அத்தியாயம் – 29
மித்ராவின் ஒரு மனமோ தேவ்வை வேண்டும் என்று கேட்கிறது இன்னோர் மனமோ அவனை வேண்டாம் என்று சொல்லுகிறது. இப்படி இரண்டு பக்கமுமே அவளின் மனமோ ஊசலாட, அவள் கைகளோ எதையும் யோசிக்கும் இடத்தில் இல்லாமல் அவனை ஆரத் தழுவி இருந்தது.
“அப்ப நான் உங்கள விட்டுப் போய்டவா தேவ்? நாம பிரிஞ்சிடுவோமா?” இப்படி மித்ரா வாய் வார்த்தையாகக் கேட்டாலும் அதற்கு அவள் முழு மனதாக சம்மதித்தே இருந்தாலும் எங்கு தேவ் தன்னை போக சொல்லிடுவானோ என்று அவளுடைய இதயமோ வேகமாக அடித்துக் கொண்டது.
அது ஏன்னு அவள் யோசிக்க வில்லை. மாறாக ‘நானா இது? நானா இப்படி பயப்படுறேன்?! ஏன், என்னுடைய மீதம் உள்ள மிச்ச வாழ்வும் இறுதி காலம் வரை தனியேனு தானே முடிவு செய்திருந்தேன் நான்? இன்னும் சொல்லப் போனால் தேவ்வை விட்டுப் பிரிந்தே தீரவேண்டும்னு எண்ணத்தில் அவரிடம் சண்டை போட்ட நானா இன்று தேவ் அப்படி போகச் சொல்லி விடுவாறோனு அஞ்சி நடுங்குகிறேன்?
என்னை எது நடுங்க வைத்து தேவ்விடம் கட்டிப் போடுகிறது? ருத்ராவின் மேல் நான் கொண்ட பாசமா இல்ல இந்த ஆடம்பர வாழ்வின் மேல் என்னையும் அறியாமல் எனக்குள்ள ஆர்வமா? இதை எல்லாம் விட அன்று நான் ஷியாமிடம் விட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியா? அப்படியும் சொல்ல முடியாதே!
அன்று கூட தீபக் என்ன கல்யாணம் பண்ணிக்கறேனு தான சொன்னான்? அவன் கேட்ட விதம் வேணா தப்பா இருக்கலாம்! எப்படியோ அவனைத் திருமணம் செய்து வெளி உலகத்திற்காகவாது கவுரவம் என்ற பெயரில் போலியான ஒரு வாழ்வை நிச்சயம் நான் வாழ்ந்து இருப்பேனே! அதுவும் நான் ஷியாமிடம் விட்ட சவாலில் ஜெயிப்பதுக்குத் தான சமம்?
ஆனால் அதை அன்று நான் செய்யாமல் இன்று எதற்காக இந்த வாழ்வை விட்டுப் பிரிய நான் தயங்குகிறேன்? ஒருவேளை ஊர் அறிய தாலி கட்டி கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்ததாலா? அப்படி என்றால்..’ அவள் மேற்கொண்டு யோசிப்பதற்குள்
“நீ என் பொண்டாட்டிடி! எதுக்காக நீ என்ன விட்டுப் போகணும்? இப்போ என்ன நடந்திடுச்சினு நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு சொல்ற நீ?” என்று ஒரு அதிகாரத்துடன் இடை வெட்டியது தேவ்வின் குரல்
ஏற்கனவே ‘தேவ் என்ன சொல்லுவானோனு?!’ குழப்பத்தில் இருந்த மித்ரா அவன் திடீர்னு அப்படி கேட்கவும் ‘அப்ப இவர் நான் சொன்னது எதையும் சரியாக கேட்கலையோ?’ என்று மறுபடியும் குழம்பியவள், “நான் தான் சொன்னனே தேவ்! எனக்கு ஏற்கனவே திருமண……” என்று அவள் கூனிக் குறுகி சொல்ல அவளை முடிக்க விடாமல் கோபத்துடன் அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து தன்னிடம் இருந்து அவளை விலக்கியவன்,
“இன்னோர் முறை அன்று உனக்கு நடந்ததை தி……” என்றவன் அந்த திருமணம் என்ற வார்த்தையைக் கூட சொல்லப் பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியவன் பின் சில உஷ்ண மூச்சுகளை விட்டு தன் கோபத்தை சமன் செய்து
“உனக்கு நடந்தது ஒரு விபத்துடி! ஆனால் அது உன்னைப் பொருத்த வரை தான் விபத்து. என்னைப் பொறுத்தவரை உனக்கு நடந்தது அநீதி. நீ முழு மனசா சம்மதிக்காம தான் எல்லாமே நடந்திருக்கு. உன்ன அரவணைக்கவும் எடுத்துச் சொல்லி வழி நடத்தவும் உறவுகள் இல்லாததை அவன் நல்லா பயன்படுத்திக்கிட்டான். தாய் என்ற பெயரில் ஒரு பெண் தன்னை ஒதுக்கி அசிங்க அவமானப் படுத்தியதற்கு பழி தீர்க்க மனதில் எரிந்து கொண்டிருந்த வஞ்சகத்தைப் போக்கிக் கொள்ள இன்னோர் பெண்ணாண உன்னைக் கத்தி முனையில் வச்சி மிரட்டி அதற்கு சாட்சியாக போலியான கண்ணீரை முன் வைத்து உன்னிடம் இருந்து பரிதாபத்தையும் பச்சாதாபத்தையும் சம்பாதித்து மனச இளக வைத்து தன் பிடிவாதத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறியில் தாலின்ற பேர்ல உனக்கு அவன் கட்டின மூக்கணாங்கயிறு அது!
அந்த கயிறுக்கு நீ ஏன் இவ்ளோ முக்கியத்துவம் குடுக்கற? மனசுல உண்மையான காதல் இல்லாம சம்பிரதாயத்துக்காக ஒருத்தன் உன் கழுத்துல ஒரு கயிறு கட்டிட்டா அது தாலியாகுமா? அக்னியை வலம் வராம அம்மி மிதிக்காம பெரியவங்க அட்சதை தூவி ஆசீர்வாதம் பண்ணாம நேரம் காலம் பார்க்காம இருட்டுல நடந்தது எல்லாம் ஒரு கல்யாணமா?
இப்படி சொல்றதால சந்தர்ப்ப சூழ்நிலையால ரகசியமா யாருமே கல்யாணம் பண்ணி வாழலையானு கேட்காத. அப்படி கல்யாணம் பண்ணாலும் அதன் பிறகு அவங்களோட காதலால அதுக்கு உயிர் கொடுத்து அது உண்மையான கல்யாணம் தான்னு நிரூபிச்சிக் காட்டுவாங்க.
ஆனா உன் விஷயத்துல என்ன நடந்துச்சி? ஒரு கயிற கட்டிட்டு அதை வெளி உலகத்திற்கு கூட உன்ன காட்ட விடாம பகிரங்கமா இவ தான் என் மனைவினு சொல்ல முடியாத ஒரு கோழை இல்ல இல்ல ஒரு தேர்ட் ரேட் பொறுக்கி கட்டினத எல்லாம் தாலினு நினைச்சிகிட்டு ஐய்யோ…. என் வாழ்க்கை போச்சே என் வாழ்க்கை போச்சேனு உட்கார்ந்து ஃபீல் பண்ணிட்டு இருக்கப் போறியா?
கஷ்டம் இருக்கும் தான்! ஏன் நாமளும் கொஞ்சம் கண்ணீர் விடணும் தான்! அந்த கண்ணீர் அவனுக்காக இல்ல, நம்ம மனசுல உள்ள பாரம் குறைய தான். பிறகு அதை அதோட மறந்தோமா தூக்கி தூர போட்டோமானு நம் வாழ்வின் அடுத்த கட்டத்த நோக்கிப் போய்கிட்டே இருக்கணும். நீ தூக்கிப் போட்டுட்டு வந்துட்ட தான். அந்த விஷயத்துல என் பொண்டாட்டிய எனக்குப் பிடிச்சிருக்கு.
ஆனா கல்யாணம் என்ற பெயரில் மறுபடியும் உன் வாழ்க்கைய இன்னோர் ஆணான என் கூட தொடர பயந்த பாரு அது தான் எனக்குப் பிடிக்கல. ஏன் ஹாசினி உண்மையாவே இந்த உலகத்தில் உள்ள ஆண்கள் யாரும் நல்லவங்களே இல்லையா? அப்ப நீ அன்று ஷியாமிடம் சொன்னது வெறும் வாய் வார்த்தையா தானா?
ஷியாம் கத்தி முனையில உன்ன கல்யாணம் பண்ணான். நானோ என் மகள் உயிர பணயம் வைத்து தான் உன் கழுத்துல தாலி கட்டினன். அதுக்காக நானும் உன்ன விட்டுப் போய்டுவனு நினைக்கிறியா? இல்லடி நான் உன்ன அணுகின முறை வேணா தவறா இருக்கலாம். ஆனா உன்ன விரும்பி காதலிச்சி தான் கல்யாணம் பண்ணேன். உன் மேல உயிரே வச்சி இருக்கேன்டி பொண்டாட்டி.
அவன் கட்டின தாலியை அவனே மதிக்காததால் தான் அத்தனை பேர் முன்னாடி எந்த பொண்ணும் செய்யத் துணியாத ஒரு செயலை அவன் தாய் செய்யும்போதும் அதை அவன் பார்த்துகிட்டு இருந்தான். அதனால் தான் எந்த சம்மந்தமும் இல்லாதவன் போல் அவன் தேவையை மட்டும் நிறைவேத்திக்கிட்டான். அவன் கூட வாழ்ந்தது எல்லாம் ஒரு வாழ்க்கையா? ரெண்டு மனசும் ஒண்ணு சேர்ந்து ஆத்மார்த்தமான காதலோட ஒரு நாள் வாழற வாழ்க்கைக்கு கூட அது ஈடாகாது.
ஆரம்பத்துல நான் என்ன சொன்னனோ அதையேதான் இப்பவும் சொல்றேன். உன்னோட கடந்த காலம் எனக்குத் தேவை இல்லை. அதுல உனக்கு என்ன நடந்திருந்தாலும் அதப்பத்தி எனக்குக் கவலை இல்லை. உன்னோட வாழற இந்த நிகழ்காலமும் வாழப்போற எதிர்காலமும் தான் எனக்கு முக்கியம்.
எனக்குக் கெடச்ச விலை மதிக்க முடியாத வைரம் நீ! அத நான் என்னோட கிரீடத்துல வெச்சிக்க ஆசப்படறேனே தவிர இதுக்கு முன்னாடி அது யார்கிட்ட இருந்தது, அத அவங்க எந்த நகையில போட்டிருந்தாங்கன்ற ஹிஸ்டரி எல்லாம் எனக்குத் தேவை இல்லை.
ஏன் ஹாசினி, நீ தீபக் கிட்ட என்ன கேட்ட? இப்ப என் வாழ்க்கைல என்ன நடந்திருச்சினு நீ பரிதாபப்பட்டு வாழ்க்கை தரேன்னு தான கேட்ட? அதையே தான் நான் உன்கிட்ட திருப்பி கேக்கறேன், இப்ப உன் வாழ்க்கைல என்ன நடந்திருச்சினு நீ திரும்பத் திரும்ப அதையே சொல்ற?!
“என்ன தேவ் இப்படி சொல்றீங்க? அப்படி சாதரணமா என்னால கடந்து போக முடியுமா? ஷியாமுக்கு எதிரா நான் வாழ்ந்து காட்டணுங்கிற வெறியிலும் கோபத்திலும் சொன்ன வார்த்தைங்க அது. ஆனா நிஜத்துல ஒரு நாள் கூட என்னால அப்படி நெனைக்க முடியல. அந்த காயத்தோட ரணம் இன்னும் ஆறல” – மித்ரா
“எக்ஸாட்லி! அது ஒரு காயம் தான்! அது ஆற்றதுக்கு மருந்து போடணுமே தவிர அந்த காயத்தையே பார்த்துகிட்டிருந்தா ஒருநாளும் ஆறாது. உன்னோட காயத்துக்கு மருந்து என்னோட அன்பும் காதலும் தான் ஹாசினி. என்னால உன்னோட காயம் நிச்சயம் ஆறும். அப்படி ஒண்ணு இருந்துச்சுன்றதுக்கான வடுவே இல்லாம அத குணப்படுத்தறது என்னோட கடமை. ஆனா அதுக்கு நீ என்ன புரிஞ்சிகிட்டு என் மனைவியா என் கூட இருக்கணும்.
நான் என்ன அவன மாதிரி முதுகெலும்பில்லாத கோழையா? மத்தவங்களுக்காகப் பயந்துகிட்டு உன்ன விட்டுட்டுப் போறதுக்கு? அப்படி நான் செய்தா உன்னால தாங்கிக்க முடியாதுன்றதும் எனக்கும் தெரியும். உன் மனசுல இருக்கறத என்கிட்ட கொட்டித் தீர்த்தாலாவது உனக்கு ஒரு நிம்மதி கெடைக்குமேனு தான் எல்லாத்தையும் சொல்லச் சொன்னனே தவிர உன் கடந்த.காலத்தை தெரிஞ்சிகணும்னு இல்ல.
போதும், இதோட உன்னோட கடந்த காலத்தப் பத்தி பேசறதும் நெனைக்கிறதும் விட்டுடு. இனிமேல் உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கணும். உன் அத்தானா உன் புருஷனா உன் காதலனா நான் நான் மட்டும் தான் இருக்கணும். இன்னும் சொல்லப் போனா உன் மூச்சு பேச்சு உன் உடலில் ஓடுற ஒவ்வொரு அணுவிலும் நானே கலந்து இருக்கணும்னு தான்டி என் ஆசை. அதையும் செய்வான்டி இந்த தேவ்.
அன்பிற்கு அடங்காதோர் இவ்வுலகில் உண்டோ சொல்லு! அப்படிப் பட்ட என் அன்பால பாசத்தால உன் பழைய நினைவுகளை மறக்க வைப்பான்டி உன் அத்தான்! என்று சொல்லி அவள் நெற்றியில் இதழ் பதிய அழுத்தமாக முத்தமிட்டான் தேவ்.
“சரி தேவ், நீங்க சொல்ற மாதிரி இந்தக் கல்யாணத்தையும் அவன் கட்டுன தாலிக் கயிறையும் ஒதுக்கலாம் மறக்கலாம். ஆனா நான் அவன் கூட வாழ்ந்து இருக்கேனே! அத ஒதுக்கித் தள்ள முடியுமா இல்ல மறக்க தான் முடியுமா? தினம் தினம் அத நெனச்சு தான சாகறேன்?! அது எனக்கு நரகம் இல்லையா? இப்ப கூட அக்னில இறங்கினா நான் புனிதமாயிடுவேனு சொல்லுங்க, இந்த நிமிஷமே நான்…” மித்ரா சொல்லி முடிப்பதற்குள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாகப் பாய்ந்து வந்தன தேவ்வின் சொற்கள்.
“ஸ்டாப் இட் ஹாசினி! தட்ஸ் இனஃப்! லூசாடி நீ? திரும்பத் திரும்ப அதே விஷயத்த பேசற! இதுதான்.. இதுதான்…. உன்ன மாதிரி பெண்களோட இந்த பலவீனம் தான் உங்கள போகப் பொருளா துச்சமா நெனைக்கிற ஆண் வர்க்கத்தோட பலம், வெற்றி! அதே சமயம் உங்கள மதிச்சி உங்களுடன் கைகோர்த்து முன்னேற தோள்கொடுத்து சிவப்புக் கம்பளம் விரிச்சி கொண்டாட நெனைக்கற என்ன மாதிரியான ஆண் வர்க்கத்தோட தோல்வி!
ஒரு பாரதி இல்ல, இன்னும் ஓராயிரம் பாரதி பாடினாலும் நீங்களெல்லாம் மாற மாட்டீங்க! ஏன்? ஏன் இப்படி இருக்கறீங்க? இன்னும் எத்தனை யுகம் வேணும் உங்கள நீங்களே மாத்திக்கறதுக்கு? தப்பு செய்ற ஆண்கள் சந்தோஷமா நிம்மதியா சுத்தி வரல? ஆனா அவனால பாதிக்கப்பட்ட நீங்க மட்டும் ஏன் உங்களுக்கு நீங்களே தண்டனை குடுத்துக்கறீங்க?
படிச்சி மனோ தைரியத்துடன் இருக்கற நீயே இப்படி இருந்தா, பாவம் படிக்காத மனோ தைரியம் இல்லாத வெளியுலகம் தெரியாத பொண்ணுங்க எப்படி தெளிஞ்சு வருவாங்க? ஏன் உங்களுக்கு நீங்களே ஓர் விலங்க பூட்டிக்கறிங்க? முதல்ல பெண்களான நீங்க மாறுங்க. அதுக்கப்புறம் இந்த சமூகத்த மாத்துங்க. அப்ப நிச்சயம் மாற்றம் வரும். அதுக்கு எங்கள மாதிரி ஆண்களுக்குத் துணையா இருந்து பக்கபலமாக செயல்படுங்க.
உன் கண்ணுக்கு நரகம் மட்டும் தான் தெரியுது இல்ல? ஆனா சொர்க்கம்னு ஒண்ணு இருக்கறதே உனக்குத் தெரியலையா இல்ல அது தெரிந்தும் அதற்கான வழியை நோக்கிப் போகாமல் அந்தப் பூட்டோட சாவி உன் கையில வச்சி இருந்தும் அதை தொறக்க நீ ஏன்டி இவ்வளவு யோசிக்கற? நீ மனசு வச்சா மட்டும் தான்டி அதை தொறக்க முடியும். அசிங்கம் கலந்த சாக்கடையில எதிர்பாரமா விழுந்துட்டா என்ன பண்ணுவ? ஐய்யோ சாக்கடையில விழுந்துட்டனே.. ஐய்யோ சாக்கடையில விழுந்துட்டனேனு அழுது புலம்பிகிட்டே உட்கார்ந்திருப்பியா இல்ல குளிச்சு தல முழுகிட்டு வருவியா? நீயே சொல்லுடி.
அப்பறம் என்ன சொன்ன? தீயில இறங்கப் போறியா? அப்படி பார்த்தா ஒரு குழந்தைக்குத் தகப்பனா நான் தான்டி உனக்கு முன்னாடி தீயில இறங்கி என்ன சுத்தப் படுத்தி இருக்கணும். சொல்லு செய்யவா? என்றவன் நீ சொன்ன அதே அக்னியில் இருந்து வந்தவதான் திரௌபதி. அதே பவித்ரத்தோட ஐந்து பேர்கள்கூட வாழ்ந்தாங்க. அதனால அவள் கற்பு கெட்டவள்னு காரித் துப்பினாங்க கௌரவர்கள். ஆனால் ஒவ்வொரு இரவிலும் தன் கணவனோடு கூடும் போது நித்தமும் அவள் புது பிறவி எடுப்பாள் என்ற வரத்தோடும் அம்சத்தோடும் தான் அவள் அவதாரமே இந்த உலகிற்கு வந்ததுனு எத்தனை பேருக்குத் தெரியும்?
அதே மாதிரி தான்டி நீயும். உனக்கு நான் எனக்கு நீ என்பது தான்டி கடவுள் நமக்கு எழுதுன எழுத்து. ஆனால் இடையில் நம் இருவர் வாழ்விலும் ஏதேதோ நடந்திடுச்சி. அதனால நீ எனக்கு என்றுமே வரம் தான்! அதேபோல் இங்க எவனும் ராமனும் இல்ல! அப்புறம் ஏன் நீ மட்டும் சீதை மாதிரி அக்னிப் பிரவேசம் பண்ணனும்? சரிடி உன் வழிக்கே வரேன். இப்ப இதுக்கு என்ன தீர்வுனு நீயே சொல்லு” என்று தேவ் கேட்கவும்
“தெரியல இதுக்கு என்ன தீர்வுனு எனக்குத் தெரியல. ஆனா என்னால இத சாதாரணரமா கடந்து போய் சகஜமா இருக்க முடியல” என்று மித்ரா விரக்தியாகச் சொல்லவும்
“தெரியுது இல்ல? இதுக்கு என்ன தீர்வுனு உன்னால சொல்ல முடியல இல்ல, அப்ப என்கிட்ட விட்டுடு நான் பார்த்துக்கிறேன். இல்ல இப்படியே காலம் முழுக்க இதே மாதிரி நீயும் அழுது என்னையும் நிம்மதி இல்லாமல் கஷ்டபடுத்த போறியா?” என்று அவன் தொய்வாகக் கேட்கவும்
“சத்தியமா உங்கள அப்படி இருக்க விட மாட்டேன் தேவ்னு” அவசர அவசரமாக இடை மறித்த மித்ரா “ஆனால் உங்க அம்மா தன் வீட்டிற்கு வந்த மருமகள் இப்படிப் பட்டவள்னு தெரிஞ்சா என்னை ஏத்துக்குவாங்களா?” என்று கேட்க
“என்னைத் தவிர இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். அப்படியே தெரிந்தாலும் என் தாய் பத்தா பசிலி இல்லை” - தேவ்
“ஷியாம் மூலமாகவோ வேற யார் மூலமாகவோ தெரியவந்தால்?” - மித்ரா
“தெரிய வராது. அப்படி தெரிய வராத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன். மீறி என் கிட்ட யாராவது வந்து சொன்னா என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியும்னு பதில் கொடுத்திடுவேன். ஆனா அப்படி என் கிட்ட சொல்ல முதல்ல அவனுங்க உயிரோட இல்ல இருக்கணும்?
“போதும் ஹாசினி, திஸ் இஸ் லாஸ்ட்! திரும்ப அதையே சொல்லி என்ன மறுபடியும் டென்ஷன் ஆக்காத. ப்ளீஸ்டி போதும்” என்று தன் கைகளால் அவள் தோள்களைப் பற்றி உளுக்கிக் கொண்டே இவ்வளவும் பேசவும், அவன் கைகளின் அழுத்தத்தால் தன் தோள்கள் இரண்டும் விண்டுவிடுவது போல் வலிக்க அவன் உளுக்கலில் உடல் சோர்ந்து போக “வலிக்குது அத்தான்” என்றாள் மித்ரா முனங்கலாக.
இவ்வளவு நேரம் கோபம் தலைக்கேறி ஆக்ரோஷமாக கத்தியவன், அவள் வலிக்குது என்றதில் பதறி அவள் சொன்ன அத்தான் என்ற வார்த்தையில் தன் கோபம் எல்லாம் அனலில் இட்ட மெழுகாக உருகி விட அவளை இழுத்து அணைத்தவன்,
“இதுவரைக்கும் உன் வாழ்க்கையில நடந்தது எதுவுமே உன் விருப்பப் படி நடக்கல. எல்லாம் விதிப்படியும் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் மாதிரியும் நடந்துடுச்சி. எவ்ளோ கஷ்டங்கள நீ அனுபவிச்சிட்ட. ஆனா இனிமே அப்படி இல்ல. எல்லாம் உன்னோட இஷ்டப் படி தான் நடக்கும்.
பழசு எல்லாமே வெறும் கனவு. இப்ப உன்னைச் சுத்தி நடக்கறதும் அதுல இருக்கற உன்மேல பாசம் காட்ற உறவுகள் மட்டும் தான் நிஜம். அதனால் அதை மட்டுமே யோசிச்சு அவங்களுக்காகவாது உன்னோட எண்ணத்த மாத்திகிட்டு சந்தோஷமா வாழப்பழகு. முக்கியமா உன்மேல உயிரே வெச்சிருக்கற எனக்காகவும் ருத்ராவுக்காகவும்” என்றான் தேவ் இதமாக அவள் கூந்தலை வருடி கொடுத்துக் கொண்டே. அவன் சொன்னதை எல்லாம் மித்ரா கேட்டாலே ஒழிய மனதில் எதையும் பதிய வைத்துக் கொள்ளவில்லை. அவளோ வேறு ஒரு சிந்தனையில் இருந்தாள்.
‘தேவ்விடம் தன் கடந்த காலத்தைச் சொன்னால் அதை எப்படி என்ன மாதிரி எடுத்துக் கொள்வாறோ? இதை ஏன் இத்தனை நாள் சொல்லவில்லைனு சத்தம் போடுவாறோ? திருமணத்திற்கு முன்பே சொல்லி இருந்தா நடிப்புக்காகக் கூட இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி இருப்பனே! ஏன்டி இப்படி செய்த? நம்ப வைத்து நல்லவ மாதிரி நடிச்சி என்னையும் என் குடும்பத்தையும் ஏமாற்றி கழுத்த அறுத்துட்டியே! ச்சீ… ச்சீ….. நீ எல்லாம் ஒரு பொண்ணா? என்று காரித் துப்பாத குறையாக என்னை அசிங்கப் படுத்தி நீ இங்கு இருந்த வரை போதும்.
இந்த வினாடியே என் வாழ்க்கையை விட்டும் என் குடும்பத்தை விட்டும் போய் விடு. நல்ல விதமாக நீயே போய்டினா உன் தாத்தா கிட்ட எதையும் சொல்ல மாட்டன். மீறிப் போக மாட்டனு பிரச்சனை பண்ணா எல்லாத்தையும் உன் தாத்தா கிட்ட சொல்லிடுவனு மிரட்டி அவளை வீட்டை விட்டுப் போக சொல்லிவிடுவான்னு’ முதலில் நினைத்தவள் பின்
தேவ்வின் குணம் அறிந்து இருந்ததால் ‘தாத்தாவிடம் அனைத்தும் சொல்லி விடுவேன்னு மிரட்டாமல் ஏதோ ஓர் காரணத்தைச் சொல்லி அவன் வாழ்வை விட்டுப் போகச் சொல்லிவிடுவான்’ என்று இப்படியும் அப்படியுமாக அவளே கற்பனை செய்து வைத்திருந்தாள்.
‘ஆனால் தேவ்வோ அவளை எந்த ஒரு இழி சொல்லையும் சொல்லாமல் ஏன் எந்த ஒரு அதிர்ச்சியைக் கூட காட்டாமல் ஒரு ஆணாக இருந்து கொண்டு என் வாழ்வில் நடந்தது திருமணமே இல்ல அநீதினு எப்படி சொல்ல முடியுது?
நான் இப்போது கேட்டது எல்லாம் உண்மையா? தேவ்வா தனக்கு நடந்த அநீதிக்கு கோபப் பட்டு பேசியது இல்லை. நான் தான் தப்பா புரிஞ்சிக் கிட்டனா? எனக்கு நடந்தது அநீதி தான். ஆனால் திருமணம் எப்படி இல்லனு ஆகும்? எனக்கு இப்படி நடந்தது என்றதால தேவ் சொல்ற மாதிரி நடந்தது திருமணமே இல்லனு ஒரு பெண்ணான நான் எப்படி சொல்ல முடியும்?’ என்று பலவாறு அவள் குழப்பத்தில் இருக்க அந்த நேரம் வெளியே அவர்கள் அறைக் கதவை யாரோ தட்டினார்கள்.
கதவு பூட்டி இருந்ததால் எழுந்து சென்று திறக்க நினைத்த தேவ் அவளைத் தன்னிடம் இருந்து விலக்க, தன் எண்ணத்திலே உழன்று இருந்த மித்ராவோ அதை உணராமல் விலகி அமர அவனுக்கு ஒத்துழைக்காமல் இருக்க
“வெளில யாரோ கதவைத் தட்டறாங்கடி. கொஞ்ச நேரம் இரு, இதோ நான் யாருனு பார்த்துட்டு வரேன்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகிச் சென்று கதவைத் திறந்தான்
வெளியே வேதா தான் இருந்தார். “நீ சாய்ந்திரம் வரும்போது உன் பொண்ணு தூங்கிட்டு இருந்தாளாம். அதனால உன்னப் பார்க்கலையாம். இப்போ என் அப்புவ பார்க்கணும் நான் அப்பு கூட தான் படுப்பேனு ஒரே அடம். அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றவர் “ஆமாம், நீங்க இரண்டு பேரும் இன்னும் சாப்பிடலையா அப்பு?” என்று கேட்க
“அப்பு” என்ற கூச்சலுடன் அவன் காலைக் கட்டிக் கொண்ட மகளைத் தூக்கி மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து அவளை விளையாட்டு காட்டியவன் வேதா கேட்ட கேள்விக்குப் பதிலாக
“கொஞ்சம் பேசிட்டு இருந்தோம் சித்தி. அதில் நேரம் போனதே தெரியல. இதோ வரோம்னு” சொல்ல
“வேண்டாம் வேண்டாம்.. இரண்டு பேரும் கீழ வர வேண்டாம். நான் வள்ளி கிட்ட சொல்லி சாப்பாட்ட மேலையே அனுப்பறன். அப்பறம், குட்டிமா சாப்டுட்டா. அவளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்னு” சொன்னவர் அங்கிருந்து விலகி விட மித்ராவைப் பார்த்தவுடன் தன் தந்தையிடம் இருந்து ருத்ரா தாயிடம் தாவ, உட்கார்ந்த வாக்கிலேயே அவளை வாங்கி தன் மேல் சாய்த்து அணைத்துக் கொண்டாள் மித்ரா.
“பார்த்தியா இந்த வாண்ட?! இவ்வளவு நேரம் அப்பாவக் கேட்டு அழுதுட்டு இப்போ அம்மாவப் பார்த்தவுடனே எப்படி தாவுது பார் கேடி புள்ள!” என்று தேவ் அங்குள்ள சூழ்நிலையை சாதாரணமாக்க நினைக்க, அது சரியாகவே வேலை செய்தது.
“நான் கேடி இல்ல அப்பு. அம்மா தான் கேடி புள்ள” என்று ருத்ரா அவனுக்கு பதில் சொல்ல
“ஏய் வாலு, நீயாச்சி உன் அப்பாவாச்சி. இதுல எதுக்கு என்ன வம்புக்கு இழுக்கறனு?” மித்ரா சலித்துக் கொண்டே அவள் தலையில் வலிக்காமல் கொட்டு வைக்க, அது வலிக்கவே இல்லைனாலும் தன் தலையைத் தடவிய ருத்ரா,
“ஆமாம், நீ கேடி தான் அம்மா! அப்பு இல்லாத அப்போ என் கூட விளையாடற நீ” என்று சொன்னவள் மித்ரா முறைப்பதைப் பார்த்துவிட்டு “நீங்க” என்று திருத்திக் கொண்டவள்
“அதே அப்பு ஆபிஸ்ல இருந்து வந்துட்டா உடனே கால் வலிக்குதுனு சொல்லிட்டு ரூமுக்கு வந்திடற” என்று அவள் போட்டு உடைக்க
மித்ராவுக்குத் தான் ஐய்யோ…. என்று ஆனது. ‘இந்த குட்டி வாண்டு இப்படி போட்டுக் கொடுத்துடுச்சேனு!’ நினைத்தவள் இப்போது உள்ள சூழ்நிலையில் தேவ்வை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டு அவள் தலை குனிய
அதைப் பார்த்து “ஹா….. ஹா…. ஹா….”னு வாய் விட்டுச் சிரித்தவன், “நான் இல்லாதப்போ இன்னும் வேற என்னெல்லாம் செய்தாங்க உங்க அம்மா?” என்று அவன் மகளிடம் கேட்க அவன் அப்படிச் சிரித்ததில் முகம் சிவந்து போனவள் அவன் தொடையை நறுக்கென கிள்ளி “இப்படி தான் அவள என்கரேஜ் பண்றதானு?” கேட்க
“ஆஆஆ…..” வலிக்கவே இல்லைனாலும் போலியாக அலறியவன் “அடியேய் ராட்க்ஷஷி, என்னமா கிள்ளிட்ட? இருடி இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சி உனக்குப் பதில் அடி கொடுக்கறேன்” என்று ரொமான்ஸ் பார்வையோடு அவன் குறும்பாக மிரட்ட
‘இவ்வளவு பெரிய விஷயத்தைக் கேட்ட பிறகும் எப்படி இவரால் இயல்பாக சிரிக்கவோ பேசவோ முடிகிறதுனு?’ அவள் தான் திணறிப் போனாள்.
பின் தன் மனைவியை நெருங்கி அமர்ந்தவன் அவள் தோளில் தன் தலை சாய்த்து “அம்மாவ அப்படி சொல்லக் கூடாது செல்லம். அம்மாக்கு கால் உடைஞ்சிடிச்சி இல்லையா? அதனால் நிஜமாவே அம்மாவுக்கு கால் வலிச்சி இருக்கும் குட்டிமா. அதான் அம்மா மேல வந்து இருப்பாங்க” என்று அவன் குழந்தைக்கு எடுத்துச் சொல்ல
“அப்படியாமா? அப்போ நாளைக்கு கார்டன்ல விளையாட வேண்டாம். பிளே ரூம்ல உட்கார்ந்து பால் விளையாடலாம்னு” ருத்ரா வழி சொல்ல
“ம்ம்ம்…..” என்றாள் மித்ரா அறை குறையாக. எவ்வளவு தான் தேவ் சொன்னாலும் அவளால் எளிதில் சமாதானம் ஆக முடியவில்லை. அவனிடம் எதிர் கேள்வி கேட்க அவளுக்கு ஆயிரம் இருந்தது. இப்படியாக இருந்த நேரத்தில் வள்ளி இரவு உணவையும் கொண்டு வந்து கொடுக்க உணவை முடித்த பின்னர் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்த தேவ் ருத்ராவைத் தன் மார் மீது சாய்த்துத் தூங்க வைக்க அவன் பக்கத்தில் அமர்ந்த மித்ரா அவனிடம் ஏதோ சொல்ல வாய் திறக்க அவள் எதைப் பேச வருகிறாள் என்பதை அறிந்த அவனோ ‘குழந்தை இருக்கிறாள், இப்போ எதுவும் வேண்டாம்’ என்று கண்ஜாடை காட்ட வேறு வழியில்லாமல் மித்ரா தான் வாய் மூடிப் போகவேண்டியதா ஆயிற்று.
இரவு ஏதேதோ யோசித்ததில் மித்ரா காலையில் விடிந்த பிறகே தூங்கினாள். அவள் கண்ணத்தில் மென்மையாக ஒரு முத்தம் வைத்த தேவ்வின் மீசை குறுகுறுப்பில் கண் விழித்தவளைப் பார்த்து “ஹாய்….குட்மார்னிங்டி பொண்டாட்டினு” சொல்ல
அப்போது தான் அவனைச் சரியாகப் பார்த்தவள் அவன் ஆபிஸ்ஸூக்கு கிளம்பிச் செல்ல தயாராக இருப்பதைப் பார்த்ததும் “என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டிங்கனு?” கேட்க
“அம்மா மகாராணியே நான் ஒண்ணும் சீக்கிரம் கிளம்பல. நீங்க தான் விடிஞ்சது கூடத் தெரியாம நல்லா தூங்கிட்டிங்க. மணி இப்போ என்ன தெரியுமா? ஒன்பது! நான் கிளம்பறதுக்குள்ள நீ எழுந்திருச்சிடுவனு பார்த்தேன், நீ எழுந்திருக்கல. அதான் உன் கண்ணத்துல ஒரு உம்மாவாது குடுக்க நினைச்சேன். கடைசியில் மகாராணி நான் குடுத்த முத்தத்தில் எழுந்திட்டிங்கனு” அவன் சொல்ல
“அச்சோ….. ஒன்பதா? இவ்வளவு நேரமா தூங்கினேன்? ருத்ரா வேற ஸ்கூல் போகணுமே!” அவள் சொல்லிக் கொண்டே பதறி எழ “ஏய்…. ஏய்…. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்!” என்றவன் கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோள்களைப் பிடித்து மறுபடியும் அவளைப் படுக்க வைத்தான்
“ருத்ரா எழுந்த உடனே சித்தி கிட்ட விட்டுட்டேன். ஸோ நீ ரிலாக்ஸ்டா தூங்கி ரெஸ்ட் எடு. நேற்று என் கிட்ட எல்லாம் சொன்னதில் நீ எவ்வளவு மன உளைச்சலில் இருந்து இருப்பனு எனக்குப் புரியுது. அதான் உன்னை எழுப்பல. அதே மாதிரி நேற்று நாம் பேசின உன் விஷயங்கள் தான் முதலும் கடைசியும். இதுக்கு மேல் நான் பேச விரும்பல.
உன் மனசுல ஆயிரம் கேள்விகள் எதிர் வாதங்கள் ஒரு பொண்ணா உனக்கான நியாயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் என் கிட்ட சொல்லி என் மனச மாத்தலாம்னு நினைக்காத. நீயினு இல்ல யார் என்ன சொன்னாலும் என் மனசு மாறாது. ஏன் அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் நான் என் முடிவுல இருந்து மாற மாட்டன். இந்த பிறவியில் என் மனைவினா அது நீ மட்டும் தான். நீ எனக்காகப் பிறந்தவ என் தேவதை.
இன்னும் சொல்லப் போனா நான் முதன் முதலா ஆசைப் பட்டு காதலித்து மணந்தவ நீ என்னும் போது உன்ன அவ்வளவு லேசுல என் வாழ்க்கையில் இருந்து போக விடமாட்டன். அதனால் வீண் முயற்சி எதுவும் செய்யாதடி. உன் வாழ்க்கையில் பல கஷ்டங்களைத் தாண்டி நீ எனக்கு கிடைச்சிருக்க. அதே மாதிரி என் வாழ்வில் பல பிரச்சனைகளைத் தாண்டி தான் நான் உன் வாழ்வில் வந்து இருக்கன்.
அதனால நமக்கு இருக்கிற கொஞ்ச காலத்த நாம் ஏன் சந்தோஷமா வாழ கூடாது? சரி சந்தோஷம் வேண்டாம், அட்லீஸ்ட் நிம்மதியாவாது இருப்போம். அந்த நிம்மதி எப்படி கிடைக்கும்னா நீ பழச மறந்து அந்த சுவடே இல்லை என்ற நிலைக்கு மாறி இனிமே அதைப் பற்றி பேசாம இருக்கறது தான்! நமக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பியா ஹாசினி?” என்று குனிந்து அவள் இரண்டு பக்க கண்ணங்களையும் தன் கைகளில் தாங்கிக் கொண்டு அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டு மிகவும் நைந்த குரலில் அவன் கேட்க மித்ராவால் மாட்டேன் என்றா சொல்ல முடியும்? ‘சரி’ என்று தலையாட்டினாள் அவள்.
அதில் கொஞ்சமே கொஞ்சம் திருப்தியுற்றவன் “சரி ஹாசினி, நீ தூங்கி ரெஸ்ட் எடு. நான் ஈவினிங் சீக்கிரம் வரேன்” என்றவன் பின் அவளை விழுங்குவது போல் பார்த்து “ஆமாம், நான் குட்மார்னிங் சொன்னனே நீ திரும்ப பதிலுக்கு சொல்ல மாட்டியா?” என்று அவன் ஹஸ்கி வாய்சில் கேட்க
அந்த குரல் அவளை என்னமோ செய்ய உடனே “குட்மார்னிங்” என்றாள் அவள் இயந்திரமாக
“ஏய், நான் இப்படியா சொன்னன்? நான் சொன்ன மாதிரி சொல்லுடி” என்றவன் முகம் திரும்பி தன் கண்ணத்தை அவளுக்குக் காட்ட
“ஐய்ய… சீ….. ஊத்த பல்லு! இன்னும் நான் பிரஷ் கூட பண்ணல. அதனால முடியாது” என்று அவள் சினுங்க
“அப்ப நீ கொடுக்க மாட்ட இல்லனு?” அவன் கேட்க
‘ம்ஊம்’ என்று இவள் தலை அசைக்க
“சரி போ ஊத்த பல்லுனு தான கண்ணத்துல கொடுக்க மாட்டனு சொல்ற? ஊத்த பல்லா இருந்தாலும் பரவாயில்லனு நான் உன் உதட்டுலே கொடுக்கப் போறேன்” என்று சொல்லி அவன் அவள் உதட்டருகே நெருங்க, தன் வலது கையால் அவன் வாயைப் பொத்தியவள்
“அச்சச்சோ.. என்ன அத்தான் இது காலையிலே வம்பு பண்றிங்க?” என்று பதறியவள் அவன் முகத்தைத் திருப்பி கண்ணத்தில் அவன் கேட்ட முத்திரையைப் பதித்தாள் மித்ரா.
தன் கண்களை மூடி அதைப் பெற்றுக் கொண்டவன் “ஏன் ஹாசினி, எதுக்கும் ஓர் சேப்டிக்கு ஆஃப்டர் ஷேவ் லோஷன போட்டுக்கவா?” என்று அவன் சிரிக்காமல் கேட்க
‘ஏன் இவர் இப்படி சொல்றார்னு?’ முதலில் குழம்பியவள் பின் அது எதற்குனு புரிந்தவள் உடனே தன் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து
‘யூ….. ராஸ்கல், நானா முத்தம் கொடுக்கறேனு சொன்னேன்? நீங்க தான கேட்டிங்க? இப்போ ஸ்மெல் வருதுனா சொல்றிங்க? உங்கள..” என்று சொன்னவள் கையில் இருந்த தலையணையால் அவனை அடிக்க முயல அதைச் செய்ய விடாமல் அவள் கைகள் இரண்டையும் பிடித்தவன் “ராட்க்ஷஷி என்ன அடிக்கிறதுனா உனக்கு அவ்வளவு பிடிக்குமாடி? அப்ப வெய்ட் பண்ணு. அத்தான் ஈவினிங் சீக்கிரம் வந்திடறன் நாம மீதி சண்டை அப்போ கண்டினியூ பண்ணலாம். இப்போ கிளம்பட்டுமாடி என் செல்ல பொண்டாட்டி?” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு விலகிச் சென்றான் தேவ்.
போகும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. “இப்படி ஒரு மனிதர் இந்த உலகத்தில் இருப்பாரா? அப்படியே இருந்தாலும் எனக்குக் கணவனாக கிடைத்து இருக்கிறாரா? அவ்வளவு அதிர்ஷ்ட சாலியா நான்?” என்று யோசித்தவள் பின் யோசிக்க யோசிக்கத் தலை வலிப்பதாக தோன்ற கண்களை இறுக்க மூடி படுத்துவிட்டாள் மித்ரா.
வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் அவள் அந்த நினைவில் இருந்து வெளி வர ஒரு தாயாக தந்தையாக சகோதரனாக உற்ற தோழனாக இப்படி அனைத்துமாக இருந்து துணை செய்தான் தேவ். இதை எல்லாவற்றையும் விட ஒரு கணவனாக அவளை தினம் தினம் சீண்டிக் கொண்டே இருந்தான். காலையில் யார் சீக்கிரம் எழுந்தாலும் அடுத்தவர்க்கு கண்ணத்தில் முத்தம் பதித்து குட்மார்னிங் சொல்லி எழுப்ப வேண்டும். ருத்ரா இல்லாத நேரத்தில் அவன் குளித்து விட்டு வந்தால் மித்ரா தான் தலை துவட்டி விட வேண்டும். நீங்கள் இருக்கும் உயரத்துக்கு என்னால் எம்ப முடியலைனு சொல்லி அவள் செய்ய மறுத்தால் அவளைத் தன் கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு இப்போ தலை துடைத்து விடுடி என்பான் அசராமல்.
டீயோ காபியோ முதலில் மித்ரா ஒரு சிப் குடித்த பிறகே தேவ் குடிப்பான். அதே மாதிரி இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் சுற்றி யார் இருந்தாலும் சரி தன் தட்டில் உள்ள உணவை முதலில் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்ட பிறகே அவன் சாப்பிட ஆரம்பிப்பான். எல்லா கணவன் மனைவிக்குள் நடக்கும் கெஞ்சல்கள் கொஞ்சல்கள்னு அனைத்தையும் இவன் செய்து அவளையும் செய்ய வைத்து மித்ராவைத் திக்கு முக்காட வைத்தான் தேவ்.
இப்படி தான் ஒரு நாள் ருத்ரா செய்த தவறுக்கு மித்ரா அவளைத் திட்ட அதில் கோபம் கொண்ட அந்த சின்ன வாண்டோ மித்ரா எப்போதும் தனக்கென்று வைத்திருக்கும் சாக்லேட் பாக்ஸில் கடைசி கடைசியாக இருந்த இரண்டு சாக்லேட்களையும் எடுத்து வைத்துக் கொள்ள, அதைப் பார்த்த மித்ராவோ
“ஏய் குட்டி வாண்டே அது என் பங்கு சாக்லேட்டி ஒழுங்கா கொடுத்துடு” என்று கேட்டு அவளைத் துரத்தி ஓட அந்த நேரம் ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த தேவ்விடம் “அப்பு அப்பு என்ன தூக்கு” என்று சொல்லிக் கொண்டு அவன் பின்னால் ஒளிந்து கொண்டு தூக்கச் சொல்ல என்ன ஏது என்று கேட்காமல் உடனே அவளைத் தூக்கிக் கொண்டான் தேவ்.
“ஏங்க அவ கையில வச்சி இருக்கறது என் சாக்லேட். அத தூக்கிட்டு வந்துட்டா. ஒழுங்கா அதை வாங்கிங் கொடுங்கனு” மித்ரா கோபப்பட இது ஒன்றும் புதிது அல்ல. தேவ் இதை அன்றாடம் பார்ப்பது தான். மித்ரா, ருத்ராவுக்காக எது வேண்டும்னாலும் விட்டுக் கொடுப்பா. ஆனா சாக்லேட், கேக், ஐஸ்கிரீம்னு தேவ் எதை வாங்கி வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டா. அதனால் தேவ்வில் இருந்து வேதா வரை எது வாங்கினாலும் இரண்டு வாங்கி வந்து தருவார்கள். இது மட்டுமா? அவன் வாங்கி வரும் ஃபாரின் சாக்லேட் எதுவாக இருந்தாலும் அந்த பாக்சை முதலில் உடைத்து உனக்கு இத்தனை எனக்கு இத்தனை என்று பங்கு பிரித்துக் கொள்வார்கள் தாயும் மகளும். பிரித்ததை அவர்களுக்கு என்று தனித் தனி டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு என்னுடையதை நீ எடுக்கக் கூடாது உன்னுடையதை நான் எடுக்க மாட்டேன்னு சமரச உடன்படிக்கையை வேறு.
அப்படி மித்ரா தனக்கென்று வைத்திருந்த சாக்லேட்டைத் தான் இப்போது ருத்ரா தன் தாயை அழவைக்க தூக்கிக் கொண்டது மட்டும் இல்லாமல் அவளிடம் இருந்து தப்பிக்கத் தன் தந்தையிடம் ஒளிந்து கொள்ள இப்போது அந்த சாக்லேட்டைத் தான் மித்ரா கேட்டுக் கொண்டிருந்தாள். மனைவியைப் பார்த்தவன் “இரு இரு நான் கேட்டு வாங்கி தரேன்” என்றவன் “குட்டிமா அம்மாக்கு சாக்லேட்டை கொடுத்துடுடா” என்று அவன் மகளிடம் கெஞ்ச
“அப்பு அம்மாக்கு பல் வலி. ஸோ சாக்லேட் சாப்பிடக் கூடாது. அதான் ஒண்ணு பாப்பாக்குனு” ஒன்றைப் பிரித்து அவள் வாயில் போட்டுக் கொண்டவள் மற்றொன்றைப் பிரித்து “இது அப்புக்கு” என்று சொல்லி அவன் வாயில் அதைத் திணிக்க குழந்தை என்பதால் அவள் செய்கையில் மறுக்க முடியாமல் அவன் அதை வாங்கிக்கொள்ள
அப்போது தான் அவனுக்கு மனைவியின் ஞாபகமே வந்து அவளைப் பரிதாபமாகப் பார்க்க, அவளோ குழந்தையைக் கண்டிக்காமல் அவளுடன் சேர்ந்து இவன் சாக்லேட் திண்பதைப் பார்த்தவள் முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு கட்டிலில் போய் அமர்ந்து விட, அதைப் பார்த்தவனோ
“இப்படி செய்யலாமா? பாரு அம்மாவ! அவங்க உன்ன எடுக்க வேண்டாம்னு சொல்லல. உன்ன நிறைய சாக்லேட் சாப்பிட வேண்டாம்னு தான் சொல்றாங்க. ஸோ இனிமே அப்படி செய்ய மாட்டனு மம்மீகிட்ட சொல்லு போனு” சொல்லி மகளைத் தேவ் கீழே இறக்கி விட
தன் தாயிடம் ஓடியவள் அவளின் மடி மீது அமர்ந்து அவள் கன்னம் வருடி “சாரி மம்மீ… இனிமே இப்படி செய்ய மாட்டன். நெக்ஸ்ட் டைம் பங்கு பிரிக்கும் போது த்ரீ சாக்லேட் நீங்க எடுத்துக்கங்கனு தன் தாய்க்கு வேண்டியதைக் கொடுத்து அந்த வாண்டு சமாதானத்திற்கு வழி செய்ய
அவள் பேசிய விதத்திலும் இப்போது எடுத்ததை விட மேல் கொண்டு ஒரு சாக்லேட் கொடுத்து தன்னை சமாளிக்கும் தன் மகளின் புத்திசாலித் தனத்தைப் பார்த்து பூரித்தவள் “சரிடா செல்லம், அம்மாக்கு நோ கோபம்” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் வைக்க
“அப்பாடா, சமாதானம் ஆகிட்டிங்களா குட்டிமா? நித்திலா அத்த காலேஜ்ஜில் இருந்து வந்ததில் இருந்து உன்ன தேடிட்டு இருக்காங்க. என்னனு போய் கேளு” என்று தன் மகளிடம் சொல்லி அவளைக் கீழே அனுப்பி விட்டு கதவைச் சாத்தி தாழ் போட்டு வந்தவன் கட்டிலில் மித்ராவின் பக்கம் அமர்ந்து அவளைத் தன் புறம் திருப்பி அவள் கன்னங்களைப் பிடித்துக் கொண்டு அவள் இதழ்களைத் தன் இதழ்களால் மூடினான் தேவ். அவன் இப்படி செய்ததில் முதலில் சற்று தடுமாறியவள் பிறகு தன்னைச் சமாளித்த நேரத்தில் முத்தத்துடன் சேர்த்து தன்னிடம் இருந்த சாக்லேட்டை அவளிடம் தள்ளி இருந்தான் வித்தைகள் பல தெரிந்த அந்த மாயக் கண்ணன்!
முதலில் என்னவோ ஏதோ என்று நினைத்தவள் பின் அது சாக்லேட் என்று அறிந்து அதை வாங்கிக் கொள்ள, திரும்ப அவளிடமிருந்து அவன் வாங்கிக் கொள்ள இப்படியே மாற்றி மாற்றி கொடுப்பதுவும் வாங்குவதுமாக இருக்க மொத்தத்தில் சாக்லேட் கறைந்து காணாமல் போன பின்னரும் ஒருவரையொருவர் விலகிக் கொள்ளவில்லை.
சிறந்த தொழில் அதிபருக்கான விருது கிடைத்திருக்க அதற்கான விழாவும் மும்பையில் நடக்க பிடிவாதத்துடன் தன் கூடவே மித்ராவும் வரவேண்டும்னு அழைத்துச் சென்று விட்டான் தேவ்.
மும்பையில் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து வந்தவன் நாளைய தினம் பங்ஷனுக்கு அவன் அவள் என்னவெல்லாம் போட வேண்டும் என்பதைச் சொல்லி தான் தேர்வு செய்து வைத்ததை எல்லாம் லேப்டாப்பில் காட்ட அவன் தேர்வு செய்ததோ நீண்ட ஃபிராக். அதுவும் இடுப்புக்குக் கீழே குடை மாதிரி நன்கு விரிந்து இருக்கும். அவன் தேர்வு செய்த மற்ற ஆடைகளும் அதே மாதிரியே இருக்க வேறு வழியின்றி அறை மனதாக ஒத்துக் கொண்டாள் மித்ரா.
மறுநாள் பிரபல ஸ்டார்களுக்கெல்லாம் அலங்கார நிபுணராக இருப்பவரை வரவழைத்தான். அவளை அலங்காரம் செய்ய முதலில் ஒரு ஃபிராக்கை கொடுத்துப் போடச் சொன்னவர் அந்த ஃபிராக்குக்கு அவள் கழுத்தில் உள்ள மஞ்சள் கயிறு பொருந்தாமல் இருக்க அதை அவர் கழற்றச் சொல்ல முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள் மித்ரா.
பின் அவர் தேவ்விடம் சொல்ல உள்ளே வந்த அவனோ “என்ன ஆச்சி ஹாசினி?” என்று கேட்க அந்த அலங்கார நிபுணர் அங்கு இல்லை என்பதை அறிந்து ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டவள் “அவங்க என் தாலிச் செயினைக் கழற்றச் சொல்றாங்க. என்னால முடியாது, முடியவே முடியாது அத்தான்! நான் சாகும் போது கூட இது என் கழுத்துலேயே இருக்கணும் அதுக்காகவே நான் சீக்கிரம் செத்துப் போய்டணும். மீறி இப்ப என்ன இதை கழற்ற சொன்னிங்கனா அப்பறம் நான் உயிரோடவே இருக்கமாட்டன்” என்று ஏதோ அவனும் கழற்ற சொல்லி விடுவானோ என்ற பயத்தில் அவள் உறுதியுடன் சொல்லி அழ
“ஏய் பொண்டாட்டி, என்னடி பேச்சு பேசற? உன்ன நான் அப்படி செய்ய சொல்லி கட்டாயப் படுத்துவனா? இந்த டிரஸ் தான சூட் ஆகல? வேற காலர் வெச்ச டிரஸ் போட்டா போகுது! ஸோ நீ ஒண்ணும் கயிற கழட்ட வேண்டாம். நான் அவங்க கிட்ட சொல்லிக்கறேன், போதுமா? அழாதடி அதுக்கு ஏன்டி இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற?” என்றவன் “போ போய் ரெடி ஆகு. பங்ஷனுக்கு டைம் ஆச்சினு” சொல்லி அவன் அங்கிருந்து சென்று விட
பிறகு வந்த அந்த அலங்கார நிபுணரும் எந்த தொந்தரவும் பண்ணாமல் அவளுக்கு வேறு ஒரு ஆடையை செலக்ட் செய்தார். அது போட் நெக் என்பதால் அழகாக கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறே தெரியாத அளவுக்குப் அவர் அவளுக்குப் பின் பண்ணி விட இதற்கும் அறை மனதாக சரி என்றாள் மித்ரா. அவன் தேர்ந்தெடுத்த ஆடையிலும் நகையிலும் கதையில் வரும் சின்ரெல்லாவாக அவள் ஜொலிக்க அதில் சொக்கித் தான் போனான் தேவ்.
ஆனால் மித்ராவுக்குத் தான் தன்னை பார்க்கும் போது வித்தியாசமாகத் தோன்றியது. பின்னே? தூக்கி அழகாக போட்ட கொண்டை, நெற்றியில் இரண்டு பக்கமும் முடிகள் மெலிதாக எடுத்து விடப்பட, உதட்டில் பளீர் என்று அடிக்கும் லிப்ஸ்டிக், வைர நகைகள் ஜொலிக்க நானா இது என்பது போல் இருந்தாள் மித்ரா.
அங்கு அனைவரும் அவர் அவர் துணைவியுடன் அல்ட்ரா மாடர்னாக வந்திருக்க அப்போது தான் தேவ் ஏன் இப்படிப் பட்ட ஆடையை தேர்வு செய்தான் என்பது புரிந்தது மித்ராவுக்கு. அங்கு தேவ் என்னென்ன துறையில் கால் பதித்து இருக்கான் அதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது அதை எல்லாம் அவன் எப்படி எல்லாம் கையாண்டு வெற்றி பெற்று இன்று வரை கால் பதித்து வந்துள்ளான் என்பதை எல்லாம் ஒரு கிளிப் ஷோவாக போட்டுக் காண்பித்துப் பின் அவனைக் கவுரவப் படுத்த மேடைக்கு அழைக்க
அதன் படி வந்தவனோ தன் வெற்றிக்குத் துணையாக இருந்த தொழிளாலர்களையும் நண்பர்களையும் நினைவு கூர்ந்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் அவன் நன்றி தெரிவிக்க பின் அந்த விருதைத் தன் கையில் வாங்கியவனோ “இப்போ நான் தமிழ்ல பேச விரும்பறேன். ஸோ நீங்க இங்லீஷ்லலையும் இந்தியிலும் டிரான்ஸ்லேட் பண்ண முடியுமா? ப்ளீஸ்..” என்று அந்த விழா அமைப்பாளரிடம் கேட்க அதன் படியே செய்யப் பட்டது.
“தொழில் சாம்ராஜ்யத்தில் நான் கால் ஊன்றி நிற்க எனக்கு முதல் படி அமைத்துக் கொடுத்தவர் என் தாத்தா. அதே மாதிரி அந்த படிகளை நான் சிரமம் இல்லாமல் நடக்கக் கத்துக் கொடுத்தவங்க என் அம்மா. இன்று அந்த படிகளை நடக்க மட்டும் இல்லாமல் எந்த சிரமமும் கஷ்டமும் வேறு யோசனை என்று எதுவும் என்னைக் குறுக்கிடாமல் அந்த படிகளைப் பல படிகளாகத் தாவி ஏறி என்னை இன்று இந்த உச்சிக்கு வர வைத்தவள் என் மனைவி! இன்னும் கொஞ்ச நாட்களில் என்னுடன் சேர்ந்து என் தொழில் சாம்ராஜ்யத்தை ஆளப் போகிறவள். ஸோ ஆல் கிரெடிட்ஸ் அண்ட் யுவர் விஷ்ஷஸ் ஆர் கோஸ் டூ மை வைஃப் மித்ரஹாசினி!”
என்றவன் அமர்ந்திருந்த அவளைப் பார்த்து “ஐ லவ் யூடி பொண்டாட்டி” என்றான் ஒற்றைக் கண் அடித்து ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு கொடுக்க. அவன் அப்படி சொல்வான் என்று எதிர் பார்க்காத அவளோ அவனையே விழி விரித்துப் பார்த்திருக்க அங்கிருந்த அனைவரும் அவளை மேடைக்கு வரும் படி அழைக்க அவள் கண்ணாலேயே அவனிடம் சம்மதம் கேட்க அவனும் எழுந்து வானு கண்ணாலேயே பதில் சொல்ல ஒரு அழகிய பார்பி டால் அசைந்து வருவது போல் மேடை ஏறி வந்தாள் மித்ரா. அவளுக்கும் பொக்கே கொடுத்து கவுரவப் படுத்திய பிறகு இனிதே முடிந்தது விழா.
வீட்டிற்கு வரும் வழியில் அந்த ஹோட்டலை விட்டு கார் சற்று தாண்டியவுடன் “ஏன் அப்படி சொன்னிங்க? நான் அப்படி எதுவுமே பண்ணலையே?! ஏன் என்ன இப்படி அதிகப்படியா சொன்னிங்கனு?” அவள் குரல் கம்ம கேட்க, வண்டியை ஓரமாக நிறுத்திய தேவ்
“நான் எதையும் அதிகப்படியா சொல்லலடி. உண்மைய தான் சொன்னன். நீ என் வாழ்வில் வந்ததால நான் இன்று எவ்வளவு ரிலாக்ஸ்டா இருக்கேனு தெரியுமா? முன்பை விட நான் இப்போ சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கேனா அதுக்கு நீ தான்டி காரணம் என் செல்ல பொண்டாட்டி” என்று மனம் நிறைந்து சொன்னவன் அவளை இழுத்து அணைத்துத் தன் மீசையால் அவள் காதில் குறுகுறுப்பு மூட்டியவன், “எல்லாத்தையும் விட எவ்வளவு அழகான தேவதை எனக்குக் கிடைச்சிருக்கா தெரியுமா? யூ ஆர் ஸோ கார்ஜியஸ் என்று அவள் காதில் கிசுகிசுத்தவன் “ரியலி ஐ லவ் யூ டி” என்று சொல்லி அவள் காது மடலில் ஒரு முத்தம் வைக்க உடல் சிலிர்த்துப் போனது மித்ராவுக்கு.
அதை உணர்ந்தவனோ அவளை இன்னும் இன்னும் தன்னுள் புதைக்க அவளும் ஒரு விதமான மயக்கத்திலேயே அவனுள் புதைந்து போக அதை அறிந்தவனோ அவளை முழுமையாக விலக்காமல் தன் மீது சாய்த்துக்கொண்டே வண்டி ஓட்டி வீடு வந்து சேர்ந்தவன் தான் முன்னே இறங்கி அவள் இறங்குவதற்குள்ளே அவள் புறமாக வந்து அவளைத் தன் கையில் ஏந்தியவன் தன் சட்டை பாக்கெட்டில் உள்ள ரிமோட்டை எடுத்து அவளைக் கதவைத் திறக்க சொல்ல ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் அவன் சொன்னதைச் செய்தாள் அவள்.
படுக்கையில் அவளைக் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்து கணவனாக அவளுள் அவன் புதைய முதலில் ஏதோ ஒரு மயக்கத்தில் அவளும் அவனுக்கு இசைந்து கொடுக்க அதில் அவனோ தடை இன்றி முன்னேற அதில் தன்னையும் மீறி மித்ராவின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்ட அவனை விலக்கித் தள்ளவும் முடியாமல் அவனுடன் சேர்ந்து இருக்கவும் முடியாமல் தவித்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் “ஐய்யோ….. இப்படி ஒரு வாழ்வு வாழறதுக்கு நான் செத்துப் போய் இருக்கலாமே!” என்று அவள் வாய் விட்டு அலற, அதைக் கேட்டு தன் மயக்கத்தில் இருந்து தெளிந்தான் தேவ்.
“என்னடி சொன்னனு?” அவன் அவளை உளுக்க அப்போது தான் தன் மனதில் நினைத்ததை வாய் விட்டு சொல்லி விட்டதை உணர்ந்தவள் “நீங்க தொட்டதுக்காக நான் அப்படி சொல்லலங்க. என்னால முடியலையே! எனக்கு மட்டும் ஏன் இப்படி? நான் அப்படி என்ன பாவம் செய்தன்? ஐய்யோ…. அம்மா என்னால முடியலையே! வாழவும் முடியாம விலகவும் முடியாம இப்படி ஒரு நரகம் எதுக்கு? என்னோட சேர்ந்து நீங்க ஏன் இந்த நரகத்துல இருக்கணும்? நான் உங்களுக்கு வேணாம் தேவ், வேண்டவே வேண்டாம்! ஐய்யோ…. என்னால முடியலையே நான் செத்துப் போய்ட வா செத்துப் போய்ட வா?” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட
முதலில் அவள் சொன்ன செத்து விடுவேன் என்ற வார்த்தைக்குக் கோபப் பட்டவன் இப்போதும் அவள் திரும்பத் திரும்ப அதே வார்த்தையை சொல்லும் போது கோபப் பட முடியாமல் அவள் நிலைமையை யோசித்தவன் “ஹாசினி இங்க பாருடா, ஏன் இப்படி எல்லாம் பேசற? இப்போ என்ன நடந்திடுச்சி? உனக்குப் பிடிக்கல, அவ்வளவு தான? சரி உனக்குப் பிடிக்காதது எதையும் இனி நான் செய்ய மாட்டன். இட்ஸ் பிராமிஸ்... என்று உறுதியளித்தவன் அதுக்காக அத்தான விட்டுப் போவேன்னு சொல்லுவியானு?” அவளை வாரி எடுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டு அவள் முதுகைத் தடவி தலையைக் கோதி விட
“நான் உங்களுக்கு வேண்டாம். எனக்கு ஏதோ நான் அசிங்கமாகிட்டனு தோனுது. என்னால நீங்க ஏன் இப்படி இருக்கணும்? நீங்க உங்க வாழ்க்கையப் பாருங்க” என்று அவள் கேவிக் கொண்டே சொல்ல “அடியேய் பைத்தியக்காரி.. எனக்கு வர்ற கோபத்துக்கு எங்க உன்ன அடிச்சிக் காயப்படுத்திடுவேனோனு தோனுது. ஏன்டி அப்படி சொல்ற? நீ அசிங்கமாகிட்டன்ற அளவுக்கு உன் வாழ்க்கையில் அப்படி ஒண்ணும் நடக்கல சொன்னா கேளு. நீ என்ன புரிஞ்சிக்கிட்டது இவ்வளவு தானாடி? நீங்க உங்க வாழ்க்கையப் பார்த்துகிட்டுப் போங்கன்னு எவ்வளவு சர்வசாதாரணமா சொல்ற?! நான் வேற நீ வேறயா?
ஒரு ஆண் மனைவிய இழந்தாலோ இல்ல திருமணத்திற்கு முன்பு அவன் அப்படி இப்படி இருந்தாலும் வேறு ஓர் வாழ்வில் இணைந்து வாழும் போது ஒரு பொண்ணா நீங்க மட்டும் ஏன் அசிங்கம் அவமானம்னு கூனிக் குறுகி ஏன் வெந்து சாகரிங்க? இப்படி உங்களையே ஏன் நீங்க அழிச்சிக்கிறிங்க?” என்று அவளிடம் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்காக வாதிட்டவன்
“இப்போது மற்றவர்களுக்காகப் பேசி என்ன பயன்? முதலில் இவளைத் தான் மாற்ற வேண்டும்’ என்று நினைத்தவன் “கணவன் மனைவினா தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையாடி? ஏன் அப்படி ஒண்ணு இல்லாமல் நம்மால் வாழ முடியாதா?” என்று அவன் கேட்க
“அதுவும் வாழ்வில் ஓர் அங்கம் தானே?” என்றாள் மித்ரா.
“இப்போ நீ சொன்னதிலேயே உனக்கான பதில் இருக்கு ஹாசினி. அது ஒரு அங்கம் மட்டும் தான்னு நீயே சொல்லிட்ட. அந்த ஒரு விஷயத்திற்காக நம்மிடம் உள்ள அன்பு பாசம் காதல் இன்னும் இருக்கிற எல்லாத்தையும் இழக்க சொல்றியா? நெவர்! என்னால் முடியாது. இதெல்லாம் மட்டும் இல்லாமல் என் மனைவியான உன்னையும் இழந்தா தான் அந்த தாம்பத்ய வாழ்வு எனக்குக் கிடைக்கும்னா அப்படிப் பட்ட வாழ்வே எனக்கு வேண்டாம். எனக்கு நீ மட்டும் போதும்டி. வேற எதுவும் வேணாம்டி ” என்று கூறி அவளை அவன் இறுக்கி அணைக்க மித்ராவால் அவனுக்குப் பதிலாக வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாததால் மனதுக்குள்ளேயே ரத்தக் கண்ணீர் வடித்தாள்.
இருவரும் திரும்பவும் கோயம்புத்தூருக்கு வந்து விட வழக்கம் போல் அவன் கொஞ்சல் கெஞ்சல் என்று சாதாரணமாக இருக்க, அவன் இருக்கும் போது அவனுடன் சிரித்துப் பேசினாலும் அவன் இல்லாத போது ஏதோ யோசனையுடனேயே இருந்தாள் மித்ரா.

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 29
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.