ரொம்பவும் ஆடம்பரமில்லாது குணாவின் பங்களாவிலே அந்த இனிய வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவிற்கு உரிய நேரத்தில் தம்பதி சமேதரராய் இருவரும் ஆஜர் ஆனார்கள். குணாவை போன்றே அவன் மனைவி பூவிழி குணசேகரனும் நல்ல தோழியாய் தெரிந்தாள்.
எளிய அலங்காரத்தில் அழகு சிலையாய் ஆழ்ந்த பெர்கண்டியில் வெள்ளி காக்ரா வேலைபாடுகளுடைய ஷிப்பான் சாரியில் மிளிர்ந்த அஞ்சலியை அவளுக்கும்பிடித்துப்போயிற்று.
கேமரன் மலை வாசம் அஞ்சலியின் மஞ்சள் மேனியை மேலும் மெருகேற்றியிருந்தது.
இயற்கையாய் அவள் புன்னகைக்கும் பொழுது சுழியும் கன்னக்குழியும் பூவிழியை கட்டிப் போட்டது.
"எங்கள் ரோமியோ இந்த கன்னக்குழியில்தான் விழுந்தாரோ அஞ்சலி?"
யுகேனை பூவிழி வம்பிழுக்க ஆரம்பித்தாள்.
ஆம் என்பது போல் தலையசைத்தவனை பார்க்கவே அஞ்சலிக்கு வெட்கமாய் இருந்தது.
விருந்தினர்கள் வர ஆரம்பிக்கவும் அஞ்சலி பூவிழிக்கு துணையாய் நின்றாள். பழகிய சில மணிகளிலே இயல்பாய் தன் தங்கைப் போல் ஒட்டிக் கொண்ட அஞ்சலியை பூவிழியும் பிரியவில்லை.
அஞ்சலியும் யுகேனும் அவர்களுக்கு துணையாய் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றனர்.
வந்திருந்த பலர் யுகேந்திரன் குணாவின் நட்பு வட்டாரம் என்பதால் அஞ்சலியும் இயல்பாய் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள்.அவன் ஏதோ சொல்ல அவள் சிரிப்பதும், முகம் சிவப்பதும் உறுத்தியது ஒரே ஒரு கண்களுக்கு மட்டும்தான்.
ஆம்,ரீட்டாவும் விழாவிற்கு வந்திருந்தாள்.பூவிழியின் உறவு என்ற முறையில் விழாவிற்கு வந்தவள்,யுகேனை கண்டிப்பாக இங்கே சந்திக்கலாம் என்று திட்டமும் வைத்திருந்தாள்.
பணமும் பகட்டுமே வாழ்க்கை என்றே வாழ்ந்தவள்,யுகேனின் காதலை பணக்கண்களால் அளந்தவள்,வாழ்க்கையில் பல அடிகளையும் வாங்கத் தவற வில்லை.பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அமெரிக்கா இந்தியனை மணந்து அவனால் கஷ்டப்பட்டு மணவிலக்கோடு மீண்டும் மலேசியாவிற்கு வந்தாள்.
யுகேனின் திருமண வாழ்க்கையை ஓரளவு பூவிழி வாயிலாகத் தெரிந்துக்கொண்டவள்,
மீண்டும் அவனுடன் இணை சேரவே விரும்பினாள்.விழாவில் தேவதைப் போல்
இயற்கை அழகோடு ஜொலித்த அஞ்சலியை காணவும் அவளுக்குள் பொறாமை தீகொழுந்துவிட்டு எரிந்தது.
எதாவது சொல்லி அஞ்சலியை கஷ்டப்படுத்த விரும்பினாள். வலிய சென்று தன்னை அஞ்சலியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டவளை அஞ்சலி மேலும் கீழும் பார்த்தாள்.
ஸ்லீவ் லெஸ் கால் முட்டிக்கும் தொடைக்கும் போராட்டம் நடத்திய வெள்ளை கவுனில் அவளைப் பார்க்கவே ஒரு மாதிரியாய் இருந்தது.
உதட்டில் அப்பிய சாயமும்,முகத்தில் தெரிந்த முகபூச்சும் அஞ்சலிக்கு சிரிப்பை வரவழைத்தது.
இந்த நடமாடும் மேக்கப் மேனகைக்கா யுகேன் உருகினான்?உயிர் என பூஜித்தான்?நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.
அவனை கலாய்க்கலாம்னு கணவனை கண்களால் தேடினாள்.அவனோ நண்பர்கள் வட்டத்தில் தொலைந்து போயிருந்தான்.
"ஹாய் ஐ யாம் ரீட்டா" உதட்டில் பொய்யாய் ஒரு புன்னகையோடு அஞ்சலியின் கைப்பற்றி உலுக்கினாள்.
"நீங்கள் அஞ்சலி,ராஜ்'ஸ் வைப்''?தெரியாதது போல் வினவினாள்.அஞ்சலியும் புன்னகையுடனே தலையசைத்தாள்.
''இந்த பெர்காண்டி உங்களுக்கு ரொம்பவும் அழகு,ஆனால் நான் இது போல் சாரி உடுத்தறது இல்லை"
"ராஜ்க்கு நான் இப்படி உடுத்தினாதான் பிடிக்கும் '' அசிட்டை அஞ்சலி மனதில் ஊற்ற ஆரம்பித்தாள்.
"யாருக்கு யுகேனுக்கா?" அஞ்சலி மைண்ட் வாய்ஸ் ஆஜர் ஆனது.
"மன்னிக்கவும்.அது உங்கள் கடந்த கால வாழ்க்கை.
இப்பவும் அதை நினைப்பதில் பலன் ஏதும் இல்லையே மிஸ்.ரீட்டா"மெல்ல ஆனால் அழுத்தமாய் அஞ்சலி கூறினாள்.
ரீட்டா சற்று அதிர்ந்தாலும் அசறாமல்,
"என்ன அப்படி சொல்லிட்டிங்க அஞ்சலி,ராஜ்தான் இப்படி இங்க வர சொன்னாரு,
அவரு எதையும் மறக்கல."
"இப்பவும் நாங்க பேஸ் புக்ல சாட் பண்றோம்" அஞ்சலிக்குள் இடியாய் இறங்கியது அவள் வார்த்தைகள்.
இருந்தும் அதை அவள் நம்பவில்லையோ என்று ரீட்டாவுக்கு தோன்றியது.
யுகேனுக்கு பேஸ் புக் இல்லை என்பது அஞ்சலி அறிந்ததே.
"என்னை நம்பலையா அஞ்சலி?" இங்க பாருங்க.
ராஜ் என்ற பெயரில் யுகேனின் profileஐ க் தன் கையடக்க ஐப்பேட்டில் காட்டினாள்.
யுகேன் அவளுக்காய் உருகியது போல் அதில் மெசஸ்கள் இருந்தன.
அஞ்சலியின் பால் முகம் இருண்டு விட்டது.பாவம் அவளுக்கு இதெல்லாம் ரீட்டாவின் கீழ்த்தரமான தந்திரம் என்று தெரியவில்லை.
தானே யுகேன் பெயரில் அக்கவுண்ட் திறந்து தனக்குத் தானே செய்தி அனுப்பிக் கொண்டு செட்டப் செய்ததது அஞ்சலிக்கு தெரிய வாய்ப்பு இல்லைதான்.நேரம் பார்த்து செய்த வேலை ஆயிற்றே,
தன்னை சுதாகரித்தவள்,சிறு புன்னகையுடன்,
"மிஸ்.ரீட்டா,யுகேனுக்கு உங்களோடு திரும்ப வாழ ஆசை இருந்தால்..மென்று விழுங்கிய வார்த்தைகள் ..நான்..நான் கண்டிப்பா தடையா இருக்கமாட்டேன்''
''இது பற்றி நாம சீக்கிரம் பேசலாம்.உள்ளே கொஞ்சம் வெர்க் இருக்கு, நான் வர்றேன் "
துவண்ட கால்களில் பலம் கூட்டி அஞ்சலி வீட்டுக்குள்ளே ஓடிவிட்டாள்.கண்களில் கரையுடைத்து ஓடிய நீரை தடை செய்யவும் அவளுக்கு தோன்றவில்லை.
அவளுடைய கணவன் கள்வனா?யுகேந்திரன் இன்னமும் ரீட்டாவை நேசிக்கிறானா?
நினைக்க நினைக்க அவளுக்கு நெஞ்சை அடைத்தது.கழுத்தில் மின்னிய தாலி சரடில் தன்னிச்சையாய் கை படர்ந்தது.அந்த மழைக்கால தருணத்தில் அவன் அண்மை,அவளை அவன் நெருங்கிய விதம் அத்தனையும் பொய்யோ என அந்த பிஞ்சு நெஞ்சம் வெதும்பலாயிற்று.
அவனை ரீட்டாவிற்கு விட்டுத்தர இயலுமா? உயிரை பிடுங்கியது போல் வலி உண்டாயிற்று.அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.