அத்தியாயம் - 23 & 24
வேதாவை அனுப்பிய பின் மாலாவை அழைத்து விபரம் சொன்னவன் உடை மாற்றிக் கீழே போய் திரும்ப வரும் போது அவள் குடிக்க ஜூஸ் மற்ற பொருட்களுடன் வந்தான் தேவ்.
எடுத்து வந்ததை டேபிளில் வைத்தவன் எந்த தயக்கமும் இல்லாமல் அவள் போர்வையை விலக்கி “எழுந்திரு மித்ரா” என்றான் மென்மையாக. அவளும் எழுந்திருக்க, சட்டென இவன் கட்டிலில் அவள் தலைப் பகுதியில் அமர்ந்து அவளைத் தன் தோளின் மேல் சாய்த்துக் கொள்ள “வேண்டாம்” என்று திமிரியவள் அவனுடையப் பிடி அழுத்தமாக இருக்கவும் அடங்கிப் போனாள் மித்ரா.
இன்னுமே சிறிது கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை உறைய வைக்க தான் கொண்டு வந்த ஐஸ் கியூப்களை அவள் உதட்டில் வைத்து ஒத்தடம் கொடுக்க
அதைச் செய்யவிடாமல் முகம் திருப்பித் தடுத்தவள் அவன் கையிலிருந்து ஐஸ்கியூப்களை வாங்க முயற்சிக்க, வாய் திறந்து பேச முடியாமல் அவளின்இந்தச் செய்கையில் மனது வலித்தது,
“பேசாம இரு மித்ரா! நானே செய்றேன்” என்றவன் பிடிவாதமாக அவள் கையை விலக்கி விட்டு அவளைத் தோளில் சாய்த்து ஐஸ் கியூப்பால் உதட்டுக்கு ஒத்தடம் கொடுக்க வலியாலும் அவன் தொடுகையாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் மித்ரா. சற்று நேரம் கழித்து “மித்ரா, கொஞ்சம் இந்த ஜூசை மட்டும் குடிச்சிடு” என்க இவளோ வேண்டாம் என்று தலையசைத்து மறுக்க “பிளீஸ்டி, உனக்குக் கஷ்டமே இருக்காது. நான் ஸ்ட்ரா போட்டு தான் எடுத்து வந்திருக்கன். கொஞ்சம் குடிடி இன்ஜெக்ஷன் வேற போடணுமில்ல?” என்று குழந்தைக்குச் சொல்வது போல் சொன்ன பிறகு அவள் மறுக்கவில்லை.
அவளைத் தோளிலிருந்து விலக்காமல் முகத்தை மட்டும் சற்றுத் தாழ்த்தி இவன் கொடுக்க அவளும் குடித்தாள். சிறிது நேரம் தன் தோளிலேயே வைத்திருந்தவன் பின் அவளைத் தன் மடியில் சாய்க்க, எந்த மறுப்பும் இல்லாமல் அவள் படுக்க. “வலிக்கத் தான் செய்யும் கொஞ்சம் பொறுத்துக்க” என்றவன் அவன் கொண்டு வந்த ஐஸ் க்யூப்ஸ் அடங்கிய பையை அவள் இரண்டு கண்ணங்களிலும் மாற்றி மாற்றி வைத்து சற்று அழுத்த, வலியைப் பொறுத்துக் கொண்டு அவள் முனகினாலும் அவளையும் மீறி அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
அதைப் பார்க்க அவனுக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. ‘ஆனால் இப்படி நடக்க இவள் தானே காரணம்?’ என்ற எண்ணமும் இருந்தது.அப்படியே ஒன்றறை மணி நேரம் அவன் மடியிலேயே அவள் தூங்க அதேநேரம் “உள்ளே வரலாமா?” என்ற அனுமதியோடு உள்ளே நுழைந்தாள் மாலா.
“என்னனா ரொம்ப கஷ்டப் படுறாங்களா?’ என்று கேட்டவள் அவனை நெருங்கி “அவங்கள கொஞ்சம் கீழ விட்டுட்டு நீங்க எழுந்திருங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றவுடன் தேவ்எழுந்து வெளியே சென்று விட மாலாவின் குரலில் தூக்கம் கலைந்த மித்ரா கண்களைத் திறக்காமல் படுத்திருக்க, விஷ்வாவின் மூலம் விஷயம் அறிந்திருந்ததால் மித்ராவிடம் எதுவும் கேட்காமல் அவளுக்கு வேண்டியதை செய்து இன்ஜெக்ஷன் போட்டவள் “ஒண்ணும் இல்ல மித்ரா, சீக்கிரம் சரியாகிடும்” என்றவள் அவள் தலையை வருடி. “டேக் கேர்” என்று சொல்லி வெளியேறினாள்.
தேவ்வின் ஆபிஸ் அறைக்கு வந்தவள் “பயப்படும் படி ஒண்ணும் இல்லனா. வீக்கம் தான் அதிகமா இருக்கு. பட் சீக்கிரம் சரி ஆகிடும். இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன், இந்த ஆயின்மெண்ட அவங்க கண்ணத்தில் பூசி விடுங்க. நான் ஜெல் எழுதி தரேன். அத வாங்கி வந்து அவங்க லிப்புக்கு பூசுங்க. பெயின் கில்லர் டாப்ளட்டும் தரேன். அவங்க ஸ்ட்ரெயின் பண்ணாம கொஞ்சம் ரெஸ்ட் மட்டும் எடுக்கட்டும்” என்றவள் அவன் முகத்தில் கலக்கத்தைப் பார்த்து “டோண்ட் வொர்ரினா சீக்கிரம் சரியாகிடும்” என்றவளிடம் பேசி அவளை வழியனுப்பி வைத்தான் தேவ். மித்ராவின் அறைக்கு வந்து அவளைப் பார்த்த பின் ஆஃபிஸ் சென்றவன்இரவுதிரும்ப, அப்பவும் மித்ரா தூக்கத்தில் இருக்கவும் உடை மாற்றிக் கீழே சென்று இருவருக்கும் சேர்த்து உணவுடன் மேலே வந்தவன், அவளை எழுப்பி முகம் அலம்ப பாத்ரூமுக்கு அழைத்துச் செல்ல நினைத்து அவளைத் தூக்க முற்பட,
அவனைத் தடுத்தவள் இவளே சென்று ப்ரேஷ் ஆகி வந்து கட்டிலில் அமர. அவள் பக்கத்திலே அமர்ந்தவன் அவளுக்காக கொண்டு வந்திருந்த இட்லியைப் பிட்டு சர்க்கரை தொட்டு அவள் வாயருகே கொண்டு செல்ல, வாயைத் திறக்காமல் தன் கையில் கொடுக்கும் படி பிடிவாதத்துடன் அவள் அமர்ந்திருக்க. அவனோ நான் தான் ஊட்டி விடுவேன் என்று அவளுக்கு மேல் பிடிவாதத்துடன் அமர்ந்திருக்க இவள் தான் தன் பிடிவாதத்தில் இருந்து சற்று தளற வேண்டியதாகிப் போனது. வேறு வழியின்றி அவன் கொடுத்த உணவை வாங்கியவள் மெல்ல முடியாமல் வலியில் கண்ணில் நீர் கோர்த்து விட, அவள் உணவை மறுக்க அவனோ பிடிவாதத்துடன் மீண்டும் மீண்டும் ஊட்ட அதை வாங்கினவள் வலியையும் அழுகையையும் அவனிடம் மறைக்க முடியாமல் “ரொ.. ரொம்பபபபபபபப….. வலிக்குது” என்றாள் அழுகையுடனே...
வாயைத் திறந்து பேச முடியாமல் சிறு குழந்தையாக அவள் சொன்ன பாவனையில் அவன் மனதை ஏதோ பிசைய தட்டை டீ பாயின் மேல் வைத்து விட்டு அவளை இழுத்து அணைத்தவனோ. “சாரிடா கண்ணம்மா, சாரிடி செல்லம். உனக்குத் தண்டனை கொடுக்கணும்னோ நீ வருந்தணும்னோ கண்ணீர் விடணும்னோ நான் இப்படிச் செய்யலடா.
ஒரு பெண்ணை அதுவும் பொண்டாட்டியை அடிப்பவன் ஆண் மகனே இல்லனு சொல்றவன் நான். ஆனா நானே கண் மண் தெரியாத கோபத்தில் உன்ன அடிச்சிட்டேன். நான் செய்தது தப்பு தான்டா கண்ணா! எங்க என்னப் புரிஞ்சிக்காம என்னை விட்டுப் போய்டுவியோ என்ற தவிப்பிலும் ஒரு வேகத்திலும் தான் நான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேனே தவிர,
உன்ன என் கட்டுபாட்டில் வச்சிக்கணும்னு நான் நினைக்கலடா. உன்னத் தொட்ட பிறகு என்னால என்ன கட்டுப்படுத்திக்க முடியல என்றது தான் உண்மை. அதுக்காக உன்னக் குத்திக் கிழிச்சி நான் சந்தோஷம் அடைந்து இருக்க மாட்டன்டி. நிச்சயம் நான் நிதானித்திருப்பேன். இனி மேல் இதுமாதிரி நடக்கவே நடக்காதுடி மித்ரா! இது உன் மேல சத்தியம்” என்று நா தழுதழுக்கக் கூறியவன் அவளை இறுக்கி அணைத்த படி இருக்க, அவன் சொல்வது பொய் இல்லை என்பதை அவன் குரலும் அவன் சொன்ன வார்த்தைகளும் இறுக்கி அணைத்த அணைப்புமே உறுதிப்படுத்தியது.
அதனாலோ என்னவோ அவனை விட்டு விலக முடியாமல் விலகவும் தோன்றாமல் அவன் கை அணைப்பிலேயே அமர்ந்திருந்தாள் மித்ரா! அவள் அமைதியாக இருக்க, அவனே தொடர்ந்தான் “ஆனா இன்று நடந்த விஷயத்தால ஒண்ணு மட்டும் நான் தெரிஞ்சிக்கிட்டேன்டி. உன்ன விட்டு ஒரு வினாடி கூட என்னால பிரிஞ்சி இருக்க முடியாதுனும் இப்படியே உன்ன அணைச்சிகிட்டே இருக்கணும்னு தான் அது” என்றான் மென்மையாக.
அதைக் கேட்டதில் அவள் உடல் நடுங்க, அதை உணர்ந்தவனோ “இல்லடி இல்ல... நீ நெனைக்கிற மாதிரி தப்பான நினைப்பில் இல்ல. இது வேற மாதிரி உணர்வு, ப்ளீஸ் மித்ரா புரிஞ்சிக்கோ” என்றான் சற்றும் பிசிர் இல்லாத குரலில். அவளுக்கு இப்போ ஏதோ புரிந்தும் புரியாமலும் அவன் சொன்னது மனதில் பதிய, எதுவும் பேசாமல் அவன் கை அணைப்பில் இருந்தாள் மித்ரா.
சற்று நேரம் அப்படியே இருந்தவன் “உனக்கு இரவு கொஞ்சம் திடமான உணவு கொடுக்க நினைத்து தான் இட்லி எடுத்து வந்தன். உனக்கு சாப்பிட கஷ்டமா இருந்தா ஜுஸ் எடுத்து வரவா?” என்று கேட்க அவளும் சரி என்று தலையாட்டினாள். தன் கைப்பேசியிலே வேதாவிடம் சொல்ல சிறிது நேரத்திலேயே கதவு தட்டப் பட்டது. வெளியே சென்று வள்ளியிடமிருந்து அதை வாங்கியவன் உள்ளே வந்து டீ பாயில் வைத்து விட்டுப் பழைய மாதிரி அவள் பக்கத்திலமர்ந்து அவளைத் தோளில் சாய்த்து ஸ்ட்ராவுடன் ஜுசைக் கொடுக்க அதை அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன்.
பிறகு அந்த கண்ணாடி கிளாஸை வாங்கி டீ பாயில் வைத்தவன் அவளைத் தன் கை வளைவில் வைத்துக்கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தவன். பின் அவளுக்கு மருந்து மாத்திரை கொடுத்து ஜெல்லை உதட்டில் பூசி அவளைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டுப் பின் லேப்டாப் உடன் கட்டிலின் மறுபுறம் அமர்ந்து விட, அவனைப் பார்த்துக் கொண்டே கண்கள் சொருகத் தூங்கிப் போனாள் மித்ரா.
வேலைகளை முடித்தவன் ஸோஃபாவில் படுக்காமல் கட்டிலில் அவளை ஒட்டி ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டே தூங்கிப் போனான் தேவ். நடு இரவில் பாத்ரூம் போக எழுந்தவள் தேவ்வின் கை தன் வயிற்றை அழுத்தி அணைத்து இருப்பதைப் பார்த்தவள், முதலில் குழம்பி பின் உடலில் நடுக்கம் ஓட அவன் கையை விலக்கி விட்டு எழுந்திருக்க நினைக்க அந்த தூக்கத்திலும் அவன் பிடி அழுத்தமாக இருந்தது.
சற்று அழுத்தி இவள் அவனை விலக்க, அவளிடம் அசைவை உணர்ந்து தூக்கம் கலைந்தவனோ “என்ன மித்ரா என்ன ஆச்சி?” என்று பதட்டதுடன் கேட்க, “பாத்ரூம் போகணும்” என்றாள் மெல்லிய குரலில். அவன் கையை விலக்க பாத்ரூம் சென்று வந்தவள் தூங்கும் அவனையே சற்று நேரம் பார்த்தவள், முன்பு படுத்திருந்த இடத்தில் படுக்காமல் கட்டிலின் மறு ஓரம் வந்து படுத்துக் கொண்டவள்மனதுமுழுக்கக் குழப்பம். ‘அவனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் அவன் தன்னை விட்டு விலக வேண்டும் என்பதற்காகவும் செய்தது எல்லாம் இன்று எதிர்மறையாக நடக்கிறதே!
அப்போ இந்த திருமணத்தை நிரந்தரமாக்கிப் பிடிக்காத மனைவியுடன் வாழ நினைக்கிறானா? இது எப்படி நடக்கும்? இல்லாத ஊருக்கு வழியல்லவா தேடிப் போறான்! ஏன் இந்த மாற்றம்?!’ எனயோசிக்க,
தூக்கக் கலக்கத்திலே பக்கத்தில் அவளைத் தேடிய தேவ் கட்டிலில் மறு ஓரத்தில் படுத்திருந்ததைப்பார்த்ததும் நிம்மதி அடைந்து உருண்டு வந்து மறுபடியும் அவள் வயிற்றில் கை போட்டு அவள் முதுகைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டுத் தூங்கினான் தேவ். அவளும் விலக நினைத்தும் முடியாமல் தூங்கிப் போனாள்.
காலையில் எழும் போதே கொஞ்சம் வீக்கம் குறைந்து நார்மலாக இருந்தாள் மித்ரா. ஆபிஸ் கிளம்பியவன் பால்கனியில் நின்றிருந்த அவளிடம் வந்து, முன்பு அவளுக்குத் தான் வாங்கிக் கொடுத்த போனைத் திரும்பவும் அவள் கையில் வைத்து “இனிமே இது உன் கிட்டயே இருக்கட்டும். இப்ப நீ எதுவும் பேச வேண்டாம். நான் அனுப்புற மெஸேஜ்க்கு ரிப்ளை மட்டும் அனுப்பு, அது போதும் எனக்கு. உனக்கு எதாவது வேணும்னா சித்திக்கிட்ட கேளு, இல்லனா எனக்கு மெசேஜ் பண்ணு நான் வாங்கி வரேன்” என்றவன் “நாளைக்குக் காலையில் ஊருக்குப் போகணும் மித்ரா! இதுக்கு மேலையும் தள்ளிப் போட முடியாது.
ஏன்னா அங்க அப்பாருவும் அப்பத்தாவும் நம்மள ரொம்ப எதிர் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் என் தாத்தாவையே பெத்த அப்பா அம்மா! அதாவது என் அப்பாவுக்கு தாத்தா பாட்டி, எனக்கு கொள்ளுத் தாத்தா கொள்ளுப் பாட்டி! அதனால் நாம போயே ஆகணும்.
என் மேல என்ன கோபம் சண்டை எதுவா இருந்தாலும் இங்க ஊருக்குத் திரும்ப வந்த பிறகு என்கிட்ட போடு. அங்க எதுவும் வேண்டாம். அம்மாவும் நம்ம கூட வராங்க.
அதனால் உன் திங்ஸ்சும் குட்டிமா திங்க்ஸ்சும் எடுத்து வச்சிக்கோ. தாத்தாகிட்டயும் நேத்தே சொல்லிட்டேன் அவரும் வரேன்னு சொல்லிட்டார். ஸோ டுமாரோ பி ரெடி அட் எய்ட்தேர்ட்டி” என்று கூறி விலகிச் சென்றவன் பின் என்ன நினைத்தானோ திரும்ப அவளிடம் வந்து, அவள் வலது கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்து “இப்பவும் சொல்றன், அங்க வந்து எந்த வம்பு தும்பும் பண்ணாத. அப்பத்தாவ பத்தி உனக்குத் தெரியாது. ஆனா உனக்கு எல்லா வகையிலும் அங்கு நான் துணையா இருப்பேன்” என்று குரலில் ஓர் உறுதியுடன் கூறியவன் அதே உறுதியை அவளைப் பிடித்திருந்த கையை அழுத்தத்துடன் பிடித்துக் நான் இருக்கிறேன் என்பதைக் கூறிச் சென்றான் தேவ்.
நேற்று நடந்த சம்பவத்தால் தேவ் எப்படி ஒரு விஷயத்தை முடிவு செய்தானோ அதேபோல் தான் இன்று மித்ராவும் ஒரு முடிவிலிருந்தாள். ‘தன்னுடைய விளையாட்டுத் தனத்தால் தேவ்விடம் சீண்டி விளையாடுவது இல்லை என்பது தான் அது’. கோபத்தில் அவன் அடித்ததுக்காக இல்லை. அதன் பிறகு அவன் நடந்து கொண்ட விதத்திற்காகத் தான்!
தன்னுடைய செயலால் அவனைக் கோபப்படுத்தி, அதனால் மீண்டும் இப்படி ஒன்று நடப்பதை அவள் விரும்பவில்லை. அதனால் கூடுமான வரை அவனை விட்டு விலகியிருந்து அவன் சொல்வதுக்கு எல்லாம் சரி என்று தலை ஆட்டிக் கொண்டு போக வேண்டியது தான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்கச் சென்றாள் மித்ரா.

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.