"நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா அஞ்சலி? ரொம்ப நேரமா தனியா சமைச்சிட்டு இருக்கியே "

மெலிதாய் காதோடு மோதிய கணவனின் குரலில் அஞ்சலி திடுக்கிட்டுப் போனாள்.

அப்பொழுதான் அவன் அங்கு இருப்பதையே அஞ்சலி உணர்ந்தாள்.

"அட மவனே இப்படித்தான் ஷாக் கொடுக்கறதா?, பயந்துட்டேன் போங்க "

"ஹ்ம்ம்ம்ம்,நான் மட்டும் ஹால்ல எவ்வளவு நேரம் உக்காந்திட்டு இருக்க முடியும் ?போர் அடிக்குது அஞ்சலி "

"அதான் அம்மையாருக்கு சேவகம் பண்ணலாம்னு கிச்சனுக்கு ஓடோடி வந்தேன்" என கூறியவாறு கிச்சன் மேடையில் இலாவகமாய் ஏறி அமர்ந்தவனை அஞ்சலி போலியாய் முறைத்தாள்.

"எப்படி இந்த வீங்கிப் போனா கைகளை வெச்சுகிட்டா உதவி பண்ணுவீங்க ? "

" இதுல யாரோ பெறாத பிள்ளை மேல் எல்லாம் சத்தியம் பண்ணாங்க மொத,

"இப்போ அம்போனு காத்துல பறக்க விட்டுட்டாங்க"அஞ்சலி யுகேனை கிண்டலடிக்க ஆரம்பித்தாள்.

அசடு வழியும் யுகேனின் முகத்தை பார்த்ததும் அஞ்சலி கல கல வென சிரித்தாள்.

சற்றே கலைந்திருந்த அவன் தலை முடியை கைகளால் கோதி சரி செய்தவள்,அவன் குடிப்பதற்கு பழ ரசமும் தந்தாள்.

"அய்யா ஒன்னும் செய்ய வேண்டாம், பேசாம இருந்தாலே போதும் " சொல்லிக் கொண்டே

மெல்ல அவன் வாயருகே பழ ரச குவளையை இலாவகமாய் வைத்து அவனை குடிக்க செய்தாள்.

அவனோ கைகளால் செய்ய முடியாத சில்மிஷத்தை கண்களால் செய்து கொண்டிருந்தான். அவன் பார்வையின் வீச்சம் தாங்க முடியாத அஞ்சலி,பொய்யாய் கோபம் கொண்டவள் போல்

''இப்படியே இந்த முட்டை கண்களை உருட்டிட்டே இருடி மவனே,ஒரு நாள் நோண்டி எடுத்தர்ரேன்"

"அம்மா தாயே,இதான் நம்ம ப்ளஸ் பாய்ண்ட்.அதுல கைய வெச்சுடாதே,அப்புறம் கண்ணு களுவ முடியாது" கேலிக்கையும் கிண்டலுமாய் சமையலை ஒருவாறு முடித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அஞ்சலியுடன் கலாய்க்க உதவிய சார்டின் சம்பலுக்கு தன் நன்றிகளை மானசீகமாய் யுகேன் உரிதாக்கினான்.மதிய உணவிற்கு பருப்பு சாம்பார்,புதினா துவையல்,அப்பளம் தொட்டுக்க ஊறுகாய் என அவனுக்கு பிடித்த விதத்தில் சமைத்திருந்தாள்.

அழகாய் பிசைந்து அவனுக்கு ஊட்டி விடவும் செய்தாள்.

தாய் போல் தன்னை சிறு குழந்தையாக்கி அஞ்சலி ஊட்டிய விதம் யுகேந்திரனை உருக்கியது.

அவன் அன்னை அவனுக்கு பாசமாய் சோறு ஊட்டியதாய் அவனுக்கு நினைவு இல்லை.வளர்ந்தது தெரிந்தது எல்லாமே சீத்தம்மாவிடம் தானே. சிறு பிள்ளை போல் அப்படியே அவள் மடியில் கண் உறங்கினால் என்ன என்று கூட தோன்றியது அவனுக்கு.

ஒப்பந்தத்தில் உயிரூட்டிய உறவு இது ,காதல் இல்லை, நட்பே பிரதானம் என இருவருமே நம்பி கல்யாணம் செய்து கொண்ட வேளையில், இவளுக்கும் தன்னைப் போல் எப்பொழுது இப்படி இருக்க தோன்றுமோ? இல்லை தோன்றாமலே போய் விடுமோ? ஏக்கமாய் இருந்தது அவனுக்கு.

அவளை அணு அணுவாய் தான் காதலிப்பதை உணர்ந்தவன், அதை அவளுக்கு உணர்த்தவும் விரும்பினான். எடுத்து கூறினால் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற தயக்கம் வேறு அவனிடத்தில். பொறியில் அகப்பட்ட எலி போல் ஆனது அவன் நிலை.

கடந்து விட்ட வலிகளை சிறு சுவடு கூட இல்லாமல் போக செய்ய வேண்டியது அவன் கடமை என்பதையும் உணர்ந்தான்.தன்னிலையை நினைத்தால் அவனுக்கே சிரிப்பு வந்தது.

அப்போ பாந்தாவா சொன்னது, இப்போ இப்படி தலைகுப்புற அஞ்சலியிடம் விழுந்ததை நினைத்தால், அவன் மைண்ட் வாய்ஸ் கேட்கவே அவனுக்கு ஒரு மாதிரி வெட்கமாய் இருந்தது.

விரைவில் அஞ்சலி யுகேனை உணரும் வேளையும் வந்தது.குணாவுடைய பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அவன் அழைத்ததின் பேரில் இருவரும் கோலாலம்பூர் செல்ல வேண்டியிருந்தது.தன் வாழ்வை புரட்டிப் போட போகும் நிகழ்வுகள் அங்கே நடக்க விருப்பதையும் அறியாத அஞ்சலி மிகவும் சந்தோசமாக பயண ஏற்பாடுகளை கவனித்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு K. ள் பயணம். அஞ்சலி மனம் குதூகலித்தது.

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.