என்னை தீண்டிவிட்டாய் 6

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னை மறுக்கும்
உன் இதயத்தை தெரியவில்லை
என்னை மறுப்பதாய்
நொடிக்கு நொடி
நீ ஏற்கிறாயென்று

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையென்பதால் அனைவரும் வீட்டிலிருக்க தடல்புடலாய் விருந்து தயாரித்துக்கொண்டிருந்தார் வசுமதி....
அன்று பிரகஸ்பதியின் நான்கு தங்கைகளின் குடும்பமும் எதிர்பாராவிதமாக தங்கள் அண்ணன் வீட்டிற்கு வர வீடே ஆட்களால் நிறைந்து வழிந்தது....
அவர்களோடு ஆதிராவும் இணைந்திருந்தாள்..

ஆண்கள் ஒருபுறமாய் அமர்ந்து தொழில் மற்றும் நாட்டு நடப்பு பற்றி பேசிக்கொண்டிருக்க பிரகஸ்பதியின் தங்கைகளான ராகினி, வாகினி, ரம்யா, மோகனா தங்கள் அண்ணியாருடன் சமையலறையை முற்றுகையிட்டிருக்க இளசுகள் அனைவரும் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய பால்கனியிலிருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். ஆத்விக்கும், ஆதித்யனும் வந்திருக்க அந்த இடம் இன்னும் களைகட்டியது...
இளசுகளும் ஆண்கள் ஒரு அணி பெண்கள் இன்னொரு அணியாக பிரிந்து ஒருவரை மற்றொருவரை வாரிக்கொண்டிருந்தனர்.

“டேய் ஆதி உனக்கு என்னடா ஆச்சு???”

“ஏன் ஆஷி எதுக்கு இப்படி கேட்குற??”

“வர வர உன்னோட வாட்சப் ஸ்டேடஸ் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கே... என்ன சங்கதி???”

“நீயும் தான் தினம் தினம் இன்ஸ்டால ஸ்டோரி போட்டு சாவடிக்கிற... அதையெல்லாம் நான் என்னன்னு கேட்டேனா??”

“கேட்க வேண்டியது தானே.. ஆனா பாரு கேட்காதது உன்னோட தப்பு.... ஆனா நான் அந்த தப்பை செய்யமாட்டேன்.. சொல்லு என்ன சமாச்சாரம்...”

“நல்லா இருந்துச்சு போட்டேன்.... இது ஒரு குத்தமா??”

“அது குத்தம் இல்லை.... ஆனா என்னை ஹைட் பண்ணி ஆளு பார்க்கிற மாதிரி மட்டும் போட்ட பாரு அது தான் தப்பு...”

“ஹேய் உனக்கு எப்படி???”

“என்னோட உளவுத்துறைக்கிட்ட இருந்து செய்தி வந்தது...” என்று ஆஷிகா கூற ஆதித்யன் கேஷிகாவை திரும்பி முறைக்க அவளோ கேலிச்சிரிப்பை உதிர்த்தாள்...
இவர்களது கலாட்டாங்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவை ஜாலியாய் சைட் அடித்துக்கொண்டிருந்தான் ஷாகர்... இதை கண்ட ஐவர் படை இவர்களை இன்று ஒரு வழி பண்ணவேண்டுமென முடிவெடுத்து

“ஆனா ஆஷி அவனை கூட நம்பலாம்.. ஆனா சில பேரு நான் ரொம்ப நல்வன்டா... நான் சிங்கிள்டானு ஊருகுள்ள சொல்லிகிட்டு உள்ளே கமுக்கமா சைட் அடிச்சிட்டு ரொமேன்சிற்கு ட்ரைபண்ணுறவங்களை மட்டும் நம்பவே கூடாதுடி...” என்று க்ருத்திகா ஆரம்பிக்க ஆஷிகா

“நீ சொல்றதும் கரெக்ட் தான்டி... அதுவும் சுத்தி பத்து பேர் இருக்கும் போதே தைரியமாக சைட் அடிக்கிறவங்களை நம்பவே கூடாது..” என்று அனைவரும் ஷாகரை நோக்கோ அவனோ தன் சைட் அடிக்கும் பணியை விடுவதாய் இல்லை... ஆதிராவும் அவனை கவனிப்பதாய் இல்லை.. அவள் அவர்களின் பேச்சிலேயே கவனமாய் இருக்க ஷாகரை கண்டுகொள்ளவில்லை....

அப்போது கீழே யாரோ சண்டையிடுவது போல் சத்தம் கேட்க அனைவரும் கீழே சென்றனர்.... அங்கு ஒரு நபர் ஹால் வாசலில் செக்யூரிட்டியின் கைப்பிடியில் இருந்து கத்லி கூச்சலிட அவரை அடக்கும் வழி தெரியாது செக்யூரிட்டி அந்த நபரை வளைத்து பிடித்திருந்தான்...

அந்த நபரின் கூச்சத்தில் ஹாலிற்கு அனைவரும் வர பிரகஸ்பதி செக்யூரிட்டியிடம்
“என்ன பிரச்சனை கோபால்??”

“சார் இந்த ஆள் யாருனு சொல்லமாட்டேங்கிறாரு.... என்ன விவரம்னு கேட்டதுக்கும் பதில் சொல்லாமல் இந்த வீட்டு முதலாளியை பார்க்கனும்னு கலாட்டா பண்ணுறாரு... நான் உள்ளே விடமாட்டேன்னு சொன்னதும் என்னை தள்ளி விட்டுட்டு உள்ள நுழைஞ்சிட்டாரு..” என்று காவாலாளி கூற

“சரி அவரை விடுங்க... “ என்று காவலாளியிடம் கூறிவிட்டு அவரை போகச்சொன்னவர் அந்த நபரிடம்

“நான் தான் இந்த வீட்டோட முதலாளி... நீங்க யாரு.... உங்களுக்கு என்ன வேணும்???”

“ஐயா என் பேரு நந்தராசு...நான் தர்மகோட்டை ஊர்ல இருந்து வர்றேன்.. என்னோட அக்கா மகளை அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்...”

“உங்க அக்கா மகளா?? அப்படி யாரும் இங்க இல்லையே..” என்று பிரகஸ்பதி கூற

“இல்லைங்க ஐயா... என் அக்கா பொண்ணு இந்த வீட்டுக்கு வந்ததை பார்த்துட்டு தான் நான் உங்களை பார்க்கனும்னு அந்த வாசல்ல இருந்த ஐயாகிட்ட சொன்னேன்..”

“சரி... உங்க அக்கா பொண்ணு பேரு என்ன??” என்று கேட்க அப்போது ஷாகரோடு அனைவரும் கீழே இறங்க ஷாகரின் பின்னே வந்த ஆதிராவை காட்டி அந்த நபர்

“அதுதாங்க.. என் அக்கா மக ஆதிரா..... ஊருல எங்ககிட்ட கோவிச்சிக்கிட்டு பட்டணத்துக்கு வந்திடுச்சு.... “ என்று சொல்ல ஷாகரை தவிர அனைவரின் பார்வையும் ஆதிராவின் மேல் விழ, ஆதிராவோ பயத்தால் நடுங்கினாள்...
பயத்தில் நடுங்கியவளின் கையை ஆதரவாய் பற்றிய ஷாகர் அவள் கைபிடித்து தன் தந்தல அருகே அழைத்து வந்தவன் அந்த நபரை பார்த்து

“எதுக்கு வந்த???”

“வேற எதுக்கு என் அக்கா பொண்ணு ஆதிராவை அழைச்சிட்டு போக தான்...”

“இதை எஅனை நம்ப சொல்லுறியா??”

“இதென்னடா வம்பா போச்சு... ஐயா பெரியவரே நீங்களே இதுக்கொரு நியாயத்தை சொல்லுங்க..” என்று அந்த நபர் பிரகஸ்பதியிடம் வழக்கை முன்வைக்க ஷாகரை பார்த்த பிரகஸ்பதி

“என்ன ஷாகர்... என்ன நடக்குது இங்க??? இவரு யாரு?? நிஜமாகவே இவரு ஆதிராவோட மாமாவா??? நீ ஆதிரா உன்னோட ப்ரெண்டுனு... அவளுக்கு யாரும் இல்லைனு சொல்லி தானே நம்ம ஆபிஸ்ல சேர்த்துவிட்ட..இப்ப இவரு என்னமோ சொல்றாரு...”

“அவரு சொல்றது நிஜம் தான்பா.. இந்த கேடுகெட்டவன் ஆதிராவோட தாய்மாமன்...”

“என்ன தம்பி வார்த்தை தடிக்கிது... மரியாதை முக்கியம் தம்பி..”

“உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டிகிடக்கு.. சொந்த அக்கா மக வாழ்க்கையை விலைபேசி அவ வாழ்க்கையையே சீரழிக்க நினைச்ச உனக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு???? மொதல்ல இந்த வீட்டை விட்டு கிளம்பு....”

“நான் ஏன் தம்பி வெளியில போகனும்... அடிச்சாலும் புடிச்சாலும் அவ என்னோட அக்கா பொண்ணு.... நான் அவளோட தாய்மாமன்.... அவளும் அவ அம்மாவும் என்னோட தயவுல தான் இவ்வளவு நாள் வாழ்ந்தாங்க... அவ அம்மா இவ போன சோகத்துல செத்து போச்சு... இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்க நான் தயார் பண்ணா இந்த சிறுக்கி பெரியவங்களை மதிக்காமல் ஓடி வந்திருச்சு.... என்னானாலும் அவ என் அக்கா பொண்ணு... அவளுக்கு நல்லது கெட்டது பார்த்து செய்யிற பொறுப்பு எனக்கு இருக்கு....இப்போ நீங்க அவளை என்கூட அனுப்பலைனா எங்க வீட்டு பொண்ணை கடத்தி வச்சிட்டு அனுப்பமாட்டேங்கிறாங்கனு போலிஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுப்பேன்..” என்று அந்த நபரும் விடாது பேச ஷாகரோ

“குடு... போலிஸ் கம்ப்ளெய்ண்ட் மட்டுமில்லாமல் கோட்டுல போய் பெட்டிஷன் போடு... போ..... உன்னை தான் தூக்கி உள்ள வைப்பாங்க....”

“ஷாகர் என்ன நடக்குது இங்க??”என்று பிரகஸ்பதி கேட்க

“அப்பா... இவன் நல்லவன் இல்லை....இவன் ஆதிராவோட வாழ்க்கையை கெடுக்க நினைச்சவன்....”

“இங்க பாருங்க ஐயா... இது எங்க வீட்டு பிரச்சினை... இதை நாங்க பார்த்துக்கிறோம்... வீணா தம்பியை இதுல தலையிட வேண்டாம்னு சொல்லுங்க...”

“என்னடா சொன்ன...உங்க வீட்டு பிரச்சனையா???? அவ இப்போ உங்க வீட்டு பிள்ளை இல்லை... என்னோட மனைவி.... இந்த வீட்டு மருமகள்... உங்க ஊரு அகிலாண்ட நாயகி அம்மன் சன்னிதானத்துல ஊர்மக்கள் முன்னாடி அவ கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன்.... அது உனக்கே தெரியும்...அவளுக்கு புருஷன் நான் இருக்கும் போது நீ எப்படிடா அவளை கூட்டிட்டு போவ... அப்படி கூட்டிட்டு போக நான் தான் விட்டுருவேனா...??” என்று ஷாகர் ஆவேசமாய் கேட்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க ஆதிராவோ கால்கள் வேரோட அசைவின்றி நின்றிருந்தாள்....

“ஓ... அப்போ எதுக்கு தாலி கட்டுன பொண்டாட்டியை வேற ஒரு இடத்துல குடித்தனம் வச்சிருக்கீங்க??? அவளை காப்பாத்துரதா நினைச்சு ஊரை நம்ப வைக்கிறதுக்கிறதுக்காக தாலி கட்டி கூட்டிட்டு வந்தா அவ உங்களுக்கு பொண்டாட்டி ஆகிடுவாளா???? எங்க வீட்டு பொண்ணை எங்க கூட அனுப்பி வைங்க.... நாங்க அவள பார்த்துக்குறோம்... ஏய் ஆதிரா.. வாடி... ஊருக்கு போகலாம்... இவன் கூட சேர்ந்துகிட்டு நாடகமா போடுற?? அந்த நல்லப்பன் வந்து சொல்லாட்டி நீ இங்க இருக்கிற விஷயமே தெரியாது... எதுவும் பேசாமல் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு கிளம்பு..... அங்கு ஒருத்தன் கட்டுனா உன்னை தான் கட்டுவேன்னு காத்துகிட்டு இருக்கான்.... வா..” என்று ஆதிரா அருகே வந்து அவள் கைபற்ற முயன்றான்...

ஆதிராவோ ஷாகரின் கையை பற்றியபடி அவன் பின்னே மறைய முயல ஷாகரோ ஆதிராவை முன்னிழுத்து
“இப்பயாவது வாயை திறந்து சொல்லு ஆது..... நான் தான் உன் புருஷன்னு....” என்றவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவள் கழுத்தினுள் மறைந்திருந்த அந்த செயினை வெளியே எடுத்தவன் அதை தூக்கி பிடித்து

“இது நான் உனக்கு கட்டின தாலினும்.... நான் தான் உன்னோட புருஷன்னும் சொல்லு ஆதிரா...” என்று ஷாகர் கூற ஆதிராவோ பதிலின்றி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.....

“இப்போ கூட சொல்ல மாட்டல.... சரி நீ உன்னோட மாமா கூடவே கிளம்பு.. ஆனா கிளம்புறதுக்கு முதல்ல என்னை தலைமுழுகிட்டு அந்த தாலியை கழட்டி என்கிட்ட கொடுத்துட்டு போ.... உன்னை பொறுத்தவரை அந்த நிமிஷத்துல நான் உயிரோடில்லை...” என்று ஷாகர் கூற மடிந்து தரையில் அமர்ந்தவள் ஷாகரின் கால்களை கட்டிக்கொண்டு அழ ஷாகரோ

“எதுக்கு ஆதிரா அழுற..... நான் யாரு உனக்கு???? யாருக்காக இந்த கண்ணீர்... உன்னை விரும்புன பாவத்துக்கு நான் தான் அழணும் ஆதிரா...” என்று குரலில் வருத்தத்துடன் ஷாகர் கூற அங்கு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் நடப்பவை எல்லாம் மேலும் மேலும் அதிர்ச்சியை மட்டுமே வாரி வழங்கிக்கொண்டிருந்தது......
நடப்பவற்றை காணப்பொறுக்காத வசுமதி ஓடிச்சென்று ஆதிராவை தாங்கிப்பிடித்தவர் அவளை ஆதரவாய் அணைத்தபடி

“ஷாகர் என்ன பேசுற????? நீ புரிஞ்சி தான் பேசுறியா???”

“வேற என்னம்மா பண்ணட்டும்??? இவ்வளவு நடந்த பிறகும் உண்மையை அவ வாயால சொல்ல மாட்டேங்கிறா.... அப்போ அதுக்கு என்ன அர்த்தம்..???? அவ மாமா சொல்றது தானே உண்மைனு அர்த்தம்....அப்போ என்னோட முடிவும் இதுதான்....நான் அவளை எதுக்கும் கட்டாயப்படுத்தல....” என்று ஷாகர் அவன் முடிவை உறுதியாய் எடுத்துரைக்க வசுமதியோ யார் பக்கம் பேசுவதென்று புரியாது தன் கணவரை பார்த்தார்....
பிரகஸ்பதியும் நிலைமையை சரிபடுத்த எண்ணி பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டவர்

“ஆதிரா... நீ எதுவும் சொல்ல வேணாம்... ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு... உனக்கு உங்க மாமா கூட போக இஷ்டமா??” என்று பிரகஸ்பதி கேட்க ஆதிராவோ எந்த வித தயக்கமுமின்றி மறுப்பாய் தலையாட்டினாள்...

“இங்க பாருங்க சார்.. அதான் அவ வரலைனு சொல்லிட்டா தானே..... நீங்க இடத்தை காலி பண்ணுங்க...”

“என்ன ஐயா நீங்க.. பெரிய மனுஷர்னு உங்ககிட்ட நியாயம் கேட்டா நீங்க அநியாயமா பேசுறீங்க....” என்று ஆதிராவின் மாமா பொறும

“இங்க பாருங்க... ஆதிரா ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை... அவ மேஜர்.. அவ எங்க இருக்கனும்... யார்கூட இருக்கனும்னு அவ தான் முடிவு பண்ணனும்..... அதோட அவ இப்ப எங்க அரவணைப்புல இருக்கா.. அதனால அவளுக்கு விருப்பம் இல்லாத எந்த விஷயத்தையும் அவளை செய்ய சொல்லி எங்களால வற்புறுத்த முடியாது... எந்த போலீஸை வேணா கூட்டிட்டு வாங்க.. எந்த கோர்ட்டுக்கு வேணா போங்க...இது தான் எங்க பதில்...இப்போ நீங்க வெளியல போங்க.. இல்லைனா நான் இப்போ போலிஸை கூப்பிடவேண்டி வரும்..” என்று கூறியர் தன் மொபைலில் யாரையோ அழைத்து பேச அதில் பயந்த ஆதிராவின் மாமா ஆதிராவின் புறம் திரும்பி

“ஊரைவிட்டு ஓடி வந்து குடும்ப மானத்தை வாங்கிட்டல.. உன்னை கவனிக்கிற விதத்துல கவனிச்சுக்கிறேன்...” என்று பொறுமியபடி ஷாகரையும் ஆதிராவையும் பார்த்து முறைத்தபடி ஆதிராவின் மாமா வெளியேற, ஷாகரை அழைத்த பிரகஸ்பதி யாரும் எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் அறைந்தார்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN