யாவும் நீயாகி
தேடல் தீராதா
உன் ஜீவன்
சேர
நான் ஏங்குகிறேன்....
இன்றோடு ஆதிரா ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ்ஜாகி மூன்று நாட்களாகிவிட்டது.. இந்த மூன்று நாட்களில் ஷாகரின் பாடு தான் திண்டாட்டமாகிப்போனது.. ஆதிராவிற்கு உணவிலிருந்து அனைத்து பணிவிடையும் அவனே செய்யவேண்டியிருந்தது... அதை அவன் மனமகிழ்வுடன் செய்தபோதிலும் இவ்வாறான வேலைகளை செய்து பழக்கமில்லாததால் சற்று திணறித்தான் போனான்...அவனை சோதித்த விஷயம் சமையல் தான்.. ஏதோ சற்று சமைக்க தெரிந்தவனுக்கு பத்திய சாப்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை.. டாக்டரிடம் ஆதிராவிற்கு என்ன கொடுக்கவேண்டுமென்ற உணவுபட்டியலை வாங்கியிருந்தவன் யூடியூப்பின் உதவியால் சமாளித்தான்.... மற்றபடி ஆன்லைன் சேவைகளே அவனது தேவைகளை நிறைவு செய்தது....
முதல் வாரம் முழுவதும் மருந்தின் வீரியத்தின் காரணமாக ஆதிரா தன் நேரத்தை உறக்கத்திலேயே கழிக்க அவளுக்கு ஷாகரின் திண்டாட்டம் புரியவில்லை..
அந்த வாரம் முழுதும் ஷாகர் ஆதிராவை குழந்தைபோல் பார்த்துக்கொண்டான்.. காலையில் காலைக்கடன்களை முடிக்க உதவுவதிலிருந்து,உடை மாற்றல், உணவு என்று அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்தான்..
அவன் செய்கையிலிருந்த அன்பு ஆதிராவிற்கு தன் தாயின் அருகாமையை நினைவுபடுத்தியது... அதுவும் அவன் முகம்சுழிக்காது தனது தேவைகளை கவனிக்கும் போது அவள் மனதில் சொல்லொணா காதல் பெருகியது... அதைதாண்டி இவன் என் கணவன் என்ற உரிமையுணர்வும் எழுந்தது....
ஒருவாரம் முடிந்திருந்த நிலையில் ஷாகர் ஆதிராவை ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றான்...
வீல்சேரின் துணையுடன் ஆதிராவை அழைத்து சென்றவன் செக்கப்பினை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் ஆதிராவின் ஹாஸ்டல் வாசலில் கேப்பினை நிறுத்துவிட்டு உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் மோகனாவோடு வந்தான்.. ஆதிராவை பார்த்த மோகனா அவளிடம் நலம் விசாரித்தாள்..
“ஆரா... இப்போ தான் அண்ணா சொன்னாங்க... இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?? இன்னும் வலி இருக்கா??”
“இப்போ கொஞ்சம் பரவாயில்லடி.. இன்னும் காலிலையும் கையிலயும் பெயின் இருக்கு.. டாக்டர் இன்னும் கொஞ்ச நாளைக்கு பெட்ரெஸ்ட்டுல இருக்க சொல்லியிருக்காங்க..”
“சரிடி... உடம்பை பார்த்துக்கோ...” என்று ஆதிராவிடம் கூறியவள் ஷாகரிடம்
“அண்ணா ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க...”
“ஓகே மா... நான் பார்த்துக்கிறேன்... நீயும் ப்ரீயா இருக்கும் போது வீட்டுக்கு வந்துட்டு போ...” என்று கூறிவிட்டு ஷாகரும் ஆதிராவும் மோகனாவிடமிருந்து விடைபெற்றனர்..
ஷாகர் காரில் ஏறியதும் ஆதிரா
“நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துரேனா ஷாகர்???”
“ஹேய் இல்ல ஆதுமா... நான் உனக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்ய போறேன்...?? நீ என்னோட பெட்டர் ஹாப்மா...”
“சாரி ஷாகர்..” என்று கண்கலங்கியபடி ஆதிரா ஷாகரின் தோளில் சாய அவளை ஒரு கையால் அணைத்தபடி மறுகையால் அவள் கன்னத்தை தட்டிக்கொடுத்தபடி
“இங்க பாரு ஆது...இதெல்லாம் ஒருவிஷயமே இல்லை.. நீ எப்பவும் என்கூடவே இருக்கனும்.. அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.. இந்த ஷாகருக்கு எப்பவும் இந்த ஆது பேபி தான் பஸ்ட்... மத்தது எல்லாம் நெக்ஸ்ட்டு தான்..சோ நீ எதைபத்தியும் நினைக்காமல் உன்னோட ஷாகரை பத்தி மட்டும் நினை... அதுவே நீ எனக்கு பண்ணுற பெரிய ஹெல்ப்..” என்று இயல்பாய் அவள் முன்னுச்சியில் இதழ் பதிக்க ஆதிராவும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை...
இருவருக்கும் இருந்த இடைவெளி அகன்றதா என்று கேட்டால் இருவரிடமும் எந்த பதிலும் இல்லை.. ஆனால் மனச்சஞ்சலங்களல தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நொடியில் அவர்கள் மனம் எதை விரும்புகிறதோ அதையே இருவரும் செய்தனர்... ஆனால் இது இவ்வாறே தொடருமா இல்லை பழைய கசப்புக்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா என்பது விடைதெரியாத கேள்வி..
இருவரும் வீட்டிற்கு வரும் போது வீடு திறந்திருக்க இருவரும் குழம்பமும் பயமுமாய் வெளியே நின்றிருந்தனர்....
ஆதிரா வீல்சேரில் இருக்க அவளை அங்கே காத்திருக்கும்படி கூறிவிட்டு உள்ள நுழைய முயன்ற ஷாகரை தடுத்த ஆதிரா கண்களில் கலக்கத்துடன் பார்க்க அவள் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டவன் அவள் கையினை ஆதரவாக தடவியவன்
“ஹேய் பயப்படாத.... ஒரு சேப்டிக்காக தான் நான் மட்டும் தனியாக போயிட்டு பார்த்துட்டு வர்றேன்னு சொன்னேன்.. இரு வர்றேன்...” என்று உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் கத்தும் சத்தம் கேட்க அதில் பதறிய ஆதிரா தன் வீல் சேரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று பார்த்த ஆதிராவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது...
உள்ளே ஷாகரை துணியால் போர்த்தியபடி மொத்திக்கொண்டிருந்தனர் அவனது அத்தை பெத்த ரத்தினங்கள்... அதை அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் வசுமதி..
வீல்சேரினை ஒரு கையால் உருட்டிக்கொண்டு வசுமதியின் அருகே வந்த ஆதிரா அம்மாவென்று அழைத்தபடி அடிபடாத கையால் வசுமதியின் கரம் பற்ற அவரோ முகத்தை திருப்பிக்கொண்டார்..
அது ஆதிராவை பாதித்தபோதிலும் அவளோ மீண்டும் அவர் கையை பற்ற முயல அதற்குள் எழுந்துகொண்டார் வசுமதி..
அவரது இந்த ஒதுக்கம் அவளை பெரிதாய் பாதித்திட கண் கலங்கியிருந்தவளை கண்டு பரிதாபம் எழுந்த போதிலும் வசுமதி அதை காட்டிக்கொள்ளவில்லை..
அப்போது ஷாகரின் தலையை மூடியிருந்த துணியை விலக்கிய கேஷிகா அங்கிருந்து நகர்ந்து சோபாவில் அமர மற்றவர்களும் அதை பின் தொடர்ந்தனர்.
அப்போது ஆத்விக்கும் ஆதித்யனும் உள்ளே வர ஷாகர்
“டேய் நீங்களும் ஏதாவது பிளேன் பண்ணியிருக்கீங்களாடா?? அப்படி எதுவும் இருந்தா இப்பவே சொல்லிருங்கடா... முடியல..” என்று ஷாகர் கூற இருவரும் திருதிருவென்று முழித்தனர்..
அப்போது பார்வையை சுழலவிட்ட ஷாகருக்கு தன் அன்னையும் வந்திருப்பது தென்பட அருகில் ஓடியவன் அம்மா என்றழைக்க வசுமதியோ
“இப்போ தான் அம்மானு ஒருத்தி இருக்கது நினைவுல வந்துச்சா??”
“அம்மா அது வந்து....”
“பேசாத ஷாகர்... எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்க?? அதுவும் ஆத்விகிட்ட சொல்லக்கூடாது ஸ்ரிக்டா சொல்லியிருக்க... நல்ல வேளை ஆஷிக்கு தெரியவந்ததால ஆக்சிடன்ட்னு தெரிந்தது.. இல்லைனா அம்மாகிட்ட சொல்லாமல் இதை மறைச்சிருப்பல..” என்று கம்மிய குரலில் வசுமதி சொல்ல ஷாகர் தன் அன்னையை அணைத்துக்கொண்டான்..
“அம்மா அப்படிலாம் இல்லை... எங்க சொன்னா நீங்க பயந்துடுவீங்களோனு தான் ஆத்விகிட்ட சொல்லவேணாம்னு சொன்னேன்... அதோடு இதை காரணமாக வச்சி உங்களுக்கும் அப்பாவுக்கும் ஏதும் சண்டை வந்திடக்கூடாதுனு தான் உங்கிட்ட சொல்லாமல் மறைச்சேன்..”
“டேய் நீ புரிஞ்சி தான் பேசுறியா?? எப்படி டா ஆதிராவை நீ தனியா கவனிச்சுப்ப?? இந்த நேரத்துல சாப்பாடு விஷயத்துல ரொம்ப கவனமாக இருக்கனும்.... இதெல்லாம் உனக்கு சரியா தெரியாதுடா.. நீயும் ஆதிராவும் இப்பவே என்கூட வாங்க...”
“அம்மா என்னால ஆதிராவை நல்லா கவனிச்சிக்க முடியும்... அப்பா எப்போ எங்களை மன்னிச்சு வீட்டுக்கு வாங்கனு கூப்பிடுறாரோ அப்போ நானும் ஆதிராவும் நிச்சயம் நம்ம வீட்டுக்கு வர்றோம்... ஆனா இப்போ வேணாம்மா... புரிஞ்சிக்கோங்க..”
“ஷாகர் நீயும் உங்க அப்பா மாதிரி பிடிவாதம் பிடிச்சா எப்படி..?? உனக்கு இதெல்லாம் பழக்கமில்லாத விஷயம் டா.. “
“அம்மா.. பழக்கமில்லாத விஷயங்களை பிடிச்சவங்களுக்காக செய்யும் போது சந்தோஷமா தான்மா இருக்கு... ப்ளீஸ்மா... எங்களை கம்பல் பண்ணாதீங்க...”
“ம்ஹூம் நீ சரிப்படமாட்ட.. ஆதிரா நீயாவது உன் புருஷன்கிட்ட சொல்லு..... இப்படியான நேரத்துல அவனால தனியாக சமாளிக்கமுடியாது.. இரண்டு பேரும் வாங்க.. நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்று வசுமதி ஆதிராவிடம் பேச அவளுக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை...
அவளுக்குமே ஷாகர் இவ்வாறு கஷ்டப்படுவதில் விருப்பமில்லை... ராஜாபோல் வாழ்ந்தவன் தன்னால் இப்படி அனைத்து வேலைகளையும் செய்வது அவள் மனம் ஏற்கவில்லை... இதை சாக்காக வைத்தாவது அவன் கஷ்டப்படுவதை நிறுத்தவேண்டுமென எண்ணியவள் ஷாகரை பார்த்தபடி
“அத்தை அவரு சொல்றதும் சரிதான்.. மாமா இஷ்டப்படாமல் நாங்க அங்க வர்றது முறையில்லை... ஆனா இவரு இப்படி கஷ்டப்படுறது எனக்கு கஷ்டமாயிருக்கு அத்தை... இன்னும் கொஞ்சநாளைக்கு வீட்டு வேலை செய்றதுக்கும் எனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்கும் யாராவது ஒரு சேவண்டை அரேன்ஜ் பண்ணீங்கனா நான் மேனேஜ் பண்ணிக்குவேன்... ப்ளீஸ் அத்தை அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க...” என்று ஆதிரா கூற இப்போது ஷாகர் ஆதிராவை முறைத்தான்..
“இல்லைமா.. சேவண்ட் யாரும் வேண்டாம்...நான் மேனேஜ் பண்ணிப்பேன்....” என்று ஷாகர் கூற இப்போது அவனை முறைத்தார் வசுமதி...
“நான் சொல்லுறதை புருஷனும் பொண்டாட்டியும் கேட்கமாட்டேனு முடிவு பண்ணிட்டீங்க.... இனி நான் என்ன சொல்ல இருக்கு?? ஆனா சர்வன்ட் அரேன்ஜ் பண்ணி தான் ஆகனும்... இதுக்கு மேல உன்னை நம்பி என் மருமகளை விட முடியாது..... நாளைக்கே சர்வன்ட் வருவாங்க... நீ இனி உன் வேலையை மட்டும் பார்த்தால் போதும்...” என்று வசுமதி ஒரே முடிவாய் சொல்லிவிட ஷாகருக்கு மறுக்க வழியில்லை...
அதன் பின் அவனது அத்தை பெத்த ரத்தினங்களை தாஜா செய்து சமாதானப்படுத்தியவன் அவர்களுக்கு உணவு தயாரிக்க கிளம்ப வசுமதியோ தான் சமைப்பதாக கூறி சமையலறைக்குள் புகுந்துகொண்டார்..
ஆதிராவிற்கு நெடு நேரம் அமர்ந்திருக்க முடியாதென்பதால் அவளை ஷாகர் தங்களறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்... பெண்களனைவரும் அவளை சூழ்ந்துகொண்டு வம்பழக்கத்தொடங்க ஷாகர் ஹாலில் வந்தமர்ந்து ஆதி, ஆத்வியுடன் பேசியபடியிருந்தான்...
அனைவரும் உணவு தயாரித்த வசுமதி அனைவரையும் உணவுண்ண அழைக்க ஆதிராவோ அறையில் தனித்திருந்தாள்...மற்றவர்களை உணவுண்ணக்கூறிய ஷாகர் ஆதிராவுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றான்.. அவனை பார்த்த ஆதிரா
“என்ன ஷாகர் சாப்பிடலையா??”
“என்னோட ஆது பேபியை தனியாக விட்டுட்டு எப்படி சாப்பிடுறது?? அதான் அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்..”என்று ஷாகர் கூற ஆதிராவிற்கு அளவில்லா மகிழ்ச்சி...
எப்போதும் போல் இன்றும் தனக்கே அவன் முன்னுரிமை கொடுத்தது அவளுள் மகிழ்ச்சி ஊற்றை பெருக்கெடுக்கச்செய்திருந்தது...அவன் ஊட்டிய உணவை ஒரு வாய் உண்டவள் அவன் கைபிடித்து தடுத்தாள்.
ஷாகர் என்னவென்று பார்க்க
“நீங்களும் சாப்பிடுங்க..” என்று அவன் கையை பிடித்து அவனது வாயருகே கொண்டு செல்ல, ஷாகரும் கண்களில் சிரிப்புடன் அவன் ஆசைப்படி உண்டான்...
இவ்வாறு இருவரும் சாப்பிட்டுமுடிய கைகழுவி வந்த ஷாகர் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு அவளை கவனித்துவிட்டு அறையைவிட்டா வெளியேற முயன்ற ஷாகரை கைபிடித்து தடுத்த ஆதிரா
“தாங்க்ஸ்...”என்று கூற ஷாகரோ
“எதற்கு??” என்று கேட்டான்...
“எல்லாத்துக்கும்....” என்று கூறியவள் அவன் புறக்கையில் முத்தமிட அவள் செயலில் மகிழ்ந்த ஷாகர் சிரித்தபடி அவள் முன்னுச்சியில் இதழ் பதித்துவிட்டு அறையிலிருந்த வெளியேறினான்..
இரவு உணவையும் முடித்துவிட்டு அனைவரும் கிளம்பிவிட அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்த ஷாகர் ஆதிராவிடம் வந்தவன் அவளருகே அமர்ந்துகொண்டு
“ஆது பேபி... இன்னைக்கு நாள் நல்லா போச்சுல??”
“ஆமா ஷாகர்.. இவங்கெல்லாம் இப்படி சப்ரைஸ் விசிட் கொடுப்பாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லை....”
“இதெல்லாம் இந்த வாண்டுகளோட வேலை தான்... அதுங்க தான் சொல்லாமல் போவோம்னு அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்குதுங்க...”
“உங்க அத்தை பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஸ்வீட்.. எனக்கு அவங்க கூட இருக்கும் போது டைம் போறதே தெரியாது...”
“சும்மாவே ஐந்தும் நல்லா பேசும்.. இப்போ அத்தானோட பெட்டர் ஹாப்னு தெரிஞ்ச பிறகு சும்மாவா இருக்குங்க...”
“ஏன் ஷாகர் அப்படி சொல்லுறீங்க.. பாவம்பா..”
“ஹாஹா.. சின்னதிலிருந்தே அவங்க ஐந்து பேருக்கும் நான்னா அவ்வளவு விருப்பம்.. எனக்கும் கூட பிறந்தவங்க யாரும் இல்லாததால அவங்களோட ரொம்ப அட்டாச்டு... அவங்களும் என்னை தங்களோட சொந்த அண்ணாவா தான் பார்க்கிறாங்க... படிக்கிறதுல இருந்து வீட்டுக்கு தெரியாமல் ஊர் சுத்தப்போறது வரைக்கும் என்கிட்ட சொல்லிடுவாங்க... என்ன பிரச்சனைனாலும் அத்தான்னு என்கிட்ட தான் வருவாங்க... நிச்சயம் இப்போ அவங்க மாமா கூட அதான் என் அப்பா கூட எனக்காக சண்டை போட்டிருப்பாங்க...”
“ஏன் ஷாகர் எனக்காக இத்தனை பேரை விட்டுட்டு வந்தீங்க??? நான் அப்படி என்ன பண்ணேன்...??? நீங்க கேட்ட காதலை கூட உங்களுக்கு கொடுக்காமல் கஷ்டத்தை தானே கொடுக்கிறேன்... அப்பவும் ஏன் ஷாகர் என்னையே சுத்தி சுத்தி வர்றீங்க?? நான் உங்களுக்கு தகுதியே இல்லாதவ ஷாகர்..” என்று விரக்தியின் உச்சத்தில்
பேசியவளின் கைகளை சிறைபிடித்த ஷாகர்
“ஆது நீ புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் ஒன்னே ஒன்னு தான்... நான் எதையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கல.... கொஞ்ச நாளைக்கு நம்ம குடும்பத்தைவிட்டு தள்ளியிருக்கேன்.. அது உனக்காகனு நினைக்கிறது தப்பு.. அது நமக்காக.. நம்ம இப்படி இருக்கிறது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.. இப்போ அப்பா நம்ம தப்பை மன்னிச்சு வீட்டுலயே இருக்க சொல்லியிருந்தா நிச்சயம் என்னோட அத்தைமாருக்கும் அப்பா மேல ஒரு கோபம் இருந்திருக்கும்.. அதை உன்மேல தான் காட்டியிருப்பாங்க.... அதோடு உன்னை காயப்படுத்திறதா நினைத்து சின்ன பிரச்சினைகளையும் பெருசாக உருவகப்படுத்த முயற்சிப்பாங்க..அதோடு என்னோட அத்தைமாருக்கு அவங்க பொண்ணுங்கள்ல யாராவது ஒருத்தரை எனக்கு கட்டிவைக்கனும்ங்கிற எண்ணமும் இருக்கு.. சோ இதெல்லாம் அவங்க கோபமா உன்மேல காண்பிக்த முயற்ச்சிக்க அது குடும்பத்துக்கிடையில பிரிவினையை உருவாக்கும்.. இந்த மாதிரி குடும்பம் பிரியிறதுக்கு பதிலாக நாம கொஞ்ச நாள் விலகியிருந்தா எல்லாம் சரியாகிடும்... இதை மனசுல வச்சு தான் அப்பாவும் அப்படி பேசியிருப்பாரு... அதனால நீ தேவையில்லாமல் கவலைப்படுவதை விடு.. நீ என்னோட காதலை ஏற்பதும் ஏற்காததும் உன்னோட விருப்பம்... நான் உன்னை காதலிச்சதால தான் அந்த தாலியை கட்டுனேன்.. சந்தர்ப்ப சூழ்நிலைனு சொன்னாலும் கூட மனமுவர்ந்து தான் உனக்கு தாலி கட்டுனேன்... சோ என்னோட காதல் உண்மை.. என்னோட காதலுக்காக தான் உன்னை சுத்தி சுத்தி வர்றேன்... இதுல நீ கவலைப்பட எதுவும் இல்லை. உனக்கும் என்மேல காதல் வந்தா நீயும் என்னை சுத்தி சுத்தி வா... நானும் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று கூறி ஷாகர் கண்ணடிக்க அவனது செயலில் ஆதிரா சிரித்துவிட்டாள்...
அந்த நிமிடத்தில் அவளை சமாதானப்படுத்தியபோதிலும் அவளின் மனசிலுள்ள சஞ்சலம் தீரவில்லை என்று ஷாகருக்கு புரிந்தது... இத்தனை காலம் இல்லை முடியாதென்று மறுத்தவள் இன்று இவ்வாறு பேசியது ஆச்சரியம் தான்... இன்னும் சிலகாலத்தில் அந்த சஞ்சலம் நீங்கி தன் காதலை உணர்வாளென்று ஷாகர் உறுதியாக நம்பினான்...
அவ்வாறு அவர்களது நாட்கள் நகர்ந்து ஒரு மாதம் முடிவடைந்தது....