Home
Forums
New posts
Search forums
Yuvanika's Novels
தத்தை நெஞ்சே.... தித்தித்ததா...
தவமின்றி கிடைத்த வரமே!!!
நிஜத்தில் நானடி கண்மணியே..
நெஞ்சமெல்லாம் உன் ஓவியம்
பூங்காற்றே என்னை தீண்டாயோ...
ஆதி அந்தமில்லா காதல்...
உயிரே.. உயிரே.. விலகாதே..
விழியில் மலர்ந்த உயிரே..
காதல் சொல்வாயோ பொன்னாரமே..
நீயின்றி நானில்லை சகியே...
அமிழ்தென தகிக்கும் தழலே
ஜதி சொல்லிய வேதங்கள்...
இதழ் திறவாய் காரிகையே...
நின்னையே தஞ்சமென வந்தவள்(ன்)
நிதமும் உனையே நினைக்கிறேன்...
துயிலெழுவாயோ கலாப மயிலே...
என் பாலைவனத்துப் பூந்தளிரே...
எந்தன் மெளன தாரகையே....
என்னிடம் வா அன்பே....
காதலாக வந்த கவிதையே
எனை மறந்தாயோ மாருதமே...
நெருங்கி வா தென்றலே...
What's new
New posts
New profile posts
Latest activity
Members
Current visitors
New profile posts
Search profile posts
Log in
Register
What's new
Search
Search
Search titles only
By:
New posts
Search forums
Menu
Log in
Register
Install the app
Install
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
Yuvanika's Completed Novels
உன்னுள் என்னைக் காண்கிறேன்...
உன்னுள் என்னைக் காண்கிறேன் 31
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser

Reply to thread
Message

அத்தியாயம் - 31

டிரைவரிடம் கார் வேண்டாம்னு சொல்லி ஆட்டோ கூட்டி வரச் சொன்னவள், முன்பு இந்த வீட்டை விட்டுப் போகும்போது இருந்த வீம்போ பிடிவாதமோ அலட்சியமோ இப்படி எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் மனம் முழுக்கப் பாரத்தைச் சுமந்து கொண்டு முகமோ சோர்ந்து போய் இருக்க ஏதோ பிடிக்காத ஒரு செயலைச் செய்ய மனமே இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்வது போல் தான் இப்போது மித்ரா இந்த செயலைச் செய்தாள்.

சென்னை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் எப்போது ருத்ரா தூங்குவாள்னு காத்திருந்தது போல் அவள் கண்களில் தேக்கி வைத்திருந்த அணைக்கட்டு நீர் வெள்ளம் உடைத்து பெருக்கெடுத்து ஓடுவது போல் அவள் கண்ணிலும் கண்ணீர் கரை புரண்டது. அவளால் அதை மட்டும் தானே செய்ய முடியும்?! தன்னை இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்திய விதியை நினைத்து ஆத்திரம் வந்தது. அந்த விதியை நினைத்துக் கோழை போல் ஓடி ஒளியும் தன்னை நினைத்தே வெறுப்பு வந்தது. இதை எல்லாத்தையும் விட இனி என் தேவ்வைப் பார்க்கவே முடியாது என்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சென்னைக்கு வந்து இறங்கியவுடன் அங்கு அவளுக்குத் தெரிந்த ஓரே இடமான முன்பு தான் தங்கியிருந்த காப்பகத்துக்கே சென்றாள் மித்ரா. எங்கு ஏது எப்படி இருக்கிறாள்னு இதுவரை மித்ராவைப் பற்றி தெரியாமல் இருக்க அவளோ கழுத்தில் தாலி கயிறுடன் காலில் மெட்டி, நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் மட்டும் இல்லாமல் ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து நிற்க அவளைக் கண்ணில் கேள்வியுடன் காப்பக நிர்வாகி வசந்தி பார்க்க

அவர் கேள்விக்கான பார்வையைத் தவிர்த்தவள் “என்னை எதுவும் இப்போ கேட்காதிங்ககா. நேரம் வரும்போது பிறகு நானே எல்லாம் சொல்றன். ஆனா இப்போ நானும் என் பொண்ணும் இங்க தங்க மட்டும் இடம் கொடுங்ககா ப்ளீஸ்னு!” அழுகையை அடக்கிய குரலில் இவள் கெஞ்ச, சரினு ஒத்துக் கொண்டவர் முன்பு அவள் தங்கியிருந்த அறையையே கொடுக்க அதையே ஏற்றுக் கொண்டாள் மித்ரா.

ஆனால் அங்கு தங்கினப் பிறகு தான் அவளின் சோதனைக் காலமே ஆரம்பமானது. அவள் தனியாக இருக்கும் போது அவளுக்கு நிம்மதியாக சொர்க்கமாகத் தெரிந்த இடம். அதே ருத்ராவோடு இருக்கும் போது நரகமாக இருந்தது. சிமெண்ட் ஷீட் போட்ட காற்று வசதி கூட இல்லாத அந்தச் சின்ன ரூமில் சற்று வேகமாகக் கூட ஓடாத மின்விசிறி. கீழே பாய் விரித்து ருத்ராவைத் தன் மடியில் படுக்க வைத்திருந்தாள் மித்ரா.

அங்கு வந்ததிலிருந்து ருத்ரா எதுவும் சாப்பிடவில்லை. தேவ் வீட்டில் பால் பழம்னு விதவிதமான சாப்பிட்ட பிள்ளை இங்கு ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. மதியம் செய்த சாதமும் குழம்பும் இருக்க, அதிலும் அரிசி சற்றுப் பெரியதாக இருக்கக் குழந்தையால் விழுங்க முடியவில்லை. ‘சரி வெளியே கடையிலிருந்து எதாவது வாங்கிட்டு வந்து தரலாம் என்றால் வசந்தி அக்கா எதாவது சொல்லுவாங்களோ என்ற பயம்! எல்லார் குழந்தையும் சமம்னு நினைப்பவர் அவர். அதனால் நாளைக்கு குழந்தையை வெளியே அழைத்துப் போய் எதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு’ முடிவு எடுத்தாள் மித்ரா.

பசியாலும் புழுக்கத்தாலும் கொசுக் கடியாலும் ருத்ரா தூங்கவேயில்லை. இதை எல்லாம் விட ‘அப்பு எங்கமானு?’ கேட்டுக் கேட்டுப் பார்த்துட்டு உடல் அசதியில் தன்னை மீறி தூங்கிப் போனாள் குழந்தை.

குழந்தைக்கு விசிறிக் கொண்டிருந்த மித்ராவுக்கோ இதையெல்லாம் பார்க்கும் போது நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருந்தது. ‘தன்னுடைய சுயநலத்திற்காக ருத்ரா வோட எதிர்காலத்தையும் வளமான வாழ்வையும் கெடுக்கிறோமோனு?’ நினைத்தாள். ‘இப்போதே தேவ்வை இப்படி தேடுறாளே? இன்னும் வரும் நாட்களில் எப்படிச் சமாளிக்கப் போறோமோனு?’ கலங்கியவள் ‘என்னாலயே தேவ்வை மறக்க முடியலையே! பிறந்ததில் இருந்து அவர் கையிலேயே வளர்ந்த குழந்தையால் எப்படி மறக்க முடியும்?’ என்ற எண்ணம் தான் தோன்றியது.

‘இந்நேரம் அந்த லெட்டரப் பார்த்து இருப்பார் இல்ல?! என்ன நினைச்சி இருப்பார்? கோபப் பட்டு இருப்பாரோ?! நான் எங்க போய் இருப்பனு தேடி இருப்பாரோ?! ஒருவேளை என்னைக் கண்டுபிடித்து இங்கயே வருவாரோ? என் தேவ் சாப்டு கூட இருக்க மாட்டார்! நிம்மதியா தூங்கக் கூட மாட்டார்! அவர் உலகமே நானும் ருத்ராவும் தான்! அப்படி இருக்கும் போது அவர் எப்படி அங்க நிம்மதியா இருப்பார்?’

அப்படி அவள் நினைக்கும் போது தான் அவளுக்கே ஒன்று உறைத்தது. ‘தேவ் எப்போது என் தேவ் ஆனார்?’ என்று! ‘ஆமாம், என் தேவ் தான்! அவர் என் கணவர்! இந்தப் பிறவி இல்லை இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் தான் என் கணவர்! ஆனால் அப்போதாவது அவருக்கு ஏற்ற மனைவியாக நான் இருக்க வேண்டும்னு’ வேண்டிக் கொண்டாள் மித்ரா. இரவு முழுக்க இதே யோசனையில் இருந்ததாலும் அழுததாலும் மித்ரா தூங்கவேயில்லை.

மறுநாள் குழந்தையை வெளியே அழைத்துப் போய் அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து நல்ல மாதிரியாகப் பார்த்துக் கொண்டாலும் ருத்ராவோ, ‘அப்பு எங்க?’ என்ற பாட்டை நிறுத்தவேயில்லை. இப்படிப் பட்ட குழந்தையைக் காப்பகத்திலே விட்டுட்டு வேலைக்குப் போக நினைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நொந்து போனாள். அன்றும் இரவு முழுக்க ருத்ரா தூங்கவேயில்லை. தன்னை மீறி உடல் அசதியில் தூங்கும் போது கூட அப்பு எங்க என்றே பிதற்றிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் எழுந்ததிலிருந்து ருத்ரா மித்ராவிடம் பேசவில்லை. அவள் கொடுத்த பாலைக் குடிக்காமல் ஏன் பச்சைத் தண்ணி கூட குடிக்காமல் அவள் பேச்சை மதிக்காமல் தோட்டத்திலிருந்த ஓர் கல்லில் அமர்ந்து கொள்ள. எவ்வளவு சமாதானப் படுத்தியும் குழந்தை உள்ளே வரவில்லை. அவளை விடாப் பிடியாக உள்ளே தூக்கிச் சென்றதில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். ‘சரி, எப்படி இருந்தாலும் பிறகு உள்ளே தான வந்தாகணும்னு!’ நினைத்து மித்ரா விட்டுவிட, விடாப் பிடியாக உட்கார்ந்து கொண்டு தேவ்வைக் கேட்டு சத்தியாகிரகம் செய்தாள் ருத்ரா.

வெயிலும் ஏற ஏற அவள் பிடிவாதத்தைப் பார்த்த மித்ரா, “இங்க பாரு ருத்ரா, இப்படி எல்லாம் செய்தினா அம்மா அடி பின்னிடுவன்! ஒழுங்கா அம்மா பேச்சக் கேட்டு உள்ள வா” என்று மிரட்ட

இதற்கு எல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல் கண்ணத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் ருத்ரா. அதைப் பார்த்த மித்ராவுக்கோ கோபம் தலைக்கு ஏற, “நீ இப்படி எல்லாம் செய்தா உன் அப்பு வந்துடுவார்னு நினைச்சியா? இனிமே உன் அப்பு வர மாட்டார், நாம ரெண்டு பேர் மட்டும் தான் தனியா இருக்கணும்னு!” கத்த

அதைக் கேட்ட ருத்ராவோ கண்கள் கலங்க உதடு துடிக்க “யூ ஆர் பேட் மம்மீ! நீ எனக்கு வேணாம், எனக்கு அப்பு தான் வேணும்! எனக்கு அப்பு தான் வேணும்!” என்று அழ, மித்ராவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

பின் குழந்தையிடம் நெருங்கியவள் அவளுக்குச் சமமாகத் தரையில் மண்டியிட்டு அமர்ந்து, “இங்க பாரு குட்டி, அப்புக்கு வேலை இருக்காம்! அதனால் தான் என்கிட்ட உன்னப் பார்த்துக்கச் சொன்னார்னு” அவளை சமாதானப் படுத்த அதைக் கேட்ட ருத்ரா “அப்புக்கு அந்த வேலை வேணானு சொல்லு! அப்புக்கு பாப்பா தான் வேணும், பாப்பாக்கும் அப்பு தான் வேணும்! எனக்கு அப்பு வேணும். அப்பு கிட்ட என்ன கூட்டிப் போ மம்மீ. அப்புவ இப்போ வரச் சொல்லுனு” அழுதவள் “ஏன் மம்மீ, அப்புக்கு பாப்பாவ பிடிக்கலையானு?” கேட்க நொருங்கிப் போனாள் மித்ரா. “இல்லடா, இல்லடா! உன்ன ரொம்பப் பிடிக்கும்டா அப்புக்கு! இன்னும் சொல்லப் போனா இந்த உலகத்திலே உன்ன மட்டும் தான்டா அவருக்குப் பிடிக்கும்னு” சொல்லி அவளை அணைத்து சமாதானப் படுத்தினாள் மித்ரா.

இதையெல்லாம் அங்கிருந்து பார்த்த வசந்தி மித்ராவை நெருங்கி அவள் தோள் மீது கை வைத்து “குழந்தைய ரூமுக்குக் கூட்டிப் போ மித்ரா. சாப்ட பிறகு எதுவா இருந்தாலும் பேசலாம்னு” சொல்ல

“அப்பு வந்தா தான் நான் உள்ள போவேன்” என்றாள் ருத்ரா.

“அப்பு இங்க வரமாட்டார்டா. நீங்க ரெண்டு பேரும் தான் அப்பு கிட்ட போகணும். இப்போ நான் சொல்ற மாதிரி செய்திங்கனா நானே உங்கள அப்பு கிட்ட அனுப்பி வைப்பனாம்! குட்டி செல்லம் நல்லவங்கதான? இந்த ஆன்ட்டி சொன்னா கேட்பிங்க தானே?” என்று வசந்தி ருத்ராவைச் சமாதானப் படுத்த

“அக்கா…” என்று ஏதோ சொல்ல வந்த மித்ராவை தடுத்து

“குழந்தைய முதல்ல ரூமுக்குக் கூட்டிப் போய் சாப்பிட எதாவது கொடுத்துத் தூங்க வை மித்ரா. அவ ரொம்ப சோர்ந்து போய் இருக்கா. பிறகு என் ரூமுக்கு வா, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்னு” கட்டளையிடும் தொனியில் பேசியவர் பின் அங்கிருந்து சென்று விட

ருத்ராவுக்கு இட்லி கொடுத்து அவள் தூங்கினப் பிறகு அவளைப் பார்த்துக்கச் சொல்லி ஆயம்மாவை துணைக்கு வைத்து விட்டு வசந்தி ரூமுக்குச் சென்றவள் அவர் கேட்கும் முன்பே இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்வில் நடந்தது அனைத்தும் சொல்லி முடிக்க.

“உன்ன புத்திசாலினு நினைச்சன் மித்ரா. இவ்வளவு பெரிய முட்டாளா மட்டும் இல்லாமல் எவ்வளவு பெரிய சுயநலவாதியா இருக்க நீ?! ச்சே…. உன்னைப் போய் என் பொண்ணா நினைச்சனே!” - வசந்தி

அவர் சொன்ன வார்த்தையில் “அக்கா!” என்று அதிர்ந்தவளைப் பார்த்து “ஆமாம்.. நீ சுயநலவாதி தான்! உன் குடும்பத்தோட மானத்தக் காப்பாற்றி உன்னத் தன் நெஞ்சில வைத்துப் பார்த்து கிட்ட தேவ்வுக்கு நீ குடுத்தது என்ன? அசிங்கம், அவமானம், இந்த சமுகத்தில் தலை குனிவையும் தான? இதை எல்லாம் விட ஒரு தகப்பன் கிட்டயிருந்து அவர் மகளைப் பிரிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு? அவர் ஒண்ணும் ருத்ராவுக்கு உண்மையான அப்பா இல்லனு சொல்லவரியா?

குழந்தை பிறந்த மறு நிமிடமே அந்தக் குழந்தையோட முகத்தைப் கூடப் பார்க்காமத் தன்னுடைய சந்தோஷம் தான் முக்கியம்னு போனவ பவித்ரா! ஆனா தேவ், இனி தன் உலகமே ருத்ராதான்னு அவளைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கிட்டார். அப்ப அவர் தான ருத்ராவோட அப்பா? குழந்தைகள பெத்தா மட்டும் போதாது, அந்தக் குழந்தைகள எப்படி வளர்க்கிறோம் என்றதுல தான் இருக்கு தாய் தந்தை என்ற அங்கீகாரம்.

கொஞ்ச நாள் பழகின உன்னாலையே ருத்ராவ விட முடியலையே? பிறந்ததிலிருந்து ருத்ராவத் தன் கையில வச்சி வளர்த்த தேவ் அங்க எப்படி இருப்பார்? அன்னைக்கு நீ செய்த தப்பையே நினைச்சி இன்று தேவ்வுடைய வாழ்வையே அழிச்சது மட்டும் இல்லாமல் நாளைக்கு ருத்ராவோட வாழ்வையும் அழிக்கப் போறியே, அது உனக்குத் தெரியல? இது மட்டும் இல்லாமல் இன்னும் எத்தன பேர் வாழ்க்கைய உன் பிடிவாதத்தால அழிக்கப் போற? இன்னைக்கு அந்தப் பிஞ்சு ஒரு கேள்வி கேட்டுச்சே, என் அப்பாக்கு என்னப் பிடிக்காதானு? அதோட அர்த்தம் தெரியுமா உனக்கு?

இந்த வயசுலையே என் அப்பாக்கு என்னப் பிடிக்காது என்ற எண்ணத்தை நீ அவ ஆழ் மனசுல பதிய வைக்கிற மித்ரா! நீ நாளைக்குத் தெளிந்து இதைச் சீர் செய்யணும்னு நீயே நினைச்சாலும் உன்னால் செய்ய முடியாது. அதிலும் ருத்ராவோட பிறப்பு பற்றி நாளைக்கு அவளுக்குத் தெரிய வரும் போது, இதனால தான் நம்ப அப்பா நம்மள ஒதுக்கிட்டாருனு நினைப்பா. அப்போ உண்மையாவே தேவ் ருத்ரா மேல வச்ச பாசத்துக்கு என்ன மதிப்பு இருக்கு?

அன்று சுயநலமா முதுகெலும்பே இல்லாத கோழையா ஓடி ஒளிஞ்சி உனக்கு ஷியாம் செய்த நம்பிக்கை துரோகத்தைத் தான் இன்று தேவ்வுக்கு நீ செய்து இருக்க! இனி என் வாழ்வில் எல்லாமே நீ தான் என்ற நம்பிக்கைனால தான அவர் வாழ்வில் நடந்த அனைத்தையும் உன் கிட்ட சொன்னார்? அப்படிப் பட்ட அவர ஏமாற்றிட்டு ஓடி ஒளியறியே, இப்போ அவர் மனசு என்ன பாடுபடும்னு நான் உனக்குச் சொல்லித் தெரிய வேணாம்.

ஏன்னா அந்த வேதனைய நீயும் அனுபவிச்சவனு!” அவர் சொல்லச் சொல்ல சாட்டையால் அடி வாங்கியது போல் நின்றிருந்தாள் மித்ரா. “அதனால பழசை எல்லாம் மறந்துட்டு இனியாவது உன் வாழ்க்கையை நீ வாழ நினை! இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. நாளைக்கே நீ உன் வீட்டுக்குப் போற வழியப் பாரு” என்று அவர் முடிக்கும் நேரம்

ருத்ராவைப் பார்த்துக்கச் சொல்லி விட்டு வந்த ஆயம்மா குழந்தைக்கு ஜுரத்தில் உடம்பு அனலாக கொதிப்பதாகச் சொல்ல உடனே டாக்டரை அழைத்து என்ன ஏது என்று பார்த்து டாக்டர் போன பிறகு மித்ராவிடம் திரும்பியவர் “நாளைக்கு குழந்தைக்கு எதாவது ஆச்சினா என்னால தேவ்வுக்குப் பதில் சொல்ல முடியாது மித்ரா. அதனால அவர் போன் நம்பர் கொடுனு” வசந்தி கேட்க

“இல்லக்கா இல்ல.. அவர் இங்கு வர வேண்டாம்! நானா தான் அந்த வீட்டை விட்டு வந்தன். அதனால நானா அந்த வீட்டுக்குப் போகறது தான் சரி. நாளைக்குக் காலையிலேயே நான் கிளம்பறன் அக்கானு” அவள் கண்ணீருடன் சொல்லப் பார்த்து இதற்குப் பிறகாது புத்திசாலித் தனமா நடந்துக்கோ” என்று சொல்லி அவர் சென்று விட

ஜுர மயக்கத்தில் “அப்பு அப்பு” என்று அனத்திக் கொண்டிருந்த மகளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்தவள் “நாளைக்குக் கூட்டிப் போறன்டா அம்மா. பாப்பாக்கு உடம்பு நல்லா ஆன உடனே நாளைக்கு அப்பு கிட்ட போகலாம். இனிமே பாப்பா அப்பு கூடத் தான் இருப்பானு” சொல்லி மகள் தலையைக் கோதி விட

அவள் தூக்கி மடியில் படுக்க வைத்ததில் தூக்கம் கலைந்த ருத்ரா, “பாப்பாக்கு அப்பு அம்மா ரெண்டு பேரும் வேணும்” எங்கே தாய் தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற பயத்தில் சொல்ல ருத்ராவைத் தூக்கித் தன் மார் மீது சாய்த்துக் கட்டி அணைத்தவள் “அம்மாவும் தான்டா! இனிமே அம்மா உன்னையும் அப்புவையும் விட்டு எங்கேயும் போக மாட்டேன்டானு” கண்ணீருடன் கூறியவள் அவளைத் தூங்க வைத்துப் பிறகு தானும் தூங்க இரவு பதினொன்றரை மணிக்கு அறைக் கதவை வசந்தி தட்டவும் ‘இந்த நேரத்தில் என்னவாக இருக்கும்?’ என்ற குழப்பத்தில் கதவைத் திறக்க வெளியே அவருடன் சேர்ந்து நின்றிருந்தான் கௌதம்.

அவளைப் பார்த்ததும் “மித்ரா, குழந்தையத் தூக்கிட்டு இப்பவே நீ கிளம்புனு” வசந்தி சொல்ல அவர் சொன்ன விதத்திலே என்னமோ ஏதோனு கலங்கியவள் உடனே தூங்கும் ருத்ராவைத் தூக்கித் தோள் மேல் போட்டுக்கொண்டு பையுடன் கிளம்பி விட,

கார் வரை வந்த வசந்தி “பாத்து பத்திரமா போய்ட்டு வா மித்ரா. போனவுடனே அங்க என்ன நிலவரம்னு எனக்குப் போன் பண்ணி சொல்லு” என்று சொல்லி அவளை வழி அனுப்ப வாய் திறந்து பேச முடியாத நிலைமையில் இருந்தவள் வெறுமனே சரினு தலையாட்டி விட்டு காரில் ஏற காரை ஸ்டார்ட் பண்ண கௌதமிடம்

“யாருக்கு என்ன ஆச்சி கௌதம்?” என்று கலக்கத்துடனே கேட்டாள் மித்ரா.

“……..” அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க

‘தாத்தாவுக்குத் தான் ஏதோ ஆகி விட்டதோ?!’ என்ற எண்ணத்தில் “இப்போ தாத்தா எப்படி இருக்கார்னு?” குரல் நடுங்க அவள் கேட்க

“தாத்தாவுக்கு ஒண்ணும் இல்ல அண்ணி. அண்ணனுக்கு தான்…..” என்று அவன் இழுக்க

“அத்தானுக்கு என்ன ஆச்சி தம்பி?” மித்ரா பதற

“ஆக்ஸிடென்ட் அண்ணி” - கௌதம்

“ஐயோ….. நான் போனா அவர் நல்லா இருப்பாருனு இல்ல நினைச்சன்?! கடைசில இப்படி ஆகிடுச்சே! அவருக்கு இப்படி நடக்க நானே காரணம் ஆகிட்டனே! எப்போ என்னைக்கு எப்படி நடந்துச்சினு?” அவள் கதற

“அண்ணி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. பாப்பா முழிச்சி உங்களப் பார்க்கறா பாருங்க. அப்பறம் குழந்தையும் அழப் போறா! இன்னைக்குத் தான் நடந்துச்சி அண்ணி. ஈவினிங் முக்கியமான கிளைன்ட் ஒருத்தரப் பார்த்துட்டு அவர் கூட டின்னர் முடிச்சிட்டுத் திரும்பும் போது நைட் ஒன்பது மணிக்கு நடந்திருக்கு. ஸோ அம்மா எனக்குப் போன் பண்ணி உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அதான் வந்தன்” என்றான் கௌதம்.

அவன் அம்மா என்று சொன்னது தேவ்வின் தாய் விசாலத்தை. அவள் இருந்த நிலைமையில் ‘அது யார்? நான் இங்கு இருப்பது அவருக்கு எப்படித் தெரியும்?’ என்று எதையும் அவனிடம் கேட்கவில்லை.

இவர்கள் கோயம்புத்தூர் போய்ச் சேர்வதற்குள் இந்த இரண்டு தினங்களில் அங்கு தேவ் வீட்டில் நடந்ததை பார்ப்போம்

மித்ரா ருத்ராவுடன் வீட்டை விட்டுப் போய் விட்டாள் என்று அறிந்த பிறகு கோபத்தில் ஆபிஸ்க்கு வந்த தேவ் தன் வேலைகளில் மூழ்கி விட சற்று நேரத்திற்கு எல்லாம் அவன் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவனோ அதில் வேதா என்று தெரிய

“சொல்லுங்க சித்தி” என்றான் தேவ்.

“அப்பு ருத்ராவையும் மித்ராவையும் காணோம்பா! எப்போதுல இருந்து காணோம்னு தெரியல. நான் வீடு முழுக்கத் தேடிப் பார்த்துட்டன் காணோம்” என்று அவன் எடுத்த உடனே பதட்டத்தோடு சொல்ல சித்தியிடம் தெரியப் படுத்தாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்தவன்

“சித்தி, ஃபர்ஸ்ட் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நான் இப்போ சொல்ற விஷயத்தக் கேட்டு டென்ஷன் ஆக வேண்டாம். எனக்கும் மித்ராவுக்கும் சண்ட. அதுல அவளக் கொஞ்சம் திட்டிட்டன். அதனால என் கிட்ட கோச்சிகிட்டு வீட்டை விட்டுப் போய்ட்டா. கோபத்துல குட்டிமாவையும் கூட்டிப் போய்ட்டா. வந்துடுவா சித்தி, நீங்க பயப்படாதிங்க” என்று அவருக்குப் பொய்யாக ஆறுதல் சொன்னவன் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போனை வைத்து விட, வேதாவுக்கோ பயங்கர கோபம் வந்தது மித்ரா மேல்.

‘என்ன பொண்ணு இவ? எப்போ பாரு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போகறது?!’ என்று நினைத்து. இரவு பதினொன்றரை மணிக்கு அவன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் அவன் ரூமுக்கு வந்தார் வேதா.

“என்ன அப்பு, மித்ரா தாத்தா இங்க இருக்கார். மித்ரா உன் கிட்ட கோச்சிக்கிகிட்டு வீட்டை விட்டுப் போய்ட்டானு சொல்ற! அப்போ அவ எங்க போய் இருப்பா, அவங்க பெரியப்பா வீட்டுக்கானு?” யோசித்துக் கேட்க

“அவ எங்க போய் இருக்கானு எனக்குத் தெரியாது சித்தி” - தேவ்

“இது என்ன பதில் தேவ்? மித்ரா தனியா போகல, கூட ருத்ராவக் கூட்டிட்டுப் போய் இருக்கா! அந்தக் குழந்தை நம்மள எல்லாம் விட்டுட்டு எப்படி இருக்கும்? முதல்ல நீ எப்படிபா ருத்ராவ விட்டு இருப்ப? ஐந்து வயதுக் குழந்தைய வச்சிகிட்டு மித்ராவால மட்டும் எப்படித் தனியா சமாளிக்க முடியும்? நீ ஒண்ணும் பேசிக் கூட்டிட்டு வர வேண்டாம். அவங்க எங்கனு மட்டும் சொல்லு நான் போய்க் கூட்டிட்டு வரேன்” - வேதா

“இல்ல சித்தி, நிஜமாவே அவ எங்க இருக்கானு எனக்குத் தெரியாது. அவ தான போனா? அவளே வரட்டும்! நிச்சயம் அவ வந்திடுவா சித்தி. ருத்ராவுக்கு அவளும் தான அம்மா? அப்ப நம்மளப் பிரிஞ்சி அவ படற கஷ்டத்த அவளும் பார்த்துட்டு தான இருப்பா? ஸோ இதை இதோட விட்டுடுங்க. நானும் அவங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சிப் பழகித் தான ஆகணும்?!” என்றான் தேவ் கசப்பான உணர்வுடன்.

“என்ன அப்பு, என்னனமோ சொல்ற? நீ எதுக்கு அவங்கள விட்டுப் பிரிஞ்சி இருக்கணும்?” - வேதா

“ஒண்ணும் இல்ல சித்தி, மித்ரா வருவா. அது மட்டும் தான் எனக்குத் தெரியும். அதனால கவலைப் படாம இப்போ போங்க. நான் பார்த்துக்கிறேன்” - தேவ். அவருக்கு மனமே இல்லை என்றாலும் அவன் சொன்னதுக்காகக் கிளம்பிச் சென்று விட..

மித்ராவும் குழந்தையும் இல்லாத அந்த வீடு நரகமாக அவனுக்குத் தெரிந்தது. அதிலும் அந்த அறையில் இவ்வளவு நாள் இல்லாத ஒரு வெறுமையை உணர்ந்தவனால் தூங்கக் கூட முடியவில்லை.

“ஏன்டி இப்படிச் செய்த? ஏன்டி ஏன்? எப்போதும் என் பாசத்தோடும் உணர்வோடும் காதலோடும் விளையாடறதே உனக்கு வேலையாப் போச்சி! எப்போது தான்டி நீ என்னப் புரிஞ்சிக்கப் போறனு?” வாய் விட்டுப் புலம்பியவனின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீர் உருண்டோடியது!

இரவு முழுக்கத் தூங்காமல் இருந்து விட்டுக் காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருந்தவன் முன்பு வந்து நின்றார் மித்ரா தாத்தா.

“என்ன மாப்பிள, என்ன தான் நடந்துச்சி உங்க இரண்டு பேருக்குள்ளும்? இப்போ அவங்க இரண்டு பேரும் எங்க தான் இருக்காங்கனு?” அவர் கலங்கிப் போய் கேட்க

“எங்களுக்குள்ள கொஞ்சம் சண்டை தாத்தா. நான் தான் கோபத்துல உங்கப் பேத்திய இரண்டு அடி அடிச்சிட்டன். அதான் கோபத்துல வீட்டை விட்டுப் போய்ட்டா” என்றான் தேவ் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டே. ‘இப்படிச் சொன்னால் தன் மேல் கோபம் திரும்பும், மித்ராவை அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்’ என்று அவன் நினைத்திருக்க, அவரோ அதற்கும் பாய்ந்தார். “இருக்கட்டும் மாப்பிள.. எந்த புருஷன் பொண்டாட்டி தான் அடிச்சிக்கல, சண்டை போட்டுக்கல? அதுக்காக இப்படித் தான் வீட்டை விட்டுப் போகறதா? பிறகு பெரியவங்கனு நாங்க எல்லாம் எதுக்கு வீட்டுல இருக்கோம்? நீங்க எங்க இருக்காங்கனு மட்டும் சொல்லுங்க, நான் போய் பேசிக்கறன்” என்று அவர் கோபப் பட

“இல்ல தாத்தா.. அவ எங்க இருக்கானே எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்! உங்க பேத்தி வந்திடுவா. ஏன்னா அவளாள என்ன விட்டு இருக்க முடியாது. ஸோ நீங்க எங்களப் பற்றிக் கவலைப் படாமல் இருங்க” என்று அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு ஆபிஸ்க்குக் கிளம்பினான் தேவ்.

இதுவரை அவன் தன் அம்மாவை பார்க்கவும் இல்லை மித்ரா விஷயமாகப் பேசவும் இல்லை. எதுவாக இருந்தாலும் சித்தி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டான்.

அன்றைய இரவும் அவனுக்குத் தூங்காத இரவாகவே கழிய மறுநாள் காலையில் கிளம்பி ஆபிஸ் சென்றவன் சாய்ந்திரம் ஒரு கிளைன்டைப் பார்க்க இருப்பதால் மாலை சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வர அந்த நேரம் அவனை இண்டர்காமில் அழைத்தார் விசாலம். முன்பை விட இப்போது எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குப் பேச்சு வந்தது. இன்று தாயிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்தவன் கிளம்பிச் செல்ல

தன் அறைக்கு வந்த மகனை வா என்று வரவேற்றவர் எடுத்த உடனே மித்ரா விஷயம் பேச ஆரம்பித்தார்.

“உனக்கும் மித்ராவுக்கும் என்ன நடந்ததுனு நான் கேட்க வரல. அது கணவன் மனைவிக்குள்ள நடந்த விஷயம். எனக்கு வேண்டியது எல்லாம் எப்போ என் மருமகளையும் பேத்தியையும் கூட்டி வரப் போற என்றது தான்!” அவரால் இப்போது எல்லாம் பேச முடிகிறது என்றாலும் இவ்வளவு பெரிய வார்த்தைகளைச் சேர்ந்தார் போல் பேசியதில் அவர் கண்ணத்தில் வலி எடுக்க, இடது பக்கக் கண்ணத்தைத் தன் இடது கையால் தேய்த்து விட்ட படியே அவர் பேச

“அம்மா ஏன் இப்போ இவ்வளவு சிரமப் படுறிங்க? முதல்ல நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கறன்” என்றவன் “அவ எங்க இருக்கானு……” தெரியாது என்பதைச் சொல்ல வந்தவனை

“நான் உன் அம்மாடா! மத்தவங்க கிட்ட சொன்ன பொய்யை நீ என் கிட்ட சொல்ல வேண்டாம். தன் எதிரிகளக் கூடத் தன் கண் பார்வையிலே வைத்து இருப்பவன் என் மகன்!

அப்படிப் பட்டவன் தன் மனைவி மகள் இருக்கிற இடம் தெரியலனு சொன்னா அதை நான் நம்பணுமா?” என்று ஓர் அதிகாரத் தோரணையில் அவர் கேட்கத் தலை குனிந்து பேசாமல் இருந்தான் தேவ்.

“பவித்ரா உன் வாழ்க்கையில் வர நான் தான் காரணம். இப்பவும் பவித்ரா விஷயம் தான் உங்களுக்குள்ள பிரச்சனை வரக் காரணம்னா நான் மித்ரா கிட்ட பேசிச் சரி பண்றன்” - விசாலம்.

“……..” அப்போதும் தேவ் அமைதியாக இருக்க

‘இவர்களுக்குள்ள வேற ஏதோ பிரச்சனைனு!’ நினைத்தவர்

“கணவன் மனைவிக்குள்ள பிரிவு இருக்கலாம் தேவ். ஆனா அது ஒரு நாளோ இரண்டு நாளோ இருந்தா தான் அந்தப் பிரிவுக்கே மதிப்பு. அதுவே நாள் கணக்கோ மாதக் கணக்கோ ஆனா இருவருக்குமே அந்தப் பிரிவு பழகிடும். அதன் பிறகு வாழ்க்கை மேல ஓர் பிடிப்பு வராது. இது எல்லாம் சதாரணக் கணவன் மனைவிக்கே என்னும் போது ருத்ராவால ஒரு இக்கட்டுக்காக மித்ரா உன்னக் கல்யாணம் செய்து கிட்டா என்னும் போது அவ மனசு எப்படி எல்லாம் அலைபாயும்னு யோசிச்சிப் பார்! அதனால இப்போ விழுந்து இருக்கற இந்த இடைவேளைய அதிகப் படுத்தாம சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடு. எல்லாத்த விட என் பேத்தி என் கண்ணுக்குள்ளேயே இருக்கா, அவள நான் பார்க்கணும்” என்று அவர் சொல்ல

“…….” தேவ் ஏதோ யோசனையிலே இருக்க

“என்னபா, நீ எதாவது முடிவு பண்ணி வச்சி இருந்தியா? நான் உன்ன அவசரப் படுத்துறனா?” என்று அவர் கேட்க

“இல்லமா நீங்க எதுவும் அவசரப் படல. அவ வீட்டை விட்டுப் போனதுல எனக்கும் கோபம் தான். ஆனா அந்தக் கோபம் எல்லாம் இரண்டு நாள் தான். அது இன்றோட முடிஞ்சி போச்சி. அவ எங்க இருக்கா எப்படி இருக்கானு எல்லாம் எனக்குத் தெரியும். ஸோ நாளைக்குக் காலையில போய் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்னு” அவன் கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் உறுதியுடன் சொல்ல

“செய்பா, அதைச் சீக்கிரம் செய். நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கனும். அது தான் எனக்கு வேண்டும்” - விசாலம்

“சரிமா இப்போ எனக்கு ஒரு முக்கியமான கிளையன்டோட டின்னர் இருக்கு. அத நான் முடிச்சிட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பினான் தேவ்.

டின்னர் முடித்து அவன் கிளம்பும் போது இரவு ஒன்பது. அந்த நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் நினைவு முழுக்க தாயிடம் பேசியதே இருந்தது.

‘எப்படி இருந்தாலும் இனி அவளா திரும்ப வர மாட்டா. நான் தான் நேரில் போய் அவ கையக் காலக் கட்டியாவது தூக்கிட்டு வரணும். அதுக்கு ஏன் காலையில் போகணும்? அதான் மீட்டிங் முடிஞ்சிடுச்சே! ஸோ நாம இப்பவே கிளம்பினா என்னனு?’ நினைத்துக் கொண்டு வந்தவன் ஓர் இடத்தில் அவனுக்கு எதிர் திசையில் இருந்து கட்டுப்பாட்டையும் மீறி வேகமாக ஒரு லாரி வர அதிலிருந்து தப்பிக்கச் சற்று வலதுப் புறமாக அவன் காரைத் திருப்ப அது அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

அதில் தலையில் அடியுடன் தேவ் மயங்கி விட அந்தப் பக்கமாக வந்த தேவ்வின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டு விஷ்வாவுக்குத் தகவல் சொல்லி விஷ்வாவின் ஆஸ்பிட்டலிலேயே அவனைச் சேர்த்து விட பிறகு வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொல்ல ஆஸ்பிட்டல் வந்த விசாலம் முதல் வேலையாக தேவ்வின் பி.ஏ வான ஜீவாவை அழைத்து மித்ராவைப் பற்றியத் தகவலைச் சேகரித்துத் தரச் சொல்லி தேவ் யாரிடம் அந்த வேலையை கொடுத்தான் என்று அறிந்து அவரிடம் இவரே பேசி மித்ராவின் அட்ரஸ்சை வாங்கியவர் பின் அங்கு சென்னையில் இருந்த கௌதமுக்குப் போன் பண்ணி இந்த அட்ரஸ்சைக் கொடுத்து மித்ராவையும் ருத்ராவையும் உடனே அழைத்து வரச் சொல்ல

அதன்படியே இதோ மூவரும் விமானத்தில் இருந்தனர். மித்ரா வேண்டுதல் எல்லாம் ‘என் தேவ்வுக்கு ஒண்ணும் ஆகாது ஒண்ணும் ஆகாது’ என்பது தான். கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்தவுடன் ருத்ரா முழித்துக்கொண்டுத் தன் கண்களைச் சுழற்றித் தந்தையைத் தேடியவள் அவன் அங்கில்லை என்பதை அறிந்து “அப்பு எங்க சித்தப்பா?” என்று கௌதமைக் கேட்க

“அவரத் தான்டா பார்க்கப் போறோம்னு” சொல்லித் தூக்கி வைத்திருந்தக் குழந்தையை இறுக்கக் கட்டிக் கொண்டான் கௌதம்.

அதைக் கேட்டதும் மித்ராவுக்கு இன்னும் அழுகை பெருக்கெடுத்தது. ‘இப்படிப் பட்ட ஓர் நிலையிலா குழந்தை தேவ்வைப் பார்க்கணும்?’ என்று மனதுக்குள் மருகினாள்.

இவர்கள் அடித்துப் பிடித்து ஆஸ்பிட்டல் வர அந்த இரவு நேரத்திலும் கதவு திறந்து இருக்க, தேவ்வின் குரல் வெளி வராண்டா வரை கேட்டது.

“மோம்… எனக்கு ஒண்ணும் இல்ல. நான் நல்லா தான் இருக்கன்” - தேவ்

“நீ நல்லா தான் இருக்க. அதுக்காக உன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. இரண்டு நாளும் நீ சரியாவே தூங்கி இருக்க மாட்ட. அதனால் நீ இங்கையே இருந்து ரெஸ்ட் எடு” என்று விசாலம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் மூவரும் உள்ளே நுழைய, தன் தந்தையைப் பார்த்த உடன்

“அப்பு…..” என்று அழைத்து ருத்ரா கௌதமிடம் இருந்து கொண்டே தன் இரு கைகளையும் நீட்ட, உடனே தாவிச் சென்று தேவ்விடம் ருத்ராவைச் சேர்த்தான் கௌதம்.

“குட்டிமா……” என்ற அழைப்புடன் தன் மகளை வாங்கிக் கொண்ட தேவ் குழந்தையின் முகம் எங்கும் முத்தமிட்டு அணைத்துக் கொள்ள,

“அப்பு உனக்கு அடிபட்டுடிச்சா? அதனால தான் நீ எங்களப் பார்க்க வரலையா? நானும் அம்மாவும் உன்னக் காணாம ரொம்ப அழுதோம்!” என்று ருத்ரா சொல்ல

“நானும் தான்டா!” என்றான் தேவ் மகளை அணைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த மித்ராவின் கண்களோ தன் கணவனைத் தான் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தது. நெற்றியில் மட்டும் ஒரு சிறிய பிளாஸ்திரி போட்டிருக்க மற்ற படி அவன் உடலில் வேறு எந்த அடியும் படாமல் அவன் அவனாகவே இருக்க அப்போது தான் அவளால் நிம்மதியாகவே மூச்சு விட முடிந்தது.

பிறகு அங்கிருந்த தன் தாத்தா விஷ்வா வேதா என்று அவர்களை எல்லாம் தன் பார்வையாலே சுற்றி வந்தவள் இறுதியில் தன் மாமியாரிடம் வந்து நிலைக்க, அவரோ மித்ராவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவே அவளை அவர் முறைப்பது போல் பட சட்டென்று தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் மித்ரா.

பின் தேவ்விடம் திரும்பிய விசாலம்

“இன்னைக்கு ஒரு நைட் ருத்ரா இங்க இருக்கட்டும் தேவ். காலையில பத்து மணிக்கு கார் அனுப்பறன். டிரைவர் கூட ருத்ராவ மட்டும் அனுப்பி வைங்க. ஆனா நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரக் கூடாது!” என்று அவர் கட்டளை இட

‘நம்ம மாமியார் பேச ஆரம்பிச்சிட்டாங்களானு?!’ அதிசயத்துப் போய் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா அவர் வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னதும் அழாத குறையாக அவரைப் பார்க்க

தேவ்வோ “என்ன மம்மீ நினைச்சிட்டு இருக்கிங்க? வீட்டுக்கு வரக் கூடாதுனா நாங்க எங்க போவோம்?” என்று கேட்க

“நீங்க இரண்டு பேரும் கெஸ்ட் ஹவுஸ் போங்க. குடும்பம்னா நல்லது கெட்டது கஷ்டம் நஷ்டம் எல்லாம் தான் இருக்கும். அதுக்காக அப்ப அப்ப கோவிச்சிட்டு அடிக்கடி வீட்டை விட்டுப் போகறதும், ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்க்காம முகம் திருப்பறதுனு இருக்கறது எல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரி வராது. அதனால நீங்க இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.

ஆனா ஒண்ணு! இப்படி திரும்ப தொடராதுனா மட்டும் வாங்க, இல்லனா இரண்டு பேருமே வராதிங்க! எம் பேத்திய நானே பார்த்துக்கறன்னு” உறுதிப் படச் சொன்னவர் விஷ்வாவிடம் திரும்பி “விஷ்வா காலையில டிரைவர் வந்தா ருத்ராவ மட்டும் அனுப்பு. பிறகு உன் கார்லையே இவங்க இரண்டு பேரையும் கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுடு” என்றவர் தேவ்விடம் “தேவ், இனி உனக்கு நோ கார்! நோ லேப்டாப்! நோ மொபைல்!” என்று சொல்ல

“அம்மா இது அநியாயம்! ஆபிஸ்ல எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க இப்படி பண்ணா என்ன அர்த்தம்னு?” தேவ் ஆதங்கப் பட

“ஆபிஸ் வொர்க்க ஜீவா பார்த்துக்கட்டும். எதாவது மீட்டிங்னா கேன்சல் பண்ணச் சொல்லிடறன். எனி அர்ஜென்ட் டெஸிஷன் எடுக்கணும்னா அவன என்ன கான்டாக்ட் பண்ணச் சொல்லி நான் எடுத்துக்கறன். முதல்ல எனக்கு என் பையனும் அவன் வாழ்க்கையும் தான் முக்கியம்! அதுக்குப் பிறகு தான் பிஸினஸ் எல்லாம்!” இதை எல்லாம் தேவ்வுக்குப் பதிலாகச் சொன்னாலும் பார்வை என்னமோ மித்ராவிடமே இருந்தது.

அதைப் பார்த்தவள் ‘அப்பா….. அப்படியே புள்ள மாதிரியே பேச வேண்டியதுனு!’ மனதுக்குள் நினைத்தவள் ‘ச்ச… ச்சா….. அம்மா மாதிரி தான் புள்ள!’ என்று திருத்திக் கொண்டாள்.

இனி பேசுவதற்கு ஒண்ணும் இல்லை என்பது போல் வேதாவைத் தன் சக்கர நாற்காலியைத் தள்ளச் சொல்லி அவர் வெளியே சென்று விட பின் அங்கிருந்த அனைவருமே சென்று விட்டனர்.

தேவ் அமர்ந்திருக்க அவன் மார்பிலே தூங்கி விட்ட குழந்தையைப் பக்கத்து கட்டிலில் படுக்க வைக்க நினைத்து மித்ரா அவனிடமிருந்து குழந்தையைத் தூக்க, அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் பட்டென அவள் கையைத் தட்டி விட்டான் தேவ்.

அவன் செயலில் முதலில் விக்கித்து நின்றவள் பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு

“உங்களுக்கு உடம்பு அசதியா இருக்கும் அத்தான். அதான் குட்டிமாவ என் கூட அந்த பெட்ல படுக்க வச்சிகளாம்.…” என்று அவள் முழுமையாகச் சொல்லிக் கூட முடிக்கவில்லை. அதற்குள் பாதியிலேயே தன் மார் மீதிருந்த குழந்தையுடன் பெட்டில் சரிந்து படுத்தவன் பின் தன் கண்களை மூடிக் கொள்ள, அப்போது தான் அவளுக்கே தெரிந்தது வந்ததில் இருந்து அவன் தன் முகத்தைக் கூட பார்க்கவில்லை என்று!

அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. அவன் திட்டுவான் சண்டை போடுவான் கோபப்படுவான் என்று அவள் நினைத்திருக்க இப்படி அவன் அவளைப் புறக்கணிப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சற்றுத் தள்ளியிருந்த இன்னோர் கட்டிலில் அவனுக்கு முதுகுக் காட்டி படுத்தவள் ஓசையின்றி அழுது கறைந்தாள். தாமதமாக உறங்கியதால் பொழுது புலர்ந்து வெகு நேரம் ஆகியும் மூவரும் உறங்கிக் கொண்டிருக்க.

உனக்காக வருவேன்

உயிர்கூட தருவேன்

நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும்

உனக்கு எதையும் நான் செய்வேன்

ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

உனது நிழலிலே இருப்பேன்

நீ யாரா இருந்தாலும் உனக்காகவே வாழ்கிறேன்……

இப்படி ஓர் பாடல் ஒலிக்க, எங்கோ தூரத்தில் இருந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு சற்றுப் புரண்டு படுத்தாள் மித்ரா.

உனக்காக வருவேன்

உயிர்கூட தருவேன்

நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும்

உனக்கு எதையும் நான் செய்வேன்

ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

உனது நிழலிலே இருப்பேன்

நீ யாரா இருந்தாலும் உனக்காகவே வாழ்கிறேன்……

மீண்டும் பாடல் ஒலிக்கவும் அடித்துப் பிடித்து எழுந்து பார்க்க அது தேவ் பர்ஸ்னல் மொபைலின் ரிங் டோன் என்று அறிந்தவள் ஓடிச் சென்று அவன் பக்கத்திலிருந்த மொபைலை எடுத்துப் பார்க்க அதில் அம்மா காலிங் என்று வர இப்போது என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு முடிந்து போனது. ஆனால் திரும்பவும் அழைப்பு வர, அதற்குள் விழித்து விட்ட தேவ் அவள் கையிலிருந்து வெடுக்கென தன் மொபைலைப் பிடிங்கியவன் ஆன் செய்து

“சொல்லுங்கமா” என்று கேட்க

மித்ராவோ தரையில் வேர் ஓட அப்படியே நின்று விட்டாள். அவன் போனைப் பிடிங்கியதற்காக அல்ல அவன் போனில் ஒலித்த பாடல் வரிகளைக் கேட்டு! பின் ருத்ராவே எழுந்து

“மம்மீ” என்று உலுக்க நிகழ்வுக்கு வந்தவள் பிறகு ருத்ராவுக்கு வேண்டியது எல்லாம் செய்து டிரைவருடன் அவளை அனுப்பி விட அப்போது உள்ளே நுழைந்தான் விஷ்வா.

“என்னடா கிளம்பலாமா?” என்று தேவ்விடமும் “என்ன மித்ரா கிளம்பலாமா?” என்று மித்ராவிடமும் கேட்க

அவள் போகலாம் என்பது போல் தலை அசைக்க

தேவ்வோ யாரும் சற்றும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் அவன் நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து எறிய அந்தக் காயத்திலிருந்து ரத்தம் கசிந்தது. அதைப் பார்த்த விஷ்வா “டேய் பைத்தியக்காரா, என்னடா செய்ற?” என்று மிரட்ட

“அத்தான்!” என்ற கூச்சலுடன் மித்ரா அவனை நெருங்க

“சில பேர் நான் பொய்யா நடிச்சி ஏமாற்றி இங்க படுத்து இருப்பதா நினைப்பாங்க. அவங்கள நல்லா பார்த்துக்கச் சொல். இது பொய்யான கட்டு இல்ல உண்மைதான்னு தெரிஞ்சிக்கட்டும்” என்று மித்ராவின் முகம் பார்க்காமல் இவன் கோபமாகச் சொல்ல

“அதுக்காக இப்படியாடா ரத்தம் வர்ற மாதிரி பிச்சி எறிவ?” என்று நண்பனைக் கடிந்த விஷ்வா அவனுக்கு முதல் உதவி செய்ய

“என் மனசக் குத்தி என்ன சாகடிச்சாங்க! அப்போ நான் எப்படி துடிச்சி இருப்பனு அவங்களாள பக்கத்துல இருந்து பார்த்துச் சந்தோஷப் பட முடியல! அதான் இந்த ரத்தத்தையாவது பார்த்து சந்தோஷப் படட்டும்னு தான் இப்படிச் செய்தேன்” என்றான் தேவ் மித்ராவை வைத்து மறைமுகமாக.

அதைக் கேட்டு அவளால் இன்னும் அழத் தான் முடிந்ததே தவிர வேறு எதுவுமே பேச முடியவில்லை.

அவர்கள் இருவரையும் வீட்டு வாசலிலே இறக்கி விட்டவன் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி விஷ்வா அங்கிருந்து சென்று விட உள்ளே வந்து பார்த்தால் துணை வேலைக்குனு கூட யாரும் இல்லை. பின் மித்ரா சமையலறையில் வந்து பார்க்க காய்கறி பழம் மளிகை சாமான் என்று அனைத்தும் இருந்தது. உடனே மாதுளைப் பழத்தை எடுத்தவள் அதை உதிர்த்து ஜுஸ் போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்குப் போக அங்கே தேவ்வோ ஏசியைக் கூட போடாமல் உடல் அசதியில் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளின் கண்களோ கலங்கி விட்டது.

‘பாவம்! இரண்டு நாளா தூங்கிக் கூட இருக்க மாட்டார்னு’ நினைத்தவள் அவனை எழுப்ப மனமே வராமல் ஜுசை டீ பாயில் வைத்தவள் கட்டிலில் அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் மடி மீது வைத்து அவன் முன் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டு குனிந்து அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தவள்

“ஐ லவ் யூடா புருஷா! என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? இனிமே நான் இப்படி எல்லாம் செய்ய மாட்டன். ஸாரி!” என்று சொல்லி இப்போது அவன் கன்னத்தில் முத்தமிட தூக்க கலக்கத்திலே ம்ம்ம்…. என்று முனங்கினான் தேவ்.

அதைப் பார்த்து எங்கே எழுந்து விட்டானோனு பயந்தவள் பின் அவன் தூங்குவதைக் கண்டு நிம்மதியுற்று சத்தம் போடாமல் அவன் தலையைத் தலையனையில் வைத்தவள் எழுந்து ஜன்னல் ஸ்கிரீன்களை இழுத்து மூடி ஏசியை ஆன் செய்தவள்

இறங்கி கீழே வந்து மதியத்துக்கு என்று தனக்குத் தெரிந்த சமையலை இரண்டு பேருக்கும் சாதாரணமாகச் செய்தவள் பின் அவனை வந்துப் பார்க்க இன்னும் அவன் தூங்கிக் கொண்டிருக்க இப்போதும் அவனை எழுப்ப மனம் இல்லாததால் சற்று நேரம் புத்தகம் படித்தவள் பிறகு மணியைப் பார்க்க அது இரண்டு என்று காட்ட இதுக்கு மேலையும் எழுப்பாமல் இருந்தால் சரி வராது என்று நினைத்து

“அத்தான் எழுந்துருங்க, மணி ரெண்டு. இன்னும் எவ்வளவு நேரம் தூங்கப் போறிங்க? எழுந்துருங்க அத்தான், சாப்டுட்டு தூங்குங்க” என்று அவனை உலுக்க

“ம்ம்ம்… கொஞ்ச நேரம் தூங்க விடுடி என் பொண்டாட்டி” என்றவன் அவள் வலது கையைப் பிடித்துத் தன் கழுத்தின் கீழே வைத்துக் கொள்ள

அவன் செய்கையில் கவரப் பட்டவளோ கட்டிலில் ஏறி அவனை ஓட்டினார் போல் அமர்ந்து

“என் செல்ல புருஷா தான நீங்க? என் பட்டு புருஷா தான நீங்க? என் ராசா இல்ல? எழுந்திருபா! எனக்கு வேற பசிக்குது. நீங்க வேணும்னா சாப்டுட்டு திரும்ப தூங்குவிங்களாம், இப்போ எழுந்துருடானு” அவன் கேசத்தைக் கலைத்து அவள் கொஞ்ச

அதில் பட்டென்று கண் விழித்த தேவ் அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் மட்டும் இல்லாமல் அவள் கையைத் தான் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தவன்

“ச்சை…..” என்று கூறி அவள் கையைப் பட்டென்று தட்டி விட்டு எழுந்துச் செல்ல மித்ராவுக்கோ அவமானத்தில் முகமே சிவந்து விட்டது.

‘என்ன அந்த அளவுக்கா வெறுக்கறாரு?!’ என்று நினைத்தவளின் கண்கள் மறுபடியும் கலங்கி விட அதற்குள் தேவ் ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தவன் கீழே இறங்கி செல்ல தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள் அவன் பின்னே எழுந்து செல்ல.

டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த தேவ் அங்கிருந்த பழங்களில் ஒன்றில் கை வைக்க

“இப்போ எதுக்கு அத்தான் பழம் சாப்பிடறிங்க? நான் சமையல் முடிச்சிட்டன் சாதமே சாப்பிடுங்க” - மித்ரா

“……” அப்போதும் தேவ் பழங்களைக் கட் பண்ணிக் கொண்டிருக்க அவனை நெருங்கியவள் அவன் கையைப் பிடித்து

“ப்ளீஸ் அத்தான் சாதம் சாப்பிடுங்கனு” சொல்ல தேவ்வோ அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல்

“கையை விடு ஹா….. மித்ரா!” என்று உறும

அவன் ஹாசினி என்று சொல்ல வந்து மாற்றியதை அறிந்தவள் நெஞ்சம் வலிக்க

“ப்ளீஸ் அத்தான், என் மேல கோபம் இருந்தா என்ன அடிங்க திட்டுங்க. அதுக்காக என் கிட்ட பேசாமலோ இல்ல நீங்க சாப்பிடாமலோ இருக்காதிங்க. சாப்பிடாம இருந்து உங்கள நீங்களே ஏன் வறுத்திக்கிறிங்கனு?” அவள் கெஞ்ச

“ஆமா, உன் மேல கோபப் படவோ உன்னத் திட்டவோ நான் யாரு? என் மனசக் கொன்னு புதைச்சிட்டு இப்போ வந்து நான் பட்டினி இருக்கறதப் பத்தி நீ பேசறியா? வேண்டாம் எனக்கு எதுவும் வேண்டாம்! உன் கிட்ட நான் பேசவே விரும்பல. என்ன வேணாம்னு சொல்லிட்டுப் போனவ தான நீ? இப்போ மட்டும் எதுக்கு வந்த? வேணா மித்ரா நீ சொல்ற மாதிரியே நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவோம். வீட்டுல நான் எதாவது சொல்லி சமாளிச்சிக்கறன். என்னப் பிடிக்காம என் கூட நீ எதுக்கு இங்க இருக்கணும்?” என்று அவன் உறும

“ஐய்யோ….. அத்தான் நான் செய்தது தப்பு தான் அத்தான்! பெரிய தப்பு தான்! உங்கள விட்டு நான் போனா என்ன மறந்து நீங்க மனசு மாறி வாழுவிங்கனு நினைச்சன். ஆனா இந்த இரண்டு நாளும் உங்கள மறக்க முடியாம நான் தான் அத்தான் தவிச்சிப் போய்ட்டன். ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு நிமிடமும் உங்களத் தான் நினைச்சன்.

இன்னும் சொல்லப் போனா அன்னைக்கு நீங்க சொன்னிங்களே? உன் பேச்சு மூச்சு நாடி நரம்பு எல்லாம் நான் தான்டி இருக்கணும்னு! அப்படித் தான் அத்தான் நான் இருந்தன். எனக்கே அது உங்கள விட்டுப் பிரிஞ்சி இருந்த இந்த ரெண்டு நாள்ள தான் தெரிஞ்சது. இது தெரியாம நான் எவ்வளவு பெரிய முட்டாளா நடந்துக்கிட்டன்!” என்று அழுகையுடனே சொன்னவள் சட்டென அவன் காலில் விழுந்து “என்ன மன்னிச்சிடுங்க அத்தான்னு” சொல்ல

அவளைத் தூக்காமல் சட்டென்று தூர விலகியவன்

“வேணாம் மித்ரா வேணாம்! எதுவும் வேணாம்.

இப்போ ஒரு வேகத்துல இப்படி ஒரு முடிவு எடுத்துடுவ. பிறகு உன் கடந்த காலத்தப் பற்றி நினைவு வந்தாலோ அதைப் பற்றி யாராவது பேசினாலோ இல்லனா உன் கடந்த காலத்துல இருந்தவங்க யாரையாவது நீ பார்த்தாலோ உடனே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நான் உங்களுக்கு வேண்டாங்க என்ற பல்லவியோட திடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுப் போய்டுவ. அதனால பாதிக்கப் பட போகறது நான் தான்! நீ இல்ல!” என்று கோபமாகச் சொன்னவன் பிறகு இந்த இரண்டு நாள்ள நான் செத்துட்டேன்டி” என்றான் குரல் உடைய.

“ஐய்யோ…. நானும் தாங்க செத்துட்டேன். நான் செய்தது தப்பு தாங்க! என்ன மன்…..” மன்னிச்சிடுங்க என்று சொல்ல வந்தவளை

“அச்சோ… அம்மா போதும்டி! எனக்கு வேண்டியது உன் கண்ணீரோ மன்னிப்போ சமாதானமோ இல்லடி!” என்றவன் ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு பின் “எனக்கு என்ன வேணும்றத கூட உன்னாலத் தெரிஞ்சிக்க முடில இல்ல? பிறகு நீ என்னடி என்னப் புரிஞ்சிக் கிட்டது?” என்று கோபப் பட்டவன் “இது தான்! இதுக்குத் தான் சொல்றன் நாம பிரிஞ்சிடலாம்னு! போதும் நாம பிரிஞ்சிடுவோம்!” என்று திரும்பத் திரும்ப அதையே சொல்ல

உண்மையில் மித்ராவுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்பதே அவள் இப்போதிருக்கும் மனநிலையில் புரியவில்லை. அவன் கேட்பதோ ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை! ஆனால் இவள் நினைப்பதோ ‘தான் செய்த தப்புக்குத் தனக்குத் தண்டனை கிடைத்தால் தேவ் கொஞ்சம் அமைதி ஆவாரோ?’ என்று.

“நான் வீட்டை விட்டுப் போனது தப்பு தான்! அதுக்கு எனக்கு மறக்க முடியாத அளவுக்குத் தண்டனை கிடைச்சாதான் நான் திரும்ப அந்த தப்பைச் செய்ய மாட்டன். அப்போ அதுக்கு நானே தண்டனை கொடுத்துக்கிறேன்னு” சொன்னவள் ஓடிச் சென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டு கதவை அடைத்துத் தாழ்பாள் போட்டு கொள்ள

அவள் பின்னாடியே ஓடிச் சென்று கதவைத் தட்டினான் தேவ்.

“யேய் ஹாசினி, என்னடி பண்ணப் போற? நான் சொன்னது வேறடி! நீ தப்பாப் புரிஞ்சிக் கிட்ட. ப்ளீஸ்டி, கதவ திற” என்று கெஞ்சியவன் பின் ஓடிச் சென்று ஐன்னல் வழியாகப் பார்த்ததில், கரண்டியை அடுப்பு தணலில் வைத்திருந்தாள் மித்ரா.

அதைப் பார்த்தவன் நெஞ்சோ ஒரு நிமிடம் நின்று துடிக்க

“இப்போ என்னடி செய்யப் போற?” என்று நடுங்கும் குரலில் அவன் கேட்க

“இந்தக் கால் தான உங்கள வேண்டாம் சொல்லிட்டு வீட்டை விட்டுப் போச்சி? இப்போ நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பாததுக்கு இந்தக் கால் தான காரணம்? திரும்ப இந்தத் தப்ப நான் செய்யக் கூடாதுனா அதுக்கு என் கால்ல ஒரு அடையாளம் இருக்கணும். அதான் கரண்டியால என் கால்ல நானே சூடு போட்டுக்கப் போறேன்” என்றாள் மித்ரா திடமாக.

“வேணாம்டி, அப்படி எதுவும் செய்யாதடி கதவத் திறடி” என்று இவன் கத்த மித்ராவோ அசையாமல் அங்கேயே நிற்க திடீர் என்று ஏதோ தோன்றவே தேவ் அவசரமாக மாடிக்கு ஓடிச்சென்று ஒரு சாவியை எடுத்துக்கொண்டு கீழே வந்தவன் அதே வேகத்துடன் பின்புறத் தோட்டத்துக்குச் சென்றவன் கிச்சனிலிருந்து தோட்டத்திற்குப் போகும் கதவு எப்போதும் தோட்டத்துப் பக்கமாக பூட்டியே இருப்பதை அறிந்தவன் அந்தப் பூட்டைத் திறந்து உள்ளே செல்லும் நேரம் கையில் கரண்டியை எடுத்திருந்தாள் மித்ரா. உள்ளே வந்தவனோ அவள் கையைத் தட்டி விட கரண்டியோ தூரப் போய் விழுந்தது.

“பைத்தியக்காரியாடி நீ?” என்று அவன் பல்லைக் கடிக்க

அவன் மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டவளோ

‘என்ன போனு சொல்லிடாதிங்க அத்தான்! நான் போக மாட்டேன்” என்றவள் அவன் கழுத்தை வளைத்து “ஐ லவ் யூ அத்தான்….. ஐ லவ் யூ அத்தான்……” என்று சொன்னவள் ஒவ்வொரு ஐ லவ் யூ க்கும் அவன் முகத்தில் முத்த மழை பொழிய

இதைத் தானே கேட்டான் தேவ்? இப்படி ஓர் வார்த்தைக்கு தானே அவன் ஆசைப்பட்டது? அதில் அவன் மனசோ சந்தோஷத்தில் எகிறிக் குதிக்க, அவளை இறுக்கி அணைத்தவனோ இப்போது “ஐ லவ் யூ டூ” என்ற சொல்லுடன் அவளுக்கு இவன் முத்த மழை பொழிந்தான். எவ்வளவு நேரம் அப்படிச் செய்தான் என்பது அவனுக்கே தெரியாது. பின் இருவரும் ஓர் நிதானத்திற்கு வந்து விட

“உன் கிட்ட பேசணும்னு” தேவ் சொல்ல

“இப்பவாது சாப்பிட வாங்கனு” மித்ரா சொல்ல

சாப்பிட்ட பிறகே பேசுவது என்று முடிவாகி விட அவளுக்கு இவன் ஊட்டி விட அவனுக்கு இவள் ஊட்டி விட என்று சாப்பிட்டு முடித்தனர் இருவரும்.

முதலில் தேவ்வே பேச ஆரம்பித்தான்.

“இப்போ இன்னைக்கு நாம பேசறது தான் லாஸ்ட் ஹாசினி!” என்றவன்

“அன்று உன்ன கடல்ல இருந்து காப்பாற்றி ஆஸ்பிட்டல்ல சேர்த்தது வேற யாரும் இல்ல, நான் தான்! அப்பவே நீ இருந்தக் கோலத்தப் பார்த்துத் துடிச்சிப் போய்ட்டன் தெரியுமா? உனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது அப்படி நடந்திருந்தா ஒரு தோழனா உனக்குத் துணையாயிருந்து நீ அதில் இருந்து வெளியே வர உதவுணும்னு நினைச்சன். அப்பவே என்னையும் அறியாம உன் மேல காதல் இருந்திருக்கு. அது விஷ்வாவுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு. அதனால் தான் அவன் அப்பவே என்ன ஓட்டி இருக்கான். ஆனா எனக்குத் தான் தெரியல.

காதல் தான்னு எனக்கும் தெரிய வந்தது எப்போ தெரியுமா? நீ வண்டி எடுத்துட்டு காணாமப் போய் ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்டியே? அன்னைக்குத் தான்! அதுவும் காதல் மட்டும் இல்ல, நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்ல என்றத அன்னைக்குத் தான் உணர்ந்தன்!

அதுக்கு அப்பறம் தான் உன் கடந்த கால விஷயங்கள் தெரிய வந்துச்சி. அப்பவும் சோர்ந்து போகாம மூலையில் அமர்ந்து கண்ணீர் விடாம எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு தைரியமா எழுந்து நின்னப் பாரு, அப்போ அங்க உனக்குள்ள நான் என்னையே பார்த்தன்! அப்பவே என் காதல நான் உன் கிட்ட சொல்லி இருந்தா நீ ஏத்து இருக்க மாட்ட. என்னாலையும் சொல்ல முடியாத நிலையில நானும் பவித்ரா பிரச்சனையில இருந்தன். அந்த விஷயத்த ஒரு முடிவுக்குக் கொண்டு வராம உன் கிட்ட என் விருப்பத்த சொல்லக் கூடாதுனு இருந்தேன்.

ஆனா உனக்கு என் மேல அப்படி எந்த வித அபிப்ராயமும் இல்ல. உன் மனசுல எதாவது மாற்றம் வருதானு தெரிஞ்சிக்கத் தான் நான் வெளிநாடு போய் இருந்தப்ப அப்படி நடந்துக் கிட்டேன். ஆனா திரும்பி வந்து பார்க்கும் போது நீ நீயா தான் இருந்த. உன்கிட்ட எந்த மாற்றமும் இல்ல! உன்ன இப்படியே விட்டா சரிவராது என்றதாலும் பவித்ரா விஷயமும் கிளியர் ஆகிடுச்சி என்றதாலும் தான் நான் உடனே வலுக்கட்டாயமா நம்மக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணன்.

இதுவரை அவள் எதிரிலிருந்த ஸோஃபாவில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போழுது எழுந்து அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து அவளை இழுத்து அணைத்தவன், ஆனா ஒண்ணுடி எந்த நிமிஷம் நமக்குக் கல்யாணம் ஆச்சோ அந்த நிமிஷத்துல இருந்தே உனக்கு என் மேல் உள்ள காதல உன் கண்ணுலப் பார்த்தன். நான் தாலி கட்டின அந்த நொடியிலிருந்து ஒரு கணவனா காதலனா உனக்குள்ள நான் வந்துட்டன். அதை ஒவ்வொரு முறையும் உன் கண்ணாலையும் செய்கையாலையும் உன்னுள் நான் இருக்கிறேன் என்றது நான் உறுதிப் படத் தெரிச்சிகிட்டன்” என்று கூறி அவன் தன் அணைப்பை இறுக்க அதில் அவனுடன் சேர்த்து கறைந்தவள் பின் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து

“அப்போது இருந்தா?!” என்று விழி விரித்துக் கேட்க “ம்ம்” என்று தலையாட்டினான் தேவ்.

“நீ என்ன விரும்ப ஆரம்பிச்ச ஹாசினி, உன் மனசுல நான் இருந்தேன். ஆனா நீ ஷியாம் விஷயத்தால ரொம்பக் குழம்பிப் போய் இருந்த. இன்னும் சொல்லப் போனா நீ அவனை விரும்பவேயில்ல! சரி இப்போ நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு, இப்போ எந்த தங்கு தடையும் இல்லாமல் என் கிட்ட ஐ லவ் யூ சொல்ற நீ ஒருமுறையாவது ஷியாம் கிட்ட அப்படிச் சொல்லி இருக்கியா?” யோசித்துப் பார்த்ததில் “அப்படி இல்லைனு” தலையாட்டினாள் மித்ரா. “அன்னைக்கு கிராமத்துல இருந்தப்போ எனக்கு எதாவது நடந்தா நீ உயிரோடவே இருக்க மாட்டனு சொன்ன! அதேமாதிரி ஷியாம விட்டுப் பிரிஞ்சதுக்கு அவன் இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டனு உனக்குத் தோனி இருக்கா இல்ல சொல்லி தான் இருப்பியா?” - தேவ்

இதற்கும் அவள் இல்லை என்று தலையாட்ட

“மும்பையில உன் கழுத்துல இருந்த தாலிக் கொடியக் கழற்ற மாட்டனு அப்படி அழுதியே? ஆனா அதே ஷியாம் கட்டினக் கயிறக் கழற்றி உண்டியல்ல போட்டுடுவனு சொன்னியே! அது எப்படி? நிச்சயம் அதை நீ வெறும் வாய் வார்த்தையா சொல்லல. அதே மாதிரி கண்டிப்பா அதை நீ செய்தும் இருப்ப! அப்படித் தான?” என்று கேட்க

இதற்கும் ஆம் என்று தலையாட்டினாள் மித்ரா.

“இது எல்லாம் கூட உனக்குத் தெரியலையா ஹாசினி? உன்னுள் நான் இருக்கனு!” - தேவ்

“தெரியல அத்தான், எனக்கு எதுவுமே தெரியல. நீங்க சொல்ற மாதிரி நான் ஷியாம் விஷயத்துலே குழம்பிப்போய்தான் இருந்து இருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு கூட நான் ஏன் என் கடந்த காலத்த உங்க கிட்ட சொல்லலனா, எப்படியோ நாம ரெண்டு பேரும் பிரியத் தானப் போறோம் பிறகு ஏன் சொல்லணும்னு தான்!

அன்று அப்பத்தா வீட்டுக்குப் போகறதுக்கு முன்னாடி என்ன அணைச்சிகிட்டு உங்க மனசுல இருக்கறத எல்லாம் சொன்னிங்களே? அப்பவே எனக்குள்ள ஏதோ சின்னதா மாற்றம் வந்து இருக்கணும்! அதனால தான் ஊர்ல என்னால உங்க கூட அப்படி நடந்துக்க முடிஞ்சிது! ஆனா அது எதையுமே அன்று நான் உணர முடியல. உணர்ந்தாலும் ஷியாம் விஷயம் என்ன உங்க கிட்டயிருந்து ஒதிக்கி வச்சிடுச்சி.

அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் சொன்ன பிறகு கூட நீங்க நீங்களாவே இருந்தது எனக்குக் குற்றயுணர்ச்சியா இருந்திச்சி. அந்த நேரம் பார்த்துப் பவித்ரா விஷயம் தெரிய வரவே நான் உங்களுக்கு ஏத்த மனைவி இல்லனு நினைச்சி உங்கள விட்டுப் பிரிஞ்சேன். ஆனா அப்படிப் பிரிஞ்ச பிறகு தான் என் மனசே எனக்குத் தெரியவந்தது. உங்கள யாருக்கிட்டையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதுனு. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்”

“ஆமா….. நீ எங்கடி வந்த? எனக்கு ஆக்ஸிடென்ட்னு சொன்ன உடனே தான வந்த! இல்லனா மேடம் வந்து இருப்பியா?” - தேவ்

“இல்ல இல்ல அத்தான்… நான் கிளம்பறதுனு முடிவு பண்ணப் பிறகு தான் இப்படி நடந்துடுச்சினு கௌதம் வந்து கூப்டாங்க” என்றவள் அங்கு இரண்டு தினமும் நடந்த அனைத்தையும் சொல்ல

“அப்பவும் குழந்தைக்காகத் தான் வர இருந்தியானு?” அவன் குறைபட

“ம்கும்….. எனக்கே எனக்குனு தான் வந்தேன்! குழந்தை எனக்கு ஒரு சாக்கு!” என்று சொல்லி அவனை அன்னார்ந்து பார்த்துக் கண் சிமிட்டியவள் “ஆமாம், என்ன சொல்றிங்களே? உங்க பொண்டாட்டியையும் பொண்ணையும் இரண்டு நாள் ஆகியும் நீங்க ஏன் வந்து பார்க்கல? நாங்க இருந்த இடம் உங்களுக்கு தெரியாதுனு மட்டும் சொல்லாதிங்க அத்தான்” என்று அவள் கோபப்பட

“யாருக்குடி தெரியாது? நீ இந்த வீட்டை விட்டுப் போன அந்த நிமிஷத்துல இருந்து எங்க இருக்க என்ன ஏதுனு எல்லாமே எனக்குத் தெரியும். என்ன, இப்போ திரும்ப நீ இங்க வந்தது தான் எனக்குத் தெரியாது.

நான் அவ்வளவு சொல்லியும் நான் வேண்டாம்னு என்ன விட்டுட்டுப் போய்ட்டியேனு எனக்குக் கோபம்! ஆனா அந்தக் கோபம் எல்லாம் இரண்டு நாள் தான்! இந்த மீட்டிங் முடிந்த உடனே அப்பவே ஊருக்குக் கிளம்பி வந்து நீ வரலனாலும் உன் கையக் காலக் கட்டியாவது தூக்கிட்டு வந்திடணும்னு தான் நினைச்சன். அதுக்குள்ள இந்த ஆக்ஸிடென்ட் நடந்திடுச்சி” - தேவ்

“ஹி….. ஹி…. ஹி…. கையக் காலக் கட்டியா? நீங்க வந்து வானு கூப்பிட்டாலே நான் கிளம்பி வந்து இருப்பன். ஏன்னா உங்க பொண்டாட்டி அவ்வளவு மாறி இருந்தா!” என்று அவனைக் கேலி செய்ய

“அதான் பார்க்கும் போதே தெரியுதே! நிறைய மாற்றம் தான், பார்ப்போம் எத்தனை நாளைக்குனு!” - தேவ்

வலிக்காமல் அவன் இடுப்பைக் கிள்ளியவள் “பிச்சி பிச்சி! என்ன எத்தனை நாளுனு சொல்றிங்க? சாகர வரை உங்க பொண்டாட்டி இப்படித் தான் இருப்பானு!” சொல்லி அவனை இறுக்கி அணைக்க,

“இப்படியே அணைச்சிகிட்டே இருந்தா மத்தது எதுவும் செய்ய முடியாதுடி” - தேவ்

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைச் சற்றும் யோசிக்காமல் “சாப்பிடறதுக்கு கஷ்டமா இருக்கும்னு சொல்றிங்களா? பரவாயில்ல அத்தான் ஸ்பூன் போட்டு சாப்பிடுவோம்னு” சொல்ல

“அடிப் பாவி... நீ திண்றதிலேயே இரு! சரியான சாப்பாட்டு ராணி! நான் சொன்னது ரொமான்ஸ் பண்ண முடியாதுனு சொன்னேன்டி!” - தேவ்

அவன் சொல்லியதில் சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள் “ஆமாம், அப்படியே பண்ணிட்டாலும்! எப்பப் பாரு ஒரு முத்தத்தக் கொடுக்க வேண்டியது! அதெல்லாம் ரொமான்ஸா?’ என்று கேட்டு அவன் காலை வார “கொக்கா மக்கா….. ஐயாவ என்னனு நினைச்சிட்டு இருக்க? இன்னைக்கு நைட் இருக்குடி உனக்கு கச்சேரி!”

“பார்போம் பார்ப்போம்… நானும் அதுக்காகத் தான் வெயிட்டிங் மிஸ்டர் தேவேந்திர பூபதி!” என்றவள் அவன் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டு ஓடி விட வலிக்காதத் தன் தலையைத் தடவிக் கொண்டவனின் மனது முழுக்க நிம்மதியும் சந்தோஷமுமே குடி கொண்டிருந்தது!

இரவு உணவை இருவரும் ஏதோ சமைத்தோம் என்று செய்து சாப்பிட்ட பிறகு “அத்தான் நீங்க மேல போங்க. நான் கிச்சன கிளீன் பண்ணிட்டு வரேன்னு” சொல்லி அவனை அனுப்பி விட்டு சிறிது நேரத்திற்கு எல்லாம் மேல வந்தவளைப் பார்த்து அசந்து தான் போனான் தேவ்!

பின்ன? தழையத் தழையப் புடவைக் கட்டிய் தலை நிறையப் பூ வச்சி கை நிறைய வளையல் போட்டு இதை எல்லாம் விட முகம் முழுக்கப் புன்னகையுடன் கையில் பால் டம்ளருடன் அவன் முன் வந்து நின்றாள் மித்ரா.

நிச்சயம் இப்படி ஒரு மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை! அதில் அவன் தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் சற்று வெட்கப்பட்டவள்

“என்ன அத்தான் அப்படிப் பார்க்கறிங்கனு?” கிசு கிசுப்பாகக் கேட்க

“அடியேய் பொண்டாட்டி சும்மா அசத்துறடி!” என்றவன் பால் டம்ளரை வாங்கி டேபிளில் வைத்தவன் இழுத்து அணைக்க

“ஆமாம், பூ எப்போடி வாங்கின?” என்று ஆச்சர்யத்துடன் கேட்க

“நான் வாங்கல அத்தான். உங்க அம்மா தான் கேடியாச்சே! பையன் லட்சனம் தெரிஞ்சி அவங்களே வாங்கி வைக்கச் சொல்லி இருக்காங்க” என்று இழுக்க

“ம்ம்ம்…. குட் மம்மீ! அப்ப நீயும் சீக்கிரம் குட் மம்மீ ஆகிடு!” என்றவன் இனிமேல் பேச்சே இல்லை என்பது போல் நடந்து கொண்டான். அங்கு அழகான நிறைவான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறியது.

காலையில் கண் விழித்தவள் தேவ்வின் நெஞ்சில் தான் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தோஷமும் வெட்கமும் அடைந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து

“ஐ லவ் யூடா புருஷானு” சொல்லி அவன் நெஞ்சில் தன் இதழ் பதித்து விலகியவள் குளித்துக் கீழே சென்று டிபன் செய்து முடித்த பின் தேவ் எழுந்து விட்டானானு பார்க்க வர அப்போது தான் கண் விழித்தான் தேவ். அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல்

“டிபன் ரெடியா இருக்கு அத்தான். சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கனு” சொல்லி அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவள் சென்று விட தேவ்வின் முகமோ சற்று யோசனையாக மாறியது.

பின் குளித்து முடித்து அவன் கீழே வர அவனுக்காக டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவள் எழுந்து அவனுக்கு பிளேட் வைத்துப் பரிமாற அவனோ அவளைப் பின்புறமாக அணைத்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தவன்

“ஏய் கேடி, என்ன யோசிச்சிட்டு இருக்க? காலையில் இருந்து என் முகம் கூட நிமிர்ந்து பார்க்க மாட்ற! திரும்பவும் என்ன விட்டுட்டுப் போகறதுக்கு பிளான் போடறியானு?” சற்று கோபமாக கேட்க

“அச்சோ…. நான் ஏன் போகப் போறேன்? அப்படி எல்லாம் எதுவும் இல்ல அத்தான். இது வந்து……” என்று இழுத்தவள் பின் “உங்களப் பார்க்கறதுக்கு எனக்குக் கூச்சமா இருந்திச்சி அத்தான்!” என்று ஒரு வழியாகச் சொல்லி முடிக்க “கூச்சமா….” என்று. யோசித்து பின் வாய் விட்டுச் சிரித்தவன் “அப்படிப் பார்த்தா உன்னப் பார்க்க எனக்கும் தானடி கூச்சமா இருக்கணும்?” என்று சொல்லி அவளைச் சீண்ட “போங்க அத்தான்” என்று சினுங்கியவள் முன்புறமாகத் திரும்பி அவன் மார்பில் தன் முகம் புதைத்துக் கொண்டவள் “எப்போ அத்தான் வீட்டுக்குப் போறோம்?” என்று கேட்க

“வீட்டுக்கா? ம்ஊம்…. நோ……. ஒரு வாரத்துக்கு இங்க தான்” - தேவ்

“அஸ்க்கு புஸ்க்கு ஆச தோச! பெரியபிஸினஸ் மேக்னெட் ஒரு சமஸ்தானத்துக்கே ராஜாவான திரு தேவேந்திர பூபதி அவருடைய ஹனிமூன வெறும் அவருடைய கெஸ்ட் ஹவுஸ்ல கொண்டாடறதா? இதை அவர் மனைவியாகிய நான் வன்மையா கண்டிக்கிறேன்” என்றவள் அவன் முகம் நிமிர்ந்து பார்த்து “ஸோ என்ன எங்கனா வெளியே கூட்டிப் போயே ஆகணும்” என்று சொல்லி அவள் தன் ஒற்றைக் கண் சிமிட்ட

“ஆஹா…. ஆஹா….” என்று வாய் விட்டுச் சிரித்தவன் “நீ இப்படி எல்லாம் உரிமையா எப்போ கேட்பனு தான்டி நானும் காத்துட்டு இருந்தன்?” என்றவன் “சரி அம்மா கிட்ட பேசிடுவோமா?” என்று கேட்டு தன்னிடம் இருந்த மொபைலை எடுத்து ஆன் செய்தவன்,

“அம்மா நாங்க இங்க நல்லா இருக்கோம். எங்களுக்குள்ள இருந்த எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடுச்சி” என்று எடுத்த எடுப்பிலேயே இவன் சொல்ல

“ஆமாம்மா இப்போ தான் எழுந்தோம்” - தேவ்

“இனி தான் சாப்பிடணும்” - தேவ்

“ம்ம்ம்…. நாளைக்கு ஈவினிங் வரோம்மா வீட்டுக்கு” - தேவ்

“இதோ பக்கத்துல தான் இருக்கா. இருங்க உங்க மருமக கிட்ட கொடுக்கறன்” என்றவன் மொபைலை அவளிடம் நீட்ட அதை வாங்கியவளோ “ஹலோ…. அத்த நான் செய்தது தப்பு தான். இனிமே அப்படிச் செய்ய மாட்டன், என்ன மன்னிச்சிடுங்க அத்த” என்றாள் இவளும் எடுத்தவுடனே

“அத்த எல்லாம் வேணாம். அம்மானே கூப்பிடு! இனிமே இந்த மாதிரி எல்லாம் நடக்காத அளவுக்கு ரெண்டு பேருமே பார்த்துக்கங்க. அவன் நாளைக்கே வரேன்னு சொல்றான். பிஸினஸ நான் பார்த்துக்கறன் இன்னும் இரண்டு நாள்னாலும் இருந்துட்டு வாங்க” என்று அவர் சொல்ல

“ம்ம்ம்…. சரிமா” என்று சொன்னவள் அழைப்பைத் துண்டித்து விட

“ஏன் ஹாசினி, இன்னைக்கே வீட்டுக்குப் போகணுமா? எனக்கு என்னமோ உன் கூட தனியா இரண்டு நாள் இங்கையே இருக்கணும்னு தோனுச்சி. அதான் நாளைக்கு வரன்னு அம்மா கிட்ட சொன்னன். நீ சொல்லு, இப்பவே போகலாமா?” - தேவ்

“இல்ல அத்தான், வேண்டாம். எப்போ போறோம்னு சும்மா தான் கேட்டன். உங்க இஷ்டப் படியே நாளைக்கே போகலாம் அத்தான்” என்று அவள் சொல்ல

“என் இஷ்டமா? அப்ப வாடி!” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு மாடிப் படி ஏற “ஐய்யோ…. அத்தான்! என்ன இது பட்டப் பகல்ல சாப்பிடாம கூட?” என்று அவள் சிணுங்க

“காலையிலே என் முகத்தக் கூடப் பார்க்காம கடுப்பு ஏத்தினதுக்கு உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம்? அதுக்குத் தான்! இந்த தண்டனைக்கு ஏது இரவு பகல்? உனக்குத் தண்டனை கொடுத்தப் பிறகு சாப்பிடலாம். இப்ப பேசாம வா” என்று ஊடலுடன் அவன் கூற

“ம்ம்ம்….” என்று சொல்லித் தன் இமைகளை மூடித் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் மித்ரா.

மறுநாள் வீட்டுக்கு வந்து விட எல்லோரும் அவளிடம் சகஜமாகப் பேசினாலும் அவள் தாத்தா மட்டும் அவளிடம் பேசவில்லை. ஏன் அவள் சொல்வதைக் கேட்கக் கூட அவர் விரும்பவில்லை. தேவ் இதை பார்த்துவிட்டு கொஞ்ச நாள் போன பிறகு அவரே சமாதானம் ஆகிவிடுவார் என்று சொல்லி அவளைத் தேற்றினான்.

அடுத்த மாதமே அவர்களுக்கு முதல் வருடத் திருமண நாள் வர அந்த நாளுடன் தங்கள் ஹனிமூனைச் சேர்ந்து கொண்டாடத் திட்டமிட்டு இருந்தான் தேவ். வெளியே எங்கேயும் சுற்றாமல் தங்கள் கப்பலிலேயே சமுத்திரத்திற்கு நடுவே தங்கள் தேன்நிலவைக் கொண்டாட விரும்பினான் அவன்.

மித்ராவுக்கு இது முதல் கப்பல்பயணம் என்பதால் வாந்தியும் தலை சுற்றலும் என்று கொஞ்சம் ஸீ சிக்கில் கஷ்டப் பட அதைப் பார்த்தவனோ

“நாம வேணா திரும்ப போய்டலாமா?” என்று கேட்க

“வேண்டாம் அத்தான் முதல்ல கொஞ்ச நேரம் இப்படித் தான் இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. ஸோ நோ ப்ராப்ளம். இப்போ நாம எங்க போகப் போறோம் அத்தான்? எத்தனை நாள் டிராவல்?” - மித்ரா

“எத்தன நாளா? ஒரு ஐந்து நாள் நாம கப்பல்ல தான் இருக்கப் போறோம் ஹாசினி! நாம தரையிலேயே லேண்ட் ஆகப் போறதே இல்ல. சும்மா தண்ணீ மேலையே சுத்திட்டு இருக்கப் போறோம்” என்று அவன் குதூகலிக்க.

மித்ராவோ அவனை வாய் பிளந்துப் பார்க்க “இது நம்ம கப்பல்டி பொண்டாட்டி!” என்றான் தேவ்

தேவ் தான் தயாரிக்கும் காஸ்மெடிக் க்ரீம் பொருட்களுக்குப் பெரிய பெரிய ஸ்டார்கள் நடிக்க ஷூட்டிங்கிற்கு என்று பயன்படுத்தவும் பெரிய பெரிய வி.ஐ.பி ஃபிலிம் ஸ்டார்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கு என்று வாங்கியது தான் இந்த சிறிய வகை கப்பல். ஐந்து நாளுக்கும் எந்த ஒரு கமிட்மெண்டும் அந்த கப்பலில் வைக்க வேண்டாம் என்று தன்னிடம் வேலை செய்பவர்களிடம் சொன்னவன் தன் மனைவியுடன் ஹனிமூனைக் கொண்டாட இங்கு வந்து இருந்தான்.

சிறிய கப்பலாக இருந்தாலும் அதன் உள்ளே பார்லர், ஹோம் தியேட்டர், ஜிம், ரெஸ்டாரண்ட், ஆஸ்பிடாலிட்டி, ஸ்விம்மிங் பூல் என்று ஒரு ஐடெக் கப்பலில் இருக்கும் சகல வசதிகளும் அதில் இருக்க மித்ரா சற்றுத் தெளிந்தவுடன் அதை எல்லாம் தன் மனைவிக்குச் சுற்றிக் காட்ட அப்போது அங்கு எமெர்ஜென்சிக்கு என்று இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்த மித்ரா அதில் அழைத்துப் போகச் சொல்லி சின்னக் குழந்தையாகக் கெஞ்ச

“இல்ல ஹாசினி, இந்த ஃபைவ் டேஸ்சும் கப்பல்ல தான். நமக்கு ஒரு ஐலாண்ட் இருக்கு. அதுக்கு நாம ஹெலிகாப்டர்ல தான் போகணும். ஸோ நெக்ஸ்ட் டைம் உன்ன அங்க கூட்டிட்டுப் போகும் போது நீ அதுல போகலாம்” என்று சொல்ல சரி என்று சமாதானம் ஆனாள் மித்ரா.

இருவரும் கப்பலில் இருந்தார்கள் என்று தான் பெயர். ஆனால் ஒருமுறை கூட சூரிய உதயத்தையோ சூரிய அஸ்தமனத்தையோ பார்க்க வில்லை. அவ்வளவு பிஸியாக இருந்தார்கள் இருவரும்.

ஒரு நாள் இரவு லேசான காற்றுடன் மழை வந்து விட அவளைக் கப்பலின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்ற தேவ் அலைகளின் தாலாட்டில் மழையில் நனைந்து கொண்டே வான் வெளியை ரசிக்க அலை மழை அந்த கார் இருள் என்று அங்கு இருந்த அந்த ரம்மியமான இரவை அவனுடன் ரசித்த மித்ரா அவனை நெருங்கி அமர்ந்து அவன் காதில் கிசுகிசுப்பாக

“ரசனைக் காரன்டா நீ” என்று சொல்ல

“ம்ம்ம்…. ஆமாம்டி நான் ரசிகன் தான்” என்றவனுடைய ரசனை வேறாகிப் போக அன்றைய இரவு இருவருக்குமே மறக்க முடியாத இரவாகிப் போனது.

அவர்களுடையத் திருமண நாளுக்கு முந்தைய நாள் மாலை தங்கள் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தவன் திரும்ப அறைக்கு அழைத்துப் போகாமல் அவளுடன் வெளியேவே சுற்றிக் கொண்டிருக்க நைட் டின்னர் முடித்து கீழ் தளத்தில் உள்ள வேறு ஒரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் அவளிடம் ஒரு புடவையைக் கொடுத்துக் கட்டச் சொல்ல அவளுக்குத் தெரிந்து விட்டது தன் கணவன் திருமண நாளுக்காக ஏதோ சர்ப்ரைஸ் வைத்திருக்கிறான் என்று. அதை அறிந்தவள் அவன் சொல்படியே கட்டிக்கொண்டு வர தேவ்வோ அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள நினைத்து அவளைத் தூக்க வர

‘ஆங்….. நிறுத்துங்க நிறுத்துங்க பாஸ்! இப்படி எல்லாம் தூக்கிட்டுப் போனா நான் வர மாட்டேன். நான் சொல்ற கண்டிஷன் படி செய்தா தான் நான் வருவேன்னு” கண்ணில் குறும்புடன் அவள் நிபந்தனை விதிக்க

“சரி சொல்லு” - தேவ்

“என்ன நீங்க தொட்டுத் தூக்கக் கூடாது. நான் நடந்து தான் வருவேன். ஆனா என் கால் தரையில படக் கூடாது” - மித்ரா

முதலில் அது எப்படி என்று யோசித்தவன் பின் கண்கள் பளிச்சிட அவள் முன் வந்து நின்று

“ம்….. கால வைடி” - தேவ்

“ஹய்….. ஜாலி ஜாலி!” என்றவள் அவன் கழுத்தில் தன் இரு கைகளை மாலையாகப் போட்டவள் பின் அவன் கால்களின் மீது தன் கால்களை வைத்து ஏறி நிற்க அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டே அவளைத் தன் காலால் தூக்கிய படி நடத்திச் சென்றான் தேவ். இவர்கள் இப்போது இருந்ததோ கீழ் தளம். அவர்கள் அறையோ மேல் தளத்தில் இருந்தது. அவன் லிஃப்டில் ஏறி பின் மேலே போக அவனிடம் சலசல என்று பேசிக் கொண்டு வந்தாள் மித்ரா.

“அத்தான் சூப்பரா இருக்கு நீங்க என்ன இப்படி தூக்கிப் போகறது. அதிலும் கப்பல் சூவைங் சூவைங்னு ஆடுதா அப்போ அது கூட சேர்ந்து நீங்களும் ஆடறிங்களா அதைப் பார்க்கும் போது நீங்க என்னமோ தண்ணி அடிச்சிட்டு ஆடற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது” என்று சொல்லி அவள் சிரிக்க

“அடியேய் இம்ச! கொஞ்ச நேரம் பேசாம வாயேன்டி” என்று அவன் அவளை மிரட்டினாலும் அவன் முகம் என்னமோ காதலுடன் தான் இருந்தது.

“ஆஹா…நான் ம்சையா? இந்த இம்சைய நீங்க கல்யாணம் பண்ணி இன்னையோட ஒரு வருஷம் முடியப் போகுது” என்று சொல்லி அவனை வம்பிழுக்க

‘ஐய்யோ….. மனுஷனோட அவஸ்தைப் புரியாம படுத்துறாளே’ என்று மனதில் நினைத்தவன்

“இப்போ நீ வாய மூடிட்டு வரல, பேசற அந்த வாயக் கடிச்சி வச்சிடுவன்டி”

“அப்படியா? நீங்க கடிச்சிங்கனா நான் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்துடுவன் அத்தான். அப்பறம் நீங்க ஆரம்பித்த இடத்தில் இருந்து என்னைத் தூக்கி வரணும். இது தான் கேம் ரூல்ஸ் ஞாபகம் இருக்குல்ல? உங்களுக்கு வசதி எப்படி?” என்று கேட்க

“நீ எனக்கு சின்ன இம்சை இல்லடி. பெரிய இம்சை” என்றவன் தன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டிச் சிரிக்க

அதற்குள் அவர்கள் அறை வந்து விட கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றவன் அவளைக் கீழே விட அந்த அறையைப் பார்த்த மித்ராவோ ஆ…. என்று வாய் பிளந்து நின்றாள். கட்டில் முழுக்க பூ அலங்காரம் செய்து இருக்க சுவர் முழுக்க த்ரி டி அனிமேஷன் செய்த படங்கள் இருக்க பலூன் ஜிகினா தாளால் அங்கங்கே தோரணங்கள் கட்டி இருக்க எந்த ஒரு செயற்கை விளக்குகள் என்று எதுவும் இல்லாமல் அறை முழுக்க மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே இருக்க மொத்தத்தில் அந்த இடமே இந்திரலோகம் போல் காட்சி அளித்தது.

“வாவ்! செம்மையா இருக்கு அத்தான்” என்று சொன்னவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள அந்த நேரம் அவன் கட்டி இருந்த கடிகாரத்தில் மணி பன்னிரெண்டு என்று சொல்லி இசை ஒலிக்க

“ஹாப்பி ஃபர்ஸ்ட் இயர் வெட்டிங் ஆன்னிவெர்சரிடி பொண்டாட்டி” என்றவன் ஒரு கத்தியை கொடுத்து அங்கிருந்த கேக்கை இருவருமாக வெட்டப் பின் அந்தக் கேக்கை ஒருவர் மீது ஒருவர் பூசி முக்குளித்துத் தான் போனார்கள்.

போதும் போதும் என்ற அளவுக்கு தேன்நிலவு என்ற கடலில் திளைத்துக் கரை ஒதுங்கி வீடு வந்து சேர்ந்தவர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடன் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் ருத்ராவைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போன மித்ரா அங்குப் பள்ளியிலேயே மயங்கி விழுந்து விட பின் அந்தப் பள்ளி முதல்வர் தேவ்வுக்குத் தகவல் சொல்லித் தேவ்வுடைய மருத்துவமனையிலேயே அவளை சேர்க்க என்னமோ ஏதோனு இவன் பதறிப் போய் வந்தால் மித்ரா கருவுற்றிருக்கிறாள் என்ற சந்தோஷமான விஷயத்தைச் சொன்னாள் டாக்டர் மாலா.

அதைக் கேட்டு தேவ் சந்தோஷப் பட மித்ராவோ அவனை அணைத்துக் கொண்டு கண் கலங்க “தாங்க்ஸ் அத்தான்” என்று சொன்னாள்.

“போடி லூசு! நான் தான் உனக்குத் தாங்க்ஸ் சொல்லணும். என்ன அப்பாவா ஆக்கி இருக்கியே!”

இந்த விஷயத்தைக் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் அவளைக் கையில் வைத்துத் தாங்க இவ்வளவு நாள் பேசாமல் இருந்த தாத்தா கூட அவளிடம் பழைய படி அன்பாகப் பேசினார்.

நாட்கள் செல்ல மித்ராவை ஸ்கேனுக்கு வரச் சொல்லி மாலா தேதி கொடுத்து இருக்க அந்த நாளில் போனால் மாலாவுக்கு ஒரு டெலிவரி கேஸ் வந்து விட வேறு ஒரு டாக்டர் தான் மித்ராவுக்கு ஸ்கேன் பார்க்க வேண்டியதாகிப் போனது. மனைவியின் பக்கத்திலேயே நின்று தேவ் அந்த மானிட்டரையே பார்த்து கொண்டிருந்தான்.

திடீர் என்று “இது உங்களுக்கு ஃபர்ஸ்ட் குழந்தையானு?”அந்தப் பெண் மருத்துவர் மித்ராவிடம் கேட்க

அந்தக் கேள்வி மித்ராவின் நெஞ்சை சுருக்கென தைத்தாலும் அதை மறைத்து ஆமாம் என்று தலையாட்டினாள்.

மனைவியின் முகம் வாடிப் போனதைப் பார்த்த தேவ்

“ஏன் டாக்டர் குழந்தைக்கு எதாவது பிரச்சனையானு?” கேட்க

“நான் ரிப்போர்ட்ட டாக்டர் விஸ்வநாதனுக்கு அனுப்பிடறேன். நீங்க அவர் கிட்டையே கேளுங்கனு” சொல்லி அவர் விலகி விட

“அத்தான் நீங்க போய் விஷ்வா அண்ணா கிட்ட என்னனு கேளுங்க. அதிகமா தண்ணி குடிச்சதால நான் இப்போ ரெஸ்ட் ரூம் போகணும் போல இருக்கு” என்றவள் பின் அவன் கையை ஆதரவாக பிடித்து அழுத்து அழுத்தி விட்டுச் சென்று விட விஷ்வாவின் அறைக்கு தேவ் வரும்போது நெற்றியில் முடிச்சுட மித்ராவின் ரிப்போர்ட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

“என்னடா குழந்தைக்கு எதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுடானு” இவன் பதற

“டேய்பிரச்சனைஎல்லாம் ஒண்ணும் இல்லடா. நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு என் தங்கச்சி உடம்பு எப்படி தாங்குனு தான் யோசிக்கறன்” - விஷ்வா

“அடேய் ராஸ்கல் ஒழுங்கா என்னனு சொல்லிடு. வீணா என் கிட்ட அடி வாங்கியே சாகாத” என்று தேவ் பல்லைக் கடிக்க

“சந்தோஷமான விஷயம் தான்டா மாப்பிள. மித்ரா வயித்துல ஒரு குழந்தை இல்லடா மூணு குழந்த வளருது. அதுவும் நல்ல ஆரோக்கியத்தோட மூணும் முழு வளர்ச்சில இருக்கு” - விஷ்வா

“மாப்பிள அப்படியா சொல்றனு?” என்று தேவ் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தாள் மித்ரா. அவளைப் பார்த்ததும் “ஹாசினி” என்று தாவிச் சென்று மென்மையாக அவளைத் தேவ் அணைக்க

“என்ன அத்தான், என்ன ஆச்சி? குழந்தைக்கு எதாவது பிரச்சனையானு?” மித்ரா கேட்கும் போதே அவள் உடல் நடுங்குவதைப் பார்த்தவன்

“குழந்தைக்கு பிரச்சனைஎல்லாம் எதுவும் இல்லடா. இந்தக் குட்டி வயத்துக்குள்ள ஒரு பாப்பா இல்லடா மூணு பாப்பா வளருதுனு”சொல்லி அவள் வயிற்றைத் தொட்டுக் காட்ட “ஹாங்…….!” என்று விழி விரித்த மித்ரா “அப்போ நம்ம வீட்டுக்கு மூணு குட்டி பாப்பா வரப் போகுதானு?” கண்ணில் கண்ணீருடன் கேட்க ஆம் என்று தலையாட்டியவனோ அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திமுகம் எங்கும் முத்தமிட சந்தோஷத்தில் அவளும் அவனுக்கு முத்தமிட அங்கிருந்த விஷ்வாவோ

“டேய்...டேய்.. நானும் இங்க தான் இருக்கன். உங்க ரொமான்ஸ கொஞ்சம் நிறுத்துறிங்களானு?” சொல்ல

“நாங்க ஏன்டா நிறுத்தணும்? நீ வேணா எழுந்து வெளியே போடா” - தேவ்

“எல்லாம் என் நேரம்டா” என்று சொன்னாலும் இங்கிதம் அறிந்து விஷ்வா வெளியே சென்று விட்டான்.

இந்த விஷயத்தால் மறுபடியும் வீட்டில் இருந்த அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்தை அனுபவிக்க ருத்ராவுக்குத் தான் அதிக சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் தன் தந்தையின் மார்பில் சாய்ந்து இருந்தவள்

“அப்பு, நான் அம்மா மடில உட்காரக் கூடாதா? விஷ்வா அங்கிள் சொன்னாங்கனு!” ருத்ரா கேட்க

“அப்படி இல்லடா, நீ அம்மா மடில உட்காரலம். ஆனா அம்மா வயிற்றுல தான் சாய்ந்து உட்காரக் கூடாது. ஏன்னா லஷ்மி ஆன்ட்டி வீட்டுக்குப் போன போது ஒரு குட்டிப் பாப்பா பார்த்த இல்ல? அந்த மாதிரி அம்மா வயித்துக்குள்ள மூணு பாப்பா இருக்கு. அதனால தான் அங்கிள் அப்படி சொன்னார்னு” தேவ் மகளுக்கு விளக்கம் அளிக்க

“ஹேய்….. ஜாலி ஜாலி! அர்ஷா கூட விளையாட அவளுக்கு ஒரு பாப்பா இருக்கற மாதிரி என் கூட விளையாட பாப்பா வருமா? அதுவும் மூணு பாப்பா!” என்றவள் தந்தையிடம் இருந்து நழுவிக் கட்டிலில் தவழ்ந்து தாயின் வயிற்று அருகில் வந்தவள்

“ஹலோ.. த்ரீ குட்டீஸ்! நான் தா உங்க குட்டிமா வந்துர்க்க. உள்ள இருக்கிற மூனு பேரு எப்ப எங்கூட வெளாட வருவிங்க? பாப்பா பாவம் இல்ல? சீக்கம் வந்துடுங்கனு!” மழலையாய் சொல்லியவள் குனிந்து தாயின் வயிற்றில் முத்தமிட ருத்ராவின் முகத்தை நிமிர்த்தி சந்தோஷத்தில் அவள் முகம் எங்கும் முத்தமிட்டாள் மித்ரா.

“ஒரு பொண்ணு ஒரு குழந்தைய பெற்று எடுப்பதே கஷ்டம். இதுல நீ எப்படி மூணு குழந்தையப் பெற்று எடுக்கப் போறனு தெரியலையேனு?!” ஒரு தாயாக விசாலம் கவலைப் பட “எனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுமா. இவங்க மூணு பேரும் யார் குழந்தைங்க? உங்கப் பிள்ளையோட வாரிசுங்க! எப்படி என் அத்தான் எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காம சந்தோஷத்தை மட்டும் கொடுக்கறாறோ, அப்படித் தான் அவர் பிள்ளைகளும் எனக்கு அதிக வலியோ சிரமமோனு எதுவும் குடுக்காம நல்ல மாதிரியா பிறப்பாங்க” என்று அவள் உறுதி படக் கூற அதைக் கேட்டு அவளை அணைத்து உச்சி முகர்ந்தார் விசாலம்.

எல்லோரும் அவளை நல்ல மாதிரி பார்த்துக் கொண்டாலும் தேவ்வும் விசாலமும் அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டனர். மருமகள் உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து உடம்பில் ஒரு பலம் வந்தவராகஇப்போது எல்லாம் அவரே தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்து இருந்தார் விசாலம்.

வயிற்றில் குழந்தை அசையும் போது எல்லாம் மித்ரா கண்கள் மின்ன தேவ்விடம் சொல்லும் போது அதை அவனும் உணர்ந்து அந்த சந்தோஷத்தில் பங்கு கொள்வான் தேவ்.

ஏழாம் மாதமே மித்ராவுக்கு வளைகாப்பு செய்து விட அதுக்கு அடுத்த வாரமே தேவ்வின் தாத்தாவுக்கு நினைவு நாள் வர எப்போதும் அவர் நினைவு நாளில் எதாவது ஒரு ஹோமுக்குச் சென்று அன்று ஒரு நாள் முழுக்க அந்த ஹோம்மின் செலவுகளை தேவ் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

அதன்படியே இந்த வருடமும் அப்படிச் செய்தவன் அங்கு உள்ளவர்களுக்கு மித்ரா கையால் சாப்பாடு கொடுக்கச் சொல்லி அழைக்க அதைக் கேட்டு விசாலம் தான் சத்தம் போட்டார்.

“என்னடா நினைச்சிட்டு இருக்க? விஷ்வா அவள நடக்கவே கூடாதுனு சொல்லி இருக்கான். நீ என்னமோ வாயியும் வயிறுமா இருக்கர பொண்ணப் போய் இங்க வா அங்கனு வான்னு கூப்பிட்டுகிட்டு இருக்க!”

“மம்மீ எதுவும் நடக்காது, நான் அவளப் பார்த்துக்கிறேன்” என்றவன் பின் தன் மனைவியிடம் திரும்பி “அங்க உனக்கு ஒரு ரூம் ரெடி பண்ணி இருக்கன், நீ அங்க இரு. பிறகு நான் கூப்பிடும் போது மட்டும் வந்து சாப்பாடு கொடுத்தா போதும். திரும்ப ரூமுக்குப் போய் நீ ரெஸ்ட் எடுத்துக்க. நான் உன் கூடவே இருப்பன் ப்ளீஸ் வா ஹாசினி” என்று அவன் அழைக்க

ஹோமில் மனநலம் குன்றியவர்கள் ஆதரவற்ற முதியோர் குழந்தைகள் என இருக்க தேவ் அவளிடம் சொன்னது போலவே சாப்பாடு கொடுக்கும் நேரத்தில் தான் மித்ராவை அழைத்தான்.

அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் நாற்காலி போட்டு அமர்ந்து உணவு கொடுக்க வரிசையில் நின்று உணவு வாங்கிச் சென்றவர்களில், ஒரு வயதான பெண்மணி “குழந்தை உண்டாகி இருக்கிறியா தாயி? நல்ல மாதிரியா அந்தக் குழந்தைய பெத்து எடுப்ப! நீயும் உன் வீட்டுக்காரரும் எல்லா வித சந்தோஷத்தையும் பெற்று நீண்ட காலம் நீடுழி வாழ்விங்க!” என்று மனமார வாழ்த்தி அவர் விலகி விட

அடுத்து வந்தவர்களைப் பார்க்கும் போது தான் மித்ரா உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர்களைப் பார்த்து அவள் அசையாமல் இருக்க பக்கத்தில் நின்றிருந்த நிர்வாகியோ எதிரில் இருந்த பெண்மணியிடம் “உங்க மகனுக்குப் பதில் நீங்களே உணவு வாங்கிக்கங்கமா. சரியாத் தட்டைப் பிடித்து வாங்குங்கனு” சொல்ல “ம்ம்ம்…..” என்று தலையாட்டியபடி உணவுக்காகத் தட்டை மித்ரா முன் நீட்டினார் ஷியாமின் அம்மா. அவர் பக்கத்திலோ சற்று மனநலம் குன்றிய நிலையில் ஷியாம்!

ஷியாம் மித்ராவின் மீது வைத்தப் பார்வையைக் கூட எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க அவன் தாயோ அவமானத்தில் தலை கவிழ்ந்து இருந்தார்.

மித்ரா அசையாமல் இருப்பதைப் பார்த்த தேவ் அவள் கையைப் பிடித்து உணவை அள்ளி அவர்கள் தட்டில் போடப் பார்க்க அதைச் செய்ய விடாமல் அவன் கையைத் தன் மறுகையால் தடுத்தவள். பின் நிர்வாகியிடம் திரும்பி

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. மீதிய நீங்க கொடுத்துக்கங்கனு” சொல்ல தேவ் அவள் நிலையறிந்து தன் இடது கையை அவள் தோளைச் சுற்றி படரவிட்டவன் ஆதரவாக அவளை அணைத்துக் கொள்ள அவன் கையணைப்பிலேயே சற்றுத் தூரம் வந்தவள் பின் திரும்பி ஷியாமைப் பார்க்க, அந்தப் பார்வையோ ‘பாருடா நல்லா பாரு! அன்று நான் உன்னிடம் இட்ட சவால்ல ஜெயிச்சிட்டன் பார்த்துக்கோ என் வாழ்க்கைய!’ என்பது போல் அவனுக்குச் சொல்ல அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்களாலேயே சொன்ன செய்தியில் தலை கவிழ்ந்தான்.

அறைக்கு வந்த உடனே “எப்படி அத்தான் இப்படி? இது நிச்சயம் நீங்க தான் அத்தான் ஏதோ செய்து இருக்கிங்கனு!” அவள் படபடக்க

“ஹாசினி ரிலாக்ஸ்… ஆமாம், நான் தான் செய்தேன்!” என்றவன் என்ன செய்தான் என்று சொன்னான்.

எப்போது மித்ராவின் விஷயம் தெரிய வந்ததோ அதன் பிறகு ஷியாமை எங்கு ஏது என்று தேடிச் சில நண்பர்களை அவனுடன் பழக விட்டு ஷேர் மார்க்கெட்டில் அவன் பணத்தை முதலீடு பண்ணச் சொல்லி ஆசைக் காட்ட அவர்கள் வார்த்தையில் மயங்கி ஷியாம் முதலீடு பண்ண

அவன் போட்ட பணத்தை மட்டும் இல்லாமல் இருந்த சொத்து வீடுனு எல்லாம் இழந்து அவனை ஒண்ணும் இல்லாமல் நிற்க வைக்க தேவ்வுக்கு ஒரு மாதம் தான் தேவைப்பட்டது. பின் அந்த நஷ்டத்தை மறக்க குடியையும் அந்த நண்பர்கள் பழக்கி விட குடிக்கும் அடிமையானான் ஷியாம். வேலைக்கும் போகாமல் சொத்து பத்தையும் இழந்து சதா குடியில் அவன் கிடக்க இதைப் பார்த்த அவன் மனைவி இவன் தனக்கு வேண்டாம் என்று உதறி விட்டு வேறு ஒரு வாழ்வை பார்த்துக் கொண்டு ஷியாமை விட்டுச் சென்று விட்டாள்.

அதில் இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பிக்க ஒருமுறை அப்படி குடித்து விட்டு வண்டி ஓட்டியவனை ஆக்ஸிடென்ட் ஆக வைத்து தலையில் அடிப்பட்டதால் அவனைப் பைத்தியம்னு கூறி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து அரைப் பைத்தியமாகவே ஆக்கி விட்டான் தேவ்.

ஷியாம் முழு பைத்தியமாகவும் ஆகக் கூடாது அதேசமயம் தெளிந்த மனிதனாகவும் இருக்கக் கூடாது. சுற்றி நடப்பதை எல்லாம் அவன் உணர வேண்டும். ஆனால் தான் என்ன பேசுறோம் செய்கிறோம் என்பதை அறியாமல் அரைப் பைத்தியமாக இருக்க வேண்டும் என்பது தான் தேவ்வின் எண்ணமாக இருந்தது.

இதை எல்லாம் சொல்லி முடித்தவன் “உன் கையால அதுங்களுக்குச் சோறு போடுவனு நினைச்சன். ஏன் செய்யல? அதுங்களுக்கு நான் கொடுத்த தண்டனை பெரிசுனு நினைக்கிறியா?” - தேவ்

“இல்ல அத்தான், நான் அப்படி நினைக்கல. இதை விடவும் அதுங்களுக்குத் தண்டனை கொடுத்து இருக்கணும். ஒருத்தவங்க சாகும் போது யாருக்கு அவங்க பாவம் செய்தாங்களோ அந்தப் பாவத்த மன்னிச்சி கடைசியா அவங்க கையால சாகக் கிடக்கிறவங்களுக்கு உயிர்த் தண்ணிக் கொடுக்கச் சொல்லுவாங்க.

இன்று அப்படி ஒரு நிலையில தான் அவங்க இரண்டு பேரும் இருக்காங்க. அப்படிப் பட்டவங்களுக்கு என் கையால உணவு கொடுக்க நான் விரும்பல. இப்போனு இல்ல, நாளைக்கு உண்மையாவே இருவரும் சாகற நிலையில் இருந்தாலும் நான் கொடுக்க மாட்டன்! ஏன்னா அவங்க இரண்டு பேரையும் எந்த ஜென்மத்திலும் நான் மன்னிக்கவே மாட்டன்! அதனால தான் என் கணவனான உங்களையும் உணவு கொடுக்க வேண்டாம்னு தடுத்தன்” என்றவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு

“இந்த மாதிரி நேரத்துல உன் மனசு நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருக்கணும்னு சொல்லுவாங்க. நீ சந்தோஷமா இருக்கனு தெரியும். ஆனா நிம்மதி? அதுக்கு ஷியாம் கிட்ட நீ விட்ட சவால்ல ஜெயிச்சிட்ட என்றதுக்கு நீ என்கூட வாழற இந்த வாழக்கைய ஷியாம் அவன் கண்ணாலப் பார்க்கணும். அதே மாதிரி அதுங்க இருக்கற நிலைமையும் நீ அறியணும். அப்ப தான் உன் மனசு கொஞ்சமாவது அமைதி அடையும்னு நினைச்சன். அதனால தான் உன்னப் பிடிவாதமா கூட்டிட்டு வந்தன்டி” – என்று தேவ் சொல்லி முடிக்கவும்

தான் விட்ட சவாலில் ஜெயித்ததை விட தனக்காக இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யும் கணவன் கிடைத்ததில் பூரித்துத் தான் போனாள் மித்ரா.

ஆனால் தேவ்வோ ‘உண்மை தான் ஹாசினி! அதுங்களுக்கு இந்த தண்டனை கம்மிதான். கண்டிப்பா நான் இதோட விட மாட்டேன். இப்பவாது இந்த காப்பகத்துல சாப்பாடு போட்டுக்கத் துணிமணி எல்லாம் இருக்கு. நாளைக்கு இது எதுவும் இல்லாம இதை விட மோசமான நிலைமையில நிக்க வைப்பன். அதையும் உன் கண்ணால நீ பார்க்கத் தான் போற!’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் தேவ்.

நாட்கள் உருண்டோட மித்ராவுக்குப் பிரசவ வலி ஏற்பட அவளைப் பிரசவ அறையில் சேர்த்த தேவ் அவள் பக்கத்திலேயே டென்ஷனுடன் இருந்தவன்

“ஹாசினி,நார்மல் டெலிவரி வேணுமா? ரொம்ப வலிக்கும்டி. அதிலும் மூனு குழந்த வேறடி! அதனால ஆப்பிரேஷன் பண்ணிடலாம்டி ப்ளீஸ்” என்று கெஞ்ச

“அத்தான் நம்ம குட்டீஸ்ங்க எனக்கு அதிகக் கஷ்டம் கொடுக்க மாட்டாங்க. கொஞ்சமேனு தான் வலிக்கும். அந்த வலியையும் என்னாலத் தாங்கிக்க முடியும் அத்தான். மூனு குழந்தைனாலும் நார்மல் டெலிவரிக்கு டிரை பண்ணலாம் அத்தான். அப்படி முடிலனா ஆப்பரேஷன் பண்ணிக்கிறேன். நீங்க கவலப் படமா வெளில போய் தாத்தாவோட அம்மாவோட இருங்க” - மித்ரா

“ம்ஊம்…..முடியாதுடி, நான் இங்கதான் இருப்பேன்!” என்றவன் அங்கேயே இருக்க

கொஞ்ச கொஞ்சமாக விட்டு விட்டு மித்ராவுக்கு வலி வர அதைப் பல்லைக் கடித்துப் பொறுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலும் தாங்க முடியாத அளவுக்கு

உயிர் வலி வரத் தன்னை மீறிக் கதறியவளைப் பார்த்துத் துடித்துத் தான் போனான் தேவ்.

மித்ரா சொன்ன மாதிரி அதிக நேரம் கஷ்டத்தைக் கொடுக்காமல் தன் தாயின் வயிற்றில் இருந்து அடுத்து அடுத்து என இவ்வுலகிற்கு வந்தார்கள் அவர்களின் மூன்று இளவரசர்கள்!

உடல் சோர்ந்து போகக் கண்ணில் கண்ணீருடன் அவள் தேவ்வைப் பார்க்க அவளிடம் குனிந்தவன் மூன்று பேரும் பையன்டா செல்லம்!” என்று கண்ணில் கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் தேவ்.

பின் மித்ரா மயக்கத்தில் சென்று விட திரும்ப அவள் மயக்கம் தெளியும் போது அவள் பக்கத்திலே தேவ் இருந்தான். அவள் தெளிந்து விட்டாள் என்பதை அறிந்து அவளைத் தூக்கிக் கட்டிலில் சாய்ந்தார் போல் அமர வைத்தவன் பின் ஒவ்வொரு குழந்தையாக அவள் கையில் கொடுக்க அந்தப் பூ குவியல்களை வாங்கிப் பார்த்தவள்

“மூன்று பேரும் அப்படியே உங்கள மாதிரியே இருக்காங்க அத்தான்!” என்றாள் சந்தோஷத்தில் கண்கள் மின்ன

“ம்ம்ம்…..அப்படியா?” என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் கையில் இருந்தக் குழந்தையை வருடிக் கொடுக்க

“இந்த நாலு பேரையும் நான் எப்படி சமாளிக்கப் போறனோ தெரியல அத்தான்?!” என்றாள் ருத்ராவையும் சேர்த்து

“எனக்கும் அதே கவலை தான்! ஐந்து பேர நான் எப்படி சமாளிக்கப் போறனு தெரியலையே?!” - என்று தேவ் ராகம் இழுக்க

“ஐந்து பேரா?” என்று கேட்டு மித்ரா அவனைப் பார்க்க

“ஆமாம்டி ஐந்து பேரு தான். அதில் நீ தான்டி என் முதல் குழந்த! அப்பறம் தான் இவங்க நாலு பேரும்” - என்று சொல்லி அவள் தோளில் அவன் கை போட்டு மென்மையாக அணைத்துக் கொள்ள

அவன் சொன்னதில் களுக்…… என்று சிரித்தவள் “ஆமாம் அத்தான்! இனிமே நீங்க வாங்கி வர்ற சாக்லேட்டை ஐந்து பங்கா பிரிக்கணும் இல்ல?” என்று அவள் கவலைப் பட அதில் வாய் விட்டுச் சிரித்தவன்

“நீ எல்லா விதத்திலும் எப்போதும் எனக்குக் குழந்தை தான்டா”

“ம்ம்ம்…..சரி அத்தான்! நான் எப்போதும் உங்களுக்கு குழந்தையாவே இருக்கன். ஆனா நீங்க மட்டும் எனக்கு அப்பாவா அம்மாவா தோழனா சகோதரனா இப்படி எல்லாமாக இருங்க” என்று சொல்லி மனதில் நிம்மதியுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மித்ரா.

ஒரு பெண்ணுக்குத்தனக்குக் கிடைத்த ஆண் கணவனாக மட்டும் இல்லாமல் அம்மாவாக அப்பாவாக தோழனாக சகோதரனாக இப்படி எல்லாமுமாக இருந்தால் அது அவளுக்கு வரம்!

அதன்படியே இன்றுமித்ராவாழ்வில் தேவ் என்ற வரம் கிடைத்து விட்டது. அதனால் இனி அவள் வாழ்வில் சுபம்….. சுபம்…. என்றும் சுபமே……

நிறைவுற்றது!

நன்றி!

[QUOTE="yuvanika, post: 679, member: 4"] [B][SIZE=6]அத்தியாயம் - 31[/SIZE][/B] [SIZE=6][B] டிரைவரிடம் கார் வேண்டாம்னு சொல்லி ஆட்டோ கூட்டி வரச் சொன்னவள், முன்பு இந்த வீட்டை விட்டுப் போகும்போது இருந்த வீம்போ பிடிவாதமோ அலட்சியமோ இப்படி எந்த ஒரு உணர்வுமே இல்லாமல் மனம் முழுக்கப் பாரத்தைச் சுமந்து கொண்டு முகமோ சோர்ந்து போய் இருக்க ஏதோ பிடிக்காத ஒரு செயலைச் செய்ய மனமே இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்வது போல் தான் இப்போது மித்ரா இந்த செயலைச் செய்தாள். சென்னை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் எப்போது ருத்ரா தூங்குவாள்னு காத்திருந்தது போல் அவள் கண்களில் தேக்கி வைத்திருந்த அணைக்கட்டு நீர் வெள்ளம் உடைத்து பெருக்கெடுத்து ஓடுவது போல் அவள் கண்ணிலும் கண்ணீர் கரை புரண்டது. அவளால் அதை மட்டும் தானே செய்ய முடியும்?! தன்னை இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்திய விதியை நினைத்து ஆத்திரம் வந்தது. அந்த விதியை நினைத்துக் கோழை போல் ஓடி ஒளியும் தன்னை நினைத்தே வெறுப்பு வந்தது. இதை எல்லாத்தையும் விட இனி என் தேவ்வைப் பார்க்கவே முடியாது என்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சென்னைக்கு வந்து இறங்கியவுடன் அங்கு அவளுக்குத் தெரிந்த ஓரே இடமான முன்பு தான் தங்கியிருந்த காப்பகத்துக்கே சென்றாள் மித்ரா. எங்கு ஏது எப்படி இருக்கிறாள்னு இதுவரை மித்ராவைப் பற்றி தெரியாமல் இருக்க அவளோ கழுத்தில் தாலி கயிறுடன் காலில் மெட்டி, நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் மட்டும் இல்லாமல் ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து நிற்க அவளைக் கண்ணில் கேள்வியுடன் காப்பக நிர்வாகி வசந்தி பார்க்க அவர் கேள்விக்கான பார்வையைத் தவிர்த்தவள் “என்னை எதுவும் இப்போ கேட்காதிங்ககா. நேரம் வரும்போது பிறகு நானே எல்லாம் சொல்றன். ஆனா இப்போ நானும் என் பொண்ணும் இங்க தங்க மட்டும் இடம் கொடுங்ககா ப்ளீஸ்னு!” அழுகையை அடக்கிய குரலில் இவள் கெஞ்ச, சரினு ஒத்துக் கொண்டவர் முன்பு அவள் தங்கியிருந்த அறையையே கொடுக்க அதையே ஏற்றுக் கொண்டாள் மித்ரா. ஆனால் அங்கு தங்கினப் பிறகு தான் அவளின் சோதனைக் காலமே ஆரம்பமானது. அவள் தனியாக இருக்கும் போது அவளுக்கு நிம்மதியாக சொர்க்கமாகத் தெரிந்த இடம். அதே ருத்ராவோடு இருக்கும் போது நரகமாக இருந்தது. சிமெண்ட் ஷீட் போட்ட காற்று வசதி கூட இல்லாத அந்தச் சின்ன ரூமில் சற்று வேகமாகக் கூட ஓடாத மின்விசிறி. கீழே பாய் விரித்து ருத்ராவைத் தன் மடியில் படுக்க வைத்திருந்தாள் மித்ரா. அங்கு வந்ததிலிருந்து ருத்ரா எதுவும் சாப்பிடவில்லை. தேவ் வீட்டில் பால் பழம்னு விதவிதமான சாப்பிட்ட பிள்ளை இங்கு ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. மதியம் செய்த சாதமும் குழம்பும் இருக்க, அதிலும் அரிசி சற்றுப் பெரியதாக இருக்கக் குழந்தையால் விழுங்க முடியவில்லை. ‘சரி வெளியே கடையிலிருந்து எதாவது வாங்கிட்டு வந்து தரலாம் என்றால் வசந்தி அக்கா எதாவது சொல்லுவாங்களோ என்ற பயம்! எல்லார் குழந்தையும் சமம்னு நினைப்பவர் அவர். அதனால் நாளைக்கு குழந்தையை வெளியே அழைத்துப் போய் எதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு’ முடிவு எடுத்தாள் மித்ரா. பசியாலும் புழுக்கத்தாலும் கொசுக் கடியாலும் ருத்ரா தூங்கவேயில்லை. இதை எல்லாம் விட ‘அப்பு எங்கமானு?’ கேட்டுக் கேட்டுப் பார்த்துட்டு உடல் அசதியில் தன்னை மீறி தூங்கிப் போனாள் குழந்தை. குழந்தைக்கு விசிறிக் கொண்டிருந்த மித்ராவுக்கோ இதையெல்லாம் பார்க்கும் போது நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருந்தது. ‘தன்னுடைய சுயநலத்திற்காக ருத்ரா வோட எதிர்காலத்தையும் வளமான வாழ்வையும் கெடுக்கிறோமோனு?’ நினைத்தாள். ‘இப்போதே தேவ்வை இப்படி தேடுறாளே? இன்னும் வரும் நாட்களில் எப்படிச் சமாளிக்கப் போறோமோனு?’ கலங்கியவள் ‘என்னாலயே தேவ்வை மறக்க முடியலையே! பிறந்ததில் இருந்து அவர் கையிலேயே வளர்ந்த குழந்தையால் எப்படி மறக்க முடியும்?’ என்ற எண்ணம் தான் தோன்றியது. ‘இந்நேரம் அந்த லெட்டரப் பார்த்து இருப்பார் இல்ல?! என்ன நினைச்சி இருப்பார்? கோபப் பட்டு இருப்பாரோ?! நான் எங்க போய் இருப்பனு தேடி இருப்பாரோ?! ஒருவேளை என்னைக் கண்டுபிடித்து இங்கயே வருவாரோ? என் தேவ் சாப்டு கூட இருக்க மாட்டார்! நிம்மதியா தூங்கக் கூட மாட்டார்! அவர் உலகமே நானும் ருத்ராவும் தான்! அப்படி இருக்கும் போது அவர் எப்படி அங்க நிம்மதியா இருப்பார்?’ அப்படி அவள் நினைக்கும் போது தான் அவளுக்கே ஒன்று உறைத்தது. ‘தேவ் எப்போது என் தேவ் ஆனார்?’ என்று! ‘ஆமாம், என் தேவ் தான்! அவர் என் கணவர்! இந்தப் பிறவி இல்லை இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் தான் என் கணவர்! ஆனால் அப்போதாவது அவருக்கு ஏற்ற மனைவியாக நான் இருக்க வேண்டும்னு’ வேண்டிக் கொண்டாள் மித்ரா. இரவு முழுக்க இதே யோசனையில் இருந்ததாலும் அழுததாலும் மித்ரா தூங்கவேயில்லை. மறுநாள் குழந்தையை வெளியே அழைத்துப் போய் அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து நல்ல மாதிரியாகப் பார்த்துக் கொண்டாலும் ருத்ராவோ, ‘அப்பு எங்க?’ என்ற பாட்டை நிறுத்தவேயில்லை. இப்படிப் பட்ட குழந்தையைக் காப்பகத்திலே விட்டுட்டு வேலைக்குப் போக நினைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நொந்து போனாள். அன்றும் இரவு முழுக்க ருத்ரா தூங்கவேயில்லை. தன்னை மீறி உடல் அசதியில் தூங்கும் போது கூட அப்பு எங்க என்றே பிதற்றிக் கொண்டிருந்தாள். மறுநாள் எழுந்ததிலிருந்து ருத்ரா மித்ராவிடம் பேசவில்லை. அவள் கொடுத்த பாலைக் குடிக்காமல் ஏன் பச்சைத் தண்ணி கூட குடிக்காமல் அவள் பேச்சை மதிக்காமல் தோட்டத்திலிருந்த ஓர் கல்லில் அமர்ந்து கொள்ள. எவ்வளவு சமாதானப் படுத்தியும் குழந்தை உள்ளே வரவில்லை. அவளை விடாப் பிடியாக உள்ளே தூக்கிச் சென்றதில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். ‘சரி, எப்படி இருந்தாலும் பிறகு உள்ளே தான வந்தாகணும்னு!’ நினைத்து மித்ரா விட்டுவிட, விடாப் பிடியாக உட்கார்ந்து கொண்டு தேவ்வைக் கேட்டு சத்தியாகிரகம் செய்தாள் ருத்ரா. வெயிலும் ஏற ஏற அவள் பிடிவாதத்தைப் பார்த்த மித்ரா, “இங்க பாரு ருத்ரா, இப்படி எல்லாம் செய்தினா அம்மா அடி பின்னிடுவன்! ஒழுங்கா அம்மா பேச்சக் கேட்டு உள்ள வா” என்று மிரட்ட இதற்கு எல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல் கண்ணத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் ருத்ரா. அதைப் பார்த்த மித்ராவுக்கோ கோபம் தலைக்கு ஏற, “நீ இப்படி எல்லாம் செய்தா உன் அப்பு வந்துடுவார்னு நினைச்சியா? இனிமே உன் அப்பு வர மாட்டார், நாம ரெண்டு பேர் மட்டும் தான் தனியா இருக்கணும்னு!” கத்த அதைக் கேட்ட ருத்ராவோ கண்கள் கலங்க உதடு துடிக்க “யூ ஆர் பேட் மம்மீ! நீ எனக்கு வேணாம், எனக்கு அப்பு தான் வேணும்! எனக்கு அப்பு தான் வேணும்!” என்று அழ, மித்ராவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. பின் குழந்தையிடம் நெருங்கியவள் அவளுக்குச் சமமாகத் தரையில் மண்டியிட்டு அமர்ந்து, “இங்க பாரு குட்டி, அப்புக்கு வேலை இருக்காம்! அதனால் தான் என்கிட்ட உன்னப் பார்த்துக்கச் சொன்னார்னு” அவளை சமாதானப் படுத்த அதைக் கேட்ட ருத்ரா “அப்புக்கு அந்த வேலை வேணானு சொல்லு! அப்புக்கு பாப்பா தான் வேணும், பாப்பாக்கும் அப்பு தான் வேணும்! எனக்கு அப்பு வேணும். அப்பு கிட்ட என்ன கூட்டிப் போ மம்மீ. அப்புவ இப்போ வரச் சொல்லுனு” அழுதவள் “ஏன் மம்மீ, அப்புக்கு பாப்பாவ பிடிக்கலையானு?” கேட்க நொருங்கிப் போனாள் மித்ரா. “இல்லடா, இல்லடா! உன்ன ரொம்பப் பிடிக்கும்டா அப்புக்கு! இன்னும் சொல்லப் போனா இந்த உலகத்திலே உன்ன மட்டும் தான்டா அவருக்குப் பிடிக்கும்னு” சொல்லி அவளை அணைத்து சமாதானப் படுத்தினாள் மித்ரா. இதையெல்லாம் அங்கிருந்து பார்த்த வசந்தி மித்ராவை நெருங்கி அவள் தோள் மீது கை வைத்து “குழந்தைய ரூமுக்குக் கூட்டிப் போ மித்ரா. சாப்ட பிறகு எதுவா இருந்தாலும் பேசலாம்னு” சொல்ல “அப்பு வந்தா தான் நான் உள்ள போவேன்” என்றாள் ருத்ரா. “அப்பு இங்க வரமாட்டார்டா. நீங்க ரெண்டு பேரும் தான் அப்பு கிட்ட போகணும். இப்போ நான் சொல்ற மாதிரி செய்திங்கனா நானே உங்கள அப்பு கிட்ட அனுப்பி வைப்பனாம்! குட்டி செல்லம் நல்லவங்கதான? இந்த ஆன்ட்டி சொன்னா கேட்பிங்க தானே?” என்று வசந்தி ருத்ராவைச் சமாதானப் படுத்த “அக்கா…” என்று ஏதோ சொல்ல வந்த மித்ராவை தடுத்து “குழந்தைய முதல்ல ரூமுக்குக் கூட்டிப் போய் சாப்பிட எதாவது கொடுத்துத் தூங்க வை மித்ரா. அவ ரொம்ப சோர்ந்து போய் இருக்கா. பிறகு என் ரூமுக்கு வா, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்னு” கட்டளையிடும் தொனியில் பேசியவர் பின் அங்கிருந்து சென்று விட ருத்ராவுக்கு இட்லி கொடுத்து அவள் தூங்கினப் பிறகு அவளைப் பார்த்துக்கச் சொல்லி ஆயம்மாவை துணைக்கு வைத்து விட்டு வசந்தி ரூமுக்குச் சென்றவள் அவர் கேட்கும் முன்பே இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்வில் நடந்தது அனைத்தும் சொல்லி முடிக்க. “உன்ன புத்திசாலினு நினைச்சன் மித்ரா. இவ்வளவு பெரிய முட்டாளா மட்டும் இல்லாமல் எவ்வளவு பெரிய சுயநலவாதியா இருக்க நீ?! ச்சே…. உன்னைப் போய் என் பொண்ணா நினைச்சனே!” - வசந்தி அவர் சொன்ன வார்த்தையில் “அக்கா!” என்று அதிர்ந்தவளைப் பார்த்து “ஆமாம்.. நீ சுயநலவாதி தான்! உன் குடும்பத்தோட மானத்தக் காப்பாற்றி உன்னத் தன் நெஞ்சில வைத்துப் பார்த்து கிட்ட தேவ்வுக்கு நீ குடுத்தது என்ன? அசிங்கம், அவமானம், இந்த சமுகத்தில் தலை குனிவையும் தான? இதை எல்லாம் விட ஒரு தகப்பன் கிட்டயிருந்து அவர் மகளைப் பிரிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு? அவர் ஒண்ணும் ருத்ராவுக்கு உண்மையான அப்பா இல்லனு சொல்லவரியா? குழந்தை பிறந்த மறு நிமிடமே அந்தக் குழந்தையோட முகத்தைப் கூடப் பார்க்காமத் தன்னுடைய சந்தோஷம் தான் முக்கியம்னு போனவ பவித்ரா! ஆனா தேவ், இனி தன் உலகமே ருத்ராதான்னு அவளைக் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கிட்டார். அப்ப அவர் தான ருத்ராவோட அப்பா? குழந்தைகள பெத்தா மட்டும் போதாது, அந்தக் குழந்தைகள எப்படி வளர்க்கிறோம் என்றதுல தான் இருக்கு தாய் தந்தை என்ற அங்கீகாரம். கொஞ்ச நாள் பழகின உன்னாலையே ருத்ராவ விட முடியலையே? பிறந்ததிலிருந்து ருத்ராவத் தன் கையில வச்சி வளர்த்த தேவ் அங்க எப்படி இருப்பார்? அன்னைக்கு நீ செய்த தப்பையே நினைச்சி இன்று தேவ்வுடைய வாழ்வையே அழிச்சது மட்டும் இல்லாமல் நாளைக்கு ருத்ராவோட வாழ்வையும் அழிக்கப் போறியே, அது உனக்குத் தெரியல? இது மட்டும் இல்லாமல் இன்னும் எத்தன பேர் வாழ்க்கைய உன் பிடிவாதத்தால அழிக்கப் போற? இன்னைக்கு அந்தப் பிஞ்சு ஒரு கேள்வி கேட்டுச்சே, என் அப்பாக்கு என்னப் பிடிக்காதானு? அதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? இந்த வயசுலையே என் அப்பாக்கு என்னப் பிடிக்காது என்ற எண்ணத்தை நீ அவ ஆழ் மனசுல பதிய வைக்கிற மித்ரா! நீ நாளைக்குத் தெளிந்து இதைச் சீர் செய்யணும்னு நீயே நினைச்சாலும் உன்னால் செய்ய முடியாது. அதிலும் ருத்ராவோட பிறப்பு பற்றி நாளைக்கு அவளுக்குத் தெரிய வரும் போது, இதனால தான் நம்ப அப்பா நம்மள ஒதுக்கிட்டாருனு நினைப்பா. அப்போ உண்மையாவே தேவ் ருத்ரா மேல வச்ச பாசத்துக்கு என்ன மதிப்பு இருக்கு? அன்று சுயநலமா முதுகெலும்பே இல்லாத கோழையா ஓடி ஒளிஞ்சி உனக்கு ஷியாம் செய்த நம்பிக்கை துரோகத்தைத் தான் இன்று தேவ்வுக்கு நீ செய்து இருக்க! இனி என் வாழ்வில் எல்லாமே நீ தான் என்ற நம்பிக்கைனால தான அவர் வாழ்வில் நடந்த அனைத்தையும் உன் கிட்ட சொன்னார்? அப்படிப் பட்ட அவர ஏமாற்றிட்டு ஓடி ஒளியறியே, இப்போ அவர் மனசு என்ன பாடுபடும்னு நான் உனக்குச் சொல்லித் தெரிய வேணாம். ஏன்னா அந்த வேதனைய நீயும் அனுபவிச்சவனு!” அவர் சொல்லச் சொல்ல சாட்டையால் அடி வாங்கியது போல் நின்றிருந்தாள் மித்ரா. “அதனால பழசை எல்லாம் மறந்துட்டு இனியாவது உன் வாழ்க்கையை நீ வாழ நினை! இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. நாளைக்கே நீ உன் வீட்டுக்குப் போற வழியப் பாரு” என்று அவர் முடிக்கும் நேரம் ருத்ராவைப் பார்த்துக்கச் சொல்லி விட்டு வந்த ஆயம்மா குழந்தைக்கு ஜுரத்தில் உடம்பு அனலாக கொதிப்பதாகச் சொல்ல உடனே டாக்டரை அழைத்து என்ன ஏது என்று பார்த்து டாக்டர் போன பிறகு மித்ராவிடம் திரும்பியவர் “நாளைக்கு குழந்தைக்கு எதாவது ஆச்சினா என்னால தேவ்வுக்குப் பதில் சொல்ல முடியாது மித்ரா. அதனால அவர் போன் நம்பர் கொடுனு” வசந்தி கேட்க “இல்லக்கா இல்ல.. அவர் இங்கு வர வேண்டாம்! நானா தான் அந்த வீட்டை விட்டு வந்தன். அதனால நானா அந்த வீட்டுக்குப் போகறது தான் சரி. நாளைக்குக் காலையிலேயே நான் கிளம்பறன் அக்கானு” அவள் கண்ணீருடன் சொல்லப் பார்த்து இதற்குப் பிறகாது புத்திசாலித் தனமா நடந்துக்கோ” என்று சொல்லி அவர் சென்று விட ஜுர மயக்கத்தில் “அப்பு அப்பு” என்று அனத்திக் கொண்டிருந்த மகளைத் தூக்கித் தன் மடியில் படுக்க வைத்தவள் “நாளைக்குக் கூட்டிப் போறன்டா அம்மா. பாப்பாக்கு உடம்பு நல்லா ஆன உடனே நாளைக்கு அப்பு கிட்ட போகலாம். இனிமே பாப்பா அப்பு கூடத் தான் இருப்பானு” சொல்லி மகள் தலையைக் கோதி விட அவள் தூக்கி மடியில் படுக்க வைத்ததில் தூக்கம் கலைந்த ருத்ரா, “பாப்பாக்கு அப்பு அம்மா ரெண்டு பேரும் வேணும்” எங்கே தாய் தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்ற பயத்தில் சொல்ல ருத்ராவைத் தூக்கித் தன் மார் மீது சாய்த்துக் கட்டி அணைத்தவள் “அம்மாவும் தான்டா! இனிமே அம்மா உன்னையும் அப்புவையும் விட்டு எங்கேயும் போக மாட்டேன்டானு” கண்ணீருடன் கூறியவள் அவளைத் தூங்க வைத்துப் பிறகு தானும் தூங்க இரவு பதினொன்றரை மணிக்கு அறைக் கதவை வசந்தி தட்டவும் ‘இந்த நேரத்தில் என்னவாக இருக்கும்?’ என்ற குழப்பத்தில் கதவைத் திறக்க வெளியே அவருடன் சேர்ந்து நின்றிருந்தான் கௌதம். அவளைப் பார்த்ததும் “மித்ரா, குழந்தையத் தூக்கிட்டு இப்பவே நீ கிளம்புனு” வசந்தி சொல்ல அவர் சொன்ன விதத்திலே என்னமோ ஏதோனு கலங்கியவள் உடனே தூங்கும் ருத்ராவைத் தூக்கித் தோள் மேல் போட்டுக்கொண்டு பையுடன் கிளம்பி விட, கார் வரை வந்த வசந்தி “பாத்து பத்திரமா போய்ட்டு வா மித்ரா. போனவுடனே அங்க என்ன நிலவரம்னு எனக்குப் போன் பண்ணி சொல்லு” என்று சொல்லி அவளை வழி அனுப்ப வாய் திறந்து பேச முடியாத நிலைமையில் இருந்தவள் வெறுமனே சரினு தலையாட்டி விட்டு காரில் ஏற காரை ஸ்டார்ட் பண்ண கௌதமிடம் “யாருக்கு என்ன ஆச்சி கௌதம்?” என்று கலக்கத்துடனே கேட்டாள் மித்ரா. “……..” அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க ‘தாத்தாவுக்குத் தான் ஏதோ ஆகி விட்டதோ?!’ என்ற எண்ணத்தில் “இப்போ தாத்தா எப்படி இருக்கார்னு?” குரல் நடுங்க அவள் கேட்க “தாத்தாவுக்கு ஒண்ணும் இல்ல அண்ணி. அண்ணனுக்கு தான்…..” என்று அவன் இழுக்க “அத்தானுக்கு என்ன ஆச்சி தம்பி?” மித்ரா பதற “ஆக்ஸிடென்ட் அண்ணி” - கௌதம் “ஐயோ….. நான் போனா அவர் நல்லா இருப்பாருனு இல்ல நினைச்சன்?! கடைசில இப்படி ஆகிடுச்சே! அவருக்கு இப்படி நடக்க நானே காரணம் ஆகிட்டனே! எப்போ என்னைக்கு எப்படி நடந்துச்சினு?” அவள் கதற “அண்ணி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. பாப்பா முழிச்சி உங்களப் பார்க்கறா பாருங்க. அப்பறம் குழந்தையும் அழப் போறா! இன்னைக்குத் தான் நடந்துச்சி அண்ணி. ஈவினிங் முக்கியமான கிளைன்ட் ஒருத்தரப் பார்த்துட்டு அவர் கூட டின்னர் முடிச்சிட்டுத் திரும்பும் போது நைட் ஒன்பது மணிக்கு நடந்திருக்கு. ஸோ அம்மா எனக்குப் போன் பண்ணி உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அதான் வந்தன்” என்றான் கௌதம். அவன் அம்மா என்று சொன்னது தேவ்வின் தாய் விசாலத்தை. அவள் இருந்த நிலைமையில் ‘அது யார்? நான் இங்கு இருப்பது அவருக்கு எப்படித் தெரியும்?’ என்று எதையும் அவனிடம் கேட்கவில்லை. இவர்கள் கோயம்புத்தூர் போய்ச் சேர்வதற்குள் இந்த இரண்டு தினங்களில் அங்கு தேவ் வீட்டில் நடந்ததை பார்ப்போம் மித்ரா ருத்ராவுடன் வீட்டை விட்டுப் போய் விட்டாள் என்று அறிந்த பிறகு கோபத்தில் ஆபிஸ்க்கு வந்த தேவ் தன் வேலைகளில் மூழ்கி விட சற்று நேரத்திற்கு எல்லாம் அவன் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவனோ அதில் வேதா என்று தெரிய “சொல்லுங்க சித்தி” என்றான் தேவ். “அப்பு ருத்ராவையும் மித்ராவையும் காணோம்பா! எப்போதுல இருந்து காணோம்னு தெரியல. நான் வீடு முழுக்கத் தேடிப் பார்த்துட்டன் காணோம்” என்று அவன் எடுத்த உடனே பதட்டத்தோடு சொல்ல சித்தியிடம் தெரியப் படுத்தாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்தவன் “சித்தி, ஃபர்ஸ்ட் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நான் இப்போ சொல்ற விஷயத்தக் கேட்டு டென்ஷன் ஆக வேண்டாம். எனக்கும் மித்ராவுக்கும் சண்ட. அதுல அவளக் கொஞ்சம் திட்டிட்டன். அதனால என் கிட்ட கோச்சிகிட்டு வீட்டை விட்டுப் போய்ட்டா. கோபத்துல குட்டிமாவையும் கூட்டிப் போய்ட்டா. வந்துடுவா சித்தி, நீங்க பயப்படாதிங்க” என்று அவருக்குப் பொய்யாக ஆறுதல் சொன்னவன் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போனை வைத்து விட, வேதாவுக்கோ பயங்கர கோபம் வந்தது மித்ரா மேல். ‘என்ன பொண்ணு இவ? எப்போ பாரு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போகறது?!’ என்று நினைத்து. இரவு பதினொன்றரை மணிக்கு அவன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திற்கு எல்லாம் அவன் ரூமுக்கு வந்தார் வேதா. “என்ன அப்பு, மித்ரா தாத்தா இங்க இருக்கார். மித்ரா உன் கிட்ட கோச்சிக்கிகிட்டு வீட்டை விட்டுப் போய்ட்டானு சொல்ற! அப்போ அவ எங்க போய் இருப்பா, அவங்க பெரியப்பா வீட்டுக்கானு?” யோசித்துக் கேட்க “அவ எங்க போய் இருக்கானு எனக்குத் தெரியாது சித்தி” - தேவ் “இது என்ன பதில் தேவ்? மித்ரா தனியா போகல, கூட ருத்ராவக் கூட்டிட்டுப் போய் இருக்கா! அந்தக் குழந்தை நம்மள எல்லாம் விட்டுட்டு எப்படி இருக்கும்? முதல்ல நீ எப்படிபா ருத்ராவ விட்டு இருப்ப? ஐந்து வயதுக் குழந்தைய வச்சிகிட்டு மித்ராவால மட்டும் எப்படித் தனியா சமாளிக்க முடியும்? நீ ஒண்ணும் பேசிக் கூட்டிட்டு வர வேண்டாம். அவங்க எங்கனு மட்டும் சொல்லு நான் போய்க் கூட்டிட்டு வரேன்” - வேதா “இல்ல சித்தி, நிஜமாவே அவ எங்க இருக்கானு எனக்குத் தெரியாது. அவ தான போனா? அவளே வரட்டும்! நிச்சயம் அவ வந்திடுவா சித்தி. ருத்ராவுக்கு அவளும் தான அம்மா? அப்ப நம்மளப் பிரிஞ்சி அவ படற கஷ்டத்த அவளும் பார்த்துட்டு தான இருப்பா? ஸோ இதை இதோட விட்டுடுங்க. நானும் அவங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சிப் பழகித் தான ஆகணும்?!” என்றான் தேவ் கசப்பான உணர்வுடன். “என்ன அப்பு, என்னனமோ சொல்ற? நீ எதுக்கு அவங்கள விட்டுப் பிரிஞ்சி இருக்கணும்?” - வேதா “ஒண்ணும் இல்ல சித்தி, மித்ரா வருவா. அது மட்டும் தான் எனக்குத் தெரியும். அதனால கவலைப் படாம இப்போ போங்க. நான் பார்த்துக்கிறேன்” - தேவ். அவருக்கு மனமே இல்லை என்றாலும் அவன் சொன்னதுக்காகக் கிளம்பிச் சென்று விட.. மித்ராவும் குழந்தையும் இல்லாத அந்த வீடு நரகமாக அவனுக்குத் தெரிந்தது. அதிலும் அந்த அறையில் இவ்வளவு நாள் இல்லாத ஒரு வெறுமையை உணர்ந்தவனால் தூங்கக் கூட முடியவில்லை. “ஏன்டி இப்படிச் செய்த? ஏன்டி ஏன்? எப்போதும் என் பாசத்தோடும் உணர்வோடும் காதலோடும் விளையாடறதே உனக்கு வேலையாப் போச்சி! எப்போது தான்டி நீ என்னப் புரிஞ்சிக்கப் போறனு?” வாய் விட்டுப் புலம்பியவனின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீர் உருண்டோடியது! இரவு முழுக்கத் தூங்காமல் இருந்து விட்டுக் காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பிக் கொண்டிருந்தவன் முன்பு வந்து நின்றார் மித்ரா தாத்தா. “என்ன மாப்பிள, என்ன தான் நடந்துச்சி உங்க இரண்டு பேருக்குள்ளும்? இப்போ அவங்க இரண்டு பேரும் எங்க தான் இருக்காங்கனு?” அவர் கலங்கிப் போய் கேட்க “எங்களுக்குள்ள கொஞ்சம் சண்டை தாத்தா. நான் தான் கோபத்துல உங்கப் பேத்திய இரண்டு அடி அடிச்சிட்டன். அதான் கோபத்துல வீட்டை விட்டுப் போய்ட்டா” என்றான் தேவ் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டே. ‘இப்படிச் சொன்னால் தன் மேல் கோபம் திரும்பும், மித்ராவை அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்’ என்று அவன் நினைத்திருக்க, அவரோ அதற்கும் பாய்ந்தார். “இருக்கட்டும் மாப்பிள.. எந்த புருஷன் பொண்டாட்டி தான் அடிச்சிக்கல, சண்டை போட்டுக்கல? அதுக்காக இப்படித் தான் வீட்டை விட்டுப் போகறதா? பிறகு பெரியவங்கனு நாங்க எல்லாம் எதுக்கு வீட்டுல இருக்கோம்? நீங்க எங்க இருக்காங்கனு மட்டும் சொல்லுங்க, நான் போய் பேசிக்கறன்” என்று அவர் கோபப் பட “இல்ல தாத்தா.. அவ எங்க இருக்கானே எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்! உங்க பேத்தி வந்திடுவா. ஏன்னா அவளாள என்ன விட்டு இருக்க முடியாது. ஸோ நீங்க எங்களப் பற்றிக் கவலைப் படாமல் இருங்க” என்று அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு ஆபிஸ்க்குக் கிளம்பினான் தேவ். இதுவரை அவன் தன் அம்மாவை பார்க்கவும் இல்லை மித்ரா விஷயமாகப் பேசவும் இல்லை. எதுவாக இருந்தாலும் சித்தி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டான். அன்றைய இரவும் அவனுக்குத் தூங்காத இரவாகவே கழிய மறுநாள் காலையில் கிளம்பி ஆபிஸ் சென்றவன் சாய்ந்திரம் ஒரு கிளைன்டைப் பார்க்க இருப்பதால் மாலை சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வர அந்த நேரம் அவனை இண்டர்காமில் அழைத்தார் விசாலம். முன்பை விட இப்போது எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அவருக்குப் பேச்சு வந்தது. இன்று தாயிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்தவன் கிளம்பிச் செல்ல தன் அறைக்கு வந்த மகனை வா என்று வரவேற்றவர் எடுத்த உடனே மித்ரா விஷயம் பேச ஆரம்பித்தார். “உனக்கும் மித்ராவுக்கும் என்ன நடந்ததுனு நான் கேட்க வரல. அது கணவன் மனைவிக்குள்ள நடந்த விஷயம். எனக்கு வேண்டியது எல்லாம் எப்போ என் மருமகளையும் பேத்தியையும் கூட்டி வரப் போற என்றது தான்!” அவரால் இப்போது எல்லாம் பேச முடிகிறது என்றாலும் இவ்வளவு பெரிய வார்த்தைகளைச் சேர்ந்தார் போல் பேசியதில் அவர் கண்ணத்தில் வலி எடுக்க, இடது பக்கக் கண்ணத்தைத் தன் இடது கையால் தேய்த்து விட்ட படியே அவர் பேச “அம்மா ஏன் இப்போ இவ்வளவு சிரமப் படுறிங்க? முதல்ல நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கறன்” என்றவன் “அவ எங்க இருக்கானு……” தெரியாது என்பதைச் சொல்ல வந்தவனை “நான் உன் அம்மாடா! மத்தவங்க கிட்ட சொன்ன பொய்யை நீ என் கிட்ட சொல்ல வேண்டாம். தன் எதிரிகளக் கூடத் தன் கண் பார்வையிலே வைத்து இருப்பவன் என் மகன்! அப்படிப் பட்டவன் தன் மனைவி மகள் இருக்கிற இடம் தெரியலனு சொன்னா அதை நான் நம்பணுமா?” என்று ஓர் அதிகாரத் தோரணையில் அவர் கேட்கத் தலை குனிந்து பேசாமல் இருந்தான் தேவ். “பவித்ரா உன் வாழ்க்கையில் வர நான் தான் காரணம். இப்பவும் பவித்ரா விஷயம் தான் உங்களுக்குள்ள பிரச்சனை வரக் காரணம்னா நான் மித்ரா கிட்ட பேசிச் சரி பண்றன்” - விசாலம். “……..” அப்போதும் தேவ் அமைதியாக இருக்க ‘இவர்களுக்குள்ள வேற ஏதோ பிரச்சனைனு!’ நினைத்தவர் “கணவன் மனைவிக்குள்ள பிரிவு இருக்கலாம் தேவ். ஆனா அது ஒரு நாளோ இரண்டு நாளோ இருந்தா தான் அந்தப் பிரிவுக்கே மதிப்பு. அதுவே நாள் கணக்கோ மாதக் கணக்கோ ஆனா இருவருக்குமே அந்தப் பிரிவு பழகிடும். அதன் பிறகு வாழ்க்கை மேல ஓர் பிடிப்பு வராது. இது எல்லாம் சதாரணக் கணவன் மனைவிக்கே என்னும் போது ருத்ராவால ஒரு இக்கட்டுக்காக மித்ரா உன்னக் கல்யாணம் செய்து கிட்டா என்னும் போது அவ மனசு எப்படி எல்லாம் அலைபாயும்னு யோசிச்சிப் பார்! அதனால இப்போ விழுந்து இருக்கற இந்த இடைவேளைய அதிகப் படுத்தாம சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடு. எல்லாத்த விட என் பேத்தி என் கண்ணுக்குள்ளேயே இருக்கா, அவள நான் பார்க்கணும்” என்று அவர் சொல்ல “…….” தேவ் ஏதோ யோசனையிலே இருக்க “என்னபா, நீ எதாவது முடிவு பண்ணி வச்சி இருந்தியா? நான் உன்ன அவசரப் படுத்துறனா?” என்று அவர் கேட்க “இல்லமா நீங்க எதுவும் அவசரப் படல. அவ வீட்டை விட்டுப் போனதுல எனக்கும் கோபம் தான். ஆனா அந்தக் கோபம் எல்லாம் இரண்டு நாள் தான். அது இன்றோட முடிஞ்சி போச்சி. அவ எங்க இருக்கா எப்படி இருக்கானு எல்லாம் எனக்குத் தெரியும். ஸோ நாளைக்குக் காலையில போய் அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு வரலாம்னு இருந்தேன்னு” அவன் கொஞ்சமும் பிசிர் இல்லாத குரலில் உறுதியுடன் சொல்ல “செய்பா, அதைச் சீக்கிரம் செய். நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கனும். அது தான் எனக்கு வேண்டும்” - விசாலம் “சரிமா இப்போ எனக்கு ஒரு முக்கியமான கிளையன்டோட டின்னர் இருக்கு. அத நான் முடிச்சிட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பினான் தேவ். டின்னர் முடித்து அவன் கிளம்பும் போது இரவு ஒன்பது. அந்த நேரம் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் நினைவு முழுக்க தாயிடம் பேசியதே இருந்தது. ‘எப்படி இருந்தாலும் இனி அவளா திரும்ப வர மாட்டா. நான் தான் நேரில் போய் அவ கையக் காலக் கட்டியாவது தூக்கிட்டு வரணும். அதுக்கு ஏன் காலையில் போகணும்? அதான் மீட்டிங் முடிஞ்சிடுச்சே! ஸோ நாம இப்பவே கிளம்பினா என்னனு?’ நினைத்துக் கொண்டு வந்தவன் ஓர் இடத்தில் அவனுக்கு எதிர் திசையில் இருந்து கட்டுப்பாட்டையும் மீறி வேகமாக ஒரு லாரி வர அதிலிருந்து தப்பிக்கச் சற்று வலதுப் புறமாக அவன் காரைத் திருப்ப அது அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. அதில் தலையில் அடியுடன் தேவ் மயங்கி விட அந்தப் பக்கமாக வந்த தேவ்வின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டு விஷ்வாவுக்குத் தகவல் சொல்லி விஷ்வாவின் ஆஸ்பிட்டலிலேயே அவனைச் சேர்த்து விட பிறகு வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் சொல்ல ஆஸ்பிட்டல் வந்த விசாலம் முதல் வேலையாக தேவ்வின் பி.ஏ வான ஜீவாவை அழைத்து மித்ராவைப் பற்றியத் தகவலைச் சேகரித்துத் தரச் சொல்லி தேவ் யாரிடம் அந்த வேலையை கொடுத்தான் என்று அறிந்து அவரிடம் இவரே பேசி மித்ராவின் அட்ரஸ்சை வாங்கியவர் பின் அங்கு சென்னையில் இருந்த கௌதமுக்குப் போன் பண்ணி இந்த அட்ரஸ்சைக் கொடுத்து மித்ராவையும் ருத்ராவையும் உடனே அழைத்து வரச் சொல்ல அதன்படியே இதோ மூவரும் விமானத்தில் இருந்தனர். மித்ரா வேண்டுதல் எல்லாம் ‘என் தேவ்வுக்கு ஒண்ணும் ஆகாது ஒண்ணும் ஆகாது’ என்பது தான். கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்தவுடன் ருத்ரா முழித்துக்கொண்டுத் தன் கண்களைச் சுழற்றித் தந்தையைத் தேடியவள் அவன் அங்கில்லை என்பதை அறிந்து “அப்பு எங்க சித்தப்பா?” என்று கௌதமைக் கேட்க “அவரத் தான்டா பார்க்கப் போறோம்னு” சொல்லித் தூக்கி வைத்திருந்தக் குழந்தையை இறுக்கக் கட்டிக் கொண்டான் கௌதம். அதைக் கேட்டதும் மித்ராவுக்கு இன்னும் அழுகை பெருக்கெடுத்தது. ‘இப்படிப் பட்ட ஓர் நிலையிலா குழந்தை தேவ்வைப் பார்க்கணும்?’ என்று மனதுக்குள் மருகினாள். இவர்கள் அடித்துப் பிடித்து ஆஸ்பிட்டல் வர அந்த இரவு நேரத்திலும் கதவு திறந்து இருக்க, தேவ்வின் குரல் வெளி வராண்டா வரை கேட்டது. “மோம்… எனக்கு ஒண்ணும் இல்ல. நான் நல்லா தான் இருக்கன்” - தேவ் “நீ நல்லா தான் இருக்க. அதுக்காக உன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. இரண்டு நாளும் நீ சரியாவே தூங்கி இருக்க மாட்ட. அதனால் நீ இங்கையே இருந்து ரெஸ்ட் எடு” என்று விசாலம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் மூவரும் உள்ளே நுழைய, தன் தந்தையைப் பார்த்த உடன் “அப்பு…..” என்று அழைத்து ருத்ரா கௌதமிடம் இருந்து கொண்டே தன் இரு கைகளையும் நீட்ட, உடனே தாவிச் சென்று தேவ்விடம் ருத்ராவைச் சேர்த்தான் கௌதம். “குட்டிமா……” என்ற அழைப்புடன் தன் மகளை வாங்கிக் கொண்ட தேவ் குழந்தையின் முகம் எங்கும் முத்தமிட்டு அணைத்துக் கொள்ள, “அப்பு உனக்கு அடிபட்டுடிச்சா? அதனால தான் நீ எங்களப் பார்க்க வரலையா? நானும் அம்மாவும் உன்னக் காணாம ரொம்ப அழுதோம்!” என்று ருத்ரா சொல்ல “நானும் தான்டா!” என்றான் தேவ் மகளை அணைத்துக் கொண்டே உள்ளே நுழைந்த மித்ராவின் கண்களோ தன் கணவனைத் தான் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தது. நெற்றியில் மட்டும் ஒரு சிறிய பிளாஸ்திரி போட்டிருக்க மற்ற படி அவன் உடலில் வேறு எந்த அடியும் படாமல் அவன் அவனாகவே இருக்க அப்போது தான் அவளால் நிம்மதியாகவே மூச்சு விட முடிந்தது. பிறகு அங்கிருந்த தன் தாத்தா விஷ்வா வேதா என்று அவர்களை எல்லாம் தன் பார்வையாலே சுற்றி வந்தவள் இறுதியில் தன் மாமியாரிடம் வந்து நிலைக்க, அவரோ மித்ராவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவே அவளை அவர் முறைப்பது போல் பட சட்டென்று தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் மித்ரா. பின் தேவ்விடம் திரும்பிய விசாலம் “இன்னைக்கு ஒரு நைட் ருத்ரா இங்க இருக்கட்டும் தேவ். காலையில பத்து மணிக்கு கார் அனுப்பறன். டிரைவர் கூட ருத்ராவ மட்டும் அனுப்பி வைங்க. ஆனா நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரக் கூடாது!” என்று அவர் கட்டளை இட ‘நம்ம மாமியார் பேச ஆரம்பிச்சிட்டாங்களானு?!’ அதிசயத்துப் போய் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா அவர் வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னதும் அழாத குறையாக அவரைப் பார்க்க தேவ்வோ “என்ன மம்மீ நினைச்சிட்டு இருக்கிங்க? வீட்டுக்கு வரக் கூடாதுனா நாங்க எங்க போவோம்?” என்று கேட்க “நீங்க இரண்டு பேரும் கெஸ்ட் ஹவுஸ் போங்க. குடும்பம்னா நல்லது கெட்டது கஷ்டம் நஷ்டம் எல்லாம் தான் இருக்கும். அதுக்காக அப்ப அப்ப கோவிச்சிட்டு அடிக்கடி வீட்டை விட்டுப் போகறதும், ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்க்காம முகம் திருப்பறதுனு இருக்கறது எல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரி வராது. அதனால நீங்க இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. ஆனா ஒண்ணு! இப்படி திரும்ப தொடராதுனா மட்டும் வாங்க, இல்லனா இரண்டு பேருமே வராதிங்க! எம் பேத்திய நானே பார்த்துக்கறன்னு” உறுதிப் படச் சொன்னவர் விஷ்வாவிடம் திரும்பி “விஷ்வா காலையில டிரைவர் வந்தா ருத்ராவ மட்டும் அனுப்பு. பிறகு உன் கார்லையே இவங்க இரண்டு பேரையும் கெஸ்ட் ஹவுஸ்ல விட்டுடு” என்றவர் தேவ்விடம் “தேவ், இனி உனக்கு நோ கார்! நோ லேப்டாப்! நோ மொபைல்!” என்று சொல்ல “அம்மா இது அநியாயம்! ஆபிஸ்ல எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க இப்படி பண்ணா என்ன அர்த்தம்னு?” தேவ் ஆதங்கப் பட “ஆபிஸ் வொர்க்க ஜீவா பார்த்துக்கட்டும். எதாவது மீட்டிங்னா கேன்சல் பண்ணச் சொல்லிடறன். எனி அர்ஜென்ட் டெஸிஷன் எடுக்கணும்னா அவன என்ன கான்டாக்ட் பண்ணச் சொல்லி நான் எடுத்துக்கறன். முதல்ல எனக்கு என் பையனும் அவன் வாழ்க்கையும் தான் முக்கியம்! அதுக்குப் பிறகு தான் பிஸினஸ் எல்லாம்!” இதை எல்லாம் தேவ்வுக்குப் பதிலாகச் சொன்னாலும் பார்வை என்னமோ மித்ராவிடமே இருந்தது. அதைப் பார்த்தவள் ‘அப்பா….. அப்படியே புள்ள மாதிரியே பேச வேண்டியதுனு!’ மனதுக்குள் நினைத்தவள் ‘ச்ச… ச்சா….. அம்மா மாதிரி தான் புள்ள!’ என்று திருத்திக் கொண்டாள். இனி பேசுவதற்கு ஒண்ணும் இல்லை என்பது போல் வேதாவைத் தன் சக்கர நாற்காலியைத் தள்ளச் சொல்லி அவர் வெளியே சென்று விட பின் அங்கிருந்த அனைவருமே சென்று விட்டனர். தேவ் அமர்ந்திருக்க அவன் மார்பிலே தூங்கி விட்ட குழந்தையைப் பக்கத்து கட்டிலில் படுக்க வைக்க நினைத்து மித்ரா அவனிடமிருந்து குழந்தையைத் தூக்க, அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் பட்டென அவள் கையைத் தட்டி விட்டான் தேவ். அவன் செயலில் முதலில் விக்கித்து நின்றவள் பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு “உங்களுக்கு உடம்பு அசதியா இருக்கும் அத்தான். அதான் குட்டிமாவ என் கூட அந்த பெட்ல படுக்க வச்சிகளாம்.…” என்று அவள் முழுமையாகச் சொல்லிக் கூட முடிக்கவில்லை. அதற்குள் பாதியிலேயே தன் மார் மீதிருந்த குழந்தையுடன் பெட்டில் சரிந்து படுத்தவன் பின் தன் கண்களை மூடிக் கொள்ள, அப்போது தான் அவளுக்கே தெரிந்தது வந்ததில் இருந்து அவன் தன் முகத்தைக் கூட பார்க்கவில்லை என்று! அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. அவன் திட்டுவான் சண்டை போடுவான் கோபப்படுவான் என்று அவள் நினைத்திருக்க இப்படி அவன் அவளைப் புறக்கணிப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சற்றுத் தள்ளியிருந்த இன்னோர் கட்டிலில் அவனுக்கு முதுகுக் காட்டி படுத்தவள் ஓசையின்றி அழுது கறைந்தாள். தாமதமாக உறங்கியதால் பொழுது புலர்ந்து வெகு நேரம் ஆகியும் மூவரும் உறங்கிக் கொண்டிருக்க. [COLOR=rgb(147, 101, 184)]உனக்காக வருவேன்[/COLOR][/B][/SIZE] [COLOR=rgb(147, 101, 184)][SIZE=6][B] உயிர்கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும் உனக்கு எதையும் நான் செய்வேன் ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய உனது நிழலிலே இருப்பேன் நீ யாரா இருந்தாலும் உனக்காகவே வாழ்கிறேன்…… [/B][/SIZE][/COLOR] [SIZE=6][B] இப்படி ஓர் பாடல் ஒலிக்க, எங்கோ தூரத்தில் இருந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு சற்றுப் புரண்டு படுத்தாள் மித்ரா. [COLOR=rgb(147, 101, 184)]உனக்காக வருவேன்[/COLOR][/B][/SIZE] [COLOR=rgb(147, 101, 184)][SIZE=6][B] உயிர்கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்த்திடப் போதும் உனக்கு எதையும் நான் செய்வேன் ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய உனது நிழலிலே இருப்பேன் நீ யாரா இருந்தாலும் உனக்காகவே வாழ்கிறேன்…… [/B][/SIZE][/COLOR] [SIZE=6][B] மீண்டும் பாடல் ஒலிக்கவும் அடித்துப் பிடித்து எழுந்து பார்க்க அது தேவ் பர்ஸ்னல் மொபைலின் ரிங் டோன் என்று அறிந்தவள் ஓடிச் சென்று அவன் பக்கத்திலிருந்த மொபைலை எடுத்துப் பார்க்க அதில் அம்மா காலிங் என்று வர இப்போது என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு முடிந்து போனது. ஆனால் திரும்பவும் அழைப்பு வர, அதற்குள் விழித்து விட்ட தேவ் அவள் கையிலிருந்து வெடுக்கென தன் மொபைலைப் பிடிங்கியவன் ஆன் செய்து “சொல்லுங்கமா” என்று கேட்க மித்ராவோ தரையில் வேர் ஓட அப்படியே நின்று விட்டாள். அவன் போனைப் பிடிங்கியதற்காக அல்ல அவன் போனில் ஒலித்த பாடல் வரிகளைக் கேட்டு! பின் ருத்ராவே எழுந்து “மம்மீ” என்று உலுக்க நிகழ்வுக்கு வந்தவள் பிறகு ருத்ராவுக்கு வேண்டியது எல்லாம் செய்து டிரைவருடன் அவளை அனுப்பி விட அப்போது உள்ளே நுழைந்தான் விஷ்வா. “என்னடா கிளம்பலாமா?” என்று தேவ்விடமும் “என்ன மித்ரா கிளம்பலாமா?” என்று மித்ராவிடமும் கேட்க அவள் போகலாம் என்பது போல் தலை அசைக்க தேவ்வோ யாரும் சற்றும் எதிர்பார்க்காத அந்த நேரத்தில் அவன் நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைப் பிய்த்து எறிய அந்தக் காயத்திலிருந்து ரத்தம் கசிந்தது. அதைப் பார்த்த விஷ்வா “டேய் பைத்தியக்காரா, என்னடா செய்ற?” என்று மிரட்ட “அத்தான்!” என்ற கூச்சலுடன் மித்ரா அவனை நெருங்க “சில பேர் நான் பொய்யா நடிச்சி ஏமாற்றி இங்க படுத்து இருப்பதா நினைப்பாங்க. அவங்கள நல்லா பார்த்துக்கச் சொல். இது பொய்யான கட்டு இல்ல உண்மைதான்னு தெரிஞ்சிக்கட்டும்” என்று மித்ராவின் முகம் பார்க்காமல் இவன் கோபமாகச் சொல்ல “அதுக்காக இப்படியாடா ரத்தம் வர்ற மாதிரி பிச்சி எறிவ?” என்று நண்பனைக் கடிந்த விஷ்வா அவனுக்கு முதல் உதவி செய்ய “என் மனசக் குத்தி என்ன சாகடிச்சாங்க! அப்போ நான் எப்படி துடிச்சி இருப்பனு அவங்களாள பக்கத்துல இருந்து பார்த்துச் சந்தோஷப் பட முடியல! அதான் இந்த ரத்தத்தையாவது பார்த்து சந்தோஷப் படட்டும்னு தான் இப்படிச் செய்தேன்” என்றான் தேவ் மித்ராவை வைத்து மறைமுகமாக. அதைக் கேட்டு அவளால் இன்னும் அழத் தான் முடிந்ததே தவிர வேறு எதுவுமே பேச முடியவில்லை. அவர்கள் இருவரையும் வீட்டு வாசலிலே இறக்கி விட்டவன் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி விஷ்வா அங்கிருந்து சென்று விட உள்ளே வந்து பார்த்தால் துணை வேலைக்குனு கூட யாரும் இல்லை. பின் மித்ரா சமையலறையில் வந்து பார்க்க காய்கறி பழம் மளிகை சாமான் என்று அனைத்தும் இருந்தது. உடனே மாதுளைப் பழத்தை எடுத்தவள் அதை உதிர்த்து ஜுஸ் போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்குப் போக அங்கே தேவ்வோ ஏசியைக் கூட போடாமல் உடல் அசதியில் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவளின் கண்களோ கலங்கி விட்டது. ‘பாவம்! இரண்டு நாளா தூங்கிக் கூட இருக்க மாட்டார்னு’ நினைத்தவள் அவனை எழுப்ப மனமே வராமல் ஜுசை டீ பாயில் வைத்தவள் கட்டிலில் அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் மடி மீது வைத்து அவன் முன் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டு குனிந்து அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தவள் “ஐ லவ் யூடா புருஷா! என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? இனிமே நான் இப்படி எல்லாம் செய்ய மாட்டன். ஸாரி!” என்று சொல்லி இப்போது அவன் கன்னத்தில் முத்தமிட தூக்க கலக்கத்திலே ம்ம்ம்…. என்று முனங்கினான் தேவ். அதைப் பார்த்து எங்கே எழுந்து விட்டானோனு பயந்தவள் பின் அவன் தூங்குவதைக் கண்டு நிம்மதியுற்று சத்தம் போடாமல் அவன் தலையைத் தலையனையில் வைத்தவள் எழுந்து ஜன்னல் ஸ்கிரீன்களை இழுத்து மூடி ஏசியை ஆன் செய்தவள் இறங்கி கீழே வந்து மதியத்துக்கு என்று தனக்குத் தெரிந்த சமையலை இரண்டு பேருக்கும் சாதாரணமாகச் செய்தவள் பின் அவனை வந்துப் பார்க்க இன்னும் அவன் தூங்கிக் கொண்டிருக்க இப்போதும் அவனை எழுப்ப மனம் இல்லாததால் சற்று நேரம் புத்தகம் படித்தவள் பிறகு மணியைப் பார்க்க அது இரண்டு என்று காட்ட இதுக்கு மேலையும் எழுப்பாமல் இருந்தால் சரி வராது என்று நினைத்து “அத்தான் எழுந்துருங்க, மணி ரெண்டு. இன்னும் எவ்வளவு நேரம் தூங்கப் போறிங்க? எழுந்துருங்க அத்தான், சாப்டுட்டு தூங்குங்க” என்று அவனை உலுக்க “ம்ம்ம்… கொஞ்ச நேரம் தூங்க விடுடி என் பொண்டாட்டி” என்றவன் அவள் வலது கையைப் பிடித்துத் தன் கழுத்தின் கீழே வைத்துக் கொள்ள அவன் செய்கையில் கவரப் பட்டவளோ கட்டிலில் ஏறி அவனை ஓட்டினார் போல் அமர்ந்து “என் செல்ல புருஷா தான நீங்க? என் பட்டு புருஷா தான நீங்க? என் ராசா இல்ல? எழுந்திருபா! எனக்கு வேற பசிக்குது. நீங்க வேணும்னா சாப்டுட்டு திரும்ப தூங்குவிங்களாம், இப்போ எழுந்துருடானு” அவன் கேசத்தைக் கலைத்து அவள் கொஞ்ச அதில் பட்டென்று கண் விழித்த தேவ் அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் மட்டும் இல்லாமல் அவள் கையைத் தான் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தவன் “ச்சை…..” என்று கூறி அவள் கையைப் பட்டென்று தட்டி விட்டு எழுந்துச் செல்ல மித்ராவுக்கோ அவமானத்தில் முகமே சிவந்து விட்டது. ‘என்ன அந்த அளவுக்கா வெறுக்கறாரு?!’ என்று நினைத்தவளின் கண்கள் மறுபடியும் கலங்கி விட அதற்குள் தேவ் ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்தவன் கீழே இறங்கி செல்ல தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள் அவன் பின்னே எழுந்து செல்ல. டைனிங் டேபிளில் வந்து அமர்ந்த தேவ் அங்கிருந்த பழங்களில் ஒன்றில் கை வைக்க “இப்போ எதுக்கு அத்தான் பழம் சாப்பிடறிங்க? நான் சமையல் முடிச்சிட்டன் சாதமே சாப்பிடுங்க” - மித்ரா “……” அப்போதும் தேவ் பழங்களைக் கட் பண்ணிக் கொண்டிருக்க அவனை நெருங்கியவள் அவன் கையைப் பிடித்து “ப்ளீஸ் அத்தான் சாதம் சாப்பிடுங்கனு” சொல்ல தேவ்வோ அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் “கையை விடு ஹா….. மித்ரா!” என்று உறும அவன் ஹாசினி என்று சொல்ல வந்து மாற்றியதை அறிந்தவள் நெஞ்சம் வலிக்க “ப்ளீஸ் அத்தான், என் மேல கோபம் இருந்தா என்ன அடிங்க திட்டுங்க. அதுக்காக என் கிட்ட பேசாமலோ இல்ல நீங்க சாப்பிடாமலோ இருக்காதிங்க. சாப்பிடாம இருந்து உங்கள நீங்களே ஏன் வறுத்திக்கிறிங்கனு?” அவள் கெஞ்ச “ஆமா, உன் மேல கோபப் படவோ உன்னத் திட்டவோ நான் யாரு? என் மனசக் கொன்னு புதைச்சிட்டு இப்போ வந்து நான் பட்டினி இருக்கறதப் பத்தி நீ பேசறியா? வேண்டாம் எனக்கு எதுவும் வேண்டாம்! உன் கிட்ட நான் பேசவே விரும்பல. என்ன வேணாம்னு சொல்லிட்டுப் போனவ தான நீ? இப்போ மட்டும் எதுக்கு வந்த? வேணா மித்ரா நீ சொல்ற மாதிரியே நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவோம். வீட்டுல நான் எதாவது சொல்லி சமாளிச்சிக்கறன். என்னப் பிடிக்காம என் கூட நீ எதுக்கு இங்க இருக்கணும்?” என்று அவன் உறும “ஐய்யோ….. அத்தான் நான் செய்தது தப்பு தான் அத்தான்! பெரிய தப்பு தான்! உங்கள விட்டு நான் போனா என்ன மறந்து நீங்க மனசு மாறி வாழுவிங்கனு நினைச்சன். ஆனா இந்த இரண்டு நாளும் உங்கள மறக்க முடியாம நான் தான் அத்தான் தவிச்சிப் போய்ட்டன். ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு நிமிடமும் உங்களத் தான் நினைச்சன். இன்னும் சொல்லப் போனா அன்னைக்கு நீங்க சொன்னிங்களே? உன் பேச்சு மூச்சு நாடி நரம்பு எல்லாம் நான் தான்டி இருக்கணும்னு! அப்படித் தான் அத்தான் நான் இருந்தன். எனக்கே அது உங்கள விட்டுப் பிரிஞ்சி இருந்த இந்த ரெண்டு நாள்ள தான் தெரிஞ்சது. இது தெரியாம நான் எவ்வளவு பெரிய முட்டாளா நடந்துக்கிட்டன்!” என்று அழுகையுடனே சொன்னவள் சட்டென அவன் காலில் விழுந்து “என்ன மன்னிச்சிடுங்க அத்தான்னு” சொல்ல அவளைத் தூக்காமல் சட்டென்று தூர விலகியவன் “வேணாம் மித்ரா வேணாம்! எதுவும் வேணாம். இப்போ ஒரு வேகத்துல இப்படி ஒரு முடிவு எடுத்துடுவ. பிறகு உன் கடந்த காலத்தப் பற்றி நினைவு வந்தாலோ அதைப் பற்றி யாராவது பேசினாலோ இல்லனா உன் கடந்த காலத்துல இருந்தவங்க யாரையாவது நீ பார்த்தாலோ உடனே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நான் உங்களுக்கு வேண்டாங்க என்ற பல்லவியோட திடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டுப் போய்டுவ. அதனால பாதிக்கப் பட போகறது நான் தான்! நீ இல்ல!” என்று கோபமாகச் சொன்னவன் பிறகு இந்த இரண்டு நாள்ள நான் செத்துட்டேன்டி” என்றான் குரல் உடைய. “ஐய்யோ…. நானும் தாங்க செத்துட்டேன். நான் செய்தது தப்பு தாங்க! என்ன மன்…..” மன்னிச்சிடுங்க என்று சொல்ல வந்தவளை “அச்சோ… அம்மா போதும்டி! எனக்கு வேண்டியது உன் கண்ணீரோ மன்னிப்போ சமாதானமோ இல்லடி!” என்றவன் ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு பின் “எனக்கு என்ன வேணும்றத கூட உன்னாலத் தெரிஞ்சிக்க முடில இல்ல? பிறகு நீ என்னடி என்னப் புரிஞ்சிக் கிட்டது?” என்று கோபப் பட்டவன் “இது தான்! இதுக்குத் தான் சொல்றன் நாம பிரிஞ்சிடலாம்னு! போதும் நாம பிரிஞ்சிடுவோம்!” என்று திரும்பத் திரும்ப அதையே சொல்ல உண்மையில் மித்ராவுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்பதே அவள் இப்போதிருக்கும் மனநிலையில் புரியவில்லை. அவன் கேட்பதோ ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை! ஆனால் இவள் நினைப்பதோ ‘தான் செய்த தப்புக்குத் தனக்குத் தண்டனை கிடைத்தால் தேவ் கொஞ்சம் அமைதி ஆவாரோ?’ என்று. “நான் வீட்டை விட்டுப் போனது தப்பு தான்! அதுக்கு எனக்கு மறக்க முடியாத அளவுக்குத் தண்டனை கிடைச்சாதான் நான் திரும்ப அந்த தப்பைச் செய்ய மாட்டன். அப்போ அதுக்கு நானே தண்டனை கொடுத்துக்கிறேன்னு” சொன்னவள் ஓடிச் சென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டு கதவை அடைத்துத் தாழ்பாள் போட்டு கொள்ள அவள் பின்னாடியே ஓடிச் சென்று கதவைத் தட்டினான் தேவ். “யேய் ஹாசினி, என்னடி பண்ணப் போற? நான் சொன்னது வேறடி! நீ தப்பாப் புரிஞ்சிக் கிட்ட. ப்ளீஸ்டி, கதவ திற” என்று கெஞ்சியவன் பின் ஓடிச் சென்று ஐன்னல் வழியாகப் பார்த்ததில், கரண்டியை அடுப்பு தணலில் வைத்திருந்தாள் மித்ரா. அதைப் பார்த்தவன் நெஞ்சோ ஒரு நிமிடம் நின்று துடிக்க “இப்போ என்னடி செய்யப் போற?” என்று நடுங்கும் குரலில் அவன் கேட்க “இந்தக் கால் தான உங்கள வேண்டாம் சொல்லிட்டு வீட்டை விட்டுப் போச்சி? இப்போ நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பாததுக்கு இந்தக் கால் தான காரணம்? திரும்ப இந்தத் தப்ப நான் செய்யக் கூடாதுனா அதுக்கு என் கால்ல ஒரு அடையாளம் இருக்கணும். அதான் கரண்டியால என் கால்ல நானே சூடு போட்டுக்கப் போறேன்” என்றாள் மித்ரா திடமாக. “வேணாம்டி, அப்படி எதுவும் செய்யாதடி கதவத் திறடி” என்று இவன் கத்த மித்ராவோ அசையாமல் அங்கேயே நிற்க திடீர் என்று ஏதோ தோன்றவே தேவ் அவசரமாக மாடிக்கு ஓடிச்சென்று ஒரு சாவியை எடுத்துக்கொண்டு கீழே வந்தவன் அதே வேகத்துடன் பின்புறத் தோட்டத்துக்குச் சென்றவன் கிச்சனிலிருந்து தோட்டத்திற்குப் போகும் கதவு எப்போதும் தோட்டத்துப் பக்கமாக பூட்டியே இருப்பதை அறிந்தவன் அந்தப் பூட்டைத் திறந்து உள்ளே செல்லும் நேரம் கையில் கரண்டியை எடுத்திருந்தாள் மித்ரா. உள்ளே வந்தவனோ அவள் கையைத் தட்டி விட கரண்டியோ தூரப் போய் விழுந்தது. “பைத்தியக்காரியாடி நீ?” என்று அவன் பல்லைக் கடிக்க அவன் மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டவளோ ‘என்ன போனு சொல்லிடாதிங்க அத்தான்! நான் போக மாட்டேன்” என்றவள் அவன் கழுத்தை வளைத்து “ஐ லவ் யூ அத்தான்….. ஐ லவ் யூ அத்தான்……” என்று சொன்னவள் ஒவ்வொரு ஐ லவ் யூ க்கும் அவன் முகத்தில் முத்த மழை பொழிய இதைத் தானே கேட்டான் தேவ்? இப்படி ஓர் வார்த்தைக்கு தானே அவன் ஆசைப்பட்டது? அதில் அவன் மனசோ சந்தோஷத்தில் எகிறிக் குதிக்க, அவளை இறுக்கி அணைத்தவனோ இப்போது “ஐ லவ் யூ டூ” என்ற சொல்லுடன் அவளுக்கு இவன் முத்த மழை பொழிந்தான். எவ்வளவு நேரம் அப்படிச் செய்தான் என்பது அவனுக்கே தெரியாது. பின் இருவரும் ஓர் நிதானத்திற்கு வந்து விட “உன் கிட்ட பேசணும்னு” தேவ் சொல்ல “இப்பவாது சாப்பிட வாங்கனு” மித்ரா சொல்ல சாப்பிட்ட பிறகே பேசுவது என்று முடிவாகி விட அவளுக்கு இவன் ஊட்டி விட அவனுக்கு இவள் ஊட்டி விட என்று சாப்பிட்டு முடித்தனர் இருவரும். முதலில் தேவ்வே பேச ஆரம்பித்தான். “இப்போ இன்னைக்கு நாம பேசறது தான் லாஸ்ட் ஹாசினி!” என்றவன் “அன்று உன்ன கடல்ல இருந்து காப்பாற்றி ஆஸ்பிட்டல்ல சேர்த்தது வேற யாரும் இல்ல, நான் தான்! அப்பவே நீ இருந்தக் கோலத்தப் பார்த்துத் துடிச்சிப் போய்ட்டன் தெரியுமா? உனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திருக்கக் கூடாது அப்படி நடந்திருந்தா ஒரு தோழனா உனக்குத் துணையாயிருந்து நீ அதில் இருந்து வெளியே வர உதவுணும்னு நினைச்சன். அப்பவே என்னையும் அறியாம உன் மேல காதல் இருந்திருக்கு. அது விஷ்வாவுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு. அதனால் தான் அவன் அப்பவே என்ன ஓட்டி இருக்கான். ஆனா எனக்குத் தான் தெரியல. காதல் தான்னு எனக்கும் தெரிய வந்தது எப்போ தெரியுமா? நீ வண்டி எடுத்துட்டு காணாமப் போய் ஆக்ஸிடென்ட்ல மாட்டிக்கிட்டியே? அன்னைக்குத் தான்! அதுவும் காதல் மட்டும் இல்ல, நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்ல என்றத அன்னைக்குத் தான் உணர்ந்தன்! அதுக்கு அப்பறம் தான் உன் கடந்த கால விஷயங்கள் தெரிய வந்துச்சி. அப்பவும் சோர்ந்து போகாம மூலையில் அமர்ந்து கண்ணீர் விடாம எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு தைரியமா எழுந்து நின்னப் பாரு, அப்போ அங்க உனக்குள்ள நான் என்னையே பார்த்தன்! அப்பவே என் காதல நான் உன் கிட்ட சொல்லி இருந்தா நீ ஏத்து இருக்க மாட்ட. என்னாலையும் சொல்ல முடியாத நிலையில நானும் பவித்ரா பிரச்சனையில இருந்தன். அந்த விஷயத்த ஒரு முடிவுக்குக் கொண்டு வராம உன் கிட்ட என் விருப்பத்த சொல்லக் கூடாதுனு இருந்தேன். ஆனா உனக்கு என் மேல அப்படி எந்த வித அபிப்ராயமும் இல்ல. உன் மனசுல எதாவது மாற்றம் வருதானு தெரிஞ்சிக்கத் தான் நான் வெளிநாடு போய் இருந்தப்ப அப்படி நடந்துக் கிட்டேன். ஆனா திரும்பி வந்து பார்க்கும் போது நீ நீயா தான் இருந்த. உன்கிட்ட எந்த மாற்றமும் இல்ல! உன்ன இப்படியே விட்டா சரிவராது என்றதாலும் பவித்ரா விஷயமும் கிளியர் ஆகிடுச்சி என்றதாலும் தான் நான் உடனே வலுக்கட்டாயமா நம்மக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணன். இதுவரை அவள் எதிரிலிருந்த ஸோஃபாவில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போழுது எழுந்து அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து அவளை இழுத்து அணைத்தவன், ஆனா ஒண்ணுடி எந்த நிமிஷம் நமக்குக் கல்யாணம் ஆச்சோ அந்த நிமிஷத்துல இருந்தே உனக்கு என் மேல் உள்ள காதல உன் கண்ணுலப் பார்த்தன். நான் தாலி கட்டின அந்த நொடியிலிருந்து ஒரு கணவனா காதலனா உனக்குள்ள நான் வந்துட்டன். அதை ஒவ்வொரு முறையும் உன் கண்ணாலையும் செய்கையாலையும் உன்னுள் நான் இருக்கிறேன் என்றது நான் உறுதிப் படத் தெரிச்சிகிட்டன்” என்று கூறி அவன் தன் அணைப்பை இறுக்க அதில் அவனுடன் சேர்த்து கறைந்தவள் பின் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “அப்போது இருந்தா?!” என்று விழி விரித்துக் கேட்க “ம்ம்” என்று தலையாட்டினான் தேவ். “நீ என்ன விரும்ப ஆரம்பிச்ச ஹாசினி, உன் மனசுல நான் இருந்தேன். ஆனா நீ ஷியாம் விஷயத்தால ரொம்பக் குழம்பிப் போய் இருந்த. இன்னும் சொல்லப் போனா நீ அவனை விரும்பவேயில்ல! சரி இப்போ நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு, இப்போ எந்த தங்கு தடையும் இல்லாமல் என் கிட்ட ஐ லவ் யூ சொல்ற நீ ஒருமுறையாவது ஷியாம் கிட்ட அப்படிச் சொல்லி இருக்கியா?” யோசித்துப் பார்த்ததில் “அப்படி இல்லைனு” தலையாட்டினாள் மித்ரா. “அன்னைக்கு கிராமத்துல இருந்தப்போ எனக்கு எதாவது நடந்தா நீ உயிரோடவே இருக்க மாட்டனு சொன்ன! அதேமாதிரி ஷியாம விட்டுப் பிரிஞ்சதுக்கு அவன் இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டனு உனக்குத் தோனி இருக்கா இல்ல சொல்லி தான் இருப்பியா?” - தேவ் இதற்கும் அவள் இல்லை என்று தலையாட்ட “மும்பையில உன் கழுத்துல இருந்த தாலிக் கொடியக் கழற்ற மாட்டனு அப்படி அழுதியே? ஆனா அதே ஷியாம் கட்டினக் கயிறக் கழற்றி உண்டியல்ல போட்டுடுவனு சொன்னியே! அது எப்படி? நிச்சயம் அதை நீ வெறும் வாய் வார்த்தையா சொல்லல. அதே மாதிரி கண்டிப்பா அதை நீ செய்தும் இருப்ப! அப்படித் தான?” என்று கேட்க இதற்கும் ஆம் என்று தலையாட்டினாள் மித்ரா. “இது எல்லாம் கூட உனக்குத் தெரியலையா ஹாசினி? உன்னுள் நான் இருக்கனு!” - தேவ் “தெரியல அத்தான், எனக்கு எதுவுமே தெரியல. நீங்க சொல்ற மாதிரி நான் ஷியாம் விஷயத்துலே குழம்பிப்போய்தான் இருந்து இருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு கூட நான் ஏன் என் கடந்த காலத்த உங்க கிட்ட சொல்லலனா, எப்படியோ நாம ரெண்டு பேரும் பிரியத் தானப் போறோம் பிறகு ஏன் சொல்லணும்னு தான்! அன்று அப்பத்தா வீட்டுக்குப் போகறதுக்கு முன்னாடி என்ன அணைச்சிகிட்டு உங்க மனசுல இருக்கறத எல்லாம் சொன்னிங்களே? அப்பவே எனக்குள்ள ஏதோ சின்னதா மாற்றம் வந்து இருக்கணும்! அதனால தான் ஊர்ல என்னால உங்க கூட அப்படி நடந்துக்க முடிஞ்சிது! ஆனா அது எதையுமே அன்று நான் உணர முடியல. உணர்ந்தாலும் ஷியாம் விஷயம் என்ன உங்க கிட்டயிருந்து ஒதிக்கி வச்சிடுச்சி. அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் சொன்ன பிறகு கூட நீங்க நீங்களாவே இருந்தது எனக்குக் குற்றயுணர்ச்சியா இருந்திச்சி. அந்த நேரம் பார்த்துப் பவித்ரா விஷயம் தெரிய வரவே நான் உங்களுக்கு ஏத்த மனைவி இல்லனு நினைச்சி உங்கள விட்டுப் பிரிஞ்சேன். ஆனா அப்படிப் பிரிஞ்ச பிறகு தான் என் மனசே எனக்குத் தெரியவந்தது. உங்கள யாருக்கிட்டையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதுனு. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” “ஆமா….. நீ எங்கடி வந்த? எனக்கு ஆக்ஸிடென்ட்னு சொன்ன உடனே தான வந்த! இல்லனா மேடம் வந்து இருப்பியா?” - தேவ் “இல்ல இல்ல அத்தான்… நான் கிளம்பறதுனு முடிவு பண்ணப் பிறகு தான் இப்படி நடந்துடுச்சினு கௌதம் வந்து கூப்டாங்க” என்றவள் அங்கு இரண்டு தினமும் நடந்த அனைத்தையும் சொல்ல “அப்பவும் குழந்தைக்காகத் தான் வர இருந்தியானு?” அவன் குறைபட “ம்கும்….. எனக்கே எனக்குனு தான் வந்தேன்! குழந்தை எனக்கு ஒரு சாக்கு!” என்று சொல்லி அவனை அன்னார்ந்து பார்த்துக் கண் சிமிட்டியவள் “ஆமாம், என்ன சொல்றிங்களே? உங்க பொண்டாட்டியையும் பொண்ணையும் இரண்டு நாள் ஆகியும் நீங்க ஏன் வந்து பார்க்கல? நாங்க இருந்த இடம் உங்களுக்கு தெரியாதுனு மட்டும் சொல்லாதிங்க அத்தான்” என்று அவள் கோபப்பட “யாருக்குடி தெரியாது? நீ இந்த வீட்டை விட்டுப் போன அந்த நிமிஷத்துல இருந்து எங்க இருக்க என்ன ஏதுனு எல்லாமே எனக்குத் தெரியும். என்ன, இப்போ திரும்ப நீ இங்க வந்தது தான் எனக்குத் தெரியாது. நான் அவ்வளவு சொல்லியும் நான் வேண்டாம்னு என்ன விட்டுட்டுப் போய்ட்டியேனு எனக்குக் கோபம்! ஆனா அந்தக் கோபம் எல்லாம் இரண்டு நாள் தான்! இந்த மீட்டிங் முடிந்த உடனே அப்பவே ஊருக்குக் கிளம்பி வந்து நீ வரலனாலும் உன் கையக் காலக் கட்டியாவது தூக்கிட்டு வந்திடணும்னு தான் நினைச்சன். அதுக்குள்ள இந்த ஆக்ஸிடென்ட் நடந்திடுச்சி” - தேவ் “ஹி….. ஹி…. ஹி…. கையக் காலக் கட்டியா? நீங்க வந்து வானு கூப்பிட்டாலே நான் கிளம்பி வந்து இருப்பன். ஏன்னா உங்க பொண்டாட்டி அவ்வளவு மாறி இருந்தா!” என்று அவனைக் கேலி செய்ய “அதான் பார்க்கும் போதே தெரியுதே! நிறைய மாற்றம் தான், பார்ப்போம் எத்தனை நாளைக்குனு!” - தேவ் வலிக்காமல் அவன் இடுப்பைக் கிள்ளியவள் “பிச்சி பிச்சி! என்ன எத்தனை நாளுனு சொல்றிங்க? சாகர வரை உங்க பொண்டாட்டி இப்படித் தான் இருப்பானு!” சொல்லி அவனை இறுக்கி அணைக்க, “இப்படியே அணைச்சிகிட்டே இருந்தா மத்தது எதுவும் செய்ய முடியாதுடி” - தேவ் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைச் சற்றும் யோசிக்காமல் “சாப்பிடறதுக்கு கஷ்டமா இருக்கும்னு சொல்றிங்களா? பரவாயில்ல அத்தான் ஸ்பூன் போட்டு சாப்பிடுவோம்னு” சொல்ல “அடிப் பாவி... நீ திண்றதிலேயே இரு! சரியான சாப்பாட்டு ராணி! நான் சொன்னது ரொமான்ஸ் பண்ண முடியாதுனு சொன்னேன்டி!” - தேவ் அவன் சொல்லியதில் சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள் “ஆமாம், அப்படியே பண்ணிட்டாலும்! எப்பப் பாரு ஒரு முத்தத்தக் கொடுக்க வேண்டியது! அதெல்லாம் ரொமான்ஸா?’ என்று கேட்டு அவன் காலை வார “கொக்கா மக்கா….. ஐயாவ என்னனு நினைச்சிட்டு இருக்க? இன்னைக்கு நைட் இருக்குடி உனக்கு கச்சேரி!” “பார்போம் பார்ப்போம்… நானும் அதுக்காகத் தான் வெயிட்டிங் மிஸ்டர் தேவேந்திர பூபதி!” என்றவள் அவன் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி விட்டு ஓடி விட வலிக்காதத் தன் தலையைத் தடவிக் கொண்டவனின் மனது முழுக்க நிம்மதியும் சந்தோஷமுமே குடி கொண்டிருந்தது! இரவு உணவை இருவரும் ஏதோ சமைத்தோம் என்று செய்து சாப்பிட்ட பிறகு “அத்தான் நீங்க மேல போங்க. நான் கிச்சன கிளீன் பண்ணிட்டு வரேன்னு” சொல்லி அவனை அனுப்பி விட்டு சிறிது நேரத்திற்கு எல்லாம் மேல வந்தவளைப் பார்த்து அசந்து தான் போனான் தேவ்! பின்ன? தழையத் தழையப் புடவைக் கட்டிய் தலை நிறையப் பூ வச்சி கை நிறைய வளையல் போட்டு இதை எல்லாம் விட முகம் முழுக்கப் புன்னகையுடன் கையில் பால் டம்ளருடன் அவன் முன் வந்து நின்றாள் மித்ரா. நிச்சயம் இப்படி ஒரு மாற்றத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை! அதில் அவன் தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் சற்று வெட்கப்பட்டவள் “என்ன அத்தான் அப்படிப் பார்க்கறிங்கனு?” கிசு கிசுப்பாகக் கேட்க “அடியேய் பொண்டாட்டி சும்மா அசத்துறடி!” என்றவன் பால் டம்ளரை வாங்கி டேபிளில் வைத்தவன் இழுத்து அணைக்க “ஆமாம், பூ எப்போடி வாங்கின?” என்று ஆச்சர்யத்துடன் கேட்க “நான் வாங்கல அத்தான். உங்க அம்மா தான் கேடியாச்சே! பையன் லட்சனம் தெரிஞ்சி அவங்களே வாங்கி வைக்கச் சொல்லி இருக்காங்க” என்று இழுக்க “ம்ம்ம்…. குட் மம்மீ! அப்ப நீயும் சீக்கிரம் குட் மம்மீ ஆகிடு!” என்றவன் இனிமேல் பேச்சே இல்லை என்பது போல் நடந்து கொண்டான். அங்கு அழகான நிறைவான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறியது. காலையில் கண் விழித்தவள் தேவ்வின் நெஞ்சில் தான் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தோஷமும் வெட்கமும் அடைந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ஐ லவ் யூடா புருஷானு” சொல்லி அவன் நெஞ்சில் தன் இதழ் பதித்து விலகியவள் குளித்துக் கீழே சென்று டிபன் செய்து முடித்த பின் தேவ் எழுந்து விட்டானானு பார்க்க வர அப்போது தான் கண் விழித்தான் தேவ். அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் “டிபன் ரெடியா இருக்கு அத்தான். சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கனு” சொல்லி அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவள் சென்று விட தேவ்வின் முகமோ சற்று யோசனையாக மாறியது. பின் குளித்து முடித்து அவன் கீழே வர அவனுக்காக டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவள் எழுந்து அவனுக்கு பிளேட் வைத்துப் பரிமாற அவனோ அவளைப் பின்புறமாக அணைத்து அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தவன் “ஏய் கேடி, என்ன யோசிச்சிட்டு இருக்க? காலையில் இருந்து என் முகம் கூட நிமிர்ந்து பார்க்க மாட்ற! திரும்பவும் என்ன விட்டுட்டுப் போகறதுக்கு பிளான் போடறியானு?” சற்று கோபமாக கேட்க “அச்சோ…. நான் ஏன் போகப் போறேன்? அப்படி எல்லாம் எதுவும் இல்ல அத்தான். இது வந்து……” என்று இழுத்தவள் பின் “உங்களப் பார்க்கறதுக்கு எனக்குக் கூச்சமா இருந்திச்சி அத்தான்!” என்று ஒரு வழியாகச் சொல்லி முடிக்க “கூச்சமா….” என்று. யோசித்து பின் வாய் விட்டுச் சிரித்தவன் “அப்படிப் பார்த்தா உன்னப் பார்க்க எனக்கும் தானடி கூச்சமா இருக்கணும்?” என்று சொல்லி அவளைச் சீண்ட “போங்க அத்தான்” என்று சினுங்கியவள் முன்புறமாகத் திரும்பி அவன் மார்பில் தன் முகம் புதைத்துக் கொண்டவள் “எப்போ அத்தான் வீட்டுக்குப் போறோம்?” என்று கேட்க “வீட்டுக்கா? ம்ஊம்…. நோ……. ஒரு வாரத்துக்கு இங்க தான்” - தேவ் “அஸ்க்கு புஸ்க்கு ஆச தோச! பெரியபிஸினஸ் மேக்னெட் ஒரு சமஸ்தானத்துக்கே ராஜாவான திரு தேவேந்திர பூபதி அவருடைய ஹனிமூன வெறும் அவருடைய கெஸ்ட் ஹவுஸ்ல கொண்டாடறதா? இதை அவர் மனைவியாகிய நான் வன்மையா கண்டிக்கிறேன்” என்றவள் அவன் முகம் நிமிர்ந்து பார்த்து “ஸோ என்ன எங்கனா வெளியே கூட்டிப் போயே ஆகணும்” என்று சொல்லி அவள் தன் ஒற்றைக் கண் சிமிட்ட “ஆஹா…. ஆஹா….” என்று வாய் விட்டுச் சிரித்தவன் “நீ இப்படி எல்லாம் உரிமையா எப்போ கேட்பனு தான்டி நானும் காத்துட்டு இருந்தன்?” என்றவன் “சரி அம்மா கிட்ட பேசிடுவோமா?” என்று கேட்டு தன்னிடம் இருந்த மொபைலை எடுத்து ஆன் செய்தவன், “அம்மா நாங்க இங்க நல்லா இருக்கோம். எங்களுக்குள்ள இருந்த எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடுச்சி” என்று எடுத்த எடுப்பிலேயே இவன் சொல்ல “……..” “ஆமாம்மா இப்போ தான் எழுந்தோம்” - தேவ் “……” “இனி தான் சாப்பிடணும்” - தேவ் “…… “ “ம்ம்ம்…. நாளைக்கு ஈவினிங் வரோம்மா வீட்டுக்கு” - தேவ் “……” “இதோ பக்கத்துல தான் இருக்கா. இருங்க உங்க மருமக கிட்ட கொடுக்கறன்” என்றவன் மொபைலை அவளிடம் நீட்ட அதை வாங்கியவளோ “ஹலோ…. அத்த நான் செய்தது தப்பு தான். இனிமே அப்படிச் செய்ய மாட்டன், என்ன மன்னிச்சிடுங்க அத்த” என்றாள் இவளும் எடுத்தவுடனே “அத்த எல்லாம் வேணாம். அம்மானே கூப்பிடு! இனிமே இந்த மாதிரி எல்லாம் நடக்காத அளவுக்கு ரெண்டு பேருமே பார்த்துக்கங்க. அவன் நாளைக்கே வரேன்னு சொல்றான். பிஸினஸ நான் பார்த்துக்கறன் இன்னும் இரண்டு நாள்னாலும் இருந்துட்டு வாங்க” என்று அவர் சொல்ல “ம்ம்ம்…. சரிமா” என்று சொன்னவள் அழைப்பைத் துண்டித்து விட “ஏன் ஹாசினி, இன்னைக்கே வீட்டுக்குப் போகணுமா? எனக்கு என்னமோ உன் கூட தனியா இரண்டு நாள் இங்கையே இருக்கணும்னு தோனுச்சி. அதான் நாளைக்கு வரன்னு அம்மா கிட்ட சொன்னன். நீ சொல்லு, இப்பவே போகலாமா?” - தேவ் “இல்ல அத்தான், வேண்டாம். எப்போ போறோம்னு சும்மா தான் கேட்டன். உங்க இஷ்டப் படியே நாளைக்கே போகலாம் அத்தான்” என்று அவள் சொல்ல “என் இஷ்டமா? அப்ப வாடி!” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு மாடிப் படி ஏற “ஐய்யோ…. அத்தான்! என்ன இது பட்டப் பகல்ல சாப்பிடாம கூட?” என்று அவள் சிணுங்க “காலையிலே என் முகத்தக் கூடப் பார்க்காம கடுப்பு ஏத்தினதுக்கு உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம்? அதுக்குத் தான்! இந்த தண்டனைக்கு ஏது இரவு பகல்? உனக்குத் தண்டனை கொடுத்தப் பிறகு சாப்பிடலாம். இப்ப பேசாம வா” என்று ஊடலுடன் அவன் கூற “ம்ம்ம்….” என்று சொல்லித் தன் இமைகளை மூடித் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் மித்ரா. மறுநாள் வீட்டுக்கு வந்து விட எல்லோரும் அவளிடம் சகஜமாகப் பேசினாலும் அவள் தாத்தா மட்டும் அவளிடம் பேசவில்லை. ஏன் அவள் சொல்வதைக் கேட்கக் கூட அவர் விரும்பவில்லை. தேவ் இதை பார்த்துவிட்டு கொஞ்ச நாள் போன பிறகு அவரே சமாதானம் ஆகிவிடுவார் என்று சொல்லி அவளைத் தேற்றினான். அடுத்த மாதமே அவர்களுக்கு முதல் வருடத் திருமண நாள் வர அந்த நாளுடன் தங்கள் ஹனிமூனைச் சேர்ந்து கொண்டாடத் திட்டமிட்டு இருந்தான் தேவ். வெளியே எங்கேயும் சுற்றாமல் தங்கள் கப்பலிலேயே சமுத்திரத்திற்கு நடுவே தங்கள் தேன்நிலவைக் கொண்டாட விரும்பினான் அவன். மித்ராவுக்கு இது முதல் கப்பல்பயணம் என்பதால் வாந்தியும் தலை சுற்றலும் என்று கொஞ்சம் ஸீ சிக்கில் கஷ்டப் பட அதைப் பார்த்தவனோ “நாம வேணா திரும்ப போய்டலாமா?” என்று கேட்க “வேண்டாம் அத்தான் முதல்ல கொஞ்ச நேரம் இப்படித் தான் இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. ஸோ நோ ப்ராப்ளம். இப்போ நாம எங்க போகப் போறோம் அத்தான்? எத்தனை நாள் டிராவல்?” - மித்ரா “எத்தன நாளா? ஒரு ஐந்து நாள் நாம கப்பல்ல தான் இருக்கப் போறோம் ஹாசினி! நாம தரையிலேயே லேண்ட் ஆகப் போறதே இல்ல. சும்மா தண்ணீ மேலையே சுத்திட்டு இருக்கப் போறோம்” என்று அவன் குதூகலிக்க. மித்ராவோ அவனை வாய் பிளந்துப் பார்க்க “இது நம்ம கப்பல்டி பொண்டாட்டி!” என்றான் தேவ் தேவ் தான் தயாரிக்கும் காஸ்மெடிக் க்ரீம் பொருட்களுக்குப் பெரிய பெரிய ஸ்டார்கள் நடிக்க ஷூட்டிங்கிற்கு என்று பயன்படுத்தவும் பெரிய பெரிய வி.ஐ.பி ஃபிலிம் ஸ்டார்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கு என்று வாங்கியது தான் இந்த சிறிய வகை கப்பல். ஐந்து நாளுக்கும் எந்த ஒரு கமிட்மெண்டும் அந்த கப்பலில் வைக்க வேண்டாம் என்று தன்னிடம் வேலை செய்பவர்களிடம் சொன்னவன் தன் மனைவியுடன் ஹனிமூனைக் கொண்டாட இங்கு வந்து இருந்தான். சிறிய கப்பலாக இருந்தாலும் அதன் உள்ளே பார்லர், ஹோம் தியேட்டர், ஜிம், ரெஸ்டாரண்ட், ஆஸ்பிடாலிட்டி, ஸ்விம்மிங் பூல் என்று ஒரு ஐடெக் கப்பலில் இருக்கும் சகல வசதிகளும் அதில் இருக்க மித்ரா சற்றுத் தெளிந்தவுடன் அதை எல்லாம் தன் மனைவிக்குச் சுற்றிக் காட்ட அப்போது அங்கு எமெர்ஜென்சிக்கு என்று இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்த மித்ரா அதில் அழைத்துப் போகச் சொல்லி சின்னக் குழந்தையாகக் கெஞ்ச “இல்ல ஹாசினி, இந்த ஃபைவ் டேஸ்சும் கப்பல்ல தான். நமக்கு ஒரு ஐலாண்ட் இருக்கு. அதுக்கு நாம ஹெலிகாப்டர்ல தான் போகணும். ஸோ நெக்ஸ்ட் டைம் உன்ன அங்க கூட்டிட்டுப் போகும் போது நீ அதுல போகலாம்” என்று சொல்ல சரி என்று சமாதானம் ஆனாள் மித்ரா. இருவரும் கப்பலில் இருந்தார்கள் என்று தான் பெயர். ஆனால் ஒருமுறை கூட சூரிய உதயத்தையோ சூரிய அஸ்தமனத்தையோ பார்க்க வில்லை. அவ்வளவு பிஸியாக இருந்தார்கள் இருவரும். ஒரு நாள் இரவு லேசான காற்றுடன் மழை வந்து விட அவளைக் கப்பலின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்ற தேவ் அலைகளின் தாலாட்டில் மழையில் நனைந்து கொண்டே வான் வெளியை ரசிக்க அலை மழை அந்த கார் இருள் என்று அங்கு இருந்த அந்த ரம்மியமான இரவை அவனுடன் ரசித்த மித்ரா அவனை நெருங்கி அமர்ந்து அவன் காதில் கிசுகிசுப்பாக “ரசனைக் காரன்டா நீ” என்று சொல்ல “ம்ம்ம்…. ஆமாம்டி நான் ரசிகன் தான்” என்றவனுடைய ரசனை வேறாகிப் போக அன்றைய இரவு இருவருக்குமே மறக்க முடியாத இரவாகிப் போனது. அவர்களுடையத் திருமண நாளுக்கு முந்தைய நாள் மாலை தங்கள் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தவன் திரும்ப அறைக்கு அழைத்துப் போகாமல் அவளுடன் வெளியேவே சுற்றிக் கொண்டிருக்க நைட் டின்னர் முடித்து கீழ் தளத்தில் உள்ள வேறு ஒரு அறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் அவளிடம் ஒரு புடவையைக் கொடுத்துக் கட்டச் சொல்ல அவளுக்குத் தெரிந்து விட்டது தன் கணவன் திருமண நாளுக்காக ஏதோ சர்ப்ரைஸ் வைத்திருக்கிறான் என்று. அதை அறிந்தவள் அவன் சொல்படியே கட்டிக்கொண்டு வர தேவ்வோ அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொள்ள நினைத்து அவளைத் தூக்க வர ‘ஆங்….. நிறுத்துங்க நிறுத்துங்க பாஸ்! இப்படி எல்லாம் தூக்கிட்டுப் போனா நான் வர மாட்டேன். நான் சொல்ற கண்டிஷன் படி செய்தா தான் நான் வருவேன்னு” கண்ணில் குறும்புடன் அவள் நிபந்தனை விதிக்க “சரி சொல்லு” - தேவ் “என்ன நீங்க தொட்டுத் தூக்கக் கூடாது. நான் நடந்து தான் வருவேன். ஆனா என் கால் தரையில படக் கூடாது” - மித்ரா முதலில் அது எப்படி என்று யோசித்தவன் பின் கண்கள் பளிச்சிட அவள் முன் வந்து நின்று “ம்….. கால வைடி” - தேவ் “ஹய்….. ஜாலி ஜாலி!” என்றவள் அவன் கழுத்தில் தன் இரு கைகளை மாலையாகப் போட்டவள் பின் அவன் கால்களின் மீது தன் கால்களை வைத்து ஏறி நிற்க அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டே அவளைத் தன் காலால் தூக்கிய படி நடத்திச் சென்றான் தேவ். இவர்கள் இப்போது இருந்ததோ கீழ் தளம். அவர்கள் அறையோ மேல் தளத்தில் இருந்தது. அவன் லிஃப்டில் ஏறி பின் மேலே போக அவனிடம் சலசல என்று பேசிக் கொண்டு வந்தாள் மித்ரா. “அத்தான் சூப்பரா இருக்கு நீங்க என்ன இப்படி தூக்கிப் போகறது. அதிலும் கப்பல் சூவைங் சூவைங்னு ஆடுதா அப்போ அது கூட சேர்ந்து நீங்களும் ஆடறிங்களா அதைப் பார்க்கும் போது நீங்க என்னமோ தண்ணி அடிச்சிட்டு ஆடற மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது” என்று சொல்லி அவள் சிரிக்க “அடியேய் இம்ச! கொஞ்ச நேரம் பேசாம வாயேன்டி” என்று அவன் அவளை மிரட்டினாலும் அவன் முகம் என்னமோ காதலுடன் தான் இருந்தது. “ஆஹா…நான் ம்சையா? இந்த இம்சைய நீங்க கல்யாணம் பண்ணி இன்னையோட ஒரு வருஷம் முடியப் போகுது” என்று சொல்லி அவனை வம்பிழுக்க ‘ஐய்யோ….. மனுஷனோட அவஸ்தைப் புரியாம படுத்துறாளே’ என்று மனதில் நினைத்தவன் “இப்போ நீ வாய மூடிட்டு வரல, பேசற அந்த வாயக் கடிச்சி வச்சிடுவன்டி” “அப்படியா? நீங்க கடிச்சிங்கனா நான் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்துடுவன் அத்தான். அப்பறம் நீங்க ஆரம்பித்த இடத்தில் இருந்து என்னைத் தூக்கி வரணும். இது தான் கேம் ரூல்ஸ் ஞாபகம் இருக்குல்ல? உங்களுக்கு வசதி எப்படி?” என்று கேட்க “நீ எனக்கு சின்ன இம்சை இல்லடி. பெரிய இம்சை” என்றவன் தன் நெற்றியோடு அவள் நெற்றியை முட்டிச் சிரிக்க அதற்குள் அவர்கள் அறை வந்து விட கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றவன் அவளைக் கீழே விட அந்த அறையைப் பார்த்த மித்ராவோ ஆ…. என்று வாய் பிளந்து நின்றாள். கட்டில் முழுக்க பூ அலங்காரம் செய்து இருக்க சுவர் முழுக்க த்ரி டி அனிமேஷன் செய்த படங்கள் இருக்க பலூன் ஜிகினா தாளால் அங்கங்கே தோரணங்கள் கட்டி இருக்க எந்த ஒரு செயற்கை விளக்குகள் என்று எதுவும் இல்லாமல் அறை முழுக்க மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே இருக்க மொத்தத்தில் அந்த இடமே இந்திரலோகம் போல் காட்சி அளித்தது. “வாவ்! செம்மையா இருக்கு அத்தான்” என்று சொன்னவள் ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள அந்த நேரம் அவன் கட்டி இருந்த கடிகாரத்தில் மணி பன்னிரெண்டு என்று சொல்லி இசை ஒலிக்க “ஹாப்பி ஃபர்ஸ்ட் இயர் வெட்டிங் ஆன்னிவெர்சரிடி பொண்டாட்டி” என்றவன் ஒரு கத்தியை கொடுத்து அங்கிருந்த கேக்கை இருவருமாக வெட்டப் பின் அந்தக் கேக்கை ஒருவர் மீது ஒருவர் பூசி முக்குளித்துத் தான் போனார்கள். போதும் போதும் என்ற அளவுக்கு தேன்நிலவு என்ற கடலில் திளைத்துக் கரை ஒதுங்கி வீடு வந்து சேர்ந்தவர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடன் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் ருத்ராவைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போன மித்ரா அங்குப் பள்ளியிலேயே மயங்கி விழுந்து விட பின் அந்தப் பள்ளி முதல்வர் தேவ்வுக்குத் தகவல் சொல்லித் தேவ்வுடைய மருத்துவமனையிலேயே அவளை சேர்க்க என்னமோ ஏதோனு இவன் பதறிப் போய் வந்தால் மித்ரா கருவுற்றிருக்கிறாள் என்ற சந்தோஷமான விஷயத்தைச் சொன்னாள் டாக்டர் மாலா. அதைக் கேட்டு தேவ் சந்தோஷப் பட மித்ராவோ அவனை அணைத்துக் கொண்டு கண் கலங்க “தாங்க்ஸ் அத்தான்” என்று சொன்னாள். “போடி லூசு! நான் தான் உனக்குத் தாங்க்ஸ் சொல்லணும். என்ன அப்பாவா ஆக்கி இருக்கியே!” இந்த விஷயத்தைக் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் அவளைக் கையில் வைத்துத் தாங்க இவ்வளவு நாள் பேசாமல் இருந்த தாத்தா கூட அவளிடம் பழைய படி அன்பாகப் பேசினார். நாட்கள் செல்ல மித்ராவை ஸ்கேனுக்கு வரச் சொல்லி மாலா தேதி கொடுத்து இருக்க அந்த நாளில் போனால் மாலாவுக்கு ஒரு டெலிவரி கேஸ் வந்து விட வேறு ஒரு டாக்டர் தான் மித்ராவுக்கு ஸ்கேன் பார்க்க வேண்டியதாகிப் போனது. மனைவியின் பக்கத்திலேயே நின்று தேவ் அந்த மானிட்டரையே பார்த்து கொண்டிருந்தான். திடீர் என்று “இது உங்களுக்கு ஃபர்ஸ்ட் குழந்தையானு?”அந்தப் பெண் மருத்துவர் மித்ராவிடம் கேட்க அந்தக் கேள்வி மித்ராவின் நெஞ்சை சுருக்கென தைத்தாலும் அதை மறைத்து ஆமாம் என்று தலையாட்டினாள். மனைவியின் முகம் வாடிப் போனதைப் பார்த்த தேவ் “ஏன் டாக்டர் குழந்தைக்கு எதாவது பிரச்சனையானு?” கேட்க “நான் ரிப்போர்ட்ட டாக்டர் விஸ்வநாதனுக்கு அனுப்பிடறேன். நீங்க அவர் கிட்டையே கேளுங்கனு” சொல்லி அவர் விலகி விட “அத்தான் நீங்க போய் விஷ்வா அண்ணா கிட்ட என்னனு கேளுங்க. அதிகமா தண்ணி குடிச்சதால நான் இப்போ ரெஸ்ட் ரூம் போகணும் போல இருக்கு” என்றவள் பின் அவன் கையை ஆதரவாக பிடித்து அழுத்து அழுத்தி விட்டுச் சென்று விட விஷ்வாவின் அறைக்கு தேவ் வரும்போது நெற்றியில் முடிச்சுட மித்ராவின் ரிப்போர்ட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா. “என்னடா குழந்தைக்கு எதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுடானு” இவன் பதற “டேய்பிரச்சனைஎல்லாம் ஒண்ணும் இல்லடா. நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு என் தங்கச்சி உடம்பு எப்படி தாங்குனு தான் யோசிக்கறன்” - விஷ்வா “அடேய் ராஸ்கல் ஒழுங்கா என்னனு சொல்லிடு. வீணா என் கிட்ட அடி வாங்கியே சாகாத” என்று தேவ் பல்லைக் கடிக்க “சந்தோஷமான விஷயம் தான்டா மாப்பிள. மித்ரா வயித்துல ஒரு குழந்தை இல்லடா மூணு குழந்த வளருது. அதுவும் நல்ல ஆரோக்கியத்தோட மூணும் முழு வளர்ச்சில இருக்கு” - விஷ்வா “மாப்பிள அப்படியா சொல்றனு?” என்று தேவ் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தாள் மித்ரா. அவளைப் பார்த்ததும் “ஹாசினி” என்று தாவிச் சென்று மென்மையாக அவளைத் தேவ் அணைக்க “என்ன அத்தான், என்ன ஆச்சி? குழந்தைக்கு எதாவது பிரச்சனையானு?” மித்ரா கேட்கும் போதே அவள் உடல் நடுங்குவதைப் பார்த்தவன் “குழந்தைக்கு பிரச்சனைஎல்லாம் எதுவும் இல்லடா. இந்தக் குட்டி வயத்துக்குள்ள ஒரு பாப்பா இல்லடா மூணு பாப்பா வளருதுனு”சொல்லி அவள் வயிற்றைத் தொட்டுக் காட்ட “ஹாங்…….!” என்று விழி விரித்த மித்ரா “அப்போ நம்ம வீட்டுக்கு மூணு குட்டி பாப்பா வரப் போகுதானு?” கண்ணில் கண்ணீருடன் கேட்க ஆம் என்று தலையாட்டியவனோ அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திமுகம் எங்கும் முத்தமிட சந்தோஷத்தில் அவளும் அவனுக்கு முத்தமிட அங்கிருந்த விஷ்வாவோ “டேய்...டேய்.. நானும் இங்க தான் இருக்கன். உங்க ரொமான்ஸ கொஞ்சம் நிறுத்துறிங்களானு?” சொல்ல “நாங்க ஏன்டா நிறுத்தணும்? நீ வேணா எழுந்து வெளியே போடா” - தேவ் “எல்லாம் என் நேரம்டா” என்று சொன்னாலும் இங்கிதம் அறிந்து விஷ்வா வெளியே சென்று விட்டான். இந்த விஷயத்தால் மறுபடியும் வீட்டில் இருந்த அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்தை அனுபவிக்க ருத்ராவுக்குத் தான் அதிக சந்தோஷமாக இருந்தது. ஒரு நாள் தன் தந்தையின் மார்பில் சாய்ந்து இருந்தவள் “அப்பு, நான் அம்மா மடில உட்காரக் கூடாதா? விஷ்வா அங்கிள் சொன்னாங்கனு!” ருத்ரா கேட்க “அப்படி இல்லடா, நீ அம்மா மடில உட்காரலம். ஆனா அம்மா வயிற்றுல தான் சாய்ந்து உட்காரக் கூடாது. ஏன்னா லஷ்மி ஆன்ட்டி வீட்டுக்குப் போன போது ஒரு குட்டிப் பாப்பா பார்த்த இல்ல? அந்த மாதிரி அம்மா வயித்துக்குள்ள மூணு பாப்பா இருக்கு. அதனால தான் அங்கிள் அப்படி சொன்னார்னு” தேவ் மகளுக்கு விளக்கம் அளிக்க “ஹேய்….. ஜாலி ஜாலி! அர்ஷா கூட விளையாட அவளுக்கு ஒரு பாப்பா இருக்கற மாதிரி என் கூட விளையாட பாப்பா வருமா? அதுவும் மூணு பாப்பா!” என்றவள் தந்தையிடம் இருந்து நழுவிக் கட்டிலில் தவழ்ந்து தாயின் வயிற்று அருகில் வந்தவள் “ஹலோ.. த்ரீ குட்டீஸ்! நான் தா உங்க குட்டிமா வந்துர்க்க. உள்ள இருக்கிற மூனு பேரு எப்ப எங்கூட வெளாட வருவிங்க? பாப்பா பாவம் இல்ல? சீக்கம் வந்துடுங்கனு!” மழலையாய் சொல்லியவள் குனிந்து தாயின் வயிற்றில் முத்தமிட ருத்ராவின் முகத்தை நிமிர்த்தி சந்தோஷத்தில் அவள் முகம் எங்கும் முத்தமிட்டாள் மித்ரா. “ஒரு பொண்ணு ஒரு குழந்தைய பெற்று எடுப்பதே கஷ்டம். இதுல நீ எப்படி மூணு குழந்தையப் பெற்று எடுக்கப் போறனு தெரியலையேனு?!” ஒரு தாயாக விசாலம் கவலைப் பட “எனக்கு எந்தப் பிரச்சனையும் வராதுமா. இவங்க மூணு பேரும் யார் குழந்தைங்க? உங்கப் பிள்ளையோட வாரிசுங்க! எப்படி என் அத்தான் எனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காம சந்தோஷத்தை மட்டும் கொடுக்கறாறோ, அப்படித் தான் அவர் பிள்ளைகளும் எனக்கு அதிக வலியோ சிரமமோனு எதுவும் குடுக்காம நல்ல மாதிரியா பிறப்பாங்க” என்று அவள் உறுதி படக் கூற அதைக் கேட்டு அவளை அணைத்து உச்சி முகர்ந்தார் விசாலம். எல்லோரும் அவளை நல்ல மாதிரி பார்த்துக் கொண்டாலும் தேவ்வும் விசாலமும் அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டனர். மருமகள் உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து உடம்பில் ஒரு பலம் வந்தவராகஇப்போது எல்லாம் அவரே தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பித்து இருந்தார் விசாலம். வயிற்றில் குழந்தை அசையும் போது எல்லாம் மித்ரா கண்கள் மின்ன தேவ்விடம் சொல்லும் போது அதை அவனும் உணர்ந்து அந்த சந்தோஷத்தில் பங்கு கொள்வான் தேவ். ஏழாம் மாதமே மித்ராவுக்கு வளைகாப்பு செய்து விட அதுக்கு அடுத்த வாரமே தேவ்வின் தாத்தாவுக்கு நினைவு நாள் வர எப்போதும் அவர் நினைவு நாளில் எதாவது ஒரு ஹோமுக்குச் சென்று அன்று ஒரு நாள் முழுக்க அந்த ஹோம்மின் செலவுகளை தேவ் ஏற்றுக் கொள்வது வழக்கம். அதன்படியே இந்த வருடமும் அப்படிச் செய்தவன் அங்கு உள்ளவர்களுக்கு மித்ரா கையால் சாப்பாடு கொடுக்கச் சொல்லி அழைக்க அதைக் கேட்டு விசாலம் தான் சத்தம் போட்டார். “என்னடா நினைச்சிட்டு இருக்க? விஷ்வா அவள நடக்கவே கூடாதுனு சொல்லி இருக்கான். நீ என்னமோ வாயியும் வயிறுமா இருக்கர பொண்ணப் போய் இங்க வா அங்கனு வான்னு கூப்பிட்டுகிட்டு இருக்க!” “மம்மீ எதுவும் நடக்காது, நான் அவளப் பார்த்துக்கிறேன்” என்றவன் பின் தன் மனைவியிடம் திரும்பி “அங்க உனக்கு ஒரு ரூம் ரெடி பண்ணி இருக்கன், நீ அங்க இரு. பிறகு நான் கூப்பிடும் போது மட்டும் வந்து சாப்பாடு கொடுத்தா போதும். திரும்ப ரூமுக்குப் போய் நீ ரெஸ்ட் எடுத்துக்க. நான் உன் கூடவே இருப்பன் ப்ளீஸ் வா ஹாசினி” என்று அவன் அழைக்க ஹோமில் மனநலம் குன்றியவர்கள் ஆதரவற்ற முதியோர் குழந்தைகள் என இருக்க தேவ் அவளிடம் சொன்னது போலவே சாப்பாடு கொடுக்கும் நேரத்தில் தான் மித்ராவை அழைத்தான். அவளால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் நாற்காலி போட்டு அமர்ந்து உணவு கொடுக்க வரிசையில் நின்று உணவு வாங்கிச் சென்றவர்களில், ஒரு வயதான பெண்மணி “குழந்தை உண்டாகி இருக்கிறியா தாயி? நல்ல மாதிரியா அந்தக் குழந்தைய பெத்து எடுப்ப! நீயும் உன் வீட்டுக்காரரும் எல்லா வித சந்தோஷத்தையும் பெற்று நீண்ட காலம் நீடுழி வாழ்விங்க!” என்று மனமார வாழ்த்தி அவர் விலகி விட அடுத்து வந்தவர்களைப் பார்க்கும் போது தான் மித்ரா உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர்களைப் பார்த்து அவள் அசையாமல் இருக்க பக்கத்தில் நின்றிருந்த நிர்வாகியோ எதிரில் இருந்த பெண்மணியிடம் “உங்க மகனுக்குப் பதில் நீங்களே உணவு வாங்கிக்கங்கமா. சரியாத் தட்டைப் பிடித்து வாங்குங்கனு” சொல்ல “ம்ம்ம்…..” என்று தலையாட்டியபடி உணவுக்காகத் தட்டை மித்ரா முன் நீட்டினார் ஷியாமின் அம்மா. அவர் பக்கத்திலோ சற்று மனநலம் குன்றிய நிலையில் ஷியாம்! ஷியாம் மித்ராவின் மீது வைத்தப் பார்வையைக் கூட எடுக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க அவன் தாயோ அவமானத்தில் தலை கவிழ்ந்து இருந்தார். மித்ரா அசையாமல் இருப்பதைப் பார்த்த தேவ் அவள் கையைப் பிடித்து உணவை அள்ளி அவர்கள் தட்டில் போடப் பார்க்க அதைச் செய்ய விடாமல் அவன் கையைத் தன் மறுகையால் தடுத்தவள். பின் நிர்வாகியிடம் திரும்பி “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. மீதிய நீங்க கொடுத்துக்கங்கனு” சொல்ல தேவ் அவள் நிலையறிந்து தன் இடது கையை அவள் தோளைச் சுற்றி படரவிட்டவன் ஆதரவாக அவளை அணைத்துக் கொள்ள அவன் கையணைப்பிலேயே சற்றுத் தூரம் வந்தவள் பின் திரும்பி ஷியாமைப் பார்க்க, அந்தப் பார்வையோ ‘பாருடா நல்லா பாரு! அன்று நான் உன்னிடம் இட்ட சவால்ல ஜெயிச்சிட்டன் பார்த்துக்கோ என் வாழ்க்கைய!’ என்பது போல் அவனுக்குச் சொல்ல அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்களாலேயே சொன்ன செய்தியில் தலை கவிழ்ந்தான். அறைக்கு வந்த உடனே “எப்படி அத்தான் இப்படி? இது நிச்சயம் நீங்க தான் அத்தான் ஏதோ செய்து இருக்கிங்கனு!” அவள் படபடக்க “ஹாசினி ரிலாக்ஸ்… ஆமாம், நான் தான் செய்தேன்!” என்றவன் என்ன செய்தான் என்று சொன்னான். எப்போது மித்ராவின் விஷயம் தெரிய வந்ததோ அதன் பிறகு ஷியாமை எங்கு ஏது என்று தேடிச் சில நண்பர்களை அவனுடன் பழக விட்டு ஷேர் மார்க்கெட்டில் அவன் பணத்தை முதலீடு பண்ணச் சொல்லி ஆசைக் காட்ட அவர்கள் வார்த்தையில் மயங்கி ஷியாம் முதலீடு பண்ண அவன் போட்ட பணத்தை மட்டும் இல்லாமல் இருந்த சொத்து வீடுனு எல்லாம் இழந்து அவனை ஒண்ணும் இல்லாமல் நிற்க வைக்க தேவ்வுக்கு ஒரு மாதம் தான் தேவைப்பட்டது. பின் அந்த நஷ்டத்தை மறக்க குடியையும் அந்த நண்பர்கள் பழக்கி விட குடிக்கும் அடிமையானான் ஷியாம். வேலைக்கும் போகாமல் சொத்து பத்தையும் இழந்து சதா குடியில் அவன் கிடக்க இதைப் பார்த்த அவன் மனைவி இவன் தனக்கு வேண்டாம் என்று உதறி விட்டு வேறு ஒரு வாழ்வை பார்த்துக் கொண்டு ஷியாமை விட்டுச் சென்று விட்டாள். அதில் இன்னும் அதிகமாக குடிக்க ஆரம்பிக்க ஒருமுறை அப்படி குடித்து விட்டு வண்டி ஓட்டியவனை ஆக்ஸிடென்ட் ஆக வைத்து தலையில் அடிப்பட்டதால் அவனைப் பைத்தியம்னு கூறி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து அரைப் பைத்தியமாகவே ஆக்கி விட்டான் தேவ். ஷியாம் முழு பைத்தியமாகவும் ஆகக் கூடாது அதேசமயம் தெளிந்த மனிதனாகவும் இருக்கக் கூடாது. சுற்றி நடப்பதை எல்லாம் அவன் உணர வேண்டும். ஆனால் தான் என்ன பேசுறோம் செய்கிறோம் என்பதை அறியாமல் அரைப் பைத்தியமாக இருக்க வேண்டும் என்பது தான் தேவ்வின் எண்ணமாக இருந்தது. இதை எல்லாம் சொல்லி முடித்தவன் “உன் கையால அதுங்களுக்குச் சோறு போடுவனு நினைச்சன். ஏன் செய்யல? அதுங்களுக்கு நான் கொடுத்த தண்டனை பெரிசுனு நினைக்கிறியா?” - தேவ் “இல்ல அத்தான், நான் அப்படி நினைக்கல. இதை விடவும் அதுங்களுக்குத் தண்டனை கொடுத்து இருக்கணும். ஒருத்தவங்க சாகும் போது யாருக்கு அவங்க பாவம் செய்தாங்களோ அந்தப் பாவத்த மன்னிச்சி கடைசியா அவங்க கையால சாகக் கிடக்கிறவங்களுக்கு உயிர்த் தண்ணிக் கொடுக்கச் சொல்லுவாங்க. இன்று அப்படி ஒரு நிலையில தான் அவங்க இரண்டு பேரும் இருக்காங்க. அப்படிப் பட்டவங்களுக்கு என் கையால உணவு கொடுக்க நான் விரும்பல. இப்போனு இல்ல, நாளைக்கு உண்மையாவே இருவரும் சாகற நிலையில் இருந்தாலும் நான் கொடுக்க மாட்டன்! ஏன்னா அவங்க இரண்டு பேரையும் எந்த ஜென்மத்திலும் நான் மன்னிக்கவே மாட்டன்! அதனால தான் என் கணவனான உங்களையும் உணவு கொடுக்க வேண்டாம்னு தடுத்தன்” என்றவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு “இந்த மாதிரி நேரத்துல உன் மனசு நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருக்கணும்னு சொல்லுவாங்க. நீ சந்தோஷமா இருக்கனு தெரியும். ஆனா நிம்மதி? அதுக்கு ஷியாம் கிட்ட நீ விட்ட சவால்ல ஜெயிச்சிட்ட என்றதுக்கு நீ என்கூட வாழற இந்த வாழக்கைய ஷியாம் அவன் கண்ணாலப் பார்க்கணும். அதே மாதிரி அதுங்க இருக்கற நிலைமையும் நீ அறியணும். அப்ப தான் உன் மனசு கொஞ்சமாவது அமைதி அடையும்னு நினைச்சன். அதனால தான் உன்னப் பிடிவாதமா கூட்டிட்டு வந்தன்டி” – என்று தேவ் சொல்லி முடிக்கவும் தான் விட்ட சவாலில் ஜெயித்ததை விட தனக்காக இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யும் கணவன் கிடைத்ததில் பூரித்துத் தான் போனாள் மித்ரா. ஆனால் தேவ்வோ ‘உண்மை தான் ஹாசினி! அதுங்களுக்கு இந்த தண்டனை கம்மிதான். கண்டிப்பா நான் இதோட விட மாட்டேன். இப்பவாது இந்த காப்பகத்துல சாப்பாடு போட்டுக்கத் துணிமணி எல்லாம் இருக்கு. நாளைக்கு இது எதுவும் இல்லாம இதை விட மோசமான நிலைமையில நிக்க வைப்பன். அதையும் உன் கண்ணால நீ பார்க்கத் தான் போற!’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் தேவ். நாட்கள் உருண்டோட மித்ராவுக்குப் பிரசவ வலி ஏற்பட அவளைப் பிரசவ அறையில் சேர்த்த தேவ் அவள் பக்கத்திலேயே டென்ஷனுடன் இருந்தவன் “ஹாசினி,நார்மல் டெலிவரி வேணுமா? ரொம்ப வலிக்கும்டி. அதிலும் மூனு குழந்த வேறடி! அதனால ஆப்பிரேஷன் பண்ணிடலாம்டி ப்ளீஸ்” என்று கெஞ்ச “அத்தான் நம்ம குட்டீஸ்ங்க எனக்கு அதிகக் கஷ்டம் கொடுக்க மாட்டாங்க. கொஞ்சமேனு தான் வலிக்கும். அந்த வலியையும் என்னாலத் தாங்கிக்க முடியும் அத்தான். மூனு குழந்தைனாலும் நார்மல் டெலிவரிக்கு டிரை பண்ணலாம் அத்தான். அப்படி முடிலனா ஆப்பரேஷன் பண்ணிக்கிறேன். நீங்க கவலப் படமா வெளில போய் தாத்தாவோட அம்மாவோட இருங்க” - மித்ரா “ம்ஊம்…..முடியாதுடி, நான் இங்கதான் இருப்பேன்!” என்றவன் அங்கேயே இருக்க கொஞ்ச கொஞ்சமாக விட்டு விட்டு மித்ராவுக்கு வலி வர அதைப் பல்லைக் கடித்துப் பொறுத்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலும் தாங்க முடியாத அளவுக்கு உயிர் வலி வரத் தன்னை மீறிக் கதறியவளைப் பார்த்துத் துடித்துத் தான் போனான் தேவ். மித்ரா சொன்ன மாதிரி அதிக நேரம் கஷ்டத்தைக் கொடுக்காமல் தன் தாயின் வயிற்றில் இருந்து அடுத்து அடுத்து என இவ்வுலகிற்கு வந்தார்கள் அவர்களின் மூன்று இளவரசர்கள்! உடல் சோர்ந்து போகக் கண்ணில் கண்ணீருடன் அவள் தேவ்வைப் பார்க்க அவளிடம் குனிந்தவன் மூன்று பேரும் பையன்டா செல்லம்!” என்று கண்ணில் கண்ணீருடன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் தேவ். பின் மித்ரா மயக்கத்தில் சென்று விட திரும்ப அவள் மயக்கம் தெளியும் போது அவள் பக்கத்திலே தேவ் இருந்தான். அவள் தெளிந்து விட்டாள் என்பதை அறிந்து அவளைத் தூக்கிக் கட்டிலில் சாய்ந்தார் போல் அமர வைத்தவன் பின் ஒவ்வொரு குழந்தையாக அவள் கையில் கொடுக்க அந்தப் பூ குவியல்களை வாங்கிப் பார்த்தவள் “மூன்று பேரும் அப்படியே உங்கள மாதிரியே இருக்காங்க அத்தான்!” என்றாள் சந்தோஷத்தில் கண்கள் மின்ன “ம்ம்ம்…..அப்படியா?” என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் கையில் இருந்தக் குழந்தையை வருடிக் கொடுக்க “இந்த நாலு பேரையும் நான் எப்படி சமாளிக்கப் போறனோ தெரியல அத்தான்?!” என்றாள் ருத்ராவையும் சேர்த்து “எனக்கும் அதே கவலை தான்! ஐந்து பேர நான் எப்படி சமாளிக்கப் போறனு தெரியலையே?!” - என்று தேவ் ராகம் இழுக்க “ஐந்து பேரா?” என்று கேட்டு மித்ரா அவனைப் பார்க்க “ஆமாம்டி ஐந்து பேரு தான். அதில் நீ தான்டி என் முதல் குழந்த! அப்பறம் தான் இவங்க நாலு பேரும்” - என்று சொல்லி அவள் தோளில் அவன் கை போட்டு மென்மையாக அணைத்துக் கொள்ள அவன் சொன்னதில் களுக்…… என்று சிரித்தவள் “ஆமாம் அத்தான்! இனிமே நீங்க வாங்கி வர்ற சாக்லேட்டை ஐந்து பங்கா பிரிக்கணும் இல்ல?” என்று அவள் கவலைப் பட அதில் வாய் விட்டுச் சிரித்தவன் “நீ எல்லா விதத்திலும் எப்போதும் எனக்குக் குழந்தை தான்டா” “ம்ம்ம்…..சரி அத்தான்! நான் எப்போதும் உங்களுக்கு குழந்தையாவே இருக்கன். ஆனா நீங்க மட்டும் எனக்கு அப்பாவா அம்மாவா தோழனா சகோதரனா இப்படி எல்லாமாக இருங்க” என்று சொல்லி மனதில் நிம்மதியுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மித்ரா. ஒரு பெண்ணுக்குத்தனக்குக் கிடைத்த ஆண் கணவனாக மட்டும் இல்லாமல் அம்மாவாக அப்பாவாக தோழனாக சகோதரனாக இப்படி எல்லாமுமாக இருந்தால் அது அவளுக்கு வரம்! அதன்படியே இன்றுமித்ராவாழ்வில் தேவ் என்ற வரம் கிடைத்து விட்டது. அதனால் இனி அவள் வாழ்வில் சுபம்….. சுபம்…. என்றும் சுபமே…… நிறைவுற்றது! [/B][/SIZE] [B][SIZE=6]நன்றி![/SIZE][/B] [/QUOTE]
Name
Verification
Post reply
Home
Forums
Completed Novels/ Short Stories
Completed Novels
Yuvanika's Completed Novels
உன்னுள் என்னைக் காண்கிறேன்...
உன்னுள் என்னைக் காண்கிறேன் 31
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.
Accept
Learn more…
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with
by
SMMTN