முன்னுரை

Arthi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திடீர் திருமணம், அதுவும் தனக்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒருவனோடு. மாயா எதிர்பாரா அனைத்தும் ஒரு நொடியில் அதுவும் அவள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. இதுதான் விதியா? இனி இதுதான் என் வாழ்வா? என் கனவை அடுப்படியிலும், வயல்வெளியிலும் தொலைக்க போகிறேனா? என்று அவள் மனம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இன்றி தவித்தாள்.
"வாழ்க்கை என்பது வாழ்ந்திடத்தானே இதில் என்ன கட்டுப்பாடு, மனசுக்கு பிடிச்ச வேலைய செஞ்சிட்டு சந்தோசமா வாழணும். மனசுக்கு பிடிச்சத மட்டும் செய்யணும் அதுல பாரம்பரியம், வழக்கம் இப்பட ஒரு தடையும் வரக்கூடாது" என்ற எண்ணம் கொண்ட அழகான, தைரியமான மாடர்ன் பொண்ணு மாயா. ஃபேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருக்க பொண்ணு. நம்பர் ஒன் டிசைனர் ஆக வேண்டும் என்பது மாயாவின் கனவு.
"விவசாயம், அம்மா, சொந்த ஊர் இதுதான் உலகம். இந்த ஊர்ல விவசாயம் செஞ்சு இதன் வளம் பலமடங்கா உயர்த்தணும்" என்னும் கனவோடு சந்தோசமா பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் நம்ம மாறன். எம். எஸ். சி. அக்ரிகல்ச்சர் பட்டதாரி. விவசாயத்துல பல புது திட்டங்கள் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்றவன்.
எதிர் பாரா நேரத்தில் எதிர் பாரா சூழலில் எதிர் எதிர் எண்ணம் கொண்ட இருவர் இணையும் திருமணம்.
இப்படி இரு வேறு துருவங்களாக இருக்கும் மாயாவும் மாறனும் கணவன் மனைவியாகும் போது பல குழப்பங்கள், வேற்றுமைகள், கவலைகள் நிறைந்திருந்தாலும் காதல் என்ற அதிசயம் இந்த வேறுபாடுகளை எவ்வாறு ஒற்றுமையாக மாற்றியது? எவ்வாறு ஒரு எதிர்பாரா பந்தம் இருவரது வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றியது பார்ப்போம்.....!!
மாயாவின் வாழ்வில் இத்திருமணம் ஒரு வரமாக அமையப் போகிறதா இல்லை அவள் எண்ணியவாறு சாபமாக அமையப் போகிறதா?? அவர்களுடன் நாமும் பயணித்து தெரிந்துகொள்ளலாம்.
வணக்கம் நண்பர்களே!
தமிழில் நாவல் எழுத வேண்டும் என்ற என் பல நாள் கனவை நிறைவேற்ற இந்த முயற்சி. பிழைகளை மன்னித்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
தோழி ஆர்த்தி


அத்தியாயம் - 1

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN