என்னை தீண்டிவிட்டாய் 7

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

ரோஜாவாய்
மலர்ந்து மணம் வீசும்
உன்னை நான்
என்று பறித்து
என் வசப்படுத்தப்போகிறேன்...

தன் தந்தையின் இச்செயலை எதிர்பார்க்காத ஷாகர் கன்னத்தில் கையினை வைத்தபடி தன் தந்தையை பார்க்க வசுமதியோ “என்னங்க..” என்று தன் கணவரை நோக்கி அதிர்ச்சியில் கூவிவிட்டார்..

ஆதிராவோ தன்னிலையும் மறந்து “சார்” என்று கூச்சலிடவென்று மற்றவர்கள் அனைவரும் அவரவர் பங்கிற்கு பிரகஸ்பதியை தடுக்க முயன்றனர்..
அனைவரையும் ஒரு பார்வையில் அடக்கியவர் ஷாகரிடம்

“என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல??? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை....... இத்தனை நாளா எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்க.... இவ்வளவு நாளா எத்தனை பொய்....??? நாங்க உனக்கு வேற்று ஆளா??? இப்படி ஒரு பிரச்சனைனா அதை சரி பண்ண நாங்க உனக்கு உதவ மாட்டோமா?? இப்படி தான் அவசரமாக முடிவெடுத்து உன்னோட வாழ்க்கையை மட்டுமல்லாமல் அந்த பொண்ணோட வாழ்க்கையையும் சேர்த்து வீணடிப்பியா??? சொல்லு.. இப்போவாவது என்ன நடந்ததுனு சொல்லு...”என்று பிரகஸ்பதி கேட்க அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ஷாகர் நான்கு வருடங்களுக்கு முன் அவன் ஆதிராவை சந்தித்த கதையை கூறத்தொடங்கினான்.

பச்சை பசேலென வயல்வெளிகள் இருமருங்கிலும் வீற்றிருக்க அவற்றின் நடுவே அமைந்திருந்த அந்த மண்தரையின் மீது மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது அந்த ஜீப்...
வயல் வெளிகளின் ரம்மியத்தையும், இயற்கை காற்றின் ஸ்பரிசத்தையும், பறவைகளின் கீச்சிடலையும், மிதமான வெப்பநிலையையும் அனுபவித்தபடி தன் பயணத்தை தொடர்ந்தான் ஷாகர். ஓட்டுனர் ரேடியாவில் ஓடவிட்டிருந்த பாடலும் பாடலும் அவனது ரசனைக்கு வலு சேர்த்துக்கொண்டிருந்தது...

பறக்கும் ராசாளியே

ராசாளியே நில்லு

இங்கு நீ வேகமா

நான் வேகமா சொல்லு

கடிகாரம் பொய் சொல்லும்

என்றே நான் கண்டேன்

கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பறவை போலாகினேன்

போலாகினேன் நெடுந்தூரம்

சிறகும் என் கைகளும்

என் கைகளும் ஒன்றா

ராசாளி பந்தயமா பந்தயமா

நீ முந்தியா நான் முந்தியா

பார்ப்போம் பார்ப்போம்

எட்டுத் திசை

முட்டும் எனை பகலினில்

கொட்டும் பனி மட்டும்

துணை இரவினில்

எட்டும் ஒரு பட்டுக்குரல்

மனதினில் மடிவேனோ

முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்

பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்

வாழ்வில் ஒரு பயணம்

இது முடிந்திட விடுவேனோ

வெயில் மழை வெட்கும்படி நனைவதை

விண்மீன்களும் விண்ணாய்

எனைத் தொடர்வதை

தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே

முன்னும் இதுபோலே புது அனுபவம்

கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே

இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்

அவ்வூரின் அழகினை ரசித்தபடியே அவ்வூர் பிரசிடன்ட் ஞானபண்டிதரின் வீட்டினை வந்தடைந்தான் ஷாகர்.
ஜீப்பில் இருந்து ஷாகர் இறங்க டிரைவரும் ஷாகரின் உடைமைகளோடு அவனை உள்ளே அழைத்து சென்றான்.
உள்ளே நடுமாடத்தில் மாட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அன்றைய தினத்தந்தியை படித்துக்கொண்டிருந்தவரை அழைத்தான் ஷாகர்.

“அங்கிள்..”

“வாங்க தம்பி.... இப்போ தான் அர்ஜூன் கால் பண்ணான்... பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்துச்சா????”

“நல்லா இருந்துச்சு அங்கிள்...நான் தங்கப்போற வீட்டோட சாவியை குடுத்தீங்கனா நான் இப்பவே கிளம்பிருவேன்...”

“என்ன தம்பி நீங்க..நான் அவ்வளவு சொல்லியும் தனியா தங்குறேன்னு சொல்லுறீங்க...”

“இல்ல அங்கிள்... நான் தனியாக தங்குறது தான் வசதிப்படும்... உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான்...” என்று ஷாகர் இழுக்க

“என்னமோ தம்பி... ஆனா எங்க ஆசைக்காக இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிக்கோங்க... நீங்க தங்குற வீட்டை ரெடி பண்ண சொல்லிருக்கேன்... பயலுக வேலையை கொஞ்சும் இழுத்துட்டாங்க.. சாயந்திரம் ரெடி பண்ணிருவானுங்க... நீங்க நாளைக்கு காலையில அங்கு போயிரலாம்...”

“பரவாயில்லை அங்கிள்... நான் நாளைக்கே போறேன்..”

“சரி வாங்க தம்பி... உங்க ரூமை காட்டுறேன்... குளிச்சிட்டு வந்து சுடச்சுட சாப்பிடுங்க...” என்றவரின் அன்பான கவனிப்பிற்கு இணங்கி குளித்துவிட்டு வந்தவன் ஞானபண்டிதரின் தர்மபத்தினியின் நளபாகத்தில் பசியில் நமநமத்துக்கொண்டிருந்த வயிற்றினை பசியாற்றினான்...

உண்டு முடித்தவன் வெளியே கிளம்ப முயல அவனது துணைக்கு அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் ராசுவை அனுப்பிவைத்தார் ஞானபண்டிதர்.

ராசுவோடு ஊரை சுற்றிப்பார்க்க கிளம்பியவனுக்கு ஊரை சுற்றிக்காட்டுவதிலேயே ராசு குறியாய் இருக்க
“என்ன ப்ரோ... என்னை பார்த்தா அவ்வளவு பயங்கரமாவா இருக்கு..??”

“ஐயோ இல்ல சார்...”

“ஓ மை காட்... என்ன ப்ரோ சார் மோர்னு... சும்மா ஷாகர்னே கூப்பிடுங்க...”

“இல்லை சார்.. நீங்க பெரிய வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி.. உங்களை போயிட்டு நான் எப்படி??”

“என்ன ப்ரோ நீங்க.. நீங்க இப்படி சார்னு கூப்பிடும் போது எனக்கு ஏதோ கேட்கக்கூடாததை கேட்ட மாதிரி இருக்கு....நீங்க ஷாகர்னே கூப்பிடுங்க... அப்புறம் இந்த வாங்க போங்கலாம் வேணாம்...”

“சரி மாப்பு.. நீ இவ்வளவு ஆசை பட்டு கேட்ட பிறகு என்னால மறுக்கமுடியாது...”

“அட்ராசக்கை.. இதை தான் நான் எதிர்பார்த்தேன்...” என்ற ஷாகர் ராசுவின் துணையோடு ஊர் முழுதும் சுற்றினான்...
கையில் அவன் கொண்டு வந்திருந்த கேமாராவின் உதவியால் சில பல இடங்களை புகைப்படங்களாய் பதிவு செய்தவன் கடைசியாக கோவிலுக்கு சென்றான்.. கோவிலின் வெளிப்பிரகாரத்தினை சுற்றிப்பார்த்தவன் ராசுவோடு பின்புறமாய் அமைந்திருந்த கோவில் தடாகத்திற்கு சென்றான்...
கோவிலுக்கு பின்புறமாயிருந்த இடம் முழுவதையும் அந்த தடாகம் ஆக்கிரமித்திருக்க, அந்த தடாகம் முழுவதையும் வெள்ளைத்தாமரைப்பூக்கள் ஆக்கிரமித்திருந்தன....தடாகத்தின் ஒரு கரை மட்டும் நீண்ட படிக்கட்டுக்களை கொண்டிருக்க மற்றைய கரைகளனைத்தும் மரங்களால் அரணிடப்பட்டிருந்தது...

அந்த கோவில் தடாகத்தின் அழகினை ரசித்தபடி வந்தவனது கவனத்தை கவரந்தது ஒரு பெண்ணின் உருவம்.
ஷாகர் பின்புறமாய் நின்றதால் அப்பெண்ணின் முகம் தெரியவில்லை...
ஆனால் மயில் பச்சை நிற மெல்லிய பட்டு சேலையில் படிக்கட்டில் அமர்ந்திருந்தவளது தோற்றம் அவனை பெரிதும் கவர்ந்தது...அதோடு அவளது ஜடை தரையைத்தொட முயன்றுக்கொண்டிருக்க அவள் சிகையில் சூடப்பட்டிருந்த மல்லிகைச்சரமோ எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற ரீதியில் அவள் தோளிரண்டிலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.. அவள் தனிமைக்கு துணைபோல் அவளது பூஜைக்கூடை அவளருகே வீற்றிருந்தது...
கையிலிருந்த பொறிகளை அவள் குளத்தில் வீச எங்கிருந்தோ பல மீன்கள் ஒரேடியாக வந்து அவள் வீசிய பொறிகளை உண்டுவிட்டு மீண்டும் மறைந்துகொண்டன.....

அவள் கைகளோ இச்செயலை தன்னிச்சையாய் செய்வது போல் தான் ஷாகருக்கு தோன்றியது...
அந்த இடமும் அப்பெண்ணும் ஓவியம் போன்றதொரு பிரம்மையை ஷாகருள் ஏற்படுத்த அவனும் அதை புகைப்படமாய் மாற்ற எண்ணி அந்த சூழலை புகைப்படமெடுத்தான்....

அவன் புகைபடமெடுக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு மாடப்புறாவும் அப்பெண்ணின் அருகே வந்தமர, அந்த பெண்ணும் அப்புறாவிற்கு தன்னிடமிருந்த பொறியை கொடுக்கும் வேளையில் ஏதோ அரவம் கேட்க அப்பெண் ஷாகரை திரும்பி பார்க்கும் நொடியை புகைப்படமாய் பதிந்துகொண்டான் ஷாகர்....
எடுத்தபடத்தினை சரிபார்க்க எண்ணி ஷாகர் தன் கேமாராவில் அப்புகைபடத்தை பார்க்க அது நிஜ ஓவியம் போலிருக்க அப்பெண்ணின் முகத்தை சூம் செய்து பார்த்தவன் பிரம்மித்து நின்றான்...
அத்தனை ரவிவர்மனின் ஓவியங்களை ஒன்றாய் கலந்தது ஒரு பெண்ணாய் வடிவமைத்தது போலிருந்த பெண்ணை பார்த்தவனுக்கு அவன் கண்களை நம்பமுடியவில்லை ...

உறுதி செய்வதற்காக நிமிர்ந்தவனை முறைத்தபடியே வரவேற்றாள் அப்பெண்... அவள் கோபம் கூட அவனுள் இனம்புரியா பரவசத்தை உண்டாக்க, அவனது விழிகளோ இமைக்க மறந்து நின்றது....

ஷாகரின் விழிகள் விரிவதை கண்டு மேலும் முறைத்தவள் அருகிலிருந்த ராசுவை பார்த்து
“என்ன ராசு அண்ணே... சார் ஊருக்கு புதுசோ......??”

“ஆமா ஆதிரா... நம்ம பிரசிடண்ட் வீட்டுக்கு ஏதோ வேலை விஷயமா வந்திருக்காக..”

“ஓ.... வந்த வேலையை மட்டும் பார்க்க சொல்லுண்ணே... வேற வேலை எதுவும் பார்த்து விவகாரமா போயிரும்.. பார்த்து சூதானமாக இருக்க சொல்லு..”

“வாயாடி.... ஊருக்கு புதுசா வந்தவகள இப்படி தான் மிரட்டுவியா??”

“ஊருக்கு புதுசா வந்தவகலுக்கு நாம தானே நம்ம பழக்க வழக்கம் சொல்லிகொடுக்கனும்.. அதான் சொன்னேன்.. அப்புறம் அண்ணே.. ஊருல போட்டோ எடுக்க நிறைய எடம் இருக்குனு சொல்லு... இப்படி பொட்ட புள்ள தனியா இருக்க எடத்துல போட்டோ புடிச்சா பார்க்கிறவ அந்த பிள்ளையை தான் தப்பா சொல்லுவாக.. பார்த்து சூதானமா நடந்துக்கொள்ள சொல்லு... எல்லோரும் என்னை மாதிரி அமைதியாக போகமாட்டாங்க..”

“அம்மாடி ஆத்தா.. சாரு இந்த தடாகத்த போட்டோ எடுக்க தான் வந்தாக.. அதை எடுக்கும் போது நீயும் உள்ள வந்துட்ட.. தெரியாமல் செஞ்சுட்டாரு.. மன்னிச்சிரு... நீ இப்போ கிளம்பு..” என்று ராசு ஆதிராவிற்கு ஒரு கும்பிடு போட ஷாகரோ அவளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்...

அந்த பாவாடை தாவணியில் கால்முளைத்த ரோஜாப்பூ போல் மலர்ந்திருந்தவள் தன் கூடையினை வயிற்றின் முன்புறமாய் அணைத்து பிடித்தடி தன் தாவணி முந்தானையினை இடுப்போடு சுற்றியிருந்தவள்,காதோரும் மறைத்திருந்த கூந்தல் கற்றையினை ஒதுக்கியபடியே படிகட்டுகளில் புள்ளிமானாய் தாவி ஓடியவளின் அழகு மீண்டும் ஒருமுறை அழியாய் விம்பமாய் அவன் மனதினுள் பதிந்துவிட்டது...

அவள் செல்லும் வரை ஷாகரின் விழிகள் அவளையே தொடர அதை கண்ட ராசு
“மன்னிச்சிரு பா... அவ கொஞ்சம் வாயாடி.... மத்தபடி நல்ல பொண்ணு.... நீங்க போட்டோ எடுத்ததுக்கு தான் அப்படி பேசிட்டு போகுது...”

“இல்ல ராசு... தப்பு என்மேல தான்.. ஒரு பொண்ணே தனியா இருக்கானு கூட யோசிக்காமல் அழகா இருக்கேனு போட்டோ எடுத்துட்டேன்...”

“பரவாயில்ல விடுபா... சரி கிளம்பலாமா???” என்று கேட்ட ராசுவுடன் கிளம்பினான் ஷாகர்.
இவ்வாறு அந்த ஊரிலிருந்த அனைத்து இடங்களையும் ராசுவின் துணையோடு சுற்றிப்பார்த்தவன் மாலையில் வீடு திரும்பினான்.
மறுநாள் தனக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் வீட்டிற்கு கிளம்பினான் ஷாகர்.

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN