தீராக் காதல் திமிரா-2

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அத்தியாயம்-2

மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க ....ஜெயேந்திரன் சுகுணா தம்பதியினர் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டி கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் ஊட்டி விட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர் ...

சுகுணாவின் உதட்டிற்கு கீழே லேசாக க்ரீம் ஒட்டியிருக்க .... அதை ஜெயேந்திரன் தன் கையால் துடைத்துவிட.... சுகுணா தன் கணவரை காதலோடு பார்த்தார். அந்த அழகிய தருணங்கள் அனைத்தும் கேமரா குழுவினரால் அழகாக படமாக்கப்பட்டது.

பார்ட்டிக்கு வந்திருந்த அனைவரும் அந்த வயதிலும் அவர்களது அன்னியோன்யத்தை பார்த்து 'ஹவ் ரொமான்டிக்' என்று.... அவர்களை வாழ்த்தும் முகமாக ஒரே நேரத்தில் ஓவென்று கூச்சலிட்டனர்

அதுவும் அதிதியின் பக்கத்தில் நின்ற ஆன்ட்டி அவளின் காதுக்குள்ளேயே ஊளையிட.... தன்னை விட்டு எங்கோ சென்ற பொறுமையை... தன் அன்பான சித்திக்காக இழுத்துப் பிடித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தாள் அவள்...

அதிதிக்கு பெரும்பாலும் இதுபோன்ற விழாக்களும் பார்ட்டிகளும் ....
அதில் அவர்கள் செய்யும் அரட்டைகளும் கூச்சல்களும் பிடிக்காது.... மேல்தட்டு நாகரிகம் என்று அவர்கள் செய்யும் அட்டூழியங்களை பார்த்து ரொம்பவே கடுப்பாகி விடுவாள்....

அதிதிக்கு கோபம் அதிகம் ஆகினால் அவளது வாய் பேசாது கைதான் பேசும்... என்பதால் முடிந்த அளவு இது போன்ற பார்ட்டிகளை தவிர்த்து விடுவாள். இன்று கலந்துகொண்டது கூட அவளது சித்திக்காக மட்டும்தான்....

மனைவிக்கு அடுத்து ஜெயேந்திரன் தன் பிள்ளைகளான ராகினி மற்றும் கௌதமுக்கு கேக்கை ஊட்டி விட...
சுகுணா தங்களை விட்டு ஒதுங்கி நின்ற அதிதிக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

தன் மகள் தனக்கு தான் அடுத்து ஊட்டி விடுவாள்... என்று நினைத்துக் கொண்டிருந்த மங்களத்தின் முகம்... அதிதிக்கு ஊட்டிய உடன் கறுத்தது.

அதை கவனித்த ராகினி...
"மம்மி யார் யாருக்கோ ஊட்டி விடுறீங்க.... ஃபர்ஸ்ட் பாட்டிமாவுக்கு ஊட்டி விடுங்க... பாவம் அவங்க பீல் பண்றாங்க பாருங்க" என்று சொல்ல....
தன் பேத்தியை பெருமையுடன் பார்த்த மங்களம், 'என் ரத்தம் டா நீ' என்று மனதிற்குள்ளேயே மார்தட்டிக் கொண்டார்.

சுகுணாவும் சரி என்றுவிட்டு மற்றொரு கேக் துண்டை எடுத்துக்கொண்டு மங்களத்தின் அருகே வர....

அதற்குள் அதிதி, "நோ நோ சித்தி பாட்டிக்கு ஊட்ட வேண்டாம்" என்று அவரைத் தடுத்து நிறுத்தினாள்....

மங்களம் கோபத்துடன்....
"ஏய் என்னடி ....என் பொண்ணு எனக்கு ஊட்டி விடுறா... அதை எதுக்கு நீ தடுக்குற? உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு... நீ குப்பத்துகாரி... என்னதான் சீவி சிங்காரிச்சாளும் நாத்தம் நாத்தம் தான்... அசிங்கம் அசிங்கம் தான்" என்று சுற்றியுள்ளவர்களை மறந்து எகிரி கொண்டுவர....

அங்கங்கு பேசிக்கொண்டு இருந்த ஓரிருவரின் கவனம் மங்களத்தின் மீது வந்துவிட்டது.

ராகினி மெதுவாக பாட்டியின் தோள்பட்டையை சொரிந்து நிலமையை புரியவைக்க.... மங்களமும் சுதாரித்துக் கொண்டார். சுகுணா அதிதி ராகினி மட்டுமே அவருக்கு அருகில் இருந்ததால் மற்றவர்களுக்கு அவர் பேசியது தெளிவாக புரிந்து இருக்காது என்று நினைத்து... "சும்மா பேசிட்டு தான் இருக்கோம்" என்று சிரித்துக்கொண்டே சமாளித்தார் மங்களம்....

அவரின் நல்ல நேரம் தொழில் துறை நண்பர் ஒருவருடன் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த ஜெயேந்திரன் காதுகளில் அவரின் பேச்சு விழவில்லை....

தன் தாயின் அத்தகைய பேச்சில் அதிதியின் உள்ளம் காயப்பட்டு இருக்கும் என்று வருந்திய சுகுணா.... அதிதியிடம் கண்களாலேயே மன்னிப்பை யாசிக்க ....தன் சித்தியின் மனதை உணர்ந்தவள்... 'ஒன்றும் இல்லை' என்பது போல் தலையை ஆட்டி கண்களை மூடி திறந்தாள்.

இருந்தும் பொறுக்கமுடியாமல்....
"ஏன்மா இப்படி அசிங்கமா பேசுற? அதிதி நம்ம வீட்டுக்கு வந்து அஞ்சாறு வருஷம் ஆகுது.... அவ இப்போ நம்ம வீட்டு பொண்ணு.... எனக்கு ராகினி மாதிரி தான் அதிதியும் .....எனக்கு பொண்ணுனா உனக்கும் அவ பேத்தி தான மா? தயவுசெஞ்சு அவ மனசு கஷ்டப்படுற மாதிரி இப்படி பேசாதமா.... பாவம் மா அதிதி "
என்று சுகுணா மெல்லிய குரலில் அதிதிக்கு பரிந்து பேச....

'என் மகளையே எனக்கு எதிரா திருப்புறா சூனியக்காரி' என்று உள்ளுக்குள் கொதித்தாலும்....
தன் மகளை சமாளிக்க....
"அவ உன்ன கேக் ஊட்ட வேண்டாம்னு சொன்னதுதான் டி எனக்கு கோபம்.... இப்போ எல்லாம் அவகிட்ட பாசமா தான் நடந்துக்குறேன்... என் பேத்திய எனக்கு திட்ட உரிமை இல்லையா?" என்று மங்களம் தன் நடிப்பு மூட்டையை அவிழ்த்து விட ... எப்பொழுதும்போல் தாயின் நடிப்பை புரிந்து கொள்ளாத சுகுணா அப்படியே உருகி விட்டார்....

அதிதியின் இதழ்கள் மங்களத்தின் நடிப்பு திறமையை பார்த்து ஏளனமாக வளைந்தது.... இன்று மட்டும் அல்ல பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது இதுதானே!!

"நீ ஏன் அதிதி மா பாட்டிக்கு ஊட்ட வேண்டாம்னு சொன்ன?" என்று சுகுணா இப்பொழுது அதிதி புறம் திரும்பி கேள்வி கேட்க....
'எம்மவ கேக்குறாள இப்போ பதில் சொல்லுடி பாப்போம் ராங்கி...' என்பது போல் நக்கலாக அதிதியை பார்த்து சிரித்தார் மங்களம்.

"அது ஒன்னுமில்ல சித்தி.... பாட்டிக்கு ஏற்கனவே சுகர் இருக்கு.... கேக் சாப்பிட்டா சுகர் அதிகமாகும்.... சுகர் அதிகமானா ஏற்கனவே அதிகமா கோபப்படுற பாட்டிக்கு பிபி வந்துடும்.... பிபி வந்தாலே ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகம்... ஹார்ட் அட்டாக் வந்தா பாட்டி பரலோகம் போய்ய்ய்..."
என்று மேலும் பேச போனவளை தடுத்து ....
"ஏய் போதும்டி போதும்டி.... எனக்கு கேக்கே வேணாம் ...நீங்களே சாப்பிட்டுக்கோங்க...." என்ற மங்களம் தன் பேத்தியை இழுத்துக்கொண்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியே விட்டார் ...

பொங்கி வந்த சிரிப்பை....
ஒன்றும் புரியாமல் குழப்பமாக நின்றுகொண்டிருந்த சித்தியின் முன் சிரிக்க முடியாமல்... வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டாள் அதிதி....

டைனிங் ஹாலில் பஃபே முறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க..... விருந்தினர்கள் அனைவரும் அங்கு சென்றனர்.

சாப்பிட மனமில்லாமல் தனது மொபைலில் தனது தோழி அருணா உடன் ஷாட்(chat) செய்துகொண்டிருந்த அதிதி பார்ட்டி நடந்த ஹாலிலேயே அமர்ந்து விட..... அப்பொழுது பார்ட்டி ஹாலை சுத்தம் செய்யவந்த வேலையாள் ஒருவர் அதிதியிடம் சுகுணா அவளை தோட்டத்திற்கு அழைத்ததாக கூறிவிட்டு சென்றார் .... 'இந்நேரத்தில் அங்கு எதற்கு?' என்று நினைத்தாலும் அழைத்தது சித்தி என்பதால் சந்தேகப்பட முடியாமல் அங்கு செல்ல எழுந்தாள் அதிதி....

அதற்குள் அவளை சாப்பிட அழைக்க சுகுணாவே வந்துவிட... 'தன்னை தோட்டத்திற்கு அழைத்தவர் தனக்கு முன்னே இங்கு எதற்கு வந்தார்?' என்று குழப்பமாக இருந்தாலும் ஒன்றும் கேட்காமல் சித்தியின் பின்னாலேயே சென்று விட்டாள் அதிதி.

அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகவே முடித்தது என்றுதான் சொல்ல வேண்டும் ...

தன் எதிரியான அதிதியை பழிவாங்குவதற்காக தான்.... மங்களம் தன் வேலை ஆள் மூலம் அதிதியை தோட்டத்திற்கு கூப்பிட்டதே ...!!

அங்கே ஏற்கனவே பணம் கொடுத்து மங்களம் ஏற்பாடு செய்திருந்த வேலையாள் ஒருவன் அதிதி அரைகுறை வெளிச்சமாக இருக்கும் தோட்ட பகுதிக்கு வந்ததும் அவள் எதிர்பார்க்காத வேளையில் மிளகாய் பொடி கலந்த நீரை முகத்தில் ஊற்றிவிட்டு ஓடிவிடுவான்.... அதன்பிறகு அதிதி மிளகாய்பொடி எரிச்சல் தாங்காமல் கத்தி கூச்சல் போடுவாள்.... தான் அதை இன்ப சங்கீதமாக கேட்டு சந்தோஷப்படலாம்.... யாராவது அதைப்பற்றி விசாரித்தாலும் சமையலுக்கு பயன்படுத்திய நீரை தோட்டத்தில் ஊற்ற வந்த வேலையாள் தவறுதலாக அதிதியின் மீது ஊற்றி விட்டான் அதை மறைப்பதற்காக பயந்து ஓடிவிட்டான் என சமாளித்துவிடலாம்.... அதோடு மிளகாய் பொடியின் எரிச்சல் ஒருநாள் வரையாவது அதிதியை பாடாய்படுத்தும் என்று தெளிவாக திட்டம் தீட்டி மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தார் மங்களம்...

பாவம் ....அவருக்கு தெரியாது அல்லவா அதிதிக்கு பதிலாக அவரது ஆருயிர் பேத்தி ராகினி தான் இப்பொழுது அவளது பாய் ஃப்ரண்டுடன் ரகசியமாக ஃபோன் பேசுவதற்கு தோட்டத்திற்கு சென்றிருக்கிறாள் என்று....!!

சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தாலும் சித்தி அழைத்ததற்காக தனக்கான உணவை பிளேட்டில் எடுத்துக் கொண்டு ஓரமாக இருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்த அதிதி அதே டேபிளில் அமர்ந்து உணவை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கௌதமை பார்த்து சிரித்தாள்.

கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவன் தான் என்றாலும் சிறுவன் போல் தான் இருக்கும் அவனது நடவடிக்கைகள்.... உணவு பிரியன் என்பதால் அவனுக்காகவே அவ்வீட்டில் வகை வகையான உணவுகள் தயார் செய்யப்படும் சிறுபிள்ளை போல் இருக்கும் அவனது செய்கைகள் அனைத்துமே அதிதிக்கு ரொம்பவே பிடிக்கும். அவனிடம் பேச ஆசையாக இருந்தாலும்.... அவளை பார்த்தாலே பேயை பார்ப்பது போல் பயந்து ஓடி விடுவான் கௌதம்... அதில் அவன் விழுந்து வாரியதும் உண்டு....பழைய நினைவில் சிரித்த அதிதி

தன்னை கவனிக்காமல் உணவின் மீதே கண்ணாக இருந்த தம்பியிடம்.... "மெதுவா சாப்டுடா கௌதமு.... சாப்பாடுக்கு கால் முளைச்சு எங்கேயும் போய்டாது... இங்கேயே தான் இருக்கும்" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு வம்பிழுக்கும் ஆர்வத்துடன் சொல்ல.... அவள் குரல் கேட்டவுடன் உணவை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்த கௌதமிற்கு புரை ஏறி விட்டது. பதறிய அதிதி அவனது தலையில் தட்டி தண்ணீர் குடிக்க வைத்தாள்.... அவனது சட்டையிலும் வாயிலும் சிதறியிருந்த உணவை தன் கைகளாலேயே துடைத்தும் விட்டாள்.

அக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற அனைவருக்குமே அவளது நடவடிக்கையைப் பார்த்து ஆச்சரியம் தான்....சிலர் 'ஹைஜீனிக் இல்லாம இந்த பொண்ணு இப்படி பண்ணுதே...' என்று நினைக்க.... சிலரோ 'பாசமான பொண்ணு தான் போலயே...' என்று நினைத்தனர் .

மற்றவர்கள் எப்படியோ.... பெற்றவர்கள் இருவரும் அதிதியின் செயலில் மனம் குளிர்ந்து தான் போயினர்....

அப்பொழுதுதான் டைனிங் ஹாலுக்கு தன் திட்டம் வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்து கர்வ புன்னகையுடன் நுழைந்த மங்களம்... அதிதி அங்கு இருப்பதை பார்த்து அதிர்ந்து...
'இவள் இங்கே என்றால் அங்கே தன் திட்டம்...' என்று யோசிப்பதற்குள்....

"ஸ்ஸ்ஸ்ஆஆஆஆஆ எரியுது எரியுது...." என்று அவரின் செல்ல பேத்தி ராகினியின் அழுகுரல் அவ்வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது.

பேத்தியின் கூச்சலில் மங்களத்தின் அடி வயிறே கலங்கிப் போனது....

ஹா ஹா ஹா தன்வினை தன்னைச்சுடும் அல்லவா...!?

மறுநாள்....
காலையில் எழ தாமதமாகி விட்டதால் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அதிதி.

மெக்கானிக் வேலை என்பதால் வசதிக்காக எப்பொழுதும் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் தான் இருப்பாள்... வேலைக்கு தொந்தரவாக இருக்கும் முடியையும் மொத்தமாக சேர்த்து ஜிலேபி கொண்டை இட்டு விடுவாள்....

அன்றும் அப்படியே கிளம்பி வந்தவள்... காலை உணவை சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வர... அங்கே ஏற்கனவே ராகினி அமர்ந்திருந்தாள்...

அவளின் கையில் ஐஸ் பேக் ஒன்று இருக்க .....அதை முகத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் அவள்.....

அதிதிக்கு அவளை அப்படி பார்த்ததும் வடிவேலு காமெடி ஒன்று நினைவுக்கு வர சிரித்துக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ...

அதிதிக்கு நேற்றே அது தனக்கான ட்ரப் (trap) என்று புரிந்துவிட்டது... முதலில் ராகினியின் அலறல் கேட்டதும் மங்களத்தின் அதிர்ந்த முகமும் ....அடுத்தடுத்த அனைவரையும் சமாளிப்பதற்கு அவர் எடுத்த முயற்சியும்... அதை உறுதிப்படுத்திவிட..... என்ன முயன்றும் 'தன் மேல் இவ்வளவு வக்கிரமா?' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.... சொல்ல போனால் தான் இதிலிருந்து தப்பித்து ராகினி மாட்டிக்கொண்டது ஒருவகையில் அவளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.... ஆனால் ஒருவனின் துன்பத்தை பார்த்து மகிழ்பவன் மனிதன் இல்லையே...!?

நேரம் பத்தை கடந்து விட்டதால் ஜெயேந்திரன் அப்பொழுதே அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றிருக்க..... சுகுணாவும் வேண்டுதலுக்காக பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு கௌதம் உடன் சென்றிருந்தார்.

வீட்டில் மூவர் மட்டுமே இருக்க...
ராகினி தன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே அமர்ந்த அதிதியை பார்த்து முறைத்தாள்... அப்பொழுது சமையலறையிலிருந்து வெளியே வந்த மங்களம்...
ராகினிக்காக உடலுக்கு குளிர்ச்சியான கேப்பை கூழ் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தார். அத்துடன் அதிதிக்கும் ஸ்பெஷலாக காலை உணவு வேலையால் மூலம் வந்தது.

தனக்கு கேப்பை கூழ் அவளுக்கு மட்டும் நாக்குக்கு ருசியாக வகைவகையான உணவா? என்று கடுப்பான ராகினி ...
தன் அருகில் வந்தமர்ந்த பாட்டியின் காதுகளில்.... "பாட்டி நான் கண்டுபிடிச்சிட்டேன்.... நேத்து என் மேல நடந்த அட்டாக்குக்கு காரணம் இந்த அதிதி தான்...."

பேத்தியின் பேச்சில் திருதிருவென்று முழித்த மங்களம்... "எப்படிமா சொல்ற அவ தான் காரணம்னு...??" என்று மங்களம் குசுகுசுவென்று கேட்க....

" நான் புத்திசாலின்னு உங்களுக்கு தெரியாதா பாட்டி?இப்போ உட்காரும்போது கூட அவ என்ன பாத்து நக்கலா சிரிச்சா... அத வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன் பாட்டி... கண்டிப்பா சொல்றேன் அவளால தான் எனக்கு இப்படி ஆச்சு... அவள நா சும்மா விட மாட்டேன் பாட்டி... எனக்கு இப்படி ஆனதுக்கு அவ தான் காரணம்னு ஆதாரம் திரட்டி டாடி மம்மி கிட்ட அவ முகத்திரையை கிழிக்காம விட மாட்டேன் பாட்டி... என் முகத்த எரிய வச்ச அவ மூஞ்சிய பேக்காம விடமாட்டேன்..." என்று மெல்லிய குரலில் சபதம் எடுத்தாள் ராகினி ....

'அய்யோ நேத்து எப்படியோ என் பொண்ணையும் மாப்பிள்ளையும் சமாளிச்சுட்டேன் இவ என்ன இன்னைக்கு இப்படி எல்லாம் சபதம் போடுறா? ஈஸ்வரா...'என்று மனதிற்குள் அலறியபடி....
"மொதல உடம்ப கவனிச்சுக்கோ தங்கம்.... பசியோடு எடுக்கிற முடிவு சரியா இருக்காது.... சாப்டு ஃபர்ஸ்ட் அவள அப்புறம் கவனிச்சிக்கலாம்" என்று பேத்தியை சமாதானப்படுத்திய மங்களம்.... கேப்பை கூழை அவள் புறம் நகர்த்தி வைத்துவிட்டு மதிய உணவிற்கு மெனு கொடுக்க சமையலறைக்கு சென்றார்.

பாட்டியும் பேத்தியும் அவ்வளவு நேரம் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாதது போல் தனது தட்டில் இரண்டு இட்லிகளை போட்டு சர்க்கரையை தொட்டு சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்பி விட்டாள் அதிதி....

மற்ற எந்த பதார்த்தத்தையும் அவள் தொட்டு கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

தனக்குப் பிடிக்காத கேப்பை கூழை முறைத்து முறைத்து பார்த்த ராகினி.... அதிதி சாப்பிட்டுவிட்டு கிளம்பி சென்றவுடன் ....அவளுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பூரியையும் இட்லியையும் எடுத்து ப்ளேட்டில் வைத்துக்கொண்டு கலர்ஃபுல்லாக இருந்த குருமாவை தொட்டு ஆசையாக ஒரு வாய் வைத்தவள்... கர்ண கொடூரமான அதன் சுவையாலும்... அதில் இருந்த காரத்தினாலும் வாயில் வைத்ததை அடுத்த நிமிடமே தூ... தூ... தூ... என்று துப்பிவிட்டு காரம் தணிய நீரை பருகினாள்.

மீண்டும் அவளிடம் தோற்ற தன் மடமையை எண்ணி நொந்துப்போன ராகினி.....
"ஏய் அதிதி எல்லாத்துக்கும் காரணம் நீதான நேத்துக்கும் இன்னைக்கும் சேர்த்து உன்ன பழி வாங்காம விட மாட்டேன் டி" என்று அருந்ததி பட வில்லனை போல் மனதிற்குளே கர்ஜித்தாள் ....

பாவம் இதுவும் அதிதியை பழிவாங்க அவளது பாட்டியின் ஏற்பாடுதான் என்பது அவளுக்கு தெரியாது அல்லவா!!!

அதுவும் அதிதிக்கு வைத்த பொறியில் ஒவ்வொரு முறையும் அவளே வாண்டட் ஆக சென்று சிக்கினால்? ஆகும் சேதாரத்திற்கு அவளா பொறுப்பாக முடியும்? சில்லி கேர்ள்....

அந்த ஐந்தடுக்குமாடி கட்டிடத்தின் முன் சர்ரென்று வழுக்கி வந்து நின்றது கருப்பு நிற ஆடி கார்....

நெடுநெடுவென வளர்ந்திருந்த ஒருவன் தனது கரு நீல நிற கோர்ட்டை சரி செய்தபடியே... காரிலிருந்து இறங்கியவன் அழுத்தமான காலடிகளுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தான்....

அவன் வம்சி கிருஷ்ணா... மும்பை மாநகரத்தில் வளர்ந்துவரும் தொழில் அதிபர்களில் ஒருவன்.... மாநிறம்.... திருத்தமான முகம்.... கூர்மையான கண்கள் ....இதழ்களில் வசீகரமான புன்னகையுடன் வலம் வருபவன் தான் என்றாலும்... கோபம் அதிகமானால் முகம் பாறையாய் இறுகி எதிரில் இருப்பவரை நடுநடுங்க வைக்கும்...

திரண்டிருந்த வலிமையான புஜங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்று எடுத்துக் காட்டியது... 'பணம் இருந்தால் குணம் இருக்காது' என்பார்கள் சிலர் ....ஆனால் நான் அப்படி இல்லை என்று நிரூபித்தவன் அவன்.... ஒழுக்க சீலன்... அன்பானவன் பண்பானவன் அதேசமயம் கண்டிப்பானவனும் கூட.... கோபம் வந்தால் அன்பு பண்பு எல்லாம் பறந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.

வம்சி கிருஷ்ணா தன் தொழில்துறை நண்பன் அசோக் உடன் சேர்த்து வாகனத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தமிழகத்தில் நிறுவ திட்டமிட்டிருந்தான்.
அதன் தொடர்பான மீட்டிங்கிற்காகவே அவன் மும்பையில் இருந்து தமிழகம் வந்தது.

மீட்டிங் ஹாலுக்குள் செல்வதற்கு முன் வம்சியின் மொபைலுக்கு மெசேஜ் ஒன்று வர....
அதைப் பார்த்தவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது....
'சனியனை தூக்கி பனியனில் போட்ட கதையாகி விட்டதே' என்று நொந்தவன்... முடிந்தளவு கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு... பிரசண்டேஷனை முடித்தவன்.... மீட்டிங் முடிந்த அடுத்த நிமிடமே கோபத்துடன் தனது காரை கிளப்பினான்.... அவனின் உள்ளமோ காலையில் நடந்ததை அசை போட்டுக் கொண்டிருந்தது....

காலையில் மீட்டிங்கிற்கு தாமதமாகிவிட்டது என்று வேகவேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் .... மீட்டிங்கிற்கு தேவையான முக்கியமான ஃபைல் ஒன்று பின்சீட்டில் இருந்ததால் அதை எம்பி எடுப்பதற்காக காரின் வேகத்தை குறைத்தான். அப்பொழுது அவனின் காரின் பின்னாலேயே வந்த கார் அவனின் காரை இடித்து தள்ளி ஸ்கிராட்ச் ஆக்கியது.
எரிச்சலுடன் கார் ஓட்டுநரை திட்டுவதற்காக அவன் இறங்க.... காரின் உள்ளே இருந்ததோ ஒரு பெண்...

தாய்குலம் என்பதால் கோபத்தை குறைத்து.... முடிந்த அளவு அமைதியாக அவன் பேச....

காரை ஓட்டி வந்த பெண்ணோ... வேகமாக சென்று கொண்டிருந்தவன் சட்டென்று வேகத்தை குறைத்ததால் தான் தன் கார் இடித்து விட்டதாக கூறி அவனுக்கு மேலேயே எகிறினாள்....

இருவருக்கும் சூடாக வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க... அவர்களின் சண்டையை சுவாரசியமாக பார்ப்பதற்கே அவர்களை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது.

மீட்டிங்கிற்கு நேரமானதால் அவனும் அந்த பெண்ணிடம் தன் காரை ஸ்கிராட்ச் ஆக்கியதற்கு அவளை மன்னித்து விட்டதாக கூறி விட்டு நகர பார்க்க ....அவளோ அவள் ஓட்டி வந்த காரின் முன்பக்க லைட் உடைந்ததை காட்டி பணம் கேட்டு மிரட்டினாள்.

அப்பெண்ணை ஆத்திரமாக பார்த்த வம்சி, "பத்து பைசா தரமாட்டேன்" என்று எகிற... அவளும் "உன்கிட்ட வாங்காம விடமாட்டேன் டா" என்று மரியாதை இல்லாமல் சீற.... அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரியாக பார்த்தவன்.... ஏளனமாக "லோக்கல் பஜாரியா நீ?? யார் கார்லயாவது முட்டி பணம் பறிக்கிறது தான் உன்னோட பொழப்பா.... நான் யாருன்னு தெரியாம என்கிட்ட விளையாடாத.. பின்னால ரொம்ப வருத்தப்படுவ..." என்று முகம் கடுக்க...

அவனைவிட அலட்சியமாக அவனை பார்த்த அப்பெண்... "கோட்டு சட்ட போட்டு டாப்பு டக்கரு கார்ல வந்தா நீ பெரிய அப்பாடக்கரா டா நீ .... கொய்யால...இப்ப எல்லாம் கோட் சட்டை போட்டவங்க தான் டா கோலுமாலு கோபாலா இருக்காங்க... நீ யாரை வேணாலும் ஏமாத்தலாம்... என்னை ஏமாத்த முடியாது ...இப்போ என்னோட கார் டேமேஜ்க்கு பணத்தை எடுத்து வை... அப்றம் நீ தாராளமா போலாம்... இல்லன்னா நீயும் போக முடியாது உன்னோட காரும் போக முடியாது..." என்றாள் திமிராக...

இவ்வளவு லோக்கலாக பேசுபவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் வம்சி பல்லைக் கடிக்க...

எதிரில் நின்றவளோ.... அவன் அணிந்திருந்த கூலிங் கிளாசை பார்த்து இதழ் சுழித்து 'வந்துட்டான் கண்ணாடி போட்ட கம்முனாட்டி... இவனுக்கெல்லாம் கூலிங்கிளாஸ் ஒரு கேடு' என்று சத்தமாகவே முணுமுணுக்க...

சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது வம்சிக்கு...

"ஏய் பஜாரி ஓவரா பண்ற நீ... என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.... பொண்ணுன்னு பாக்குறேன்...." என்று அவனும் தன்னிலை மறந்து கத்த... இருவருக்கும் சண்டை வலுத்தது.

அப்பொழுது அவர்களை கடந்து சென்ற போலீஸ் வாகனம் மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்ததும் திரும்பி வந்து அவர்கள் அருகில் நின்றது....

போலீஸ் வாகனத்தில் இருந்து முதலில் இறங்கிய இன்ஸ்பெக்டர் ராஜ் சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்ணை 'இவளா' என்பதுபோல் அதிர்ந்து போய் பார்க்க ....அவருக்கு அடுத்து இறங்கிய சுகுமாரன் அப்பெண்ணை பார்த்து "எம்மா ரவுடி பேபி... எங்கேயாவது போய் முட்டிக்கிட்டு வம்பு இழுக்கிறது தான் உன் வேலையா?" என்று கேட்க...
பபுள் கம்மை மென்று கொண்டே திரும்பிய அதிதி......
அப்பொழுதுதான் அவர்களை கவனிக்கவே செய்தாள் ....

தொடரும்.....

போன பதிவிற்கு லைக் கமெண்ட்ஸ் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பலப்பல.....

அடுத்த பதிவு ஞாயிறு அல்லது திங்கள் கிழமையில் பதிவிடப்படும்...

Last edited:

Gayara

New member

Super update  waiting for next update....

Gayara

New member

Vamsi than hero va? Sister

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Gayara said:

Super update  waiting for next update....

Click to expand...

Thank you sister

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Gayara said:

Vamsi than hero va? Sister

Click to expand...

Ennakum doubt than sis

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN