மையலுடைத்தாய் மழை மேகமே -பாகம் 4

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
''டேய் மாடசாமி,நானும் அப்ப புடிச்சு பார்துட்டே இருக்கேன்,சும்மா சும்மா என்ன வம்பு பண்ணிட்டே இருக்க நீ,சரி சின்ன பையன்னு மன்னிச்சுவிட்டா ரொம்பதான் துள்ளுற நீ.இந்த மயிலு ஒரு நேரம் போல இன்னொரு நேரம் அமைதியா இருக்க மாட்டா.வீணா என் வாய கிளறி வாங்கி கட்டிக்காத" மயூரா கண்கள் சிவக்க ருத்ரனிடன் கத்திக் கொண்டிருந்தாள்.

அந்த வளர்ந்தவன் நம்மா அக்காவுக்கு சின்ன பையனாம்(கொஞ்சம் ஓவர் தான் மயிலு).அவளுக்கு சளைத்தவனா நம்ம ஹீரோ சார்.

"அடியே கருப்பாயி ,காலையில இருந்து வம்புக்கு கொம்பு சீவி விட்டவ நீதானே,அப்படியே நல்லவ மாதிரி சீன் போடறத பாரு.ஆள் வளர்ந்த அளவுக்கு கொஞ்சம் அறிவு வளர்ந்திருக்கலாம் உனக்கு.இன்னொரு வாட்டி சின்ன பையன்னு சொன்னே பல்ல தட்டிருவேன் பார்த்துக்கோ"

"டேய் சும்மா சும்மா என்ன கருப்பாயினு கூப்ட,உன் குரல்வளையை கடிச்சிருவேன் பார்த்துக்க.ஒழுங்கா ஆருஷி மயூரா தேவினு கூப்பிட கத்துக்கோ"

"நீ மட்டும் என்ன மாடசாமி மாடசாமினு கூப்பிடலாமா?மாமானு சொன்னா மகாராணிக்கு மவுசு கொறஞ்சிடுமா என்ன?"

"டேய் வளர்ந்து கெட்ட நெட்ட கொக்கே,உன்ன மாடாசாமினு கூப்பிடாமா,மயிலுசாமி,குயிலுசாமினா கூப்பிட முடியும்?அப்டிதான் கூப்பிடுவேன்.
என்னடா மாடசாமி உன்னால பண்ண முடியும்?" மயூரா ஒயிலாக இடுப்பில் கை வைத்தவாறு ருத்ரனை வம்பிலுக்க,அவனோ பொறுமையின் கடைசி எல்லயை தொட்டிருந்தான்.
அவன் வாயை திறப்பதற்குள்,ருத்ரனின் தந்தை அங்கு வந்து விட்டிருந்தார்.
"ரெண்டு பேரும் என் தாத்தா-பாட்டி பேரை ஏன் இப்படி ஏலத்தில் விட்டுட்டு இருக்கிங்க?அவங்க முக சாயல் உங்க ரெண்டு பேருக்கும் இருக்குனு ஒரு பேச்சு வாகில் சொன்னா,அதையே ரெண்டு பேரும் உடும்பு பிடியா புடிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா சண்டைப் போட்டுக்கிறீங்க.நல்ல வேளை அவங்க உயிரோடு இல்ல.இல்ல இந்த கொடுமைய பார்த்து பார்த்து நெஞ்சு வெடிச்சு செத்து போயிருப்பாங்க."

"ஏண்டா ருத்ரா நீயாச்சும் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் தானே.அவதான் சின்ன பொண்ணு,அவகிட்ட போய் சரிக்கு சமமாய் சண்டை போட்டுக்கிட்டு.நீங்க எல்லோரும் இத வேடிக்கை பார்த்திட்டு நிக்கறிங்க" பெண்கள் பக்கம் தலை திருப்பி கேட்க,அதற்கு சாம்பவி,

"அண்ணா ருத்ரா மேல எந்த தப்பும் இல்லை,எல்லாம் நான் பெத்து வெச்சிருக்க மந்தி பண்ற வேலைதான்.நாங்க சொன்ன இதுங்க ரெண்டும் அப்படியே கேட்டுட்டுதானே மறு வேலை பார்க்குங்க.அதான் நீங்க வர்ரவரைக்கும் அமைதியா இருந்துட்டோம்"

ஆருஷி தன் அம்மாவை முறைத்தாள்.இவன் முன்னுக்கு தன்னை மந்தினு சொல்லிட்டாளே இந்த மம்மி.இருக்கட்டும் இருக்கட்டும் .
தனக்கு ஒரு வாய்ப்பு வராமலா போய்விடும்.அப்போ வெச்சிக்கிறேன்
பவி உன்னை.மனசுக்குள் தன் அம்மா சாம்பவி@பவிக்கு கட்டம் கட்டி திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் மைண்ட் வாய்ஸ் அவனுக்கு கேட்டிருக்கும் போல,"பவிச்செல்லம் இந்த கிராதகி உன்னை எதாச்சும் பண்ணாண்னா என்கிட்ட சொல்லிடு,உமைக்கொட்டான் மாதிரி உக்காந்துகிட்டு உன்னையே மொறைச்சுட்டு இருக்கா பாரு"ருத்ரன் சரியாக மயிலு மனதை புட்டு புட்டு வைத்தான்.

மயிலு பதிலுக்கு அவனை முறைக்க"நெட்ட கொக்கே உனக்கு கட்டம் சரி இல்லைடி ராசா,அதான் மயிலுக்குள்ள சிவனேனு தூங்கிட்டு இருக்கற சிங்கத்தை சொரண்டி விடற"மயூரா பற்களை நற நறவென கடித்தாள்.

அதற்குள் பரசுராம்"கோவில்கு சாமி கும்பிட வந்தோம்மா இல்லை உங்க சண்டைய பார்க்க வந்தோம்மா?ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு போய் பனிஷ்மெண்ட் இருக்கு.செல்லம் குடுத்து வளர்த்தா எவ்வளவு அழிச்சாட்டியம் பண்றிங்க.உங்க கூட தானே மதுவும் இருக்கா,பாரு இருக்கற இடம் தெரியுதான்னு"

பொங்கலை வாய்க்குள் அடைத்துக் கொண்டிருந்த மதுவுக்கு அவர் வார்த்தையால் புரையேறியது.மயூரா மதுவை முறைத்தாள்."குள்ள வாத்தே உன்னால தானே இன்னிக்கு இந்த பஞ்சாயத்து,இருக்குடி மவளே உனக்கு"மனதுக்குள் மதுவுக்கும் அர்ச்சனை ஓடி கொண்டிருந்தது.

அதற்குள் யோகி தாத்தா வந்து விடவே,"என்ன சிவா இன்னிக்கும் மயிலு கூட லடாய்யா?உன் கோவம் கட்டுக்குள்ள இருக்காதுனு தானே நான் உன்னை ருத்ரன்னு கூப்பிடாமா சாந்தமாய் சிவானு கூப்பிடரேன். அப்பவும் உன்னை கட்டுப்படுத்த முடியுதா பாரு"தாத்தா கொஞ்சம் வருத்தாமாய் சொல்ல, ருத்ரன்

"இல்ல தாத்தா இப்பல்லாம் எனக்கு கோவம் அதிகம் வர்றது இல்லை.ஆனா இந்த கருப்பாயி எதாச்சும் பண்ணிட்டா மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியல தாத்தா"ருத்ரா மயூராவை பார்த்து முறைத்தான்.மயூராவும் பதிலுக்கு முறைத்தாள்.

அவளுக்கு ஆதரவாய் பவானி முன் வந்தார்.

"போதும் போதும் என் பொண்ணை எல்லோரும் ஏசிட்டு இருக்கிங்க,பாவம் பிள்ளை ஒழுங்கா கூட சாப்பிடல,நீ வாடா கண்ணு..அத்தை உனக்கு புடிச்சா பாதாம் அல்வா பண்ணி வெச்சிருகேன்.வீட்ல போய் சாப்பிடலாம்"பவானி மயூராவை அணைத்தவாறு காரை நோக்கி செல்ல,அவளோ அவன் புறம் திரும்பி அவனுக்கு உவ்வே காண்பித்தாள்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN