'வெளடாதே மச்சி ,அம்மா அப்பாவை சமாளிக்க எதாச்சும் ஐடியா குடுப்பா'.நமக்கு இந்த கல்யாணம் கச்சேரிலாம் செட் ஆவாது நைனா" அஞ்சலி சோகமாய் சொல்ல,
'ஹஹஹ என்ன அஞ்சலி என்ன கிண்டல் பண்றியா?."
நானே அப்படி ஒரு சூழ்நிலைல மாட்டிக்கிட்டுத்தான் எப்படி தப்பிகிறதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்"
"சரி நம்ம ஐடியா மணி அஞ்சலிராணிக்கிட்ட ஐடியா கேக்க வந்தா,இங்க மொதலுக்கே மோசம் வந்த மாதிரி ல இருக்கு."அவனும் சோகத்தில் கன்னத்தில் கை வைக்க,
"ஏன் மச்சி,உனக்கும் வீட்ல பொண்ணு பார்த்திட்டாங்களா?
அதுல தப்பிக்கதான் தொரை இங்கன ஓடி வந்திங்களா?"இப்பொழுது அஞ்சலி கலாய்க்கும் மோட்க்கு மாற,
"உனக்கே தெரியும் நான் ஒரே ஆண்பிள்ளை,என் தங்கச்சி அனுமாலினி கல்யாணத்திற்கு அப்பா ஸ்தானதில் நான் நிக்கணும்,இது என் அப்பாவோட இறுதி ஆசை.அவளுக்கும் என் உயிர் தோழன் உதய்க்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க."
"என் கல்யாணம் நடந்தாதான் அவங்க கல்யாணம் நடக்கும் என்ற நிலை வந்திருச்சு.இதான் சாக்குன்னு எங்க அம்மா அவங்க அண்ணன் மகள் மதியை கட்டிக்கோனு ஒத்த கால்ல நிக்குறாங்க.
"நான் என்ன பண்ண சொல்லு'.ஒரே மூச்சில் பேசி முடித்தவனை நிதானமாய் பார்த்தாள் அஞ்சலி.
'ஏன் யுகேன் மதியை உனக்கு பிடிக்கலையா?'
'ப்ச்சு,அப்படி இல்ல அஞ்சலி,உறவுகுள்ள திருமணம் வருங்கால சந்ததிய பாதிக்குமே.அப்புறம் அவ கொஞ்சம் ரீத்தா மாதிரி இருப்பாள்.போதாதா என் வாழ்க்கை நாசம் ஆவறதுக்கு'.எரிச்சல் மண்டியது யுகேனின் பேச்சில்.
"ஐய்யோ பிட்டி மை பேபி ,இதுக்கு என்னதான் வழி இருக்கேனு சொல்லுடா'.எனக்கும் கல்யாணம் காதல் பிடிக்கலையே யுகேன்,இன்னொரு வாழ்க்கையும் ஏத்துக்க மனசும் இல்லையே."அஞ்சலியின் குரல் கம்மிற்று
'ஹேய் அஞ்சலி ரிலாக்ஸ் .நான் ஒன்னு சொல்றேன்,பிடிச்சிருந்தா மட்டும் ஒகே சொல்லு,பிடிக்காட்டி செருப்ப எல்லாம் கலட்டிராத'.
அவனுடய பீடிகை வார்த்தைகள் அஞ்சலியின் புருவத்தை உயர்த்தவைத்தன.
'சொல்லு மச்சி "
'உனக்கும் எனக்கும் கல்யாணம் அலர்ஜிக் ஆச்சு,பேசாம நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவோம்.என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது.நாம நம்ம நட்ப இந்த பந்ததில் தொடரலாம்.இதனால யார் வாழ்க்கையும் பாதிக்காது.எனக்கும் மதிய கட்டிக்கிற அவஸ்தை வேண்டாம். நீயும் யாரோ ஒருவருனுக்கு வடிச்சு கொட்டவும் வேண்டாம். எப்படி என் ஐடியா?'.யுகேந்திரன் சொல்ல அஞ்சலியின் அல்லி முகம் மலர்ந்தது.
'கேக்க சினிமாத்தனம் மாதிரி இருந்தாலும், இது மட்டும்தான் நாம தப்பிக்க ஒரே வழி யுகேன்,எனக்கு சம்மதம்.உனக்கு ஓகே வா? அஞ்சலி கேக்க,
'எனக்கு ஏன் இப்படி தோணுச்சினா,என் ப்ரண்ட் உதய் உன்னோட நான் சுத்தரது பார்த்துதான்,அவன் கல்யாணத்திற்கு ஒகே சொல்லியிருக்கான்.நீ என் ப்ரண்ட்னு அந்த லூசுக்கு தெரியாதே . நம்ம மேட்டரு ஐயாவே வீட்டுல சொல்லிர்வாரு.
என்ன என் அம்மாவ கொஞ்சம் தாஜா பண்ணனும்,அப்புறம் என் பாட்டியாம்மாவை கொஞ்சம் கவனிக்கணும் .
அத நான் பார்த்துகிறேன்'. நம்பிக்கையாய் பேசியவனை நோக்கி மெல்லிதாய் புன்னகையித்தாள்.
'எங்க வீட்டுல எப்படி இத நான் சொல்லுறது யுகேன்'?
'அத நான் பார்த்துகிறேன்,உன் மாமா காதுல விஷயம்போற மாதிரி செய்யறது என் வேலை பெண்ணே."நீ அப்போ அப்போ கொஞ்சம் வெட்கபடற மாதிரி நடிச்சா போதும். நீயா போய் சொன்னா மாட்டிக்குவே, உனக்கு என் அளவுக்கு சாமர்த்தியம் வாராது டா" யுகேன் முடிக்க அஞ்சலி பொய்க் கோவம் காட்டினாள்.
இவர்களுடைய கணக்கு இறைவன் எழுதியது என்று தெறியாமல் ,
இரு நெஞ்சங்களும் பொய்யான ஒரு பொம்மை கல்யாணதிற்க்கு மெய்யாக ஒத்திகை பார்த்தன.அந்த சந்திப்பிற்கு பின் யுகேன் அஞ்சலி வீட்டிற்கு வருவது அதிகமாகியது.
அவளுடைய மாமா மனதிலும் இவன் அஞ்சலிக்கு ஏற்றவன் என பதியும்படி செய்தும் விட்டான்.அஞ்சலி அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான் என்பது போலவே வளைய வந்தாள். பின் ஒரு நாள் தான் அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள போவதாய் ,அவளை பெற்றவர்களிடம் அனுமதி கேட்டான்.
இதற்காகவே காத்திருந்தது போல் அவர்கள் சம்மதமும் எளிதில் கிடைத்து விட,தன் அம்மாவை சமாளிக்க நண்பனின் உதவியை நாடினான் யுகேன்.
'டே மச்சான் எப்டியாச்சும் நீதான் பேசி சம்மதம் வாங்கணும், கால வாரிடாதேடா" கெஞ்சிய யுகேந்திரனை பார்த்து உதய் முறுவலித்தான்.
"சரி சரி என்னால முடிந்ததை கண்டிப்பா செய்கிறேன் மச்சான். நீ மட்டும் என் கல்யாணத்தை கொஞ்சம் சீக்கிரமா நடக்கிற மாதிரி எதாச்சும் ஸ்டெப் எடுத்தா நல்லாயிருக்கும்',அசடு வழியும் அன்பு நண்பனை பார்த்து அட்டகாசமாய் சிரித்த யுகேன்,
'அதுக்கு இந்த ஐயாவுக்கு கல்யாணம் ஆகணும் ராசா.எதுவா இருந்தாலும் பார்த்து செய் மவனே',
குறும்பில் வம்பு செய்ய இவனுக்கு நாமே வாய்ப்பு தந்தோமே என நொந்து கொண்ட உதய்,
'சரி சரி உன் கல்யாணம் நடந்ததாய் நெனைச்சிக்கோடா'
என்று வாக்கு தந்த உதய் தன் வருங்கால மாமியாரை எப்படி சரிக்கட்டுவது என யோசித்தான்.