சில்வியா

Rajasekaran Bose

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவள் சாலையை கடக்கும் போது அவளை பார்க்கும் ஆண்கள் நாவில் நீர் (ஜொல்லு) சுரப்பது உண்டு... ஆனால் பெணகள் ஏன் ரசித்து பார்க்கிறார்கள்? இரண்டும் வித்தியாசமான பார்வைகள்...

அவள் பெண்ணாக இருந்திருக்க கூடாதா என்று ஆண்கள் எண்ணவும், அவன் ஆணாகவே இருந்திருக்க கூடாதா என பெண்கள் எண்ணவும் காரணம் ஒன்று தான்... அவள் ஒரு திருநங்கை...

தெருவில் நின்று கையேந்தும் அரவானிகளுக்கும் அவளை கண்டால் வெறுப்பு தான்... தாங்கள் தெருவில் கையேந்தி நிற்க தங்களில் ஒருத்தி மிடுக்கான ஆடையணிந்து தோளில் பையை மாட்டி கொண்டு அலுவலகம் சென்று பணி புரிவதால்... அவர்களில் வயதில் பெரியவர் ஒருவர் அவளை அணுகி பேசினார்...

சில்பா "நீ ஏன் தங்கம் சொன்னா புரிஞ்சிக்க மாட்ற? நீ வேளைக்கு போற இடத்துல உன்னை எல்லாரும் ஒரு மாதிரி பாப்பாங்க. வெறுத்து ஒதுக்குவாங்க. அருவெறுப்பா பாப்பாங்க. கிண்டல் பன்னுவாங்க. எங்க கூட வந்துரு மா. நானே உனக்கு பேர் வைக்குறேன்... சுந்தரா உன் பழைய பேரு?... சுடர்... வேணாம் சுவீத்தா நல்லா இருக்கா பேரு?"

அவள் "நீங்க கடைல பிச்சை எடுக்கும் போது எல்லாரும் வித்தியாசமா தானே பாக்குறாங்க? சாலைல நடக்குறப்போ அப்படி தானே கிண்டல் பன்றாங்க? நீங்க குடுக்குற ஆசிர்வாதத்த யார் மதிக்கிறா?"

"அது பிச்ச இல்லடீ வசூல்... நமக்கு தானம் செய்தால் அவங்களுக்கு புண்ணியம்... நாம ஆசிர்வாதம் செய்தால் அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்... இது நமக்கு ஆண்டவன் குடுத்த வரம்... உன் மனசுல என்ன பிரச்சினை இருக்கு என்கிட்ட சொல்லு..." என்று அவர் கேட்க அவள் தன் இழந்த காலத்தை சொல்லலானாள்...

சுந்தரமுர்த்தி பள்ளி பயிலும் போது பள்ளியில் முதல் மாணவன் எல்லா ஆசிரியர்களுக்கும் பிடித்தமனவன் அரும்பு மீசை அழகான சிரித்த முகம்... அவனுக்கு தோழர்களை விட தோழிகள் அதிகம் அதனால் மற்ற மாணவர்களின் வெறுப்புக்கும் ஆளானான். அன்பான நண்பன்...

கல்லூரி படிப்பின் போது அனைவரிடமிருந்தும் விலகியே இருந்தான். காரணம் தன்னுள் இருக்கும் பெண்மை உணர்வு அதிகமாவதை உணர்ந்தான்... தான் மற்றவர்களுடன் பேசினால் அதை அவர்கள் அறிய நேரிடலாம். பெண்களுடன் அதிகமாக பழகியதால் தான் தனக்குள் இருந்த பெண் விழித்து கொண்டாள் என எண்ணினான்... அதனால் பெண்களுடனும் பேசுவதை தவிர்த்தான். ஆனால் மாற்றங்கள் அதிகம் ஆனது. படிப்பையும் முடித்தான் ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்...

அவன் அன்னை சுமித்ரா அவனிடம் ஏற்படும் மாற்றங்களை கவனிக்காமல் இல்லை. அவன் வாழ்வில் ஒரு பெண் வந்தால் அவன் நிலை மாறிவிடும் என்று எண்ணி திருமண பேச்சை தொடங்கினார். இனி மறைத்து பயனில்லை என்று பேசிவிட்டான்.

சுந்தர் "அம்மா... கல்யாணம் வேணாம் மா."

சுமித்ரா "அந்த பௌச் ல பொண்ணுங்க தகவல் இருக்கு... பாரு..."

"அம்மா புரிஞ்சுக்கோங்க. நான்."

"உனக்கு ஒன்னும் இல்லை நல்லா தான் இருக்க..."

"நான் என்னை ஒரு பொண்ணா நினைக்க ஆரம்பிச்சிட்டேன் மா."

"நானும் கவனிச்சேன் டா தங்கம். இது நீ நினைக்கிற மாற்றம் இல்லடா. உனக்கு ஒன்னு சொல்றேன் கேழு என் அப்பாவோட பெரியப்பா தாத்தா இந்த மாதிரி தான் இருந்தாரு ஆனால் அவருக்கு அஞ்சு பசங்க, ரெண்டு பொண்ணுங்க... உனக்கு தெரியுமா ஜீன் பரம்பரை பரம்பரையாக வரும்... அவரு மாதிரி உனக்கும் அதாவது அவரோட சாயல் உனக்கு வந்துருக்கு அவ்வளவு தான்..."

"எனக்கு சரியா படலமா. நேத்து கேடீவீ ல வரலாறு படம் பாத்திங்க இப்போ பொண்ணு பாக்குறீங்க."

"டேய்... அது உண்மைதான் நேத்து தான் எனக்கு இந்த யோசனை தோணுச்சி... அதுல வர்ற அஜித் அளவு கூட உன் மாற்றம் இல்லடா. பயப்புடாத...."

"நான் செய்யுற ஒவ்வொரு செயலயும் எவ்வளவு கட்டுபடுத்திக்கிட்டு செய்யுறேனு உங்களுக்கு தெரியாது."

"அம்மா சொல்றத கேழு... நல்லதே நடக்கும்..."

சிறிது நாட்கள் நகர்ந்தன... பெண் தேடும் படலம் துரிதமாக நடந்து கொண்டு இருந்தது... பெரும்பாலும் அவன் செயல்பாடுகளை கவனித்து அவனை ஒதுக்கவே செய்தனர்.

சுந்தர் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொன்னான். அவன் அன்னையும் தன் பிடிவாதத்தை விடுவதாய் இல்லை... அன்று ஞாயிற்றுகிழமை... மதிய உணவு முடித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம்... அழைப்புமணி ஓசை... எழுந்து சென்று கதவை திறந்தான்...

சுந்தர் "ஹாய்... ஹரினி... எப்படி இருக்க? வா உள்ள... பட்டமளிப்பு விழால பாத்ததுல... மூனு வருசம் ஆச்சு..."

ஹரினி "ம்... ஏன் ஃபோன் பன்னா எடுக்க மாட்ற?"

"வா மா..." என்றபடி வந்து அமர்ந்தார் சுமித்ரா...

"அம்மா இவ ஹரினி... என் கல்லூரி க்லாஸ்மெட்..."

ஹரினி "அம்மா உங்ககிட்ட பேசனும்..."

சுந்தர் "ம்ச்... ஹரினி..."

சுமி "நீ சொல்லுடா..."

ஹரினி "கல்லூரி சேந்ததுலிருந்து நல்லா பேசுவோம் மா... நாங்க விரும்புறோம்னு எல்லாருக்கும் தெரியும்... ஆனால் ரெண்டாவது வருசம் முடியும் வரை நல்லா தான் பேசுனான் மூனாவது வருசம் படிக்கிறப்ப சுத்தமா பேசுறதே இல்ல. நான் இவன்கிட்ட என் காதல் சொன்னேன். 'கொஞ்சம் யோசிக்க நேரம் வேணும்'னு சொன்னான்... நாலாவது வருசமும் அப்படியே போச்சு... பட்டமளிப்பு விழால கூட பேசவே இல்ல ஓடிட்டான். இப்போ எங்க வீட்ல மாப்ள பாக்குறாங்க... அப்பா தொல்ல தாங்க முடியாம வேண்டா வெறுப்பா ஃபோட்டோஸ் பாத்தேன்... அதுல இவன் படம் இருந்துச்சி... நீங்களும் பொண்ணு பாக்குறீங்கன்னு தெரிஞ்சது அதான் உங்ககிட்ட பேச வந்தேன். என்கிட்ட என்னடா குறைய கண்ட?" என்று அவள் அவனை நேருக்கு நேர் கண்களை பார்த்து கேட்கையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது...

சுந்தர் அவள் கன்னங்களை தனது கரங்களால் பற்றி கட்டைவிரலால் அவள் கண்ணீரை துடைத்தபடி "உன்ன கஷ்ட படுத்துனதுக்கு மன்னிச்சிருடா... உனக்கு என்ன குறை!? எனக்கு தான்... நா... நான்... அரவானி."

அடுத்த நொடி அவள் கன்னங்களில் இருந்த அவன் கை அவன் கன்னங்களை பற்றிக்கொண்டது... சுமி விட்ட அறையால்.

சுமி "நானும் மாறிடுவான்னு விட்டா ரொம்ப பன்றான்மா இவன்."

ஹரினி "அத்தை நீங்க வீட்டுல வந்து பேசுங்க... இதெல்லாம் நான் பாத்துக்குறேன்... அது பிரச்சினை இல்ல சுந்து... வாழ்க்கை முழுசா நீ என் கூட இரு அது போதும்..."

அவன் எவ்வளவு மறுத்து பேசியும் அங்கு எடுபடவில்லை... சுமித்ரா வை சமாளிக்க முடியாமல் தவித்தவனுக்கு இப்போது கூடுதல் தலை வலி ஹரினி.

இரு குடும்பங்கள் அமர்ந்து பேசி நாள் குறித்து ஆகி விட்டது... அப்போதுதான் ஒன்னாவது படிக்கிறப்பலலிருந்து ஒன்னா இருக்க பால்ய சினேகிதன் சேரனை சந்தித்தான் சுந்தர்...

சேரன் சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன் சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன ஒரு மருந்து கடை வைத்து நடத்துகிறான். பெண்கள் விசயத்தில் அவன் வேறு ரகம் தான்... ஆனால் சிறு வயதில் இருந்து அவன் நட்பை மட்டும் விடவில்லை சுந்தர்.

சுந்தர் "மாப்ள... உனக்கு என்னை பத்தி தெரியும்... நானும் எப்படியாவது போராடி எல்லா முறையும் கல்யாணத்த நிறுத்திகிட்டு இருந்தேன் ஆனால் இந்த முறை முடியாது போல டா. அவ ரொம்ப அடம் பிடிக்கிறாள்."

சேரன் "நான் வேணும்னா அவகிட்ட பேசவா மச்சி?"

"ஒரு ஆணியும் புடுங்க வேணாம். உன் ப்ளேபாய் வேள அவகிட்ட வேணாம். மூடிட்டு எனக்கு யோசனை சொல்லு."

"நல்லதுக்கு காலம் இல்ல. சரி அப்படினா மும்பை கிளம்பு அறுவைசிகிச்சை பன்னிக்கோ. முழுசா மாரிட்டா எந்த பிரச்சினையும் இல்லைல?"

"நல்ல யோசனை தான். நான் சீக்கிரம் இந்த வேளைய பாக்குறேன்."

அவன் யோசனை படி கோவா செல்வதாக பொய் சொல்லி விட்டு மும்பை சென்று விட்டான். அங்கு அவனை போல் வந்தவர்கள் இருபது பேருக்கு மேல் நின்றனர். அன்று புதன் கிழமை இவனுக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை தேதி குறித்து சொல்லப்பட்டது.

அங்கு இருந்தவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகிவிட்டான். சுரேஷ் என்பவனுடன் கூடுதல் பிரியம்...

அன்று சனிக்கிழமை சுரேஷ் க்கு அறுவைசிகிச்சை. காலை பத்து மணி வரை அவனுடன் பேசி கொண்டு இருந்துவிட்டு அவனை அறுவை சிகிச்சை அரங்கினுள் வெளியே சென்றான் சுந்தர்... ஞாயிற்றுக்கிழமை தான் சுரேஷை பார்க்க அனுமதிக்க பட்டான் சுந்தர்.

முற்றிலும் மாறிய சுரேஷ். மார்பு பகுதியில் கிழித்து சிலிக்கான் கட்டிகள் வைத்து தையல் போட பட்டிருந்தது. மற்றபடி சில பகுதிகள் நீக்கந்பட்டு செயற்கை தோள் வைத்து தைக்க பட்டு இருந்தது. ஆனால் அவனுக்கு வலி தெரியவில்லை காரணம் மரப்பு ஊசி போட்டு அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணி கொடுக்க பட்டிருந்தது. கைகால் அசைக்க முடியாத நிலையில் படுத்து கிடந்தாள் சுரேஷ்.

அவள் கஸ்டத்தை பார்த்து 'இது நமக்கு தேவையா?' என்ற எண்ணம் தோன்றியது... உடல் மாற்றத்திற்கான அறுவை சிகிச்சை பற்றியும் அதற்கான வலி நிவாரணி பற்றியும் இணையத்தில் தேட தொடங்கினான்... மார்பில் வைத்த சிலிக்கானால் உயிரிழந்த நடிகை, அரவானிகள் பற்றி படித்தான். வலி நிவாரணிகளால் உயிரிழந்தவர்கள் உதாரணமாக மைக்கேல் ஜாக்சன். எல்லாவற்றையும் படிக்க படிக்க அவன் மனம் பதை பதைக்க தொடங்கியது. சுரேஷ் அருகில் சென்று அமர்ந்தான். தான் படித்து அறிந்த எல்லாவற்றையும் சொன்னான்.

சுந்தர் "இவ்வளவு பிரச்சினை தர இந்த அறுவைசிகிச்சை தேவையா? எதாவது ஆச்சுனா?"

"ஆயிட்டு போகுது. எனக்கு என்னை பெண்ணா பாக்குறதுல சந்தோசமா இருக்கு... அதுனால செத்து போயிடுவேன்னா பரவால. கொஞ்சம் நாள் சந்தோசமா இருந்துட்டு செத்து போறேன்."

"..." அமைதியாக யோசனையில் இருந்தான் சுந்தர்.

அவன் யோசனையை கவனித்த சுரேஷ் "நீ ஏன் இங்க வந்த?" சுந்தர் நடந்த எல்லாவற்றையும் சொன்னான்.

"உனக்கு உன்னை பெண்ணா பாக்கனும்னு ஆசை இல்லயா?"

"இல்ல."

"சரி ஒன்னு செய்... திரும்பி ஊருக்கே போயிடு."

"போனா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. நான் போக மாட்டேன்."

"அறுவை சிகிச்சை பன்னுனா உடம்பு எப்படி இருக்குமோ அப்படி உன்னை காட்டிக்கலாம். நான் சொல்ற பொருள்லாம் வாங்கிக்கோ. நான் சொல்ற மாதிரி செய். கல்யாணம் பன்னி வைக்க மாட்டாங்க. புரியுதா? கிளம்பு."

"அதான் அறுவை சிகிச்சை பன்னலியே, நான் பைசா வாங்கிட்டு போறேன்."

"அதெல்லாம் இவனுங்க கிட்ட வாங்க முடியாது. மீறி கேட்டா உன்னை கொண்ணுட்டு உன் உடலுறுப்புகள எடுத்து வித்துடுவானுங்க. யார்கிட்டயும் சொல்லாம கிளம்பு."

என்று சொல்லி அவனுக்கு தேவையான விசயங்களை சொல்லி அனுப்பினாள்.

"சரி நான் கிளம்புறேன்... உடம்பு குணமானதும் இது என் விலாசம் வந்துரு."

"உனக்கு ஏன் பிரச்சினை? நான் பாத்துக்குறேன் நீ போ..."

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. நீ வா... நான் பாத்துக்குறேன்..."

'சரி' என்று அவள் சொன்ன பிறகு கிளம்பி சென்றான்... பயத்தில் குறுகுறு வென பார்த்துக்கொண்டு பதட்டத்தில் வெளியே செல்லும் சுந்தரை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் சுரேஷ் எனும் சில்வியா...

அவள் சொன்னவாரு பொருட்கள் வாங்கி தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டு வீட்டை அடைந்தான் சுந்தர்...

சுமி அவனை அடித்து வெளியே தள்ளி கதவை அடைத்துவிட்டார். துபாயில் இருக்கும் அவன் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவனும் வெளியே சென்றுவிட்டான்... மூன்று நாட்கள் அவனை தேடி அழைந்தார்... ஆனால் அவன் எங்கே சென்றான் என்று தெரியவில்லை. அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. புலம்பி அழுது கொண்டிருந்த சுமியை ஆறுதல் படுத்தினாள் ஹரினி...

சுமி "ஏன் கண்ணு இன்னும் அவன விரும்புறியா? உன் வாழ்க்கைய பாருமா என் தலை எழுத்து நான் வருந்தியே சாகுறேன்."

"அத்த அவன் இந்த முடிவு எடுக்க காரணமே என் வாழ்க்கை கெட்டு போயிட கூடாதுன்னு தான். அவ்வளவு என்னை விரும்புறான்... அவன் இல்லாம உயிருள்ள பிணமா வாழ்றத விட சந்தோசமா அவன் கூட வாழ்வேன் நான்... நீங்க கவலைபட வேண்டாம் நான் அவன கண்டுபிடிக்கிறேன்..."

என்று அவள் சொல்ல அவள் கன்னத்தை வருடி நெட்டி முறித்துவிட்டு கட்டிப்பிடித்து அழுது தீர்த்தார்.

அவன் சேரனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு தஞ்சம் அடைந்தான். அவனிடம் சில்வியா வருவதையும் அவளை பார்த்துக்கொள்ளும் படியும், தான் படிப்புக்கு வேளை கண்டிப்பாக கிடைக்கும் வீட்டு செலவை பார்த்து கொள்ளலாம்... என்று சொல்லி இருந்தான்.

சேரன் "நாயே என்கிட்ட காசா இல்ல. விடு பாத்துக்கலாம்... நீ எப்போ இந்த வேசத்த களைக்க போற?"

"இல்லடா இனி இப்படித்தான் இருக்க போறேன்."

"அப்படினா அறுவைசிகிச்சை பன்னுடா. இல்லாட்டி இந்த வேசத்த களைச்சிட்டு வீட்டுக்கு போ."

"முடியாது டா. நான் பாத்துக்குறேன்..."

என்று சொல்லி விட்டு அவன் வேளை பார்த்த அலுவலகத்தில் பணி அனுபவ சான்றிதழ் பெற சென்றான். ஆனால் அவர்கள் 'நீங்கள் மாற்று பாலினமாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களை போண்ற அறிவாளியை இந்த நிறுவனம் இழக்க விரும்பவில்லை... உங்களுக்கு விருப்பம் என்றால் உங்கள் பணியை இங்கேயே தொடரலாம்' என்று சொல்லிவிட்டார்கள்...

இப்போது மறுபடியும் அவன் பணிக்கு சென்று ஒரு வாரம் ஆகிறது...

சுந்தர் "எனக்கு அறுவைசிகிச்சை செய்றதுல விருப்பம் இல்ல. இப்போ நான் வேளை பார்க்கும் இடத்துலயும் எந்த பிரச்சனையும் இல்ல. இப்போ சொல்லுங்க நான் என்ன பன்ன?"

சில்பா "சரி எந்த வீட்டுல தங்கி இருக்க?"

சுந்தர் சேரனின் வீட்டை காட்ட,

"அந்த வீடா? அவன் சரியான பொம்பள பொறுக்கி ஆச்சே!"

"தப்பா பேசாதீங்க அவன் என் நண்பன்."

"சரி போயிட்டு வா... நான் சொன்னத பத்தி யோசி..." என்று சொல்லி அவனை ஆசிர்வாதம் செய்து புன்னகை உடன் அனுப்பினார்...

சுந்தர் அவன் நண்பன் வீட்டில் இருப்பதை ஓய்வின்றி அழைந்து திரிந்து ஒரு மாதத்தில் கண்டுபிடித்து விட்டாள் ஹரினி சேரன் வீடு ஹரினி வீட்டில் இருந்து இரண்டு மணிநேரம் பயணம்... அவள் அந்த ஊருக்கு வந்துவிட்டாள் ஆனால் அவன் வீடு தெரியாமல் அலைந்து கொண்டு இருந்தாள்... அரவானிகள் அதிகம் வசிக்கும் இடங்களில் தேடி அலைந்தாள்...

கண்ணில் தென்படும் அரவானிகளிடத்தில் தன் கைபேசியை காட்டி கண்ணில் பரிதவிப்புடன்... சரியாக சாப்பிடாததாலும் அலைச்சலினாலும் அவளை பார்க்கவே பாவமாக இருந்தது... அவளை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டார் சில்பா...

"அம்மாடி ஹரினி... இங்கே வா..."

அவர் அழைத்ததுமே ஹரினிக்கு கண்கள் குளம் கட்டிவிட்டது... வாய் அடைத்து விட்டது... பொம்மை போல் அவர் அருகில் வந்து நின்றாள்... அவள் கண்களில் கண்ணீர் மட்டும் இல்லை அளவிட முடியாத அளவுக்கு காதல் அதனால் வந்த தவிப்பு சில்பாவிற்கு புல்லரித்து விட்டது... 'இது தான் காதல் என்பதா?'...

அவள் முகத்தை வறுடி நெட்டி முறித்துவிட்டு "வாடா தங்கம் நான் கூட்டிட்டு போறேன்... என்று அவர் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்... பத்து நிமிட பயணம் அவள் இதயத்துடிப்பை தோளை பற்றி இருக்கும் அவள் கையில் உணர்ந்தார் சில்பா...

அவளை வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு சில்பா மட்டும் உள்ளே சென்றார்...

"எப்பா சுந்தர்... எங்க இருக்க?"

"இதோ வரேன் மா..." என்றபடி அவர் அருகில் வந்தவன்... "நீங்கதான் பேரு வச்சீங்க... ஆனால் நீங்களே அத கூப்பிட மாட்ரீங்க..."

"அங்க பாருயா..." என்று மாடியிலிருந்த ஜன்னல் வழியே கீழே காட்ட அவள் கலங்கிய கண்களோடு கைகளை பிசைந்தபடி நின்ற ஹரினியை பார்த்தான். சற்று உறைந்து போணான்... மெய் மறந்து அவளை பார்த்து கொண்டு நின்றான்... சட்டென முகத்தை சில்பா பக்கம் திருப்பி

"இவள ஏன்மா கூட்டிட்டு வந்திங்க? நான் தான் எல்லாத்தையும் சொன்னேனே... இவளால தான் நான் ஊர விட்டே வந்தேன்."

"நீ அவள காதலிக்கிறது உன் கண்ணுல தெரியுது... அப்பறம் ஏன் அவள ஒதுக்குற?"

"அதிகமான காதல் மா அவ மேல... அதுனால தான் என்னால அவ கஸ்டப்பட கூடாதுன்னு நினைக்கிறேன். அவள ஒதுக்கல மா நான் ஒதுங்கி வந்துருக்கேன். என் அம்மாவை விட்டுட்டு வந்துருக்கேன். எல்லாம் அவ நல்லா இருக்கனும் தானே?"

"என்னை மாதிரி ஒருத்தர நம்பி யாராவது வருவாங்கலா என்ன முதல்ல பேசுவாங்கலா? அவ பேர சொல்லி கூப்பிட்டதும் ஒன்னும் கேக்காம கூட வந்துட்டா... எல்லாம் உன் மேல இருக்க காதல்... அளவுகடந்த அன்பு... அவ முகத்தை பாரு எப்படி வத்தி போயிருச்சின்னு. நீ இல்லனா அவ நிலையை யோசி..."

"..." அவளை பார்த்து கொண்டு இருந்தான்... கண்ணீர் கரைந்து ஓடியது...

"உன் பிரச்சனைக்கு தீர்வு சொல்ரேன் கேழு... கடவுள் இருக்கட்டும் நான் அறிவியல் ரீதியா சொல்றேன்..."

"என்ன ஹார்மோன் மாற்றம் பத்தி சொல்ல போறீங்களா?"

"கேழு... ஒரு மனுசன் உடம்புல ஆணுக்கான அம்சம் அதாவது குணம் இருக்கும் அதேபோல் பெண்ணுக்கான குணமும் இருக்கும்... அந்த குணங்கள் ஹார்மோன் அமைப்பு மூலமா நிர்ணயம் செய்யபடும்...

பொதுவா ரெண்டு பகுதியும் சரிசமமாக இருக்காது... பெண்ணுகான பகுதி அதிகமாக இருந்தா பெண்... ஆணுக்கான பகுதி அதிகமாக இருந்தா ஆண்...

ஒரு பெண் உடல்ல ஆணுக்கான பகுதி அதிகமாக இருந்தா ஆண் குணம் உள்ள பெண் புரிஞ்சுக்கோ அது பெண் தான்... அதே மாதிரி தான் ஆணும் பெண்ணுகான பகுதி அதிகமாக இருந்தா பெண் குணம் கொண்ட ஆண்... பிறப்பிலேயே இப்படி அமையுறது உண்டு அது இயல்பு...

உதாரணமாக ஆண் குணம் உள்ள பெண்... அடாவடித்தனமா இருப்பாங்க... வீரமா இருப்பாங்க... அவங்க தனியா தெரிவாங்க... அவங்கள வீரமான பெண்ணுனு சொல்லுவாங்க... இல்ல மட்ட படுத்தனும்னு நினைச்சா ரௌடி பொண்ணுனு சொல்லுவாங்க...

ஆனால் மென்மையான ஆண்... அவனுக்கு கொஞ்சமா பெண் சாயல் இருந்தா அவன அலி, உஸ் னு சொல்லி கலாய்ச்சி சாவடிப்பாங்க... பெண் குணம் கொண்ட ஆண் னு அவன விட மாட்டாங்க. இது தான் சமூகம்.

வயசு ஏற ஏற பழக்க வழக்கம் காரணமா குணங்கள் மாறும்...

உதாரணமாக காவல்துறைக்கு வேளைக்கு போகும் பெண் அவங்க செய்யுற உடற்பயிற்சி மற்றும் அவங்க கத்துக்குற அணுகுமுறை இதெல்லாம் அவங்களுக்கு கடினமான மற்றும் விறைப்பு தன்மை கொடுக்கும்...

நடனம் ஆடும் ஆண்... மென்மையான நளினம் அவனுக்கு வரும்...

கடினம், வீரம் போல விசயம் ஆண் குணம் னும்... அடக்கம், பயம், மென்மை இதெல்லாம் பெண்கள் குணம்னும் பிரிச்சு வச்சிருக்காங்க அவ்வளவு தான்...

நீ அது போல தான் பா... பெண் குணம் கொண்ட ஆண்...

ரெண்டு குணமும் சமமாக இருந்தா அது தான் பா அரவானி... அவங்க பெண்ணும் இல்ல ஆணும் இல்ல... மூன்றாம் பால்...

இவர்கள் பேசி முடிக்கும் போது சில்வியா அங்கு வந்தாள்... "அப்படினா எனக்கு ஆண்கள பார்த்தா வர்ற ஈர்ப்பு பெண்கள பாத்தா வர மாட்டிங்குதே?! நான் பெண் குணம் கொண்ட ஆண் னா எனக்கு பெண் மேல தான ஈர்ப்பு வரனும்?"

"நம்ம உடம்பு நம்ம மனசுக்கு தகுந்தாற்போல் அதாவது மூளை செயல்பாடுக்கு தகுந்தாற்போல் தன்னை தானே மாத்திக்கும்... ஒரு சூழல்ல நீ கவனிக்கிறப்போ குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பறம் அந்த சூழல நீ மறந்துருவ அப்படி சொல்ரத விட அந்த சூழல் உன் கண்ணுக்கு தெரியுறது இல்ல காரணம் நீ அந்த சூழல் குள்ள போயிடுறது தான்... அந்த சூழல் உன்னை ஆக்கிரமிப்பு செய்யுதுனு சொல்லலாம் அல்லது நீ உனக்குள்ள அந்த சூழல ஏத்துக்குறனு சொல்லலாம்...

அந்தமாதிரி பெண்கள ரசிச்ச நீ அவங்க வாழ்க்கைய வாழ்ந்து அந்த சூழலா அதாவது பெண்ணா மாறிட்டன்னு சொல்ல முடியாது பெண்மையை ஏத்துக்கிட்டன்னு தான் சொல்லனும்..."

"போங்கமா என்னென்னமோ சொல்றீங்க ஒன்னும் புரியல. என்னை காதலிக்கிறதா இப்போ ஒருத்தன் சொல்லிட்டான்... எனக்கும் அவன பிடிச்சிருக்கு... சரின்னு சொல்லிட்டேன்... அவன கல்யாணம் பண்ண போறேன்... நிம்மதியா வாழ போறேன்..."

சுந்தர் "என்கிட்ட சொல்லல... நம்ம நட்பு அவ்வளவு தானே?"

"அவன் யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னான்... நான் உன்ன தான் விரும்புனேன் சுந்தர். ஆனால் நீ அவள தான் விரும்புற.. நான் என்ன செய்ய... அவன எனக்கு பிடிக்கும்..."

"யா..." என்று சுந்தர் ஆரம்பிக்கையில் சில்பா இடையே வந்து "இத அப்பறம் பேசிக்கலாம்... நீ கிளம்பு பிள்ள ரொம்ப நேரமா காத்திருக்கா..."

என்று சொல்ல சுந்தர் வெளியே சென்றான் தயக்கமாக... அவனை கண்ட ஹரினி அருகே வந்து அணைத்து கொண்டாள்... சிறிது விலகி கன்னத்தில் ஓங்கி அறைந்து "ஏன்டா வீட்ட விட்டு போன? அம்மா பாவம்டா அழுதுட்டே இருக்காங்க. சாப்பிடவே இல்ல."

"அவங்க மட்டும் தானா?" என்று கேட்டு அவள் முகத்தை கைகளில் ஏந்தி முத்தமிட நெருங்குகையில்...

சில்பா "இதெல்லாம் வீட்டுக்கு போய் வச்சிக்கலாமா?" சுந்தர் அசடு வழிய ஹரினி என்ன நடந்தது என்று குழம்பி இருந்தாள்... "சரி வா வீட்டுக்கு போகலாம்" என்று சொல்லி அவள் கரம் பிடித்து நகர்ந்தான் அவளும் கைப்பாவையாக அவனுடன் சென்றாள்...

சில்பா "சாவி வண்டிலயே தான் இருக்கு எடுத்துட்டு போங்க... என்ன முழிக்கிற... எடுத்துட்டு போ... என்னோட அன்பளிப்பு... இந்த வண்டி..."

அவருக்கு நன்றி கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்... செல்லும் வழியில் அவள் மௌனியாகவே இருந்தாள் அவனும் அதிகம் பேசவில்லை... தன் அன்னையை காணும் ஆவலில் இருந்தான்...

வீட்டை அடைந்தனர்... எப்போதும் போல வீட்டுக்கு வெளியே காத்து இருந்தார் சுமி... இவர்களை கண்டதும் வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்...

சுந்தர் "அம்மா கதவ திறங்கமா... சரி நீங்க திறக்க மாட்டிங்கல? நான் மறுபடியும் அங்கேயே போயிடவா?"

வேகமாக வெளியே வந்தவர் அவன் கன்னங்களை வீங்கும் அளவு கவனித்து விட்டு "இப்பயும்... அப்பயும்... நான் கதவ தானே மூடுனேன்?! உன்ன போக சொன்னேனா? நீ இப்படி ஆயிட்டா என் புள்ள இல்லன்னு ஆயிடுவியா? இனி வெளியே போணா கால உடைச்சிடுவேன்."

என்று அவர் அழுது கொண்டே பேச... அவனும் அழ தான் செய்தான்...

"ஒரு நிமிஷம் மா..." என்று சொல்லிவிட்டு மாடி படி ஏறி தன் அறைக்கு சென்றான்... பத்து நிமிடங்களில் மறுபடியும் ஆணாக அதாவது துணிகளை மாற்றிக்கொண்டு வந்தான்... இருவரும் அவனை அதிர்ந்து பாரத்தனர்...

சுமி "அறுவைசிகிச்சை பன்னுனதா சொன்ன?!"

"பன்னலமா... கல்யாணத்த நிறுத்த அப்படி சொன்னேன்." தலையை குனிந்தபடி சுந்தர் சொல்ல, ஹரினி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினாள்... அவளை துரத்தி சென்று கையை பிடித்து நிறுத்தினான்...

ஹரினி "கைய விடு. நான் போறேன். இதுக்கு தானே இவ்வளவு கஸ்டப்பட்ட? அம்மாவ கூட விட்டு போயிட்டல்ல? எல்லாத்துக்கும் நான் தானே காரணம்?! மன்னிச்சிருடா என்னை... போயிடுறேன் சந்தோசமா இரு."

சுந்தர் "நீ இல்லனா எப்படிடீ சந்தோசமா இருப்பேன்? மன்னிச்சிரு மன்னிச்சிருடா செல்லம்... முட்டாள் தனமா இப்படி பன்னிட்டேன். இனி பிடிச்ச கைய விட மாட்டேன்... நீ இல்லாமல்... நானும் இருக்க மாட்டேன் டீ..."

அவள் கையை பிடித்து தன் பக்கமாக திருப்பி இறுக கட்டிக்கொண்டு காது மடலில்... கன்னத்தில்... பக்க கழுத்தில் மாறி மாறி முத்தமிட்டான்... அவள் அவனை விலக்கிவிட்டு

"உண்மையா சொல்றியா? நம்பலாமா?" என்று வெள்ளந்தியாக முகத்தை வைத்து கேட்டாள்... ஆனால் இவன் அவள் மனதிற்கு அல்லவா பதில் அளிக்க வேண்டும்?! இரண்டு நொடிகளில் தனது இதழை அவள் இதழ்களோடு இணைத்து அவள் மனதிற்கு பதில் சொல்ல தொடங்கினான்...

அவள் மனம் அவன் பதில்களை ஏற்று கொண்டது... இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது... சுமியின் நிலையும் இதுதான்... தன் மக்களின் மகிழ்ச்சியே அவரின் மனதை நிரப்பியது...

நிச்சயதார்த்தம் தேதி நிச்சயிக்கப்பட்டது... அந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல சில்வியா வுக்கு கைபேசியில் அழைப்பு விடுக்க அழைப்பை ஏற்று...

சில்வியா "நான் இப்போ பேசுற மனநிலைல இல்ல. அப்பறம் பேசுறேன்."

சுந்தர் "இன்னும் கோவமா இருக்கியா?"

பதில் ஏதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தாள்.

ஹரினி "என்னாச்சி?"

சுந்தர் "கட் பன்னிட்டா. விடு அவளா பேசுவா..."

"ஹூம்..."

ஒரு மாதம் கடந்தது... நிச்சயத்திற்கு இரு நாட்கள் முன்பு நல்லிரவு சில்பா சுந்தர் அலைபேசிக்கு அழைக்க...

'என்ன இந்த நேரத்துல அழைக்கிறாங்க?' என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றான்...

"அம்மா... நல்லா இருக்கீங்களா? எதாவது முக்கியமா பேசனுமா?"

"உன் தோழி சில்வியா இறந்துட்டா."

"..."

அவன் அழுவது தெரிந்தது அவருக்கு "கிளம்பி வர்றியா?"

"வரேன் மா..."

அவன் அன்னையிடம் சொல்லிவிட்டு உடனே கிளம்பினான்.

சில்பா வீட்டில் கிடத்தப்பட்டிருந்தாள் சில்வியா. சுந்தர் கண்கள் வற்றி போய்விட்டது.

" சில்லி ஏன் மா இப்படி செய்தாள்?"

சில்வியா:

சில்வியா, சுந்தர் சொல் கேட்டு மும்பையில் இருந்து பட்டுக்கோட்டை வந்தாள்... வந்ததும் பேருந்து நிலையத்தில் நின்று சுந்தரை அழைக்க சுந்தர் சில்பாவுடன் அவர் வண்டியில் அவளை அழைக்கச் சென்றான்...

பேருந்து நிலையத்தில் சில்லி கையில் இரு துணி பைகளுடன் நின்று கொண்டு இருந்தாள்... அவள் பின்னிலிருந்து சென்று வேகமாக வண்டியை நிறுத்தி பயமுறுத்தினான் சுந்தர்... அவளும் யாரோ என்று எண்ணி திட்ட ஆரம்பித்தவள் அவனை பார்த்ததும் புன்னகையுடன் மெதுவாக தோள்பட்டை மீது அடித்தாள்... இருவரும் புன்னகைக்க... சில்பைவை அறிமுகம் செய்து வைத்தான் சுந்தர்...

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்களுடன் வந்து சேர்ந்தான் சேரன். சுந்தர் சேரனை சில்லிக்கு அறிமுகம் செய்து வைத்தான் சுந்தர்...

"சரி எனக்கு இங்க வேளை இருக்கு நான் பாத்துட்டு வீட்டுக்கு வந்துடறேன் நீங்க போங்க..." என்று சொல்லிவிட்டு சில்பா நகர்ந்தார்... அவர் தேடி வந்த ஆள் அவர் நின்ற இடத்திற்கே வந்து பொருளை கொடுத்துவிட்டு செல்ல அங்கேயே நின்றார்...

சுந்தர் "சரி வா போகலாம்" என்று சில்லியை அவள் சில்பாவை பார்த்தாள்...

"நீ அம்மாவ அழைச்சிட்டு வா... நான் சேரன் கூட வரேன்..." என்று சொல்லி விட்டு யார் பதிலையும் கேட்கவில்லை. சேரனுடன் சென்று விட்டாள். சுந்தரும் அதை பற்றி யோசிக்கவில்லை அவன் பெண்கள் விசயத்தில் தன் மோசமான குணத்தை காட்டுவான் என அறிவான். அதனால் இதைப்பற்றி அவன் யோசிக்கவில்லை... ஆனால் சில்பா யோசித்தார்.

"சுன்டு சில்லுவ என்கூட தங்க சொல்லு நான் தனியா தானே இருக்கேன்!?... எனக்கு துணையா இருக்கும்..."

"சரிமா வீட்டுக்கு போனதும் அவகிட்ட சொல்லி அங்க வர சொல்றேன்..."

அவர் அவனை பற்றி யோசித்த விசயத்தை தான் சேரன் பயணத்தின் போது அவன் அதை தான் செய்தான்...

சேரன் "சுந்தர் ஏன் இவ்வளவு பெரிய பொய் சொன்னான்?"

சில்வியா "என்ன சொன்னான்?"

"நீ சுமாரா தான் இருப்பன்னு சொன்னான். ஆனா சூப்பரா இருக்கியே?!"

"அதுக்கு பொறாம நான் அழகா இருக்கேன்ல அத விட?!!"

அவன் முகத்தில் வித்தியாசமான புன்னகை பரவியது... "ஓ... உன்னை என் வீட்டுல தான் அவன்கூட தான் தங்க வைக்க போறதா சொன்னான்... அதுனால தான் உன்னை அந்த சில்பா கூட இப்போ தங்க வைக்க திட்டம் போடுறான்... ஹூம்..."

"என்கிட்ட உன் வீட்டுல தங்குறதா தானே சொன்னான்?"

"வீட்டுக்கு போனதும் பாரு..."

அவன் சொன்னது போலவே வீட்டை அடைந்து சிறிது நேரத்தில் சுந்தர் அவளை சில்பா வீட்டிற்கு போக சொல்ல சேரன் சொன்னவற்றை உறுதி செய்தாள் சில்லி.

"அதெல்லாம் வேணாம். எனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கு." என்று சொல்லிவிட்டு அவளாகவே ஒரு அறையை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றுவிட்டாள். ஆனால் இதை சுந்தர் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. அவரிடம் 'அப்புறமா பேசி அனுப்பு'வதாக கூறி அனுப்பிவிட்டான். சில்பாவும் பொருமையாக பார்த்து கொள்ளலாம் என்று விட்டு சென்று விட்டார்.

சேரன் "ஓய் அழகி... நீ ஏன் பொண்ணா இல்லாம போய்ட்ட?"

சில்வியா "ஏன் என்னை பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலயா உனக்கு? ஹூம்?"

"அப்படிதான் தெரியுது... ஆனால்..."

"புரியுது இனி பேசாத."

"சரி இனி பேசல." என்று சில்வியாவை கட்டியணைத்தான் சேரன். அவளும் அவனை ஏற்று கொண்டாள்.

சேரன் தொடர்ந்தான் "சரி இத அவன்கிட்ட சொல்ல வேணாம். பொறாமை புடிச்சவன்."

"ஆமா. ஆனா அவன் இன்னும் அவன் தான்... நீ வேணும்னா பாரு சீக்கிரமே அவள தேடி போயிடுவான். அப்பறம் ஏன் என் வாழ்க்கைல குறுக்க வரான்?!"

"கிடக்கான் விடு..." என்று அவன் விளையாட்டு ஆரம்பம் ஆனது அதே சமயம் சுந்தர் வந்து கதவை தட்ட, சேரன் குறல் கொடுத்தான்...

"ஏய் கதவ தொறந்து தொலைக்காத... கதவுக்கு மேலே சாமி படம் மாட்டிட்டு இருக்கேன்..." என்று சொல்லிவிட்டு கதவின் அருகே ஒரு நாற்காலியை போட்டு அதிலிருந்து இறங்கியவாறு கதவை திறந்தான்... இதே போல் தான் அவன் அங்கு இருந்தவரை அவர்களுக்கு தொந்தரவாக இருந்தான்...

அவனை ஹரினி அழைத்து சென்றது இவர்களுக்கு வசதியானது இருவரின் காம களியாட்டம் தொடர்ந்தது...

ஒரு நாள் சேரன் ஒரு பெண்ணை அவன் வீட்டிற்கு அழைத்து வர சில்வியா பொங்கி எழுந்தாள்.

"யாரு அவ? இங்க ஏன் அழைச்சிட்டு வந்த?"

"ரூபா... நீ அந்த நாலாவது அறைல உக்காந்துரு வரேன்..." அவள் சென்றபின் "பின்ன உன்னை கல்யாணமா பன்ன முடியும்? பொண்ணுங்கல ருசி பாத்து சலிச்சு போச்சுன்னு உன்னை தொட்டு பாத்தேன். நல்லா தான் இருந்துச்சு. ஆனா பொண்ணு மாதிரி இல்ல. நீ லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்ட..." என்று சொல்லி சிரிக்க...

வெரி கொண்ட சில்லி அவனை அடித்தாள்... அவளும் ஆணாக இருந்தவள் தானே அடி கொஞ்சம் பலம் தான்... ஆனால் அவனால் பின்தலையை பிடித்து வெளியே தள்ளப்பட்டாள்.

தெருவில் நின்று மண்ணை வாறி இரைத்து அழுது சாபமிட்டாள்

சேரன் "பொண்ணுங்க சாபமே ஒன்னும் பன்னல. உன் சாபம் என்ன செய்ய போகுது?! கெளம்பு." என்று சொல்லி விட்டு திரும்ப ரூபா வந்தாள்

"என்னங்க நடக்குது? அது ஏன் இப்படி கத்துது?"

ரூபாவின் பேச்சு இன்னும் கோபத்தை கிளற "வாழ்க்கைய கெடுக்க வந்தவளே." என்று அவளை அடிக்க பாய்ந்தாள் சில்வியா. சேரன் அவளை தடுத்து

"போணால் போகுதுன்னு தங்க இடம் கொடுத்தால் நான் கட்டிக்க போற பொண்ணயே அடிக்க வர்றீயா?" என கேட்டு அடித்து துறத்த நடந்தது தெரியாத சுற்றத்தார் சில்வியாவை கல்லாலும், கோலாலும் அடித்தனர்.

சில்வியா எல்லார் முன்னிலையிலும் மண்டியிட்டு "என்னை விட்டுடுங்க... நான் போயிடுறேன்..." என்று கதற அவர்கள் இரக்கம் வந்து விட்டுவிட்டு அனுப்பினர்.

ரத்த காயங்களுடன் தன் வீட்டிற்கு வந்த சில்வியா நடந்தவற்றை சொல்ல அவர் அவள் காயங்களுக்கு மருந்து போட்டார்... பிறகு ஆறுதல் கூறி உணவு கொடுத்து உரங்க வைத்து அவரும் உரங்க...

பெற்ற ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் தூங்க இயலாத சில்வியா எலியை கொல்ல பயன் படுத்தும் பசையை உட்கொண்டு விட்டு சில்பாவை எழுப்பினாள்.

"என்னால வாழ முடியாது மா. நான் போறேன்" என்று சொல்லி பொத்தென கீழே விழ பதறி அடித்து மருத்துவமனைக்கு தூக்கி செல்ல...

108 ல் போகும் போது மரணவலியை உணர்ந்த சில்வியா "என்னை காப்பாத்துங்க" என்று சொல்லிவிட்டு "வேணாம் இதுக்கு அப்பறம் நான் வாழ கூடாது. அசிங்கமா இருக்கு." என்று புலம்பினாள்.

அந்த எலி பசை பாஸ்பரஸ் மற்றும் கொடிய வேதிப்பொருட்களால் ஆனது உட்கொண்ட வேகத்தில் குடல் எரிந்து விட்டது. அவளை காப்பாற்ற முடியவில்லை.

இவற்றை அறிந்த சுந்தர், சேரன் மீது வெரியுடன் கிளம்ப சில்பா.

"எங்க போற? அவன திருத்தவா? தண்டனை குடுக்கவா? ரெண்டுமே செஞ்சாலும் உன்னால அவன திருத்த முடியாது. பெண் சாபம், திருநங்கை சாபம் அவன சும்மா விடாது. அந்த ஆண்டவன் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்கான். அவன் பாத்துக்குவான்... கல்யாணம் பண்ண போற... எந்த பிரச்சனையும் வேணாம் உனக்கு. போய் நிம்மதியா வாழ பாரு."

என்று சொல்லி சிறிது போராடி அவனை அவன் வீட்டிற்கு அனுப்பினார் சில்பா... 'சேரன் பேச்சை கேட்டு ஒரு வேளை அந்த அறுவை சிகிச்சையை தான் செய்து இருந்தால் ஒருவேளை சில்வியா இடத்தில் தான் இருந்திருப்போம். தான் அவளை இங்கு வர வைத்ததால் தான் அவளுக்கு இந்த நிலை' என்று எண்ணி கனமான மனதுடன் வீட்டை அடைந்தான். அன்னை மடியில் தஞ்சம் அடைந்தான் மனம் இளகும் வரை அழுதான். அன்னை மற்றும் காதல் மனைவி ஆறுதல் சொல்லி தேற்ற முயன்றனர்.

(ஆசை முற்றுமா?)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN