என்னடி மாயாவி நீ
அத்தியாயம்: 22
இத்தனை வருடத்தில் வசந்தா வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியதே இல்லை. இன்று காட்டியவுடன் அவன் மிகவும் வருத்தப்பட்டு போனான். அதனால் அம்மாவிற்கு பிடிக்காத மதுவையும் அவன் அருந்தாமல் வீட்டிற்கு வந்தான். மனதளவில் அவனுக்கு ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் ஆதிகா கைநீட்ட அவளுக்குள் சென்று தஞ்சம் அடைந்துகொண்டான். பிணியும் அவளே மருந்தும் அவளே என்பது போல.
இருவரிடமும் காதல் இருக்கிறது. அவன் அதனை ஒதுக்க நினைக்கிறான், அவளோ அதற்கு ஏங்கி நினைக்கிறாள்.
அவளிடம் சென்றவனை பெட்டில் உட்கார்ந்து மடியில் தாங்கிக்கொண்டாள். இருவரும் மாறி மாறி முகத்திலே முத்தமிட்டு கொண்டனர். இது எதற்கு என இருவருக்குமே தெரியவில்லை. நேற்றைய ஒரு நாளின் பிரிவாக கூட இருக்கலாம் என இருவருக்கும் தோன்றியது.
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கவ்வி நின்றது. இம்மோன நிலையை ஆதிகாவே கலைத்தாள். "நீங்க குடிக்காம வரணும்னு தான் நேத்து என் பிரண்ட் வீட்டுக்கு போனேன் அவளும் கூப்பிட்டா, அத்தையும் போக சொன்னாங்க, எல்லாமே உங்களோட நலனுக்கு தான் என்னோட மனசை கல்லாக்கிகிட்டு இதை செய்தேன். இப்போ நானே வருந்தும்படி ஆகிட்டு, சாரி நான் பண்ணது தப்புனா என்ன மனிச்சிடுங்க" என்றாள் ஆதிகா. "பரவால நானே எவ்ளோ பெரிய தப்பு பன்னேனு நேத்துதான் புரிஞ்சது, அம்மா பேசல, அப்பா செம்ம திட்டு அட்வைஸ்ல இனிமேல் அந்த கருமத்தை எடுக்கவே கூடாதுனு இருக்கேன்" என உறுதியுடன் வர்ஷித் கூற, "பரவால கடைசியில உங்க வாயாலே அதை கருமம்னு சொல்ல வச்சிட்டேன்" என மின்னலாய் சிரிப்பை உதிர்த்தாள். அக்கணம் தோன்றியது, இவளில்லாமல் தான் இல்லையென்று வர்ஷித்திற்கு.சில நிமிடம் அவளது மடியிலே கண்மூடி படுத்திருந்தான்.
சில நிமிடம் கழித்து வர்ஷித் கண்மூடி இருக்க ஆதிகாவின் விரல் அவனது முகத்தில் கோலமிடும்போது அவனது நெற்றி சுருங்குவதை பார்த்து, "வருமாமா வருமாமா" என எழுப்ப அவனும் விழித்தான்.
"உங்களுக்கு என்ன பிரச்சனை எதையோ ரொம்ப யோசிக்கிறீங்க சொல்லுங்க மாமா அப்போதானே தெளிவு பிறக்கும்" என ஆதிகா அவனது பிரச்னையை ஆராய, வர்ஷித், "முதலில் நீ ஏன் என்னைய வருமாமானு கூப்பிடுற சொல்லு?" என கேட்டவுடன், அவள் "ஈஸியாக நீங்க எதுக்கு ஆதிமானு கூப்பிடுறிங்களோ அதுக்கு தான்" என கூறி அவனது வாயை அடைத்துவிட்டு, "இப்போ இதுதான் உங்களுக்கு குழப்பமா?"என கேட்க அவனோ இல்ல இன்னும் இருக்கு என சொல்ல ஆரம்பித்தான். "ஆதிமா நம்ம எதுக்கு ஊருக்கு போனோம்னு இருக்கு, அதிலிருந்து ஒரு கோபம் வெறுப்பு எல்லாமே என்னை பாடாய் படுத்துது" என வர்ஷித் கூற அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்டவள், "தெரியும் மாமா, நீங்க அம்மா பாசம் இல்லனு ஏங்குறீங்க, அப்பா பேசலானு வருத்தப்படுறீங்க, இதுலேயே இருந்துட்டு உங்களுக்குனு இருக்குற அம்மா அப்பாவை மறந்துட்டீங்க. அப்படி நினைக்காதீங்க அவுங்ககிட்ட கிடைக்காத பாசம் தான் இங்க உங்களுக்கு ரெண்டு மடங்காக கிடைக்குது. அத்தை மாமாவை நினைச்சு பாருங்க முன்னாடி நீயும் விஷ்ணுவும் இருந்திங்க இப்போ நீங்க மட்டும்தான் இருக்கீங்க நீங்கதான் அவுங்கள பாத்துக்கணும். நீங்க இத போட்டு வருத்திக்கிறிங்கனு தெரிஞ்சா அத்தை மாமா கஷ்ட படுவாங்க நம்ம நல்லா பாசம் வைக்கலையோன்னு வருத்தப்படுவாங்க பாத்து நடந்துகோங்க உங்க மேல அவ்ளோ உசுரா இருகாங்க" என அவள் உரைத்தபின்னே தான் அப்பா அம்மாவை யோசிக்காம விட்டுட்டோமே இல்லாத ரெண்டு பேருக்காக அப்பா அம்மாவை இழக்க பாத்தோமே என மனதில் ஆதிகாவை மெச்சிக்கொண்டான். ஒரு நொடியில் என் இந்த துயரத்தை தீர்த்துவிட்டாளே என.
அவளிடமே, "ஆமாமா இத நான் நினைச்சி பாக்கவே இல்ல இது அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா உடைஞ்சு போய்டுவாங்க, அவுங்க ரெண்டு பேரும் காட்டுன அன்பு பாசம் என்னோட சொந்த அப்பா அம்மா கூட காமிச்சு இருக்க மாட்டாங்க" என கூறினான். இருந்தும் அவனது முகத்தில் குழப்ப ரேகை மறையாததால், "அப்புறம் என்ன பிரச்சனை மாமா" என்றவளிடம் அவளின் முகம் பார்க்காமல் திரும்பி சுவரை வெறித்துக்கொண்டு ஆரம்பித்தான். "எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு, விஷ்ணு இருக்குற இடத்துல நான் இருக்கேனு தோணுது அவனோட இடத்த நான் அபகரிச்சிக்கிட்டது போல தோணுது"என அன்று தந்தையின் அலுவலகத்தில் நடந்ததை கூறிவிட்டு, "இதற்கு தான் உன்னையையும் என்ன விட்டு போக சொல்றேன் தன் காதல் அவளுக்கு தெரியாது என நினைத்துக்கொண்டு கூறினான். எங்கே அவள் கண்களை பார்த்தால் தன்னை மீறி காதல் வந்துவிடுமோ என்ற பயத்தில் பார்வையை சுவற்றிலே பதித்திருந்தான்.
இந்த சொல்லை கேட்டு அவனின் கேசத்தை அளந்துகொண்டிருக்கும் விரலை தடை செய்துகொண்டாள், அவளின் கண்ணீர் வர்ஷித்தின் கன்னத்தில் பட்டு தெறித்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததை சொல்லி முடிக்க வேணும் எனும் உறுதியில் தொடர்ந்தான் "நீ எதுக்கு எனக்காக உன்ன மாத்திக்கிற நீ நீயா இரு, எனக்காக உன்னைய நீயே வருத்திக்காத, அது எனக்கு கஷ்டமா இருக்கு" என கூறியவனின் வாயை அடுத்து பேச முடியாமல் தடுத்தவளின் கண்கள் குளம் கட்டின.
ஆதிகா கண்ணில் ஏமாற்றம், வலி, ஏக்கம் மட்டுமே தெரிந்தது. கண்ணை அழுந்த துடைத்து அவனிடம் "சரிமாமா, நீங்க எனக்காக கஷ்டப்படவேணாம், நீங்க இப்படி இருக்குறத பார்க்க கஷ்டமா இருக்கு அதனால நான் டிவோர்ஸ்க்கு சம்மதிக்கிறேன்.பத்திரத்துல சைன் போட்டு தரேன். நீங்க மேல ஏற்பாடு செய்ங்க நீங்க நிம்மதியா இருக்கணும்" என உணர்ச்சிவசப்பட்டு கூறி பின் ஆற்றாமை கலந்த கோபத்துடன், "நானும் உங்கள விரும்புறேன் அத நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க பரிதாபம் எக்ஸ்ஸட்றா அதான் உங்க அதிகாரத்துல நெறய பேரு வச்சி இருக்கீங்களே. எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம், நீங்க எந்த கஷ்டமும் பட கூடாது" என முழு மூச்சாக கூறி விட்டு அதே வேகத்துடன் கையெழுத்தை இட்டு பத்திரத்தை வர்ஷித்திடம் கொடுத்து விட்டு அவனை மேலும் பேசவிடாமல் படுத்துக்கொண்டு காலிலிருந்து தலை வரை போர்வையை போத்தி கொண்டு அழுதாள். அழுவது தெரிந்தும் அவளை சமாதானம் செய்ய அவன் முற்படவில்லை. இந்த சிறுவலியை ஏற்றுக்கொண்டால், பெரிய மகிழ்வை அவள் அனுபவிக்கலாம் என நினைத்து மேலும் அவளுக்கு துன்பத்தையே கொடுத்தான். எல்லா விஷயத்திலும் அவள் படும் வேதனையை அறிந்தவன் இதில் அவள் படும் வேதனையை அவன் உணரவே
இல்லை. அவள் சொன்ன வார்த்தையில் உதிர்ந்த காதலின் அர்த்தத்தை தேட மறந்தான், அவனது காதலே பெரிது என எண்ணி அவளது காதலை கண்கொண்டு பார்க்காமல் போனான்.
காலையில் வழக்கம் போல் தன் கை அவனிடம் சிக்கிருப்பதை உணர்ந்தவள் வெடுக்கென உதறிவிட்டு எழுந்தாள். இவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன் சரி ஆகிடும் என விட்டு விட்டான்.
அன்று ஏதோ எல்லாவற்றிகும் ஆதிகாவையே தேடி போனான். மாமியாரும் மருமகளும் சேர்ந்தே ஒதுக்கம் காட்டினர். இதில் கூடவா ஒற்றுமை என நினைக்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
இருவரும் சாப்பிட அமரும்போது வசந்தாவே பரிமாறினார். ஆதிகாவிற்கு இரவு இருந்த கோபம் கூட இப்போ இல்லை லேசாக வருத்தம் தான் இருந்தது. வர்ஷித்தின் முகம் சுருங்கி இருந்ததால், 'அய்யோ ரொம்ப பண்ணிட்டோமோ' என யோசித்து சரி கொஞ்சம் வம்பிழுப்போம் என முடிவெடுத்தவளாய் அத்தை, " ஒரு கதை சொல்லவா"என ஆரம்பித்தாள். "சொல்லுமா" என வசந்தா கூற வர்ஷித், "ஆமா வேணாம்னா சொல்லபோறிங்க" என முணுமுணுத்தவனுக்கு தெரியவில்லை தனது கதையை தான் அங்கு ஆதிகா ஓட்டப்போகிறாள் என்று.
"என்னோட பிரண்ட் ஒருத்தன் அத்தை, அவன் ஒரு நல்ல அக்மார்க் நல்ல பையன், அவன் ஒரு பொண்ண சின்ன வயசுல உருகி உருகி லவ் பண்ணிருக்கான் அந்த பெண்ணுக்கே தெரியாமல்" என்றவள் நிறுத்தி ஓரக்கண்ணால் அவனை ஒரு பார்வை பார்த்தபோது அவனும் அவளை தான் பார்த்திருந்தான். மேல தொடர்ந்தாள், "அப்பறம் சேர முடியாதுனு நிலைமை வந்து கடைசியில ஏதோ கடவுளா பாத்து அவன் லவ் பண்ண பொண்ணையே புடிச்சி அவன் கைல கொடுக்குறாரு" என நிறுத்த வசந்தாவோ ஆர்வத்துடன் கவனித்து, "இது நல்ல விஷயம் தனே" என்றார். அதற்கு ஆதிகா, "அத்தை இனிமேல் தான் கதையே இருக்கு. அந்த பொண்ண அந்த பையன் ஏதோ குற்ற உணர்வாய் இருக்கு நம்ம பிரிஞ்சுரலாம்னு சொல்லிருக்கான்" என சொல்லி முடித்தவள் குற்றவுணர்வு அந்த சொல்லிற்கு மட்டும் அழுத்தத்தை கூட்டினாள். அத்தையிடம், " இது நியாயமா? " என கேட்டாள் வர்ஷித்தை பார்த்துக்கொண்டே. "அந்த புள்ளைக்கு புத்தி ஏதும் பேதலிச்சிட்டா, வாழ தெரியாத புள்ளையா இருக்கும் போல, கிடைச்சத விடணும்னு நெனைக்கிது" என கூற வர்ஷித்திற்கு புரை ஏறியது.இவ பார்வையே சரி இல்லையே ஒரு வேளை நம்மளாதான் சொல்லுவாளோ என சந்தேகம் வர, தன் காதல் எப்படி இவளுக்கு என அவன் யோசிக்கும்போதே அவனது தலையை தட்டி தண்ணீர் கொடுத்தாள்.
அன்று அவன் காரை சர்வீஸ்க்கு விட்டதால், அலுவலகம் செல்ல பைக்கினை ஸ்டார்ட் செய்தவனை தடுத்தாள் ஆதிகா. "என் ஸ்கூட்டில பெட்ரோல் இல்ல, இன்னைக்கு மட்டும் என்ன ஆபீஸ்ல விட்டுட்டு போறிங்களா? " என கேட்டவளிடம் சரி என கூறி பைக்கில் அமரவைத்து அழைத்து சென்றான். அவளும் பற்றுக்கோளுக்காக அவனின் தோள்களை கையால் பற்றிக்கொண்டாள். அது அவனுக்கு இன்பமாக இருந்தாலும் வெளி காட்டிக்கொள்ளவில்லை. 'இதுக்கு ஏதாவுது சொல்ல போக அப்புறம் சாமி ஆட்டம் ஆடுவா தேவையா நமக்கு' என பயணத்தில் கவனத்தை செலுத்தினான். அவளுக்குமே இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. இது தொடராதா என பேதை மனம் ஏங்கியது.
அவனின் சந்தேகம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. அதை தெளிவுபடுத்தும் வகையில் இறங்கும்போது அவளே, "நீ லவ் பண்ண அம்முவும் இல்ல விஷ்ணு லவ் பண்ண ஆதிகாவும் நான் இல்ல, உன்ன மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கும் உன்னோட ஆதிமா தான் நான் இப்போவும் இனிமேலும் ரொம்ப போட்டு குழப்பிக்காத" என அவன் பதில் பேசும் முன்னே ஆபிஸ்க்குள் சென்றுவிட்டாள்.
அலுவலகம் சென்றும் உறுத்தும் கேள்வியை கேட்க முதல் முதலாக போனில் மெசேஜ் போட்டான், "ஆதிமா என்னோட டைரியை படிச்சியாடி?" என அதற்கு அவளோ அவனின் அழைப்பில் இருந்த டி அழைப்பை ரசித்து, "படித்தேன்" என பதில் அனுப்பினாள்.

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.