என்னடி மாயாவி நீ: 29

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 29

ஆதிகா தன் தாய் வீட்டில் சந்தோசமாக இருந்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து வர்ஷித்தும் நிறைவாக இருந்தான். அடிக்கடி அங்கு சென்று ஆதிகாவை பார்த்து விட்டு வருவான். அங்கு செல்லும்போது ஆயிரம் முறையாவது தன் மாமியாரிடம் ஆதிகாவை பார்த்து கொள்ளும்படி சொல்வான். அவரது நிலையை பார்த்து ஆதிகா சிரித்துக்கொள்வாள் தாய்க்கு தெரியாத என்று.

அங்கு ராகேஷ் கொலை வெறியில் இருந்தான். 'தனியா சிக்க மாற்றானே?' என வர்ஷித் மீது அவனுக்கு கோபம் ஏறி போயிருந்தது. அவனிடமிருந்து சொத்தை வாங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் வர்ஷித்தை கொல்ல முடிவு செய்திருந்தான். இம்முடிவிற்கு ராகேஷின் தந்தையும் உடந்தை. தக்க சமயம் பார்த்து விடாப்பிடியாக காத்திருந்தான். அந்நாளும் அழகாக மலர்ந்தது.

அன்றிரவு, வர்ஷித் அறைக்குள் நுழையும்போது ஆதிகா போன் மூலமாக சிணுங்கி அழைப்பை தெரிவித்தாள். எடுத்தவன், "என்னடி இப்பதானே உன்கூட உங்க வீட்ல உக்காந்து சாப்பிட்டு வந்தேன். பத்து நிமிஷம் கூட இல்லையேடி?" என கூறி மெத்தையில் படுத்துக் கொண்டே கேட்க, "ஆமா மாமா இப்பதானே போன. ஆனால், எனக்கு உன் கிட்ட பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு மாமா. உன் பக்கத்துல இருக்கணும் போல இருக்கு மாமா. கொஞ்ச நேரம் பேசு" என்றவுடன் அவனது சோர்வையும் முடக்கி வைத்து பேசினான்.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வர்ஷித், "ஆதிமா நமக்கு எந்த குழந்தையாக வேணா இருக்கலாம் அதனால் பையன் பிறந்த மனசு கஷ்டப்பட கூடாது. சரியா, கண்டிப்பா பொண்ணு பிறகும் இல்ல பையன் பிறந்தாலும் மனதார ஏத்துக்கணும் சரியாமா" எனக்கூற அதனைக் கேட்ட ஆதிகா, " மாமா எனக்கு நல்லாவே தெரியும் நமக்கு பொண்ணு தான் பிறக்கும். ஏன்னா எங்க வீட்ல ஒரு வழக்கம் இருக்கு. பொண்ணு வீட்ல மாசமா இருந்தா அந்த வீட்டில் குளவிக் கூடு கட்டுமாம். அதுல செங்கமண் கூடு இருந்தால் ஆண்பிள்ள மண் கூடு கட்டினால் அது பெண்பிள்ளை இருக்கும்னு சொல்வாங்க மாமா (இது கிராமப்புறத்தில் சில பேரு நம்புவாங்க இந்த காணிப்பு சில சமயம் உண்மையாகவும் நடந்து இருக்கு) இங்கே மண் கூடு தான் இருக்கு மாமா நீ கேட்டபடி நமக்கு பொண்ணுதான் பிறக்கும் உன் அம்மாதான் எனக்கு பிறப்பாங்க. அதனால, நீ மனசை போட்டு குழப்பிக்காத மாமா" என கூறினாள். இவள் பேசுவதை கேட்டு 'உனக்கு சொன்னா திருப்பி என்கிட்டயே சொல்றியாடி' என நினைத்துக்கொண்டு மனதினுள் 'உன் மனசு போலவே எல்லாம் நடக்கனும்டி' என கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளுடன் பேசும்போது சிவா அவனுக்கு (போலீஸ் நண்பன்) போன் செய்ய ஆதிமாவிடம், "சிவா அழைக்கிறான் நான் உன்னிடம் நாளைக்கு பேசுறேன் நீ எதையும் யோசிக்காமல் தூங்குமா" என கூறி காலை கட் செய்தான். ஆனால், அவளது மனதில் ஏதோ தவறு நடக்கப்போகிறது என உள்மனம் கூறிக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் கடவுள் மீது சுமத்தி விட்டு பாரம் குறைந்த மனதோடு படுத்தாள்.

அங்கு சிவா வர்ஷித்திடம் பேசிக் கொண்டிருந்தான். "மச்சான் பத்திரமா இரு டா ராகேஷ் விடாக்கண்டணா உன்ன துரத்திட்டு வரான். ராகேஷிற்கு எதிரா சாட்சி கிடைச்சா போதும் அதுவுமில்லை" என புலம்பினான். பிறகு சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில் சிவா, "டேய் உனக்கு அந்த மோதிரம் புடிச்சிருக்காடா? " எனக் கேட்டான். அக்கேள்வியில் வர்ஷித் அந்நினைவுக்கு சென்று வந்தான்.

அன்று வளைகாப்பில் இருவர் கையிலும் ஒரே மாதிரியான தங்க மோதிரங்கள் கொடுத்து மோதிரம் மாற்றிக் கொள்ளுமாறு சிவா ஆதிகா வர்ஷித்திடம் கேட்க அவர்களும் மாற்றிக்கொண்டனர். அதைப்பற்றி சிவா கேட்க வர்ஷித்திடம் பதில் இல்லாமல் போனது. அந்நினைவிலிருந்து சிவாவை மீட்டு வந்தான் "என்னடா பதிலே இல்லை "என கேட்க, " இல்ல டா ரொம்ப பொருத்தமா நல்லா இருக்கு அது எப்பவும் நான் கழட்ட மாட்டேன்" என கூறினான் வர்ஷித் தோழமையோடு. வெகுநேரமாக இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரம் நள்ளிரவை தொட்டது. அப்போது ஆதிகாவின் தந்தையிடமிருந்து வர்ஷித்திற்கு அழைப்பு வர சிவாவிடம் இதனை கூறிவிட்டு காலை கட் செய்தான். ஆதிகாவின் தந்தை அழைப்பை ஏற்றவுடன், "மாப்பிள்ளை ஆதிகாவிற்கு வலி வந்துவிட்டது. அதனால நாங்க சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறோம் நீங்க சம்மந்தி ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வாங்க" என அவர் முழுமூச்சாக கூறி முடிக்க கொஞ்சம் பயந்தவன் நேரத்தை கடத்த விரும்பாமல் விரைவாக தந்தை தாயிடம் விடயத்தை கூறி இருவரையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறினான். எல்லாருக்கும் அதிர்ச்சி பயம் எதிர்பார்ப்பு என கலவையான உணர்வுகள் தோன்றியது.

வர்ஷித், ஆதிகா கூறியதையே நினைவுகூர்ந்து அவளின் ஆசைப்படி இந்தநேரத்தில் கூட இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் பயணித்தவன் சுற்றத்தை மறந்து போனான்.

அங்கு வலியில் துடித்தவளை மருத்துவமனையில் சேர்த்தனர் அவளது பெற்றோர். ஆனால் அவளது மனமும் விழியும் வர்ஷித்தையே தேடியது. அவளைப் பரிசோதித்த மருத்துவர் "சுகப் பிரசவம் ஆகும். ஆனால் இன்னும் கொஞ்சம் வலி வரட்டும்" என கூறி விடைபெற்றார்.

வர்ஷித்தும் அவனின் பெற்றோரும் பயணித்த காரோ மருத்துவமனை வழியில்லாமல் வேறு வழியில் சென்றது அவர்கள் அறியாமல். வெகுநேரம் கழித்து , "இன்னுமா மருத்துவமனை வரவில்லை? " என்ற சந்தேகத்துடன் வெளியே பார்த்தவன் இருளால் எவ்விடம் என அறிய முடியாமல் போனது. ஆனால், விளக்கின் ஒளி வழியால் இப்பாதை சரியானது அல்ல எனத் தீர்மானித்தான். அப்போது அவனுக்கு யோசனை வந்தது அவசரத்தால் தங்களின் பாதுகாப்பிற்கும் ஆட்கள் யாரும் வரவில்லை என்பதை அறிந்து நொந்துகொண்டு ஏதோ பொறி தட்ட ஓட்டுநரை பார்த்தான். அவன் சந்தேகப்படி ஓட்டுனரும் மாறியிருக்க, கார் செல்லும்போதே அவனின் சட்டையை பிடித்து, "யாருடா நீ? " என்ன வர்ஷித் உலுக்க வசந்தாவும் சுப்பிரமணியனும் பதறினர். சாதாரணமாக ஓட்டுநர் மூவரின் முகத்திலும் மயக்க மருந்து அரும்பிய துணியை முகத்தில் வைக்க மூவரும் மயக்கம் அடைந்தனர்.

ஆதிகா பெருவலி எடுத்து அம்மா என்று கதறினாள். அப்போதும் அவளது கண்கள் வர்ஷித்தையே தேடியது "வருமாமா வருமாமா" எனப் புலம்ப பெற்றோரும், "அவர் வந்து விடுவார்"என தேற்றினர். அப்போது ஆதிகாவை வேற அறைக்கு மாற்ற சொல்ல, அவளோ, "இல்ல நான் வரமாட்டேன் மாமாவ பாக்கணும். என்னைய கண்டிப்பா மாமா பாக்க வருவாங்க. நான் உள்ள போகமாட்டேன் மாமா மாமா" என பிதற்ற மன வலியும் உடல்வலியும் தாக்க கத்தி மயக்கமானாள். பெற்றோரை தவிர்த்து அவளை மட்டும் உள்ளே கொண்டு சென்றனர் பெற்றோரும் வெளியே பதட்டத்தோடு மகளை சமாதானம் செய்ய முடியவில்லையே என்ற கவலையோடு வெளியே நின்றனர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து நொடிக்கொருமுறை அம்மா அம்மா என்று கத்திக்கொண்டு தன் குழந்தையை வெளி கொண்டுவர முயற்சித்து உடலாலும் மனதாலும் வலி தாங்கினாள்.

அங்கு ராகேஷும் அவனது தந்தையான ராமநாதனும் வர்ஷித், சுப்பிரமணியன், வசந்தாவை நாற்காலியில் உட்கார வைத்து கட்டிப் போட்டிருந்தனர். கொஞ்சம் மயக்கம் தெளிந்து மூவரும் முழித்தனர். இருக்கும் இடத்தையும், தான் இருக்கும் நிலையையும், பார்த்தவுடன் இது கண்டிப்பாக ராகேஷின் வேலை என அறிந்து கொண்டனர். மறுநொடியே வர்ஷித்துக்கு ஆதிகா நினைவில் வர "அவளது விருப்பத்தை தாமே உடைத்து விட்டோம். இந்நேரம் எப்படி இருப்பாளோ?, வலித்திருக்குமே எப்படி தாங்கிக் கொள்வாள்? அய்யோ ஆதிமா ஆதிமா" என்ற பயத்தில் மனதினுள் பிதற்றினான். அங்கு அவனின் பெற்றோருக்குமே இதே நினைப்புதான்.

இதற்குக் காரணமான ராகேஷின் மீது கோபம் கொண்டான் வர்ஷித்.
'விட்டால் அடித்தே கொன்று விடுவான்' என்ற அளவுக்கு ஆத்திரம் தலைக்கேற தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் ராகேஷை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். "என்னடா பிச்சைக்கார பயலே! எந்த தைரியத்தில எனக்கு சேர வேண்டிய சொத்து எல்லாம் நீ ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்க? உன்னையும் அப்பவே விஷ்ணு மாதிரி போட்டு இருக்கணும் உன்னை விட்டு வச்சி தப்பு பண்ணிட்டேன். எல்லாருக்கும்தான் இந்த விஷயம் தெரியும் போலவே" எனக்கூறி தன் சித்தி சித்தப்பா தன்னை முறைப்பதை கண்டவன், "என்ன சித்தப்பா இப்படி பார்க்கிறீங்க" என நல்ல பிள்ளை போல் கூறியவனிடம் "சீ... அப்படி கூப்பிடாதடா உன்னையும் என் புள்ளை மாதிரிதான நினைத்து வளர்த்தேன் உனக்கு இப்படி பண்ண எப்படிடா மனசு வந்துச்சு" என தன் மன ஆதங்கத்தை வசந்தா அவனை வேதனையோடு திட்ட, அவனோ, " உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. என்னோட டார்கெட் இவந்தான், தெரியாம நீங்க வந்து மாட்டிகிட்டீங்க" என வர்ஷித்திடம் திரும்பியவனை கண்டு கடவுளிடம் "இவனை தண்டிக்கவே கூடாதுனு முடிவுல இருக்கியா?" என கடவுளிடம் முற்றுகையிட்டார் வசந்தா.

"கொஞ்ச நேரம் தரேன் அதுக்குள்ள சொத்து எல்லாம் என் பெயருக்கு எழுதிக் கொடுத்துட்டனா உன்ன விட்டறேன். இல்லன்னா உன்ன அடிக்க மாட்டேன் என் கை உன் மேல படாது ஆனா என்னோட துப்பாக்கி உன் உயிரோட விளையாடும் உன்னை மட்டும் இல்ல உங்க மூணு பேரையும் கொன்னுடுவேன்" என கூறி இல்லை இல்லை மிரட்டி சில பாத்திரங்களை அவன் முன் எடுத்துப்போட்டவனை எதிர்த்து வர்ஷித் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக அவனது கண்களில் இருக்கும் கோபமும் ஆத்திரமும் போட்டி போட்டுக்கொண்டு வெளியே வந்தது. இதையெல்லாம் அவ்வறையின் மூளையில் அமர்ந்தவாறு ராகேஷின் தந்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன், "சண்டாளா உனக்கு சொத்து வேணும்னு என்னோட பையனைக் கொன்னுட்ட, இப்போ குடும்பத்தோட கடத்தி வந்து இப்படி பண்றீங்களே அப்பனும் மகனும். உனக்கு என்ன வேணும் சொத்து தான, வர்ஷித் இதுல கையெழுத்துப் போடுப்பா இவன் மூஞ்சுல தூக்கி எறிப்பா. எனக்கு இருக்கிற பெரிய சொத்தே நீ தான். உன்னோட பார்க்கையில் இந்த சொத்தெல்லாம் கால் தூசுக்கு கூட வராது. இனிமேல் எங்களை விட்டுரு, இனிமேலும் உன்னோட அலுப்ப புத்தியினால யாரையும் இழக்க நான் விரும்பவில்லை "என கோபமாக ஆரம்பித்தவர் கெஞ்சலுடன் முடிக்க, "என்ன அப்பா இவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க, இவன் ஒரு மனசாட்சி இல்லாத ஜென்மம். இப்போதைக்கு இவன் ஒரு பணம் மேல் ஆசை கொண்ட மிருகம்" என கூறிய வர்ஷித் தந்தையின் முகத்தை பார்த்தான். அவரின் முகத்தில் வேதனையின் ரேகை ஏகபோகமாக இருக்க, " அப்பா நம்மள காப்பாத்த கடவுள் கண்டிப்பாக யாரையாவது அனுப்பி வைப்பார் கவல படாதீங்க "என கூறியதை கேட்டு ராகேஷ், "என்னடா அப்பனும் மகனும் கதை பேசிக்கிட்டு இருக்கீங்களா. ஒழுங்கா சைன் போடு இல்லனா" என வர்ஷித் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்த அவனது அப்பா, ' கொஞ்சம் பொறு யாரோ கடவுள் அனுப்புவாருனு சொன்னாங்களே அவுங்க யாரென்று பார்த்துட்டு இவங்கள கொல்லலாம். கொஞ்சம் டைம் கொடுப்போம்" என கேலியாய் சொல்ல அதனை மதித்து கேட்டான் ராகேஷ். வர்ஷித் தனது மனையாளை நினைத்து மனதினுள் கதறினான்.

அங்கு மருத்துவமனையில், "அம்மாமா மாமாமாமா " என அந்த கட்டிடமே அதிரும் படி கத்தி தனது கருவில் பூத்த உயிர் பூவை இப்பூலோகத்திற்கு தனது கணவனின் ஆசைபடி கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியிலும் இத்தருணத்தை ரசிக்கவேண்டியவானோ அருகில் இல்லையே என்ற கவலையிலும், "மாமா மலர்மா" என முனங்கிய படியே மயக்க நிலைக்குச் சென்றாள் ஆதிகா.

"அம்மா" என்ன சத்தம் கேட்ட மறு நொடியே ஒரு மொழியில்லா அழுகுரல் "வீல்" என தன்னால் தன் தாய் கஷ்டப்பட்டு விட்டாளே என கவலையோ அல்ல இது வரை தாயின் உயிரிலும் சூட்டிலும் வாழ்ந்துவிட்டு புதிதாய் புதுமுகம், புது சூழல் என காணாததை கண்ட பயமோ தெரியவில்லை அப்பிஞ்சு உயிர் தாயிற்கு ஈடாக அழுதது.

இதைக்கேட்டு ஆதிகாவின் பெற்றோருக்கு கோடி மகிழ்ச்சி. செவிலியர் குழந்தையை
வெளியே கொண்டுவர, தனது பேர பிள்ளையை வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தாலும் வர்ஷித் இன்னும் வரவில்லையே என்ற கவலை கொண்டனர்.ஆதிகாவின் தந்தையும், வர்ஷித் சுப்பிரமணியனுக்கு அழைப்பை ஏற்படுத்த இருவருக்குமே ரீச் ஆகவில்லை.

அரை மணி நேர அளவில் ஆதிகா கண்ணை விழித்தாள். கண்விழித்ததும் அவள் எதிரில் தன் அம்மாவும் அப்பாவும் அவர்களின் கையில் தான் பெற்ற செல்வமும் இருக்க, தெரியுமே அவர்கள் தான் இருப்பார்கள் என்று ஆனால் தன் கண்ணும் மனமும் தேடுவது வர்ஷித்தின் அருகாமையை தானே.
'நான் சொன்ன நேரத்தில் என்னுடன் இல்லாமல் போய் விட்டானே? எவ்வளவு பொன்னான நேரமிது என்னுடன் இருக்காமல் எங்கிருக்கிறான்?" என கேள்வியோடு கண்ணீரும் எழுந்தது. ஒரு முறை அவனது காட்சி கிடைக்காதா என ஏங்கினாள். ஆதிகாவின் தாய் "இங்கே பாருடி என்ன குழந்தை தெரியுமா? " எனக் கூறும் போது இடைமறித்து தன் குழந்தை ஆணா? பெண்ணா? யார் சாயல்? மலர் அத்தை சாயலா? என பார்க்கும் ஆர்வமும், அப்பிஞ்சு பூவின் இதழ் கொண்டு சுவைக்க வேண்டிய தாய்ப்பாலும் மார்பில் ஊறி தந்த வலியும் மீறி அவள் "யாரும் வேணாம் மாமா தான் வேணும், அவர்கையால்தான் முதலில் குழந்தை வாங்குவேன், அவர் வாயால் தான் என்ன குழந்தை என கேட்பேன் என அவரிடம் வாக்கு கொடுத்திருக்கேன் அதை மீற மாட்டேன்" என பிடிவாதம் பிடித்தவளை அவளின் தாய் கடிந்துகொள்ள அவளது தந்தையே இருவரையும் சமாதானம் செய்து வர்ஷித்திற்கு கால் செய்ய அதில் ஒரு பயனும் இல்லை. அவளும் மனதளர்வு இல்லாமல் தைரியமாகவும், "அவன் வரும் வரை காத்திருப்பேன் அவன்னில்லா இவ்வுலகமே வேண்டாம்" என கல் போல அமர்ந்திருந்தவளின் மூளை ஏதோ சட்டென கூற தனது மொபைலை கேட்டு வாங்கி அதில் ஒரு நம்பரை டயல் செய்தாள். மறுமுனை அழைப்பை ஏற்றதும், "சிவா அண்ணா" என கூப்பிட்டு "அண்ணா அண்ணா "என்று அழைக்க அடுத்த வார்த்தை வரமறுக்க, "அங்கு என்ன? வர்ஷித் ஆதிகாவிற்கு வலி என கூறினான். இப்போது இவள் அழுகிறாள் என்ன ஆனது என குழம்பி என்னம்மா ஆனது என சிவா பரிவோடு கேட்க அவளோ, "அண்ணா அவர் இன்னும் இங்க வரல உங்க கிட்ட தான் பேசுறேன்னு என் கிட்ட சொல்லி கால் கட் பண்ணாரு அதான் உங்ககிட்ட கேட்டேன்" எனக் கேட்க, "ஆமாமா, என்னிடம் பேசும்போது தான் உனக்கு வலினு சொன்னான். இன்னும் அங்க வரலையா? நாங்க கடைசியா ராகேஷ் பத்தி பேசினோம் " என கூற அந்த ராகேஷ் எனும் பெயரைக் கேட்டவள் மனதை விட்டு போன் கீழே நழுவ, மயங்கி பெட்டில் சரிந்தாள்.
அங்கு சிவா, " ஹலோ ஹலோ" என கத்த அவளது தந்தையை ஆதிகாவை ஒரு கையால் தாங்கி மறுகையால் போனை எடுத்து நடந்ததை கூறி, "ஆதிகா இப்போ மயக்கத்திலிருந்து தெளிய வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர் கூறியதையும் கூறி" தயவுசெய்து வர்ஷித்தை தேடி அழைத்து வரச்சொல்லி சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து சிவா வர்ஷித்தையும் அவனது பெற்றோரையும் அழைத்து வந்தான். அவர்கள் கண்ட கோலம் அனைவரையும் உலுக்கியது. அங்கு காற்றுப் போல் பாய்ந்து வந்தவன் அங்கு யார் இருக்கிறார்கள்? குழந்தை எங்கே? என எவற்றையும் கண்டுகொள்ளாமல் நேராக ஆதிகாவிடம் சென்று அவள் அருகில் அவள் கையை பிடித்து கண்ணில் ஒத்திக்கொண்டு "ஆதிமா ஆதிமா" சொல்லியவாறே அழ ஆரம்பித்தான் வர்ஷித்.

"அழாதீங்க மாப்பிள்ளைப் பேசுங்க" ஆதிகாவின் பெற்றோர் கூறினர். வர்ஷித்தின் பெற்றோர் பேர பிள்ளையை பார்த்த ஆனந்தமும் மருமகளை கண்டு வருத்தமும் கொண்டனர். மனமுடைந்து பேச ஆரம்பித்தான், "ஆதிமா நீ வேணும்டி. நான் வராதது தப்புதான். அதற்கு மன்னிச்சிருடி இல்லன்னா கோபம் போற வரை என்ன எவ்ளோ வேணாலும் அடி. ஆனால், இப்படி பயமுறுத்தாதடி . ப்ளீஸ் நீ கண்ண திறடி, என்ன பாரு உன்னோட வருமாமா வந்து இருக்கேன் பாரு "என அவளது தலையையும் முகத்தையும் தடவினான். அதனை பார்க்கவே அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. எல்லோரது கண்ணிலும் நீர் துளி வந்தது. "ஏதோ பிடிவாதம் பிடிச்சியாமே நான் வந்தா தான் குழந்தையை பார்ப்பேன்னு. இப்ப நான் சொல்றேன் நீ என்ன கண்ண தொறந்து பாத்தாதான் நானும் குழந்தையை பார்ப்பேன். நானும் பிடிவாதமா இருப்பேன். நீ என்னை ஏமாத்திட்ட ஆதிமா நான் எத்தனை தடவை உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லி இருப்பேன் பதிலுக்கு நீ சொன்னதே இல்ல சீக்கிரமா என்கிட்ட வந்து சொல்லுடி என் ஆதிமால என் செல்லம்ல கண்ண திறடி "என கண்ணிலிருந்து விழும் நீரை பொருட்படுத்தாமல் புலம்பியவனின் கையிலிருந்த அவளது கையில் லேசாக அசைவு தெரிந்தது அவளது காதல் கக்கும் கண்ணிலும் நீர்த்துளி பூத்தது. முன்ன இருந்ததை விட பாதி உடம்பாக, குழந்தையை பெற்று சோர்ந்து பச்சை உடம்பு காரியாக இருந்தவள் கண்விழித்ததும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான் வர்ஷித். அவனை விலக்கி, " மாமா மாமா உனக்கு... ஏதும்.... இல்லையே.." என வார்த்தைகள் கோர்க்க முடியாமல் திணறி அவனது முகம் தலை உடம்பு என எங்கும் தடவி பார்த்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள் ஆதிகா. அப்போது அவளது கையில் அவனது இடது புஜத்தில் காயம் ஒன்று அகப்பட்டது. அதனை பார்த்து வர்ஷித்திடம் தீர்க்கமான பார்வையுடன், " என்ன இது? எப்படி ஆனது? "என கேட்டவளிடம், 'ஏதும் மறைக்காமல் பதில் கூறு 'என விடயம் இருக்க வர்ஷித் அங்கு, முதலிலிருந்து நேரம் கொடுத்தவரை சொல்லி முடிக்க, சிவா தொடர்ந்தான் "அன்னைக்கு உங்க கிட்ட கொடுத்த ரெண்டு மோதிரத்திலும் நான் ஜிபிஎஸ் செட் பண்ணியிருந்தேன். அதை வச்சுதான் நீங்க சொன்ன பிறகு வர்ஷித் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சேன். அங்க என் டீம்மோட போனேன். அப்போ..." என சிவாவும் வர்ஷித்தும் அந்நினைவிற்கே சென்று சொல்ல ஆரம்பித்தனர் இருவரும்.

அங்கு ராகேஷ் அவனது தந்தை வர்ஷித்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் சென்றது. கோபத்தில் இருவரையும் தரக்குறைவாக பேச ஆரம்பித்தான் வர்ஷித் அவனது கட்டுப்பாட்டினை மீறி. அதனைக் கேட்ட ராகேஷ் கோபத்தில் சீறி துப்பாக்கியை எடுத்து வர்ஷித்தை நோக்கி குறி வைத்து துப்பாக்கியை அழுத்தினான். தோட்டாவும் சரியாக நியாயம் பக்கம் நின்று தன் வேலையான உயிரைப் பறித்தது.

அந்நேரம் வர்ஷித் தன்னை நோக்கி வரும் தோட்டாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையை எண்ணி வருந்தி நாற்காலியோடும் கட்டப்பட்ட கைகால் கட்டோடும் குப்புற விழுந்தான்.

அவனை நோக்கிய தோட்டா வர்ஷித் விழவும் நேராக ராகேஷின் அப்பாவான ராமநாதனின் தலையை பிளந்து உயிரை பறித்தது.

ஆம். சற்று நேரம் முன் ஏதோ முக்கியமான கால், டவர் இல்லை என வெளியே சென்றவர் அப்போதே உள்ளே வர, எமனும் அவர் பின்னாலேயே வந்தான் போல உயிரை கவ்விக் கொண்டு சென்றுவிட்டான். இதனை கவனிக்காமல் ராகேஷ் துப்பாக்கி கொண்டு தந்தை உயிரை அறியாமலே பறித்துவிட்டான்.

ஒரு நொடி நிதானித்த ராகேஷ் துடிதுடித்து ரத்தம் பீறிட்டு சாகும் தன் தந்தையைப் பார்த்த பிறகும் கீழே விழுந்த வர்ஷித்தையும் பார்த்தே நடந்ததை யூகித்தவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

தனது அப்பா, உயிர், குரு, உலகம் என எல்லாமே அவனுக்கு அவர்தானே அவரின் இழப்பு என் கையாலேவா என தன் நிலையை எண்ணி வேதனை கொண்டு முதன்முறையாக ஒரு உயிரின் மதிப்பு அறிந்து மரணித்து நின்றான். சுப்பிரமணியன் வசந்தா வர்ஷித், "அப்பனுக்கும் மகனுக்கும் நல்ல கூலி ஆண்டவன் கொடுத்து விட்டான்" என எண்ணினர். வர்ஷித் கீழே விழுந்து பேலன்ஸ் இல்லாமல் அந்த நாற்காலி சேர்ந்து புரண்டதால்தான் அவனுக்கு கையில் அடிபட்டது.

ராகேஷ் துப்பாக்கி அழுத்தும்போது வர்ஷித் இருக்கும் இடமறிந்து சிவா வந்து அங்கு நடந்ததை நேராகப் பார்த்தான். இதற்குமேல் சாட்சியாக வர்ஷித்தின் கைகடிகாரத்தில் அவன் அறியாமலேயே சிவா வைத்திருந்த கேமரா மூலமாக ராகேஷ்தான் விஷ்ணுவை கொன்றதாக கூறிய வாக்கு மூலமும், ராகேஷ் தனது அப்பாவை கொன்ற காட்சியும் இடம் பெற்றிருந்த இத்தனை நாள் போலீஸ்க்கு தண்ணீர் காட்டிய ராகேஷை பிடித்துவிட்டான். அவனும் உயிரற்ற ஜடமாக , 'என்னை என்ன வேணா செய்து கொள்ளுங்கள் 'என அமைதியா மாட்டி கொண்டான்.

இவை அனைத்தையும் கூறிய சிவாவிடம் வர்ஷித், "இன்னும் என் உடம்புல எனக்கு தெரியாம என்னடா வச்சிருக்கே? " என்று கேட்க அவன் "ஹிஹி அவ்ளோதான் மச்சான் கோச்சிக்காத மச்சான் எல்லாம் உங்க உங்க பாதுகாப்புக்கு தாண்டா" எனக்கூறி இருவரிடமிருந்து மோதிரமும் வர்ஷித்திடமிருந்து வாட்சையும் வாங்கிக்கொண்டான். பதிலுக்கு இரு மோதிரம் கொடுத்து மாத்திக்க சொன்னான். "என்னடா நடமாடும் நகைக்கடை போல" என கிண்டலடித்து வர்ஷித் அதனை வாங்கி ஆதிகா கையில் மாட்ட திரும்பும்போது ஆதிகா கோபமாக பார்த்தாள். அவளது கை தன்னவனின் காயத்தை வருடியது. அவனை முறைத்தவள், " டேய் இப்பவாவுது என்னோட குழந்தைய காட்டுடா" என கூறினாள். அவனுக்கும் சட்டென நியாபகம் வர தன் உயிரில் மலர்ந்த ரோஜா குவியலென பஞ்சு பொதிந்த வெண்மேகமென, நட்சத்திரம் போல் மின்னும் கண்களும், கூர் நாசியும், கள்ள கபடமற்ற பொக்கை வாய் சிரிப்பு என இருந்த தன் பெண் குழந்தை அதுவும் வர்ஷித்தின் தாயாரின் முக ஜாடை அப்படியே உறித்து வைத்து தன் மனைவியின் ஆசை பிடிவாதபடி என்னை பார்க்கவே மறு பிறவி எடுத்து வந்திருக்கும் மலர்மாவை கையால் பிடித்தா நோகுமோ என மென்மையாய் முதன்முறை கையில் ஏந்தினான். அத்தனை மகிழ்ச்சி அவனுக்குள்.
மகள் தனக்கு தந்தை ஸ்தானம் கொடுத்ததால் ஏற்பட்ட கர்வத்தோடு கண்ணீர் ஆனந்தக் பெரு வெள்ளம் சேர்ந்து கொண்டது வர்ஷித்திற்கு.

பெற்றோரிடமிருந்து குழந்தையை வாங்கி ஆதிகாவிடம் போக, அங்கு அவளோ வர்ஷித்தின் முகத்தையே ஆர்வமாய் நோக்கினாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டு, "உன் ஆசைப்படி என்னைப்பார்க்க மலர்மாவே வந்துட்டாங்க டி" என்று கூறி அவளிடம் குழந்தையை நீட்டியவனின் விரலையும் சேர்த்து பிடித்துக் கொண்டே தாயிடம் சரணடைந்துக்கொண்டாள் இருவரின் ஆசை தேவதை.

அவள் கண்ணிலும் ஆனந்த ஊற்று. விவரிக்க முடியாத ஒன்று, பத்து மாதம் இருவரும் கற்பனையாக அவளது வயிற்றோடு உறவாடிய உறவு இப்போது தங்கள் கையில் தங்களின் ஆசைப்படி. ஆதிகா வர்ஷித் இருவரும் பேசவே இல்லை.
ஆனந்தம், நிம்மதி, நிறைவு என எல்லா உணர்வுகளும் ஒன்றாகியது. எல்லாரும் இருவருக்கும் தனிமை வழங்கி நிம்மதியாக வெளியே செல்ல, கிளம்பிய வர்ஷித்தை மகள் விடவே இல்லை. ஆதிகாவும் வர்ஷித் இருப்பதை கண்டு குழந்தைக்கு பால் புகட்ட நாணம் கொள்ள, "என்கிட்ட என்னடி இன்னும் வெட்கம் உனக்கு "என அவன் சீண்ட அவள் சிவந்து குனிந்த தலை நிமிராமல் பால் புகட்டினாள்.

தனது மகளின் மென்மையான இதழ் மார்பை கவ்வ அவளது பெண்மையும் தாய்மையும் சிலிர்த்து அடங்கியது ஆதிகாவிற்கு. வர்ஷித்தும் தன் மகள் விரலுக்குள் அடங்கி எங்கே குழந்தைக்கு வலிக்குமோ என தாய் மகளின் அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டான். பால் புகட்டி முடித்து அவள் நிமிர்ந்தவுடன் அவள் கரத்தை பிடித்து மோதிரம் மாற்றி விட அவளும் வெட்கத்தோடு அவன் செய்ததை செய்தாள். வர்ஷித் ஒரு கையால் குழந்தையை ஏந்தி மறு கையால் அவளை அணைக்க, தன் மார்பினுள் ஒன்றியவளிடம், "பயந்திட்டியாடி? "என கேட்டான் வர்ஷித். அவள் பதிலேதும் சொல்லாமல் கண்ணீர் வடிக்க, அவளது முகத்தை ஏந்தினான். இருவரது விழிகளும் கலக்க, "நான் எப்போதும் உன்ன ஏமாத்த மாட்டேன் மாமா ஐ லவ் யூ வரு மாமா" என அவன் பல நாள் கேட்ட வாக்கியத்தை கூறி அவனது இதழில் தன் இதழை பொருத்தி கொண்டாள். வர்ஷித் பெண்ணவளின் எல்லையற்ற காதலிலும் முரட்டு முத்தத்திலும் திக்கு முக்கு ஆடினான். அவளது செய்கை எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை விட்டு பிரிந்து போக உன்னை விட மாட்டேன் என சொல்லாமல் சொல்லியது.
 

Author: yuvanika
Article Title: என்னடி மாயாவி நீ: 29
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN