யாசிக்கிறேன் உன் காதலை - 4
ஹாய் கண்மணிஸ் நெட் போடல அதான் லேட் அப்டேட் அடுத்த அத்தியாயம் சீக்கிரமா போடுறேன் கண்மணிஸ் உங்க வீட்டு குட்டி பாப்பாவ நினைச்சு என்னைய மன்னிச்சுடுங்க... காதலை யாசிக்க வந்துவிட்டேன் இதோ அடுத்த அத்தியாயம்...
"என்ன எல்லாரும் உக்காந்து இருக்கீங்க சமையல் வேலை முடிஞ்சா எடுத்து வைக்கலாம்ல, அபி மா நீ இன்னும் குளிக்கலையா?? அதே துணியோட இருக்க, போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம், இன்னைக்கு உங்க நாலு பேருக்கும் வேலை இல்லையா??" என்றார் துரு, விரு, ரிஷி மற்றும் சந்தோஷத்தை பார்த்து.
"கொஞ்சம் ஃப்ரீ தான் தாத்தா" என்றான் துரு.
"சரி.. சரி.." என்றார். அனைவரும் கலைந்து சென்றனர்.
அபி நைட்ரஸுடன் சிறிது நேரத்தில் கீழே வந்தாள். அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர். அங்கு பெரிய டைனிங் டேபிள் போடப்பட்டிருந்தது. அபி அங்கு வந்ததும், "வாமா அபி!! சாப்பிடலாம், எல்லாம் எடுத்து வையுங்க", என்றார் நேசமணி. அபி அவர் பக்கத்தில் இருந்த சேரில் உட்கார்ந்தாள்.
"அபி!! பேபிடால் எங்க??", என்றார் அகிலா.
"மாம்!! அவ குளிச்சிட்டு இருக்கா, அதான் நா வந்துட்டேன்", என்றாள். பாட்டி அபிக்குப் பரிமாறினார். அகிலா உள்ளே சென்றார்.
சிறிது நேரத்தில் பேபிடால் த்ரீ பை ஃபோர்த் பேண்டும் மேலே டி-ஷர்டுடன் ஓர் பாடலை முணுமுணுத்தபடி கைகளை ஆட்டிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள். "ஹாய்!! என்ன எல்லாரும் என்னைய விட்டுட்டு சாப்பிட வந்துட்டீங்க??", என்றாள் சிரிப்புடன். அனைவரும் தாத்தாவைக் கண்ஜாடை காட்டினர்.
"என்ன?? அமைதியா இருக்கீங்க?? டாட்.. தனப்பா.. ராஜாப்பா.." என்றாள் அப்பாக்களைப் பார்த்து.
"பேபிடால்!! சாப்பிடு டா, அப்புறம் பேசலாம்", என்றார் குணா.
"ஓகே!" எனத் தோளைக் குலுக்கி விட்டதும்,
"வாவ்..!!! எல்லாமே கலர்ஃபுல்லா இருக்கு" என்று மிளகாய்ச் சட்னியை எடுத்து நாக்கில் வைத்தாள்.
"ஆஆ....", என்று கத்த ஆரம்பித்தாள். அவள் சத்தம் கேட்டு அகிலா வெளியே ஓடிவந்தார்.
பேபிடால் தண்ணியை எடுத்துக் குடித்தாள். அனைவரும் பதறினர். பார்வதி(முதல் அத்தை) சர்க்கரையை எடுத்து வந்து ஊட்டி விட்டார். பேபிடாலின் முகமெல்லாம் சிவந்து போனது.
"உனக்குப் பண்ணதான் உள்ளப் போனேன், நீ எதுக்கு இத சாப்பிட்ட?? பேபிடால்", என்றார் அகிலா.
"இங்க ஸ்வீட் இருக்குல்ல, அத சாப்பிட வேண்டியதுதானே, அதை விட்டுட்டு மிளகாய்ச் சட்னி எடுத்து சாப்பிடுற", என்றான் நந்து கிண்டலாக.
"கலர்ஃபுல்லாக இருந்தது, அதான்.." என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.
"இந்தா, இந்த ஸ்வீட்ட சாப்பிடு டா" என்று செல்வி (முதல் சித்தி) ஊட்டிவிட்டார், அதைச் சாப்பிட்டதும் நார்மலானாள்.
"டேய்! குணா!! இவ என்ன டிரஸ் போட்டுட்டு வந்து இருக்கா டா??" என்றார் நேசமணி கோபமாக.
"அப்பா!! அது..." என்றார் தயங்கியபடி.
"இதுல்லா என்ன பழக்கம் டா?? இதான் நீ வளக்குற லட்சணமா??" என்றார் கோபமாக.
"பாப்பா!! துணிய மாத்திட்டு வா டா, அண்ணா!! விடுங்க அவ சின்ன பொண்ணுதானே", என்றார் வரதன்(சின்ன தாத்தா) வேகமாக.
"என்ன விடுறது??" என்றார் ஆத்திரமாக.
"பேபிடால் வாட் நான்சென்ஸ் ஆர் யூ டூயிங்?? திஸ் இஸ் நாட் அமெரிக்கா. திஸ் இஸ் அ வில்லேஜ். கோ அண்ட் சேஞ்ச் யுவர் டிரஸ்", என்றார் அகிலா கோபமாக.
"மீ!! வெரி ஹாட், சீ மை ஹேன்ட்" என்றாள் கோபமாக. கைகள் முழுவதும் சிவந்துபோய் இருந்தது.
"என்னாச்சு பேபிடால்??" என்றாள் அபி. பெண்கள் அனைவரும் பதறினர். சிறியவர்களும் அப்பாக்களும் தாத்தாவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர்.
"எண்ணெய் போட்டா சரியாப் போயிடும்" என்றார் அபிராமி பாட்டி.
"இல்ல அத்த!! வேணாம்! அவளுக்கு இங்க ஒத்துக்கல்ல, அதனாலதான் இப்படி ஆயிடுச்சு ஆயில்மெண்ட் போட்டா சரியாயிடும், பேபிடால்!! டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா! தாத்தாவுக்கு இது பிடிக்கல", என்றார் அகிலா.
"டோன்ட் ஸ்பீக் வித் மீ!" என்றாள் கோபமாக.
"இல்லடா! நா எதுக்கு சொல்றேன்னா.." என்றார் தயங்கியபடி.
"குணா!! முதல்ல அவளத் துணி மாத்திட்டு வரச் சொல்லு, பசங்க எல்லாம் இருக்காங்கல்ல!? என்னடா இது??" என்றார் நேசமணி மீண்டும்.
"தாத்தா!! நா அப்படி என்ன பண்ணிட்டேன்?? இவங்க எல்லாரும் என் கசின்ஸ், அவங்க ஏன் என்னைய தப்பா பாக்கப் போறாங்க" என்றாள் ஆத்திரமாக.
"தப்பா பாப்பாங்கனு நா எப்ப சொன்னேன்".
"அப்பப் பசங்க இருக்காங்கனு சொன்னதுக்கு மீனிங்?? அதாவது அர்த்தம் என்ன??" என்றாள் கோவமாக.
"டாலு!! கூல் டவுன்! தாத்தா!! அவ மாத்திட்டு வருவா விடுங்க", என்றான் துரு.
"துரு!! எதுக்கு நீ இப்படிச் சொல்ற?? நா மாத்த மாட்டேன்", என்றாள் கோபமாக.
"பேபிடால்!! மித்ரா, சந்தியா, அபி மாதிரி ஃபுல் பேண்ட் போட்டுக்கோ, அவ்ளோ தான்" என்றாள் அகிலா.
"டாடி!! இவங்கள என்கிட்டப் பேச வேணாம்னு சொல்லுங்க, இங்க வந்ததிலிருந்து ஓவரா பண்றாங்க, ஐ டோன்ட் லைக் திஸ்", என்றாள் பிரெஞ்சு மொழியில். மற்றவர்களுக்குப் புரிய கூடாத விஷயங்களை நால்வரும் பிரெஞ்சில் பேச முடிவெடுத்து இருந்தனர்.
"அகிலா!! நா ஆல்ரெடி உன்கிட்ட சொல்லிட்டேன், நம்ம பொண்ணுங்கள கவனிக்கிறத விட மத்தது பெருசில்லனு, மறுபடியும் இப்படி பண்ற, எனக்கு இது சுத்தமா பிடிக்கல" என்றார் குணா பிரெஞ்சில் கோவமாக.
"அது.. நம்ம பொண்ணுங்கள தப்பா சொல்லவும்..", என்றார் தலைகுனிந்து.
"மாம்!! பேபிடால முதல்ல கவனிங்க", என்றாள் அபி. குடும்பத்தினர் இவர்கள் மொழி புரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர்.
"டேய்!! குணா!! முதல்ல துணி மாத்திட்டு வந்து சாப்பிடச் சொல்லு, காலைல இருந்து ஒழுங்காவே சாப்பிடல", என்றார் நேசமணி அக்கறையும் கோவமுமாக.
"எனக்கு சாப்பாடு வேண்டாம்", என்று கோபமாக மேலே ஓடினாள்.
"இருந்தாலும் இந்த சின்னவளுக்குக் கொழுப்பு அதிகம் தான், அவகிட்ட கிராமத்து வழக்கத்தைச் சொல்லி வையி", என்று எழுந்து சென்றார்.
"குணா!! வருத்தப்படாத, அண்ணாவப் பத்திதான் தெரியும்ல, புள்ளைய சாப்பிட வை", என்று மாற்ற, அப்பாக்கள்(கந்தன்,வரதன்) எழுந்து சென்றனர்.
"நா அவளைப் போய் சாப்பிட வைக்கிறேன்", என்று டிபனை தட்டில் எடுத்து வைக்கப் போனார் அகிலா.
"அகிலா!! நீ ஒன்னும் பண்ண வேண்டாம்", என்று குணா சொல்லி விட்டு எழுந்து சென்றார். அகிலா கலங்கிய கண்களுடன் அப்படியே நின்றார்.
"அண்ணி!! அண்ணா ஏதோ.. கோவத்துல சொல்லிட்டாங்க, வருத்தப்படாதீங்க", என்றார் மல்லிகா (மூன்றாவது அத்தை).
"இல்ல! நா பண்ணுனது தப்புதான், அவள ரொம்பத் திட்டிட்டே இருந்துட்டேன்", என்றார் கலங்கிய குரலில்.
"மீ!! இட்ஸ் ஓகே! விடுங்க! அவ சரியாயிடுவா", என்றாள் அபி.
"அபி!! சாப்பிடுடா, எல்லாரும் சாப்பிடுங்க" என்று அகிலாவே பரிமாறினார். அனைவரும் அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தனர்.
'ஐயோ! பசிக்கிதே! எதுக்கு நமக்கு இந்த அங்ரிலாம்', என்று பேபிடால் குப்புறப் படுத்துக்கொண்டு மனதிலே புலம்பினாள்.
"டாலு!! உனக்குப் பசிக்குது தானே!!".
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல", என்று எழுந்து உட்கார்ந்து திரும்பிப் பார்த்தாள். துருவின் கையில் தட்டும், சந்தோஷ் கையில் தண்ணீர் பாட்டிலுடன் மற்றச் சிறியவர்கள் அனைவரும் சிரிப்புடன் ரூமிற்குள் வந்தனர்.
"உனக்குப் பசிக்குதுன்னு எங்களுக்குத் தெரியும்", என்றான் விரு.
"அக்கா!! சோறுதான் ரொம்ப முக்கியம்!!", என்றான் நந்து கிண்டலாக.
"பேபிடால்!! சாப்பிடு முதல்ல", என்றாள் அபி.
துரு பக்கத்தில் உட்கார்ந்து மூடியிருந்த தட்டைத் திறந்தான். "எனக்கு வேணா துரு", என்றாள் முகத்தைத் திருப்பி.
"சாப்பிட்டுத் தான் ஆகணும்", என்று சிறியவர்கள் சோபாவிலும் பெட்டிலும் அங்கங்க உட்கார்ந்தனர்.
"எனக்குப் பசிக்கல", என்று முகத்தைத் திருப்பினாள்.
துரு அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, "நாங்க யாருமே! இன்னும் சாப்பிடல நீ சாப்பிட்டாத்தான் சாப்பிடுவோம்னு வந்துட்டோம்", என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
'அடப்பாவி மாமா!! ஒரு முட்ட தோசைன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டியே!!', என்று நந்து மனதிலயே புலம்பினான்.
"நாம சாப்பிடல??", என்றான் விரு சந்தோஷிடம் மெதுவாக.
"வாய மூடு", என்று பல்லைக் கடித்தான்.
"ப்ச்.. நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க", என்றாள் சலிப்புடன்.
"நீ முதல்ல சாப்பிடு, நாங்க சாப்பிடுறோம்", என்று துரு ஊட்டினான். பேபிடால் அவனைப் புதிதாகப் பார்த்தாள். புரையேறியது, தலையைத் தட்டி விட்டான். அபி தண்ணீரை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். அதையும் அவனே வாங்கி குடிக்க வைத்து ஊட்டி முடித்தான்.
"ம்ம்... நா சாப்பிட்டேன், நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க".
"எத்தன தடவ மா சாப்பிடுறது??" என்றான் ரிஷி கிண்டலாக.
"அப்ப எல்லாரும்.." என்றாள் குழப்பமாக.
"நாங்க எல்லாரும் சாப்பிட்டுத்தான் உனக்கு சாப்பிட எடுத்துட்டு வந்தோம்", என்றாள் மித்ரா சிரிப்புடன்.
"யூ.. துரு சீட்டிங்", என்று கோவமாக அவன் தோளில் அடித்தாள்.
"ஹேய்!! ஏஞ்சல்!! உனக்கு நா ஊட்டுனதுக்குத் தேங்க்ஸ் சொல்லணும், அத விட்டுட்டு அடிக்கிற, இரு தாத்தாகிட்டப் போய்ச் சொல்லுறேன்", என்றான் விளையாட்டாக.
"போ மேன்! போய் சொல்லு! எனக்கு ஒன்னும் பயம் இல்ல", என்றாள் சிரிப்புடன்.
"அதான் தெரியுமே", என்றான் கிண்டலாக.
"துரு மாமா!! கையக் கழுவுங்க", என்றாள் அபி.
"சரிடா!!", என்று தட்டை டேபிளில் வைத்து விட்டு கையைப் பாத் ரூமில் கழுவிவிட்டு வந்தான்.
பாட்டியைத் தவிர மற்ற ஆறு பெண்களும் வந்தனர். "நேகா குட்டி!! இது வில்லேஜ் டா, தாத்தா இங்கதானே இருக்காங்க, இந்த ட்ரஸ் இங்க செட் ஆகாது டா", என்றார் பார்வதி பொறுமையாக அவள் தலைமுடியைக் கோதி பக்கத்தில் உட்கார்ந்து.
"அத்த!! அதுக்காக என்னைய அப்படி சொல்லுவாங்களா??", என்றாள் பாவமாக.
"தாத்தா அப்படியே வளர்ந்துட்டாங்கடா, எல்லாரும் அவருக்குக் கட்டுப்பட்டுத்தான் இருப்பாங்க, இந்த ஊர்ல, இந்த வீட்டிலேயும் அப்படித்தான்", என்றார் முல்லை (இரண்டாவது அத்தை) பொறுமையாக.
"இருந்தாலும் அத்த, அவர விட நா சின்னப் பொண்ணுதானே!!", என்றாள் உதட்டைப் பிதுக்கி.
"குட்டிமா!! நாங்க எல்லாரும் வளர்ரப்பயே ரொம்ப கட்டுப்பாட்டோடதான் வளர்ந்தோம், ஸ்கூல் காலேஜ் எல்லாம் கூட எங்க மூன்னு பேரையும் விடல, நான்தான் படிச்சே ஆகணும்னு டிகிரினு வீட்டிலிருந்தே டிகிரி முடிச்சேன்", என்றார் மல்லிகா (மூன்றாவது அத்தை).
"ஏன் அத்த அப்படி??", என்றாள் அபி குழப்பமாக.
"இங்க பொண்ணுங்க எல்லாரும் கட்டுப்பாடோடதான் இருக்கணும், படிக்கலாம் வைக்க மாட்டாங்க டா", என்றார் செல்வி (முதல் சித்தி).
"இங்கப் படிக்க வச்சா, பொண்ணுங்க யார் கூடயாச்சும் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிப்பாங்க அப்படின்னு அவங்க நினைக்கிறாங்க டா", என்றார் வனிதா (இரண்டாவது சித்தி).
"வாட் நான்சென்ஸ்?? பொண்ணுங்க மேல நம்பிக்கையே இல்லையா வனிமா??", என்றாள் பேபிடால்.
"இல்லடா!! அதெல்லாம் அப்படித்தான், கல்யாணம் பண்ண வர பையன் படிச்சிருந்தா போதும், பொண்ணுங்களுக்கு அப்படி இல்ல, உன் அம்மா கூட அப்படித் தான் வளர்ந்தாங்க" என்றார் வனிதா பொறுமையாக.
"இட்ஸ் வெரி பேட் மீ", என்றாள் அபி கோவமாக.
"ம்ம்.. ஆமா டா", என்றார் அகிலா.
"இந்த ட்ரஸை நீ டெல்லில, எங்க வீட்டுக்கு இல்ல முல்லை அத்த வீட்டுக்கு வந்தா, இல்லனா சென்னையில சின்னத்த மல்லிகா வீட்டுக்குப் போனா போட்டுக்கோ டா பேபி, இங்க வேணா!", என்றார் பார்வதி லேசான கெஞ்சலாக.
"ம்ம்.. சரி அத்த!!".
"சூப்பர்...!!" என்றனர் அனைவரும் சந்தோஷமாக.
"எப்படியோ உங்க அப்பா பேச்ச என்னையக் கேட்க வைக்க நினைக்கிறீங்க!? ம்ம்... எப்போதுமே இப்படி கேட்க மாட்டேன்", என்றாள் சிரிப்புடன்.
"வாலு!!", என்றனர் பெரியவர்கள் செல்லமாக அகிலாவைத் தவிர.
"இன்னைக்கு உங்க அப்பா பண்ணதுக்கு நாளைக்கு அவருக்குப் பனிஷ்மென்ட் இருக்கு", என்றாள் விஷமமானச் சிரிப்புடன்.
"என்ன பண்ணப்போற??", என்றனர் கோரசாக.
"வெயிட் அண்ட் வாட்ச்", என்றாள் சிரித்துக்கொண்டே. அகிலாவைத் தவிர மற்ற பெரியவர்கள் சிரிப்புடன் படுக்கச் சென்றனர்.
"பேபிடால்!! அம்மாகிட்டப் பேச மாட்டியா?? சாரிடா!! நா உன்மேல இங்க வந்ததுல இருந்து கோவப்பட்டுட்டேன்", என்றார் வருத்தமாக. பேபிடால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"ஏன் மீ!! இங்க வந்ததிலிருந்து கோவப்படுற?? அங்க நீங்க இப்படி இல்லையே!!", என்றாள் அபி.
"இல்ல!! உங்க ரெண்டு பேரையும் யாரும் தப்பா சொல்லிடக்கூடாது, அதனாலதான், சாரி!! பேபிடால்!!", என்றார் அவள் நெற்றியில் இதழ் பதித்து.
"இனிமே என்னையத் திட்டுவீங்களா??", என்றாள் கூர்மையான பார்வையுடன்.
"இல்ல!! நோ.. நோ.." என்றார் வேகமாக.
"அப்ப சரி", என்று அவரை அணைத்துக் கொண்டாள். சிறியவர்கள் சிரிப்புடன் பார்த்தனர்.
"எங்க ரெண்டு பேரையும் தூங்க வச்சுட்டுத்தான் நீங்க போகணும், அதான் உங்களுக்கு நாங்க தர பனிஷ்மென்ட்", என்று அபி அகிலாவின் தோளினைக் கட்டிக்கொண்டாள்.
"ஆமா!", என்றாள் பேபிடால் சிரிப்புடன் மறுபக்கம் சாய்ந்து.
"ஓகே!! ஓகே!!", என்றார் அகிலா சிரிப்புடன்.
"அகிமா!! எப்படி ரெண்டு பேரையும் சமாளிக்கிறீங்க?? ரெண்டும் இம்சையா இருக்கே!?", என்றான் நந்து கிண்டலாக.
"ஹேய்!!", என்றனர் இருவரும் வேகமாக.
"நோ.. ஃபைட், நோ..", என்றார் அகிலா சிரிப்புடன்.
"சரி! வாங்க!! படுக்கலாம், எனக்குத் தூக்கம் வருது", என்றாள் சந்தியா.
"சரி! குட்நைட்!!", என்று சிறியவர்கள் வெளியே சென்றனர்.
"துரு மாமா!!", என்று அபி வேகமாக ஓடி வந்தாள்.
"என்ன அபி??".
"தேங்க்யூ மாமா!", என்றாள் சிரிப்புடன்.
"எதுக்கு மேடம்??", என்றான் கிண்டலாக.
"மாமா!! பேபிடால சாப்பிடவைக்க எல்லாரையும் நீங்கதான் அழைச்சுட்டு வந்து நீங்களே ஊட்டி வீட்டிங்களே அதுக்குதான்", என்றாள் சிரிப்புடன்.
"நீ தேங்க்ஸ் சொல்லனும்னு தான் நா பண்ணுனேனா??", என்று வலிக்காமல் தலையில் கொட்டினான்.
"அப்படி இல்ல மாமா, பேபிடால் இங்க வந்ததிலிருந்து மைன்ட் டிஸ்டர்ப்பா இருக்கானு தோணுது, அவ எப்படி இருப்பானு தெரியுமா உங்க எல்லாருக்கும்?? அவள சுத்தி எப்போதுமே சிரிப்பு சத்தம் கேட்டுட்டே தான் இருக்கும், கேட்கலனாலும் கேட்க வைப்பா, எப்போதுமே ஒரு பாட்டு முணுமுணுத்துகிட்டே ஆடிகிட்டே இருப்பா, வீட்ல மட்டுமில்ல நம்ம வீட்டுப் பக்கத்துல அஞ்சு வீடு இருக்கு அங்கேயும் இவ இஷ்டத்துக்கு ஜாலியா தான் இருப்பா, அவ எதுக்காகவும் அழுதது இல்ல, அவ மட்டும் இல்ல நானும் அப்படிதான், டாடி சொன்ன மாதிரி அழ விட்டதும் இல்ல, இங்க வந்ததும் புதுசா அழுகுறா, கோவப்படுறா, அவ நார்மலா இல்லாதது தான் காரணம், இப்ப நீங்க எல்லாரும் சாப்பிட வச்சதும் அவ நார்மலா மாறிட்டா, என் பேபிடால் வெளியே வந்துட்டா", என்றாள் சந்தோஷமாக.
"எப்படி மாறிட்டானு சொல்ற?", என்றான் விரு சந்தேகமாக.
"அவ நார்மலா இல்லனா அத்த, அம்மா கிட்டப் பேசி இருக்க மாட்டா, மாம் சாரி கேட்டாலும் நோ யூஸ், துரு மாமா சாப்பிட வச்சது அவளுக்குப் பிடிச்சிருக்கு அதனால தான் சொன்னேன், தேங்க்யூ மாமா!!", என்றாள் துருவின் கையைப் பிடித்து.
"லூசு!! அவ நம்ம வீட்டுப் பொண்ணு, அவ குழந்த மாதிரி இருக்கா, அவள சமாதானம் பண்ணனும்னு தான் வந்தது, நீ போய் தூங்குடா", என்றான் சிரிப்புடன்.
"ம்ம்.. குட்நைட் டியர்ஸ்!!", என்று சிரிப்புடன் உள்ளே சென்றாள்.
"டேய்!! அண்ணா!! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா", என்றான் ரிஷி நடந்தபடி.
"என்னடா உலருர??", என்றான் துருவும் நடந்தப்படி.
"அதான் பேபிடால சமாதானம் பண்ற மாதிரியுமாச்சு அண்ணி மனசுல இடம்பிடிக்கப் பிள்ளையார்சுழி போட்ட மாதிரியுமாச்சு", என்றான் விரு சிரிப்புடன்.
"மாமா!! செம்ம பிளான்", என்றனர் நந்து மற்றும் சந்தியா.
"வாயை மூடுங்க!! மித்ரா அபிய அண்ணின்னு கூப்பிட்டனாலதான் டாலு ரவின் கூட அவன் வீட்டுக்குப் போறேன்னு சொன்னா, அத சரி பண்ணி அவளுக்கு நாமலும் இங்க இருக்கோம்னு காட்டணும், அதுமட்டுமில்ல வந்ததிலிருந்து டாலு சரியா சாப்பிடல, ரவின் வீட்டுக்குப் போய் இருந்தா கூட இந்த பிரச்சன வந்திருக்காதுன்னு தோணுனது, அதனால தான் அவளுக்கு நானே ஊட்டினேன், நாம எல்லாரும் அவமேல அன்பா இருக்கோம்னு அவள உணர வைக்கனும், அதுக்குத் தான்", என்றான் துரு விளக்கமாக.
"நீங்க சொல்றது சரிதான் மாமா, பேபிடால் உடம்புல மட்டுமில்ல அவ மனசுலயும் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கானு தோணுது", என்றான் சந்தோஷ் யோசனையுடன்.
"அதுக்கு என்ன பண்றது??", என்றாள் மித்ரா குழப்பமாக.
"மித்து!! அத நாங்க பாத்துக்குறோம், நீ கவலைப்படாதே, அபிய அண்ணின்னு இன்னொரு தடவ குறிப்பிடாத, அது போதும்!", என்றான் துரு.
"சரி அண்ணா!!" என்றாள். அனைவரும் அவரவர் அறைக்குத் தூங்கச் சென்றனர்.
"மூணுபேரும் இங்கதான் இருக்கீங்களா??", என்று குணா பேபிடால் அறைக்கு வந்தார்.
"டாடி..!!", என்றனர் இரு பெண்களும் சந்தோஷமாக.
"ஹே! குட்டிமா!! டாடிய விட்டு மூணுபேரும் ஒன்னு சேர்ந்துடீங்களா??", என்றார் சிரிப்புடன் பெட்டில் உட்கார்ந்து.
"இல்ல டாடி!! எப்படியும் இங்க நீங்க வருவீங்கன்னு தெரியும்", என்றாள் அபி சிரிப்புடன்.
"ம்ம்.. சமாளிக்கிற.. சரி!! பேபிடால்!! இந்த டிரஸ் வேணா டா, உனக்கு நியூ டிரஸ் வாங்கித் தரேன்", என்றார் சிரிப்புடன்.
"டாடி!! நா சேஞ்ச் பண்ணிக்கிறேன், அதுக்குப் பதிலா நா சொல்லுறத நீங்க பண்ணனும், ஓகே வா??", என்றாள் யோசனையுடன்.
"டீல் ஓகே! என்ன பண்ணனும் டா??", என்றார். பேபிடால் தன் திட்டத்தைச் சொன்னாள். "காலையிலேவா!!??", என்றார் அவசரமாக.
"ஆமா டாடி!! போங்க! போய் தனப்பா ராஜாப்பா கிட்ட இதச் சொல்லி பண்ணுங்க".
"சரிடா!!", என்று எழுந்து சென்றார்.
மறுநாள் காலையில் மித்ரா மற்றும் சந்தியா ஆண்கள் ஐந்து பேரின் கதவைச் சத்தம் போட்டுத் தட்டி எழுப்பினர். "ஏய்!! காலையிலயே ஏன்டி இப்படி எழுப்புறீங்க??", என்றான் நந்து கோபமாக வெளியே வந்து.
"டேய்!! கீழ பாருடா", என்றாள் சந்தியா அவசரமாக.
ஐந்து பேரும் மாடியிலிருந்து கீழே தாழ்வாரத்தைப் பார்த்தனர். மொத்த குடும்பமும் கீழே கூடியிருந்தது, பேபிடால் நடுவில் உட்கார்ந்து இருந்தாள். "அட! இந்த பேபிடால் இப்படி அவ திருவிளையாடல காலையிலயே ஆரம்பிக்கணுமா??", என்றான் விரு கொட்டாவியை விட்டபடி.
"கொஞ்சம் லேட்டா ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம்", என்றான் ரிஷி சோர்வாகத் தூணில் சாய்ந்து.
"கீழப் போய் என்ன நடக்குதுன்னு பாக்கலாம், வாங்க!!", என்றான் சந்தோஷ்.
"பிரஷ் பண்ணிட்டு போலாம்", என்றாள் சந்தியா.
"ம்ம்.. சரி!!", என்று அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் வெளியே வந்தனர்.
"எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கணும், இந்த டாலு என்ன வம்ப விலைக் கொடுத்து வாங்குனாலோ? தெரியல!", என்றான் துரு சலிப்புடன் கீழே இறங்கியபடி. மற்றவர்களும் அவனுடன் இறங்கினர்.
"முடியாது.. முடியாது..", என்று நேசமணி கத்திக்கொண்டே இருந்தார். சிறியவர்கள் பதறி வேகமாகப் பக்கத்தில் சென்றனர்.
பேபிடாலின் திட்டம் என்ன?? துரு பிரச்சினையைச் சமாளிப்பானா???? நேசமணி எதற்காகக் கத்துகிறார்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...................................................
யாசிப்பு தொடரும்.............................................
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.