❤️உயிர் 11❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மழை விடாமல் தூறிக்கொண்டிருந்தது.அதை இரசிக்கும் மன நிலையில் அவள் இல்லையே.மணி பத்தாகியும் வெளி வராத அஞ்சலியை தேடிக் கொண்டு யுகேன் அவள் அறைக்கு வந்தான்.நல்ல வேளை நேற்றுப் போல் அவள் அறைக்கதவை சாத்தி வைத்திருக்கவில்லை.

விடுமுறை நாள் என்பதால் யுகேனும் வீட்டில் இருந்தான்.நேற்றைய சம்பவம் நிகழாதிருந்திருந்தால் லீவுக்கு இருவரும் வீட்டை இரண்டுபடுத்தியிருப்பார்கள்.
சிஸ்டத்தில் எதாவது பாடலைக் கேட்டுக் கொண்டு இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

கிண்டலும்கேலியுமாய் யுகேன் அவளை சிரிக்க வைப்பான்.தவளையைக் கண்டால் அலறிக் கொண்டு ஓடும் அஞ்சலியை வேண்டும்மென்றே அதை பிடித்துக்காட்டி பயமுறுத்துவான்.அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லையே.
அவசரத்தில் அவன் தேடும் பொருட்களை ஒளித்து வைத்து விளையாடுவாள்.

மாலையில் இருவரும் மலைப்பாதையில் நடக்க, இல்லை அருகில் இருக்கும் தேனீர் விடுதியில் சுடச்சுட தேனீர் குடித்து விட்டு இயற்கையை இரசிப்பார்கள்.
இயந்திரமாய் இருந்தவனை இயல்பாய் மாற்றியவளை அவன் உயிர் நுரைக்க நேசித்தான்.

அவளின் குழந்தைத்தனம்,கள்ளமில்லா சிரிப்பும் யுகேனுக்கு அவள் ஏஞ்சலே தான்.ஆனால் இன்று நடந்தது வேறு அல்லவா?அஞ்சலி அருகில் அமர்ந்தவன் ,

"என்ன மன்னிச்சிரும்மா.நா அப்படி நடந்திருக்ககூடாது..எது என்னை மிருகம் ஆக்கிச்சுனு தெரியல" இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துகிறேன்",
வருத்தம் அவன் குரலில் வெளிப்பட்டது.

அவள் அசையாதிருக்கவே,மெல்ல அவளைத் தொட்டுப் பார்த்தான்.உடல் அனலாய்கொதித்தது.
எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.விரைந்து அவள் தலை துவட்டியவன்,மருத்துவரை செல்லில் அழைத்தான்.

''கேமரன் மலை குளிருக்கு மழையில் யாராச்சும் ஆடுவார்களா மிஸ்டர் யுகேன்?மருந்து கொடுத்திருக்கேன்..பார்த்து கொள்ளுங்கள்''
திட்டிய டாக்டருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு அஞ்சலி அருகில் அமர்ந்தான்.அஞ்சலி மருந்து உண்ட மயக்கத்தில் கண் மூடிப்படுத்திருந்தாள்.
காய்ச்சலின் வேகம் குறைய தலைக்கு ஈரத்துணியில் ஒத்தடம் கொடுத்தான்.

அவனுடைய பொக்கிஷம் அல்லவா அவள்.அன்று முழுவதும் அவள் அருகிலேயே தவம் கிடந்தான்.நடு இரவில் குளிர்த்தாங்காமல் வெடவெடத்த அஞ்சலியின் அரவம் கேட்டு விழித்தவன்.அவள் பக்கத்திலே படுத்துக்கொண்டான்.
நெஞ்சோடு அவளை அணைத்துக் கொண்டு அவள் தலை வருடியவாறே உறங்கினான்.அஞ்சலியும் அரற்றல் இன்றி அவன் நெஞ்சில் குழந்தைப்போல் உறங்கினாள்.

விடியும் வேளை அவளைப் பிரிய மனமில்லாது எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான்.இனியும் இவள் இல்லா ஒரு வாழ்க்கை தனக்கு நரகம் என்பதையும் உணர்ந்தான்.

ரீட்டா மேல் வந்தது வயது மோகம் என்பதும் அந்த முப்பது வயது ஆண்மகனுக்கு அப்பொழுது விளங்கியது.அதே சமயம் தங்கள் திருமணத்தின் நோக்கமும் அவனுக்கு நினைவில் வந்தது. தன்னை போல தன் கண்மணியும் தன்னிலை உணர்வாளா? இல்லை தூய நட்பிணை மட்டுமே யாசித்தவளுக்கு, தன் காதல் மேலும் ஒரு காயத்தை தந்து விடுமோ என பலவாறு யோசித்தான்.

அன்று அவளை அள்ளி அணைத்தது கூட அன்பின் மிகுதியில் தானே?
தன்னை போன்ற இரசனையுடையவள், பணம் பகட்டு எதற்கும் மயங்காதவள். இறைவன் அளித்த வரம் போல அல்லவா அஞ்சலி அவன் வாழ்வில் வந்தவள். எதற்காகவும் அவளை அவனால் இழக்க முடியாதுதான்.
எப்பொழுது இந்த சின்ன பொண்ணு மேல காதல் வயப்பட்டோம்னு யுகேன் யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் விடை தான் கிடைக்க வில்லை.
எப்படியும் அஞ்சலியின் மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.
மெல்ல மெல்ல அவளை நெருங்குவதே சிறந்தது என்றும் அவனுக்கும் சரியெனப்பட்டது.

அஞ்சலிக்கு நடந்தது எதுவும் தெரியாது.இறுகிய பாறைப் போல் அவள் மனம் இருந்தது.யுகேனை தேடவும் இல்லை.அவனுக்காய் ஸ்பெசலாய் கலக்கும் காபி மேலும் வெறுப்பு தட்டியது.

இஸ்டம் இருந்தால் சாப்பிடுவாள்.இல்லையேல் மேஜர் அங்கிள் வீட்டுக்கு போய் வருவாள். துள்ளல் அடங்கிய புள்ளிமானாய் மாறிப்போனாள்.முடிந்த வரை யுகேனை பார்ப்பதை தவிர்த்தாள்.

யுகேனுக்கும் அவள் நிலை கஸ்டமாய் இருந்தது.அவள் சிரிப்பொலி கேட்காத அந்த வீடு அவனுக்கு நரகம் போல இருந்தது. சதா மச்சி மச்சி என்று தன்னை சுற்றி வருபவளை தன் அவசரத்தினால் தொலைத்து விட்டதை எண்ணி பெரிதும் வருந்தினான்.

தன் காதல் அவஸ்த்தையை டாக்டர் குணாவிடம் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம்பகிர்ந்துக் கொண்டான்.
"டேய் குணா, நா மிருகம் மாதிரி அவள் கிட்ட நடந்துகிட்டேன் இல்ல?
"என்னை நம்பி வந்தவளை, என் பேமிலிதான் சரியா நடத்தலனா, நானும்மா அப்படி நடந்துகிறது? கல்யாணம் என்ற பெயரில் பிரண்ட்ஸ் அ இருக்லாம்னு சொல்லி இப்போ நானே அந்த நம்பிக்கை உடைச்சிட்டேனே "

"அவள் கூட பேசமா என் பொழுது நகர மாட்டேன்ங்கிது. அவள் போடற காபி அ மிஸ் பண்றேன். அவளோட சிரிப்பை மிஸ் பண்றேன். சண்டைகள், கிண்டல் எல்லாமே மிஸ் பண்றேண்டா"

"அஞ்சலி என்னை புரிஞ்சிக்குவாளா குணா? " காதலும் பரிதவிப்பும் கலந்த குரலில் யுகேன் கேட்க,

"டேய் மச்சான் ,பொண்ணுங்க உன் பார்வைக்கு தவம் கிடக்குறாங்க,நீ என்னா னா உன் ஏஞ்சல்ல வழிக்கு கொண்டு வர முடியாம தவிக்குற''

''கொடுமைடா சாமி, நான் டாக்டரா இல்ல லவ் கண்சால்ட்டண்னா?" குணா அலுத்துக் கொள்ள,

"சாரி மச்சான்.இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லைனு உனக்கே தெரியுமே எதாச்சும் ஐடியா குடுடா''யுகேன் பரிதாபமாய் கேட்க, குணாவிற்கு சிரிப்பு வந்தது.

"சரி மச்சான்,சிஸ்டர அவங்க போக்கில் விடு..கொஞ்சம் கொஞ்சமா அவங்கள நாம மாத்திடலாம்.நீ திரும்ப வால்லாட்டாம இருந்தா சரி"

"நீ பண்ணி வெச்ச வேலைக்கு நான் அ இருந்திருந்தால்,தலைல கல்லு போட்டு கொன்னுடுவேன். '
"அந்த பொண்ணு அத பெருசு படுத்தாம இன்னும் உன் வீட்லதான் இருக்கு. அதுக்கு சந்தோசப்பட்டுக்க மாப்ள " யுகேன் முறைக்க, குணா அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN