❤️உயிர் 3❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இடையில் நடந்த சம்பவங்களில் அந்த நெடியவனை அஞ்சலி மறந்தும் போனாள்.மெல்லிய உணர்வுகளை கொண்ட பெண் அஞ்சலி.

இயற்கையை இரசிக்கும் அவளுடைய கண்கள். மழை தூரலில் குடை மறந்து நடக்கும் அவளுடைய கால்கள்.அலை உரசும் கடல் அருகே நின்று அஸ்தமிக்கும் சூரியனை வழி அனுப்பி விட்டே வீட்டுக்கு வருவாள்.

விரும்பி ஏற்ற ஓட்டல் இந்திரியர் டிசைனிங் தொழிலும் புண்பட்ட மனத்திற்கு இதம் சேர்த்தது.திருமணம் முடிந்து பெரியவள் மயூரி மலாக்காவிலும் ,சின்னவன் மிதுன் சிங்கப்பூரிலும் வசிக்க,அஞ்சலி மட்டும் அன்னை தந்தை அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.
வாரவிடுமுறையாதலால் அஞ்சலி நிதானமாய் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு காபி அருந்திக் கொண்டிருந்தாள்.
அம்மாவுக்கு சுட்டு போட்டாலும் வராத காபி பக்குவம் மகளுக்கு வர பிரசாதமாய் அமைந்தது அவள் அம்மாவுக்கு எளிதாய் போய்விட்டது.இவள் கலந்து தரும் காபியே அவருக்கு சொர்கமாய் தோன்றும்.

சமையலில் கைத்தேர்ந்தவர் என்றாலும் காபி விஷயத்தில் சொதப்பல்தான். காபியில் மனம் இலயித்திருந்தவளை சிணுங்கிய கைத்
தொலைப்பேசி அழைத்தது.
ஸ்கிரீனில் புது நம்பர் தெரியவும் புருவத்தைசுருக்கினாள்.

'ஹெலோ வணக்கம்,அஞ்சலி ஹியர்'.

எதிர் முனையில் சீரான மூச்சுடன் ஒரு ஆண் குரல் இணைந்தது.

'ஹெலோ நான் யுகேந்திரன்'
கம்பீரமாய் ஆனால் அதிராத ஆளுமை குரல் அவள் காதில் பாய்ந்தது.

'எந்த யுகேன்..ப்ச்சு அந்த வளர்ந்து கெட்டவனா?அவனுக்கு எப்படி நம்ப நம்பர் கெடைச்சது?'' அஞ்சலி மைண்ட் வாய்ஸ் தந்தியடிக்க,

அதை உணர்ந்தவன் போல,

'மிஸ் அஞ்சலி உங்க நம்பர உங்க மாமாதான் தந்தார்."

'நான் உங்களை மீட் பண்ணியாகனும்'.

மீண்டும் அஞ்சலி மைண்ட் வாய்ஸ் தந்தியடிக்க ஆரம்பித்தது.

"என்னை எதுக்குடா பார்க்கணும் உயிர வாங்குற, ஒரு சண்டே சாட்டர்டே தூங்கவிடறீங்களா? இவனுக்கெல்லாம் தூக்கமே வராது போல "அஞ்சலி மௌனமாய் மனதில் அவனை வறுக்க, எதிர் முனையில் மௌனம் மட்டுமே பதிலாக வர கடுப்பாகிப்போனான் யுகேந்திரன்.

'லுக் மிஸ் அஞ்சலி,நான் ஒன்னும் உங்களை டேட்டிங்க்குகூப்பிடல, கொஞ்சம் பேசணும்,சில விஷயங்களை சொல்லணும், அதுதான் நம்ப ரெண்டு பேருக்கும் நல்லது "

அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் அஞ்சலியும் சரி என்றாள்.

போர்ட்டிக்சன் கடற்கரையில் அஸ்த்தமிக்கும் சூரியனை இரசித்து கொண்டிருந்தவள் அருகில் யுகேந்திரன்.இலகுவான ட்ஷிர்ட் ஜீன்ஸ்ல கூட அவன் அழகாய் தெரிந்தான்.

'வந்ததுக்கு நன்றி அஞ்சலி'யுகேந்திரன் ஆரம்பிக்க,

'எதுக்கு என்னை மீட் பண்ணணும் சொன்னிங்க'
அஞ்சலியின் கேள்விக்கு அவனுடைய உதடுகள் லேசாக பிரிந்தன.

'வெல் அஞ்சலி அன்னிக்கு கார்ல எதெதோ பேசிட்ட,
எனக்கு பேச கூட நீ டைம் கொடுக்கல.எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கனும் காதல் பண்ணணும் அப்படினு எண்ணம் எதுவும் இல்ல, எனக்கு அதுக்கு டைம்மும் இல்ல, நீ தப்பா புரிஞ்சிகிட்டு என்ன பொரிஞ்சு தள்ளிட்ட"

'உனக்கு என் பக்கம் நியாத்தை புரிய வைக்கணும்னு தோனுச்சி,
அதுதான் நம்முடைய எதிர்கால உறவுக்கு நல்லதுனு பட்டது. உன் மாமாவோட பார்ட்னர் நாங்கறது உனக்கு தெரியும்ல,

'உன்ன போல எனக்கும் கல்யாணம் ,காதல் இதுல நம்பிக்கை இல்ல,ஏன்னா நான் ஒரு அடிப்பட்ட புலி,பணம் மட்டுமே குறியா இருந்த ஒரு மோகினியோட பொய் வேசத்தை மெய் காதல்னு நெனைச்சு உருகி அவளுக்காக வாழ்ந்தேன்.

"அவ தான் உலகம்னு இருந்தேன்.பட் அந்த வேசக்காரி என் சொத்துக்காக எங்கூட ஒட்டிகிட்டவனு அப்புறம் தான் தெரிஞ்சது.

'அது முடிந்த கதை, அதோட என் காதலும் செத்து சாம்பலாய் போச்சு'

'அவளை மறக்கணும்னே உழைச்சேன்,என் கம்பனிய பெரிய அளவுக்கு டெவலப் பண்ணேன்'

'அதோட மறுபடியும் ஒரு காதலுக்கும் கல்யாணத்திற்கும் நான் விரும்பவும் இல்ல, இனிமேலும் இப்படிதான் நான் வாழவும் போகிறேன்'

பேசி முடித்தவன் நீள பெருமூச்சுடன் நீலக்கடலை நோக்கி பார்வையை ஓட்டினான்.
அதுவரை மௌனமாய் அவனுக்கு செவிசாய்த்த அஞ்சலி குற்ற உணர்வில் அவனுடய கண்களை பார்க்கவும் கூசினாள்.

"ஐயோ என்னம்மா இப்படி பண்ணிட்டியே"மைண்ட் வாய்ஸ் அஞ்சலியை பார்த்து கேட்க,

'வந்து வந்து என்ன மன்னிச்சிருங்க மிஸ்டர் யுகேந்திரன், மாமா ஒரு வேளை எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரோனு தப்பா புரிஞ்சிகிட்டு உங்களை கஸ்ட்டப்படுத்திட்டேன்'

'முன்னால் அனுபவம் அப்படி,அதான் 'மென்று விழுங்கி பேசியவளை கண்டு யுகேந்திரன் புன்னகைத்தான்.

'இட்ஸ் ஒகே அஞ்சலி,உங்க மாமாவோட வெர்க்கு நீ ஹெல்ப் பண்றது எனக்கு தெரியும் ,என் தொழிலும் ஓட்டல் சம்பந்தப்பட்டதுதானே. நான் இந்த விசயத்தை கிளியர் பண்ணாட்டி அப்புறம் எங்கிட்ட நீ தொழில் ரீதியாக கூட சரியா பேசமாட்டே.அது எங்க தொழிலுக்கு நல்லதில்லையே'

நகைச்சுவையாய் அவன் கூற கன்னக்குழி சுழிய இயல்பாய் சிரித்தவளை ஏனோ அவனுக்கு பிடித்துதான் போயிற்று.

'சோ நாம ப்ரண்ட்ஸ் ஆகலாமா?சிறு பிள்ளை போல் கை கொடுக்க முன் வந்தவனை பார்த்து அஞ்சலி இன்னமும் அரிசி பல் தெரிய சிரித்தாள்.

'நாம நண்பேண்டா! சரியா மச்சி ?

"அட உனக்கு இப்படி கூட கலாய்க்க வருமா அஞ்சலி? நான் ஷொக் ஆயிட்டேன்ப்பா'
அவன் வடிவேல் ரியாக்சன் குடுக்க ,அஞ்சலி அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

'எனக்கு நண்பர்கள் அதிகம் யுகேன், ஷிவா போன அப்புறம் யாரையும் எனக்கு தேட தோனல,மனசு வெறுமையா இருந்தா எனக்கு எதாச்சும் ஆயிறும்னு அம்மாதான் இந்த டிசைனிங் கோர்ஸ் படிக்க சொன்னங்க.

எனக்கு கலை மேல ஆர்வம்னால ஈசியா இத கத்துக்கிடேன்.அது மாமா தொழிலுக்கும் வசதியா போச்சு"

மெல்ல தன்னை பற்றி விவரித்தவள்,அதன் பின் மரவட்டைப் போல் சுருண்டு கொள்வதும்இல்லை.
யுகேந்திரனுடன் நல்ல முறையில் பழக ஆரம்பித்தாள்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN