❤️உயிர் 10❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவன் மட்டும் அவளுக்கு சளைத்தவனா என்ன? அவள் பின்னாலே ஓடி வந்து ஒட்டிக் கொண்டான். மேஜர் திவாகர் அவனை முறைத்து பார்க்க,

"கூல் அங்கிள், அஞ்சலி சீரியஸா எடுத்துக்க மாட்டா. இப்போ போய் உள்ளே பாருங்க, ஆண்டி சுட்ட பஜ்ஜிய காலி பண்ணிட்டுயிருப்பா" யுகேன் அப்படி சொல்லவும், நம்பமாட்டாமல் அவரும் கிச்சனை எட்டிப்பார்க்க, அஞ்சலி கிச்சன் மேடையில் அமர்ந்து, பஜ்ஜியை விழுங்கிக்கொண்டிருந்தாள்.

"அடிப்பாவி மவளே, இதுக்கா அந்த ஆர்ப்பாட்டம் பண்ணின? " அங்கிள் அசந்து போக, யுகேன் எதுவும் நடவாதது போல அஞ்சலியுடன் சேர்ந்துக் கொள்ள, அங்கிள் நிலைதான் பரிதாபம் ஆயிற்று.டீ டைம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் தான் அஞ்சலி தன் நிஜ ரூபத்தை காட்டினாள்.

"மவனே உனக்கு தெரியும் தானே, தவளை னா எனக்கு எவ்ளோ பயம்? அத கொண்டு வந்து போடறல? உன்னை இன்னிக்கு விடறாதா இல்லடி மச்சி!" வீட்டை சுத்தி சுத்தி அவனை துரத்தி ரெண்டு அடி அடிச்ச அப்புறம்தான் அஞ்சலி அமைதியானாள். இப்படி அவளை சீண்டி திரிவதில் அவனுக்கு அவ்வளவு குஷி.

அவளும் தான் அவன் இரசனைகளுக்கு ஈடு தருவது போல எதாவது செய்வாள்.
திடிரென்று ஜாக்கிங் போக அழைப்பாள்,ரிங்க்லட் அருவியில் கால் நனைக்க போகலாம் என்பாள்.அவளுடைய மாறுப்பட்ட இரசனைகள் யுகேனுக்குள் இரசாயன மாற்றங்களை தந்தது.
மனதளவில் அவளை உயிருக்குள் வைத்து உருகவும் செய்தான்.அவள் மனம் அறியா நிலையில் அஞ்சலியின் மாசற்ற அன்பு அவன் ஆண்மையை அவ்வபொழுது சீண்டவே செய்தது.

அவளை அவன் சுதந்திரப் பறவைப் போல் உலவ விட்டான்.வெளியில் சென்றால் மட்டும் sms இல்லனா கால் செய்ய சொல்வான்.காலமும் நேரமும் யாருக்கு காத்திருக்கும்?காதலிக்கும் கணவனும் இவள் கடைக்கண் பார்வைக்கு காத்து நின்றான்.சதி செய்த விதி,யுகேனின் மறைத்த காதலை அஞ்சலிக்கு உணர்த்தவும் செய்தது.அடை மழை கொட்டி கும்மாளம் அடித்த இரவு அது.மணி எட்டு ஆகியும் வீடு திரும்பாத கணவனுக்காக அஞ்சலி காத்திருந்தாள்.
மேகம் இருட்டும் அறிகுறி தெரிந்தும் விரைவில் முருகன் ஆலயம் சென்று திரும்பியும் இருந்தாள்.

இடை அணைத்த வெள்ளை நிற ஸ்பான் சில்க் அணிந்து இடை வரை நீண்டிருந்த தலைமுடியை தளர பின்னியிருந்தாள்.மழைத் தூறல் கண்டவள் ஆவல் மிகுதியில் மொட்டை மாடியில் மெலிதாய் கசியும் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தாள். சொட்டு சொட்டாய் மழை நீர் அவள் மேனி நனைக்க, உடலோடு ஒட்டிக் கொண்ட சேலை சேர்ந்து நனைய.எதுவும் உணரா நிலையில் கண் மூடி அந்த நிலை சுகத்தை அனுபவித்திருந்தாள்.

மழை வேளை தனிமையில் தன்னை காணது தவிப்பாள் என்ற எண்ணத்தில் விரைந்து வீட்டிற்கு வந்த யுகேன் வாசலில் அஞ்சலியை காணாது திகைத்தான்.மழை நேரம் எங்கே போனாள் என அவன் மனம் பதைபதைத்தது.எதற்கும் மாடியில் தேடி பார்க்கலாம் என்று வந்தவன் கட்டுண்டது போல் நின்றான்.

தேவதை போல் மழையில் உலகம் மறந்து நின்றவளை வாரி அணைத்து கொள்ள ஆசை வந்தது.அப்படி அவளை அவன் பார்த்ததும் இல்லை.மெல்ல அவளை நோக்கி நகர்ந்தவன்.அவள் கரம் பற்றினான்.மெல்லிடையை மறு கரம் வளைக்க லாவகமாய் அவளை சுற்றினான்.
யுகேனுக்கு ஆட வரும் என்பதே அஞ்சலிக்கு தெரியாதே.கண் திறந்தவள் அவன் அணைப்பில் தான் இருப்பதையும் உணர்ந்தாள்.நேர்த்தியான அசைவுகளுடன் அவள் கண்களை தன் கண்களால் சிறை செய்தவாறே ஆடினான்.

அஞ்சலிக்கு பேச்சு வரவில்லை.அவள் அணுவுகுள் உறைந்திருந்த கலையுணர்வு மேலெழுந்தது.
காந்தம் போன்ற அவன் கண்களை காண முடியாது வெட்கத்தில் கூசினாள்.
அவளை விலக விடாமல் 'மஞ்சள் நிலா மஞ்சள் நிலா நெஞ்சுக்குள் தஞ்சம் ஆனதே 'பாடலுக்கு அவனுக்கு ஏற்றாப் போல் அசையும் தன் உடலையும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.
இருவரும் விரும்பி கேக்கும் பாடல் இது.

அஞ்சலி மழை தூறும் நேரம் கேட்க மட்டும் மெல்லிசை காலெக்ஷன் வைத்திருப்பாள்.
அதுதான் அங்கே ஓடி கொண்டிருந்தது. அவன் அணிந்திருந்த வெள்ளை நிற ஸ்ர்ட் உடலோடு ஒட்டிக் கொண்டு அவனுடைய விரிந்த மார்பைக் காட்டியது.நாசியில் அவன் ஆண்மைக் கலந்த செண்டின் வாசம் துளைத்தது.இப்படி இருவரும் இருந்தது இல்லையே.தாபம் தாங்காமல் அஞ்சலியை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

கன்னக் குழி சிரிக்கும் அவள் கதுப்பு கன்னத்தை முத்த மழையில் நனைத்தான்.
அவன் இரும்புப் பிடியில் அஞ்சலி விலக முடியாமல் தவித்தாள்.குளிர்க் காற்றும் அவளுக்கு கொதித்தது.சிங்கத்தின் பிடியில் சிக்கிய புள்ளி மான் போல் திணறினாள்.

"யுகேன் ப்ளீஸ் விடுங்க'' அஞ்சலி கதறினாள்.
அதை கேட்கும் நிலையில் அவன் இல்லை.பலம் கொண்ட மட்டும் அவனை பிடித்து தள்ளி விட்டு கீழே ஓடினாள்.ஓடி சென்று தன் அறையை சாத்திக்கொண்டாள்.அவளை பின் தொடர்ந்த யுகேனும் தான் செய்து விட்ட பிழையை எண்ணி நொந்தான்.

நொடியில் மிருகமாகிவிட்ட தன்னை நினைத்து அவனுக்கே அவன் மேல் ஆத்திரம் வந்தது.கதவை தட்டி தட்டி ஓய்ந்து விட்டான்.அஞ்சலி சமைத்திருந்ததும் இருவரும் சாப்பிட வில்லை.மிருகமாய் மாறியது யுகேனா என்று சந்தேகமே அஞ்சலி மனதில் வலுத்தது.
அழுது அழுது மனம் ஓய்ந்து விட்டது.ஈரப்புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே உறங்கியும் போனாள்.மறு நாள் அஞ்சலிக்கு நல்ல காய்ச்சல்.தலை பாரம் தாங்க முடியாமல் அரற்றினாள்.

மெல்ல எழுந்து குளித்து உடை மாற்றியவள் ஈரத்தலையை துவட்டக்கூட தெம்பில்லாமல் மெத்தை மேல் அமர்ந்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN