'ஹெய் ஏஞ்சல் டூ யு மிஸ் மீ' பனித் தென்றலாய் அவள் செவியில் மோதியது அவன் குரல்.கன்னக்குழி சுழிய ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.மெழுகுவர்த்தி ஒளியில் மழையில் நனைந்ததின் அடையாளமாய் அவன் சுருள் கேசத்தில் இடம் பிடித்திருந்த மழை துளிகளை கைகளினால் தட்டி விட்டாள்.

"இந்த சாங் உங்களுக்கு பிடிக்குமா?''

"ம்ம்..மழைக்கு இப்படி காண்டல்ஸ் கொழுத்தி வெச்சுட்டு இந்த தியூன் வாசிக்க பிடிக்கும்.

"இன்னிக்கு அதே மாதிரி நிலையில் இருந்ததா அய்யாவோட அறை,அதான் கைகள் தானாய் வாசிக்க ஆரம்பிச்சிருச்சு அஞ்சு"அவள் கைகளை பிடித்தவாறே பேசினான்.

''ஐ லைக் இட் யுகேன்,ரொம்பவும் அழகாய் வாசிக்கிறிங்க'' அஞ்சலி உணர்ந்து கூறினாள்.

"தாங்கஸ் அஞ்சு,ஒரு ஆர்வத்துல கத்துக்கிட்டது,நேரம் இருந்தா கண்டிப்பா வாசிப்பேன்"

"பட்,இங்க நான் வந்து நீங்க வாசிச்சதே இல்லையே,ஏன்?''அஞ்சலி கேட்க,

"வாசிப்பேன் அஞ்சலி,மிட் நைட்ல தூக்கம் வராட்டி வாசிப்பேன்,உனக்கு தொந்தரவா இருக்க கூடாதுனு கதவை சாத்தி வெச்சிடுவேன்"

''ப்ச்சு..எனக்கு பியானே இசை கிரேசி யுகேன்..நல்லா அனுபவிச்சு கேப்பேனே,

இனிமே வாசிச்சா கதவை திறந்து வைங்க,நான் கேட்டுக்கிட்டே தூங்கிடுவேன்"

சற்றே கண் மூடி சிரித்தவன்,

"ஹெய்,எவ்வளவு நேரம் நான் இப்படி நனஞ்ச கோழியாய் நிக்கறது?காய்ச்சல் வந்தா நீ பாக்க கூட மாட்டே,கிட்ட வந்தாலே சிணுங்குவே,"

"அந்த டவல்ல எடு..நான் போய் குளிச்சிட்டு வரேன்''எப்பொழுதும் போல் அவளை சீண்ட ஆரம்பித்தான்.

செல்லமாய் அவனை முறைத்தவள் அந்த நீல நிற டவலை அவன் மேல் வீசினாள்.

"மவனே வாய் நீளுதே..சாப்பிட கீழே வாங்க அங்க வெச்சிக்கிறேன்''

''இடுப்பில கூட தூக்கி வெச்சுக்கோ..யார் வேணா சொன்னா? அப்படியே இந்த மழையில் நனையும் மஞ்சள் நிலா காட்டி சோறு கூட ஊட்டி விடலாம்,தப்பே இல்லை''

அவன் குறும்புகள் ஆரம்பிக்கவே, இன்னும் இங்கிருந்தால் இவன் சேட்டைகள் தாங்காது என அஞ்சலி நழுவி ஓடினாள்.

மழைக்கு சுடசுட பூரியும் உருளை மசாலையும்,தக்காளி சூப்பும் செய்திருந்தாள்.தொட்டுக் கொள்ள ஸார்டின் சம்பலும் கூடுதலாக சமைத்திருந்தாள்.யுகேனுக்கு சீ ·பூட் வகைகள்

ஒத்துக்கொள்ளாது.கைகளில் பெரிய பெரிய கொப்புளங்கள் கிளம்பி வீங்கி விடும்.அலர்ஜிக் மருந்து எடுத்தால் மட்டுமே ஓரளவுக்கு கட்டுப்படும்.

இது அஞ்சலிக்கு தெரியாது.மேசையில் உணவுகளை பார்த்ததும் நீண்ட நாட்களாய் ருசித்திராத சார்டின் சம்பல் யுகேனின் பசியை கிளப்பி விட்டது.ஐந்து பூரிகளையும் சார்டின் சம்பலுடன் சாப்பிட்டான்.அஞ்சலி சமைத்ததை வேண்டாம் என சொல்ல அவன் மனசும் இடம் தரவில்லை.மறு நாள் காலையில்,சார்டின் சம்பலின் வேலை அவன் கைகளில் தெரிந்தது.

இரண்டு கைகளும் கன்றிப் போய் இருந்தன.காலையில் படுக்கையை விட்டு எழாத கணவனைத் தேடிக்கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.

"ஐயோ,இது என்ன யுகேன்,கை ஏன் இப்படிவீங்கிருச்சு?நைட் என்ன பண்ணிங்க?அஞ்சலி பதறினாள்.

''இது அலர்ஜிக் அஞ்சு,ரிலாக்ஸ்டா,எனக்கு சீ பூட் ஒத்துக்காது.கைகள் இப்படி வீங்கிடும்.உன் சார்டின் சம்பல் பூரிக்கு செம்மையா இருந்துச்சா அதான் நல்லா சாப்பிட்டேன்,இப்போ கை வீங்கிடுச்சு" வலி ரேகைகள் முகத்தில் தெரியா வண்ணம் சிரித்தான்.

"எங்கிட்ட சொல்லியிருக்கலாமே,பாருங்க எப்படி வீங்கிப் போச்சுனு ,வலிக்குமே யுகேன்''வருத்தமாய் ஒலித்தது அவள் குரல்.

"மருந்து எதுவும் இருக்கா யுகேன்?''

"ம்ம் அந்த அலமாரில இருக்கும்மா''·பூட் அலர்ஜிக் மருந்தும் கொப்புளங்களில் தடவும் களிம்பும் அஞ்சலி கண்களுக்கு தென்பட்டன.அவன் கைகளை தன் மடி மீது வைத்து களிம்பினை மெல்ல தடவினாள்.மயிலிறகு வருடியது போல் சுகம் யுகேனுக்குள் உண்டானது.

அன்றைய அவன் தேவைகள் எல்லாம் அஞ்சலியே செய்தாள்.முடி அடர்ந்த அவன் வெற்று மார்பை பார்த்திராத அஞ்சலிக்கு மனதுக்குள் எதோ செய்தது.

அவனோ அவளை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

"சோ இன்னிக்கு ஐயாக்கு லீவு,என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா ,

நல்லதா சமைச்சுக் கொடுப்பேன்,இல்லாட்டி வெறும் கஞ்சிதான்"அந்த நிலையிலும் அவனை சீண்டினாள்

"ஐயோ வேண்டாம் அஞ்சலி..நான் உன் வம்புக்கே வரல, இது பெறாத என் பிள்ளை மேல் சத்தியம்'' அப்பாவி போல் சொன்னான்.

குழந்தை என்றதும் குங்குமமாய் சிவந்த அஞ்சலியின் முகம் இவன் வசம் இளகிடுமோ மனம் என்று விரைந்து கிச்சனில் அடைந்துக் கொண்டாள்.குறும்பாய் இதழோடு ஒட்டிய புன்னகையுடன் அஞ்சலி ஓடிய வழி அவன் பார்வையும் ஓடியது.

சிஸ்டத்தில் மெலிதாய் கசிந்த அவளுடைய விருப்ப பாடல்களை அவனும் இரசித்தான். இருவருக்கும் ஒரே இரசனை என்பதால் என்னவோ அஞ்சலியின் மெல்லிசை பாடல்களில் அவனும் இலயிக்க ஆரம்பித்தான்.

யுகேன் கிச்சனுக்குள் வரமாட்டான் என்ற எண்ணத்தில் அஞ்சலி இலகுவாய் சமைக்க ஆரம்பித்தாள்.அவன் இல்லாத பொழுது எதாவது ஒரு பாடலை சிஸ்டத்தில் ஒலிக்க விட்டு அதை ரசித்தவாறு சமைப்பது அவளுக்கு பிடிக்கும்.

அள்ளி முடிந்த கூந்தலில் சிலது இழைகளாய் காதோரம் தொங்கின.மெல்ல பாடலை ஹம்மிங் செய்தவாரே சமைக்கும் மனைவியை சீண்டாமல் யுகேந்திரனால் அதிக நேரம் நல்ல பிள்ளையாய் இருக்க முடியவில்லை.

"பாவி மகளே ஏண்டி என்ன இப்படி கொல்ற?"இறுக்க அவளை தன் அணைப்பிற்குள் வைத்து காதோரம் இழையோடும் அவள் கூந்தலை வருட ஆசை கொண்ட மனதையும் வீங்கி சிவந்திருந்த கைகளையும் ஆற்றாமையோடு பார்த்தான்.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.