீடு சென்றாள். உடனே அலுவலகத்திற்கும் கிளம்பினாள். இருவரும் பேசிக்கொள்ள வில்லை. அன்று இரவு தாமதம் ஆகாமல் வந்திருந்ததை வைத்து தமது முயற்சி வீணாக வில்லை என நினைத்துக்கொண்டாள். அத்தை வர்ஷித்திடம் பேசவில்லை என்பது அவளுக்கும் வருத்தம் தான். அவனை அந்த கோலத்தில் பார்த்தது முதல் மறு நாளும் முடியப்போகுது அப்போது வரை வசந்தா வர்ஷித்திடம் முகம் காட்டவே இல்லை.
வர்ஷித்தின் முகம் கோடி சோகங்களை சுமந்திருந்தது . 'பரிதாப காதல்னு சொன்னதுக்கு அனுபவிக்கட்டும்' என விட்டு சென்றோமே இப்போ அவனை பார்த்து தாம் தானே வருத்தப்படுகிறோம் என எண்ணி அவனுக்கு ஆறுதலாக நாம் தானே இந்நேரத்தில் இருக்கனும் என நினைத்து அவனை நோக்கி கை நீட்ட அவனும் அவளுக்குள் உட்புகுந்துகொண்டான் அம்மாவின் பாரா முகத்தால் குடியை விட்ட ஆதிகாவின் வருமாமா.

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.