❤️உயிர் 6❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எப்படியோ ஒரு சந்திப்பில் இந்த விசயத்தை உதய் போட்டு உடைத்தான்.
கண்களில் சினம் பொங்க வந்த கமலாம்பாள்,

'என்ன உதய் நடக்குது?உன் நண்பனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது?கிளியாட்டம் என் அண்ணன் மக மதி இருக்க,யாருடா இது அஞ்சலினு புதுசா எவளயோ இழுத்துட்டு வர்ற பாக்குறான் இவன்?'

ஆத்திரத்தில் பொருமிய கமலத்தை பார்க்கவே உதய்க்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. எதை சொல்லி சமாளிக்கிறதுனு தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த உதய்,யுகேன் எங்க போய் தொலைந்தான் என மனசுக்குள் அவனுக்கும் அர்ச்சனைசெய்தான்.

"ஆண்டி வந்து வந்து…... ...வார்த்தைகளை மென்று கொண்டிருந்த உதயின் பார்வைக்கு யுகேன் கிடைத்தான்.அப்பாடா,வந்தான் உயிர் காக்கும் தோழன்' என மன நிம்மதியில் யுகேனை நோக்கி கை காட்டினான்.

'இதோ உங்க மகன் வந்திட்டான். எதுனாலும் அவனையே கேளுங்கள்"
என சொல்லி விட்டு ,விட்டா போதும் வீடு போய் சேர்வோம் என்று உதய் எஸ்கேப் ஆகிவிட்டான்.

'என்ன அம்மா?என்ன கேக்கணும் எங்கிட்ட?' ஆண்மையின் ஆளுமை உயர்ந்த ஆனால் நாகரிக தொனியில் ஒலித்தது யுகேனின் குரலே.

'டேய் உன் மனசுல என்னதான் நெனைச்சிட்டு இருக்க?சொந்தமா முடிவு பண்ற அளவுக்கு அந்த அஞ்சலி மோகம் உனக்கு தலைக்கு ஏறிகிச்சா யுகேன்?'அவன் அம்மா கூச்சலிட, இதை அவன் எதிர்பார்த்ததுதான்.

'அம்மா என்னால எப்பவும் மதிய கட்டிக்கமுடியாது,உறவுல கல்யாணம் வருங்கால சந்ததிக்கு சரி வராதுமா!.

"எனக்கு அஞ்சலிய ரொம்ப புடிச்சிருக்கு,ரீட்டா தந்த காயத்தை இவ மாத்திட்டா.
உங்களுக்கு பிடிக்காட்டி நான் எப்பவும் கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன்.
அப்புறம் அனு கல்யாணத்தை நீங்களே நடத்திருங்க'.

கொஞ்சம் கறார் தொனியில் யுகேன் கூறியதை கேட்டு கமலம் வாயடைத்து போனார்.தன் ஆசையில் மண் விழுந்த கடுப்பு அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

யுகேனின் பிடிவாதம் அவருக்கு நன்கு தெரியும்.விட்டு கொடுக்கத் தெரிந்தவன் சமயத்தில் பிடிவாதம் பிடித்தால் யாரும் வாய் திறக்க முடியாது.
கமலதிற்கு அனுவின் முகம் நிழலாடியது.உதய் மீது பைத்தியமாகி இருக்கும் மகளின் வாழ்வு யுகேனின் பிடிவாதத்தில் கருகி போவதை அவர் விரும்பவில்லை.

'எதையோ செஞ்சுக்கோடா,ஆனா கல்யாணத்திற்கு நான் வருவேனு
எதிர்ப்பார்க்காதே!.என் மக வாழ்வு எனக்கு முக்கியம்.மதிமொழிய தவிர யாரையும் நான் மருமகளா எப்பவும் ஏத்துக்கவே மாட்டேன்" உறுதியாய் ஒலித்தது கமலத்தின் குரல்.

இதுவே ஆசிர்வாதம் என விரைவில் திருமணம் முடிக்க அஞ்சலியின் மாமாவை நாடினான்.அம்மாவின் முடிவை கூறாது அவர் வர இயலாமைக்கு உடல் நிலையை காரணம் காட்டி எளிமையாய் திருமணம் நடத்த கூறினான்.

அஞ்சலியிடம் மட்டும் நடந்ததை கூறி இயல்பாய் இருக்குமாறு பணிந்தான்.
எளிமையான திருமணம் என்றாலும் வேண்டியவர்கள் நண்பர்கள் சூழ அஞ்சலி யுகேந்திரன் திருமணம் நிறைவேறியது.

பொம்மை கல்யாணம் போல் இருவருக்கும் தோன்றினாலும் , நட்புடன் பழகியதால் இருவருமே இயல்பாய் பார்ப்பவர் முன் வலம் வந்தனர்.
கமலம் வராதது மனதிற்க்கு குறையாய் பட்டாலும் மகளுக்கு நல்வாழ்வு கிடைத்த சந்தோசம் பூரணி முகத்திலும் தெரிந்தது.

திருமணம் முடிந்தவுடன் வியாபாரம் நிமித்தம் வெளி நாடு செல்லும் நிர்பந்தத்தினால் யுகேந்திரன் வீட்டிற்கு மணமக்கள் இருவரும் புறப்பட்டனர்.
கோலாலம்பூரில் ஆடம்பர பங்களா அவனுடையது என்றதுமே அஞ்சலிக்கு தலை சுற்றியது.

'மச்சி நீங்க இவ்வளவு பெரிய பணக்காரர்னு எனக்கு தெரியாதே,எங்கிட்ட சொல்ல கூட இல்லையே."உங்க அம்மா ஏன் அப்படி கோவப்பட்டாங்கனு எனக்கு இப்போதான் விளங்குது'! குற்ற உணர்ச்சியில் அஞ்சலியின் குரல் கம்மிற்று.

'நான் ஏதோ உங்கள வலைச்சுப்போட்டதா அவங்க நினைச்சுக்குவாங்களா?", சிறுபிள்ளைப் போல் கேட்டவளை குளிர்ந்த பார்வையால் நோக்கினான் யுகேன்.அப்படிதானே கமலம் நினைத்தது.

'ஹேய் ரிலாக்க்ஸ் அஞ்சலி ,நான் இவ்வளவு பெரிய பணக்காரன்னு தெரிஞ்சிருந்தா இயல்பாய் எங்கிட்ட பழகியிருக்கமாட்ட, "பணத்தை மட்டுமே குறியா வெச்சு எங்கிட்ட வழிகிற பெண்களை பார்த்து பார்த்து பெண்களை பற்றி உன்ன பார்க்கிற வரைக்கும் என் எண்ணமே வேற,
பட் நாம சந்திச்ச முதல் நாளே எரிமலையாய் சீறிய உன்ன எனக்கு புதுசா பார்க்கிற மாதிரி இருந்துச்சு."

"என் வாழ்க்கையில் வித்தியாசமாய் வந்தவள் நீ.எங்க என் பின்புலன் தெரிஞ்சு நீ எங்கூட இயல்பாய் பழக மாட்டியோனு ஒரு பயத்தில் மறைச்சுட்டேன் ஏஞ்சல்".

"பணம் வசதிகள் எதுவுமே நான் அதிகம் விரும்பியது இல்லை மச்சி,

"அப்பாவோட தொழில விருத்திப்பண்ணேன்,தவிர இது என் அப்பா கட்டிய பங்களா."என்னுடைய சுய உழைப்பில் வாங்கிய சின்ன வீடு கேமரன் மலையில் இருக்கே.கண்டிப்பா ஒரு நாள் உன்னை கூட்டிட்டுப் போறேன்.'

அவனுடைய ஏஞ்சலில் மனம் உருகியவள்,மனதில் அந்த வீட்டில் எது நடந்தாலும் அவர்கள் மனம் கோணாது நடக்க வேண்டும் என உறுதி பூண்டாள்.
தனக்காக தன் சொந்தங்களை பகைத்துக் கொண்டு நிற்பவனின் நிம்மதிக்காக எதையும் செய்யலாம் என்றே அஞ்சலி முடிவு பண்ணிவிட்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN